10.11.24    காலை முரளி            ஓம் சாந்தி  14.11.2002      பாப்தாதா,   மதுபன்


பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரம் மற்றும் வெற்றிக்கு ஆதாரம் -நிச்சய புத்தி!

இன்று எல்லாம் வல்ல தந்தை , நாலா பக்கங்களிலுமுள்ள தன்னுடைய சாமர்த்தியசாலி குழந்தைகளைப் பார்க்கின்றார். ஒவ்வொரு குழந்தையும், திறமைசாலியாகி, பாபா சமான மாவதற்கான சிரேஷ்ட புருஷாரத்தத்தில் (முயற்சியில்) ஈடுபட்டிருக்கின்றனர். குழந்தை களினுடைய இந்த ஆர்வத்தைப் பார்த்து, பாப்தாதா மகிழ்ச்சியடைந்து கொண்டேயிருக்கின்றார். குழந்தைகளினுடைய இந்த திடமான எண்ணம் பாப்தாதாவுக்கும் கூட பிரியமானதாக இருக்கின்றது. பாப்தாதா குழந்தைகளுக்குக் கூறுவது இது தான். தந்தையை விடவும் குழந்தை கள் முன்னே செல்ல முடியும். ஏனென்றால், ஞாபகார்த்தத்தில் கூட தந்தைக்கு ஒருவிதத் தில் தான் பூஜை . குழந்தைகளுக்கு இரண்டு விதத்தில் பூஜை (சாலிகிராமம் ஜடசித்திரம்), குழந்தை கள் பாப்தாதாவின் தலைக்கிரீடம். பாப்தாதா குழந்தைகளினுடை ய சுய கௌரவத்தைப் பார்த்து, சதா இப்படித்தான் கூறுகின்றார். ஆஹா! சிரேஷ்ட ஸ்வமான்தாரி, சுய இராஜ்யதாரி குழந்தைகளே, ஆஹா! ஒவ்வொரு குழந்தையினுடைய விசேஷத் தன்மையானது, ஒவ்வொருடைய நெற்றிப் பிரகாசத்தின் மூலமாக பாபாவுக்குத் தெரிகிறது. நீங்களும் கூட உங்களுடைய விசேஷத்தை அறிந்து, புரிந்து விஷ்வ சேவையில் பயன்படுத்திக் கொண்டே யிருங்கள். சோதனையும் செய்யுங்கள். நான் பிரபுவுக்கு பிரியமுள்ள, பரிவாரத்திற்குப் பிரிய முள்ள குழந்தையாக எவ்வளவு தூரம் ஆகியிருக்கின்றேன்? ஏனென்றால் சங்கமயுகத்தில் பாபா பிராமண பரிவாரத்தைப் படைக்கின்றார். ஆகவே பிரபுவுக்கும், பரிவாரத்திற்கும் பிரியமுள்ள வராக இருப்பது அவசியமாகிறது.

இன்று, பாப்தாதா எல்லா குழந்தைகளினுடைய பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நிச்சயபுத்தி தான் அஸ்திவாரம் ஆதலால் எங்கே நிச்சயம். இருக்கிறதோ அப்போது ஒவ்வொரு சங்கல்பத்திலும், காரியத்திலும் வெற்றி நிச்சியிக்கப் பட்டிருக்கிறது. வெற்றி பிறப்புரிமை , அதிகார ரூபத்தில் (ஐன்ம சித் அதிகாரம்) இயற்கை யாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. ஜன்ம சித் அதிகாரத்தை அடைவதற்காக சிரமப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை . வெற்றி என்பது பிராமண வாழ்க்கையில், கழுத்து மாலையாக இருக்கிறது. பிராமண என்ற வாழ்க்கை என்பதே வெற்றி சொரூபமானது. வெற்றி அடைவோமா அல்லது அடைய மாட்டோமா என்ற கேள்வியே இல்லை . நிச்சயபுத்தி பாபாவுடன் இணைந்த ஒன்று. எங்கே பாபா கம்பைண்டாக (இணைந்து) இருக்கின்றரோ, அங்கே வெற்றி சதா இருந்துகொண்டே இருக்கும்.

