11.08.24    காலை முரளி            ஓம் சாந்தி  04.02.2001      பாப்தாதா,   மதுபன்


இன்று பாப்தாதா உலகின் எல்லாப் பக்கங்களிலும் உள்ள தம்முடைய சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளின் இராஜ்ய சபையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சுயராஜ்ய அதிகாரியும் பவித்திரதாவின் ஒளிக் கிரீடதாரி, அதிகாரத்தின் நினைவினுடைய திலகதாரி, அவரவருடைய புருவ மத்தியின் அழியாத ஆசனதாரியாகக் காணப்படுகிறார். இச்சமயம் எவ்வளவு சுயராஜ்ய அதிகாரத்தை அனுபவம் செய்கிறீர்களோ, அவ்வளவு வருங்கால உலக ராஜ்ய அதிகாரி ஆவீர்கள். நான் யார் அல்லது எனது வருங்காலம் என்ன? அதை இப்போதைய சுயராஜ்ய ஸ்திதியின் மூலம் தானே பார்க்க முடியும்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சதா கால சுயராஜ்யத்தின் ஸ்திதியைப் பார்த்துக் கொண்டி ருந்தார். நிரந்தரமாக ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டே, லௌகிக மற்றும் அலௌகிக காரியத்தைச் செய்து கொண்டே, சுயராஜ்ய அதிகாரியின் நஷா எவ்வளவு நேரம் மற்றும் எத்தனை சதவிகிதத்தில் உள்ளது? ஏனென்றால் அநேகக் குழந்தைகள் தங்கள் சுயராஜ்யத்தின் நினைவை சங்கல்ப ரூபத்தில் நினைவு செய்கின்றனர் -- நான் ஆத்மா அதிகாரி, ஒன்று சங்கல்பத்தில் யோசிப்பது, அடிக்கடி ஸ்மிருதியைப் புத்துணர்ச்சி பெறச் செய்வது -- நான் இவ்வாறு இருக்கிறேன் இரண்டாவது - அதிகாரத்தின் சொரூபத்தில் தன்னை அனுபவம் செய்வது. மற்றும் இந்தக் கர்மேந்திரியங்கள் என்னும் வேலையாட்கள், மனம், புத்தி, சம்ஸ்காரம் என்ற சகயோகிகள், துணைவர்கள் மீது ராஜ்யம் செய்வது, அதிகாரத்துடன் நடத்துவது. எப்படி குழந்தைகள் நீங்கள் அனைவரும் அனுபவியாக இருக்கிறீர்கள் -- ஒவ்வொரு சமயம் பாப்தாதா ஸ்ரீமத் படி நடத்திக் கொண்டிருக்கிறார் மற்றும் நீங்கள் அனைவரும் ஸ்ரீமத் படி நடந்து கொண்டி ருக்கிறீர்கள். நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கிறார். நடக்கிறவர்கள் நீங்கள் நடந்து கொண்டி ருக்கிறீர்கள். அது போல் ஹே சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்களே! உங்கள் சுயராஜ்யத்தில் உங்களுடைய கர்மேந்திரியங்கள் அனைத்தும், அதாவது வேலையாட்கள் உங்கள் மனம், புத்தி, சம்ஸ்காரம் என்ற சகயோகி துணைவர்கள் அனைவரும் உங்கள் கட்டளைப்படி நடந்து கொண்டிருக்கிறார்களா? ஓரிரு கர்மேந்திரியங்கள் கொஞ்சம் குறும்புத் தனங்களையோ காட்டவில்லை தானே? உங்கள் இராஜ்யம் சட்டம்-ஒழுங்குக்கு பதிலாக அன்பு-சட்டத்தில் யதார்த்த ரீதியாக சென்று கொண்டிருக்கிறதா? என்ன நினைக்கிறீர்கள்? சென்று கொண்டிருக் கிறார்களா? அல்லது கொஞ்சம் மறுப்பு சொல்கிறார்களா? எனது கை, என்னுடைய சம்ஸ்காரங் கள், எனது புத்தி, எனது மனம் என்று சொல்கிறீர்கள் என்றால் என்னுடையவற்றின் மீது எனது அதிகாரம் உள்ளதா? அல்லது சில நேரம் எனக்கு அதிகாரி ஆகி விடுகிறது, அல்லது சில நேரம் நான் அதிகாரி ஆகி விடுகிறேன் என்று அந்த மாதிரி ஆகிறதா? சமயத்தின் படி ஹே சுயராஜ்ய அதிகாரி! இப்போது சதா மற்றும் சகஜமாக அழியாத ஆசனதாரி ஆகுங்கள். அப்போது தான் மற்ற ஆத்மாக்களுக்கு பாபா மூலம் ஜீவன்முக்தி மற்றும் முக்திக்கான அதிகாரத்தைத் தீவிர வேகத்துடன் கொடுக்கச் செய்ய முடியும்.

