11-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் முழு உலகத்தின் உண்மையிலும் உண்மையான நண்பர்கள் ! உங்களுக்கு யாரிடமும் பகைமை இருக்கக் கூடாது.

கேள்வி:
நீங்கள் ஆன்மீக (மிலிட்டரி) ராணுவத்தினர். உங்களுக்கு தந்தை மூலமாக கிடைத்திருக்கும் எந்த ஒரு (டைரக்ஷன்) உத்தரவை அமலுக்கு கொண்டு வர வேண்டும்?

பதில்:
பேட்ஜை எப்பொழுதும் அணிந்திருங்கள் என்று உங்களுக்கு டைரக்ஷன் இருக்கிறது. யாராவது இது என்ன? நீங்கள் யார்? என்று கேட்டால் நாங்கள் முழு உலகத்திலிருந்து காம அக்னியை அணைக்கும் தீயணைப்பு படை (ஃபயர் பிரிகேட்) என்று கூறுங்கள். இச்சமயம் முழு உலகத்திலும் காமத் தீ பிடித்துள்ளது. இப்பொழுது தூய்மை ஆகுங்கள், தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள், அப்பொழுது படகு கரையேறி விடும் என்று நாங்கள் அனைவருக்கும் செய்தி அளிக்கிறோம்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் சகஜ நினைவில் உடலை வருத்தி அமர்ந்துள்ளார்கள். ஒரு சிலருக்கு கடினமாகப்படுகிறது. நாம் இறுக்கமாக அல்லது கண்டிப்பாக அமர வேண்டும் என்று நிறைய பேர் குழம்புகிறார்கள். இப்படி எந்த ஒரு விஷயமும் இல்லை. எப்படி வேண்டுமாலும் அமருங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு மட்டுமே செய்ய வேண்டும். இதில் கடினமான விஷயங்கள் எதுவும் கிடையாது. அந்த ஹட யோகிகள் இது போல கால்களை இறுக்கமாக, சரீரத்தை வலுக் கட்டாயப்படுத்தி அமர்கிறார்கள். கால் மீது காலை உயர்த்தி வைத்துக் கொண்டு நிற்கிறார்கள். இங்கோ ஓய்வாக அமருங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை மற்றும் 84-பிறவியின் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். இது இருப்பதே சுலபமான நினைவாக ! எழுந்தாலும் அமர்ந்தாலும் புத்தியில் (பாபா) இருக்க வேண்டும். பாருங்கள், இந்த சிறிய குழந்தை தந்தைக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். இவருடைய புத்தியில் தாய் தந்தை தான் நினைவில் இருப்பார். நீங்கள் கூட குழந்தைகள் தானே ! தந்தையை நினைவு செய்வதோ மிகவும் சுலபம் ஆகும். நாம் பாபாவின் குழந்தைகள்! பாபாவிடமிருந்து தான் ஆஸ்தி பெற வேண்டும். சரீர நிர்வாகத்தின் பொருட்டு இல்லற காரியங்களில் தாராளமாக இருங்கள். மற்றவர் களின் நினைவை மட்டும் புத்தியிலிருந்து நீக்கி விடுங்கள். ஒரு சிலர் அனுமாரை, ஒரு சிலர் மற்றொருவரை சாது ஆகியோரை நினைவு செய்து கொண்டிருந்தீர்கள். அந்த நினைவை விட்டு விட வேண்டும். நினைவு செய்கிறார்கள் அல்லவா? பூஜைக்காக பூசாரி கோவிலுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. இதில் எங்குமே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. யாரை சந்தித்தாலும் தந்தையாகிய என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று சிவபாபா கூறுகிறார் என்பதைக் கூறுங்கள். சிவபாபாவோ நிராகாரமானவர் ! அவசியம் அவர் (மற்றொருவர் உடலில்) சாகாரத்தில் தான் வந்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். நான் பதீத பாவனன் ஆவேன். இது சரியான வார்த்தை அல்லவா? என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் அனைவரும் பதீதமாக (தூய்மையற்று) உள்ளீர்கள். இது பதீதமான தமோபிரதான உலகம் ஆகும். எனவே எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள் என்று பாபா கூறுகிறார். இது நல்ல விஷயம் அல்லவா? எந்த ஒரு குரு ஆகியோருக்கு மகிமை செய்வதில்லை. