10-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தானம் முதலில் நம்
வீட்டிலிருந்து துவங்க வேண்டும் அதாவது முதலில் சுயம் ஆத்ம
உணர்வுடையவராக ஆவதற்கான முயற்சி செய்யுங்கள் பிறகு
மற்றவர்களுக்குக் கூறுங்கள். ஆத்மா என புரிந்து கொண்டு
ஆத்மாவிற்கு ஞானம் அளித்தீர்கள் என்றால் ஞானம் எனும் வாளில்
கூர்மை வந்து விடும்.
கேள்வி:
சங்கமயுகத்தில் எந்த இரண்டு
விஷயங்களில் உழைப்பு (முயற்சி) செய்வதால் சத்யுகத்தின்
சிம்மாசனத்திற்கு அதிபதி ஆகி விடுவீர்கள்?
பதில்:
(1) துக்கம்-சுகம்,
இகழ்ச்சி-புகழ்ச்சி ஆகியவற்றில் சமமான நிலை இருக்க வேண்டும் -
இதில் முயற்சி செய்யுங்கள். யாராவது தலைகீழாக ஏதாவது
பேசினார்கள் என்றால், கோபப்பட்டார்கள் என்றால் நீங்கள் மௌனமாகி
விடுங்கள். ஒரு பொழுதும் வாயால் சப்தமான வார்த்தைகளை
பேசாதீர்கள். (2) கண்களை (சிவில்) தூய்மையானதாக ஆக்குங்கள்.
கிரிமினல் ஐ- (குற்றப் பார்வை) முற்றிலுமே நீங்கிப் போய் விட
வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் சகோதர சகோதரர்கள் ! ஆத்மா என
புரிந்து கொண்டு ஞானம் கொடுங்கள். ஆத்ம அபிமானி ஆவதற்கான
முயற்சி செய்யுங்கள். அப்பொழுது சத்யுக சிம்மாசனத்திற்கு அதிபதி
ஆகி விடுவீர்கள். முழுமையாகத் தூய்மை ஆகுபவர்களே சிம்மாசனத்தில்
அமர்பவர்களாக ஆகிறார்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் உரையாடுகிறார்.
ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த மூன்றாவது கண் கிடைத்துள்ளது.
இதற்கு ஞானக்கண் என்றும் கூறப்படுகிறது. அதன் மூலமாக நீங்கள்
உங்கள் சகோதரர்களைப் பார்க்கிறீர்கள். எனவே சகோதர சகோதரர் என்று
பார்க்கும் பொழுது கர்ம இந்திரியங்கள் சஞ்சலப்படாது என்பதை
புத்தி மூலமாகப் புரிந்துள்ளீர்கள் இல்லையா? மேலும் இவ்வாறு
செய்து செய்து குற்றமான (கிரிமினல்) கண்கள் இப்பொழுது
தூய்மையாக (சிவில்) ஆகி விடும். உலகிற்கு அதிபதி ஆக வேண்டும்
என்றால் முயற்சி செய்ய வேண்டி வரும் அல்லவா என்று தந்தை
கூறுகிறார். எனவே இப்பொழுது இந்த உழைப்பை செய்யுங்கள். முயற்சி
செய்வதற்காக பாபா புதுப்புது ஆழமான பாயிண்ட்ஸ் கூறுகிறார்
அல்லவா? எனவே இப்பொழுது தங்களை சகோதர சகோதரர் என்று உணர்ந்து
ஞானத்தை அளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறகு நாம் அனைவரும் சகோதரர்கள் என்று பாடப்படுவது நடைமுறையில்
ஆகி விடும். இப்பொழுது நீங்கள் உண்மையிலும் உண்மையான சகோதரர்கள்
ஆவீர்கள். ஏனெனில் தந்தையை அறிந்துள்ளீர்கள். தந்தை
குழந்தைகளாகிய உங்களுடன் சேவை செய்து கொண்டிருக்கிறார்.