ஆகவே, வெற்றி சொரூபமாக எவ்வளவு ஆகியிருக்கிறோம் என்பதை சோதித்துப் பாருங்கள். ஒருக்கால் வெற்றி சதவிகிதத்தில் இருந்தால், இதற்குக் காரணம் நிச்சயத்தில் சதவிகிதம் உள்ளது என்று பொருள். பாபாவிடம் நிச்சயம் உள்ளது, இது ரெம்பவும் நல்லது தான் ஆனால் பாபா மீது நிச்சயம், தன் மீது நிச்சயம், டிராமாவில் நிச்சயம், இதோடு பரிவாரத்தின் மீதும் நிச்சயம். இந்த நான்கின் மீதுள்ள நிச்சயத்தின் ஆதாரத்தில் வெற்றியானது எளிதாகவும், இயல்பாகவும் அடைய முடியும்.

பாபா மீது எல்லா குழந்தைகளுக்கும் நிச்சயம் இருக்கிறது. ஆகவே தான் இங்கு வந்திருக் கிறார்கள். பாபாவுக்கும் கூட, அனைவர் மீதும் நிச்சயமுள்ளது. ஆகவே தான், தன்னுடையவர் களாக ஆக்கிக் கொண்டார். பிராமண வாழ்க்கையில் சம்பன்னமாகவும், சம்பூரணமாகவும் ஆனால் ஆவதற்காக, தன்மீது நிச்சயம் இருக்க வேண்டியது அவசியம். பாப்தாதாவிடமிருந்து அடையப் பெற்ற, சிரேஷ்ட ஆத்மாவினுடைய ஸ்வமான் (சுய கௌரவம்) சதா நினைவில் இருக்க வேண்டும். ஆத்மா அதாவது நான் பரமாத்மாவிடமிருந்து அடையப் பெற்ற ஸ்வமான் தாரி சிரேஷ்ட ஆத்மா. சாதாரண ஆத்மா அல்ல, பரமாத்ம சுவமான்தாரி ஆத்மா. ஆகவே ஸ்வமான் ஒவ்வொரு சங்கல்பத்திலும், ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியை அவசியம் அடையச் செய்கிறது. சாதாரண கர்மம் செய்யக்கூடிய ஆத்மா அல்ல, சுவமான்தாரி ஆத்மா. ஆதலால் ஒவ்வொரு கர்மத்திலும் ஸ்வமான் உங்களுக்கு வெற்றியை எளிதாகவே அடையச் செய்யும். ஆகவே தான், நிச்சய புத்தியுள்ளவன் என்றால், இதன் அடையாளம் -வெற்றி மேல் வெற்றி தான். இதே போல பாபா மீது உறுதியான (பக்கா) நிச்சயபுத்தி இருக்கிறது என்றால், இதன் விசேஷத்தன்மை நிரந்தரமாக நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர் என்பதாக இருக்கும். இந்த நிரந்தரம் தான் வெற்றிக்கு ஆதாரம். என்னுடைய பாபா, பாபா என்றால் மட்டும் போதாது, என்னுடைய பாபா. என்னுடையவர் என்றால் அவர் மீது அதிகாரம் இருக்கும். ஆதலால் மேரா பாபா. நிச்சயபுத்தி ஆத்மா சதா அதிகாரியாக இருப்பார். இதே போல் டிராமா மீதும் முழுமையான நிச்சயம் இருக்க வேண்டும். வெற்றி மற்றும் பிரச்சினை என்ற இரண்டு விதமான விஷயங்கள் டிராமாவில் வருகிறது ஆனால் பிரச்சினையான நேரத்தில் நிச்சய புத்தியுடையவர்களின் அடையாளம் சமாதான சொரூபம். பிரச்சினையை ஒரு வினாடியில், சமாதான சொரூபம் மூலமாக பரிவர்த்தனை செய்ய வேண்டும். பிரச்சினை யினுடைய வேலை வருவது. நிச்சயபுத்தி ஆத்மாவினுடைய வேலை , சமாதான சொரூபத் திலிருந்து, பிரச்சினையை மாற்றி விடுவது ஆகும். ஏனெனில், பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும், ஜன்மம் எடுத்தவுடனேயே , மாயைக்கு சவால் விட்டீர்கள். செய்தீர்களல்லவா? அல்லது மாயாஜீத் ஆக வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களா? பிரச்சினை சொரூபம் என்றால் மாயா சொரூபம். எப்போது சவால் விட்டீர்களோ அப்போது மாயை எதிர்க்கும் அல்லவா? அது அநேக விதமான பிரச்சினைகளின் ரூபத்தில், உங்களுடைய சவாலை முடித்து வைப்பதற்காக வருகிறது. நீங்கள் நிச்சயபுத்தி வெற்றி சொரூபம் மூலமாக கடந்து செல்ல வேண்டும். ஏன்? ஒன்றும் புதிதல்ல (நத்திங் நியூ) எத்தனை தடவை வெற்றி அடைந்திருக்கிறீர்கள்? இந்த ஒரு முறை தான் சங்கமத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக் கிறீர்களா? அல்லது அநேக முறை அடைந்த வெற்றியை, திரும்பவும் செய்து கொண்டிருக் கிறீர்கள். பிரச்சினை உங்களுக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல, நத்திங் நியூ ஆதலால் அநேக முறை வெற்றி அடைந்திருக்கிறீர்கள். இப்போது ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். மீண்டும் ஆகிக்கொண்டேயிருப்பீர்கள். இது தான் டிராமா மீதுள்ள நிச்சய புத்தியின் வெற்றி. அடுத்து பிராமண பரிவாரத்தின் மீது நிச்சயம். ஏன்? பிராமண பரிவாரம் என்பதன் பொருள், கூட்டாளிகளின் கூட்டம். சிறிய பரிவாரம் அல்ல. பிரம்மாபாபாவினுடைய பரிவாரம் மற்ற எல்லா பரிவாரத்தையும் விட சிரேஷ்டமானது, பெரியது. ஆதலால் பரிவாரத்தினருக்கிடையே பரிவாரத்தின் மீதுள்ள அன்பைப் பகிர்ந்து கொள்வதில் வெற்றி. மாறாக. பாபா என்னுடையவர், நான் பாபாவினுடையவன் என்பதில் எல்லாமே அடங்கி விட்டது என்பதல்ல. எனக்கு பாபாவுடன் தான் சம்மந்தம். பரிவாரத்தின் மீது எனக்கென்ன சம்மந்தம்? ஆனால் இதுவும் கூட நிச்சயத்தின் விசேஷமாகும். இந்த நான்கு விஷயங்களிலும் நிச்சயமும், வெற்றியும் அவசியம். பரிவாரம் கூட எல்லோருக்கும், அநேக விஷயங்களில் பலம் கொடுக்கிறது. பரிவாரத்தில் இருக்கும்போது, எல்லோரும் அவரவருடைய தாரணை சொரூபத்தில் நம்பர்வாராக இருக்கிறார்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும். பல விதம் (வெரைட்டி), இதன் ஞாபகார்த்தம் தான் 108-மணி மாலை. சோதித்துப் பாருங்கள் எங்கே முதல் நம்பர், எங்கே 108வது நம்பர். இப்படி ஏன் ஆனது? எல்லோரும் ஒரு நம்பரில் ஏன் வரவில்லை ? 16- ஆயிரம் ஏன் ஆனது? காரணம்? பல விதமான சம்ஸ்காரத்தைப் புரிந்து, ஞானியாகி நடப்பது, நிர்வகிப்பது தான், வெற்றி நிறைந்த நிலை, நடக்கத்தான் வேண்டும். பரிவாரத்தை விட்டு, விட்டு எங்கே போக முடியும்? எங்களுடைய பரிவாரம் இவ்வளவு பெரியது என்ற நஷாவும் இருக்கிற தல்லவா? ஆதலால் பெரிய பரிவாரத்தில், பெரிய மனதோடு, ஒவ்வொருவருடைய சம்ஸ்காரத் தையும் புரிந்து கொண்டு நடப்பது, பணிவுடன் இருப்பது, சுபபாவனை மற்றும் சுப அபிலாஷை யோடு கூடிய விருத்தியில் நடப்பது, இது தான் பரிவாரத்தில் நிச்சய புத்தியின் வெற்றிக்கு அடையாளம். எல்லோரும் வெற்றியாளர்கள் தானே! வெற்றியாளர்களா?

