11-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய
உங்களை சுகம் மற்றும் அமைதியான உலகத்திற்கு அழைத்துச் செல்ல
பாபா வந்திருக்கின்றார், சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தில் தான்
அமைதி இருக்கிறது
கேள்வி:
இந்த யுத்த மைதானத்தில் மாயை
அனைத்தையும் விட முதலில் எந்த விசயத்தில் சண்டை யிடுகிறது?
பதில்:
நிச்சயத்தின் மீது. போகப்போக
நிச்சயத்தை உடைத்து விடுகிறது ஆகையினால் தோல்வி அடைந்து
விடுகிறார்கள். அனைவருடைய துக்கங்களையும் போக்கி சுகத்தை
அளிக்கக் கூடியவர் தான் நமக்கு ஸ்ரீமத் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார், (நாடகத்தின்) முதல்-இடை-கடைசியின் ஞானத்தை
சொல்லிக் கொண்டிருக்கிறார், என்ற நம்பிக்கை உறுதியாக
இருக்குமானால் மாயை யிடம் ஒருபோதும் தோல்வி அடைய முடியாது.
பாடல்:
இந்த பாவம் நிறைந்த
உலகத்திலிருந்து.......
ஓம் சாந்தி.
யாருக்காக சொல்கிறார்கள், எங்கே கொண்டு செல்ல வேண்டும், எப்படி
அழைத்துச் செல்ல வேண்டும்.......... இதை உலத்திலுள்ள யாரும்
தெரிந்திருக்கவில்லை. பிராமண குல பூஷணர்களாகிய நீங்களும் கூட
வரிசைக்கிரமமான முயற்சியின்படி தெரிந்துள்ளீர்கள். யார்
இவருக்குள் பிரவேசித்திருக்கிறாரோ, யார் நமக்கு தன்னுடைய
மற்றும் படைப்பினுடைய முதல்-இடை-கடைசியின் ஞானத்தை சொல்லிக்
கொண்டிருக்கிறாரோ அவர் அனைவருடைய துக்கங் களையும் போக்கி
அனைவரையும் சுகமுடையவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இது ஒன்றும் புதிய
விசயம் இல்லை. பாபா கல்பம்-கல்பமாக வருகின்றார், அனைவருக்கும்
ஸ்ரீமத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாபாவும் அவரே தான்,
நாமும் அதே குழந்தைகள் தான் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர் கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நிச்சயம்
இருக்க வேண்டும். குழந்தைகளை சாந்திதாமம், சுகதாமம் அழைத்துச்
செல்வதற்காக நான் வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். ஆனால்
மாயை நிச்சயம் ஏற்பட விடுவதில்லை. சுகதாமத்திற்குச்
செல்ல-செல்ல தோல்வி அடைய வைத்து விடுகிறது. இது யுத்த மைதானம்
அல்லவா! சரீர பலத்தினால் அந்த யுத்தம் நடக்கிறது, இது யோக
பலத்தினுடையதாகும். யோக பலம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்,
ஆகையினால் தான் அனைவரும் யோகம்- யோகம் என்று சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இந்த யோகத்தை ஒரு முறை தான்
கற்றுக் கொள்கிறீர்கள். மற்றபடி அவர்கள் அனைவரும் அநேக விதமான
ஹட யோகங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். பாபா எப்படி வந்து யோகம்
கற்றுக்கொடுக்கின்றார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர்கள் பழமையான யோகத்தை கற்றுக் கொடுக்க முடியாது. இவர் அதே
பாபா தான் இராஜயோகத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள், அவரை
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று நினைவு
செய்கிறார்கள். அமைதி எங்கு இருக்குமோ அப்படிப்பட்ட இடத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள். சாந்திதாமம் சுகதாமத்தில் தான் அமைதி
இருக்கிறது. துக்கதாமத்தில் அமைதி எங்கிருந்து வந்தது? அமைதி
இல்லாத காரணத் தினால் தான் நாடகத்தின்படி பாபா வருகின்றார், இது
துக்கதாமமாகும். இங்கே துக்கமோ துக்கம் தான் ஆகும். துக்கத்தின்
மலை விழப்போகிறது. எவ்வளவு தான் செல்வந்தர்களாக இருந்தாலும்
அல்லது என்னவாக இருந்தாலும், ஏதாவதொரு துக்கம் கண்டிப்பாக
ஏற்படுகிறது. நாம் இனிமையான பாபாவோடு அமர்ந்திருக் கிறோம்,
அந்த தந்தை இப்போது வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். நாடகத்தின் இரகசியத்தைக் கூட இப்போது
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நம்மை தன்னுடன் அழைத்துச் செல்ல
பாபா இப்போது வந்துள்ளார். பாபா ஆத்மாக்களாகிய நமக்கு
கூறுகின்றார், ஏனென்றால் அவர் ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை
அல்லவா! இதைப் பற்றித் தான் ஆத்மாக் களும் பரமாத்மாவும் நீண்ட
காலம் பிரிந்திருந்தன.................. என்று பாடப்பட்டுள்ளது.
