11-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு பகவான் படிப்பிக்கின்றார், உங்களிடம் ஞான இரத்தினம் இருக்கிறது, இந்த ஞான இரத்தினங்களின் சம்மந்தப்பட்ட தொழிலைத் தான் நீங்கள் செய்ய வேண்டும், நீங்கள் இங்கே ஞானத்தை கற்றுக் கொள்கிறீர்கள், பக்தி இல்லை

கேள்வி:
மனிதர்கள் நாடகத்தின் எந்தவொரு அதிசயமான நடிப்பின் பாகத்தை பகவானின் லீலை என்று புரிந்து அதை மகிமை செய்கிறார்கள்?

பதில்:
யார் எதில் தன் மனதிற்கு பிடித்த எண்ணம் வைக்கிறார்களோ, அவர்களுக்கு அதனுடைய காட்சி ஏற்பட்டுவிடுகிறது எனும்போது பகவான் காட்சி காட்டி விட்டார் என்று புரிந்து கொள்கிறார் கள், ஆனால் அனைத்தும் நாடகத்தின்படி நடக்கிறது. ஒரு பக்கம் பகவானை மகிமை செய்கிறார் கள், மற்றொரு பக்கம் சர்வவியாபி என்று சொல்லி நிந்தனை செய்து விடுகிறார்கள்.

ஓம் சாந்தி.
பகவானுடைய மகாவாக்கியம் - மனிதர்களையோ அல்லது தேவதைகளையோ பகவான் என்று சொல்லப்படுவதில்லை என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. பிரம்மா தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ, சங்கர் தேவதாய நமஹ பிறகு சிவ பரமாத்மாய நமஹ என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கு அவருக்கென சரீரம் இல்லை என்பதை யும் தெரிந்துள்ளீர்கள். மூலவதனத்தில் சிவபாபா மற்றும் சாலிகிராமங்கள் இருக்கின்றனர். இப்போது ஆத்மாக்களின் தந்தை படிப்பித்துக் கொண்டிருக்கின்றார் மற்ற எத்தனை சத்சங்கங்கள் இருந்தாலும் அவை ஒன்றும் சத்தியமான சங்கம் இல்லை என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார் கள். அவை மாயையின் சங்கமாகும். நமக்கு பகவான் படிப்பிக்கின்றார் என்று அங்கு யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். கீதையையும் கேட்கிறார்கள் என்றாலும் கூட கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று தான் புரிந்து கொள்வார்கள். நாளுக்கு நாள் கீதையின் பயிற்சி குறைந்து கொண்டே செல்கிறது ஏனென்றால் தங்களுடைய தர்மத்தையே தெரிந்திருக்க வில்லை. அனைவருக்கும் கிருஷ்ணரிடம் அன்பு இருக்கிறது, கிருஷ்ணரைத் தான் ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார்கள். நாம் யாரை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள். குழந்தைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படுகிறது, தந்தையை வைத்து ஆட்ட முடியாது. நீங்கள் சிவபாபாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவீர்களா? அவர் குழந்தையாக ஆவ தில்லை, மறுபிறவியில் வருவதில்லை. அவர் புள்ளியாக இருக்கின்றார், அவரை எப்படி ஊஞ்சலாட்டுவீர்கள். நிறைய பேருக்கு கிருஷ்ணருடைய காட்சி ஏற்படுகிறது. கிருஷ்ணருடைய வாயில் முழு உலகமும் இருக்கிறது ஏனென்றால் அவர் உலகத்திற்கு எஜமானராக ஆகின்றார். எனவே உலகம் எனும் வெண்ணெய் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது கூட உலகம் எனும் வெண்ணெய்க்காகவே நாம் வென்றுவிடுவோம் என்று புரிந்து கொள் கிறார்கள். கிருஷ்ணருடைய வாயில் வெண்ணெய் உருண்டையைக் காட்டுகிறார்கள், இப்படி கூட அனேக விதமான காட்சிகள் ஏற்படுகிறது. ஆனால் அர்த்தம் எதையும் புரிந்து கொள்வ தில்லை. இங்கே உங்களுக்கு காட்சிகளின் அர்த்தம் புரிய வைக்கப் படுகிறது. பகவான் நமக்கு காட்சிகளைக் காட்டுகின்றார் என்று மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். யாரை நினைவு செய்கிறார்களோ, யாராவது கிருஷ்ணருடைய தீவிர பக்தி செய்கிறார்கள் என்றால் அவர்களுடைய மனோ விருப்பம் அல்பகாலத்திற்குப் பூர்த்தியாகிறது என்பதை பாபா புரிய வைக்கின்றார். இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. பகவான் காட்சியைக் காண்பித்தார் என்று சொல்ல முடியாது. யார் எந்த பாவனையில் யாருடைய பூஜை செய்கிறார்களோ, அவர்களுக்கு அந்த காட்சி ஏற்படு கிறது. இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. பகவான் காட்சியைக் காட்டுகின்றார் என்று அவருடைய மகிமை பாடுகிறார்கள். ஒரு பக்கம் இவ்வளவு மகிமையும் பாடுகிறார்கள், மற்றொரு பக்கம் கல்லிலும்-முள்ளிலும் பகவான் இருக்கின்றார் என்று சொல்லி விடுகிறார்கள். எவ்வளவு கண் மூடித்தனமான பக்தி செய்கிறார்கள். கிருஷ்ணருடைய காட்சி ஏற்பட்டது என்றால் நாம் கிருஷ்ணபுரிக்கு கண்டிப்பாக செல்வோம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஆனால் கிருஷ்ணபுரி எங்கிருந்து வரும்? இப்போது இந்த இரகசியங்கள் அனைத்தையும் பாபா இங்கே புரிய வைக் கின்றார். கிருஷ்ணபுரியின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. இது கம்சபுரியாகும். கம்சன், அகாசூரன், பகாசூரன், கும்பகர்ணன், இராவணன் போன்ற இவையனைத்தும் அசுரர்களின் பெயராகும். சாஸ்திரங்களில் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள்!

இரண்டு விதமான குருமார்கள் இருக்கிறார்கள் என்பதையும் புரிய வைக்க வேண்டும். ஒன்று பக்திமார்க்கத்தின் குருமார்கள், அவர்கள் பக்தியைத் தான் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த தந்தை ஞானக்கடலாக இருக்கின்றார், இவரை சத்குரு என்று சொல்லப்படுகிறது. இவர் ஒருபோதும் பக்தியை கற்றுக் கொடுப்பதில்லை, ஞானத்தை தான் கற்றுக் கொடுக்கின்றார். மனிதர்கள் பக்தியில் எவ்வளவு குஷி அடைகிறார்கள், இசையை இசைக்கிறார்கள், பனாரசில் பார்த்தீர்கள் என்றால் அனைத்து தேவதைகளின் கோயிலையும் உருவாக்கிவிட்டார்கள். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் கடைகாரர்கள், பக்தியின் தொழிலாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஞான இரத்தினங் களின் தொழில் செய்ய வேண்டும், இதையும் கூட வியாபாரம் என்று சொல்லப்படுகிறது. பாபாவும் கூட இரத்தினங்களின் வியாபாரி. இவை எப்படிப்பட்ட இரத்தினங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கல்பத்திற்கு முன்னால் யார் புரிந்திருந்தார்களோ, அவர்கள் தான் இந்த விசயங் களைப் புரிந்துக் கொள்வார்கள், மற்றவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரெல்லாம் பெரியவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் கடைசியில் வந்து புரிந்து கொள்வார்கள். மாறியும் இருக்கிறார்கள் அல்லவா! இராஜா ஜனகரின் கதையைக் கூட சொல்கிறார்கள். பிறகு ஜனகர் அனுஜனகர் ஆகினார். யாருடைய பெயராவது கிருஷ்ணர் என்று இருந்தது என்றால் நீ அனு தெய்வீக கிருஷ்ணனாக ஆவாய் என்று