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பாவங்கள் நீங்கிப் போகும் என்று மட்டுமே தந்தை கூறுகிறார். இது யோக பலம் அல்லது யோக அக்னி ஆகும். கீதையினுடைய பகவான் நிராகாரமானவரே தான் என்று எல்லையில்லாத தந்தை உண்மையைக் கூறுகிறார். கிருஷ்ணருடைய விஷயம் கிடையாது. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் வேறு எந்த வழியும் கிடையாது என்று பகவான் கூறுகிறார். பவானமாக ஆகிச் செல்வதால் உயர்ந்த பதவி அடைவீர்கள். இல்லை என்றால் குறைந்த பதவி ஆகி விடும். நாங்கள் உங்களுக்கு தந்தையின் செய்தியை அளிக்கிறோம். நான் செய்தி அளிப்பவன் ஆவேன். இது போல புரிய வைப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது. தாய்மார்கள், அகலிகைகள், (கூனிகள்) உடல் ஊனமுற்றவர்கள் கூட உயர்ந்த பதவியை அடைய முடியும். இங்கு இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லறத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி.அப்படி இன்றி இங்கு இருப்பவர்கள் அதிகமாக நினைவு செய்ய முடியும் என்பதல்ல. வெளியில் இருப்பவர்கள் கூட அதிகமான நினைவில் இருக்க முடியும் என்று பாபா கூறுகிறார். நிறைய சேவை செய்ய முடியும். இங்கு கூட தந்தையிடம் (ரிஃப்ரெஷ்) புத்துணர்வு பெற்றுச் செல்கிறீர்கள் என்றால் உள்ளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இந்த சீ - சீ உலகத்திலோ இன்னும் சிறிது நாட்களே மீதமுள்ளன. பிறகு கிருஷ்ணபுரிக்குச் சென்று விடுவோம். கிருஷ்ணரின் கோவிலுக்குக் கூட சுகதாமம் என்று கூறுகிறார்கள். எனவே குழந்தைகளுக்குள் அளவற்ற குஷி இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எல்லையில்லாத தந்தை யினுடையவராக ஆகி உள்ளீர்கள். உங்களைத் தான் சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கி இருந்தார். பாபா! ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பேயும் நாங்கள் உங்களை சத்தித்திருந்தோம் மற்றும் மீண்டும் சந்திப்போம் என்று நீங்களும் கூறுகிறீர்கள். இப்பொழுது தந்தையை நினைவு செய்வதன் மூலம் மாயை மீது வெற்றி அடைய வேண்டும். இப்பொழுது இந்த துக்க தாமத்திலோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் படிப்பதே சுகதாமதிற்குச் செல்வதற்காக. அனைவரும் கணக்கு வழக்கு முடித்து விட்டு திரும்பிச் செல்ல வேண்டும். நான் வந்திருப்பதே புதிய உலகத்தை ஸ்தாபனை செய்ய. மற்ற எல்ல ஆத்மாக்களும் முக்தி தாமம் சென்று விடுவார்கள். நான் காலன்களுக்கெல்லாம் காலன் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். அனைவரையும் சரீரங் களிலிருந்து விடுவித்து பின் ஆத்மாக் களை கூட்டிச் செல்வேன். நாம் சீக்கிரம் செல்வோம் என்று எல்லோரும் கூறவும் செய்கிறார்கள். இங்கோ இருக்க வேண்டியதில்லை. இதுவோ பழைய உலகம், பழைய சரீரம் ஆகும். நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். யாரையுமே