11-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களைப்
பற்றிச் சிந்திக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி அல்ல.
ஏனென்றால் டிராமாவின் அனுசாரம் யார் என்ன செய்கிறார்களோ,
அதற்கேற்ப பலனை அடைவார்கள்.
கேள்வி:
திரிகாலதரிசி ஆவதால் ஆத்மாவுக்கு
எந்த நினைவு வந்துள்ளது?
பதில்:
ஆத்மாவுக்கு நினைவு வந்துள்ளது:
- நாம் அசலில் மூலவதன நிவாசி. இந்த டிராமாவில் நமது பார்ட்டை
நடிப்பதற்காக வந்துள்ளோம். நாம் முக்கிய நடிகர் ஆகி 84 பிறவி
களின் பார்ட்டை நடித்தோம். இப்போது பாபாவின் முன்பாக உள்ளோம்.
பிறகு அவரோடு கூடவே வீட்டுக்குச் செல்வோம். பாவனமாகி
வீட்டுக்குச் செல்ல வேண்டும். பிறகு சுகதாமத்தில் வர வேண்டும்.
இந்த விளையாட்டு முழுவதும் பாரதத்தில் தான்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு முழுவதும் திரிகாலதரிசி
ஆவதன் மூலம் வந்து விட்டது.
பாடல்:
இருந்தாலும் இறந்தாலும் உன்
மடியில்.........
ஓம் சாந்தி.
இந்தப் பாடலை யார் பாடினார்கள்? குழந்தைகள். குழந்தைகள் என்ன
சொல்கின்றனர்? பாபா, இப்போதே உங்கள் கழுத்துக்கு மாலை ஆக
வேண்டும். இந்த சரீரத்தை இங்கேயே விட்டுவிட வேண்டும்
என்கிறார்கள். குழந்தைகள் அறிவார்கள், சாந்தி தாமம் அதாவது
நிர்வாண்தாமத்தில் தந்தை மற்றும் குழந்தைகள், ஆத்மாக்களாகிய
நாம் இருக் கிறோம். இப்போது பாபா அடிக்கடி சொல்கிறார்-தன்னை
ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். நீங்கள் அறிவீர்கள், நாம்
ஆத்மாக்கள் பாபாவுடன் கூடவே நிர்வாண்தாமத்தில் வசித்திருந்தோம்.
பிறகு இந்த சரீரத்தை தாரணை செய்து 84 பிறவிகளின் சக்கரத்தைச்
சுற்றி வந்துள்ளோம். குழந்தைகள் அறிவார்கள், நாம் நிச்சயமாக
பரந்தாம நிவாசிகள். இப்போது மீண்டும் பாபா வந்துள்ளார். நீங்கள்
அமர்ந்திருக்கிறீர்கள், பாபா உங்களுக்கு முன் அமர்ந்திருப்பதைப்
பார்க் கிறீர்கள். இங்கே இருப்பது லௌகிக் சரீர சம்மந்தங்கள்.
