10.08.25    காலை முரளி            ஓம் சாந்தி  31.10.2006      பாப்தாதா,   மதுபன்


சதா அன்பின் கூடவே அகண்ட மகாதானி ஆகின்ற போது தடைகளை வென்றவர்களாக, சமாதான சொரூபமாக ஆகிவிடுவீர்கள்

இன்று அன்புக் கடல் தனது பரமாத்ம அன்பிற்கு தகுதியான குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார். நீங்கள் அனைவரும் கூட அன்பு என்ற அலௌகீக விமானத்தின் மூலம் இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா! சாதாரண விமானத்தில் வந்தீர்களா? அல்லது அன்பு என்ற விமானத்தில் பறந்து வந்து சேர்ந்து விட்டீர்களா? அனைவரின் உள்ளத்தில் அன்பின் அலைகள் எழும்பிக் கொண்டிருக்கிறது. மேலும் அன்பு தான் இந்த பிராமண வாழ்க்கையின் அஸ்திவார மாகும். ஆக நீங்கள் அனைவரும் வந்த பொழுது அன்பு தான் ஈர்த்தது அல்லவா! ஞானம் பின் நாட்களில் தான் கேட்டீர்கள், ஆனால் அன்பு பரமாத்ம சிநேகியாக ஆக்கி விட்டது. நான் பரமாத்ம அன்பிற்கு தகுதியானவனாக ஆவேன் என்று கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் இப்பொழுது என்ன கூறுகிறீர்கள்? ஆகிவிட்டோம். அன்பும் சாதாரண அன்பு கிடையாது, உள்ளப் பூர்வமான அன்பு, ஆன்மிக அன்பு, சுய நலமற்ற அன்பு. பரமாத்மாவின் இந்த அன்பு மிக எளிதாக நினைவின் அனுபவம் ஏற்படுத்துகிறது. அன்பானவர்களை நினைவு செய்வது கடினம் அல்ல, மறப்பது தான் கடினம். அன்பு ஒரு அலௌகீக காந்தமாகும். அன்பு சகஜயோகி ஆக்கி விடுகிறது, கடின உழைப்பிலிருந்து விடுவித்து விடுகிறது. அன்பான நினைவு செய்யும் போது கடின உழைப்பு ஏற்படாது. அன்பிற்கான பலன் அடைகிறீர்கள். அன்பின் அடையாளமாக நாலாப்புறங்களிலும் விசேஷ குழந்தைகள் இருக்கவே செய்கிறீர்கள், ஆனாலும் இரட்டை அயல்நாட்டினர் அன்பில் ஓடி ஓடி வந்து சேர்ந்து விட்டனர். பாருங்கள், 90 நாடுகளிலிருந்து வந்து சேர்ந்து விட்டனர். உள்நாட்டுக் குழந்தைகள் பிரபுவின் அன்பிற்குத் தகுதியானவர்களாக இருக்கவே செய்கிறீர்கள், ஆனால் இன்று விசேஷமாக இரட்டை அயல்நாட்டினருக்கு கோல்டன் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உங்கள் அனை வருக்கும் கூட விசேஷ அன்பு இருக்கிறது அல்லவா! அன்பு இருக்கிறது அல்லவா! எவ்வளவு அன்பு இருக்கிறது? எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? எந்த ஒப்பிடும் செய்ய முடியாது. உங்கள் அனைவரின் பாடலும் ஒன்றே ஒன்று தான் அல்லவா - வானத்தில் அந்த அளவிற்கு நட்சத்திரங்கள் இல்லை, கடலில் அந்த அளவிற்கு தண்ணீர் இல்லை எல்லையற்ற அன்பு, எல்லை யற்ற பாசம் இருக்கிறது.

