11-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சூன்ய (பூஜ்யம், சைஃபர்) நிலை அதாவது அசரீரி ஆவதற்கான நேரம் இதுவே ஆகும். இதே நிலையில் இருப்பதற்காக பயிற்சி செய்யுங்கள்.

கேள்வி:
அனைத்தையும் விட உயர்ந்த குறிக்கோள் எது? அதன் பிராப்தி எவ்வாறு ஏற்படும்?

பதில்:
முழுமையாக (குற்றமற்ற) தூயப் பார்வை உடையவர்களாக ஆவது. இதுவே உயர்ந்த குறிக்கோள் ஆகும். கர்ம இந்திரியங்களில் சிறிதளவு கூட சஞ்சலத்தன்மை வரக்கூடாது. அப்பொழுது தான் சம்பூர்ண "சிவில் - ஐஸ்டு" - முழுமையாக தூய்மையான பார்வை உடைய வராக ஆக முடியும். இப்பேர்ப்பட்ட நிலை அமையும் பொழுது தான் உலக அரசாட்சி கிடைக் கக்கூடும். ஏறினால் வைகுண்ட உயர்பதவி.... என்ற பழ மொழியும் உண்டு. அதாவது, ராஜாக் களுக்கெல்லாம் ராஜா ஆவது. இல்லையென்றால் பிரஜை! .எனது விருத்தி (உள்ளுணர்வு) எவ்வாறு உள்ளது என்று இப்பொழுது சோதனை செய்யுங்கள். எந்த ஒரு தவறும் ஏற்படுவ தில்லையே?

ஓம் சாந்தி.
ஆத்ம உணர்வுடையவராகி அமர வேண்டும். தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது பாபா "ஆல்ரவுண்டரிடம்" (குல்ஸார் தாதியின் அம்மா) கேட்கிறார், சத்யுகத்தில் (ஆத்ம அபிமானி) ஆத்ம உணர்வுடைய வராக இருப்பார்களா, இல்லை தேக அபிமானியா? அங்கோ இயல்பாகவே ஆத்ம அபிமானியாக இருப்பார்கள். அடிக்கடி நினைவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஆம் அங்கு "இப்பொழுது இந்த உடல் முதுமை அடைந்து விட்டது. இப்பொழுது இதை விட்டு மற்றொரு புதிய உடலை எடுக்க வேண்டும்" என்பதைப் புரிந்திருப்பார்கள். எப்படி பாம்பினுடைய உதாரணம் உள்ளது. அதே போல ஆத்மா கூட இந்த பழைய சரீரத்தை விட்டு புதியதை எடுக்கிறது. பகவான் உதாரணத்துடன் புரிய வைக்கிறார். நீங்கள் அனைத்து மனிதர்களுக்கும் ஞானத்தை "பூம் பூம்" என்று ஊதி தனக்குச் சமானமாக ஞானமுடையவர்களாக ஆக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பரிஸ்தானத்தின் (சொர்க்கம்) நிர்விகாரி தேவதை ஆகி விட முடியும். மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குவது உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பு ஆகும். மனிதனை தேவதையாக.... என்ற பாடலும் உள்ளது அல்லவா.. .. .. யார் அவ்வாறு ஆக்கியது? தேவதைகள் ஒன்றும் செய்யவில்லை. பகவான் தான் மனிதர்களை தேவதையாக ஆக்குகிறார். மனிதர்கள் இந்த விஷயங்களை அறியாமல் உள்ளார்கள். உங்களுடைய குறிக்கோள் என்ன என்று உங்களிடம் எல்லா இடங்களிலும் கேட்கிறார்கள்? ஆக ஏன் குறிக்கோள் பற்றி எழுதப்பட்ட சிறு துண்டு பிரசுரங்களை அச்சடிக்கக் கூடாது? பின் யாராவது கேட்டார்கள் என்றால், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த