சாந்தி தாமத்தில் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றாக இருக்கின்றன.
இப்போது பாபா வந்துள்ளார் மீதம் கொஞ்ச ஆத்மாக்கள் அங்கே
இருக்கின்றன, அவர்களும் மேலிருந்து கீழே வந்து கொண்டே இருக்
கிறார்கள். இங்கே பாபா உங்களுக்கு எவ்வளவு விசயங்களைப் புரிய
வைக்கின்றார். வீட்டிற்குச் சென்றவுடன் நீங்கள் மறந்து
விடுகிறீர்கள். இது மிகவும் சகஜமான விசயமாகும் மேலும்
அனைவருக்கும் சுகத்தை வழங்கும் வள்ளல், அமைதியை வழங்கும்
வள்ளலாக இருக்கக் கூடிய பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார். நீங்கள் எவ்வளவு குறைவானவர்களாக இருக்கின்றீர்கள்.
மெது-மெதுவாக வளர்ந்து கொண்டே செல்வீர்கள். உங்களுக்கு பாபாவோடு
மறை முகமான அன்பு இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் இருங்கள்,
பாபா மதுபனில் அமர்ந்திருக் கின்றார் என்பது உங்களுடைய
புத்தியில் இருக்கும். என்னை மூலவதனத்தில் நினைவு செய்யுங்கள்
என்று பாபா கூறுகின்றார். உங்களுடைய இருப்பிடமும் அங்கே
இருக்கிறது எனும் போது கண்டிப்பாக பாபாவை நினைவு செய்வீர்கள்,
அவரைத் தான் நீங்கள் தான் தாய்-தந்தை என்று சொல்கிறார்கள். அவர்
சரியாக இப்போது உங்களிடம் வந்துள்ளார். நான் உங்களை அழைத்துச்
செல்வதற்காக வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். இராவணன்
உங்களை தூய்மை யற்றவர்களாக தமோபிரதானமாக மாற்றினான், இப்போது
சதோபிரதானமாக தூய்மை யாக ஆக வேண்டும். தூய்மையற்றவர்கள் எப்படி
செல்ல முடியும்? கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். இப்போது ஒரு
மனிதன் கூட சதோபிரதானமானவராக இல்லை. இது தமோபிர தான உலகமாகும்.
இது மனிதர்களுடைய விசயமே ஆகும். மனிதர்களுக்குத் தான் சதோபிர
தானம், சதோ, இரஜோ, தமோ என்பதின் இரகசியம் புரிய வைக்கப்படுகிறது.
பாபா குழந்தை களுக்குத் தான் புரிய வைக்கின்றார். இது மிகவும்
சுலபமானதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களுடைய வீட்டில்
இருந்தீர்கள். அங்கே அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாக
இருக்கின்றன. தூய்மையற்றவைகள் இருக்க முடியாது. அதனுடைய பெயரே
முக்திதாமமாகும். இப்போது பாபா உங்களை தூய்மையாக்கி அனுப்பி
வைக்கின்றார். பிறகு நீங்கள் நடிப்பை நடிப்பதற்காக சுக
தாமத்திற்கு வருகின்றீர்கள். நீங்கள் சதோ. இரஜோ, தமோவில்
வருகின்றீர்கள்.