நாம் அசலில் ஆத்மாக்களாக இருந் தோம். பிறகு லௌகிக்
சம்மந்தத்தில் சுகம் மற்றும் துக்கத்தின் வாழ்க்கையைக்
கழித்தோம். இப்போது நீங்கள் ஆத்மாக்கள் திரிகாலதரிசி
ஆகியிருக்கிறீர்கள். பாபாவும் கூட மூன்று காலங்கள் மற்றும்
மூன்று உலகங்களை அறிந்தவர். நீங்களும் கூட நம்பர்வார்
புருஷார்த் தத்தின் அனுசாரம் அறிவீர்கள். படிப்பின் நினைவோ
இருக்க வேண்டும் இல்லையா? இப்போது நினைவு வந்து விட்டது. பாபா
புரிய வைத்துள்ளார் - நாமும் மூல வதனத்தில் வசிப்பவர்கள். நாம்
இப்போது திரிகாலதரிசி ஆகியிருக்கிறோம். நீங்கள் அறிவீர்கள்,
நாம் இந்த டிராமா வின் முக்கிய நடிகர்கள். முழு டிராமாவின்
ஞானம் இப்போது உங்கள் புத்தியில் உள்ளது. அரைக்கல்பமாக நாம்
சுகதாமத்தில் இருக்கிறோம் என்பது நினைவு வந்து விட்டது. அங்கே
இராவணன் இருப்பதில்லை. நாம் ஆத்மாக்கள் முழு 84 பிறவிகளின்
சக்கரத்தைச் சுற்று கிறோம். இப்போது பாபா நம் முன்பாக
அமர்ந்துள்ளார். உங்கள் ஸ்ரீமத் படி நடந்து நாங்கள் உங்களோடு
கூடவே வருவோம். எவ்வளவு முடியுமோ, உங்களை நினைவு செய்வோம்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது திரிகாலதரிசி ஆகியிருப்பதால்
உங்களுக்கு நாள் முழுவதும் இதே சிந்தனை இருந்து கொண்டிருக்க
வேண்டும். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான். அவருடன் கூடவே
குழந்தைகள் நீங்களும் உயர்ந்ததிலும் உயர்ந்த இருப்பிடத்தில்
இருப்பவர்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு வீட்டின்
நினைவு வந்து விட்டது. நாம் தூய்மையாகி, நமது பரந்தாமமாகிய
வீட்டுக்குச் செல்வோம். தந்தை சிவனுடைய பூஜை நடைபெறுகிறது
என்றால் சாலிகிராம்களுக்கும் பூஜை நடைபெறுகின்றது. பாபா தான்
வந்து ஆத்மாக்களைப் தூய்மையாக்குகிறார். ஆத்மாக்களைப்
தூய்மையாக்குபவர் ஒரு தந்தை மட்டுமே! வேறு யாராலும் ஆக்க
முடியாது. இப்போது நீங்கள் முழு டிராமாவின் விளையாட்டை அறிந்து
கொண்டு விட்டீர்கள். பாரதத்தில் தான் இந்த விளையாட்டு
உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்திருக்கிறீர்கள். ஆக,
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா முன்பாக அமர்ந்து புரிய
வைக்கிறார். ஒவ்வொரு ஜீவாத்மாவும் அறிந்துள்ளது, பாபா
ஞானக்கடலாக உள்ளார். அவரை பக்தி மார்க்கத்தில் அழைத்தே
வந்துள்ளனர், உறுதிமொழி அளித்தே வந்துள்ளனர். பாபா, நீங்கள்
வருவீர்களானால் நிச்சயமாக நாங்கள் உங்கள் அறிவுரைப்படி நடப்போம்.
இது ஒன்றும் லௌகிக் சம்மந்தத்தின் விஷயமல்ல. நீங்கள் ஆத்ம
அபிமானி ஆகி, நாம் ஓர் எல்லையற்ற தந்தையின் ஸ்ரீமத் படி நடக்க
வேண்டும். அவர் சொல்வதையே ஏற்று நடக்க வேண்டும் என்ற இந்தச்
சிந்தனை செய்ய வேண்டும். அவரோ மிக சுலபமாகப் புரியும்படி
சொல்கிறார். இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண்
திறந்து கொண்டுள்ளது. இந்த ஞானம் உங்களுக்கு இங்கே சங்கமத்தில்
உள்ளது. மூலவதனத்தில் தந்தை மற்றும் குழந்தைகள் உள்ளனர். அங்கே
இது யாருக்கும் தெரியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு
பாபா தமது முடிவைத் (நோக்கத்தை) தருகிறார். அவரே ஞானக் கடல்.
வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இது போல் சொல்ல மாட்டார்கள் -
பாபா, ஆத்மாக் களாகிய எங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார்
என்று. இதை நீங்கள் அறிவீர்கள். அடிக்கடி உங்களுக்குச் சொல்ல
வேண்டியுள்ளது - ஆத்ம அபிமானி ஆகுங் கள் என்று. ஆத்மா இந்த
டிராமாவில் நடிகராகத் தனது பாகத்தை நடிக்கின்றது. நாம் ஆத்மா
சரீரமாகிய ஆடையை எடுத்துக் கொண்டுள்ளோம். அந்த நடிகர்கள் ஆடைகளை
மாற்று கின்றனர்.
ஆத்மாக்கள் நீங்கள் நிராகாரி உலகத்தில் இருந்து இங்கே வந்து
இந்த சரீரம் என்ற ஆடையை எடுத்துக் கொள்கிறீர்கள்.
ஆத்மாக்களாகிய நமக்கு பாபா மீண்டும் வந்து இராஜ யோகம்
கற்பித்துக் கொண்டிருக்கிறார். இப்போது குழந்தைகள் நீங்கள்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள் - பாபா வந்துள்ளார் என்றால் நாம்
பாபாவுக்கு உதவியாளர் ஆவோம். தூய்மையாகி, பாரதம் முழு வதையும்
தூய்மையாக்குவோம். நாம் ஸ்ரீமத் படி தான் நடக்க வேண்டும்.
ஸ்ரீமத் சொல்கிறது - தந்தையை நினைவு செய்ய வேண்டும். யார்
செய்வார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள். அனைவருமோ வந்து
புருஷார்த்தம் செய்ய மாட்டார்கள். யார் கல்பத்திற்கு முன்
புருஷார்த்தம் செய்திருக்கின்றனரோ, அவர்கள் தான் செய்வார்கள்.
இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் புருஷார்த்தம்
செய்து அவசியம் தூய்மை ஆக வேண்டும். நாம் மேலே மூல வதனத்தில்
வசிப்பவர்கள். முதல்-முதலில் சொர்க்கத்தில் வந்திருந்தோம்.
பிறகு ஏணிப்படியில் கீழே இறங்கியே வந்துள்ளோம். பாபா புரிய
வைப்பதும் பாரதவாசிகளுக்குத் தான். பாரதத்தில் தான் வருகிறார்.
வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று அவரை நினைவு செய்வதும்
பாரதத்தில் தான். சரீரத்தை தாரணை செய்து எங்களுக்கு சிரேஷ்ட
கர்மம் கற்றுக் கொடுங்கள். சரீரத்தின் பெயரும் பாடப்பட்டுள்ளது.
இது பாக்கியசாலி ரதம். பாபாவும் சொல்கிறார், நான் சாதாரண உடலில்
பிரவேசமாகிறேன். இதற்கு முன்பும் கூடச் சொல்லியிருந்தேன் -
குழந்தைகள் உங்களுக்கு நினைவு வந்து விட்டது-நிச்சயமாக 5000
ஆண்டு களுக்கு முன்பும் கூட பாபா இதையே சொல்லியிருக்கிறார்.
வேறு யாரும் இந்த விஷயத்தைச் சொல்ல முடியாது. பாபா தான்
சொல்கிறார், 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நான் இந்த
சரீத்தில் பிரவேசமாகி உங்களுக்குப் புரிய வைத்திருந்தேன்.
இப்போது மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறேன் -
ஆத்ம அபிமானி ஆகுங்கள். எப்படி நாடக நடிகர்களுக்குத்
தெரிந்துள்ளது இல்லையா- நாம் எந்த ஆடையை அணிந்து கொண்டு
என்னென்ன பாத்திரங் களை நடிக்கிறோம்? என்று. ஆனால் அவர்களோ தேக
அபிமானிகள். இது எல்லையற்ற விஷயம். ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.