துண்டு பிரசுரங்களைக் கொடுத்து விடுங்கள். இச்சமயம் இது கலியுக தூய்மையற்ற உலகம் ஆகும்; இங்கு அளவற்ற மகா துக்கம் உள்ளது என்பதை பாபா மிகவும் நல்ல முறையில் புரிய வைத்துள்ளார். இப்பொழுது நாம் மனிதர்களுக்கு சத்யுக, தூய்மையான, மகான் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்கான சேவை செய்து கொண்டிருக்கிறோம் அல்லது வழியைக் கூறுகிறோம். அப்படி இன்றி நாம் அத்வைத ஞானம் அளிக்கிறோம் என்பதல்ல. அந்த ஜனங்கள் சாஸ்திரங்களின் ஞானத்தை அத்வைத ஞானம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் அது ஒன்றும் அத்வைத ஞானம் அல்ல. அத்வைத ஞானம் என்று எழுதுவது தவறு ஆகும். மனிதர்களுக்கு தெளிவு படுத்திக் கூற வேண்டும். இவர்களுடைய உத்தேசம் என்ன என்பதை சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் அப்பேர்ப்பட்ட வார்த்தைகள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும். கலியுக பதீதமான (தூய்மையற்ற) "ப்ரஷ்டாசாரி" (இழிந்த நிலையில் இருக்கும்) மனிதர்களை பாபா அளவற்ற துக்கங்களிலிருந்து வெளியேற்றி சத்யுக தூய்மையான "சிரேஷ்டாசாரி" உயர்ந்த அளவற்ற சுகங்களின் உலகிற்கு அழைத்துச் செல்கிறார். பாபா இந்த கட்டுரையை குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். இது போல தெளிவுபடுத்தி எழுத வேண்டும். எல்லா இடங்களிலும் இது போல உங்களுடைய எழுதப்பட்ட விஷயங்கள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். சட்டென்று அதை எடுத்து கொடுத்து விட வேண்டும். அப்பொழுது நாங்களோ துக்க தாமத்தில் இருக்கிறோம். அசுத்தத்தில் இருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். நாம் கலியுக தூய்மையற்ற துக்கதாமத்தின் மனிதர்கள் ஆவோம் என்று மனிதர்கள் யாராவது புரிந்து கொள்கிறார்களா என்ன? இவர்கள் நம்மை அளவற்ற சுகங்களின் பக்கம் அழைத்துச் செல்கிறார்கள். எனவே இது போல ஒரு நல்ல துண்டு பிரசுரம் தயாரிக்க வேண்டும். எப்படி பாபா கூட "சத்யுகத்தினர் ஆவீர்களா இல்லை கலியுகத்தினரா" என்று அச்சடித்திருந்தார். ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்கிறார்களா என்ன? ரத்தினங்களைக் கூட கற்கள் என்று நினைத்து வீசி விடுகிறார்கள். இது ஞான ரத்தினங்கள் ஆகும். அவர்கள் சாஸ்திரங்களில் ரத்தினங்கள் உள்ளன என்று நினைக் கிறார்கள். இங்கோ அளவற்ற துக்கம் உள்ளது என்று புரிந்து கொள்ளும் வகையில் அவ்வாறு தெளிவாகக் கூறுங்கள். துக்கங்களினுடைய பட்டியலும் இருக்க வேண்டும். குறைந்தது அவசியம் 101 ஆவது இருக்க வேண்டும். இந்த துக்கதாமத்தில் அளவற்ற துக்கம் இருக்கிறது. இவை எல்லாமே எழுதுங்கள். முழு