விட மாட்டேன். ஹே பதீத பாவனரே ! வாருங்கள் என்று நீங்கள் அனைவரும் தான் அழைத்தீர்கள். நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் கூட பொருள் எதுவும் புரியாமல் உள்ளார்கள். பதீத பாவனரே என்று எவ்வளவு குரல் கொடுத்து பாடுகிறார்கள். பிறகு ரகுபதி ராகவ ராஜாராம் என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது சிவபாபாவோ ராஜா ஆவது இல்லை. ஆட்சி புரிவதும் இல்லை. அவரை ராஜாராம் என்று கூறுவது தவறாகி விடுகிறது. மாலையை நினைவு செய்யும் பொழுது ராம் ராம் என்று கூறுகிறார்கள். அதில் பகவானின் நினைவு வருகிறது. பகவானோ சிவனே ஆவார். மனிதர்கள் நிறைய பெயர்கள் வைத்து விட்டுள்ளார்கள். கிருஷ்ணருக்கு கூட ஷியாம் சுந்தர், வைகுண்ட நாதன், வெண்ணை திருடுபவர் என்றெல்லாம் நிறைய பெயர்கள் கொடுக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது கிருஷ்ணரை வெண்ணெய் திருடுபவர் என்று கூறுவீர்களா என்ன? ஒருபோதும் கிடையாது. பகவானோ ஒரே ஒரு நிராகாரமானவர் என்று நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். எந்த ஒரு தேகதாரியையும் பகவான் என்று கூற முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரனைக் கூட கூற முடியாது. பிறகு மனிதர்கள் தங்களை பகவான் என்று எப்படி கூற முடியும்?. வைஜயத்தி மாலை 108 மணிகளினுடையது மட்டுமே பாடப்படுகிறது. சிவபாபா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்தார். அதற்கு இவர்கள் அதிபதி ஆவார்கள். அவசியம் அதற்கு முன்னால் அவர்கள் இந்த முயற்சி செய்திருக்கக் கூடும். கலியுக முடிவு மற்றும் சத்யுக ஆரம்பத்திற்கிடைப்பட்ட சங்கம யுகம் ஆகும். இது கல்பத்தினுடைய சங்கமயுகம் என்று கூறப்படு கிறது. மனிதர்கள் பிறகு ஒவ்வொரு யுகத்திலும் (யுகே யுகே) என்று கூறி விட்டுள்ளார்கள். அவதாரம் என்ற பெயரையும் மறந்து பிறகு அவரை கல், மண்ணிலும், அணு அணுவிலும் இருப்பதாகக் கூறி விட்டுள்ளார்கள். இதுவும் நாடகம் ஆகும். எந்த விஷயம் கடந்து போய் விடுகிறதோ அதற்கு டிராமா என்று கூறப்படுகிறது. யாரிடமாவது சண்டை ஏற்பட்டது, நடந்து முடிந்து விட்டது என்றால் அது பற்றிய சிந்தனை செய்யக் கூடாது. நல்லது. யாராவது கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டார். நீங்கள் அதை மறந்து விடுங்கள். முந்தைய கல்பத்திலும் அவ்வாறே பேசி இருந்தார். நினைவில் இருந்தது என்றால் பிறகு கோபித்து கொண்டே இருப்பார்கள். அந்த விஷயத்தை மீண்டும் ஒரு பொழுதும் பேசவே பேசாதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்ய வேண்டும் அல்லவா? சேவையில் எந்த ஒரு தடையும் ஏற்படக் கூடாது. சேவையில் பலவீனத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிவபாபாவினுடைய சேவை ஆகும் அல்லவா? அதில் ஒரு பொழுதும் சிறிதளவு கூட மறுப்பு கூறக் கூடாது. இல்லை என்றால் தங்கள் பதவியை தாழ்ந்ததாக ஆக்கிக் கொண்டு விடுவீர்கள். தந்தைக்கு உதவியாளர் ஆகி உள்ளீர்கள் என்றால் முழுமையாக உதவி செய்ய வேண்டும். தந்தையின் சேவை செய்வதில் சிறிதளவும் ஏமாற்றக் கூடாது. எல்லோருக்கும் செய்தியை சேர்ப்பிக்கவே வேண்டும். மனிதர்கள் பார்த்த