பாப்தாதாவும் அன்பான குழந்தைகளை சந்திப்பதற்கு வந்து விட்டார். குழந்தைகள் நீங்கள் அனைவரும் அன்பாக நினைவு செய்தீர்கள், பாப்தாதா உங்களது அன்பிற்கிணங்க வந்து விட்டார். இந்த நேரத்தில் ஒவ்வொரு வரின் முகத்தில் அன்பின் ரேகை ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதே போன்று இப்பொழுது எதை கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்? அன்பு இருக்கவே செய்கிறது, இது உறுதி. அன்பு இருக்கிறது என்று பாப்தாதாவும் சான்றிதழ் கொடுக்கின்றார். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும் - சதா அன்பானவர்களாக இருக்க வேண்டும், சதா. சிறிது காலத்திற்கு அல்ல. அன்பு துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும், ஆனால் சதவிகிதத்தில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. ஆக வித்திசாயம் போக்குவற்கான மந்திரம் என்ன? ஒவ்வொரு நேரத்திலும் மகாதானி, அகண்ட தானி. சதா வள்ளலின் குழந்தைகள் உலக சேவாதாரியாக இருக்க வேண்டும். எந்த ஒரு நேரமும் மாஸ்டர் வள்ளலாக இல்லாமல் இருக்கக் கூடாது. ஏனெனில் உலக நன்மைக்கான காரியத்தில் தந்தைக்கு உதவியாளர் ஆவதற்கான சங்கல்பம் நீங்களும் செய்திருக்கிறீர்கள். மனதின் மூலம் சக்திகளின் தானம் அல்லது உதவி செய்யுங்கள், வார்த்தைகளின் மூலம் ஞான தானம் செய்யுங்கள், உதவி செய்யுங்கள். செயல் மூலம் குணங்களின் தானம் செய்யுங்கள் மற்றும் அன்பான சம்பந்தத்தின் மூலம் குஷியை தானம் செய்யுங்கள். எவ்வளவு அகண்ட பொக்கிஷங் களுக்கு எஜமானர்களாக இருக்கிறீர்கள்! உலகிலேய பெரிய செல்வந்தர்களாக இருக்கிறீர்கள். வற்றாத மற்றும் எல்லையற்ற பொக்கிஷங்கள். எவ்வளவு கொடுப்பீர்களோ அவ்வளவு அதிகரித்துக் கொண்டே செல்லும். குறையாது, அதிகரிக்கும். ஏனெனில் நிகழ்காலத்தில் உங்களது சகோதர, சகோதரிகள் இந்த பொக்கிஷங்களுக்கு தான் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆக தங்களது சகோதர, சகோதரிகளின் மீது கருணை வரவில்லையா? தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தை போக்க மாட்டீர்களா? காதுகளில் ஓசை ஒ-க்கவில்லையா ஹே நமது தேவ தேவிகளே, எங்களுக்கு சக்தி கொடுங்கள், உண்மையான அன்பு கொடுங்கள் உங்களது பக்தர்கள் மற்றும் துக்கமான ஆத்மாக்கள் இருவரும் - கருணை காட்டுங்கள், இரக்கம் காட்டுங்கள், ஹே கருணையின் தேவ தேவிகளே என்று கூறி கதறிக் கொண்டிருக்கின்றனர். காலத்தின் அழைப்பு கேட்கிறது அல்லவா! கொடுக்கக் கூடிய நேரமும் இது தான். பிறகு எப்பொழுது கொடுப்பீர்கள்? நீங்கள் அந்த அளவிற்கு வற்றாத, எல்லையற்ற பொக்கிஷங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள். எப்பொழுது கொடுப்பீர்கள்? கடைசி நேரத்தில் கொடுப்பீர்களா? அந்த நேரத்தில் அஞ்சலி மட்டும் தான் கொடுக்க முடியும். சேமித்து வைத்திருக்கும் பொக்கிஷங்களை எப்போது காரியத்தில் பயன் படுத்துவீர்கள்? ஒவ்வொரு