நாம் உண்மையில் ஆத்மாக்கள் தான். இப்போது நமது பார்ட்
முடிவடைகின்றது. பாபா நம் முன் அமர்ந்து அனைத்தையும் நமக்குப்
புரிய வைக்கிறார். இதை மறந்துவிடக் கூடாது. மாயா எவ்வளவு
விக்னங்களை ஏற்படுத்துகிறது! பாபா புரிய வைக்கிறார்-குழந்தைகளே,
நீங்கள் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது. மனதில் புயல்கள்
அதிகம் வரலாம். தன்னைத் தான் சோதிக்க வேண்டும். நம்முடைய
கர்மேந்திரி யங்கள் சஞ்சலமடையாமல் உள்ளனவா? நாம் காமத்தை வெல்ல
முடியுமா? உங்களுக்கோ மிகவும் சுலபம். நாம் ஆத்மா, ஒரு
தந்தையின் குழந்தைகள். தந்தையிடம் தான் நினைவின் தொடர்பு வைக்க
வேண்டும். கர்மேந்திரியங்களில் சஞ்சலம் அடைவதும் கூட தேக
அபிமானம் ஆகிறது இல்லையா? நீங்கள் யாரிடமும் பயப்படக் கூடாது.
பயமற்ற வராக ஆக வேண்டும். எப்போதும் எங்கே சென்றாலும்
சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். நாமோ ஆத்மாக்கள். இந்த
விளையாட்டை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டு விட்டீர்கள்.
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் தந்தை. இது புத்தியில் வந்துள்ளது.
அவர் பிந்தி (புள்ளி வடிவமான வர்) எனச் சொல்லப்படுகின்றார்.
நிராகாரி உலகத்தில் ஆத்மாக்களின் மரம் உள்ளது. விதை யிலிருந்து
மரம் வெளிவருகின்றது. பிறகு வரிசையாக இலைகள் வருகின்றன.
மேலிருந்து ஆத்மாக்கள் தரவரிசைப்படி வருகின்றன. ஆத்மா எப்படிப்
பிரவேசமாகின்றது என்பதை யாராலும் பார்க்க முடியாது. இப்போது
பாபா புரிய வைக்கிறார், உங்களுடைய ஆத்மா தூய்மை யற்றதாக ஆகி
விட்டுள்ளது. அதை தூய்மையாக்குங்கள். இவர் மூலமாக பாபா வந்து
புரிய வைக்கிறார். கர்மேந்திரியங்கள் மூலமாகத் தான் பேசுவார்
இல்லையா? ஆத்மாவாகிய பிந்தி இவருக்குள் இல்லை என்றால்
கர்மேந்திரியங்களால் எதையும் செய்ய இயலாது. இவ்வளவு சிறிய
புள்ளி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது! அதற்குள் முழு ஞானமும்
உள்ளது. பாபா ஞானக் கடலாக இருப்பதால் அமர்ந்து உங்களுக்கு
புரிய வைக்கிறார். அவரிடம் ஞானம் முழுவதும் உள்ளது. அவருடைய
இந்த நடிப்பின் பாகமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆத்மாவாகிய
உங்களுக் குள்ளும் 84 பிறவிகளின் பாகம் உள்ளது. நீங்கள்
சுகம்-துக்கத்தின் பாகத்தை நடிக்கிறீர்கள். துக்கத்தில்
அதிகமான கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள். பாபா சொல்கிறார் - நானோ
புனர் ஜென்மத்தில் வருவதில்லை. நீங்கள் 84 ஜென்மங்களை
எடுக்கிறீர்கள். நான் எடுப்பதில்லை. நான் வந்து குழந்தைகளாகிய
உங்களுக்கு சகஜ யுக்தி சொல்கிறேன்-என்னை நினைவு செய்வீர்களானால்
தூய்மையாவீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் காமசிதையில் அமர்ந்து
தமோபிரதான் ஆகியிருக்கிறீர்கள். ஆத்மாக்களோடு தான் பாபா
பேசுகிறார். ஆத்மாவின் உறுப்புகள் முதலில் சிறியதாக இருக்கும்.
பிறகு பெரியதாக ஆகின்றன. ஆத்மாவோ பெரியது- சிறியதாக ஆவதில்லை.