டபுள் ஃபாரினர்ஸ் வெற்றியாளர்களா? கையை நன்றாக அசைக்கிறார்கள். ரெம்பவும் நல்லது. பாப்தாதாவுக்கு குஷியாக இருக்கிறது. நல்லது. டீச்சர்ஸ் வெற்றியாளர்களாக இருக்கின்றீர் களா? அல்லது கொஞ்சம் வெற்றியடைந்து கொண்டிருக்கிறீர்களா? என்ன செய்வது? என்பது அல்ல. எப்படி என்பதற்குப் பதிலாக, இப்படிச் செய்ய வேண்டும். 21-ஜன்மம் தொடர்பு பரிவாரத் தினருடன் இருக்கிறது. ஆதலால் யார், பரிவாரத்தில் பாஸாகிறார்களோ (வெற்றி அடைவது) அவர்கள் எல்லாவற்றிலும் பாஸ். ஆதலால் நான்கிலும் உள்ள நிச்சயத்தை சோதியுங்கள். ஏனெனில், பிரபு பசந்த்தோடு (பாபாவுக்குப் பிரியமுள்ளவர், பரிவாரத்திற்குப் பிரியமுள்ள வராகவும் இருப்பது மிகவும் அவசியம். நம்பர், இந்த நான்கின் நிச்சயத்தின் சதவிகிதத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர் என்பதோடு முடிந்து விடாது. மேரா பாபா என்று மிக நன்றாக கூறுகின்றீர்கள். சதா இதே நிச்சயத்தில் உறுதியாகவும் இருக்கின்றீர்கள், இதற்கு நல் வாழ்த்துக்கள் ஆனால் இன்னும் மூன்று இருக்கிறது. டீச்சர்ஸ், நான்கும் அவசியமா? அல்லது மூன்று அவசியம் ஒன்று அவசியமில்லை , அப்படியா? நான்கும் அவசியம் என்று நினைப்பவர்கள் ஒரு கை உயர்த்துங்கள். எல்லோருக்கும் நான்கும் அவசியமாக இருக்கிறது. யார், மூன்று மட்டும் போதும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள்? யாருமில்லை . ஒன்றும் கஷ்டமில்லையா? ரெம்பவும் நல்லது. ஒருவேளை மனதார கை , உயர்த்தியிருந்தால், எல்லோரும். நல்லது.

பாருங்கள். எங்கெங்கிருந்தோ இருந்து மதுபனில் விதவிதமான கிளைகள் ஒன்று சேர்ந்து ஒரு விருக்ஷம் ஆகிறது. மதுபனில் இருக்கும் போது நான் டில்லியைச் சார்ந்தவன், கர்நடகத்தைச் சேர்ந்தவன், குஜராத்தைச் சார்ந்தவன் என்று நினைக்கிறீர்களா? எல்லோரும் மதுபன் வாசிகள். ஆகவே ஒரு மரம் ஆகி விட்டதல்லவா? எல்லோரும் இந்த சமயத்தில் என்ன நினைக்கிறீர்கள்? மதுபன் வாசியா அல்லது அவரவர் தேசத்தைச் சார்ந்தவர்களா? மதுபன் நிவாசிகளா? எல்லோரும் மதுபன் நிவாசிகள். மிகவும் நல்லது. ஒரு விதத்தில் பிராமணருடைய நிரந்தர மான முகவரி மதுபன் தானே . உங்களுடைய பர்மனென்ட் அட்ரெஸ் எது? மும்பையா? டில்லியா? பஞ்சாபா? மதுபன் பர்மனென்ட் அட்ரஸ். இது, சேவைக்காக, சேவா கேந்திரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள். அது சேவை செய்யும் இடம். உங்களுக்கு வீடு மதுபன். கடைசியில், உங்களுக்கு அடைக்கலம் எங்கே கிடைக்கும்? மதுபனில் தான் கிடைக்கும். ஆகவே தான் பெரிய பெரிய ஸ்தானம் தயாராகிக் கொண்டிருக்கிறதல்லவா? எல்லோருடைய லக்ஷியம் பாபா சமானம் ஆக வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆதலால் முழு நாளும் இந்த டிரில் செய்யுங் கள். மனதின் டிரில் சரீரத்திற்கு டிரில், ஆரோக்கியத் திற்காக செய்கிறீர்கள். செய்து கொண்டே யிருங்கள். ஏனெனில் தற்காலத்தில், மருந்தை விட பயிற்சி தான் அவசியமாக இருக்கிறது. அதை செய்யுங்கள். நன்றாகவே செய்யுங்கள். உரிய நேரத்தில் சேவை செய்ய வேண்டிய நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கக்கூடாது? மற்ற நேரத்தில் பயிற்சி செய்தால் நல்லது ஆனால் கூடவே மனப்பயிற்சியும் அடிக்கடி செய்யுங்கள். பாப்சமான் ஆக வேண்டு மென்றால், ஒன்று நிராகார், இன்னொன்று அவ்யக்த பரிஷ்தா. ஆதலால் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒரு வினாடியில் பாபா சமானமாக நிராகாரி ஸ்திதியில் நிலைத்து விடுங்கள். பாபா சமானம் ஆக வேண்டுமானால், நிராகார் ஸ்திதி. பாபா சமானமானதாகும். காரியம் செய்து கொண்டே , பரிஷ்தாவாகி கர்மம் செய்யுங்கள். பரிஷ்தா என்றால் டபுள் லைட்... காரியத்தின் சுமை இருக்கக் கூடாது. காரியம் பற்றிய சுமை இருந்தால், அது அவ்யக்த பரிஷ்தா ஆக விடாது. ஆதலால் இடையிடையே , நிராகாரி மற்றும் பரிஷ்தா சொரூபத்தைப் பற்றிய மனப் பயிற்சி செய்தால் களைப்பு உண்டாகாது. எப்படி பிரம்மாபாபாவை சாகாரத்தில் டபுள் லைட் சொரூபத்தில் பார்த்தீர்களோ அப்படி, சேவையின் சுமையும் இருக்க வில்லை . அவ்யக்த பரிஷ்தா ரூபம். இப்படியிருந்தால் சகஜமாகவே பாப்சமான் ஆகி விடுவர்கள். ஆத்மா நிராகார மாக இருக்கிறது. மேலும் ஆத்மா நிராகார ஸ்திதியில் நிலைத்திருந்தால், நிராகார் பாபாவின் நினைவு, சகஜமாகவே சமானமாக ஆகி விடும். இப்போதே, ஒரு வினாடியில், நிராகாரி ஸ்திதியில் நிலைக்க முடியுமா? முடியுமா? (பாப்தாதா டிரில் செய்வித்தார்) இந்த அப்பியாசம் மற்றும் அட்டென்ஷன் (கவனம்) இங்குமங்கும் சென்று கொண்டிருக்கும் போதும், கர்மம், செய்து கொண்டிருக்கும் போதும்,