பாபா எங்கே அமைதி இருக்கின்றதோ அங்கே எங்களை அழைத்துச்
செல்லுங்கள் பாபா என்று அழைக்கவும் செய்கிறீர்கள். அமைதி எங்கே
கிடைக்கும்? என்பது சாது- சன்னியாசிகள் போன்ற யாருக்குமே
தெரியவில்லை. சுகம்-அமைதி என்பது எங்கே கிடைக்கும் என்பதை
குழந்தை களாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். பாபா நமக்கு
21 பிறவிகளுக்கு சுகம் கொடுப்பதற்காக இப்போது வந்துள்ளார்.
மற்றபடி பின்னால் வரக்கூடிய அனைவருக்கும் முக்தியை அளிக்க
வந்துள்ளார். காலம் கடந்து வருபவர்களின் நடிப்பே கொஞ்சமாகத்
தான் இருக்கும். முழு பழைய மரமும் முடிய வேண்டும். இப்போது
உங்களுடைய இந்த மறைமுகமான அரசாங்கம் தெய்வீக மரத்தின் நாற்றை
நட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் காட்டு மரங்களின் நாற்றை
நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே பாபா முட்களிலிருந்து
மாற்றி தெய்வீக மலர்களின் மரத்தை உருவாக்கிக் கொண்டிருகின்றார்.
அதுவும் அரசாங்கம், இது கூட மறைமுகமான அரசாங்கமாகும். அவர்கள்
என்ன செய்கிறார்கள் மற்றும் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது!
எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள்! அவர்கள்
எதையும் புரிந்து கொள்வதில்லை. மரங்களின் கன்றுகளை நட்டுக்
கொண்டே இருக்கிறார்கள், அந்த காட்டு மரங்கள் அநேக விதமாக
இருக்கின்றன. ஒவ்வொருவரும் விதவிதமான கன்றுகளை நடுகிறார்கள்.
இப்போது குழந்தை களாகிய உங்கள் பாபா மீண்டும்
தேவதைகளாக்குகின்றார். நீங்கள் சதோபிரதான தேவி- தேவதை களாக
இருந்தீர்கள் பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி
தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள். ஒருவர் எப்போதுமே சதோபிரதானமாக
இருப்பது என்பது நடப்பதே இல்லை. ஒவ்வொரு பொருளும்
புதியதிலிருந்து பழையதாக ஆகின்றது. 24 காரட் தங்கமாக இருந்தது,
இப்போது 9 காரட் தங்க ஆபரணங்களாக ஆகி விட்டது, மீண்டும் 24
காரட்டாக ஆக வேண்டும். ஆத்மாக்கள் அப்படி ஆகியிருக்கின்றன
அல்லவா!டி ஆபரணங்களாகும். இப்போது அனைவரும் கருப்பாக
தூய்மையற்றவர்களாக ஆகி விட்டார்கள். மரியாதைக்காக கருப்பு என்ற
வார்த்தையை சொல்லாமல் தூய்மையற்றவர்கள் என்று சொல்லி
விடுகிறார்கள். ஆத்மா சதோபிரதானமாக தூய்மையாக இருந்தது பிறகு
எவ்வளவு அழுக்கு சேர்ந்து விட்டது! இப்போது மீண்டும் தூய்மை
யாவதற்காக பாபா யுக்திகளையும் கூறுகின்றார். இது யோக
அக்னியாகும், இதன்மூலம் தான் உங்களுடைய அழுக்கு நீங்கும்.