சொல்வார்கள். அந்த சர்வகுணங்களும் நிறைந்த கிருஷ்ணர் எங்கே, இவர்கள் எங்கே! சிலருடைய பெயர் இலஷ்மி என்று இருக்கிறது பிறகு இந்த இலஷ்மி-நாராயணனுக்கு முன்னால் சென்று மகிமை பாடுகிறார்கள். இவர்களுக்கும் நமக்கும் ஏன் வித்தியாசம் வந்தது என்று புரிந்து கொள்கிறார்களா என்ன? இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற ஞானம் கிடைத்திருக்கிறது. நீங்கள் தான் 84 பிறவிகள் எடுப்பீர்கள். இந்த சக்கரம் அனேக முறை சுற்றி வந்திருக்கிறது. ஒருபோதும் நிற்காது. நீங்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக இருக்கிறீர்கள். நாம் இந்த நாடகத்தில் நடிப்பை நடிக்க வந்திருக்கிறோம் என்ற அளவிற்கு மனிதர்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கிறார்கள். மற்றபடி நாடகத்தின் முதல்-இடை- கடைசியை தெரிந்திருக்க வில்லை. ஆத்மாக்களாகிய நாம் இருக்கும் இடம் வெகு தூரத்தில் இருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அங்கே சூரிய-சந்திரனுடைய வெளிச்சம் கூட இல்லை. இவையனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய குழந்தைகளில் கூட குறிப்பாக சாதாரண ஏழைகள் தான் ஆகிறார்கள் ஏனென்றால் பாரதம் தான் அனைத்திலும் செல்வமிக்கதாக இருந்தது, இப்போது பாரதம் தான் அனைத்திலும் ஏழையாக ஆகியுள்ளது. விளையாட்டு அனைத்தும் பாரதத்தை வைத்தே நடைபெறுவதாகும். பாரதத்தைப் போல் தூய்மையான கண்டம் வேறு எதுவும் இல்லை. தூய்மையான உலகத்தில் தூய்மையான கண்டம் இருக்கிறது, வேறு எந்த கண்டமும் அங்கு இருப்பதே இல்லை. இந்த முழு உலகமும் ஒரு எல்லையற்ற தீவாக இருக்கிறது. எப்படி இலங்கை ஒரு தீவாக இருக்கிறதோ அது போலாகும். இராவணன் இலங்கையில் இருந்தான் என்று காட்டுகிறார்கள். இராவணனுடைய இராஜ்யம் முழு எல்லையற்ற இலங்கையில் இருக்கிறது என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த உலகம் (படைப்பு) முழுவதும் சமுத்திரத்தின் மீது நிற்கிறது. இது ஒரு தீவாகும். இதன் மீது இராவணனுடைய இராஜ்யம் இருக்கிறது. இந்த சீதைகள் அனைவரும் இராவணனுடைய ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட கதை களை உருவாக்கி விட்டார்கள். இவையனைத்தும் எல்லையற்ற விசயமாகும். எல்லையற்ற நாடகமாக இருக்கிறது, பிறகு அதிலேயே சிறிய- சிறிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த சினிமா போன்றவைகளும் இப்போது உருவாகியுள்ளது, எனவே பாபாவிற்கும் கூட புரிய வைப் பதற்கு சுலபமாக இருக்கிறது. எல்லையற்ற நாடகம் முழுவதும் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. மூலவதனம், சூட்சுமவதனம் என்பது வேறு யாருடைய புத்தியிலும் இருக்க முடியாது. ஆத்மாக்களாகிய நாம் மூலவதனத்தில் இருப்பவர்கள் என்பதை தெரிந்துள்ளீர்கள். தேவதைகள் சூட்சுமவதனவாசிகளாவீர்கள், அவர்களை ஃபரிஸ்தாக்கள் என்றும் சொல்கிறார்கள். அங்கே எலும்பு தசையால் ஆன கூடு இருப்பதில்லை. இந்த சூட்சுமவதனத்தின் பாகம் கூட கொஞ்ச காலத்திற்கான தாகும். இப்போது நீங்கள் வந்து-சென்று கொண்டிருக்கிறீர்கள், பிறகு ஒரு போதும் செல்ல மாட்டீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மூலவதனத்திலிருந்து வரும்போது சூட்சும