11-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! யோகம் (பாபாவை
நினைவு செய்வது) என்பது அக்னிக்கு சமமானது. இதன் மூலம்
உங்களுடைய பாவங்கள் எரிந்து போகிறது. ஆத்மா சதோபிரதானம் ஆகிறது.
ஆகவே ஒரு தந்தையின் நினைவில் இருங்கள்.
கேள்வி:
புண்ணிய ஆத்மாவாக மாறக் கூடிய
குழந்தைகள் எந்த விஷயத்தில் மிக மிக கவனம் வைக்க வேண்டும்?
பதில்:
யாருக்கு பணத்தை தானம் கொடுக்க
வேண்டும் என்ற விஷயத்தில் முழுமையாக கவனம் வைக்க வேண்டும். ஒரு
வேளை யாருக்காவது நீங்கள் பணத்தை கொடுத்து அவர்கள் சென்று மது
அருந்தினார்கள், தீய கர்மங்களை செய்தார்கள் என்றால் அதனுடைய
பாவம் உங்களுக்கு வரும். நீங்கள் பாவ ஆத்மாக்களுடன் கொடுக்கல்
வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது. இங்கே நீங்கள் புண்ணிய
ஆத்மாவாக மாற வேண்டும்.
பாடல்:
அவர் எங்களை விட்டு பிரிந்து போக
மாட்டார்...........
ஓம் சாந்தி.
இதற்கு நினைவின் அக்னி என்று பெயர். யோக அக்னி என்றால் நினைவின்
நெருப் பாகும். நெருப்பு என்ற வார்த்தை ஏன் கூறப்படுகிறது?
ஏனென்றால் இதில் பாவங்கள் எரிந்து போகிறது. நாம் எப்படி
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாறுகிறோம் என்பதைக்
குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். சதோபிரதானம் என்பதன்
பொருள் புண்ணிய ஆத்மா என்பதாகும், தமோபிரதானம் என்பதன் பொருள்
பாவ ஆத்மா ஆகும். இவர் மிகவும் புண்ணிய ஆத்மா, இவர் பாவ ஆத்மா
என்று கூட கூறப்படுகிறது. ஆத்மா தான் சதோபிரதானமாக மாறுகிறது.
மீண்டும் மறுபிறவி எடுத்து எடுத்து தமோபிரதானமாக மாறுகிறது
என்பது நிரூபணம் ஆகிறது. ஆகவே தான் பாவ ஆத்மா என்று
கூறப்படுகிறது. ஆகவே தான் பதீத பாவனர் தந்தையே, எங்களை வந்து
பாவனமாக மாற்றுங்கள் என நினைக்கிறார்கள். யார் பதீத ஆத்மாவாக
மாற்றியது? இது யாருக்கும் தெரியவில்லை. பாவன ஆத்மாவாக இருந்த
போது இராம இராஜ்யம் என்று கூறப் படுகிறது என்பதை நீங்கள்
அறிகிறீர்கள். இப்போது பதீத ஆத்மாக்கள் தான் இருக்கிறார்கள்.
ஆகவே இதற்கு இராவண இராஜ்யம் எனக் கூறப்படுகிறது. பாரதம் தான்
தூய்மையாக இருந்தது. பாரதமே பதீதமாகி இருக்கிறது. பாபா தான்
வந்து பாரதத்தை தூய்மையாக மாற்றுகிறார். மற்றபடி அனைத்து
ஆத்மாக்களும் தூய்மையாகி சாந்தி தாமத்திற்குச் சென்று
விடுகிறார்கள். இப்போது துக்க தாமமாக இருக்கிறது. இவ்வளவு எளிய
விஷயங்கள் கூட புத்தியில் பதியவில்லை. மனதால் புரிந்து கொள்ளும்
போது தான் உண்மையான பிராமணன் ஆக முடியும். பிராமணன் ஆகாமல்
பாபாவிடமிருந்து சொத்து பெற முடியாது.
இப்போது இது சங்கமயுத்தின் யக்ஞம் ஆகும். யக்ஞத்திற்காக
பிராமணர்கள் நிச்சயம் வேண்டும். இப்போது நீங்கள் பிராமணர்
ஆகியிருக்கிறீர்கள். மரண லோகத்தில் இது கடைசி யக்ஞம் என நீங்கள்
அறிகிறீர்கள். மரண உலகத்தில் தான் யக்ஞம் வளர்க்கிறார்கள்.