பாபாவை நினைவு செய்ய வேண்டும். என்னை இந்த விதமாக நினைவு
செய்யுங்கள் என்று பாபா அவரே கூறுகின்றார். நான் தான்
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவன் ஆவேன். உங்களை அநேக முறை
தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை யாக்கியுள்ளேன். இதைக் கூட
முதலில் நீங்கள் தெரிந்திருக்கவில்லை. இன்று நாம் தூய்மை
யற்றவர்களாக இருக்கின்றோம், பிறகு நாளை தூய்மையாக ஆவோம் என்பதை
இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் கல்பத்தின்
ஆயுளை இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று எழுதி மனிதர்களை
காரிருளில் விட்டு விட்டார்கள். பாபா வந்து அனைத்து
விசயங்களையும் நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார். நமக்கு யார்
படிப்பிக்கின்றார், ஞானக்கடல் தூய்மையற்றவர் களை தூய்மை யாக்கக்
கூடிய பாபா, யார் அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளலாக
இருக்கின்றாரோ அவர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் எவ்வளவு
மகிமை பாடுகிறார்கள்! ஆனால் அதனுடைய அர்த்தம் எதையும்
தெரிந்திருக்கவில்லை. ஸ்துதி பாடுகிறார்கள் என்றால் அனைவரும்
சேர்ந்து செய்கிறார்கள். குடுகுடுப்பை (தாளம்) அடிக்கிறார்கள்
அல்லவா! யார் என்ன கற்றுக் கொடுத்தார்களோ அதை மனனம் செய்து
கொள்கிறார்கள். இப்போது பாபா கூறுகின்றார், எதையெல்லாம்
கற்றீர்களோ, அவை யனைத்தையும் மறந்து விடுங்கள். வாழ்ந்து
கொண்டிருக்கும்போதே என்னுடையவர்களாக ஆகுங்கள். குடும்ப
விவகாரங்களில் இருந்து கொண்டே யுக்தியோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாபாவையே நினைவு செய்ய வேண்டும். அவர்களுடையது ஹடயோகமே
ஆகும். நீங்கள் இராஜயோகிகளாவீர்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும்
இப்படி படிப்பினை கொடுக்க வேண்டும். உங்களுடைய நடத்தையைப்
பார்த்து அப்படி பிறர் பின்பற்ற வேண்டும். ஒருபோதும்
தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒருவேளை
சண்டையிட்டுக் கொண்டீர்கள் என்றால் மற்றவர் கள் அனைவரும் என்ன
புரிந்து கொள்வார்கள்? இவர்களிடத்தில் நிறைய கோபம் இருக்கிறது.
உங்களிடத்தில் எந்த விகாரமும் இருக்கக் கூடாது. மனிதர்களுடைய
புத்தியை சிதற வைக்கக் கூடியது சினிமாவாகும், இது ஒரு நரகத்தைப்
போன்றதாகும். அங்கு சென்றவுடனேயே புத்தி கெட்டு விடுகிறது.
உலகத்தில் எவ்வளவு குப்பைகள் இருக்கின்றன! ஒருபக்கம் அரசாங்கம்
18 வயதுக்கு உட்பட்டவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று
சட்டம் போடுகிறது. இருந்தாலும் கூட நிறைய திருமணங்கள் நடந்து
கொண்டு தான் இருக்கிறது. குழந்தைகளை மடியில் அமர்த்தி திருமணம்
செய்வித்துக் கொண்டிருக்கிறார்கள். பாபா நம்மை இந்த மோசமான
உலகத்திலிருந்து அழைத்துச் செல்கின்றார் என்பதை இப்போது நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். நம்மை சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக்குகின்றார். பற்றற்றவர்களாக ஆகி விடுங்கள், என்னை
மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
குடும்பத்தில் இருந்து கொண்டே என்னை நினைவு செய்யுங்கள் என்று
பாபா கூறுகின்றார். ஏதாவது உழைத்தால் தானே உலகத்திற்கு எஜமானர்
களாக ஆக முடியும். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும்
அசுர குணங்களை விடுங்கள் என்று பாபா கூறுகின்றார். தினமும் இரவு
தங்களுடைய கணக்கை பாருங்கள். இது உங்களுடைய வியாபாரமாகும்.