வதனத்தின் வழியாக வருவதில்லை, நேராக வருகின்றீர்கள். இப்போது சூட்சுமவதனத்தின் வழியாக செல்கிறீர்கள். இப்போது சூட்சுமவதனத்தின் பாகம் இருக்கிறது. இந்த இரகசியங்கள் அனைத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். குழந்தைகளாகிய நமக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை பாபாவும் தெரிந்திருக்கின்றார். சாது-சன்னியாசிகள் போன்ற யாரும் இந்த விசயங்களை தெரிந்திருக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் இப்படி பேச முடியாது. பாபா தான் குழந்தைகளிடம் பேசுகின்றார். கர்மேந்திரியங்கள் இல்லாமல் பேச முடியாது. நான் இந்த சரீரத்தை ஆதாரமாக எடுத்து குழந்தைகளாகிய உங்களுக்குப் படிப்பிக்கின்றேன் என்று கூறு கின்றார். ஆத்மாக்களாகிய உங்களுடைய பார்வையும் பாபாவின் பக்கம் சென்று விடுகிறது. இவையனைத்தும் புதிய விசயங்களாகும். நிராகாரமான தந்தை, அவருடைய பெயர் சிவதந்தை யாகும். ஆத்மாக்களாகிய உங்களுடைய பெயர் ஆத்மாவே ஆகும். உங்களுடைய சரீரத்தின் பெயர் மாறுகிறது. பரமாத்மா பெயர்-ரூபத்திலிருந்து விடுபட்டவர் என்று மனிதர்கள் சொல்கிறார்கள், ஆனால் சிவன் என்று பெயர் சொல்கிறார்கள் அல்லவா! சிவனுடைய பூஜையும் செய்கிறார்கள். புரிந்து கொள்வது ஒன்று, செய்வது வேறொன்றாக இருக்கிறது. நீங்கள் இப்போது பாபாவின் பெயர், ரூபம், தேசம், காலத்தையும் கூட புரிந்து கொண்டீர்கள். எந்தவொரு பொருளும் பெயர்-ரூபம் இல்லாமல் இருக்க முடியாது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இது கூட புரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமமான விசயமாகும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டுள்ளது அதாவது மனிதர்கள் நரனிலிருந்து நாராயணனாக ஆக முடியும் என்று பாபா புரிய வைக்கின்றார். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்கூடிய இறை தந்தையாக இருக்கின்றார், நாம் அவருடைய குழந்தைகளாக ஆகியிருக்கிறோம் என்றாலும் கூட நாம் சொர்க்கத்தின் எஜமானர் களே. ஆனால் இதைக்கூட புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளே, உங்களுடைய குறிக்கோளே நரனிலிருந்து நாராயணனாக ஆவது தான் என்று பாபா கூறுகின்றார். இராஜயோகம் அல்லவா! நிறைய பேருக்கு நான்கு கைகளுடைய விஷ்ணுவின் காட்சி ஏற்படுகிறது, இதன்மூலம் நாம் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆகக்கூடியவர்கள் என்பது நிரூபணமாகிறது. சொர்க்கத்தில் கூட இலஷ்மி-நாராயணனுடைய சிம்மாசனத்திற்கு பின்னால் விஷ்ணுவின் சித்திரத்தை வைக்கிறார் கள் அதாவது விஷ்ணுபுரியில் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இலஷ்மி-நாராயணன் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக இருக்கிறார்கள். அது கிருஷ்ணபுரி, இது கம்சபுரியாகும். நாடகத்தின்படி இந்த பெயரையும் வைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய ரூபம் மிகவும் சூட்சுமமானது என்று பாபா புரிய வைக்கின்றார். யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆத்மா ஒரு நட்சத்திரம் போன்றது என்று சொல்கிறார்கள் ஆனால் லிங்கத்தை உருவாக்கி விடுகிறார்கள். இல்லையென்றால் பூஜை எப்படி நடக்கும்? ருத்ர