10-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களது இந்த பாட்டுகள் சஞ்சீவினி மூ-கை ஆகும், இதைக் கேட்பதன் மூலம் மயக்க நிலை நீங்கி விடும்.

கேள்வி:
மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? எந்த யுக்தியின் மூலம் மனநிலையை மிக நன்றாக வைத்துக் கொள்ள முடியும்?

பதில்:
1) ஞான நடனம் செய்வது கிடையாது, வீண் விசயங்களினால் தனது நேரத்தை வீணாக்கி விடுகிறீர்கள், அதனால் தான் மனநிலை தடுமாறி விடுகிறது. 2) மற்றவர்களுக்கு துக்கம் கொடுப் பதாலும் அது மனநிலையை பாதிக்கிறது. மனநிலை நன்றாக இருக்க வேண்டுமெனில், இனிமை யானவர்களாக நடந்து கொள்ள வேண்டும். நினைவின் மீது முழு கவனம் இருக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் குறைந்த பட்சம் அரை மணி நேரம் நினைவில் அமருங்கள், பிறகு அதிகாலை யில் எழுந்து நினைவு செய்யுங்கள், அப்பொழுது மனநிலை நன்றாக இருக்கும்.

பாடல்:
என் மனம் என்ற வாச-ல் யார் வந்தது .......