நேரத்திலும் ஏதாவது பொக்கிஷத்தை வெற்றியாக்கிக் கொண்டி ருக்கிறேனா? என்று சோதனை செய்யுங்கள். இதில் இரண்டு நன்மை இருக்கிறது, பொக்கிஷங்களை வெற்றியாக்குவதன் மூலம் ஆத்மாக்களுக்கு நன்மையும் ஏற்படும் மற்றும் நீங்கள் அனைவரும் கூட மகாதானியாக இருக்கின்ற காரணத்தினால் தடைகளை வென்றவர்களாக, பிரச்சனை சொரூபம் அல்ல, சமாதான சொரூபமாக எளிதாக ஆகிவிடுவீர்கள். இரட்டை இலாபம் இருக்கிறது. இன்று இது நடந்தது, நேற்று இது நடந்தது, இன்று இப்படி ஆகிவிட்டது, நேற்று இப்படி ஆகிவிட்டது. தடைகளிலிருந்து விடுபட்டவர், பிரச்சனைகளிலிருந்து சதா காலத்திற்கும் விடுபட்டு விடுவீர்கள். யார் பிரச்சனைகளுக்கு நேரம் கொடுக்கிறார்களோ, உழைப்பு செய்கிறார்களோ, அவர்கள் உதாசீனம் ஆகிவிடுவார்கள், சில நேரம் உற்சாகத்துடன் இருப்பார்கள், இதிலிருந்து தப்பித்து விடுவீர்கள். ஏனெனில் குழந்தைகளின் உழைப்பு பாப்தாதாவிற்கும் பிடிக்கவில்லை. குழந்தைகள் உழைப்பு செய்வதை பாப்தாதா பார்க்கின்ற பொழுது தந்தையினால் பார்க்க முடியவில்லை. எனவே கடின உழைப்பிலிருந்து விடுபடுங்கள். முயற்சி செய்ய வேண்டும், ஆனால் என்ன முயற்சி? இன்று தனது சிறிய சிறிய பிரச்சனைகளுக்காக முயற்சி செய்வீர்களா? அகண்ட மகாதானி, அகண்ட சகயோகி ஆவதற்கான முயற்சி செய்யுங்கள். பிராமணர்களுக்கு சகயோகி ஆகுங்கள் மற்றும் துக்கமான ஆத்மாக்களுக்கு, தாகமான ஆத்மாக்களுக்கு மகாதானி ஆகுங்கள். இப்பொழுது இந்த முயற்சி அவசியமானதாகும். பிடித்திருக்கிறது அல்லவா! பிடித்திருக்கிறதா? பின்னால் அமர்ந்திருப் பவர்களுக்கு பிடித்திருக்கிறதா? ஆக இப்பொழுது சிறிது மாற்றம் செய்ய வேண்டும் அல்லவா! சுயத்திற்கான அதே முயற்சி பல காலம் செய்து விட்டீர்கள். பாண்டவர்களுக்கு பிடித்திருக்கிறதா? நாளையிலிருந்து என்ன செய்வீர்கள்? நாளையிலிருந்து ஆரம்பம் செய்வீர்களா? அல்லது இப்பொழு திலிருந்தா? இப்பொழுதிலிருந்தே சங்கல்பம் செய்யுங்கள் - எனது நேரம், சங்கல்பம் உலக சேவைக்காக இருக்கும். இதில் சுய நன்மை தானாகவே ஏற்பட்டு விடும், இருக்கும் அல்ல, அதிகரிக்கும். ஏன்? ஒருவரது விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றினால், துக்கத்திற்குப் பதிலாக சுகம் கொடுத்தால், பலமற்ற ஆத்மாக்களுக்கு சக்தி கொடுத்தால், குணம் கொடுத்தால் அவர் எவ்வளவு ஆசிர்வாதம் கொடுப்பார்! அனைவரிடமிருந்து ஆசிர்வாதம் அடைவது தான் முன்னேறுவதற்கான எளிய சாதனமாகும். சொற்பொழிவு செய்யா விட்டாலும் சரி, நிகழ்ச்சி அதிகம் செய்ய முடியா விட்டாலும் சரி, பரவாயில்லை. செய்ய முடியும் எனில் செய்யுங்கள். ஆனால் செய்ய முடியா விட்டாலும் பரவாயில்லை. பொக்கிஷங்களை வெற்றி ஆக்குங்கள். ஏற்கெனவே கூறியிருக்கிறேன் அல்லவா - மனதில் சக்திகளை தானம் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். வார்த்தைகளில் ஞான