பட்டியலைத் தயாரியுங்கள். மற்றொரு பக்கம் பின் அளவற்ற சுகம் உள்ளது. அங்கு துக்கத்தின் பெயர் இருக்காது. நாம் அந்த இராஜ்யம் அல்லது சுகதாமத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு கூறினீர்கள் என்றால், உடனே மனிதர்களின் வாய் மூடி விட வேண்டும். இச்சமயம் துக்கதாமம் ஆகும் என்று யாராவது நினைக்கிறார்களா என்ன? இதையோ அவர்கள் சொர்க்கம் என்று நினைத்து உட்கார்ந்துள்ளார் கள். பெரிய பெரிய மாளிகை, புதுப் புது கோவில்கள் ஆகியவற்றைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இவை எல்லாமே முடிந்து விடப் போகிறது என்று அறிந்திருக்கிறார்களா என்ன? பைசாவோ அவர்களுக்கு லஞ்சத்தினுடையது நிறைய கிடைக்கிறது. இவை எல்லாமே மாயையின், விஞ்ஞானத்தின் செருக்கு என்று தந்தை புரிய வைத்துள்ளார். மோட்டார்கள், ஆகாய விமானம் ஆகிய எல்லாமே மாயையின் வெளிப்பகட்டு ஆகும். தந்தை சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்யும் பொழுது மாயை கூட தனது வெளிப் பகட்டைக் காண்பிக்கிறது. இதற்கு மாயையின் ஆடம்பரம் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகத்தில் அமைதியை நிலைநாட்டிக் கொண்டி ருக்கிறீர்கள். ஒரு வேளை எங்காவது மாயையின் பிரவேசம் ஆகி விடுகிறது என்றால், குழந்தை களுக்குள் உள்ளே உறுத்தும். யாராவது, எவரொருவருடைய பெயர் ரூபத்திலாவது மாட்டிக் கொள்கிறார்கள் என்றால், இவர் "கிரிமினல் ஐஸ்" குற்றப் பார்வை உடையவர் ஆவார் என்று தந்தை புரிய வைக்கிறார். கலியுகத்தில் இருப்பது "கிரிமினலைசேஷன்" குற்றப் பார்வையின் தன்மை. சத்யுகத்தில் இருப்பது "சிவிலைசேஷன்" தூய பார்வையின் தன்மை. இந்த தேவதை களுக்கு முன்னால் எல்லோரும் தலை வணங்குகிறார்கள். நீங்கள் நிர்விகாரி. நாங்கள் விகாரி என்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும் தத்தம் நிலையை சோதித்துப் பாருங்கள் என்று தந்தை கூறுகிறார். பெரிய பெரிய நல்ல மகாரதிகள் எங்களுடைய புத்தி எவருடைய பெயர் ரூபத்திலாவது மாட்டிக் கொள்ளவில்லையே என்று தங்களை சோதித்துப் பார்க்க வேண்டும்? குறிப்பிட்ட இன்னார் மிகவும் அழகாக இருக்கிறாள்."இதை செய்யலாமா" என்று ஏதாவது (விகார எண்ணம்) உள்ளுக்குள் தோன்றுகிறதா? இச்சமயம் முழுமையாக "சிவிலைஸ்டு"- தூய பார்வை உடையவராக யாருமே இல்லை என்பதை பாபா அறிந்துள்ளார். அதுவோ முற்றிலுமே "பாஸ் வித் ஆனர்" - கௌரவத்துடன் தேர்ச்சி அடையக் கூடிய 8 ரத்தினங்கள் ஆவார்கள். அவர்களுக்கு தான் இச்சமயம் (சிவிலைஸ்டு) தூய பார்வை இருக்க முடியும். 