சமயத்தின் அழைப்பு இப்போது தீவிர வேகத்துடனும் எல்லையற்றதாகவும் உள்ளது. சிறிய ஒத்திகையைப் பார்த்தீர்கள், கேட்டீர்கள் தான். ஒரே நேரத்தில் எல்லையற்ற வரைபடம் பார்த்தீர்கள் இல்லையா? கூக்குரலும் எல்லையற்றது, மரணங்களும் எல்லையற்றவை. மரணம் அடைபவர்களோடு கூடவே உயிருடன் இருப்பவர்களும் தங்கள் உயிர் வாழ்வதில் குழப்பத்துடன் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் சுயராஜ்ய அதிகாரி ஆத்மாக்களாகிய உங்கள் காரியம் என்ன? சோதித்துப் பாருங்கள். எப்படி ஸ்தூல சாதனங்கள் பற்றிச் சொல்கிறார்கள் -- பூகம்பம் வந்தால் இதைச் செய்ய வேண்டும், நெருப்புப் பற்றினால் இதைச் செய்ய வேண்டும் அது போல் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களிடம் என்ன சாதனங்கள் உள்ளனவோ -- சர்வசக்திகள், யோக பலம், சிநேகத்தின் காந்தம் -- இந்த சாதனங்கள் அனைத்தும் சமயத்திற்குத் தயாராக உள்ளனவா? சர்வசக்திகள் உள்ளனவா? யாருக்காவது சாந்தியின் சக்தி தேவைப்படும் போது நீங்கள் வேறு ஏதாவது சக்தியைக் கொடுத்தால் அவர் திருப்தியடைவாரா? எப்படி யாருக்காவது தண்ணீர் தேவைப்படும் போது நீங்கள் அவருக்கு 36 வகையான உணவு பரிமாறினால் அவர் திருப்தியடைவாரா? ஆகவே எவர்-ரெடி ஆவது வெறுமனே தனது அசரீரி ஆவதற்கு இல்லை. அதுவோ ஆகத் தான் வேண்டும். ஆனால் எந்த சாதனங்கள் சுயராஜ்ய அதிகாரத்தினால் கிடைத்துள்ளனவோ, அவை பரமாத்ம ஆஸ்தியாகக் கிடைத்துள்ளன. அந்த அனைத்து அதிகாரங்களும் எவர்-ரெடியாக உள்ளனவா? எப்படி செய்தி களில் கேட்கிறீர்கள் -- எந்த மெஷினரி இச்சமயம் வேண்டுமோ, அது வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு காரியத்தில் ஈடுபடுத்தப் பட்டது. ஆக, சாதனங்கள் எவர்-ரெடியாக இருக்கவில்லை இல்லையா? சர்வ சாதனங்களை சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்த முடியவில்லை. எவ்வளவு நஷ்டம் ஆகி விட்டது!