குழந்தைகள் தைரியம் வைத்தால் தந்தை உதவுவார். எனவே தந்தை வந்து
சேவை செய்வதற்கான இந்த தைரியத்தை அளிக்கிறார். எனவே இது
சுலபமாக ஆகியது அல்லவா? எனவே தினமும் இதைப் பயிற்சி செய்ய
வேண்டியிருக்கும். சோம்பலாக ஆகக் கூடாது. இந்த புதிய புதிய
பாயிண்ட்ஸ் குழந்தைகளுக்கு கிடைக் கிறது. சகோதரர்களாகிய நமக்கு
பாபா கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை குழந்தைகள் அறிந்துள்
ளார்கள். ஆத்மாக்கள் படிக்கிறார்கள். இது ஆன்மீக ஞானம் ஆகும்.
இதற்கு ஸ்பிரிச்சுவல் நாலேஜ் என்று கூறப்படுகிறது. இந்த
நேரத்தில் மட்டுமே இந்த ஆன்மீக ஞானம் ஆன்மீக தந்தையிடமிருந்து
கிடைக்கிறது. ஏனெனில் தந்தை வருவதே சங்கம யுகத்தில். அப்பொழுது
சிருஷ்டி மாறுகிறது. சிருஷ்டி மாற வேண்டிய நேரத்தில் தான் இந்த
ஆன்மீக ஞானம் கிடைக் கிறது. தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்ற
இதே ஆன்மீக ஞானத்தைத் தான் தந்தை தருகிறார். ஆத்மா தனியாக (அசரீரி)
வந்திருந்தது. இங்கு பிறகு சரீரத்தை தாரணை செய்கிறது. ஆரம்ப
முதல் இது வரை ஆத்மா 84 பிறவிகள் எடுத்துள்ளது. ஆனால்
வரிசைக்கிரமமாக யார் எப்படி வந்திருப்பார்களோ அவர்கள் அவ்வாறே
ஞான யோகத்தின் உழைப்பை செய்வார்கள். பிறகு யார் எப்படி முந்தைய
கல்பத்தில் என்ன முயற்சி செய்தார்களோ அவர்கள் இப்பொழுது கூட
அவ்வாறே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது
பார்க்கப்படுகிறது. தங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும்.
மற்றவர்களுக்காக செய்ய வேண்டி இருப்பதில்லை. எனவே தன்னைத் தான்
ஆத்மா என்று உணர்ந்து உழைக்க வேண்டும். மற்றவர்கள் என்ன
செய்கிறார்கள் என்பதில் நமக்கு என்ன லாபம்? தானம் முதலில் நம்
வீட்டில் துவங்கும் அதாவது முதன் முதலில் தான் சுயம் முயற்சி
செய்ய வேண்டும். பின்பு மற்றவர்களுக்குக் (சகோதரர்களுக்கு) கூற
வேண்டும். நீங்கள் தன்னை ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவிற்கு
ஞானம் அளித்தீர்கள் என்றால், உங்களது ஞான வாளில் கூர்மை
இருக்கும். உழைப்போ உள்ளது அல்லவா? எனவே அவசியம் கொஞ்ச சகித்து
கொள்ள வேண்டி இருக்கும். இச்சமயம் துக்கம் சுகம், நிந்தை புகழ்,
மானம் அவமானம் இவை அனைத்தையும் கொஞ்ச சகித்துக் கொள்ள வேண்டி
வரும். எனவே யாராவது எப்பொழு தாவது தப்பும் தவறுமாகப்
பேசுகிறார்கள் என்றால், மௌனமாக இரு என்பார்கள். யாராவது மௌனமாக
ஆக்கி விட்டார்கள் என்றால் பிறகு ஏன் கோபப்படுவார்கள். யாராவது
ஒருவர் பேசுகிறார் பின் மற்றவரும் திருப்பிப் பேசும் பொழுது
தான் பின் வாயால் சத்தம் ஏற்படுகிறது. ஒருவர் வாயால் சப்தம்
போட்டார் பின் மற்றவர் அமைதியாக இருந்தார் என்றால் மௌனம்
ஆகிவிடும். அவ்வளவே! இதைத் தான் தந்தை கற்பிக்கிறார்.