108 கூட இல்லை. சிறிதளவு கூட சஞ்சலத் தன்மை வராமல் இருப்பது - மிகவும் கடினமாகும். யாரோ ஒருவர் தான் இது போல இருக்க முடியும். கண்கள் ஏதாவதொரு வகையில் அவசியம் ஏமாற்றி விடுகிறது. ஆக நாடகம் சீக்கிரமாக யாரையும் தூய பார்வை உடையவராக ஆக்காது. மிகவும் முயற்சி செய்து தங்களையே சோதித்துக் கொள்ள வேண்டும், "எங்குமே நமது கண்கள் ஒன்றும் ஏமாற்றி விடுவதில்லையே"? உலகத்தின் அதிபதி ஆவது என்பது மிகவும் உயர்ந்த குறிக்கோள் ஆகும். "ஏறினால் ஒரேயடியாக வைகுண்ட சுவை ஏறும்.. .. (பழமொழி)" அதாவது ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆகிறார்கள். விழுந்தார்கள் என்றால் பிரஜையில் சென்று விடுவார்கள். தற்காலத்திலோ விகாரிகளின் காலம் என்றே கூற வேண்டும். எவ்வளவு தான் பெரிய மனிதராக இருக்கலாம் - உதாரணமாக ராணி இருக்கிறார். அவருக்குள்ளேயும் கூட எங்காவது யாராவது நம்மை (பதவி) இல்லாமல் செய்து விடக் கூடாதே என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அமைதியின்மை உள்ளது. ஒரு சில குழந்தைகள் கூட எவ்வளவு அசாந்தியைப் பரப்புகிறார்கள். நீங்கள் அமைதியை நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். எனவே முதலில் சுயம் தான் அமைதியில் இருங்கள். அப்பொழுது மற்றவர்களுக்குள்ளும் அந்த சக்தி நிரம்பும். அங்கோ மிகவுமே அமைதியின் இராஜ்யம் நடக்கிறது. கண்கள் தூய்மையானதாக ஆகி விடுகிறது. எனவே தந்தை கூறுகிறார், "இன்று ஆத்மாவாகிய என்னுடைய விருத்தி (உள்ளுணர்வு) எவ்வாறு இருந்தது" என்று உங்களையே சோதித்துக் கொள்ளுங்கள்" இதில் மிகவும் உழைப்பு உள்ளது. நம் மீது கவனம் கொண்டிருக்க வேண்டும். எல்லையில்லாத தந்தையிடம் கூட ஒரு பொழுதும் உண்மை கூறுவதில்லை. ஒவ்வொரு அடியிலும் தவறுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறிதளவு கூட அந்த குற்றப் பார்வையோடு பார்த்தீர்கள், தவறு ஏற்பட்டு விட்டது என்றால், உடனே குறித்துக் கொள்ளுங்கள். தவறற்றவராக ஆகும் வரை தினமும் 10 - 20 தவறுகள் செய்து கொண்டு தான் இருக்கக் கூடும். ஆனால், யாராவது உண்மையை கூறுகிறார் களா என்ன? தேக உணர்வுடையவர்கள் (தேக அபிமானி) மூலமாக ஏதேனும் பாவம் அவசியம் நடந்துக் கொண்டுதானிருக்கும். அது உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும். ஒரு சிலரோ தவறு என்றால் என்ன என்பதைக் கூட புரிந்து கொள்வதில்லை. மிருகங்கள் புரிந்து கொள்ளுமா என்ன? நீங்கள் கூட இந்த ஞானத்திற்கு முன்னால் குரங்கு புத்தியினராக இருந்தீர்கள். இப்பொழுது ஒரு சிலர் 50 சதவிகிதம் ஒரு சிலர் 10 சதவிகிதம் ஒரு சிலர் எவ்வளவோ மாற்றம் அடைந்து கொண்டே போகிறார்கள். இந்த கண்களோ மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகும். எல்லாவற்றையும் விட கண்கள் கூர்மையானவை ஆகும்.