உடனேயே உள்ளே நுழைந்து விட வேண்டும் மற்றும் வந்து புரிந்து கொள்ள வேண்டிய வகையில் பொருட்காட்சி யகத்திற்கு (மியூசியம்) அப்பேர்ப்பட்ட பெயர் வையுங்கள் என்று தந்தை கூறிக் கொண்டே இருக்கிறார். ஏனெனில் இது புதிய பொருள் ஆகும் அல்லவா? மனிதர்கள் புதிய பொருட்களைப் பார்த்து உள்ளே நுழைவார்கள். தற்காலத்தில் பாரதத்தினுடைய பழைமையான யோகத்தைக் கற்றுக் கொள்வதற்காக வெளி நாடுகளிலிருந்து வருகிறார்கள். இப்பொழுது பழைமையானது என்றால் பழையதிலும் பழையது. அதுவோ பகவான் மூலமாகத் தான் கற்பிக்கப் பட்டது ஆகும். அதற்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டுள்ளது. சத்யுக திரேதாவில் யோகம் இருப்பதில்லை. யார் கற்பித்தாரோ அவரோ சென்று விட்டார். மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு வரும் பொழுது தான் மறுபடியும் வந்து இராஜயோகம் கற்பிப்பார். பழைமையான என்றால் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பகவான் கற்பித்திருந்தார். அதே பகவான் மீண்டும் சங்கமத்தில் தான் வந்து இராஜயோகம் கற்பிப்பார். இதன் மூலம் பாவனமாக முடியும். இச்சமயத்திலோ தத்துவங்கள் கூட தமோ பிரதானமாக உள்ளன. தண்ணீர் கூட எவ்வளவு நஷ்டம் ஏற்படுத்தி விடுகிறது. பழைய உலகத்தில் உபத்திரவங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. சத்யுகத்தில் உபத்திரவங் களுடைய விஷயமே கிடையாது. அங்கோ இயற்கை அடிமையாகி விடுகிறது. இங்கு இயற்கை எதிரியாக ஆகி துக்கம் கொடுக்கிறது. இந்த லட்சுமி நாராயணரின் ராஜ்யத்தில் துக்கத்தின் விஷயம் இருக்கவில்லை. சத்யுகமாக இருந்தது. இப்பொழுது மீண்டும் அது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தை பழைமையான இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு கற்பிப்பார். யாருக்கு பாகம் உள்ளதோ அவர்கள் அந்த பாகத்தை ஏற்று நடிப்பார்கள். எல்லையில்லாத தந்தை கூட பாகத்தை ஏற்று நடித்து கொண்டிருக் கிறார். நான் இவருக்குள் பிரவேசம் செய்து ஸ்தாபனை செய்து சென்று விடுகிறேன் என்று தந்தை கூறுகிறார். ஐயோ ஐயோ என்ற கதறலுக்கு பிறகு வெற்றி முழக்கம் ஆகி விடுகிறது. பழைய உலகம் முடிந்து போய் விடும். இந்த லட்சுமி நாராயணரின் ராஜ்யம் இருக்கும் பொழுது பழைய உலகம் இருக்கவில்லை. 5 ஆயிரம் வருடங்களின் விஷயம் ஆகும். லட்சக்கணக்கான வருடங் களின் விஷயம் இருக்க முடியாது. எனவே தங்களுக்கு நன்மை செய்வதற்காக மற்ற எல்லா விஷயங்களையும் விடுத்து இந்த சேவையில் ஈடுபட்டு விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். கோபித்துக் கொண்டு சேவையில் ஏமாற்றக் கூடாது. இது ஈசுவரிய சேவை ஆகும். மாயையின் புயல்கள் நிறைய வரும். ஆனால் தந்தையின் ஈசுவரிய சேவையில் ஏமாற்றக் கூடாது. தந்தை சேவையின் பொருட்டு (டைரக்ஷ்ன்) உத்தரவுகளோ அளித்துக் கொண்டே இருக்கிறார். நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் யார் வந்தாலும் அனைவருக்கும் உண்மையான நண்பர்கள் நீங்களே ஆவீர்கள். பிரம்மா குமார் குமாரிகளாகிய நீங்கள் முழு உலகத்தின் நண்பர்கள் ஆவீர்கள். ஏனெனில் நீங்கள் தந்தைக்கு உதவி செய்பவர்கள். நண்பர்களுக்குள் எந்த ஒரு பகைமையும் கூட