அமரலோகத் தில் யக்ஞம் வளர்ப்பதில்லை. பக்தர்களின் புத்தியில்
இந்த விஷயங்கள் பதிவதில்லை. பக்தி முற்றிலும் தனி, ஞானம் தனி.
மனிதர்கள் வேத சாஸ்திரங்களைத் தான் ஞானம் என நினைக் கிறார்கள்.
ஒரு வேளை அவர்களுக்குள் ஞானம் இருந்தால் மீண்டும் மனிதர்கள்
திரும்பிப் போவார்கள். ஆனால் நாடகத்தின் படி யாரும் திரும்பிப்
போக முடியாது. முதல் நம்பரில் இருப்பவர்கள் தான் சதோ, இரஜோ,
தமோவில் வருகிறார்கள் என பாபா புரிய வைத்துள்ளார். மற்றவர்கள்
சதோவினுடைய நடிப்பை மட்டும் நடித்து விட்டு எப்படி திரும்பிப்
போக முடியும். அவர்களும் தமோபிரதானத்தில் வந்து தான் ஆக
வேண்டும். நடித்து தான் ஆக வேண்டும். ஒவ்வொரு நடிகரின்
சக்தியும் தனித்தனியாக இருக்கிறது அல்லவா! பெரிய பெரிய
நடிகர்கள் எவ்வளவு புகழ் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்!
அனைவரையும் விட முக்கியமான படைக்கக் கூடியவர், இயக்குநர்
மற்றும் முக்கியமான நடிகர் யார்? இப்போது இறை தந்தை தான்
முக்கியமானவர். பிறகு ஜகதம்பா, ஜகத்பிதா எனப் புரிந்து
கொள்கிறீர்கள். ஜகத்திற்கே அதிபதியாக, உலகத்திற்கே அதிபதியாக
மாறுகிறார்கள். இவர்களுடைய நடிப்பு நிச்சயமாக உயர்ந்தது. எனவே
அவர்களுடைய வருமானமும் உயர்ந்தது. தந்தை சம்பளம் (பலன்)
வழங்குகிறார். அது அனைத் தையும் விட உயர்ந்தது. நீங்கள் எனக்கு
எவ்வளவு உதவி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வருமானம் கூட
நிச்சயம் இவ்வளவு கிடைக்கும் எனக் கூறுகிறார். வக்கீலுக்குப்
படிக்க வைக்கிறார்கள் என்றால் இவ்வளவு உயர்ந்த பதவி அடைய
வைக்கிறேன் என கூறுகிறார்கள் அல்லவா! இந்த படிப்பின் மீது கூட
எவ்வளவு கவனம் கொடுக்க வேண்டும். இல்லறத்திலும் இருக்க வேண்டும்,
கர்ம யோக சன்னியாசம் அல்லவா! இல்லறத்தில் இருந்துக் கொண்டே
அனைத் தையும் செய்துக் கொண்டே பாபாவிடமிருந்து சொத்து அடைவதற்கு
முயற்சி செய்ய வேண்டும். இதில் எந்தத் துன்பமும் இல்லை. வேலை
போன்றவைகளை செய்தாலும் சிவபாபாவின் நினைவிருக்க வேண்டும். ஞானம்
மிகவும் எளிது. பதீத பாவனா வாருங்கள்! வந்து எங்களை தூய்மையாக
மாற்றுங்கள்! எனக் கூறுகிறார்கள். பாவன உலகத்தில் கூட இராஜ்யம்
இருக்கிறது. எனவே பாபா அந்த இராஜ்யத்திற்குத் தகுதி அடைய
வைக்கிறார்.
இந்த ஞானத்தின் முக்கியமான இரண்டு பாடம் அப்பா மற்றும்
ஆஸ்தியாகும். சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள். தந்தையை நினையுங்கள்.
நீங்கள் எப்போதும் ஆரோக்கியம் மற்றும் செல்வந்தராக மாறுவீர்கள்.