பொக்கிஷங்கள், செயலில் குணங்களின் பொக்கிஷங்கள் மற்றும் புத்தியில் நேரத்தின் பொக்கிஷம், சம்பந்தம்-தொடர்பில் குஷியின் பொக்கிஷம் வெற்றி ஆக்குங்கள். ஆக வெற்றி ஆக்குவதனால் எளிதாக வெற்றி மூர்த்தி ஆகிவிடுவீர்கள். எளிதாக பறந்து கொண்டே இருப்பீர்கள், ஏனெனில் ஆசிர்வாதம் ஒரு லிப்ட் போன்று வேலை செய்கிறது, ஏணிப்படியாக அல்ல. பிரச்சனை வந்தது, அழித்தீர்கள், சில நேரம் இரண்டு நாட்கள் ஆனது, சில நேரம் இரண்டு மணி நேரம் செலுத்துனீர்கள் - இது ஏணிப்படியில் ஏறுவதாகும். வெற்றி ஆக்குங்கள், வெற்றி மூர்த்தி ஆகுங்கள். எனவே ஆசிர்வாதங்களின் லிப்ட் மூலம் எங்கு விரும்புகிறீர்களோ அங்கு விநாடியில் சென்றடைந்து விடுவீர்கள். சூட்சும வதனத்திற்கு செல்லுங்கள், பரந்தாமத்திற்கு செல்லுங்கள், தனது இராஜ்யத்திற்கு செல்லுங்கள். ஒரு நிமிடம் என்ற நிகழ்ச்சி இலண்டனில் செய்தீர்கள் அல்லவா! பாப்தாதா ஒரு விநாடி என்று கூறுகின்றார். ஒரு விநாடியில் ஆசிர்வாதங்கள் என்ற -லிப்டில் ஏறிவிடுங்கள். நினைவு என்ற சுவிட்ச் அமுக்கினால் போதும், உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

இன்று இரட்டை அயல்நாட்டினர்களுக்கான நாள் அல்லவா! ஆக பாப்தாதா முதலில் இரட்டை அயல்நாட்டினரை எந்த சொரூபத்தில் பார்க்க விரும்புகின்றார்? கடின உழைப்பிலிருந்து விடு பட்டவர்கள், வெற்றி மூர்த்திகள், ஆசிர்வாதத்திற்கு தகுதியானவர்கள். ஆவீர்களா? ஏனெனில் இரட்டை அயல்நாட்டினருக்கு பாப்தாதாவின் மீது அன்பு நன்றாக இருக்கிறது. சக்தி தேவைப்படுகிறது, ஆனால் அன்பு நன்றாக இருக்கிறது. அதிசயம் செய்தீர்கள் அல்லவா? பாருங்கள்-90 தனித்தனி நாடுகளிலிருந்து, தனித்தனி வழக்கமுடையவர்கள், ஆனால் 5 கண்டங்களின் ஒரு சந்தன மரமாக ஆகிவிட்டது. ஒரு மரத்தில் வந்து விட்டீர்கள். ஒரே ஒரு பிராமண நாகரீகம் ஆகிவிட்டது. இப்பொழுது ஆங்கில நாகரீகம் இருக்கிறதா என்ன? நமது நாகரீகம் ஆங்கிலமா இல்லை அல்லவா! பிராமணன் அல்லவா? இப்பொழுது என்னுடையது பிராமண நாகரீகம் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். பிராமண நாகரீகம் தவிர வேறு எதுவும் சேர்க்கப்படக் கூடாது. ஒன்றாக ஆகிவிட்டது. அனைவரும் ஒரே மரமாக ஆகிவிட்டீர்கள்- அதற்கான வாழ்த்துக்களை பாப்தாதா கொடுக்கின்றார். எவ்வளவு நன்றாக இருக்கிறது! யாரிடம் வேண்டுமென்றாலும் கேளுங்கள், அமெரிக்காவிடம் கேளுங்கள், ஐரோப்பாவிடம் கேளுங்கள் - நீங்கள் யார்? என்ன கூறுவீர்கள்? பிராமணன் அல்லவா! அல்லது ஐரோப்பாவைச் சார்ந்தவன், ஆப்பிரிக்காவைச் சார்ந்தவன், அமெரிக்காவைச் சார்ந்தவன் என்று கூறுவீர்களா? இல்லை, அனைவரும் ஒரு பிராமணன் ஆகிவிட்டீர்கள், ஒரே வழிப்படி நடப்பவர்களாக ஆகிவிட்டீர்கள், ஒரே சொரூப முடையவர்களாக ஆகிவிட்டீர்கள். பிராமணன் மற்றும் ஒரே வழி ஸ்ரீமத். இதில் போதை வருகிறது அல்லவா! போதை இருக்கிறதா? அல்லது கடினமாக இருக்கிறதா? கடினம் இல்லை அல்லவா! தலை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள், நல்லது.