எனவே ஹே விஷ்வ கல்யாணி! உலகை மாற்றக்கூடிய ஆத்மாக்களே! சர்வ சாதனங்களும் எவர்-ரெடியாக உள்ளனவா? சர்வசக்திகள் உங்கள் கட்டளைப்படி நடக்கின்றனவா? கட்டளை இட்டீர்கள் என்றால் சங்கல்பம் செய்தீர்கள் -- நிர்ணயசக்தி. ஆக, ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் நிர்ணயசக்தி ஆஜராகி விட வேண்டும். சுயராஜ்ய அதிகாரி ஆஜர் என்று சொல்லலாம். அது போல் கட்டளைப்படி உள்ளதா? அல்லது ஒரு நிமிடம் தனக்குள் கொண்டு வருவதற்கு ஆகிறதா, அதன் பிறகு நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியுமா? என்று ஆகிறதா? சமயத்தில் யாருக்கு என்ன வேண்டுமோ, அதைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்னவாகும்? அதனால் குழந்தைகள் அனைவரின் மனதிலும் இந்த சங்கல்பமோ நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது -- இனி என்ன நடக்கும்? மற்றும் என்ன செய்ய வேண்டும்? அநேக விஷயங்கள் நடக்கப் போகின்றன. இதுவோ ஒத்திகை தான் என்பதைக் கேட்டீர்கள் இல்லையா? இப்போது 6 மாதத் தயார் நிலைக்கான சிறிய மணி ஒலித்துள்ளது. பெரிய மணி இன்னும் ஒலிக்கவில்லை. முதலில் பெரிய மணி ஒலிக்கும். அதன் பிறகு முரசு ஒலிக்கும். அப்போது பயப்படுவீர்களா? கொஞ்சம்- கொஞ்சம் பயப்படுவீர்களா? சக்தி சொரூப ஆத்மாக்களின் என்ன சொரூபம் காட்டப் பட்டுள்ளது? சக்திகளுக்கு (சக்தி சொரூபத்தில் பாண்டவர்களும் வந்து விட்டார்கள் என்றால் சக்திகளும் வந்து விட்ட்ôர்கள்) சதா சக்திகளுக்கு, சிலருக்கு 4 புஜங்கள், சிலருக்கு 6 புஜங்கள், சிலருக்கு 8 புஜங்கள், சிலருக்கு 16 புஜங்கள் சாதாரணமாகக் காட்டப் படுவ தில்லை. இந்த புஜங்கள் சர்வசக்திகளின் அடையாளங்கள். எனவே சர்வசக்திவான் மூலம் கிடைத்துள்ள தங்களின் சக்திகளை வெளிப்படுத்துங்கள். இதற்காக, சமயம் வரும் போது வெளிப்பட்டு விடும் என்று அந்த மாதிரி யோசிக்காதீர்கள். ஆனால் நாள் முழுவதும் தனக்காகப் பலவித சக்திகளைப் பயன்படுத்திப் பாருங்கள். முதல் அப்பியாசம், சுயராஜ்ய அதிகாரம் முழு நாளிலும் எது வரை காரியத்தில் ஈடுபடுகிறது? நானோ ஆத்மா, எஜமானனாகவே இருக்கிறேன் என்று அப்படி இல்லை. எஜமானன் ஆகிக் கட்டளை இடுங்கள் மற்றும் சோதித்துப் பாருங்கள் -- ஒவ்வொரு கர்மேந்திரியமும் இராஜாவாகிய எனது அன்பு மற்றும் சட்டத்தில் செய்கிறதா? மன்மனாபவ என்று கட்டளை இடும் போது மனம் எதிர்மறையை நோக்கிச் செல்கிறது மற்றும் வீண் எண்ணங்களில் செல்கிறது என்றால், இது அன்பு மற்றும் ஒழுங்காக இருந்ததா? கட்டளையிட்டு இனிமை சொரூபம் ஆக வேண்டும் மற்றும் பிரச்சினையின் அனுசாரம், பரிஸ்திதியின் அனுசாரம் கோபத்தின் மகா ரூபம் இல்லை, ஆனால் சூட்சும ரூபத்தில் கூட ஆவேசம் அல்லது சிடுசிடுத்தல் வந்து கொண்டிருக்கிறது என்றால், இது என்ன கட்டளையா? கட்டளைப்படி நடந்ததா?