ஓம் சாந்தி.
இந்த பாட்டும் குழந்தைகளுக்காக பாபா உருவாக்கியிருக்கிறார். இதன் பொருளையும் குழந்தை களைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. இப்படிப்பட்ட நல்ல நல்ல பாட்டுக்களை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாபா பல முறை புரிய வைத்திருக்கின்றார். வாடும் நிலை ஏற்படும் பொழுது இந்த பாட்டுகளை கேட்பதன் மூலம் புத்தியில் உடனேயே இதன் பொருள் வந்து விடும், பிறகு வாடிய நிலை நீங்கி விடும். இந்த பாட்டுக்களும் சஞ்சீவினி மூ-கையாகும். பாபா கட்டளைகளைக் கொடுக்கின்றார், ஆனால் சிலர் நடைமுறைப்படுத்துகின்றனர். எனது மற்றும் உங்கள் அனைவரின் உள்ளத்திலும் யார் வந்தது என்று இந்த பாட்டில் கூறுவது யார்? அவர் வந்து ஞான நடனம் ஆடுகின்றார். கிருஷ்ணர் கோபியர்களை நடனமாட வைத்தார் என்று கூறுகின்றனர். அவ்வாறு கிடையவே கிடையாது. இப்பொழுது பாபா கூறுகின்றார் - ஏ சா-கிராம் குழந்தைகளே! அனைவருக்கும் கூறுகின்றார் அல்லவா! பள்ளிக்கூடம் என்றால் பள்ளிக்கூடம் தான், அங்கு கல்வி கற்றுத்தரப்படும், இதுவும் பள்ளிக்கூடமாகும். நமது உள்ளத்தில் யாருடைய நினைவு வருகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வேறு எந்த மனிதர்களின் புத்தியிலும் இந்த விசயங்கள் கிடையாது. இந்த ஒரே ஒரு நேரத்தில் தான் குழந்தைகளாகிய உங்களுக்கு அவரது நினைவு இருக்கிறது, வேறு யாரும் அவரை நினைவு செய்வது கிடையாது. தந்தை கூறுகின்றார் - நீங்கள் தினமும் என்னை நினைவு செய்தால் நல்ல தாரணைகள் ஏற்படும். நான் எப்படி கட்டளையிடுகிறேனோ அவ்வாறு நீங்கள் நினைவு செய்வது கிடையாது. மாயை உங்களை நினைவு செய்ய விடுவது கிடையாது. நான் கூறுவதன் படி நீங்கள் மிகக் குறைவாக நடக்கிறீர்கள், மேலும் மாயை கூறுவதன் படி அதிகம் நடக்கிறீர்கள். இரவு தூங்கும் பொழுது அரை மணி நேரம் பாபாவின் நினைவில் அமர வேண்டும் என்று பல முறை கூறியிருக்கிறேன். கணவன்-மனைவியாக இருந்து ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்தாலும், தனித்தனியாக அமர்ந்தாலும் சரியே. புத்தியில் ஒரு தந்தையின் நினைவு இருக்க வேண்டும். ஆனால் மிகச் சிலரே நினைவு செய்கின்றனர். மாயை மறக்க வைத்து விடுகிறது. கட்டளைப்படி நடக்கவில்லையெனில், பதவி எப்படி அடைய முடியும்? பாபாவை அதிக மாக நினைவு செய்ய வேண்டும். சிவபாபா, நீங்கள் தான் ஆத்மாக்களுக்கு தந்தையாக இருக்கிறீர்கள். அனைவருக்கும் உங்களிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்க வேண்டும். யார் முயற்சி செய்ய வில்லையோ அவர்களுக்கும் ஆஸ்தி கிடைக்கும். பிரம்மாண்டத்திற்கு எஜமானர்களாக அனைவரும் ஆவார்கள். அனைத்து ஆத்மாக்களும் நாடகப்படி நிர்வாண்தாமத்திற்கு வருவார்கள். எதுவும் செய்யா விட்டாலும்! அரை கல்பம் பக்தி செய்யலாம், ஆனால் எதுவரை நான் வழிகாட்டியாக வர வில்லையோ அதுவரை யாரும் திரும்பிச் செல்ல முடியாது. யாருக்கும் வழி தெரியாது. ஒருவேளை அறிந்திருந்தால் அவர்கள் பின்னால் அனைவரும் கொசுக் கூட்டத்தைப் போன்று சென்றிருக்க வேண்டும். மூலவதன் என்றால் என்ன? என்பதையும் யாரும் அறியவில்லை. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைத் தான் திரும்பவும் நடிக்க வேண்டும். இப்பொழுது பக-ல் கர்மயோகியாகி தொழி-ல் ஈடுபட்டு விடுங்கள், சமையல் போன்ற அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும், உண்மையில் கர்ம சந்நியாசம் என்று கூறுவதும் தவறாகும். காரியம் செய்யாமல் யாரும் இருக்க முடியாது. கர்ம சந்நியாசி என்று பொய்யான பெயர் வைத்து விட்டனர். ஆக பகல் பொழுதில் காரியங்கள் செய்யுங்கள், இரவு மற்றும் அதிகாலையில் தந்தையை நல்ல முறையில் நினைவு செய்யுங்கள். யார் இப்பொழுது தன்னுடையவர்களாக ஆக்கியிருக் கிறாரோ அவரை நினைவு செய்தால் உதவியும் கிடைக்கும். இல்லையெனில் கிடைக்காது. செல்வந்தர்களுக்கு தந்தையினுடையவர்களாக ஆவதற்கான இதயமே இருக்காது எனும் பொழுது பதவியும் கிடைக்காது. நினைவு செய்வது மிகவும் எளிதாகும். அவர் நமது தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கின்றார். இந்த உலக சரித்திர பூகோளம் எவ்வாறு திரும்பவும் நடைபெறுகிறது என்ற முழு ரகசியத்தையும் நமக்குக் கூறுகின்றார். தந்தையை நினைவு செய்ய வேண்டும், பிறகு சுயதரிசன சக்கரத்தைச் சுற்ற வேண்டும். அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்லக் கூடியவர் தந்தை மட்டுமே ஆவார். இப்படிப்பட்ட சிந்தனைகள் செய்ய வேண்டும். இரவு துங்கும் பொழுதும் இந்த ஞானம் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுது இதே ஞானம் நினைவில் இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நாம் தான் தேவதை களாக, சத்திரியர், வைஷ்யர், சூத்திரர்களாக ஆகிறோம். பிறகு மீண்டும் பாபா வருவார். மீண்டும் நாம் சூத்திரனி-ருந்து பிராமணர்களாக ஆவோம். பாபா திரிமூர்த்தியாக, திரிகாலதர்சியாக, திரிநேத்திரியாகவும் இருக் கின்றார். நமது புத்தியை திறந்து விடுகின்றார். ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்து விடுகிறது. இப்படிப்பட்ட தந்தை வேறு யாருக்கும் கிடைத்திருக்க முடியாது. தந்தை படைக்கின்றார் எனில், தாயாகவும் ஆகிவிடுகின்றார். ஜெகதம்பாவை நிமித்தமாக ஆக்குகின்றார். தந்தை இந்த சரீரத்தில் வந்து பிரம்மா ரூபத்தில் விளையாடவும் செய்கின்றார். சுற்றி வரவும் செய்கின்றார். நாம் பாபாவை நினைவு செய்கின்றோம் அல்லவா! இவரது ரதத்தில் வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாப்தாதா நம்முடன் விளையாடுகின்றார் என்று நீங்கள் கூறுவீர்கள். விளையாட்டின் பொழுதும் நினைவில் இருப்பதற்கான முயற்சியை பாபா செய்கின்றார். பாபா கூறுகின்றார் - நான் இவர் மூலமாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். சைத்தன்யமாக இருக்கிறார் அல்லவா! ஆக இப்படிப் பட்ட சிந்தனை செய்ய வேண்டும். இப்படிப்பட்ட தந்தையிடம் ப-யாகி விட வேண்டும். ப-யாகி விடுவேன்...... என்று நீங்கள் பக்தியில் பாடி வந்தீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - என்னை இந்த ஒரு பிறப்பில் வாரிசாக ஆக்கிக் கொண்டால் நான் 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியம் தருவேன். இப்பொழுது இவர் கட்டளை கொடுத்தார் எனில், அதன்படி நடக்க வேண்டும். அதுவும் எப்படி பார்க்கின்றாரோ அப்படி கட்டளை யிடுகிறார். கட்டளைப்படி நடப்பதன் மூலம் பற்றுதல்கள் நீங்கி விடும். ஆனால் பயப்படுகிறீர்கள். பாபா கூறுகின்றார் - நீங்கள் ப-யாகவில்லையெனில் நான் எப்படி ஆஸ்தி கொடுப்பேன்! உங்களது பணத்தை யாரேனும் எடுத்து கொள்கிறார்களா! உங்களிடம் பணம் உள்ளதா? நல்லது, புத்தகம் அச்சடிப்பதில் பயன்படுத்துங்கள் என்று கூறுவார். டிரஸ்டி அல்லவா! பாபா வழி கூறிக் கொண்டே இருப்பார். பாபாவின் அனைத்தும் குழந்தைகளுக்காகத் தான். குழந்தைகளிடமிருந்து எதையும் பெறுவது கிடையாது. பற்றுதல்களை நீங்கி விடுங்கள் என்று யுக்தியாக புரிய வைக்கின்றார். பற்றுதலும் மிகப் பெரிய முள்ளாகும். (குரங்கு போன்றது) பாபா கூறுகின்றார் - நீங்கள் குரங்கு போன்று அதன் மீது ஏன் பற்றுதல் வைக்கிறீர்கள்? பிறகு வீட்டிற்கு வீடு கோயிலாக எப்படி உருவாகும்? நான் உங்களை குரங்கி-ருந்து (பந்தர்) விடுவித்து பூஜைக்குத் (மந்திர்) தகுதியானவர்களாக ஆக்குகிறேன். நீங்கள் இந்த குப்பைகளின் மீது ஏன் பற்றுதல் வைக் கிறீர்கள்? எப்படி பாதுகாக்க வேண்டும் என்று வழி பாபா கூறுகின்றார். இருப்பினும் புத்தியில் அமருவது கிடையாது. இவை அனைத்தும் புத்திக்கான வேலையாகும்.