சேவையில் என்ன புதுமையை பாப்தாதா விரும்புகின்றார்? என்ன சேவை செய்து கொண்டிருக் கிறீர்களோ மிக மிக மிக நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கான வாழ்த்துக்கள். ஆனால் எதை சேர்த்துக் கொள்ள வேண்டும்? உங்களது மனதிலும் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று இருக்கிறது அல்லவா! ஆக பாப்தாதா பார்த்தார்-என்னவெல்லாம் நிகழ்ச்சிகள் செய்தீர்கள், நேரம் கொடுத்தீர்கள், அன்புடன் செய்தீர்கள், உழைப்பும் அன்பாக செய்தீர்கள் மற்றும் ஸ்தூல செல்வத்தையும் ஈடுபடுத்தீனீர்கள். அது பல கோடி மடங்கு பரமாத்ம வங்கியில் உங்களது கணக்கில் சேமிப்பாகி விட்டது. அதை ஈடுபடுத்தவில்லை, சேமிப்பு செய்தீர்கள். ரிசல்ட் பார்க்கின்ற போது செய்தி கொடுக்கும் காரியம், அறிமுகம் கொடுக்கும் காரியம் அனைவரும் மிக நன்றாக செய்தீர்கள். எங்கு செய்திருந்தாலும், இப்பொழுது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இலண்டனில் நடைபெற்றது மற்றும் இரட்டை அயல் நாட்டினர் நேரத்தின் அழைப்பு அல்லது மன அமைதிக்கான நிகழ்ச்சி செய்கின்றனர், அவை அனைத்து நிகழ்ச்சிகளும் பாப்தாதாவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் என்ன காரியம் செய்ய முடியுமோ, செய்து கொண்டே இருங்கள். செய்தி கிடைக்கிறது, அன்பும் கிடைக்கிறது, சகயோகமும் கிடைக்கிறது, சம்பந்தத்திலும் ஒரு சிலர் வந்து விடுகின்றனர். ஆனால் இப்பொழுது சேர்க்க வேண்டியது-பெரிய நிகழ்ச்சி செய்யும் பொழுது அதில் செய்தி கிடைத்து விடுகிறது. ஆனால் அனுபவம் செய்து விட்டு செல்ல வேண்டும். அந்த அனுபவம் மிக விரைவாக முன்னேற்றத்தில் கொண்டு செல்லும். எவ்வாறு இந்த நேரத்தின் அழைப்பு அல்லது மன அமைதி நிகழ்ச்சியில் நன்றாக அனுபவம் செய்கின்றனர். ஆனால் பெரிய நிகழ்ச்சி செய்யும் பொழுது அதில் செய்தி நன்றாக கிடைத்து விடுகிறது, ஆனால் யார் வருகிறார் களோ, அவர்களுக்கு அனுபவம் ஏற்படுத்தும் இலட்சியம் வையுங்கள். ஏதாவது அனுபவம் செய்ய வேண்டும். ஏனெனில் அனுபவம் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மேலும் அனுபவம் அப்படிப் பட்டது விரும்பா விட்டாலும் அதன் பக்கம் ஈர்க்கும். எனவே பாப்தாதா கேட்கின்றார்-நீங்கள் பிராமணர்கள், ஞானக் கருத்துக்களை முதலில் சுயம் அனுபவிகளாக ஆகியிருக்கிறீர்களா? ஒவ்வொரு சக்தியின் அனுபவம் செய்திருக்கிறீர்களா? ஒவ்வொரு குணத்தையும் அனுபவம் செய்திருக்கிறீர்களா? ஆன்மிக ஸ்திதியின் அனுபவம் செய்தீர்களா? பரமாத்ம அன்பின் அனுபவம் செய்தீர்களா? ஞானம் புரிந்து கொள்வதில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள், ஞானம் நிறைந்தவர்களாக ஆகிவிட்டீர்கள், இதில் பாப்தாதாவும் நன்றாக இருக்கிறீர்கள் என்று புகழ்கிறார். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா யார்? நாடகம் என்றால் என்ன? ஞானம் புரிந்து கொண்டீர்கள். ஆனால் எப்போது தேவையோ, எவ்வளவு நேரம் தேவையோ, எந்த பிரச்சனையின் போது தேவையோ, அந்த பிரச்சனையில் ஆன்மிக பலம் அனுபவம் ஆக வேண்டும். பரமாத்ம சக்தியின் அனுபவம் ஆக வேண்டும், அவ்வாறு ஏற்படுகிறதா? எந்த நேரம், எவ்வளவு நேரம், எப்படி அனுபவம் செய்ய விரும்பு கிறீர்களோ அவ்வாறு ஏற்படுகிறதா? அல்லது சில நேரங்களில் மாறுபடுகிறதா? ஆத்மா என்று நினைக்கிறீர்கள், ஆனால் அடிக்கடி தேக உணர்வு வந்து விடுகிறது எனில் அனுபவம் காரியத்தில் பயன்பட்டதா? அனுபவி மூர்த்தி ஒவ்வொரு பாடத்திலும் அனுபவி மூர்த்தி, ஒவ்வொரு சக்தியிலும் அனுபவி மூர்த்தி. எனவே தனக்குள்ளும் அனுபவத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யுங்கள். இருக்கிறீர்கள், அனுபவம் இல்லை என்று கூற முடியாது, ஆனால் அவ்வபொழுது இருக்கிறது. ஆக பாப்தாதா அவ்வபொழுது என்று விரும்பவில்லை. ஏதோ ஒன்று (சம்திங்) நடந்து விடுகிறது, எப்போதாவதும் ஆகிவிடுகிறது. ஏனெனில் உங்கள் அனைவரின் இலட்சியம், என்ன ஆக வேண்டும் என்ற இலட்சியம் இருக்கிறது? பாப்சமான் என்று கூறுகிறீர்கள். அனைவரும் ஒரே பதில் கூறு கிறீர்கள். ஆக பாப்சமான் என்றால் தந்தை ஒருபோதும் சம் திங் மற்றும் சம் டயம் (சில நேரம்) என்று இல்லை. பிரம்மா பாபா சதா இராஜ்யுக்த், யோகயுக்த், ஒவ்வொரு சக்தியில் சதா, எப்போதாவது என்று இல்லை. என்ன அனுபவம் ஏற்படுகிறதோ, அது சதா காலத்திற்கும் இருக்கும். அது எப்போதாவதாக இருக்காது. எனவே சுயம் அனுபவி மூர்த்தியாகி ஒவ்வொரு விசயத்தில், ஒவ்வொரு பாடத்தில் அனுபவி, ஞான சொரூபத்தில் அனுபவி, யோகயுக்தில் அனுபவி, தாரணை சொரூபத்தில் அனுபவி. ஆல்ரவுண்ட் சேவை-மனதில், வார்தையில், செயலில், சம்பந்தம்-தொடர்பில் அனைத்திலும் அனுபவி, அப்போது தான் மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர் என்று கூற முடியும். ஆக என்ன ஆக விரும்புகிறீர்கள்? தேர்ச்சி பெற விரும்புகிறீர்களா? அல்லது மதிப்புடன் தேர்ச்சி பெற விரும்புகிறீர்களா? தேர்ச்சி பெற விரும்புபவர்கள் தாமதமாகவும் வருவார்கள், நீங்கள் டூ லேட் முன்பாகவே வந்து விட்டீர்கள். இப்பொழுது புதியவர்களும் வந்திருக்கிறார்கள், ஆனால் டூ லேட் பலகை மாட்டப்படவில்லை. லேட் என்ற பலகை மாட்டப்பட்டிருக்கிறது, டூ லேட் மாட்டப் படவில்லை. ஆகையால் புதியவர்களாக இருந்தாலும் இப்பொழுதும் தீவிர முயற்சி செய்து, முயற்சியல்ல தீவிரம். முன்னால் செல்ல முடியும். ஏனெனில் நம்பர் வெளியாகவில்லை. இரண்டு நம்பர் மட்டுமே வெளியாகி இருக்கிறது, தந்தை மற்றும் தாய். இப்பொழுது எந்த ஒரு சகோதரன், சகோதரியின் மூன்றாவது