யக்ஞம் படைக்கிறார் கள் என்றால் பெரு விரல் போல் சாலிகிராமங்களை உருவாக்குகிறார்கள். மற்றொரு பக்கம் அவரை அதிசயமான நட்சத்திரம் என்று சொல்கிறார்கள். ஆத்மாவைப் பார்க்க நிறைய பேர் முயற்சி செய்கிறார்கள் ஆனால் யாருமே பார்க்க முடியாது. இராமகிருஷ்ணர், விவேகானந்தரைக் கூட காட்டுகிறார்கள் அல்லவா! அவரிடமிருந்து ஆத்மா விடுபட்டு என்னுள் நிறைந்து விட்டது என்பதை அவர் பார்த்தார். அவருக்கு யாருடைய காட்சி ஏற்பட்டது? ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபம் ஒன்றே ஆகும். புள்ளியைப் பார்த்தார், ஆனால் எதையும் புரிந்துக் கொள்ள வில்லை. ஆத்மாவின் காட்சியை யாரும் விரும்புவதில்லை. பரமாத்மாவின் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று தான் விருப்பம் வைக்கிறார்கள். குருவின் வழியாக பரமாத்மாவின் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று அவர் அமர்ந்தார். அவ்வளவு தான், ஜோதியாக இருந்தது அது என்னுள் நிறைந்து விட்டது என்று சொல்லி விட்டார். இதிலேயே அவர் அதிக குஷி அடைந்து விட்டார். இது தான் பரமாத்மாவின் ரூபம் என்று அவர் புரிந்து கொண்டார். குருவிடம் பகவான் இருக்கின்றார், பகவானின் காட்சியைப் பார்த்தார். எதையும் புரிந்து கொள்ளவில்லை. பக்தி மார்க்கத்தில் புரிய வைப்பது யார்? எந்தெந்த ரூபத்தில் என்ன பாவனை வைக்கிறார்களோ, எந்த முகத்தைப் பார்க் கிறார்களோ, அந்த காட்சி ஏற்படுகிறது, என்பதை பாபா வந்து இப்போது புரிய வைக்கின்றார். நிறைய பேர் கணேஷின் பூஜை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உயிருடன் காட்சி ஏற்படு கிறது. இல்லையென்றால் அவர் களுக்கு எப்படி நிச்சயம் ஏற்படும்? மிக பிரகாசமான ரூபத்தைப் பார்த்து நாங்கள் பகவானின் காட்சியைப் பார்த்தோம் என்று புரிந்து கொள்கிறார்கள். அதிலேயே குஷி அடைந்து விடுகிறார்கள். இவையனைத்தும் பக்தி மார்கம், இறங்கும் கலையாகும். முதல் பிறவி நன்றாக இருக்கிறது பிறகு குறைந்து- குறைந்து கடைசி வந்து விடுகிறது. குழந்தைகள் தான் இந்த விசயங்களை புரிந்து கொள்கிறார்கள், யாருக்கெல்லாம் கல்பத்திற்கு முன்னால் ஞானத்தைப் புரிய வைத்தேனோ அவர்களுக்குத் தான் இப்போது புரிய வைத்துக் கொண்டிருக் கின்றேன். கல்பத்திற்கு முன்னால் வந்தவர்கள் தான் இப்போது வருவார்கள், மற்றபடி மற்றவர் களுடைய தர்மமே தனிப்பட்டதாகும். ஒவ்வொரு சித்திரத்திலும் பகவானுடைய மகாவாக்கியம் என்று எழுதுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். மிகவும் யுக்தியோடு புரிய வைக்க வேண்டி யிருக்கிறது. பகவானுடைய மகாவாக்கியம் அல்லவா - யாதவர், கௌரவர் மற்றும் பாண்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதின் சித்திரங்கள் இவை. நீங்கள் தங்களை தெரிந்துள்ளீர்களா என்று கேளுங்கள். தெரிந்திருக்க வில்லை என்றால் தந்தையிடம் அன்பு இல்லை அல்லவா, எனவே அன்பில்லாத புத்தியுடையவர்களே ஆகிவிட்டீர்கள். தந்தையிடம் அன்பு இல்லையென்றால் வினாசம் ஆகி விடுவீர்கள். அன்பான புத்தியுடையவர்கள் வெற்றி யடைவார்கள், வாய்மையே வெல்லும் - இதனுடைய அர்த்தமும் சரியானதே ஆகும். பாபாவின் நினைவே இல்லையென்றால் வெற்றி அடைய முடியாது.