என்னை இங்கே நினையுங்கள் என பாபா கூறுகிறார். வீட்டை
நினையுங்கள். என்னை நினைத்தால் நீங்கள் வீட்டிற்குச் சென்று
விடலாம். சுயதரிசன சக்கரதாரி யாக மாறுவதால் நீங்கள் சக்ரவர்த்தி
இராஜா ஆகலாம். இதை நன்கு புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இச்சமயம் அனைவரும் தமோபிரதானமாக இருக்கிறார்கள். சுகதாமத்தில்
சுகம், அமைதி, செல்வம் அனைத்தும் இருக்கிறது. அங்கே ஒரு தர்மம்
மட்டுமே இருக்கிறது. இப்போது பாருங்கள், ஒவ்வொரு வீட்டிலும்
அசாந்தி இருக்கிறது, மாணவர்களைப் பாருங்கள்! எவ்வளவு சண்டை
போட்டுக் கொள்கிறார்கள். தன்னுடைய இள இரத்தத்தைக்
காண்பிக்கிறார்கள். இது தமோபிரதான உலகம் ஆகும். சத்யுகம் புது
உலகம் ஆகும். பாபா சங்கமத்தில் வந்திருக்கிறார். மகா பாரதப்
போர் கூட சங்கமத்தினுடையது தான். இப்போது இந்த உலகமே மாற
வேண்டும். நான் புது உலகத்தை ஸ்தாபனை செய்ய சங்கமத்தில் தான்
வருகிறேன். இதற்குத் தான் புருஷோத்தம சங்கமயுகம் என்கிறார்கள்
என பாபா கூறுகின்றார். புருஷோத்தம மாதம், புருஷோத்தம வருடம்
கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த புருஷோத்தம சங்கமத்தைப்
பற்றி யாருக்கும் தெரியவில்லை. சங்கமத்தில் தான் பாபா வந்து
உங்களை வைரம் போல மாற்று கிறார். பிறகு இதில் கூட வரிசைக்
கிரமம் இருக்கிறது. வைரம் போல இராஜாவாக மாறுகிறார்கள்.
மற்றவர்கள் தங்கம் போன்ற பிரஜைகள் ஆகிறார்கள். குழந்தை
பிறக்கிறது. சொத்திற்கு உரிமை யாளர் ஆகிறது. இப்போது நீங்கள்
பாவனமான உலகத்திற்கு உரிமையாளர் ஆகிறீர்கள். பிறகு அதில்
உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இச்சமயத்தின்
உங்களுடைய முயற்சியே கல்ப கல்பத்தின் முயற்சியாகும். இவர்கள்
கல்ப கல்பத்திற்கும் இவ்வாறு தான் முயற்சி செய்வார்கள் எனப்
புரிந்து கொள்ளப்படுகிறது. இவர்களால் அதிகமாக முயற்சி நடக்காது,
பிறவி பிறவியாக, கல்ப கல்பமாக இவர்கள் பிரஜையில் தான்
வருவார்கள். இவர்கள் பணக்கார பிரஜைகளுக்கு வேலைக்காரர்களாக
ஆவார்கள். வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா! படிப்பின்
ஆதாரத்தில் அனைத்தும் தெரிகிறது. இந்த நிலையில் நாளை நீங்கள்
உடலை விட்டு விட்டால் எப்படி ஆகுவீர்கள் என பாபா உடனே கூற
முடியும். ஒவ்வொரு நாளும் நேரம் குறைந்து கொண்டே போகிறது. ஒரு
வேளை யாராவது உடலை விட்டு விட்டால் பிறகு படிக்க முடியாது. ஏதோ
கொஞ்சம் புத்தியில் இருக்கலாம். சிவபாபாவை நினைப்பார்கள்.
நீங்கள் சிறிய குழந்தை களுக்குக் கூட நினைவு படுத்தினீர்கள்
என்றால் சிவபாபா சிவபாபா என கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு சிறிது கிடைக்கிறது. சிறிய குழந்தைகள்
மகாத்மாவிற்கு சமமான வர்கள். விகாரங்களைப் பற்றி தெரியாது.
எவ்வளவு பெரியவர்கள் ஆகிறார் களோ அவ்வளவு விகாரங்களின் தாக்கம்
ஏற்படுகிறது, கோபம் ஏற்படுகிறது, மோகம் உண்டாகிறது......
இப்போது இந்த உலகத்தில் இந்தக் கண்களினால் எதைப்
பார்க்கிறீர்களோ அதிலிருந்து பற்றுதலை விலக்க வேண்டும் என
உங்களுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இது அனைத்தும்
சுடுகாடாகப் போகிறது என உங்களுக்குத் தெரியும். தமோபிரதானமான
பொருட்கள் இருக்கின்றன. மனிதர்கள் இறந்து விட்டால் பழைய பொருளை
வெட்டியானுக்கு கொடுத்து விடுகிறார்கள். பாபா எல்லையற்ற
வெட்டியானாக இருக்கிறார். (வண்ணானாக) இருக்கிறார். உங்களிடம்
என்ன வாங்குகிறார், என்ன கொடுக்கிறார். நீங்கள் கொடுக்கும்
சிறிதளவு செல்வமும் அழியப் போகிறது. இருப்பினும் இந்தப் பணத்தை
தங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள் என பாபா கூறுகிறார்.
இதிலிருந்து பற்றுதலை மட்டும் நீக்குங்கள். கணக்கு வழக்கை
பாபாவிற்கு கொடுத்துக் கொண்டே இருங்கள். பிறகு டைரக்ஷன்
கிடைத்துக் கொண்டே இருக்கும். உங்களிடம் உள்ள இந்தக் குப்பைகளை
யுனிவர்சிட்டி அல்லது ஹாஸ்பிடலில் ஆரோக்கியம் மற்றும்
செல்வத்திற்காக ஈடுபடுத்த வைக்கிறார். நோய்க் காக
மருத்துவமனையும், படிப்பிற்காக பல்கலைக்கழகமும் இருக்கிறது.
இங்கோ காலேஜ் மற்றும் ஹாஸ்பிடல் இரண்டும் இணைந்திருக்கிறது.
இதற்கு மூன்றடி நிலம் போதும். யாரிடம் எதுவுமே இல்லையோ அவர்கள்
மூன்றடி இடம் கொடுங்கள். அதில் வகுப்பு ஆரம்பித்து விடுங்கள்.
மூன்றடி நிலம் அமருவதற்கான நிலம் அல்லவா! ஆசனம் மூன்றடிக்கு
மூன்றடி தான் இருக்கிறது. மூன்றடி நிலத்தில் யார்
வேண்டுமானாலும் வருவார்கள். நன்கு புரிந்து கொண்டு செல்வார்கள்.
யாராவது வந்தார்கள் என்றால் ஆசனத்தில் அமர வைத்து பாபாவின்
அறிமுகத்தைக் கொடுக்கவும். சேவைக் காக பேட்ஜஸ் கூட நிறைய
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் எளிதாகும்.
சித்திரங் கள் கூட நன்றாக இருக்கிறது. முழுமையாக எழுதப்பட்டும்
இருக்கிறது. இதன் மூலம் உங்களுடைய நிறைய சேவைகள் நடக்கும்.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு ஆபத்துகள் வந்து கொண்டிருக்கிறது!
அப்போது மனிதர்களுக்கு வைராக்கியம் ஏற்படும். நாம் அழிவற்ற
ஆத்மா நம்முடைய அழிவற்ற தந்தையை நினைக்கலாம் என தந்தையை
நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். என்னை நினைத்தால் உங்களுடைய
பிறவி பிறவியின் பாவங்கள் நீங்கும் என தந்தையே கூறுகின்றார்.
தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை முழு அன்போடு நினைக்க வேண்டும்.
தேக அபிமானத்தில் வரக் கூடாது. ஆம், குழந்தைகளிடம்
வெளிப்படையாக அன்பு வையுங்கள். ஆனால் ஆத்மாவின் உண்மையான அன்பை
ஆன்மீகத் தந்தையிடம் வையுங்கள். அவருடைய நினைவினால் தான்
விகர்மங்கள் அழியும். நண்பர்கள் உறவினர்கள் குழந்தைகள்
போன்றவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் புத்தி பாபாவின்
நினைவில் இருக்கட்டும். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு என்ற
தூக்கில் மாட்டிக் (மூழ்கிக்) கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்கள்
தங்களுடைய தந்தை பரமாத்மாவை நினைக்க வேண்டும். புத்தி மேலே
இணைக்கப்பட்டிருக்கட்டும். பாபாவின் வீடு கூட மேலே இருக்கிறது
அல்லவா! மூலவதனம், சூட்சும வதனம் மற்றும் இது ஸ்தூலவதனம் ஆகும்.
இப்போது மீண்டும் வீட்டிற்குப் போக வேண்டும்.