நம்பர் வெளியாகவில்லை. தாதிகளின் மீது மிகுந்த அன்பு இருக்கிறது என்று நீங்கள் கூறலாம், தந்தைக்கும் தாதிகளின் மீது அன்பு இருக்கிறது. ஆனால் நம்பர் வெளியாகவில்லை. ஆகையால் நீங்கள் மிக மிக செல்லமான, பகவானால் தேடிக் கண்டெக்கப் பட்டவர்கள், எவ்வளவு பறக்க விரும்புகிறீர்களோ பறங்கள். ஏனெனில் ஒரு சிறு குழந்தையை அவரது தந்தை தனது விரல் கொடுத்து வழி நடத்துவார், அதிகப்படியான அன்பு செலுத்துவார். வளர்ந்த பிறகு விரல் கொடுத்த நடக்க வைக்கமாட்டார். அவர் தனது கால்களினால் நடந்து விடுவார். எனவே புதியவர்களும் ஈடு செய்ய முடியும். கோல்டன் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விரை விலும் விரைவாக டூ லேட் பலகை வைக்கப்பட இருக்கிறது. ஆகையால் முன் கூட்டியே செய்து விடுங்கள். முதல் முறையாக வந்த புதியவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது, வாழ்த்துக் கள். முதல் முறை தனது வீடு மதுவனத்திற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். ஆகையால் பாப்தாதா மற்றும் முழு குடும்பமும் உள்நாட்டினர் மற்றும் அயல்நாட்டினர் அனைவரின் சார்ப்பாக பல கோடி மடங்கு வாழ்த்துக்கள். நல்லது, இப்பொழுது விநாடியில் எந்த ஸ்திதியில் இருப்பதற்கு பாப்தாதா கட்டளையிடுகிறாரோ, அதே ஸ்திதியில் விநாடியில் நிலைத் திருக்க முடியுமா? அல்லது முயற்சி செய்வதில் நேரம் சென்று விடுமா? இப்பொழுது பயிற்சி விநாடிக்கானதாக இருக்க வேண்டும். ஏனெனில் வரக் கூடிய கடைசி நேரத்தில் நேர்மையுடன் தேர்ச்சி என்ற சான்றிதழ் பெற வேண்டும். அதற்கான பயிற்சி இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும். விநாடியில் எங்கு விரும்புகிறீர்களோ, எந்த ஸ்திதி விரும்புகிறீர்களோ அந்த ஸ்திதியில் நிலைத்திட வேண்டும். எனவே எவரெடி, ரெடியாகி விட்டீர்கள்.

இப்பொழுது ஒரு விநாடியில் புருஷோத்தம சங்கமயுகத்தின் சிரேஷ்ட பிராமணன் என்ற ஸ்திதியில் நிலைத்து விடுங்கள் இப்பொழுது நான் பரிஸ்தா ரூபத்தில் இருக்கிறேன், டபுள் லைட் ஆக இருக்கிறேன் இப்பொழுது விஷ்வ கல்யாணகாரி ஆகி மனதின் மூலம் நாலாப்புறங்களிலும் சக்தியின் கிரணங்கள் கொடுக்கும் அனுபவம் செய்யுங்கள். இவ்வாறு முழு நாளும் விநாடியில் நிலைத்திருக்க முடியுமா? இதற்கான அனுபவம் செய்து கொண்டே இருங்கள். ஏனெனில் திடீரென்று எது வேண்டுமென்றாலும் நடக்கலாம், அதிக நேரம் கிடைக்காது. குழப்பமான நேரத்தில் விநாடியில் உறுதியானவர்களாக ஆக வேண்டும், இதற்கான பயிற்சி சுயம் நேரம் ஒதுக்கி இடையிடையே செய்து கொண்டே இருங்கள். இதன் மூலம் மனக் கட்டுப்பாடு எளிதாக ஆகிவிடும். கட்டுப்படுத்தும் சக்தி மற்றும் ஆளுமை சக்தி அதிகரித்துக் கொண்டே செல்லும். நல்லது.