கீதையை சிவபகவான் சொன்னார் என்று நீங்கள் இப்போது நிரூபித்து புரிய வைக்கின்றீர்கள். அவர் தான் பிரம்மாவின் மூலம் இராஜயோகம் கற்றுக் கொடுத்தார். இவர்கள் கிருஷ்ண பகவானுடைய கீதை என்று புரிந்து கொண்டு சத்தியம் செய்கிறார்கள். அவர்களிடம் கிருஷ்ணர் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா அல்லது பகவானை தெரிந்து கொள்ள வேண்டுமா என்று கேட்க வேண்டும். ஈஸ்வரன் எங்கும் இருக்கின்றார் என்று தெரிந்து உண்மையை சொல் என்று சொல்கிறார்கள். குழப்பமாகி விட்டது அல்லவா! எனவே சத்தியம் கூட பொய்யாகி விடுகிறது. சேவை செய்யக் கூடிய குழந்தைகளுக்கு மறைமுகமான போதை இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு புரிய வைத்தீர்கள் என்றால் வெற்றி ஏற்படும். உங்களுடைய இந்த படிப்பும் மறை முகமானது, படிப்பிக்கக் கூடியவரும் கூட மறைமுகமாக இருக்கின்றார். நான் புதிய உலகத்திற்குச் சென்று இலஷ்மி - நாராயணனாக ஆவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மகாபாரத சண்டைக்குப் பிறகு புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது. குழந்தைகளுக்கு இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது. அதையும் வரிசைகிரமமாக தாரணை செய்கிறார்கள். யோகத்திலும் கூட வரிசைக்கிரமமாகத்தான் இருக்கிறார்கள். நாம் எந்தளவிற்கு நினைவில் இருக்கிறோம் என்பதை யும் சோதித்துப் பார்க்க வேண்டும் உங்களுடைய இந்த முயற்சியானது எதிர்கால 21 பிறவி களுக்குமானதாக ஆகி விடும் என்று பாபா கூறுகின்றார். இப்போது தோற்று விட்டீர்கள் என்றால் கல்பம்-கல்பாந்திரமாக தோற்றுக் கொண்டே இருப்பீர்கள், உயர்ந்த பதவி அடைய முடியாது. உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நிறைய பேர் விகாரத்தில் சென்று கொண்டே இருக்கிறார்கள் பிறகு சென்டருக்கு வந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஈஸ்வரன் அனைத்தையும் பார்க்கிறார், தெரிந்திருக்கிறார் என்று புரிந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று பாபாவிற்கு என்ன வந்தது? நீங்கள் பொய் சொன்னீர்கள் என்றால், விகர்மங்கள் செய்தீர்கள் என்றால் தங்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படுத்துவீர்கள். முகத்தை கருப்பாக்கிக் கொண்டால் நான் உயர்ந்த பதவி அடைய முடியாது என்று நீங்கள் கூட புரிந்து கொள்கிறீர்கள். எனவே பாபா தெரிந்து கொண்டாலும் கூட விசயம் ஒன்று தான் என்றாகிறது. அவருக்கு என்ன அவசியம் உள்ளது? நான் இப்படிப்பட்ட கர்மத்தை செய்வதின் மூலம் துர்கதியை அடைவேன் என்று தங்களுடைய மனம் உறுத்த வேண்டும். பாபா ஏன் சொல்ல வேண்டும்? நாடகத்தில் இருந்தால் சொல்லப்படும். பாபாவிடம் மறைப்பது என்பது தங்களை