இடையிடையே செய்து கொண்டேயிருக்க வேண்டும். இந்தப் பயிற்சி, மனசா சேவை செய்வதில் உதவியாயிருக்கும். மேலும் சக்திசாலி யோக ஸ்திதியிலும் மிகவும் உதவியாயிருக்கும். நல்லது.

இப்போது டபுள் ஃபாரினர்ஸ் எழுந்திருங்கள். பாருங்கள், டபுள் ஃபாரினர்ஸ்களுக்கு, இந்த சீசனில் காரணமிருக்கிறதோ இல்லையோ, எல்லா குரூப்பிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குரூப்பிலும் வரலாம். சுதந்திரம் உள்ளது. ஆகவே, இது பாக்கியம் தானே? டபுள் பாக்கியம். ஆகவே இந்த குரூப்பிலும், சிலர் முதல் முறையாகவும், சிலர் முன்பு வந்தவர்களும் வந்திருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். பாப்தாதாவினுடைய திருஷ்டி எல்லா ஃபாரினர்ஸ்கள் மீதும் உள்ளது. எவ்வளவு அன்பு உங்களுக்கு பாபாவிடம் இருக்கிறதோ, பாபாவினுடைய அன்பு உங்களிடம் ஆயிரம் மடங்கு உள்ளது. சரி தானே ? ஆயிரம் மடங்கு உள்ளதா? உங்களுக்கும் அன்பு இருக்கிறது. உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறது, அகவே தான் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். டபுள் ஃபாரினர்ஸ், இந்த பிராமண பரிவாரத்தின் அலங்காரம். விசேஷ அலங்காரம். ஒவ்வொரு தேசத்தையும் பாப்தாதா பார்க்கின்றார். நினைவில் அமர்ந்திருக்கிறார்கள். கேட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். ஆகவே நினைவில் அமர்ந்திருக்கிறார்கள். மிகவும் நல்லது.