நாம் பணிவுள்ளவர் ஆக வேண்டும் என்று கட்டளையிடுகிறோம் மற்றும் வாயுமண்டலத்தின் அனுசாரம் யோசியுங்கள் -- எது வரை இப்படியே பணிந்து போவது? கொஞசம் காட்டத் தான் வேண்டும். நான் மட்டும் தான் பணிந்து போக வேண்டுமா என்ன? நான் தான் சாக வேண்டுமா? நான் தான் மாற வேண்டுமா? இது என்ன லவ் அண்ட் ஆர்டரா? எனவே உலகின் மீது, கூக் குரலிடும் துக்கத்திலிருக்கும் ஆத்மாக்கள் மீது இரக்கம் கொள்வதற்கு முன்பாக தன் மீது இரக்கம் கொள்ளுங்கள். தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் போகப்போக நீங்கள் நாலாபுறமும் சகாஷ் கொடுப்பதற்கு, வைப்ரேஷன் கொடுப்பதற்கு, மனதின் மூலம் வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கான அநேக காரியங்கள் செய்ய வேண்டும். இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறோம் -- இது வரை யார்-யார் எது வரை சேவைக்கு நிமித்தமாக இருக்கிறார்களோ, நன்றாகச் செய்திருக்கிறார்கள். இனியும் செய்வார்கள். ஆனால் இப்போது சமயத்திற்கேற்றவாறு தீவிர வேகத்தில் செல்ல வேண்டும் மற்றும் எல்லையற்ற சேவையின் அவசியம் உள்ளது. எனவே இப்போது முதலில் ஒவ்வொரு நாளையும் சோதித்துப் பாருங்கள் -- சுயராஜ்ய அதிகாரம் எதுவரை இருந்தது? ஆத்மா எஜமானனாகி, கர்மேந்திரியங்களை நடத்த வேண்டும். ஸ்மிருதி சொரூபம் இருக்க வேண்டும் -- நான் எஜமானன் இந்தத் துணைவர்கள் மூலம், சகயோகிகள் மூலம் காரியம் செய்வித்துக் கொண்டிருக்கிறேன். சொரூபத்தில் நஷா இருக்குமானால் தாமாகவே இந்தக் கர்மேந்திரியங்கள் அனைத்தும் உங்கள் முன்னால் இதோ வந்தேன் பிரபு என்று வந்து நிற்கும். முயற்சி செய்ய வேண்டியதிருக்காது. இன்று வீண் சங்கல்பங்களை அழித்து விடுங்கள். இன்று சம்ஸ்காரங்களை அழித்து விடுங்கள். இன்று நிர்ணய சக்தியை வெளிப்படுத்துங்கள். ஒரே அடியில் கர்மேந்திரியங்கள் அனைத்தும் மற்றும் மனம் புத்தி சம்ஸ்காரமும், எதை நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைச் செய்யும். இப்போது சொல்கிறீர்கள் இல்லையா -- பாபா விரும்புவதோ இதைத் தான். ஆனால் இப்போது அந்த அளவு நடைபெறவில்லை பிறகு சொல்வீர்கள் -- எதை விரும்புகிறோமோ, அது சுலபமாகவே நடந்து விட்டது. என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது புரிந்து விட்டதா? தனது அதிகாரத்தின் சித்திகளைக் காரியத்தில் கொண்டு வாருங்கள். சம்ஸ்காரத்துக்குக் கட்டளை யிடுங்கள். சம்ஸ்காரம் உங்களுக்கு என்ன கட்டளை இடுகிறது? சம்ஸ்காரம் அழிவதில்லை. ஏன்? உங்கள் கட்டளைப்படி நடப்பதற்கு சம்ஸ்காரம் கட்டுப்பட்டுள்ளது. எஜமான் தன்மையைக் கொண்டு வாருங்கள். ஆக, மற்றவர்களின் சேவைக்கான மிகமிகமிக அவசியம் உள்ளது. இதுவோ ஒன்றுமே இல்லை. மிகவும் நாசூக்கான சமயம் வரப் போகிறது. அத்தகைய சமயத்தில் நீங்கள் பறக்கும் கலை மூலம் ஃபரிஸ்தா ஆகி நாலாபுறமும் சுற்றி வந்து, யாருக்கு சாந்தி வேண்டும், யாருக்குக் குஷி வேண்டும், யாருக்குத் திருப்தி வேண்டும், ஃபரிஸ்தா ரூபத்தில் சகாஷ் கொடுப்பதற்காகச் சுற்றி வருவீர்கள். மற்றும் அவர்கள் அனுபவம் செய்வார்கள். எப்படி இப்போது அனுபவம் செய்கிறார்கள் இல்லையா -- தண்ணீர் கிடைத்து விட்டது, அதிக தாகம் தணிந்து விட்டது. உணவு கிடைத்து விட்டது, கூடாரம் கிடைத்து விட்டது, ஆதரவு கிடைத்து விட்டது. அது போல் அனுபவம் செய்வார்கள் -- ஃபரிஸ்தா மூலம் சாந்தி கிடைத்து விட்டது, சக்தி கிடைத்து விட்டது, குஷி கிடைத்து விட்டது. அது போல் சூட்சும சரீர வாகனம், அதாவது கடைசி ஸ்திதி, சக்திகளின் ஸ்திதி உங்கள் கடைசி வாகனமாக ஆகும். மேலும் நாலாபுறமும் சுற்றி வந்து அனைவர்க்கும் சக்தி கொடுப்பீர்கள், சாதனங்கள் கொடுப்பீர்கள். உங்களுடைய ரூபம் முன்னால் வருகிறதா? இமர்ஜ் செய்யுங்கள். எவ்வளவு ஃபரிஸ்தாக்கள் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள், சகாஷ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சொல்வார்கள் -- நீங்கள் பாடல் பாடுகிறீர்கள் இல்லையா -- சிவசக்திகள் வந்தனர் -- சக்திகள் மூலம் தான் சர்வசக்திவான் தாமாகவே நிரூபணம் ஆவார். கேட்டீர்களா?

