10-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய
உங்களின் பையை அழியாத ஞான இரத்தினங்களினால் நிரப்புவதற்காக
தந்தை வந்திருக்கிறார். இந்த ஒவ்வொரு ஞான இரத்தினமும்
இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பாகும்.
கேள்வி:
மறைமுகமான தானத்திற்கு ஏன்
இவ்வளவு அதிமான மகத்துவம்?
பதில்:
ஏனென்றால், பாபா உங்களுக்கு
மறைமுகமான ஞான இரத்தினங்களை இப்போது தானமாக அளிக்கிறார். இதை
உலகத்தினர் அறியவில்லை. பிறகு குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞான
இரத்தினங்களை தானம் செய்வதால் விஷ்வத்தின் இராஜ்ய பதவியை அடை
கிறீர்கள். இதுவும் குப்தமாக இருக்கிறது. எந்த ஒரு சண்டையும்
இல்லை, எந்த ஒரு வெடி குண்டும் இல்லை, எந்த செலவும் இல்லை.
மறைமுகமாக உங்களுக்கு இராஜ்ய பதவியை தான மாக அளிக்கிறார்.
ஆகையால் தான் மறைமுகமான தானம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
ஓம் சாந்தி.
டபுள் ஓம் சாந்தி. ஒன்று சிவபாபா கூறுகிறார், ஒன்று பிரம்மா
தாதா (மூத்த சகோதரர்) கூறுகின்றார். இருவரின் சுய தர்மமும்
சாந்தி ஆகும். இருவருமே சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள்
ஆவர். குழந்தைகளாகிய நீங்களும் சாந்திதாமத்தில் வசிக்கக்
கூடியவர்கள். நிராகார் உலகத்தில் வசிக்கக் கூடியவர் சாகார
தேசத்தில் நடிப்பதற்காக வந்துள்ளார். ஏனென்றால் இது நாடகம்
அல்லவா. குழந்தைகளுக்கு நாடகத்தின் முதல், இடை, இறுதி ஞானம்
மேலிருந்து கீழ் வரை புத்தியில் நிறைந்துள்ளது. உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் பகவான். அவருடன் குழந்தைகள் உள்ளனர். இந்த விசயங்களை
நன்குப் புரிந்துக் கொள்ளுங்கள் உங்களைத் தவிர இந்த ஞானம் வேறு
யாரிடமும் இல்லை. இறைவனின் பள்ளிக் கூடத்தில் நீங்கள்
படிக்கிறீர்கள். பகவான் ஒருவரே.. 10-20 பகவான் எல்லாம் கிடையாது.
அனைத்து தர்மத்தை சார்ந்தவர்களுக்கும் அவர்களுடைய ஆத்மாக்கள்
யாராக இருந்தாலும் அனை வருக்கும் ஒரேயொரு தந்தை ஆவார். பிறகு
தந்தை சிருஷ்டியை படைக்கிறார் என்றால் பிரஜாபிதா பிரம்மா என்று
கூறப்படுகிறது. சிவனுக்கு பிரஜாபிதா என்று கூற முடியாது
பிரஜைகள் பிறப்பு இறப்பில் வருகிறார்கள். ஆத்மா சம்ஸ்காரத்தின்
ஆதாரத்தினால் பிறப்பு இறப்பில் வருகிறது. மறுபடியும் பிரஜாபிதா
பிரம்மா வேண்டும். பரம்பிதா பரமாத்மா, பிரஜாபிதா பிரம்மா
மூலமாக படைப்பை படைக்கிறார் என்று பாடப்பட்டிருக்கிறது. பதீத
பாவனர் வாருங்கள் என அவர் அழைக்கப்படுகிறார். உலகம் தூய்மையை
இழந்துவிடும் போது, மற்றும் அதனுடைய முடிவு வரும் போது
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காக தந்தை வருகிறார். தந்தை
ஒரு முறை தான் வருகிறார். வேறு எப்போதும் வருவதில்லை என
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது
உங்களுக்கு முழு ஞானமும் கிடைக்கிறது. நீங்கள் நாடகத்தின்
நடிகர்கள் அல்லவா. மேடை நாடகத்தின் நடிகர்களுக்கு அனைவரின்
நடிப்பும் என்னென்ன நடிப்பு என கண்டிப்பாக தெரிந்திருக்க
வேண்டும். அது சிறிய எல்லைக்குட்பட்ட நடிப்பு (டிராமா), அதை
பற்றி அனைவருக்கும் தெரிகிறது. நீங்களும் பார்த்துக் கொண்டே
வருகிறீர்கள். எப்படி வேண்டுமோ அப்படி எழுதலாம், நினைக்கலாம்.