இருக்கக் கூடாது. ஏதாவது விஷயம் வெளி வந்தால் சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று கூறுங்கள். தந்தையின் ஸ்ரீமத்படி ஈடுபட்டு விட வேண்டும். இல்லை என்றால் தங்களுக்கே நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். ரயில் வண்டியில் நீங்கள் வருகிறீர்கள் என்றால், அங்கோ எல்லோரும் சுதந்திரமாக (ஃப்ரீ) இருப்பார்கள். சேவைக்கு மிக நல்ல வாய்ப்பு இருக்கும். பேட்ஜ் என்பதோ மிகவும் நல்ல பொருள் ஆகும். ஒவ்வொருவரும் அணிந்திருக்க வேண்டும். யாராவது நீங்கள் யார் என்று கேட்டால் நாங்கள் தீயணைப்பு படையினர் (ஃபயர் பிரிகேட்) என்று கூறுங்கள். தீயை அணைப்பதற்கு அங்கு தீயணைப்பு படை இருக்கிறதல்லவா? எனவே இச்சமயம் முழு சிருஷ்டியில் காமத்தீயில் எல்லோருமே எரிந்து விட்டுள்ளார்கள். காமம் என்ற மகா எதிரி மீது வெற்றி அடையுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். தந்தையை நினைவு செய்யுங் கள். தூய்மை ஆகுங்கள். தெய்வீக குணங்களைத் தாரணை செய்யுங்கள். அப்பொழுது படகு கரையேறி விடும். இந்த பேட்ஜ் ஸ்ரீமத் மூலமாகத்தானே வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைவான குழந்தைகளே பேட்ஜ் மூலம் சேவை செய்கிறார்கள். பாபா முரளிகளில் எவ்வளவு புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு பிராமணரிடமும் இந்த பேட்ஜ் இருக்க வேண்டும். யாரை சந்தித்தாலும் அவருக்கு இதை வைத்து புரிய வைக்க வேண்டும். இவர் பாபா ஆவார். இவரை நினைவு செய்ய வேண்டும். நாம் சாகாரத்திற்கு மகிமை செய்வதில்லை. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு நிராகார தந்தை ஆவார். அவரை நினைவு செய்ய வேண்டும். நினைவின் பலத்தினால் தான் உங்கள் பாவங்கள் நீங்கிப் போகும். பிறகு (அந்த் மதி சோ கதி) கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறே கதி ஆகி விடும். துக்கதாமத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். பிறகு நீங்கள் விஷ்ணுபுரியில் வந்து விடுவீர்கள். எவ்வளவு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும். (லிட்டரேச்சர்) புத்தகங்களைக் கூட கொடுக் கலாம். கூறுங்கள் நீங்கள் ஏழைகள். அதனால் உங்களுக்கு இலவசமாகத் தருகிறோம். பணக்காரர் களோ பைசா கொடுக்கவே வேண்டும். ஏனெனில் இதுவோ நிறைய அச்சடிக்க வேண்டி உள்ளது. இது எப்பேர்ப்பட்ட பொருள் என்றால், இதன் மூலம் நீங்கள் ஏழையிலிருந்து உலகின் அதிபதி ஆகி விடுவீர்கள். விளக்கங்களோ கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எந்த தர்மத்தினராக இருந்தாலும் சரி, உண்மையில் நீங்கள் ஆத்மா ஆவீர்கள் என்பதைக் கூறுங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். இப்பொழுது விநாசம் எதிரிலேயே உள்ளது. இந்த உலகம் மாறப் போகிறது. சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் விஷ்ணுபுரியில் வந்து விடுவீர்கள். இது உங்களுக்கு கோடிக்கணக்கான லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருளை கொடுக்கிறோம் என்று கூறுங்கள். பேட்ஜ் வைத்து சேவை செய்ய வேண்டும் என்று பாபா எவ்வளவு புரிய வைத்துள்ளார். ஆனால் பேட்ஜ் அணிவதே