இது வரை என்ன செய்திருக்கிறீர்களோ, என்ன நடந்ததோ, அது சமயத்திற்கேற்றவாறு நல்லதிலும் நல்லதாகவே நடந்தது. இப்போது இனிமேலும் நல்லதிலும் நல்லதாக நடக்கும். நல்லது. நீங்கள் பயப்படவில்லையே? செய்திகள் கேட்டு, பார்த்து பயந்தீர்களா? இதுவோ ஒன்றுமே இல்லை. உங்களிடம் அனைத்துமே உள்ளன. இது ஒன்றுமே இல்லை. ஆனால் பிறகும் கூட (பூகம்பத்தால் துன்புற்றவர்கள்) உங்கள் சகோதர-சகோதரிகள். எனவே அவர் களுக்கு சேவை செய்வதும் கூட நல்லது தான். இப்போது இராஜ்ய அதிகாரம், அழியாத ஆசனத்திலேயே அமர்ந்திருங்கள். மேலே-கீழே வராதீர்கள். பிறகு பாருங்கள், அரசினர்க்கும் கூட சாட்சாத்காரம் ஆகும் -- இது தான், இதே தான், இதே தான் ஆசனத்தில் இருந்து கீழே இறங்காதீர்கள். அதிகாரத்தை விடாதீர்கள். அதிகாரத்தை ஒவ்வொரு நேரமும் நடத்துங்கள் -- சுயத்தின் மீது, மற்றவர்களின் மீது அல்ல. மற்றவர்கள் மீது நடத்தக் கூடாது. நல்லது.