மிகக் குறைந்தவர்களே இந்த வியாபாரத்தை செய்கிறார்கள். ஒரு
வினாடியில் எதுவுமில்லாதவர்களை இராஜாவாக்கி விடுகிறது, இது
மந்திரம் தான் அல்லவா! இப்படிப்பட்ட மந்திரவாதியின் கைகளை
பிடித்துக் கொள்ள வேண்டும். இவர் நம்மை யோகபலத்தின் மூலம்
தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக மாற்றுகின்றார். வேறு
யாரும் மாற்ற முடியாது. கங்கையின் மூலம் யாரும் தூய்மையாக ஆக
முடியாது. குழந்தைகளாகிய உங்களிடத்தில் இப்போது எவ்வளவு ஞானம்
இருக்கிறது! பாபா மீண்டும் வந்துள்ளார் என்று உங்களுக்குள் குஷி
இருக்க வேண்டும். தேவிகளுடைய சித்திரங்கûளை கூட எவ்வளவு
உருவாக்கியுள்ளார்கள்! அவர்களிடத்தில் ஆயுதங் களைக் காட்டி
பயங்கரமாக உருவாக்கி விட்டார்கள். பிரம்மாவிற்கு கூட எத்தனை
கரங்களை காட்டி விட்டார்கள், பிரம்மாவின் புஜங்கள்
இலட்சக்கணக்கில் இருக்கும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
இப்போது புரிந்து கொள்கிறீர்கள். இவ்வளவு
பிரம்மாகுமார-குமாரிகள் அனைவரும் பாபாவின் படைப்புகள் அல்லவா!
எனவே பிரஜாபிதா பிரம்மாவிற்கு இத்தனை புஜங்கள் இருக்கின்றன.
நீங்கள் இப்போது மழை நிரம்பிய மேகங்களாவீர்கள். உங்களுடைய
வாயிலிருந்து எப்போதும் ஞான இரத்தினங்கள் தான் வெளி வர வேண்டும்.
ஞான ரத்தினங்களைத் தவிர வேறு எந்த விசயமும் இல்லை. இந்த
இரத்தினங் ள யாரும் மதிப்பிட முடியாது. பாபா கூறுகின்றார்,
மன்மனாபவ. பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் தேவதைகளாக
ஆவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழதைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும்
காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின்
நமஸ்காரம்.
இரவு வகுப்பு 11/03/1968
கண்காட்சிகளை திறக்க உங்களிடத்தில் பெரிய-பெரிய மனிதர்கள்
வருகிறார்கள், பகவானை அடைய இவர்கள் நல்ல வழியை கண்டுள்ளார்கள்
என்று மட்டும் தான் புரிந்துள்ளார்கள். எப்படி பகவானை அடைவதற்கு
சத்சங்கம் போன்றவைகளை செய்கிறார்கள், வேதம் படிக்கிறார்கள் அது
போல் இது கூட இவர்கள் இந்த வழியைப் பின்பற்று கிறார்கள்.
மற்றபடி இவர்களுக்கு பகவான் படிப்பிக்கின்றார் என்று புரிந்து
கொள்வதில்லை. நல்ல காரியம் செய்கிறார்கள், தூய்மை இருக்கிறது
மற்றும் பகவானை சந்திக்க வைக்கிறார்கள். இந்த தேவிகள் நல்ல
வழியைக் கண்டறிந்துள்ளார்கள், அவ்வளவு தான். யார் மூலம் திறப்பு
விழா செய்ய வைக்கிறீர்களோ அவர்கள் தங்களை மிகவும்
உயர்ந்தவர்களாகப் புரிந்து கொள்கிறார்கள். சிலர் பெரியதிலும்
பெரிய மனிதர் என்று பாபாவை புரிந்து கொள்கிறார்கள் மகா புருஷர்
அவரை சென்று சந்திப்போம் என்று புரிந்து கொள்கிறார்கள். முதலில்
படிவத்தை நிரப்பி அனுப்புங்கள் என்று பாபா கூறுகின்றார்.