அமிர்தவேளையில் பாபாவிடம் எப்படி உரையாட வேண்டும் என்று பாபா வழி கூறுகின்றார். பாபா, நீங்கள் எல்லையற்ற தந்தையாக, ஆசிரியராக இருக்கிறீர்கள். நீங்கள் தான் எல்லையற்ற உலகின் சரித்திர பூகோளத்தைக் கூறு முடியும். லெட்சுமி நாராயணனின் 84 பிறவிக் கதைகள் உலகில் யாருக்கும் தெரியாது. ஜெகதம்பாவை மாதா, மாதா என்றும் கூறுகின்றனர். அவர் யார்? சத்யுகத்தில் இருக்க முடியாது. அங்கு மகாராஜா, மகாராணியாக இருப்பது லெட்சுமி நாராயணன் ஆவர். அவர் களுக்கென்று குழந்தைகள் இருப்பர், அவரும் சிம்மாசனத்தில் அமருவார். நாம் அவரது குழந்தைகளாக ஆகி எப்படி சிம்மாசனத்தில் அமருவது? இந்த ஜெகதம்பா பிராமணியாக இருக் கின்றார், பிரம்மாவின் குழந்தை சரஸ்வதி ஆவார் என்பதை இப்பொழுது நாம் அறிவோம். மனிதர்கள் இந்த ரகசியங்களை அறியமாட்டார்கள். இரவில் பாபாவின் நினைவில் அமரும் வழக்கத்தை உருவாக்குவது மிகவும் நல்லது ஆகும். நியமம் உருவாக்கினால் உங்களுக்குள் குஷியின் அளவு அதிகமாக இருக்கும், மேலும் வேறு எந்த கஷ்டமும் ஏற்படாது. ஒரு தந்தையின் குழந்தைகள் நாம், சகோதர சகோதரிகள் என்று கூறுவீர்கள். பிறகு தவறான பார்வை வைப்பது என்பது கெட்டதாக ஆகிவிடும். போதையிலும் சதோ, ரஜோ, தமோ குணமுடையதாக இருக்கிறது அல்லவா! தமோ குண போதை ஏறிவிட்டால் இறந்து விடுவர். சிறிது நேரமாவது பாபாவை நினைவு செய்து பாபாவின் சேவையில் ஈடுபட்டு விடுங்கள், இதை நியமமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பிறகு மாயையின் புயல்கள் வராது. அந்த போதை நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் மனநிலை மிகத் தெளிவாகிவிடும். யோகாவிலும் லைன் தெளிவாகிவிடும். இப்படிப்பட்ட பாடல்களும் மிக நன்றாக இருக்கிறது, பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் ஆட ஆரம்பித்து விடுவீர்கள், புத்துணர்வு அடைந்து விடுவீர்கள். இரண்டு, நான்கு, ஐந்து பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன. ஏழைகளும் பாபாவின் இந்த சேவையில் ஈடுபட்டு விட்டால் அவர்களுக்கு மாளிகை கிடைத்து விடும். சிவபாபாவின் களஞ்சியத்தி-ருந்து அனைத்தும் அடைய முடியும். சேவாதாரிகளுக்கு பாபா ஏன் கொடுக்கமாட்டார்? சிவபாபாவின் களஞ்சியம் நிறைந்திருக்கிறது.