டீச்சர்ஸ்: டீச்சர்களினுடைய எண்ணிக்கையும் பெரியது. பாப்தாதா டீச்சர்களுக்கு ஒரு டைட்டில் கொடுக்கின்றார். (பட்டம்) என்ன பட்டம் கொடுக்கின்றார்? டபுள் ஏற்கனவே நண்பர்கள். இவர்களுக்கு நண்பர்கள் (ஃபிரண்ட்ஸ்) என்ற சம்மந்தம் பிரியமானதாக இருக்கிறது. டீச்சர்களுக்கு பாப்தாதா, யார் யோக்கியமான டீச்சர்களாக இருக்கின்றார்களோ எல்லோருக்கும் அல்ல. யார் யோக்கியமானவர்களோ, அவர்களை பாப்தாதா, இவர்கள் குருபாயி என்கின்றார். எப்படி பெரிய குழந்தைகள் தந்தைக்கு சமமானவர்களாக ஆகி விடுகிறார்களோ, அதுபோல டீச்சர்களும் கூட குருபாயிகள் ஏனென்றால், சதா தந்தையினுடைய சேவையில் நிமித்தமாகி யிருக்கிறார்கள். பாப்சமான் சேவாதாரிகள். பாருங்கள். டீச்சர்களுக்கு தந்தையின் சிம்மாசனம் கிடை க்கிறது, முரளி சொல்வதற்காக. குருவினுடைய ஆசனம் கிடைக்கிறதல்லவா? ஆதலால் டிச்சர்ஸ் என்றால் நிரந்தர சேவாதாரி. மனசா மூலமாகவோ, பேச்சு மூலமாகவோ, செயல் மூலமாகவோ, சதா, சேவாதாரி. அப்படித்தானே? ஓய்வை விரும்புபவர்களாக இல்லை தானே? சேவாதாரி. சேவை, சேவை மேலும் சேவை . சரி தானே, நல்லது.

சேவையில், டில்லி, ஆக்ராவின் பொறுப்பு: ஆக்ரா, கூடவே இருக்கிறது. டில்லியினுடைய சேனை மிகப் பெரியது. நல்லது. டில்லியில் ஸ்தாபனைக்கான அஸ்திவாரம் போடப் பட்டுள்ளது. இது மிக நல்ல காரியம். இப்போது பாபாவை பிரத்யக்க்ஷம் செய்வதற்கான அஸ்திவாரம் எங்கே இருக்கும்? டில்லியா? மகாராஷ்டிராவா? கர்நாடகமா? லண்டனா? எங்கே? டில்லியில் ஆகுமா? நிரந்தரமாக சேவை , தபஸ்யா செய்யுங்கள். சேவை மற்றும் தபஸ்யா இந்த இரண்டின் பேலன்ஸ் (சரிசமம்) மூலம் பிரத்யக்க்ஷம் ஆகும். எப்படி சேவை பற்றிய டயலாக் செய்தீர்கள் அல்லவா? இதுபோல டில்லியில் தபஸ்யா பற்றி வர்ணனை செய்யும் டயலாக் தயார் செய்யுங்கள். அப்போது டில்லி, டில்லி தான் என்பார்கள். மனம் பாபாவிடம் இருக்கிறது ஆனால் பாபாவின் மனதிற்குப் பிரியமான காரியம் செய்து காட்ட வேண்டும். பாண்டவர்களே! செய்ய வேண்டுமல்லவா செய்வீர்கள், அவசியம் செய்வீர்கள். எப்படிப்பட்ட தபஸ்யா செய்ய வேண்டு மென்றால், எல்லோரும் பறவைகளாகி, பாபா, பாபா என்று கூறியவாறே விசேஷ ஸ்தாபனமாகிய டில்லி வந்து சேர்ந்து விட வேண்டும். விட்டில் பூச்சிகள் பாபா, பாபா என்று. உச்சரித்துக் கொண்டே வரட்டும். அப்போது சொல்லலாம் பிரத்யக்க்ஷத்தா. ஆகவே , இது செய்ய வேண்டும். வருகிற ஆண்டில் இந்த டயலாக் செய்ய வேண்டும். இதனுடைய ரிசல்ட் அதாவது எத்தனை விட்டில் பூச்சிகள் பாபா, பாபா என்று கூறியவாறே சரணடைந்தார்கள் என்பது பற்றி கூற வேண்டும் சரி தானே ? மிகவும் நல்லது! மாதாக்கள் நிறை ய பேர் வந்திருக்கிறார்கள்.