சிறியதாக இருக்கிறது. இது மிகவும் பெரிய எல்லையற்ற நாடகம் ஆகும்.
இதை நீங்கள் சத்யுகத்திலிருந்து கலியுக முடிவு வரை அறிகிறீர்கள்.
எல்லையற்ற தந்தையிடமிருந்து இப்போது எல்லையற்ற சொத்து
கிடைக்கிறது என குழந்தைகள் அறிகிறீர்கள். பிறகு
எல்லைக்குட்பட்ட தந்தை யிடமிருந்து எல்லைக்குட்பட்ட சொத்து,
எல்லைக்குட்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. ராஜாக்களாக யார்
மாறுகிறார்களோ, அவர்கள் அதற்கு முந்தைய பிறவியில் தான
புண்ணியங்களை செய்து ஒரு பிறவிக்காக ராஜா ஆகிறார்கள் என பாபா
புரிய வைத்திருக்கிறார். அவர்கள் அடுத்த பிறவி யிலும் அதே போல
மாறுவார்கள் என்பது கிடையாது. நீங்கள் சத்யுகத்தில் ராஜாக்கள்,
மகாராஜாக்களாக இருந்தீர்கள். உங்களுடைய இராஜ்யம் மறைந்து
போகிறது. பிறகு பக்தி மார்க்கம் தோன்றும் போது அவர்களே தானம்
புண்ணியம் செய்கிறார்கள். அவர்களும் இராஜ்யத்தில் செல்கிறார்கள்
என நினைக்காதீர்கள். ஆனால் அவர்கள் விகாரி ராஜாக்கள் ஆகிறார்கள்.
பூஜைக்குரியவராக இருந்த நீங்களே பூஜாரி ஆகிறீர்கள். அது அல்ப
காலத்தின் சுகம் ஆகும், துக்கம் இப்போது தான் ஏற்படுகிறது.
இப்போது தமோ பிரதானத்தில் கூட உங்களுக்கு சுகம் இருக்கிறது.
சண்டை சச்சரவுகளின் விசயம் எதுவும் இல்லை. இது பிறகு
தோன்றுகிறது. இலட்சக் கணக்கானவர்கள் என்ற எண்ணிக்கையில் வரும்
போது தான் சண்டை ஏற்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு
சத்யுகம், திரேதா, துவாபரயுகத்தில் சுகம் இருக் கிறது.
தமோபிரதானம் ஆகும் போது சிறிது துக்கம் ஏற்படுகிறது. இப்போதோ
தமோபிர தானமாக இருக்கின்றது. இதுவோ தமோபிரதான உலகம் என பாபா
புரிய வைக்கிறார். இது எல்லையற்ற நாடகம், இதிலிருந்து யாரும்
விடுபட முடியாது என நீங்கள் அறிகிறீர்கள். மனிதர்கள்
துக்கத்தில் துன்புறும் போது பகவான் இப்படிப்பட்ட விளையாட்டை
ஏன் படைத்தார் என கேட்கிறார்கள். பகவான் படைக்கவே இல்லை என்றால்
உலகமே இருக்காது. எதுவுமே இருக்காது. படைப்பவர் மற்றும் படைப்பு
என்று இருக்கிறது அல்லவா. அதுவும் சத்யுகத் திலிருந்து
கலியுகத்தின் கடைசி வரை விளக்கமும் இருக்கிறது. இன்னும் சிறிது
நாட்களே இருக்கிறது. நீங்களும் நடைமுறையில் பார்ப்பீர்கள்.