ஆத்மா தான் சொல்கிறது-ஹே பதீத பாவனா வாருங்கள் என்று. ஆத்மா
தந்தையை அழைக்கின்றது. தந்தை சொல்கிறார் - நான் கல்ப-கல்பமாக
வருகிறேன், தூய்மையற்றவர்களாகிய உங்களைப் தூய்மையாக்குவதற்காக.
இப்போது நீங்கள் அறிவீர்கள், ஆத்மா எப்படி வருகிறது-போகிறது
என்று. மனிதர்கள் அதிகம் தலையை உடைத்துக் கொள் கிறார்கள். ஆத்மா
எப்படி வெளியேறுகிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். ஆனால்
அது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் அது மிகவும்
சூட்சுமமானது. சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு பாகம் அடங்கியுள்ளது!
எப்படி விதைக்குள் முழு ஞானம் உள்ளது, அந்த விதையோ ஜடமாகும்.
ஆலமரத்தின் மரம் உள்ளது, இதனுடைய விதை எவ்வளவு சிறியது!
அதிலிருந்து மரம் எவ்வளவு பெரியதாக, வெளிப்படுகின்றது!
கல்கத்தாவில் உள்ள ஆலமரத்தை அநேகர் பார்த்திருக்கக் கூடும். அது
மிகப் பெரிய மரம். இப்போது அதனுடைய அஸ்திவாரம் முழுவதும்
இற்றுப்போய் விட்டது. மற்றப்படி மரம் நின்று கொண்டுள்ளது.
இதுவும் அது போல் தான். தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் இல்லை.
மரத்திற்கும் இப்போது இற்றுப் போன நிலை. இதையும் நீங்கள்
அறிவீர்கள், அதனால் தான் அரசாங்கத்திற்கும் சொல்கிறீர்கள்,
நாங்கள் இவ்வளவு காலத்திற்குள் உலகத்தைப் தூய்மையாக்கிக்
காட்டுவோம். மனிதர்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை.
உங்களுக்கோ நிச்சயம் உள்ளது, நாம் இந்த பாரதத்தை உயர்ந்ததாக
அவசியம் ஆக்குவோம். அப்போது தான் மிகவும் தாழ்ந்துள்ள இந்த
உலகம் விநாசம் ஆகும். சாந்தி வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆத்மா தனது பாகத்தை நடித்து- நடித்துக் களைத்துப் போய் விட்டது.
அதனால் அழைக்கின்றனர்-ஹே சாந்தி தேவா! ஆத்மா சாந்த சொரூபம்
என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கே ஆத்மாக்கள்
கர்மேந்திரியங்களின் மூலம் கர்மமோ அவசியம் செய்தாக வேண்டும்.
சாந்தி கொடு என வேண்டுகின்றனர். சாந்தி தாமம் வேறு, சுகதாமம்
வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. சுகதாமத்தில் மிகக்
கொஞ்சம் மனிதர் கள் இருப்பார்கள். அது தூய்மையான உலகம் தான்.
அங்கே சாந்தியை யாரும் வேண்ட மாட்டார்கள். கர்மமோ அங்கேயும்
செய் கின்றனர். ஆனால் அங்கே அசாந்தி இருக்காது. ஜீவன்முக்தி
தாமம் மற்றும் சாந்திதாமம் இரண்டும் வேறு-வேறு. சத்யுகத்தில்
ஜீவாத்மாக்களுக்கு சுகமும் இருக்கும் என்றால் சாந்தியும்
இருக்கும். சதா ஆரோக்கிய மானவர்களாக, செல்வந்தர்களாக
இருப்பார்கள்.
சொர்க்கம் எனச் சொல்லப்படுவது எது என்பதை இப்போது நீங்கள்
அறிந்து கொண்டீர் கள். சொர்க்கம் எது என்பதும் கூட உலகத்தில்
யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் (லட்சுமி- நாராயணர்)
குழந்தைகள் இல்லையா? இந்தக் குழந்தைகளுக்கும் கூட யார் சுகம்
கொடுத்தார்? யாராவது சுகம் தருபவர் இருப்பார் இல்லையா?