ஆத்மாவாகிய நீங்கள் அசரீரியாக வந்திருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். சரீரம் இருக்கவில்லை. அடுத்தது எந்த ஒரு சரீரம் எடுப்போம். எந்த சம்மந்தத்தில் வருவோம் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியுமா என்ன? தெரிய வருவதில்லை. கர்ப்பத்தில் செயலற்றதாக இருக்கும். ஆத்மா முற்றிலுமே சலனமற்றதாக ஆகி விடுகிறது. சரீரம் பெரியதாக ஆகி விடும் பொழுது தான் தெரிய வருகிறது. எனவே நீங்கள் இது போல ஆகிச் செல்ல வேண்டும். அவ்வளவே, இந்த பழைய சரீரத்தை விடுத்து நாம் செல்ல வேண்டும். பிறகு நாம் சரீரம் எடுக்கும் பொழுது சொர்க்கத்தில் நமது பாகத்தை ஏற்று நடிப்போம். செயலற்று ஆகி விடுவதற்கான நேரம் இதுவே ஆகும். ஆத்மா சம்ஸ்காரத்தை எடுத்து செல்கிறது தான். சரீரம் பெரியதாக ஆகும் பொழுது சம்ஸ்காரம் வெளிப்படுகிறது. இப்பொழுது நீங்கள் வீடு செல்ல வேண்டும். எனவே பழைய உலகத்தின், இந்த சரீரத்தின் உணர்வை நீக்கி விட வேண்டும். எதுவும் நினைவிருக்க கூடாது. மிகுந்த கட்டுப்பாடு (பத்தியம்) கொள்ள வேண்டும். உள்ளுக்குள் என்ன இருக்குமோ அதுவே வெளியில் வெளிப்படும். சிவபாபாவிற் குள்ளும் ஞானம் இருக்கிறது. "எனக்கும் பாகம் உள்ளது" என்னைத் தான் ஞானக்கடல்.... .. என்று கூறுகிறார்கள். மகிமை பாடுகிறார்கள். பொருள் எதுவும் தெரியாது. இப்பொழுது நீங்கள் பொருளுடன் அறிந்துள்ளீர்கள். மற்றபடி ஆத்மாவின் புத்தி இது போல (வர்த் நாட் ஏ பென்னி) ஒரு காசுக்கும் உதவாததாக ஆகி விடுகிறது. இப்பொழுது தந்தை எவ்வளவு புத்திவானாக ஆக்குகிறார். மனிதர்களிடமோ கோடி, லட்சம் உள்ளது. இது மாயையின் பகட்டு ஆகும் அல்லவா? விஞ்ஞானத்தில் நமக்கு உதவக் கூடிய பொருட்கள் எதெல்லாம் உள்ளதோ அவை எல்லாமே அங்கும் இருக்கும். அவற்றைத் தயாரிப்பவர்கள் அங்கும் செல்வார்கள். ராஜவாகவோ ஆக மாட்டார்கள். இவர்கள் கடைசியில் உங்களிடம் வருவார்கள். பின் மற்றவர் களுக்கும் கற்பிப்பார்கள். ஒரு தந்தையிடம் நீங்கள் எவ்வளவு கற்கிறீர்கள். ஒரு தந்தை தான் எப்படி இருந்த உலகத்தை எப்படியாக ஆக்கி விடுகிறார். கண்டுப்பிடிப்புக்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும். பின் பரப்புகிறார்கள். குண்டுகள் தயாரிப்பவரும் முதலில் ஒருவராகத் தான் இருந்தார். இதன் மூலம் உலகம் அழிந்து போய் விடும் என்று நினைத்தார். பிறகு மேலும் தயாரித்துக் கொண்டே சென்றார்கள். அங்கும் கூட (சையன்ஸ்) விஞ்ஞானமோ வேண்டும் அல்லவா? நேரம் இன்னும் உள்ளது. கற்றுக் கொண்டு புத்திசாலி ஆகி விடுவார்கள். தந்தையின் அறிமுகம் கிடைத்து விட்டது. பின் சொர்க்கத்தில் வந்து வேலைக்காரர்களாக ஊழியர்களாக ஆவார்கள்.