முதலிலேயே (எல்லாவற்றையும்) காண்பிக்க மாட்டார்கள். 5000
வருடத்தில் இன்னும் சிறிது சக்கரம் இருக்கிறது. அது இப்போதே
காண்பிக்க முடியாது. எப்போது நடக்குமோ அப்போது அதை சாட்சியாக
இருந்து பார்ப்பீர்கள். எது நடக்க வேண்டுமோ அது போன கல்பத்தைப்
போன்றே நடக்கும். ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை
பார்க்கிறீர்கள். நிச்சயமாக வினாசம் நடக்கும். அனைத்திற்கும்
ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நாடகத்தில்
ஏற்கனவே நிச்சயிக்கப் பட்டிருக் கிறது. நிச்சயம் வினாசம்
நடக்கும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய
வைக்கின்றார்-உங்களுடைய ஆத்மா தமோபிரதானமாக இருக்கிறது அதை
இங்கேயே சதோபிர தானமாக மாற்ற வேண்டும். இதை இப்போது நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள்.
பாபா குப்தமாக வருகிறார். குப்தமாக தான் உங்களுக்கு ஞானம்
கொடுத்துக் கொண்டிருக் கிறார். உலகத்தில் யாரும் அறியவில்லை.
குப்தமாக நீங்கள் உலகத்தின் இராஜ்யத்தை அடைகிறீர்கள். எந்த ஒரு
சத்தமும் இல்லை. முற்றிலும் குப்ததானம் என கூறப்படுகிறது அல்லவா.
தந்தை வந்து குழந்தைகளுக்கு அழிவற்ற ஞான இரத்தினங் களை
மறைமுகமாக தானமாக அளிக்கிறார். பாபாவும் எவ்வளவு மறைமுகமாக
இருக்கிறார். யாருக்கும் தெரிய வில்லை. இவர்கள் அனைவரும் எங்கே
போகிறார்கள், பிரம்மா குமார் குமாரிகள் என்ன செய் கிறார்கள்
எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. பாபா எவ்வளவு மறைமுகமாக
இருக்கிறார் என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும்.
குழந்தைகளாகிய உங்களை உலகத்திற்கே அதிபதி யாக மாற்றுகின்றார்.
எந்த சண்டையும் இல்லை. எந்த வெடிகுண்டும் இல்லை, எந்த செலவும்
இல்லை. இங்கே ஒரு சிறிய ஊரை அடைவதில் கூட எவ்வளவு சண்டை, அடிதடி
நடக்கிறது. எனவே தந்தை வந்து மறைமுகமாக தானம் செய்கிறார்.
அழியாத ஞான இரத்தினங்களினால் உங்கள் பையை நிரப்புகின்றார். சிவ
பாபா கள்ளம், கபடம் அற்றவரே, பொக்கிஷத்தினால் எங்கள் பையை
நிரப்புங்கள் என கூறுகிறார்கள்.
சிவபாபா அழிவற்ற ஞான இரத்தினங்களினால் நம்முடைய பையை நிரப்பிக்
கொண்டி ருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். எனவே ஒவ்வொரு
இரத்தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாகும். நீங்கள்
எவ்வளவு இரத்தினங்களை கொடுக்கிறீர்கள். பிறகு நீங்கள் எந்தளவு
வள்ளல் ஆகிறீர்கள், அது மறைமுகமாக இருக்கிறது. தேவதைகளுக்கு
எவ்வளவு ஆயுதங்கள் உடைய கைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
உண்மையில் எதுவும் இல்லை. சத்யுகத்தில் தேவதைகளுக்கு இவ்வளவு
புஜங்கள் கிடையாது. கலியுகத்தில் எத்தனை விதமான ஆயுதங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறது. அழிவிற்காக அணுகுண்டுகள் இருக்கிறது
என்றால் பிறகு வாள், அம்பு போன்றவைகளை வைத்து என்ன செய்வார்கள்.