எப்பொழுதுமே யாராவது கோபத்தில் வருகிறார்கள் என்பதைப்
பார்த்தீர்களானால் மௌனமாக ஆகி விடுங்கள். தானாகவே அவர் களுடைய
கோபம் சாந்தமாகி விடும். மற்றவருடைய சப்தம் வரவே வராது. இரண்டு
கை சேர்த்து தட்டும் பொழுது பிறகு குழப்பம் ஆகி விடும். எனவே
தந்தை கூறுகிறார், குழந்தைகளே! விகாரத்தினுடைய தாகட்டும்,
காமத்தினுடையதாகட்டும், கோபத்தினுடையதாகட்டும், ஒரு பொழுதும்
இந்த விஷயங்களில் சப்தம் போடாதீர்கள்.
குழந்தைகள் ஒவ்வொருக்கும் நன்மை செய்தே ஆக வேண்டும். இத்தனை
சென்டர்கள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளன? முந்தைய கல்பத்தில் கூட
இது போல சென்டர்கள் வெளிவந்திருக் கக்கூடும். பாபா, சென்டர்கள்
திறக்க வேண்டும் என்ற இந்த ஆர்வம் நிறைய குழந்தை களுக்கு
இருக்கிறது என்பதை தேவர் களுக்கு தேவனான தந்தை பார்த்துக்
கொண்டே இருக்கிறார். நாங்கள் சென்டர்கள் திறக்கிறோம். நாங்கள்
செலவை ஏற்றுக் கொள்கிறோம். எனவே நாளுக்கு நாள் இது போல ஆகிக்
கொண்டே போவார்கள். ஏனெனில் எந்த அளவிற்கு விநாசத்தின் நாட்கள்
நெருங்கிக் கொண்டே போகுமோ அந்த அளவு பிறகு இந்த பக்கம் கூட
சேவையில் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும். இப்பொழுது
பாப்தாதா இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள். எனவே என்ன
புருஷார்த்தம் செய்கிறார்கள். என்ன பதவி அடைவார்கள் என்று
ஒவ்வொருவரையும் பார்க் கிறார்கள் யாருடைய முயற்சி உயர்ந்ததாக
இருக்கிறது, யாருடையது நடுத்தரமாக உள்ளது, யாருடையது
தாழ்ந்ததாக இருக்கிறது என்று. அவர்களோ பார்த்து
கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் கூட பள்ளிக் கூடத்தில் மாணவர்கள்
எந்த பாடத்தில் மேலும் கீழும் ஆகிறார்கள் என்பதைப் பார்க்கிறார்.
எனவே இங்கும் அவ்வாறே தான். ஒரு சில குழந்தைகள் நல்ல முறையில்
கவனம் கொடுக்கிறார்கள். எனவே தங்களை உயர்ந்தவர்களாக
உணருகிறார்கள். ஒரு சில நேரத்தில் பிறகு தவறு செய்கிறார்கள்.
நினைவில் இருப்பதில்லை. பின் தங்களை குறைவானவர்களாக
நினைக்கிறார்கள். இது பள்ளிக் கூடம் ஆகும் அல்லவா? பாபா நாங்கள்
சில நேரங்களில் மிகுந்த குஷியில் இருக்கிறோம். சில நேரங்களில்
குஷி குறைந்து போய்விடுகிறது என்று குழந்தைகள் கூறுகிறார்கள்.
எனவே இப்பொழுது பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் -
மகிழ்ச்சி யாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் மன்மனாபவ.