அங்கு எல்லாமே சுகத்தின் விஷயங்கள் இருக்கும். சுக தாமத்தில் என்ன இருந்ததோ அது மீண்டும் இருக்கும். அங்கு எந்த ஒரு வியாதி, துக்கத்தின் விஷயம் கிடையாது. இங்கோ அளவற்ற துக்கம் உள்ளது. அங்கு அளவற்ற சுகம் இருக்கும். இப்பொழுது நாம் இதை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். "துக்க ஹர்த்தா சுக கர்த்தா" - துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஒரு தந்தையே ஆவார். முதலிலோ சுயம் தங்களுடைய நிலையும் அவ்வாறு இருக்க வேண்டும். பண்டித தன்மை மட்டும் இருக்கக் கூடாது. இது போல ஒரு பண்டிதரின் கதை உள்ளது - "ராம நாமத்தை கூறினால் கடந்து சென்று விடலாம்" என்றாராம். இது இந்த சமயத்தின் விஷயம் ஆகும். நீங்கள் தந்தையின் நினைவினால் விகாரக் கடலிலிருந்து பாற்கடலுக்குச் சென்று விடுகிறீர்கள். இங்கு குழந்தைகளாகிய உங்களுடைய நிலை மிகவும் நல்லதாக இருக்க வேண்டும். யோக பலம் இல்லை. குற்றப் பார்வை உள்ளது என்றால், அவர்கள் கூறுவது அம்பு போல தைக்க முடியாது. தூய்மையான பார்வையுடைய கண்கள் வேண்டும். தந்தையின் நினைவில் இருந்து யாருக்காவது ஞானம் அளித்தீர்கள் என்றால் அம்பு போல பதிந்து விடும். ஞானம் என்ற வாளில் யோகத்தின் கூர்மை வேண்டும். ஞானத்தினால் செல்வத்தின் சம்பாத்தியம் ஆகிறது. நினைவினுடைய பலம் உள்ளது. நிறைய குழந்தைகளோ முற்றிலும் நினைவு செய்வதே இல்லை. அறியாமலே உள்ளார்கள். இது துக்கதாமம் ஆகும். சத்யுகம் என்பது சுக தாமம் ஆகும் என்பதை மனிதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று தந்தை கூறுகிறார். கலியுகத்தில் சுகத்தின் பெயரே கிடையாது. அப்படியே உள்ளது என்றாலும் காக்கை எச்சத்திற்குச் சமமானது அவ்வளவே! சத்யுகத்திலோ அளவற்ற சுகம் இருக்கும். மனிதர்கள் பொருளைப் புரிந்து கொள்வது இல்லை. முக்திக்காகத் தான் மூளையைக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள். ஜீவன் முக்தி பற்றியோ யாருக்கும் தெரியவே தெரியாது. பின் ஞானமும் எப்படி கொடுக்க முடியும். அவர்கள் வருவதே ரஜோ பிரதான காலத்தில். அவர்கள் பிறகு இராஜயோகத்தை எப்படி கற்பிப்பார்கள்? இங்கோ சுகம் காக்கை எச்சத்திற்குச் சமானமாக உள்ளது. இராஜயோகத்தினால் என்ன ஆகிறது - இது கூட தெரியாது. இதுவும் எல்லாமே நாடகமாக, நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பத்திரிக்கைகளில் கூட உங்களை நிந்தித்து எழுதுகிறார்கள். இதுவும் நடக்க வேண்டியே உள்ளது. அபலைகள் மீது வித விதமான துன்பங்கள் வருகின்றது. உலகத்தில் அநேகவிதமான துக்கங்கள் உள்ளன. இப்பொழுது ஏதாவது சுகம் உள்ளதா என்ன? எவ்வளவு தான் பெரிய செல்வந்தராக இருந்தாலும் சரி. நோய் வாய்ப்பட்டார், குருடர் ஆனார் என்றால் துக்கம் அதிகமாகிறது அல்லவா? துக்கங்களின் பட்டியலை எழுதுங்கள்.