ஞான வாள், ஞான கத்தி நீங்கள் கூறுவதை அவர்கள் ஆயுதம் என
நினைத்துக் கொண்டார்கள் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு
மறைமுகமாக தானம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அனைவருக்கும்
மீண்டும் மறைமுகமாக தானம் அளிக்கிறீர்கள். பாபா நமக்கு ஸ்ரீமத்
கொடுத்துக் கொண்டி ருக்கிறார், பகவானுடையது ஸ்ரீமத் ஆகும் என
நீங்கள் அறிகிறீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக நாம்
வருகின்றோம் என அறிகிறீர்கள். அவருக்கு சர்வ குணங்களும்
நிறைந்தவர், 16 கலைகளிலும் நிறைந்தவர், தெய்வீக குணங்களை
உடையவர் என கூறப்படுகிறது. தெய்வீக குணம் அந்த தேவி தேவதைகளிடம்
மட்டும் இருக்கிறது. பிறகு கலைகள் குறைந்துக் கொண்டே வருகிறது.
எப்படி முழு நிலவின் ஒளி நன்றாக இருக்கிறது. பிறகு குறைந்துக்
கொண்டே வருகிறது. குறைந்துக் கொண்டே வந்து ஒரேயடியாக
மெல்லியதாக கோடு மட்டும் மிஞ்சுகிறது. முழுமையாக மறைவது
கிடையாது. நிச்சயமாக கோடு இருக்கிறது. அதற்கு அமாவாசை
என்கிறார்கள். இப்போது உங்களுடையது எல்லையற்ற விசயம் ஆகும்.
நீங்கள் 16 கலைகளில் நிரம்பியவர் ஆகிறீர்கள். கிருஷ்ணரின்
வாயில் தாய்மார்கள் சந்திரனை பார்த்தார்கள் என
காண்பிக்கிறார்கள். இது சாட்சாத்காரத்தின் விசயம் ஆகும். இதை
பாபா வந்து புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் முழுமையாக மாற
வேண்டும் மாயாவின் சம்பூரண கிரகணம் பிடித்திருக்கிறது. மற்றபடி
ஒரு மெல்லிய கோடு தான் மீதம் இருக்கிறது. ஏணியில் இறங்கிக்
கொண்டே வந்துள்ளீர்கள். அனைவரும் ஏணியில் இறங்கத்தான் வேண்டும்.
அப்போது தான் அனைவரும் வீட்டிற்குத் திரும்பப் போக முடியும்.
இப்போது நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறீர்கள். மெல்ல
மெல்ல வளர்ச்சி அடையும். படிப்பில் பலர் தேர்ச்சி அடைவதில்லை.
உங்களுடைய சென்டர்கள் கூட மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்துக்
கொண்டே இருக்கிறது. நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது, பிறகு
இவர்களிடம் என்ன இருக்கிறது என புரிந்துக் கொள்வார்கள். ஒவ்வொரு
நாளும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் இது
எதுவரை தான் நடக்கும், முடிந்து போகும் என்று நினைத்தோம் என
இப்போது கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயத்தினால் பலர்
வெளியேறி விட்டனர். என்ன நடக்கும் என தெரியவில்லை. இங்கேயும்
இல்லை, அங்கேயும் இல்லை. இதை காட்டிலும் வெளியேறி விடுவோம்.!
அவர்களில் சிலர் மீண்டும் திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாபா எவ்வளவு எளிதாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த
அபலைகளுக்கு, அகல்யை போன்றவர்களுக்கு எந்த துன்பமும்
கொடுப்பதில்லை. இவர்களையும் சீர்திருத்த வேண்டும். பாபா
எங்களுக்கு எதுவும் எழுத படிக்கத் தெரியாது என கூறுகிறார்கள்.
எதுவும் படிக்க வில்லை என்றால் மிகவும் நல்லது என பாபா
கூறுகிறார். சாஸ்திரம் போன்ற எவற்றை படித்திருக் கிறீர்களோ அவை
அனைத்தையும் மறந்து விடுங்கள். நான் அதிகமாக எதையும் படிக்க
வைக்கவில்லை. என்னை நினைவு செய்தீர்களானால் இராஜ்ய பதவி
உங்களுடையது என மட்டும் புரிய வைக்கிறேன். அவ்வளவு தான்
உங்களுடைய படகு கடந்து விடும். பிள்ளை பிறந்து விட்டால் பாபா
என்று கூறுவார்கள். அவ்வளவு தான். சொத்துக்கு உரிமையாளர்
ஆகிவிடுகிறார்கள். இங்கேயும் நீங்கள் உரிமையாளர் ஆகிறீர்கள்.