இவர்களுடைய இராஜ்யம் மீண்டும் வரப்போகிறதா என்ன? சொர்க்கம்
நிச்சயமாக மீண்டும் ரிப்பீட் ஆகும். சொர்க்கத்தில் இருக்கும்
போது நரகம் மறுபடியும் ரிப்பீட் ஆகும் என்று சொல்ல மாட்டார்கள்.
இப்போது சொல்கிறீர்கள், தூய்மையான, சுகம், சாந்தியின் புது
உலகம் மீண்டும் ரிப்பீட் ஆகும் என்று. இதுவோ பழைய உலகம், துக்க
தாமம். இது இரும்பு யுகம் என்று சொல்லப் படுகின்றது. புது
உலகமும் கூட இருந்தது அல்லவா? அதை சொர்க்கம் எனச் சொல்கின்றனர்.
இந்த ஞானம் உங்கள் புத்தியில் பதிந்துள்ளது. நிச்சயமாக நாம்
மீண்டும் தேவி-தேவதா ஆகிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய
நோக்கம்-குறிக்கோளே இது தான். நாம் மீண்டும் சொர்க்கத்தின்
ராஜபதவியைப் பெறுகிறோம். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியை
அவசியம் பெறுவோம். இதை நல்லபடியாக நினைவு செய்ய வேண்டும். நாம்
ஆத்மாக்கள் அங்கே வசிக்கிறோம். பிறகு நாம் நமது பாகத்தை
நடிப்பதற்காக இங்கே வந்துள்ளோம். இப்போது 84 பிறவிகளை எப்படி
எடுத்தோம் என்ற நினைவு வந்துள்ளது. பாபா புரிய வைப்பதும்
பிரம்மா முக வம்சாவளி பிராமணர்களாகிய உங்களுக்குத் தான்.
பிராமணர் ஆகாமல், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தை யாக ஆகாமல்
சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி எப்படிப் பெறுவார்கள்? பிரஜாபிதா
பிரம்மாவோ புகழ் பெற்றவர் இல்லையா? பிரம்மாவின் மூலம் புது
உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். ஆக, புது உலக ராஜதானியும் கூட
அவர்களுக்குக் கிடைத்திருக்கும். 5000 ஆண்டுகளுக்கு முன்பும்
கூட பிரம்மா மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்திருந்தார்.
இப்போது மீண்டும் ரிப்பீட் ஆகும். அதற்காக நீங்கள் ஏற்பாடுகள்
செய்து கொண்டிருக்கிறீர்கள். அநேகக் குழந்தை கள் கேட்கின்றனர்
- டிராமாவை பெரியதென ஏற்றுக் கொள்வதா, அல்லது புருஷார்த்தத்தைப்
பெரியதென ஏற்றுக் கொள்வதா? புரிய வைக்கப்படுகின்றது -
புருஷார்த்தமோ அவசியம் செய்தே ஆக வேண்டும். புருஷார்த்தம்
இல்லாமல் பலன் (ஆஸ்தி) எப்படிக் கிடைக்கும்? முழுமையாகப்
புருஷார்த்தம் செய்ய வேண்டும். சிலர் நன்றாகப் புருஷார்த்தம்
செய்கின்றனர் என்றால் புரிய வைக்கப்படுகின்றது - டிராமா
அனுசாரம் இவருடைய புருஷார்த்தம் நன்றாக நடைபெறு கின்றது.