நாலாப்புறங்களிலிருந்தும் குழந்தைகளின் கடிதம் அதிகமாக வந்திருக்கிறது. அனுபவிகளும் பலர் வந்திருக் கிறீர்கள். ஆக கைமாறாக பாப்தாதா உள்ளப்பூர்வமான ஆசிர்வாதம் மற்றும் உள்ளப்பூர்வ மான அன்பு பல கோடி மடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாப்தாதா பார்த்துக் கொண்டி ருக்கின்றார் - நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர், பார்த்துக் கொண்டிருக்கின்றனர். யார் பார்க்கவில்லை, அவர்களும் நினைவில் இருக்கின்றனர். அனைவரின் புத்தி இந்த நேரத்தில் மதுவனத்தில் தான் இருக்கிறது. ஆக நாலாப்புறங்களிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பெயர் சகிதமாக அன்பு நினைவுகள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அனைவரும் சதா ஆர்வம்-உற்சாகம் என்ற இறக்கையின் மூலம் உயர்ந்த ஸ்திதியில் பறந்து கொண்டிருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய குழந்தைகளுக்கு, சதா கடின உழைப்பிலிருந்து விடுபட்டிருக்கும், தடைகளிலிருந்து விடுபட்டிருக்கும், யோகயுக்த், இராஜயுக்த் குழந்தைகளுக்கு, சதா ஒவ்வொரு பிரச்சனையையும் விநாடியில் தேர்ச்சி பெறக் கூடிய, ஒவ்வொரு நேரத்திலும் சர்வசக்தி சொரூபமாக இருக்கக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
தங்க யுக சுபாவத்தின் மூலம் தங்கமான சேவை செய்யக் கூடிய சிரேஷ்ட முயற்சியாளர் ஆகுக.

எந்த குழந்தைகளின் சுபாவத்தில் பொறாமை, பிடிவாத உணர்வு அதாவது எந்த ஒரு பழைய சன்ஸ்காரத்தின் அலாய் கலப்படம் ஆகவில்லையோ அவர்கள் தங்கயுக சுபாவமுடையவர்கள் ஆவர். இவ்வாறு தங்கயுக சுபாவம் மற்றும் சதா சரி (ஹா ஜீ) என்று கூறக் கூடிய சன்ஸ்கார முடைய சிரேஷ்ட முயற்சியாளர் குழந்தைகள் நேரம் எப்படியோ, சேவை எப்படியோ, அப்படி தன்னை வளைத்து உண்மையான தங்கமாக ஆகிவிடுவர். சேவையிலும் அபிமானம் அல்லது அவமானத்தின் அலாய் கலப்படம் ஆகாமல் இருந்தால் தான் தங்கமான சேவை செய்யக் கூடியவர் என்று கூற முடியும்.

சுலோகன்:
ஏன், எதற்கு என்ற கேள்விகளை அழித்து சதா மகிழ்ச்சியாக இருங்கள்.


அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

அன்பில் மூழ்கியிருக்கும் சமமான ஆத்மாக்கள் சதா யோகிகளாக இருப்பார்கள். யோகா செய்பவர்களாக அல்ல, அன்பில் மூழ்கியே இருப்பார்கள். தனியாகவே இருக்கமாட்டார்கள் எனும் போது எதை நினைப்பார்கள்! நினைவு தானாகவே இருக்கும். எங்கு துணை இருக்குமோ அங்கு நினைவு தானாகவே இருக்கும். ஆக சமமான ஆத்மாக்களின் ஸ்திதி கூடவே இருப்பார்கள், மூழ்கி இருப்பார்கள்.