பாப்தாதாவை நினைத்தீர்கள், என்றால் இராஜ்யம் உங்களுடையதாகி
விட்டது. ஆகவே தான் நொடியில் ஜீவன் முக்தி என்று
பாடப்பட்டிருக்கிறது. செல்வந்தர்களுக்கு கடைசியில் அவர்களுடைய
நடிப்பின் பாகம் ஆகும். முதலில் ஏழைகளின் முறையாகும். உங்களிடம்
அவர்களாகவே வருவார்கள். (தோட்டி) துப்புரவு தொழிலாளர்களைக் கூட
முன்னேற்ற வேண்டும். மலைவாழ் மக்கள் பற்றிக் கூட
பாடப்பட்டிருக்கிறது. இராமர் காட்டுவாழ் மனிதனின் இலந்தை பழத்தை
சாப்பிட்டார் என கூறுகிறார்கள். உண்மையில் இராமரும்
சாப்பிடவில்லை, சிவபாபாவும் சாப்பிடவில்லை. ஆம், ஒரு வேளை இந்த
பிரம்மா வேண்டுமானால் சாப்பிட்டிருக்கலாம். மலைவாழ் மக்கள்
போன்றோர் வருவார்கள். டோலி போன்றவை களை எடுத்து வந்தால் எப்படி
மறுக்க முடியும். மலை வாழ் மக்கள், வேசிகள் போன்றோர் எடுத்து
வருவார்கள் என்றால் நீங்களும் சாப்பிடுவீர்கள். நான் சப்பிட
மாட்டேன். நான் எதையும் அனுபவிக்காதவன் என சிவபாபா கூறுகின்றார்.
உங்களிடம் அனைவரும் வருவார்கள். இவர்களை கை தூக்கி விடுங்கள்
என அரசாங்கம் கூட உதவி செய்யும். உங்களுக்கும் கூட தானாகவே
தூண்டுதல் ஏற்படும். பாபா ஏழை பங்காளன் என்றால் நாம் கூட
ஏழைகளுக்குப் புரிய வைக்கலாம். காட்டுவாழ் மக்களிலிருந்தும்
வருவார்கள். இவ்வளவு பெரிய மரமாக இருக்கிறது, இதில் ஒருவர் கூட
தேவி தேவதா தர்மத்தினர் இல்லை. மற்ற தர்மங்களில் மாறி போய்
இருக்கிறார்கள். பக்தி செய் பவர்களுக்கு புரிய வையுங்கள் என
பாபா இப்போது புரிய வைக்கிறார். நாற்று எவ்வாறு நடப்படுகிறது
என நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி பிராமணர்
ஆகிறார்கள். சூரிய வம்சம், சந்திர வம்ச தேவதையாக மாறக்
கூடியவர்கள் வந்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கேட்டாலும்
சொர்க்கத்தில் நிச்சயம் வருவார்கள். பாபா காசியில் கிணற்றில்
குதித்து இறப்பவர்களின் எடுத்துக்காட்டைப் பற்றியும்
கூறியிருக்கிறார். சிவனிடம் சென்று அர்ப்பணம் செய்தனர்.
அவர்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும். நீங்களும் அர்ப்பணம்
ஆகிறீர்கள். இராஜ்யத்திற்காக முயற்சி செய்கிறீர்கள். பக்தி
மார்க்கத்தில் இராஜ்யம் எதுவும் இல்லை. ஒருவரும் திரும்பி போக
முடியாது. என்ன நடக்கிறது. அவர்கள் செய்த பாவங்களி னுடைய
தண்டனையை அனுபவித்து முடிக்கிறார்கள். பிறகு புதிய தலை முறையில்
பிறவி எடுக்கிறார்கள். புதிய தலைமுறையில் பாவம் ஆரம்பம் ஆகிறது.