புதுப்புதுக் குழந்தைகள் நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். விருத்தி ஏற்படவே செய்யும். யார் இந்தக் கல்பத்தில், இப்போது முதல் தடவையாக வந்திருக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். நன்றாகச் செய்தீர்கள். தைரியம் வைத்து வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், வந்து சேர்ந்து விட்டீர்கள் இல்லையா? யார் அமர்ந்தார்களோ, அவர்கள் அமர்ந்து விட்டார்கள் மற்றும் எதுவும் நடக்கவில்லை. தைரியம் மிகவும் அவசியம். எந்த ஒரு காரியத்திலும் தைரியம் இருக்குமானால் புரிந்து கொள்ளுங்கள் -- வெற்றி தான். தைரியம் குறைவு என்றால் வெற்றியும் குறைவு. எனவே தைரியம் மற்றும் பயமற்ற தன்மை. பயத்தில் வரக் கூடாது -- இது என்ன நடந்து கொண்டிருக்கிறது? இறந்து கொண்டிருக்கிறார், யாரோ இறந்து கொண்டிருக்கிறார். பயம் உங்களுக்கு வருகிறது. பயமற்று இருக்க வேண்டும். சரி தான் -- அவருக்கு சாந்தியின் சகயோகம் கொடுங்கள். பயத்தில் வராதீர்கள். பயம் என்பது அனைத்தையும் விடப் பெரியதிலும் பெரிய பூதம். மற்ற பூதங்கள் வெளியேறலாம். பயத்தின் பூதம் வெளியேறுவது மிகவும் கடினம். எந்த விஷயத்தின் பயமும், வெறுமனே இறப்பவர்களின் பயம் மட்டுமல்ல, அநேக விஷயங்களில் பயம் வருகிறது. அநேக விதமான பயங்கள், தனது பலவீனத்தின் காரணத்தினாலும் பயம் ஏற்படுகிறது. அவை அனைத்திலும் பயமற்றவர் ஆவதற்கான சகஜ சாதனம் - சதா தூய்மையான மனம், உண்மையான மனம். அப்போது பயம் ஒரு போதும் வராது. அவசியம் மனதில் ஏதோ ஒரு விஷயம் நிறைந்துள்ளது - அதனால் பயம் வருகிறது. தூய மனம், உண்மையான மனம் என்றால் பிரபுவும் திருப்தியடைவார், அனைவரும் கூட திருப்தியடைவார்கள்.

நல்லது -- புதிது புதிதாக வந்திருக்கும் குழந்தைகளுக்கு, புது வாழ்க்கையில் பரமாத்ம பாக்கியத்தை அடைவதற்கான வாழ்த்துகள்! நல்லது. வெளிநாட்டிலிருந்தும் அநேகர் வந்துள்ளனர். வெளிநாடுகளின் குரூப் கை உயர்த்துங்கள். (சுமார் 700 பேர் வந்துள்ளனர். வாழ்த்துகள்! நல்வரவு!

சேவைக்கான வாய்ப்பு -- மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திர பிரதேஷ் -- மகாராஷ்ட்ராக் காரர்கள் கை உயர்த்துங்கள் (4000 பேர் வந்துள்ளனர்) 4000 பேருக்கு 4 கோடி மடங்கு வாழ்த்துகள்! நன்றாகச் செய்தீர்கள். ஒவ்வொரு குரூப்புக்கும் அவரவர் சேவையின் அழகு உள்ளது. ஏனென்றால் சேவைக்கு முன்பாகவோ பரிவாரத்தின் முன்னால் அருகில் வருவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பு கிடைக்கிறது இல்லையா? இல்லையென்றால் மகாராஷ்ட்ராவா ஆந்திராவா என்று யார் கேட்பார்கள்? ஆனால் விசேஷ சேவைக்கான வாய்ப்பைப் பெறுவதால் பரிவாரத்தின், தாதிகளின், தாதாக்களின் முன்னால் வருகின்றனர். மேலும் குஷியும் ஏற்படுகிறது. ஏன் குஷி ஏற்படுகிறது? காரணம் என்ன? பாருங்கள், சென்டரில் எத்தனைப் பேருக்கு சேவை செய்கிறீர்கள்? அதிக பட்சம் 50-100 மற்றும் இங்கே சேவை செய்கிறீர்கள் என்றால் ஆயிரக் கணக்கான பேருக்கு சேவை செய்கிறீர்கள். அப்போது ஆயிரக் கணக்கான பேருக்கு சேவை செய்வதற்குப் பிரதிபலனாக அனைவரின் ஆசிர்வாதங்கள் கிடைக்கின்றன இல்லையா? மிக நல்ல சேவை செய்தீர்கள், மிக நல்ல சேவை செய்தீர்கள் என்று. இந்த ஆசிர்வாதங்கள் வெளிப்படுகின்றன. அந்த ஆசிர்வாதங்கள், ஒன்று – நிகழ்காலத் தில் குஷியைத் தருகின்றன. மற்றும் இரண்டாவது -- சேமிப்பாகவும் செய்கின்றன. இரட்டை நன்மைகள் என்பதால் யார் சேவை செய்தார்களோ, சேவைக்கான பலனாகக் குஷியும் கிடைத்தது மற்றும் சேமிப்புக் கணக்கும் ஆனது. இரட்டை நன்மைகள் ஏற்பட்டன இல்லையா? இப்போது பெரும்பாலான அனைத்து ஜோன்களும் நன்கு கற்றுக் கொள்ளவும் செய்திருக் கின்றனர், அப்பியாசமும் ஆகி விட்டுள்ளது. நன்றாகச் செய்தீர்கள், வாழ்த்துகள்! (நூறு குமாரிகள் சமர்ப்பணம்) நல்லது. நூறு குமாரிகள் எழுந்திருங்கள். அனைவரும் பாருங்கள். டி.வி. எங்கெங்கு உள்ளனவோ, அங்கெல்லாம் காட்டுங்கள். நல்லது. சமர்ப்பணமோ ஆகி விட்டீர்கள். ஆனால் சமர்ப்பணத்தின் பக்கா முத்திரை இட வேண்டும். இந்த சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்தின் முத்திரை (ஸ்டாம்ப்) அழிந்து விடாது. பக்கா இல்லையா? பக்கா? பக்காவா? மிகமிகமிக பக்கா என யார் நினைக்கிறார்களோ, அவர்கள் கையை இது போல் அசையுங்கள். மிகவும் பக்காவா? மகாராஷ்ட்ரம் -- ஏதேனும் மகான் தன்மையைக் காட்டுவீர்கள் இல்லையா? மிக நன்று. பாப்தாதாவின் தரப்பிலிருந்து மிகமிக கோடி-கோடி வாழ்த்துகள்! வாழ்த்துகள்! நல்லது.