தன்னை ஆத்மா என்று உணருங்கள். மேலும் தந்தையையும் நினைவு
செய்யுங்கள். முன்னால் பரமாத்மாவைப் பாருங்கள். ஆக அவர் அகால
பீடத்தில் அமர்ந்துள்ளார். இது போல சகோதரர்கள் பக்கமும்
பாருங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பிறகு சகோதரனிடம்
உரையாடுங்கள். சகோதரனுக்கு நாம் ஞானம் கொடுக்கிறோம். சகோதரி
அல்ல. சகோதர சகோதரர்கள். ஆத்மாக்களுக்கு ஞானம் அளிக்கிறோம்.
உங்களுக்கு இந்த பழக்கம் ஏற்பட்டு விட்டால், பிறகு உங்களை
ஏமாற்றிக் கொண்டிருக்கும் குற்றப்பார்வை (கிரிமினல் ஐ) மெல்ல
மெல்ல மூடிந்து போய் விடும். ஆத்மா ஆத்மாவை என்ன செய்யும்? தேக
அபிமானம் வரும் பொழுது விழுகிறார்கள். பாபா எங்களுக்குக் குற்ற
பார்வை உள்ளது என்று நிறைய பேர் கூறுகிறார்கள். நல்லது. குற்ற
பார்வையை இப்பொழுது (சிவில் ஐ) தூய பார்வையாக ஆக்குங்கள். தந்தை
ஆத்மாவிற்கு மூன்றாவது கண் கொடுத்தே இருக்கிறார். மூன்றாவது கண்
மூலமாகப் பார்த்தீர்கள் என்றால் உங்களுடைய தேகத்தைப் பார்க்கும்
பழக்கம் நீங்கிப் போய் விடும். பாபா குழந்தைகளுக்கு (டைரக்ஷ்ன்)
உத்தரவுகளை பிறப்பித்துக் அளித்து கொண்டே இருக்கிறார்.
இவருக்கும் (பிரம்மாவிற்கு) இவ்வாறே கூறுகிறார். இந்த பாபா கூட
தேகத்தில் ஆத்மாவைப் பார்ப்பார். எனவே இதற்கு ஆன்மீக ஞானம்
என்றே கூறப்படுகிறது. பாருங்கள் எவ்வளவு உயர்ந்த பதவியை
அடைகிறீர்கள். பெரிய பதவி ஆகும். எனவே முயற்சி கூட அவ்வாறு
செய்ய வேண்டும். முந்தைய கல்பத்தைப் போல எல்லோருடைய முயற்சியும்
நடக்கும் என்பதை பாபாவும் அறிவார். ஒரு சிலர் ராஜா ராணி
ஆவார்கள். ஒரு சிலர் பிரஜையில் சென்று விடுவார் கள். எனவே இங்கு
அமர்ந்து நேஷ்டை (யோகம்) கூட செய்விக்கிறீர்கள் என்றால் தன்னை
ஆத்மா என்று உணர்ந்து மற்றவர்களினுடைய புருவ மத்தியில் கூட
ஆத்மாவைப் பார்த்து கொண்டே இருந்தீர்கள் என்றால், அவர்களுக்கு
நன்றாக சேவை ஆகும். யார் தேஹீ அபிமானியாக ஆகி (ஆத்ம உணர்வில்)
அமருகிறார்களோ அவர்கள் ஆத்மாக்களைத் தான் பார்க்கிறார்கள்.
இதில் நிறைய அப்பியாசம் செய்யுங்கள். அட, உயர்ந்த பதவி அடைய
வேண்டும் என்றால் கொஞ்சமாவது உழைப்பீர்கள் அல்லவா? எனவே
இப்பொழுது ஆத்மாக் களுக்காக இதே உழைப்பு ஆகும். இந்த ஆன்மீக
ஞானம் ஒரே ஒரு முறைதான் கிடைக்கிறது. மேலும் ஒரு பொழுதும்
கிடைக்காது. கலியுகத்திலும் அல்ல. சத்யுகத்திலும் அல்ல.