நீங்களும் நம்பர் ஒன்னில் இருக்கிறீர்கள். நீங்கள் தான் 84
பிறவிகளை அனுபவிக்கிறீர்கள். அனைவரும் சதோ, ரஜோ, தமோவில் வர
வேண்டியிருக்கிறது. இச்சமயம் முழு மனித சிருஷ்டி என்ற மரமும்
இற்றுப் போய் இருக்கிறது என பாபா கூறியிருக்கிறார். மனிதர்கள்
முற்றிலும் காரிருளில் கும்பகர்ணனின் தூக்கத்தில் தூங்கிக்
கொண்டிருக்கிறார்கள். ஒரு கும்பகர்ணன் இல்லை. பலர்
இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் புரிய வைத்தாலும்
கேட்பதில்லை. யாருக்கு பாகம் இருக்கிறதோ அவர்கள் முயற்சி
செய்கிறர்கள். மேலும் அவர்களே தாய் தந்தையின் இதயத்திலும்
அமர்கிறார் கள். இராஜ்ய சிம்மாசனத்திலும் அவர்களே அமர்வார்கள்.
நிறைய பெண் குழந்தைகள், பாபா குழந்தைகளை மிரட்ட வேண்டி
யிருக்கிறது என கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்தளவு புரிதல்
இல்லை என பாபா கூறு கிறார். அழுக்கான எங்களை தூய்மையாக்குங்கள்
என நீங்கள் எங்களை அழைத்தீர்கள். காமம் மிகப் பெரிய எதிரி என
பாபா கூறுகின்றார். கோபம் எதிரி என கூறப்படுவதில்லை. தாய்மார்
களுக்குள் இவ்வளவு கிடையாது. ஆண்கள் மிகவும் சண்டை இடுகிறார்கள்.
இப்போது பாபா தாய்மார்களாகிய உங்களை முன்னால் வைத்திருக்கிறார்.
வந்தே மாதரம். இல்லையென்றால் தாய்மார்களிடம் உன்னுடைய கணவரே
உனக்கு குரு ஈஸ்வர், அவருடைய வழிப்படி நடக்க வேண்டும் என
கூறுகிறார்கள். கை விலங்கு போடப்பட்டது. பிறகு உடனே அழுக்காகி
விடுகின்றனர். இப்படிப்பட்ட இந்த ஈஸ்வர் அவர்களுக்கு
கிடைத்திருக் கிறார். இப்போது இராம இராஜ்யம் உருவாகிறது. மற்ற
அனைவரும் இறந்துக் கொண்டே போவார்கள். வினாசக் காலத்தில் விபரீத
புத்தி, வினாசக் காலத்தில் அன்பு புத்தி என பாபா புரிய
வைக்கின்றார். உங்களுக்கு பரம்பிதா பரமாத்மாவோடு அன்பான புத்தி
இருக்கிறது. சிவபாபா இவருக்குள் வருகிறார். இவர் மூலமாக நாம்
கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என உங்களுடைய ஆத்மா அறிகிறது.
இவ்வளவு சிறிய புள்ளியாகும். இது சிவபாபா வினுடைய தற்காலிக ரதம்
ஆகும். இவர் மூலமாக இந்த ருத்ர ஞான யக்ஞத்தை படைக்கிறார். அது
வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகும். குழந்தைகளின் சிறு, சிறு
துளிகளினால் குளம் நிறைந்துக் கொண்டி ருக்கிறது. குழந்தைகள்
தங்களுடையதை அர்ப்பணம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஏனென்றால் இது அனைத்துமே மண்ணோடு மண்ணாகிறது, எதுவுமே இருக்காது
என அறிகிறார்கள். இவ்வளவாது பயன்படட்டுமே. சுதாமாவின் எடுத்துக்
காட்டு இருக்கிறது அல்லவா. பெண்குழந்தைகள் பாபாவிடம் ஒரு பிடி
அரிசி அல்லது 6-8 ரூபாய் அனுப்புகிறார்கள். ஆஹா குழந்தாய்! பாபா
ஏழைபங்காளன் அல்லவா. இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்
பட்டிருக்கிறது, மீண்டும் நடக்கும் பந்தனத்தில் இருப்பவர்கள்
இருக் கிறார்கள். பாக்கியசாலி நீங்கள். சிவபாபாவின் கை
கிடைத்திருக்கிறது அல்லவா என்று பாபா கூறுகிறார். ஒரு நாள்
வரும், அனைத்து ஆரிய சமாஜம் போன்றோரும் வருவார்கள். எங்கே
போவார்கள். முக்தி, ஜீவன், முக்திக்கான கடை ஒன்று தான்.