இல்லை. வெட்கம் ஏற்படுகிறது. பிராமணிகள் பார்ட்டிகளைக் கூட்டி வரும் பொழுது அல்லது எங்காவது அலுவலகத்திற்குத் தனியாகச் செல்கிறார்கள் என்றால் அவசியம் இந்த பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். நீங்கள் இதை வைத்து யாருக்கு புரிய வைப்பீர் களோ அவர்கள் மிகவும் குஷி அடைவார்கள். நாங்கள் ஒரு தந்தையை தான் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறுங்கள். அவர் தான் அனைவருக்கும் சுகம் சாந்தி அளிப்பவர். அவரை நினைவு செய்யுங்கள். பதீத (தூய்மையற்ற) ஆத்மாவோ போக முடியாது. இப்பொழுது இந்த பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இது போல வழியில் சேவை செய்து கொண்டே வர வேண்டும். உங்களுக்கு நிறைய புகழ் கிடைக்கும். வெட்கப்படு வதால் தான் பேட்ஜ் அணிந்து சேவை செய்வதில்லை என்று பாபா நினைக்கிறார். ஒன்று பேட்ஜ், ஏணிப்படி அல்லது திரிமூர்த்தி, காலச் சக்கரம் மற்றும் கல்ப விருட்சத்தின் படம் கூட இருக்க வேண்டும். உங்களுக்குள் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் புரிய வைத்தீர்கள் என்றால் எல்லோரும் கூடி விடுவார்கள். இது என்ன என்று கேட்பார்கள். சிவபாபா இவர் மூலமாக இந்த புதிய உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறார் என்று கூறுங்கள். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், தூய்மை ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். தூய்மையற்றவர்களோ திரும்பிச் செல்ல முடியாது. இது போல இனிமையிலும் இனிமையான விஷயங்கள் கூற வேண்டும். அப்பொழுது எல்லோருமே குஷியுடன் கேட்பார்கள். ஆனால் யாருடைய புத்தியிலும் பதிவதே இல்லை. சென்டரில் வகுப்பிற்குச் செல்கிறீர்கள் என்றாலும் கூட பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். ராணுவத்தினருக்கு இங்கு பேட்ஜ் அணியப்பட்டிருக்கும். அவர்களுக்கு எப்பொழுதாவது வெட்கம் ஏற்படுகிறதா என்ன? நீங்கள் கூட ஆன்மீக மிலிட்டரி ஆவீர்கள் அல்லவா? தந்தை டைரக்ஷ்ன் (உத்தரவு) கொடுக்கிறார் என்றால் பின் ஏன் அமலுக்கு எடுத்து (நடைமுறையில் கொண்டு) வருவதில்லை? பேட்ஜ் அணியப்பட்டு இருந்தீர்கள் என்றால், நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்று சிவபாபாவின் நினைவு கூட இருக்கும். நாளுக்கு நாள் சென்டர்கள் கூட திறந்து கொண்டே போகும். யாராவது ஒருவர் அல்லது மற்றொருவர் வெளி வருவார்கள். குறிப்பிட்ட இந்த நகரத்தில் உங்கள் கிளை நிலையம் இல்லையா என்பார்கள். யாராவது வீடு ஏதாவது ஏற்பாடு செய்தால், அழைப்பு கொடுத்தால் நாங்கள் வந்து சேவை செய்கிறோம் என்று கூறுங்கள். தைரியம் உடைய குழந்தைகளுக்கு தந்தை உதவுவார்.. தந்தையோ சென்டர் திறவுங்கள், சேவை செய்யுங்கள் என்று குழந்தைகளுக்குத் தான் கூறுவார். இவை எல்லாமே சிவபாபாவின் கடைகள் ஆகும் அல்லவா? குழந்தைகள் மூலமாக நடத்திக் கொண்டிருக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒரு பொழுதும் தங்களுக்குள் கோபித்துக் கொண்டு சேவையில் ஏமாற்றக் கூடாது. தடை செய்பவராக ஆகக் கூடாது. தங்களது பலவீனத்தை வெளிப்படுத்தக் கூடாது. தந்தைக்கு முழுமையான உதவியாளர் ஆக வேண்டும்.