முதலில் குழந்தைகளாகிய நீங்கள் அவருக்கு பாபாவின் முழு
அறிமுகத்தை அளியுங்கள். அறிமுக மில்லாமல் வந்து என்ன
செய்வார்கள். முழுமையான நிச்சயம் இருந்தால் தான் சிவபாபாவை
சந்திக்க முடியும். அறிந்து கொள்ளாமல் சந்தித்து என்ன
செய்வார்கள்! நிறைய செல்வந்தர்கள் வருகிறார்கள், நாம்
இவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று புரிந்து
கொள்கிறார்கள். யாராவது ஏழை ஒரு ரூபாய் கொடுக்கின்றார்,
செல்வந்தர் 100 ரூபாய் கொடுக் கிறார் என்றால் ஏழைகளின் ஒரு
ரூபாய் மதிப்பு மிக்கதாகி விடுகிறது. அந்த செல்வந்தர்கள்
ஒருபோதும் நினைவு யாத்திரையில் யதார்த்தமான விதத்தில் இருக்க
முடியாது, அவர்கள் ஆத்ம-அபிமானிகளாக ஆக முடியாது. முதலில்
தூய்மையற்ற நிலையிலிருந்து எப்படி தூய்மையாக ஆவது என்பதை எழுதி
கொடுக்க வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக
வேண்டும். இதில் பிரேரணை(தூண்டுதல்) போன்ற விசயமே இல்லை. என்னை
மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் துரு நீங்கி விடும் என்று
பாபா கூறுகின்றார். கண்காட்சி போன்றவைகளை பார்க்க வருகிறார்கள்
ஆனால் பிறகு இரண்டு-மூன்று முறை வந்து புரிந்து கொள்ள வேண்டும்,
அப்போது தான் இவர்களுக்கு கொஞ்சம் அம்பு தைத்துள்ளது, தேவதா
தர்மத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் நன்றாக பக்தி
செய்துள்ளார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு
நன்றாக இருக்கிறது ஆனால் இலட்சியத்தை பிடித்துக் கொள்ளவில்லை
என்றால் அவர்கள் எந்த காரியத் திற்கு உதவுவார்கள். நாடகம்
நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். என்ன வெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதோ, அதை
புத்தியின் மூலம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து
கொள்கிறீர்கள். உங்களுடைய புத்தியில் சக்கரம் சுற்றிக் கொண்டே
இருக்கிறது, திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருக்கிறது.
யாரெல்லாம் என்னென்ன செய்துள்ளார்களோ அதை செய்கிறார்கள். பாபா
யாரிடமிருந்தும் வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் அவருடைய
கையில் இருக்கிறது. இப்போது சென்டர் போன்றவைகள்
திறக்கப்படுகின்றன, பணம் காரியத்திற்கு உதவுகிறது. உங்களுடைய
செல்வாக்கு அதிகரிக்கும் போது பணம் என்ன செய்யும்! முக்கியமான
விசயம் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆவதாகும். அது
மிகவும் கடினமாகும், இதில் ஈடுபட வேண்டும். நாம் பாபாவை நினைவு
செய்ய வேண்டும். ரொட்டி சாப்பிட வேண்டும் பாபாவை நினைவு செய்ய
வேண்டும். முதலில் நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும்
என்று புரிந்து கொள்வார்கள். முதலில் நாம் ஆத்மா என்பதை
உறுதியாக்க வேண்டும். இப்படி யாராவது வந்தால் தான் ஓட்டத்தில்
வேகத்தை கூட்ட முடியும். உண்மையில் குழந்தைகளாகிய நீங்கள்
யோகபலத்தின் மூலம் தூய்மையாக்கு கின்றீர்கள் எனும்போது
குழந்தைகளுக்கு எவ்வளவு போதை இருக்க வேண்டும்! முக்கியமான
விசயமே தூய்மையினுடையதாகும். இங்கே படிப்பிக்கவும் படுகிறது
மற்றும் தூய்மையாகவும் ஆக வேண்டியிருக் கிறது, சுத்தமாகவும்
இருக்க வேண்டும். உள்ளுக்குள் வேறு எந்த விசயமும் நினைவு
இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அசரீரி ஆகுக என்று புரிய
வைக்கப்படுகிறது. நீங்கள் இங்கே நடிப்பை நடிக்க வந்துள்ளீர்கள்.
அனைவரும் அவரவருடைய நடிப்பை நடிக்கத்தான் வேண்டும். இந்த ஞானம்
புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் ஏணிப்படியை பற்றியும்
புரிய வைக்கலாம். இராவண இராஜ்யமே தூய்மையற்றது, இராம இராஜ்யம்
தூய்மையானதாகும். பிறகு தூய்மையற்ற நிலையிலிருந்து எவ்வாறு
தூய்மையாவது? இப்படிப்பட்ட விசயங்களில் சிந்தனை செய்ய வேண்டும்,
இதைத் தான் ஞானத்தை சிந்தனை செய்வது என்று சொல்லப்படுகிறது. 84
பிறவிகளின் சக்கரம் நினைவில் வர வேண்டும். என்னை நினைவு
செய்யுங்கள் என்று பாபா கூறியுள்ளார். இது ஆன்மீக
யாத்திரையாகும். பாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மம் வினாசம்
ஆகிறது. அந்த சரீர யாத்திரையின் மூலம் இன்னும் விகர்மங்கள் தான்
உருவாகிறது. இது தாயத்து என்று சொல்லுங்கள். இதை புரிந்து
கொண்டீர்கள் என்றால் அனைத்து துக்கங்களும் தூரம் போய்விடும்.