தண்டனைகளை அடைந்து அனைவரும் முக்திக்குப் போக வேண்டும். இது
அழிவுக்கான தருணம் ஆகும். அனைவரும் திரும்பி போவார்கள். இது
பிரிய தர்ஷனின் ஊர்வலம், ஊர்வலம் எப்படி போகும் என்பதன்
காட்சிகள் கூட கிடைக்கும். உங்களைத் தவிர வேறு யாரும் பார்க்க
முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபா மூலமாக மறைமுகமாக ஞான தானம் கிடைத்திருக்கிறது. அதன்
மதிப்பை புரிந்துக் கொண்டு தங்களின் பையை ஞானரத்தினங்களால்
நிரப்ப வேண்டும். அனைவருக்கும் மறைமுகமாக தானம் அளித்துக்
கொண்டே செல்ல வேண்டும்.
2. இது அழிவுக்கான சமயம், இப்போது திரும்பச் செல்ல வேண்டும்
என்பதால் உங்களுடைய அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
அன்பான புத்தி உடையவர்களாக வேண்டும். முக்தி மற்றும் ஜீவன்
முக்தியின் வழியை அனைவருக்கும் கூற வேண்டும்.
வரதானம்:
கள்ளங் கபடமற்றவர் என்பதன் கூடவே சர்வசக்திவான் ஆகி
மாயாவை எதிர்கொள்ளக் கூடிய சக்தி சொரூபம் ஆகுக.
சில நேரங்களில் கள்ளங் கபடமற்ற நிலை அதிக நஷ்டம் ஏற்படுத்தி
விடுகிறது. சரளமாக இருப்பது கள்ளங்கபடமற்ற நிலையை தாரணை செய்து
விடுகிறது. ஆனால் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு
கள்ளங்கபடமற்றவர்களாக ஆகாதீர்கள். சரள நிலையின் கூடவே
அனுசரிக்கும் மற்றும் பொறுத்துக் கொள்ளும் சக்தியும் தேவை.
தந்தை கள்ளங் கபடமற்ற வராக, கூடவே சர்வசக்திவானாகவும் இருப்பது
போன்று நீங்களும் கள்ளங் கபடமற்ற நிலையின் கூடவே சக்தி
சொரூபமாகவும் ஆகுங்கள். பிறகு மாயையின் குண்டு தாக்காது, மாயை
எதிர்ப்பதற்குப் பதிலாக நமஸ்காரம் செய்யும்.
சுலோகன்:
தனது உள்ளத்தின் நினைவிற்கான கொடி பறக்க வைத்தீர்கள் எனில்
பிரத்ட்சதா என்ற கொடி பறக்க ஆரம்பித்து விடும்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
விசேஷமாக நினைவு யாத்திரையை சக்திசாலியாக ஆக்குங்கள், ஞான
சொரூபத்தின் அனுபவி யாக ஆகுங்கள். சிரேஷ்ட ஆத்மாக்களாகிய
உங்களது சுப விருத்தி அல்லது நன்மைக்கான விருத்தி மற்றும்
சக்திசாலியான சூழ்நிலை அலைந்து கொண்டிருக்கும், தடுமாறிக்
கொண்டி ருக்கும், கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் அநேக
ஆத்மாக்களுக்கு ஆனந்தம், அமைதி மற்றும் சக்தியின் அனுபவம்
செய்விக்கும்.