2. ஒரு பொழுதும் யாரிடமாவது சண்டையிட நேர்ந்தது என்றால், கடந்து போய் விட்டது, அதைப் பற்றிச் சிந்தனை செய்யக் கூடாது. யாராவது அளவு மீறி பேசினார் என்றால், அதை மறந்து விடுங்கள். முந்தைய கல்பத்திலும் அவ்வாறே பேசி இருந்தார். அந்த பேச்சை மறுபடியும் பேசவே பேசாதீர்கள்.

வரதானம்:
சாந்தியின் தூதராகி அனைவருக்கும் சாந்தியின் செய்தியைக் கொடுக்கும் மாஸ்டர் சாந்தி மற்றும் சக்தியின் வள்ளலாக (தாதா) ஆகுக.

குழந்தைகளாகிய நீங்கள் சாந்தியின் மெசன்ஜர், சாந்தியின் தூதர் ஆகுவீர்கள். எங்கு இருந்தாலும் எப்போதும் தங்களை சாந்தியின் தூதர் என்று நினைத்து நடங்கள். சாந்தியின் தூதர், சாந்தியின் செய்தியைக் கொடுப்பவர் என்ற நிலையில் இருக்கும் போது, தாங்களும் சாந்த சொரூபமாகவும் சக்திசாலியாகவும் இருப்பீர்கள், மற்றவர்களுக்கும் சாந்தியை கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். அவர்கள் அசாந்தியை கொடுத்தால், நீங்கள் சாந்தியைக் கொடுங்கள். அவர்கள் நெருப்பை வைத்தால், நீங்கள் தண்ணீரை ஊற்றுங்கள். இதுவே சாந்தியின் மெசன்ஜர், மாஸ்டர் சாந்தி, சக்தி தாதா (வள்ளல்) ஆகிய உங்களுடைய கடமையாகும்.

சுலோகன்:
எப்படி சப்தத்தில் வருவது சகஜமாக இருக்கிறதோ, அதேபோல் சப்தத்தைக் கடந்து செல்வதும் சகஜமாக இருக்கட்டும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

யோகத்தில் - எப்போதும் லைட் ஹவுஸ் (ஒளி விளக்கு) மற்றும் மைட் ஹவுஸ் (சக்தி ஸ்தம்பம்) என்ற நிலையை அனுபவம் செய்யுங்கள். ஞானம் - ஒளியாகவும் (லைட்) மற்றும் யோகம் – சக்தி யாகவும் (மைட்) இருக்கிறது. ஞானம் மற்றும் யோகம் ஆகிய இரண்டு சக்திகளும் ஒளி மற்றும் சக்தியுடன் நிறைந்திருப்பதைத்தான் மாஸ்டர் சர்வ சக்திவான் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஆத்மாக்கள் எந்தவொரு சூழ்நிலை யையும் நொடியில் கடந்து விடுகிறார்கள்.