இப்போது ஒரு விநாடியில் ஃபரிஸ்தா ஆகி விசேஷமாக எங்கே இந்த பூகம்பம் நேர்ந்ததோ, அதன் நாலாபுறமும் பரிஸ்தாவாகி பறக்கும் கலையின் மூலம் சாந்தி, சக்தி மற்றும் திருப்தியின் சகாஷைப் பரவச் செய்து வாருங்கள். ஒரு விநாடியில் சுற்றி வாருங்கள். எல்லா இடங்களிலும் சுற்றி வாருங்கள். நல்லது. (டிரில்)

நாலாபுறமும் உள்ள தேசம் மற்றும் பிற தேசங்களின் ஃபரிஸ்தா ரூபத்தில் அமர்ந்துள்ள, சுயராஜ்ய அதிகாரி குழந்தைகளுக்கு அன்பு மற்றும் விதி (லவ் அண்ட் லா) மூலம் தங்கள் சகயோகி, சூட்சும மற்றும் ஸ்தூல சகயோகி துணைவர்களை நடத்தக்கூடிய, சதா பாப்தாதா மூலம் கிடைத்துள்ள ஆன்மிக சாதனங்களை எவர்-ரெடி ஆக்கக்கூடிய, நான் ஆத்மா ராஜா ஆகி ராஜ்ய அதிகாரத்தை அனுபவம் செய்யக்கூடிய, சதா பறக்கும் கலை மூலம் ஃபரிஸ்தா ரூபத்தினால் நாலாபுறமும் சகாஷ் கொடுக்கக்கூடிய சக்தி சொரூப ஆத்மாக்களுக்கு, சதா தூய உள்ளம், உண்மையான உள்ளத்தின் மூலம் பயமற்ற, நிர்விகாரி ஸ்திதியில் அனுபவம் செய்யக்கூடிய விஷ்வ கல்யாணி, விஷ்வ பரிவர்த்தக் (உலகை மாற்றக்கூடிய) ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

தாதிகளுடன் -- உங்கள் அனைவருக்கும் குஷி இருந்து கொண்டிருக்கிறது இல்லையா? நம்முடைய நிமித்த தாதிகள், தாதாக்களுக்கு முன்னால் வந்திருக்கிறோம் என்றால் குஷி உள்ளது இல்லையா? அதனால் நீங்களும் வர விரும்புகிறீர்கள் தானே? இன்னும் முன்பாக வருவது நன்றாக இருக்கிறது. முன்னால் இருப்பவர்களை அதிகம் பார்க்கிறார்கள். இங்கோ அது போல் செய்ய வேண்டியதிருக்கும். மேலும் முன்னால் இருப்பவர்களையோ அடிக்கடி பார்த்துக் கொண்டுள்ளனர்.