குமார், குமாரிகள்: குமார் மற்றும் குமாரிகளால், பாதி ஹால் நிரம்பியுள்ளது. குமார், குமாரிகளுக்கு சபாஷ் குமார், குமாரிகள் ஜுவாலை ரூபமாகி, ஆத்மாக்களை பாவனம் ஆக்குபவர்கள். குமார், குமாரிகளுக்கு இரக்கம் வர வேண்டும். இக்காலத்து குமார் மற்றும் குமாரிகள் எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்கள்! குழப்பத்திலிருக்கும், தங்களைச் சார்ந்த கூட்டாளிகளை நல்ல வழியில் கொண்டு வாருங்கள். நல்லது. குமார், குமாரிகள் யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, அவர்களில் யார், இந்த ஆண்டு முழுவதிலும் ஆத்மாக்களை தன்னைப் போல ஆக்கியிருக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். யார், சேவையில் தன்னைப் போல ஆக்கியிருக்கிறார்களோ அவர்கள் உயரமாக உயர்த்துங்கள். குமாரிகள், தன்னைப்போல ஆக்கியிருக்கிறார்களா? நல்ல பிளான் செய்திருக்கிறார்கள். ஹாஸ்டலில் இருப்பவர்கள் கை உயர்த்துகிறார்கள். இப்போது சேவையில் பயனடைந்தவர்களை அழைத்து வரவில்லை. ஆகவே, குமார், குமாரிகள் சேவை மூலமாக பயனடைந்தவர்களை அழைத்து வரவேண்டும். சரியா நல்லது.

நாலா பக்கங்களிலுமுள்ள வெற்றி ரத்தினங்களுக்கு சதா நிச்சய புத்தி, சகஜமாக வெற்றி மூர்த்திகளான குழந்தைகளுக்கு சதா மேரா பாபா என்ற அதிகாரத்தின் மூலம் சேவையில் வெற்றி அடையக்கூடிய வெற்றி மூர்த்திகளான குழந்தைகளுக்கு, சதா சமாதான சொரூபம், பிரச்சினைகளை பரிவர்த்தனை செய்யக்கூடிய பரிவர்த்தக் (மாற்றக்கூடிய) ஆத்மாக்களுக்கு, இப்படிப்பட்ட சிரேஷ்ட குழந்தைகளுக்கு, சதா பாபாவை பிரத்யக்க்ஷம் செய்வதற்கான பிளானை, நடை முறையில் கொண்டு வரக் கூடிய குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் வாழ்த்துக்கள். கோடான கோடி முறை வாழ்த்துக்கள் மற்றும் நமஸ்தே !

ரத்தன் மோகினி தாதி: எல்லோருக்கும் உங்களிடம் பிரியம் உள்ளது. பாபாவுக்கும் உங்களிடம் பிரியம் உள்ளது. சகயோகி ஆவதன் மூலம் சூட்சும பிராப்திகள் நிறைய கிடைக்கிறது. அப்படித் தானே ? ஆதி ரத்தினம். ஆதி ரத்தினம் இன்று வரையிலும் கூட நிமித்தமாக இருக்கிறீர்கள். நல்லது.

வரதானம்:
அனைத்தையும் உன்னுடையது - உன்னுடையது என செய்து என்னுடையது என்ற அம்சத்தை சமாப்தி செய்யக் கூடிய டபுள் லைட் ஆகுக !

எந்த மாதிரியான என்னுடையது, என்னுடைய சுபாவம், என்னுடைய சம்ஸ்காரம், என்னுடைய பழக்கம்.... என்னுடையது எது உள்ளதோ, அவை அனைத்தும் சுமையானது, பாரம் நிறைந்தது, பறக்க விடாது. என்னுடையது என்னுடையது என்பது அழுக்கை உருவாக்கும், எனவே இப்பொழுது உன்னுடையது- உன்னுடையது என்று கூறி சுத்தமாகுங்கள். பரிஸ்தா என்றால் என்னுடையது உணர்வு வந்தால் அழுக்கு உள்ளது என்பதாகும். எனவே இந்த அசுத்தமான சுமையை சமாப்தி செய்து, டபுள் லைட் ஆகுங்கள்.

சுலோகன்:
பாப்தாதாவை தன்னுடைய கண்களுக்குள் நிறைத்து வைத்திருப்பவர்கள் தான் கண்ணின் மணி ஆவார்கள்.