சங்கமயுகத்தில் மட்டுமே. அது கூட பிராமணர் களுக்கு தான். இதைப்
பக்குவமாக நினைவு செய்து கொண்டு விடுங்கள். பிராமணர்கள் ஆகும்
பொழுதே தேவதை ஆவீர்கள். பிராமணர் களாகவே ஆகவில்லை என்றால்,
பிறகு தேவதைகளாக எப்படி ஆவீர்கள்? இந்த சங்கம யுகத்தில் தான்
இந்த உழைப்பு செய்கிறீர்கள். வேறு எந்த நேரத்திலும் தன்னை ஆத்மா,
மற்றவர்களையும் ஆத்மா என்று உணர்ந்து அவர்களுக்கும் ஞானம்
கொடுங்கள் என்று கூற மாட்டார்கள். தந்தை புரிய வைக்கும்
விஷயங்களைப் பற்றி மனனம் செய்யுங்கள். இது சரியான விஷயமா,
நமக்கு நன்மை பயக்கக் கூடிய விஷயமா என்று மதிப்பிடுங்கள். தந்தை
அளிக்கும் அறிவுரைகளை நாம் சகோதரர்களுக்கு அளிக்க வேண்டும்.
பெண் களுக்கும் அளிக்க வேண்டும் ஆண்களுக்கும் அளிக்க வேண்டும்
என்று நமக்கு பழக்கம் ஏற்பட்டு விடும். ஆத்மாக்களுக்குத் தான்
கொடுக்க வேண்டி உள்ளது. ஆத்மா தான் ஆண் அல்லது பெண்ணாக ஆகி
இருக்கிறது. சகோதர சகோதரியாக ஆகி உள்ளார். நான் குழந்தைகளாகிய
உங்களுக்கு ஞானம் அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். நான்
குழந்தைகளின் பக்கம் ஆத்மாக் களின் பக்கம் பார்க்கிறேன். மேலும்
ஆத்மாக்கள் கூட நமது தந்தையான பரமாத்மா ஞானம் அளிக்கிறார் என்று
புரிந்துள்ளார்கள். எனவே இதற்கு ஆத்ம உணர்வுடையவராக ஆகி
உள்ளார்கள் என்று கூறுவார்கள். இதற்குத் தான் ஆத்மா பரமாத்மா
உடன் ஆன்மீக ஞானத்தின் பரிமாற்றம் செய்து கொள்வது என்று
கூறப்படுகிறது. எனவே தந்தை அறிவுரை அளிக்கிறார் – பார்வை
யாளர்கள் யார் வந்தாலும் சரி, அப்பொழுது கூட தன்னை ஆத்மா என்று
உணர்ந்து ஆத்மாவிற்கு தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும்.
ஆத்மாவில் ஞானம் உள்ளது. சரீரத்தில் இல்லை. எனவே அவரையும் ஆத்மா
என்று உணர்ந்து தான் ஞானம் அளிக்க வேண்டும். இதனால் அவருக்கும்
நன்மை ஏற்படும். இது உங்கள் வாளில் கூர்மை இருப்பது போல ஆகும்.
இந்த ஞானம் என்ற வாளில் கூர்மை நிரம்பி விடும். ஏனெனில் ஆத்ம
உணர்வுடையவராக ஆகிறீர்கள் அல்லவா? எனவே இதையும் பயிற்சி செய்து
பாருங்கள். பாபா கூறுகிறார், இது சரியா என்று நீங்களே
தீர்மானியுங்கள். மேலும் குழந்தைகளுக்கும் கூட இது ஒன்றும்
புதிய விஷயம் கிடையாது. ஏனெனில் தந்தை சுலப மாகத் தான் புரிய
வைக்கிறார். சக்கரம் சுற்றி வந்தீர்கள். இப்பொழுது நாடகம்
முடிவடைகிறது. இப்பொழுது பாபாவின் நினைவில் இருக்கிறோம்.
தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகி சதோபிரதானமான
உலகத்தின் அதிபதி ஆகிறோம். பிறகு இவ்வாறே படி இறங்குகிறோம்.