சத்திய நாசம் செய்து கொள்வதாகும். தூய்மையாவதற்காக பாபாவை நினைவு செய்ய வேண்டும், நாம் நன்றாகப் படித்து உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்ற கவலையே உங்களுக்கு இருக்க வேண்டும். யார் இறந்தாலும் வாழ்ந்தாலும், அதைப்பற்றி கவலை இல்லை. பாபாவிடமிருந்து எப்படி ஆஸ்தி எடுப்பது என்ற கவலையே இருக்க வேண்டும் எனவே யாருக்கும் சுருக்கமாக புரிய வைக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மறைமுகமான குஷியில் இருந்து கொண்டு சேவை செய்ய வேண்டும். மனம் உறுத்து கின்ற அளவு அரிக்கும் எந்தவொரு காரியத்தையும் செய்யக் கூடாது. நாம் எந்தளவிற்கு நினைவில் இருக்கிறோம் என்று தங்களை சோதிக்க வேண்டும்.

2) நாம் நல்ல விதத்தில் படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்ற கவலை எப்போதும் இருக்க வேண்டும். எந்தவொரு விகர்மமும் செய்து விட்டு, பொய் சொல்லி தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

வரதானம்:
மன்மனாபவ என்ற மகா மந்திரத்தின் மூலம் அனைத்து துக்கங்களிலிருந்து விடுபட்டு இருக்கும் சதா சுக சொரூபம் ஆவீர்களாக.

எப்பொழுதாவது ஏதாவதொரு விதமான துக்கம் வந்தாலும் மந்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அப்பொழுது துக்கம் ஓடி போய் விடும். கனவிலும் கூட சிறிதளவும் துக்கத்தின் அனுபவம் ஏற்படக் கூடாது. உடல் நோய் வாய்ப்பட்டு போகலாம். பணம் மேலும் கீழும் ஆகலாம். என்ன ஆனாலும் சரி, துக்கத்தின் அலைகள் உள்ளுக் குள் வரக் கூடாது. எப்படி கடலில் அலைகள் வருகின்றன மற்றும் போய் விடுகின்றன. ஆனால் யாருக்கு எந்த அலைகளில் மூழ்கிச் செல்ல தெரிகிறதோ அவர்கள் அதில் சுகத்தின் அனுபவம் செய்கிறார்கள். அலைகளில் எப்படி குதித்து கடந்து செல்கிறார்கள் என்றால் ஏதோ விளையாடுவது போல அவர்களுக்கு இருக்கும்.எனவே கடலின் குழந்தைகள் சுக சொரூபம் ஆவீர்கள். துக்கத்தின் அலை கூட வரக் கூடாது.

சுலோகன்:
ஒவ்வொரு எண்ணத்திலும் திடத்தன்மையின் விசேˆ தன்மையை நடைமுறையில் எடுத்து வந்தீர்கள் என்றால் பிரத்யட்சதா - வெளிப்பாடு ஏற்பட்டு விடும்.

அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்தபிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருமுக நிலையை கடைபிடியுங்கள்.

சுய முன்னேற்றத்தில், சேவையின் முன்னேற்றத்தில் ஒருவர் கூறினார், அடுத்தவர் சரி ஐயா என்று கூறினார். அது போல எப்பொழுதும் ஒற்றுமை மற்றும் திடத்தன்மை மூலம் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். எப்படி தாதிகளின் ஒற்றுமை மற்றும் திடத்தன்மையின் குழு பக்குவமாக இருக்கிறதோ அதே போல ஆதி சேவையின் ரத்தினங்களின் குழு உறுதியாக இருக்க வேண்டும். இதன் மிக மிக அவசியமானது.