துக்கம் தூரம் போவதற்குத் தான் தாயத்து அணிகிறார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் இரவு வணக்கமும்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பற்றற்றவர்களாக ஆகி பாபாவை நினைவு செய்ய வேண்டும். குடும்பம்
பரிவாரத்தில் இருந்து கொண்டே உலகத்திற்கு எஜமானர்களாக ஆவதற்காக
உழைக்க வேண்டும். அவகுணங்களை விட்டுக் (குறைத்துக்) கொண்டே
செல்ல வேண்டும்.
2) அனைவரும் பார்த்து பின்பற்றும் படியாக தங்களுடைய நடத்தைகளை
வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளுக்குள் எந்த விகாரமும் இருக்கக்
கூடாது, இதை சோதனை செய்ய வேண்டும்.
வரதானம்:
இரட்டை சேவை மூலமாக அலௌகிக சக்தியின் சாட்சாத்காரம்
செய்விக்கும் உலக சேவாதாரி ஆவீர்களாக.
எப்படி தந்தையின் சொரூபமே உலக சேவாதாரி ஆகும். அதேபோல நீங்களும்
தந்தைக்கு சமமாக உலக சேவாதாரி ஆவீர்கள்.சரீரம் மூலமாக ஸ்தூல
சேவை செய்த படியே மனதின் மூலமாக உலக மாற்றத்தின் சேவையில்
மும்முரமாக இருங்கள்.. ஒரே நேரத்தில் உடலால் மற்றும் மனதால்
சேர்ந்தாற்போல சேவை நடக்கட்டும். யார் மனசா சேவை மற்றும் கர்மனா
சேவை சேர்ந்தாற்போல செய்கிறார்களோ அவர்களை பார்ப்பவர்களுக்கு
இது ஏதோ அலௌகிக சக்தி இவர்களிடம் இருக்கிறது என்று அனுபவம்
அல்லது சாட்சாத்காரம் ஏற்படுகிறது. எனவே இந்த பயிற்சியை
நிரந்தரமானதாகவும் இயல்பானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். மனசா
சேவைக்காக குறிப்பாக ஒருமுக நிலையின் பயிற்சியை அதிகரியுங்கள்.
சுலோகன்:
அனைவரிடமிருந்தும் குணங்களை கிரகிப்பவர் ஆகுங்கள். ஆனால்
பின்பற்ற வேண்டும் என்றால் பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாசாரத்தை
கடைபிடியுங்கள்.
இப்பொழுது பரிசுத்தம் மற்றும் பயமின்மையின் ஆதாரத்தில்
சத்தியத்தின் மூலம் பிரத்யட்சம் செய்யுங்கள். வாய் மூலமாக
சத்தியத்தின் அதிகாரம் இயல்பாகவே தந்தையை வெளிப்படுத்தும்.
இப்பொழுது பரமாத்ம அணுகுண்டு (சத்திய ஞானம்) மூலமாக பூமியை
பரிவர்த்தனை செய்யுங் கள். இதற்கான எளிய சாதனமாவது எப்பொழுதும்
வாயில் அல்லது எண்ணத்தில் நிரந்தர மாலைக்கு சமமாக பரமாத்ம
ஸ்மிருதி இருக்கட்டும். எல்லோருக்குள்ளும் மேரா பாபா என்ற ஒரே
ஈடுபாடு இருக்கட்டும். எண்ணம், சொல் மற்றும் செயலில் இதே அகண்ட
- இடையறாத ஈடுபாடு இருக்கட்டும். இதே நிரந்தர ஜெபமாக
இருக்கட்டும். இந்த ஜெபித்தல் ஏற்பட்டு விட்டது என்றால் மற்ற
எல்லா விசயங்களும் முடிந்து போய் விடும்.