(பாட்டு) இது ஞான நடனமாகும். தந்தை வந்து கோப கோபியர்களுக்கு ஞான நடனம் ஆடச் செய்விக் கின்றார். எங்கு அமர்ந்திருந்தாலும் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள், மனநிலை மிக நன்றாக இருக்கும். எவ்வாறு பாபா ஞானம் மற்றும் யோக போதையில் இருக்கின்றாரோ, குழந்தை களுக்கும் கற்றுக் கொடுக்கின்றார். ஆக குஷியின் போதை இருக்கும். இல்லையெனில் வீண் விசயங்கள் இருந்தால் மனநிலை கெட்டு விடும். அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் நல்ல தாகும். பாபாவின் நினைவில் அமர்ந்து பாபாவிடம் இனிமையிலும் இனிய உரையாடல் செய்ய வேண்டும். சொற்பொழிவு செய்பவர்களும் சிந்தனை செய்ய வேண்டியிருக்கிறது. இன்று இந்த கருத்தைப் பற்றி புரிய வைப்பேன், இவ்வாறு புரிய வைப்பேன். நான் வேலை செய்வதை விட்டு விடவா? என்று பாபாவிடம் பல குழந்தைகள் கேட்கின்றனர். ஆனால் பாபா கூறுகின்றார் - முத-ல் சேவையில் வெற்றி அடைவதை நிரூபியுங்கள்! பாபா நினைவிற்கான யுக்தி மிக நன்றாக கொடுத்திருக்கின்றார். ஆனால் இதை பக்குவமாக உருவாக்கியிருப்பவர்கள் கோடியிலும் சிலர் மட்டுமே. சிலருக்கு நினைவி-ருப்பது கடினமாக இருக்கிறது. குமாரிகளாகிய உங்களது பெயர் பிரபலமாக இருக்கிறது. குமாரிகளின் பாதங்களில் விழுந்து அனைவரும் வணங்குகின்றனர். நீங்கள் 21 பிறவிகளுக்கு பாரதத்திற்கு சுயராஜ்யத்தைக் கொடுக்கிறீர்கள். உங்களது நினைவுச் சின்னமாக கோயில்களும் உள்ளன. பிரம்மா குமார், குமாரிகளின் பெயரும் பிரபரலமாகி விட்டது. குமாரி என்றாலே 21 குலத்தை முன்னேற்றுபவர் ஆவார். ஆக இதன் பொருளையும் புரிய வைக்க வேண்டும். இது 5 ஆயிரம் ஆண்டிற்கான ரீல் ஆகும், எதுவெல்லாம் கடந்து முடிந்ததோ அது நாடகம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தவறு ஏற்பட்டு விட்டது, நாடகம். பிறகு எதிர்காலத் திற்கான தனது ரிஜிஸ்டரை சரி செய்து விட வேண்டும். பிறகு ரிஜிஸ்டர் கெட்டு விடக் கூடாது. மிக அதிக முயற்சி செய்ய வேண்டும், அப்பொழுது தான் உயர்ந்த பதவி அடைய முடியும். பாபாவினுடையவர்களாக ஆகிவிட்டால் பிறகு பாபாவும் ஆஸ்தி கொடுப்பார். மாற்றான் குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்க மாட்டார். உதவி செய்வது கடமையாகும். புத்திசா-களாக இருப்பவர்கள் ஒவ்வொரு விசயத்திலும் உதவி செய்வார்கள். தந்தையைப் பாருங்கள் எவ்வளவு உதவி செய்கின்றார்! தைரியமான குழந்தைகளுக்கு தந்தை உதவி செய்வார். மாயாவை வெல்வ தற்கும் சக்தி தேவை. ஒரு ஆன்மீகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும், மற்ற தொடர்புகளைத் துண்டித்து ஒருவரிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாபா ஞானக் கடலாக இருக்கின்றார். நான் இவருள் பிரவேசம் செய்து பேசுகின்றேன் என்று அவர் கூறுகின்றார். நான் தந்தையாக, ஆசிரியராக, குருவாக இருக்கிறேன். பிரம்மா, விஷ்ணு, சங்கரைப் படைக்கக் கூடியவன் என்று வேறு யாரும் கூற முடியாது. இந்த விசயங்களை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பழைய குப்பைகளின் மீது பற்றுதல் வைக்காதீர்கள், தந்தையின் கட்டளைப்படி நடந்து தனது பற்றுதல்களை அழித்து விட வேண்டும். டிரஸ்டியாக இருக்க வேண்டும்.