இப்போது உங்களுடைய பயணம் முடியப் போகிறது. இப்போது நீங்கள்
பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய
வீடு எவ்வளவு அன்பாக இருக்கிறது. அது எல்லையற்ற வீடாகும்.
மீண்டும் தன்னுடைய வீட்டிற்குப் போக வேண்டும். மனிதர்கள்
வீட்டிற்குப் போவதற்காக பக்தி செய்கிறார்கள். ஆனால் ஞானம்
முழுமையாக இல்லை என்றால் வீட்டிற்குப் போக முடியாது. பகவானிடம்
செல்வதற்காக, நிர்வாண தாமத்திற்குச் செல்வதற்காக எவ்வளவு
தீர்த்த யாத்திரைகளை செய்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள்.
சன்னியாசிகள் அமைதியின் வழியை மட்டும் தான் தெரிவிக்கிறார்கள்.
சுகதாமத்தைப் பற்றி அறியவில்லை. சுகதாமத்தின் வழியை பாபா
மட்டும் தான் தெரிவிப்பார். நிச்சயமாக முதலில் நிர்வாண தாமம்,
வான பிரஸ்தத்தில் போக வேண்டும். அதற்கு பிரம்மாண்டம் என்று
கூறுகிறார்கள். அவர்கள் பிரம்மத்தை ஈஸ்வர் என நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நாம் பிந்துவாக இருக்கிறோம்.
நாம் வசிக்கக் கூடிய இடம் பிரம்மாண்டம். உங்களுடைய பூஜை கூட
நடக்கிறது அல்லவா? பிந்துவை (பாபாவை) எப்படி பூஜை செய்வார்கள்.
எனவே பூஜை செய்யும் போது சாலிகிராமமாக அமைத்து ஒவ்வொரு
ஆத்மாவையும் பூஜிக்கிறார்கள். பிந்துவை எப்படி பூஜிக்க முடியும்?
எனவே பெரிது பெரியதாக உருவாக்குகிறார்கள். பாபாவிற்கு
தனக்கென்று உடல் இல்லை. இந்த விஷயங்களை இப்போது நீங்கள்
அறிகிறீர்கள். சித்திரங்களில் கூட நீங்கள் பெரிய ரூபத்தைக்
காண்பிக்க வேண்டும். பிந்துவை எப்படி புரிந்து கொள்வார்கள்.
நீங்கள் நட்சத்திரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு நிறைய
திலகத்தைக் கூட தாய்மார்கள் வைத்துக் கொள்கிறார்கள். வெள்ளை
நிறத்தில் தயாராகக் கிடைக்கிறது. ஆத்மா கூட வெள்ளையாக
நட்சத்திரத்தைப் போன்று இருக்கிறது. இது கூட ஒரு அடையாளம் ஆகும்.
புருவ மத்தியில் ஆத்மா இருக்கிறது. மற்றபடி பொருள் எதுவும்
தெரியவில்லை. இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு ஞானம் இருக்கிறது
என்பதை பாபா புரிய வைக்கிறார். இத்தனை அணுகுண்டுகளை உருவாக்கிக்
கொண்டிருக் கிறார்கள். அதிசயமாக இருக்கிறது. ஆத்மாவில் இவ்வளவு
பார்ட் நிரம்பி இருக்கிறது! இது மிகவும் ஆழமான விஷயம் ஆகும்.
இவ்வளவு சிறிய ஆத்மா, இந்த உடல் மூலமாக எவ்வளவு வேலை களைச்
செய்கிறது. ஆத்மா அழிவற்றது. அதனுடைய பார்ட்டும் ஒரு போதும்
அழிவதில்லை. நடிப்பும் மாறுவதில்லை. இப்போது மிகப் பெரிய மரமாக
இருக்கிறது. சத்யுகத்தில் எவ்வளவு சிறிய மரமாக இருக்கிறது!
பழையதாக ஆகவில்லை. இனிமையான சிறிய மரத்தின் நாற்று இப்போது
நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் பதீதமாகியிருந்தீர்கள்.