பாருங்கள் எவ்வளவு சுலபமாகக் கூறுகிறார். ஒவ்வொரு 5 ஆயிரம்
வருடங்களுக்குப் பிறகும் நான் வர வேண்டி உள்ளது. நாடகத்
திட்டப்படி நான் கட்டுப்பட்டுள்ளேன். வந்து குழந்தைகளுக்கு
மிகவும் சுலபமான நினைவு யாத்திரையைக் கற்பிக் கிறேன். தந்தையின்
நினைவில் அந்த் மதி சோ கதி - இறுதி நேரம் புத்தி எவ்வாறோ
அவ்வாறே கதியும் ஆகி விடும். இது இந்த நேரத்திற்காக உள்ளது. இது
கடைசி நேரம் ஆகும். இப்பொழுது இந்த நேரத்தில் என் ஒருவனை நினைவு
செய்தீர்கள் என்றால் சத்கதி கிடைக்கும் என்று தந்தை வந்து
யுக்தி கூறுகிறார். படிப்பினால் இது போல ஆவேன், இன்னாராக ஆவேன்
என்று குழந்தைகள் கூட புரிந்துள்ளார்கள். இங்கு கூட அதே போலத்
தான் ஆகும். நான் போய் புதிய உலகத்தில் தேவி தேவதை ஆகப்போகிறேன்.
ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. எதுவும் புதிதல்ல (நத்திங் நியூ)
என்று தந்தையோ அடிக்கடி கூறுகிறார். இதுவோ படி இறங்க வேண்டும்
மற்றும் ஏற வேண்டும். ஜின் என்ற பூதத்தின் கதை உள்ளது அல்லவா?
அதற்கு படி ஏற வேண்டும், பிறகு இறங்க வேண்டும் என்ற வேலை
கொடுக்கப்பட்டது. இந்த நாடகமே ஏறுவது மற்றும் இறங்குவது
பற்றியதாகும். நினைவு யாத்திரையினால் மிகவும் வலிமை
உடையவர்களாக ஆகி விடுவீர்கள். எனவே குழந்தைகளே ! இப்பொழுது (தேஹி
அபிமானி) ஆத்மா உணர்வுடையவர்களாக ஆகுங்கள் என்று பல்வேறு
வகைகளில் தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்.
இப்பொழுது எல்லோரும் திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மாவாகிய
நீங்கள் முழுமையாக 84 பிறவிகள் எடுத்து தமோபிரதானமாக ஆகி
விட்டுள்ளீர்கள். பாரதவாசிகள் தான் சதோ ராஜோ தமோ ஆகிறார்கள்.
மற்ற எந்த தேசத்தினருக்கும் முழுமையாக 84 பிறவிகள்
எடுத்துள்ளார்கள் என்று கூற முடியாது. நாடகத்தில் ஒவ்வொருக்கும்
அவரவர் பாகம் இருக்கும் என்பதை தந்தை வந்து கூறியுள்ளார். ஆத்மா
எவ்வளவு சிறியதாக உள்ளது. இந்த சிறிய ஆத்மாவிற்குள் இந்த
அழியாத பாகம் பொருந்தி உள்ளது என்பது விஞ்ஞானி களுக்கும்
புரியவே புரியாது. இது எல்லாவற்றையும் விட அதிசயமான விஷயம்
ஆகும். இந்த சிறிய ஆத்மா பின் எவ்வளவு பாகம் ஏற்று நடிக்கிறது.
அதுவும் அவினாஷி (அழியாதது). இந்த நாடகம் கூட அவினாஷி ஆகும்.
மேலும் ஏற்கனவே அமைந்தது, அமைக்கப்பட்டது ஆகும். அப்படி இன்றி
எப்பொழுது ஆகியது என்று யாராவது கூறுவது அல்ல. இது இயற்கை ஆகும்.