இராவண இராஜ்யம் கலியுகக் கடைசியில், இந்த எல்லா விஷயங்கள் உள்ளன. சத்யுகத்தில் துக்கத்தின் ஒரு விஷயம் கூட இருக்காது. சத்யுகமோ கடந்து சென்றுள்ளது அல்லவா? இப்பொழுது இருப்பது சங்கமயுகம் ஆகும். தந்தை கூட சங்கமத்தில் தான் வருகிறார். 5 ஆயிரம் வருடங்களில் நாம் என்னென்ன பிறவிகள் எடுக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி சுகத்திலிருந்து பிறகு துக்கத்தில் வருகிறோம். யாருக்கு முழு ஞானம் புத்தியில் உள்ளதோ, தாரணை ஆகி உள்ளதோ அவர்கள் புரிந்துக் கொள்ள முடியும். தந்தை குழந்தைகளாகிய உங்களுடைய பையை நிரப்புகிறார். செல்வத்தைக் கொடுக்க, கொடுக்க குறையாது என்ற பாடல் கூட உள்ளது. செல்வத்தை தானம் செய்யவில்லை என்றால், அவர்களிடம் இல்லவே இல்லை என்பதாகும். பின் கிடைக்கவும் கிடைக்காது. கணக்கு இருக்கிறது அல்லவா? கொடுப்பதே இல்லை என்றால் எங்கிருந்து கிடைக்கும்? எங்கிருந்து பிறகு அதிகமாகும். இவை எல்லாமே அழியாத ஞான ரத்தினங்கள் ஆகும். ஒவ்வொரு விஷயத்திலும் வரிசைக்கிரமமாகவோ இருப்பார்கள் அல்லவா? இதுவும் உங்களுடையது ஆன்மீக சேனை ஆகும். முந்தைய கல்பத்தில் அடைந்தது போல ஒரு ஆத்மா போய் உயர்ந்த பதவி அடைவார். ஒரு ஆத்மா போய் பிரஜை பதவியை அடைவார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப பாப்தாதா மற்றும் தாய் தந்தையரின் உயிருக்குயிரான இதயப்பூர்வமான அன்புடன் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக ஒவ்வொரு அடியிலும் இவ்வாறு சோதித்துக் கொள்ள வேண்டும். (அ) இன்றைக்கு ஆத்மாவாகிய என்னுடைய உள்ளுணர்வு எப்படி இருந்தது? (ஆ) கண்கள் (சிவில்) தூய்மையாக இருந்தனவா? (இ) தேக அபிமானத்திற்கு வசப்பட்டு என்ன பாவம் செய்தேன்?

2. புத்தியில் அழியாத ஞானச் செல்வத்தை தாரணை செய்த பிறகு தானம் செய்ய வேண்டும். ஞானம் என்ற வாளில் நினைவு என்ற கூர்மையைத் தீட்ட வேண்டும்.

வரதானம்:
சத்யத்தாவின் அத்தாரிட்டியை தாரணை செய்து அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய பயமற்றவர் மற்றும் வெற்றியாளர் ஆகுக

குழந்தைகளாகிய நீங்கள் சத்தியத்தின் சக்திசாலி, சிரேஷ்ட ஆத்மாக்கள். சத்தியமான ஞானம், சத்தியமான பாபா, சத்தியமான பிராப்தி, சத்தியமான நினைவு, சத்தியமான குணம், சத்தியமான சக்திகள் அனைத்தையும் பெறக் கூடியவர்கள். சத்தியத்தின அத்தாரிட்டி தான் ஒவ்வொரு ஆத்மாவையும் கவர்ந்து இழுக்கக் கூடியது என்ற இந்த மிகப்பெரிய அத்தாரிட்டியின் போதை இருக்க வேண்டும். பொய்யான கண்டத்திலும் சத்தியத்தாவின் சக்தியில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். மகிழ்ச்சி மற்றும் பயமற்ற தன்மை தான் சத்தியத்தாவின் பிராப்தி ஆகும். சத்தியம் பேசக்கூடியவர்கள் பயமற்று இருப்பார்கள். அவர்களுக்கு பயம் என்பது ஒரு போதும் இருக்காது.

சுலோகன்:
நேர்மறையான எண்ணங்கள் மற்றும் சக்திசாலியான உள்ளுணர்வு தான் வாயுமண்டலத்தை மாற்றக்கூடிய சாதனமாகும்.