இப்போது மீண்டும் பாவனமாகிக் கொண்டிருக்கிறீர்கள். சிறிய
ஆத்மாவிற்குள் எவ்வளவு பெரிய பார்ட் இருக்கிறது! இது தான்
இயற்கை. அழியாத பார்ட் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு போதும்
முடிவதில்லை. அழிவற்ற பொருளாகும். அதில் அழிவற்ற பார்ட் நிரம்பி
இருக்கிறது. இது அதிசயமாக இருக்கிறது அல்லவா? குழந்தைகளே! ஆத்ம
உணர்வுடையவர்களாக மாறுங்கள் என பாபா புரிய வைக்கிறார். தன்னை
ஆத்மா என உணர்ந்து தந்தையை நினையுங்கள். இதில் கடின முயற்சி
இருக்கிறது. உங்களுடையது தான் அதிமாக பார்ட் ஆகும்.
பாபாவினுடைய பார்ட் உங்களைப் போன்று அதிகமாக இல்லை.
நீங்கள் சொர்க்கத்தில் சுகமுடையவர்களாகி விடுகிறீர்கள் என்றால்
நான் ஓய்வில் அமர்கிறேன் என பாபா கூறுகிறார். எனக்கு எந்த
நடிப்பும் இல்லை. இச்சமயம் இவ்வளவு சேவை செய்கிறேன் அல்லவா!
இந்த ஞானம் இவ்வளவு அதிசயமாக இருக்கிறது! உங்களைத் தவிர வேறு
யாரும் சிறிது கூட புரிந்து கொள்வதில்லை. பாபாவின் நினைவில்
இல்லாமல் தாரணை செய்ய முடியாது. உணவு விஷயங்களில் கூட
வித்தியாசம் ஏற்படும் போது தாரணையில் வித்தியாசம் ஏற்படுகிறது.
இதில் தூய்மை மிகவும் தேவை. தந்தையை நினைப்பது மிகவும்
எளிதாகும். தந்தையை நினைக்க வேண்டும். மேலும் சொத்து அடைய
வேண்டும். ஆகவே தான் நீங்கள் உங்களிடம் படங்களை வைத்துக்
கொள்ளுங்கள் என பாபா கூறினார். யோகா மற்றும் ஆஸ்தியின் படங்களை
உருவாக்கினால் போதை ஏறும். நாம் பிராமணனிலிருந்து தேவதையாகிக்
கொண்டிருக்கிறோம், பிறகு நாம் தேவதைகளிலிருந்து சத்திரியர்கள்
ஆவோம். பிராமணர்கள் புருஷோத்தம சங்கமயுகத்தினர். நீங்கள்
புருஷோத்தமர் ஆகிறீர்கள் அல்லவா! மனிதர்களுக்கு இந்த
விஷயங்களைப் பதிய வைப்பதற்கு எவ்வளவு கடின முயற்சி செய்ய
வேண்டியிருக்கிறது! ஒவ்வொரு நாளும் ஞானத்தைப் புரிந்து கொள்ள
கொள்ள குஷியின் அளவும் அதிகரிக்கும்.
குழந்தைகளாகிய நீங்கள் பாபா நமக்கு மிகவும் நன்மை செய்கிறார்
என புரிந்து கொள்கிறீர்கள். கல்ப கல்பமாக நம்முடையது ஏறும்
கலையாகும். இங்கே இருந்து கொண்டே சரீர நிர்வாகத்திற்காக
அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது. நாம் சிவபாபாவின் பண்டக
சாலையிலிருந்து சாப்பிடுகிறோம் என்பது புத்தியில் இருக்க
வேண்டும். சிவபாபாவை நினைத்துக் கொண்டே இருந்தால் காலகண்டன்
அனைவரும் விலகி போவார்கள். பிறகு இந்தப் பழைய உடலை விட்டுவிட்டு
சென்று விடலாம். பாபா எதையும் பெற்றுக்கொள்வதில்லை என குழந்தை
கள் புரிந்து கொள்கிறார்கள். அவரோ வள்ளல் ஆவார். என்னுடைய
ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள்
பணத்தை யாருக்கு தானம் செய்ய வேண்டும் என்ற இந்த விஷயத்தில்
முழு கவனம் கொடுங்கள். ஒரு வேளை நீங்கள் யாருக்காவது பணம்
கொடுத்தீர்கள் அவர்கள் சென்று மது அருந்தினர், தீய வேலைகளைச்
செய்தனர் என்றால் அதனுடைய பாவம் உங்கள் மீது வரும். பாவ
ஆத்மாக்களுடன் கொடுக்கல், வாங்கல் செய்து பாவ ஆத்மா ஆகி
விடுகிறார்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! பாவ ஆத்மா,
பாவ ஆத்மாவிடம் தான் கொடுக்கல், வாங்கல் செய்து பாவ
ஆத்மாக்களாக மாறுகிறார்கள். இங்கேயோ நீங்கள் புண்ணிய ஆத்மாவாக
வேண்டும். எனவே பாவ ஆத்மாக்களிடம் கொடுக்கல், வாங்கல் கூடாது.
யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது, யார் மீதும் மோகம்
வைக்கக் கூடாது என பாபா கூறுகின்றார். பாபா சாக்ரீன் ஆகி
வருகிறார். பழைய குப்பைகளை வாங்கிக் கொண்டு எவ்வளவு வட்டி
கொடுக்கிறார் பாருங்கள்! எவ்வளவு பெரிய வட்டியாகக் கிடைக்கிறது!
எவ்வளவு கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கிறார்! இரண்டு பிடிக்கு
பதிலாக மாளிகைகளைக் கொடுக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இப்போது பயணம் முடிகிறது. வீட்டிற்குத் திரும்பப்போக
வேண்டும். ஆகவே, இந்த பழைய உலகத்தின் மீது எல்லையற்ற
வைராக்கியம் வைத்து புத்தியோகத்தை பாபாவின் நினைவில் மேலே
இணைக்க வேண்டும்.
2. சங்கமயுகத்தில் பாபா படைக்கின்ற இந்த யாகத்தைப்
பாதுகாப்பதற்கு உண்மையிலும் உண்மையான பவித்ரமான பிராமணர்கள் ஆக
வேண்டும். வேலைகளை செய்து கொண்டி ருந்தாலும் பாபாவின் நினைவில்
இருக்க வேண்டும்.
வரதானம்:
ஆதிரத்தினம் என்ற நினைவினால் தனது வாழ்க்கையின் மதிப்பை
அறிந்துகொள்ளக் கூடிய சக்திசாலி ஆகுக.
எவ்வாறு பிரம்மா ஆதிதேவனாக இருக்கின்றாரோ, அதுபோல்
பிரம்மாகுமார், குமாரிகளும் ஆதிரத்தினங்கள் ஆவீர்கள்.
ஆதிதேவனுடைய குழந்தைகள் மாஸ்டர் ஆதிதேவர்கள் ஆவீர்கள்.
ஆதிரத்தினம் எனப் புரிந்துகொள்வதன் மூலமே தனது வாழ்க்கையின்
மதிப்பை அறிந்துகொள்ள முடியும். ஏனெனில், ஆதிரத்தினம் என்றால்
பிரபுவின் இரத்தினம், ஈஸ்வரிய இரத்தினம் - எனில் எவ்வளவு
மதிப்பானதாகிவிட்டது. ஆகையினால், சதா தங்களை ஆதிதேவனுடைய
குழந்தைகள் மாஸ்டர் ஆதிதேவன், ஆதிரத்தினம் எனப் புரிந்துகொண்டு
ஒவ்வொரு காரியமும் செய்யுங்கள், அப்பொழுது சக்திசாலி பவ என்ற
வரதானம் கிடைத்துவிடும். எதுவுமே வீணாக முடியாது.
சுலோகன்:
யார் ஏமாற்றம் அடைவதற்கு முன்னதாகவே பகுத்தறிந்து தன்னை
காப்பாற்றிக் கொள்கின்றார்களோ, அவர்களே ஞான சொரூப ஆத்மாக்கள்
ஆவார்கள்.
தன்னுடைய சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுக்கும் சேவை
செய்யுங்கள்
இப்பொழுது சேவையில் சகாஷ் கொடுத்து புத்திகளை மாற்றக்கூடிய
சேவையை சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள், வெற்றி உங்கள்
முன்னால் சுயம் தலைவணங்கும். சேவையில் என்ன தடைகள் வருகின்றனவோ,
அந்தத் தடைகளின் திரைக்குள் நன்மையான காட்சி மறைந்துள்ளது. மனம்
மற்றும் பேச்சின் சக்தியினால் தடையின் திரையை மட்டும்
விலக்கிவிடுங்கள், அப்பொழுது உள்ளுக்குள் இருக்கும் நன்மை
நிறைந்த காட்சி தென்படும்.