இந்த ஞானம் மிகவும் அதிசயமானது ஆகும். ஒரு பொழுதும் இந்த
ஞானத்தைக் கூறவே முடியாது. இந்த ஞானத்தைக் கூறுவதற்கு யாரிடமும்
அவ்வளவு ஆற்றல் கிடையாது. எனவே இப்பொழுது குழந்தைகளுக்கு
நாளுக்கு நாள் தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நான்
எனக்கு சமானமாக ஆக்குவதற்காக , தந்தையிடமிருந்து ஆஸ்தி
பெறுவதற்காக எனது சகோதர ஆத்மாவிற்கு ஞானம் அளிக்கிறேன் என்று
இப்பொழுது பயிற்சி செய்யுங்கள். ஏனெனில் அனைத்து
ஆத்மாக்களுக்கும் உரிமை உள்ளது. பாபா அனைத்து ஆத்மாக்களுக்கும்
அமைதி மற்றும் சுகத்தின் ஆஸ்தி அளிப்பதற்காக வருகிறார். நாம்
ராஜதானியில் இருக்கும் பொழுது மற்ற அனைவரும் சாந்திதாமத்தில்
இருப்பார்கள். பின்னால் வெற்றி முழக்கம் ஏற்படும். இங்கு சுகமே
சுகம் இருக்கும். எனவே எந்த அளவிற்கு நீங்கள் தூய்மை ஆகிறீர்களோ
அந்த அளவிற்கு கவர்ச்சி இருக்கும். நீங்கள் முழுமையாக தூய்மை
ஆகி விடும் பொழுது சிம்மாசனத்தில் அமருபவராக ஆகி விடுகிறீர்கள்.
எனவே இந்த பயிற்சி செய்யுங்கள். அப்படியின்றி இனி கேட்டோம்
பிறகு காது வழியாக வெளியேற்றி விட்டோம். அவ்வளவே ! என்று
நினைக்காதீர்கள். இந்த பயிற்சி இன்றி நீங்கள் இருக்க முடியாது.
தன்னை ஆத்மா என்று உணருங்கள் அதுவும் சகோதர ஆத்மா சகோதர
ஆத்மாவிற்கு புரிய வையுங்கள். ஆன்மீகத் தந்தை ஆன்மீக
குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். இதற்கு (ஆன்மீக)
ஸ்பிரிச்சுவல் நாலேஜ் என்று கூறப்படுகிறது. அளிப்பவர் ஆன்மீகத்
தந்தை ஆவார். குழந்தைகள் முழுமையாக ஆன்மீகமாக ஆகி விடும் பொழுது
ஒரேயடியாக தூய்மை ஆகி விடுகிறார்கள். பிறகு சென்று சத்யுகத்தில்
சிம்மானத்திற்கு அதிபதி ஆகிறார்கள். யார் தூய்மையாக ஆவதில்லையோ
அவர்கள் மாலையிலும் வரமாட்டார்கள். மாலைக்குக் கூட ஏதாவது
பொருளோ இருக்கும் அல்லவா? மாலையின் ரகசியம் பற்றி வேறு
யாருக்குமே தெரியாது. மாலையை ஏன் நினைவு செய்கிறார்கள்? ஏனெனில்
தந்தைக்கு மிகவுமே உதவி செய்துள்ளார்கள். பின் ஏன் நினைவு
செய்யப்பட மாட்டார்கள். நீங்கள் நினைவும் செய்யப்படுகிறீர்கள்.
உங்களுக்கு பூஜையும் நடக்கிறது. மேலும் உங்களுடைய சரீரம் கூட
பூஜிக்கப்படுகிறது. மேலும் எனக்கோ ஆத்மா விற்கு மட்டும் பூஜை
செய்யப்படுகிறது. பாருங்கள் நீங்களோ டபுள் (இரட்டை) மடங்கு
பூஜிக்கப்படுகிறீர்கள். என்னை விடவும் அதிகமாக நீங்கள் தேவதை
ஆகும் பொழுது தேவதை களையும் பூஜை செய்கிறார்கள். எனவே பூஜையில்
கூட நீங்கள் கூர்மையாக இருக்கிறீர்கள், நினைவார்த்தத்திலும்
நீங்கள் கூர்மையாக இருக்கிறீர் கள். மேலும் அரசாட்சியிலும் கூட
நீங்கள் கூர்மையாக இருக்கிறீர்கள். பாருங்கள் உங்களை எவ்வளவு
உயர்ந்தவர் களாக ஆக்குகிறேன். எனவே எப்படி பிரியமான
குழந்தைகளாக இருக்கும் பொழுது மிகவும் அன்பு இருக்கும் பொழுது
குழந்தைகளை தோளின் மீது நெற்றியின் மீதும் வைக்கிறார்கள். பாபா
ஒரேயடியாக தலை மீது வைத்து விடுகிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மகிமைக்கும் பூஜைக்கும் உரியவர் ஆவதற்கு (ஸ்பிரிச்சுவல்)
ஆன்மீகமானவர் ஆக வேண்டும். ஆத்மாவை தூய்மைப்படுத்த வேண்டும்.