பதவியும் நல்லதாகப் பெறுவார்கள். அவர்களுடைய புருஷார்த்தம்
மிகத் தீவிரமாகச் செல்கின்றது. பிறகு போகப் போக சிலருடையது
குறைந்த பதவி ஆகி விடுகின்றது. பிராமணிகள் அறிவார்கள்,
பிராமணிகளிடம் வருபவர்களும் அறிவார்கள். இன்னார் மிக நன்றாகச்
சென்று கொண்டிருந்தார். தற்சமயம் வருவதில்லை. சொல்கின்றனர், ஏன்
எனது புத்தியில் பதிவதில்லை என்பது புரியவில்லை . பாபாவை
என்னால் நினைவு செய்யவே முடிவதில்லை. அவ்வளவு தான் என்னால்
தொடர முடியவில்லை. பெரிய குறிக்கோளாக உள்ளது. இப்படி-இப்படி
எழுதி விடுகின்றனர். முக்கியமான விஷயமே நிர்விகாரி ஆவது தான்.
விகாரங்களை விடுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. நீங்கள் அறிவீர்கள்,
டிராமா அனுசாரம் கல்பத்திற்கு முன்பு போல் இவர்களுக்கு இத்தகைய
நிலமைதான் இருந்து வந்துள்ளது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நாம் எல்லையற்ற விளையாட்டை சாட்சியாக இருந்து பார்க்க
வேண்டும். யாரிடமும் பயப்படக் கூடாது. பயமற்றவராக ஆவதற்கு நான்
ஆத்மா என்ற பாடத்தை உறுதியாக்க ஆக்க வேண்டும்.
2) தன்னைத் தான் சோதித்து தன்னைப் பரீட்சைக்கு உட்படுத்த
வேண்டும்-எந்த ஒரு கர்மேந்திரியமாவது சஞ்சலம் அடையாதிருக்கிறதா?
காம விகாரத்தின் மீது வெற்றி பெற்றோமா? ஆத்ம அபிமானியாக எது வரை
ஆகியிருக்கிறோம்?
வரதானம்:
ஒரே ஒரு பாபாவின் நினைவின் மூலம் சத்திய சுமங்கலியின்
அனுபவத்தைச் செய்யக்கூடிய பாக்கியவான் ஆத்மா ஆகுக.
எந்தவொரு ஆத்மாவின் வார்த்தைகளை, கேட்டும் கேளாதவராக இருந்து,
வேறு எந்தவொரு ஆத்மாவின் நினைவையும் சங்கல்பத்திலோ அல்லது
கனவிலோ கூட கொண்டு வராமல், அதாவது எந்தவொரு தேகதாரியின்
ஈர்ப்பிலும் சிக்காமல், ஒரே ஒரு பாபா இரண்டாவது வேறு யாரும்
இல்லை என்ற நினைவில் வாழ்பவர்களுக்கு அழியாத சுமங்கலி என்ற
திலகம் இடப்பட்டுவிடுகிறது. இத்தகைய உண்மையான சுமங்கலிகளே
பாக்கியவான் ஆவர்.
சுலோகன்:
உங்களுடைய சிரேஷ்டமான ஸ்திதியை உருவாக்க வேண்டும் என்றால்,
அந்தர்முகி (உள்நோக்கிய முகம்) ஆகி, பின்னர்
வெளிநோக்குதன்மையில் வாருங்கள்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதன் பெயர், உருவம்,
குணம் அனைத்தும் மாறிவிடுகிறது, அதுபோல, தந்தையின் நினைவின்
மீதான லட்சியத்தின் (லகன்) நெருப்பில் நீங்கள் விழும்போது,
நீங்கள் மாற்றமடைகிறீர்கள். மனிதரிலிருந்து பிராமணனாக
மாறுகிறீர்கள், பின்னர் பிராமணனிலிருந்து ஃபரிஷ்தா மற்றும்
தேவதையாக மாறுகிறீர்கள். லட்சியத்தின் நெருப்பினால் ஏற்படும்
இந்த மாற்றத்தில், தனது என்ற உணர்வு எதுவும் மிஞ்சுவதில்லை,
அதனால் தான் நினைவைத்தான் ஜூவாலா ரூபம் என்று கூறப்பட்டுள்ளது.