நல்லது (ஜெகதீஷ் சகோதரரிடம்) எல்லாம் நன்றாக உள்ளது. அனைத்திலும் நல்ல விஷயம், தன்னை சரீரத்தோடு கூடவே பாபாவுக்கு ஒப்படைத்து விட்டீர்கள். அப்படியே தந்தையிடம் தன்னுடைய அனைத்தையும் கொடுத்து விட்டீர்கள். கொடுத்து விட்டீர்களா, கொடுக்க வேண்டுமா? நிமித்த ஆத்மாக்கள் நீங்களோ கொடுத்து விட்டீர்கள். அப்போது உங்களை சாகார ரூபத்தில் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். சாகார ரூபத்தில் மகாரதிகளைப் பார்த்து அனைவர்க்கும் சக்தி கிடைக்கிறது. ஆக, இந்த குரூப் முழுவதும் என்ன? சக்தியின் ஆதாரம் இல்லையா? (தாதி ஜானகி சொல்கிறார் -- நடத்துபவர் மிகவும் ரமஜபாஜ்) -- திறமையுடன் மகிழ்விப்பவர் ரமஜபாஜ் இல்லையென்றால் இவ்வளவு விருத்தி எப்படி ஏற்பட்டிருக்கும்? பாபா சொல்கிறார், நடப்பவர்களும் கூட பாபாவை விடவும் அதிக சாமர்த்தியசாலிகள்.

நல்லது. அனைவரும் சதா ஒரு வார்த்தையை மனதால் பாடிக் கொண்டே இருக்கின்றனர் -- மேரா பாபா. இந்தப் பாடலைப் பாடுவதற்கு அனைவருக்குமே வருகிறது இல்லையா? மேரா பாபா என்ற பாடலைப் பாட வருகிறதா? சுலபம் தான் இல்லையா? என்னுடையவர் என்று சொன்னீர்கள் மற்றும் தங்களுடையவராக ஆக்கிக் கொண்டீர்கள். பாபா சொல்கிறார், குழந்தைகள் தந்தையை விடவும் சமர்த்தியசாலிகள். ஏன்? பகவானைக் கட்டிப் போட்டு விட்டார்கள். (தாதி ஜானகியிடம்) கட்டிப் போட்டு விட்டனர் இல்லையா? ஆக, கட்டிப் போடுபவர்கள் சக்திசாலியா? அல்லது கட்டப்பட்டவரா? யார் சக்திசாலி? கட்டப்படுபவர் வழியை மட்டும் உங்களுக்குச் சொன்னார் - இப்படிக் கட்டினால் கட்டுப்படுவேன். நல்லது. ஓம் சாந்தி.

வரதானம்:
தன்னை நிமித்தம் என உணர்ந்து வீணான சங்கல்பங்கள் மற்றும் வீணான உள்ளுணர்வில் இருந்து விடுபட்டு இருக்கக்கூடிய உலக நன்மை செய்பவர் ஆகுக.

நான் உலக நன்மையின் காரியத்துக்கு நிமித்தமாக இருக்கிறேன் - இந்தப் பொறுப்பு நினைவில் இருக்குமானால் ஒரு போதும் யாருக்காகவும் அல்லது தனக்காகவும் வீணான சங்கல்பங்கள் அல்லது வீணான உள்ளுணர்வு இருக்க முடியாது. பொறுப்புள்ள ஆத்மாக்கள் ஒரு நன்மை யல்லாத சங்கல்பம் கூட செய்ய முடியாது. ஒரு விநாடி கூட வீணன உள்ளுணர்வை உருவாக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் உள்ளுணர்வு மூலம் வாயுமண்டலம் மாற்ற மடையும். எனவே அனைவர்க்காகவும் அவர்களின் சுப பாவனை, சுப விருப்பம் தானாகவே இருக்கும்.

சுலோகன்:
அஞ்ஞானத்தின் சக்தி கோபம் ஆகும் மற்றும் ஞானத்தின் சக்தி சாந்தி ஆகும்.