ஆத்மா அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
2. மன்மனாபவ என்ற பயிற்சி மூலமாக அளவற்ற குஷியில் இருக்க
வேண்டும். சுயம் தன்னை ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவிடம் உரையாட
வேண்டும். கண்களை தூய்மையானதாக ஆக்க வேண்டும்.
வரதானம்:
மாஸ்டர் படைப்பவரின் ஸ்டேஜ் மூலம் ஆபத்துகளிலும் மனமகிழ்ச்சியை
அனுபவம் செய்யக்கூடிய சம்பூர்ண யோகி ஆகுக.
மாஸ்டர் படைப்பவரின் ஸ்டேஜில் நிலைத்திருப்பதன் மூலம்
பெரியதிலும் பெரிய ஆற்த்தும் ஒரு மனமகிழ்ச்சியின் காட்சியாக
அனுபவம் ஆகும். எப்படி மகாவிநாசத்தின் ஆற்த்தையும் கூட
சொர்க்கத்தின் கேட் திறப்பதற்கான சாதனம் எனச் சொல்கிறீர்களோ,
அது போல் எந்த விதமான சிறிய பெரிய பிரச்சினை அல்லது அபத்தும்
மனமகிழ்ச்சியின் ரூபத்தில் காணப்பட வேண்டும். ஐயோ-ஐயோ என்பதற்கு
பதிலாக ஓஹோ என்ற சொல் வெளிப்பட வேண்டும். துக்கமும் கூட
சுகத்தின் ரூபத்தில் அனுபவம் ஆக வேண்டும். சுகம்-துக்கம்
பற்றிய ஞானம் இருந்த போதிலும் அதன் பிரற்ôவத்தில் வரக்கூடாது.
துக்கத்தையும் கூட மகிமைக்குரிய சுகத்தின் தினங்கள் வருவதாகப்
புரிந்து கொள்ளுங்கள் - அப்போது சம்பூர்ண யோகி எனச் சொல்வார்கள்.
சுலோகன்:
இதய சிம்மாசனத்தை விட்டு சாதாரண சங்கல்பம் செய்வது என்றால்,
தரையில் கால் வைப்பதாகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
கர்மம் செய்யும் போது உடலும் லேசாக, மனதின் ஸ்திதியிலும் லேசான
தன்மை இருக்க வேண்டும். கர்மத்தின் ரிசல்ட் மனதை ஈர்த்துவிடக்
கூடாது. எவ்வளவு தான் காரியங்கள் அதிகரித்துக் கொண்டே போனாலும்,
அந்த அளவு லேசான தன்மையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்ல
வேண்டும். கர்மம் தன் பக்கமாகக் கவர்ந்திழுக்கக் கூடாது. ஆனால்
மாலிக் ஆகி, கர்மத்தைச் செய்விப்பவர் செய்வித்தக்
கொண்டிருக்கிறார் மற்றும் செய்பவர் நிமித்தமாகிச் செய்து
கொண்டிருக்கிறார் - இந்த அப்பியாசத்தை அதிகப் படுத்துங்கள்.
அப்போது சம்பன்ன கர்மாதீத் சகஜமாகவே ஆகி விடுவீர்கள்.