2) இந்த கடைசிப் பிறவியில் பகவானை தனது வாரிசாக ஆக்கி அவரிடத்தில் ப-யாகி விட வேண்டும். அப்பொழுது தான் 21 பிறவிகளுக்கான இராஜ்ய பாக்கியம் கிடைக்கும். தந்தையை நினைவு செய்து சேவை செய்ய வேண்டும், போதையில் இருக்க வேண்டும், ரிஜிஸ்டர் கெட்டு விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வரதானம்:
(பிரத்யட்ச) கண்கூடான பலன் மூலமாக அதிந்திரிய சுகத்தின் அனுபவம் செய்யும் சுயநலமற்ற சேவாதாரி ஆவீர்களாக.

சத்யுகத்தில் சங்கமத்தின் கர்மத்திற்கான பலன் கிடைக்கும்.ஆனால் இங்கு தந்தையினுடையவர் ஆகி விடும் பொழுது பிரத்யட்ச பலன் ஆஸ்தியின் ரூபத்தில் கிடைக்கிறது. சேவை செய்தீர்கள் மேலும் சேவை செய்வதன் கூட கூடவே மகிழ்ச்சி கிடைத்து விட்டது. யார் நினைவில் இருந்து சுயநலமற்ற உணர்வுடன் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு சேவையின் பிரத்யட்ச பலன் அவசியம் கிடைக்கின்றது. பிரத்யட்ச பலன்தான் பசுமையான பழம் (பலன்) ஆகும். அது (எவர்ஹெல்தி) என்றும் ஆரோக்கியமுடையவர்களாக ஆக்கி விடுகிறது. யோகத்துடன் கூடிய சரியான (யதார்த்தமான) சேவையின் பலனாவது மகிழ்ச்சி, அதிந்திரிய சுகம் மற்றும் (டபுள்லைட்) லேசான மற்றும் ஒளியின் அனுபவம்.

சுலோகன்:
யார் தங்களது நடத்தை மூலமாக ஆன்மீக (ராயல்ட்டி) கம்பீரத்தன்மையின் (ஜலக்) ஜொலிப்பு மற்றும் (ஃபலக்) பெருமிதத்தின் அனுபவம் செய்விக்கிறார்களோ அவர்களே விசேச ஆத்மா ஆவார்கள்.