12.01.25 காலை முரளி
ஓம் சாந்தி 15.11.2003 பாப்தாதா,
மதுபன்
மனதை ஒருநிலைப்படுத்தி, ஒருநிலைபடுத்தும் சக்தியின் மூலம்
பரிஸ்தா ஸ்திதி அனுபவம் செய்யுங்கள்
இன்று அனைத்து பொக்கிஷங்களுக்கும் எஜமான் நாலாபுறங்களிலும்
உள்ள தனது சம்பன்ன குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு குழந்தையையும் அனைத்து பொக்கிஷங்களுக்கும் எஜமானர்களாக
ஆக்கியிருக்கின்றார். வேறு யாரும் கொடுக்க முடியாத பொக்கிஷங்கள்
கிடைத்திருக்கிறது. ஆக ஒவ்வொருவரும் தன்னை பொக்கிஷங்களால்
நிறைந் திருக்கும் அனுபவம் செய்கிறீர்களா? அனைத்தையும் விட
சிரேஷ்ட பொக்கிஷம் ஞானம் என்ற பொக்கிஷம், சக்திகள் என்ற
பொக்கிஷம், குணங்களின் பொக்கி‘ம், கூடவே தந்தை மற்றும் அனைத்து
பிராமண ஆத்மாக்களின் ஆசிர்வாதம் என்ற பொக்கிஷம். ஆக இவை அனைத்து
பொக்கிஷங்களும் பிராப்தியாக அடைந்திருக்கிறேனா? என்று
சோதியுங்கள். அனைத்து பொக்கி ஷங்களிலும் நிறைந்திருக்கும்
ஆத்மாவின் அடையாளம் அவர்களது கண்களின் மூலம், நடந்தைகளின் மூலம்
சதா குஷி மற்றவர்களுக்கும் அனுபவம் ஆகும். எந்த ஒரு ஆத்மா
தொடர்பில் வந்தாலும் அவர்களும் அனுபவம் செய்வர் - இந்த ஆத்மா
அலௌகீக குஷி, அளெகீக தனிப்பட்டவராக தென்படுகின்றார். உங்களது
குஷியைப் பார்த்து மற்ற ஆத்மாக்களும் சிறிது நேரத்திற்கு
குஷியின் அனுபவம் செய்வர். பிராமண ஆத்மாக்களாகிய உங்களது வெள்ளை
ஆடை அனைவருக்கும் தனிப்பட்டதா மற்றும் பிரியமானதாக தோன்றுகிறது.
தூய்மை, எளிமை மற்றும் சுத்தம் அனுபவம் ஆகிறது. தூரத்திலேயே
இவர்கள் பிரம்மா குமார், குமாரிகள் என்று அறிந்து கொள்கின்றனர்.
அதே போன்று பிராமண ஆத்மாக்களாகிய உங்களது நடத்தை மற்றும்
முகத்தின் மூலம் சதா குஷியின் ஜொலிப்பு, அதிஷ்டத்தின் ஜொலிப்பு
தென்பட வேண்டும். இன்று அனைத்து ஆத்மாக்களும் மகான்
துக்கமானவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆத்மாக்கள்
உங்களது குஷி நிறைந்த முகம், நடத்தையைப் பார்த்து ஒரு நிமிடம்
கூட குஷியின் அனுபவம் செய்வது என்பது தாகத்துடன் இருக்கும்
ஆத்மாவிற்கு ஒரு துளி தண்ணீர் கிடைத்து விட்டால் எவ்வளவு குஷி
அடைவார்! இப்படிப்பட்ட குஷியின் அஞ்சலி ஆத்மாக்களுக்கு மிக
அவசியமாக இருக்கிறது. இவ்வாறு அனைத்து பொக்கிஷங்களிலும் சதா
நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் சுயம்
அனைத்து பொக்கிஷங்களிலும் சதா நிறைந்திருக்கும் அனுபவம்
செய்கிறீர்களா? அல்லது அவ்வப்போது செய்கிறீர்களா? பொக்கிஷங்கள்
அழிவற்றது, கொடுக்கக் கூடிய வள்ளலும் அழிவற்றவர் எனும் போது
அழிவற்று வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அலௌகீக குஷி முழு
கல்பத்திலும் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும்
பிராப்தியாகவில்லை. இப்போதைய அலௌகீக குஷி அரை கல்பத்திற்கு
ஆஸ்தியின் ரூபத்தில் இருக்கும் என்பதால் அனைவரும் குஷியுடன்
இருப்பீர்கள். இதில் அனைவரும் கைகளை உயர்த்தி விட்டீர்கள்.
நல்லது. சதா குஷியாக இருக்கிறீர்களா? அவ்வப்பொழுது குஷி சென்று
விடுகிறதா? அவ்வப்பொழுது சென்று விடுகிறது. குஷியாக
இருக்கிறீர்கள், ஆனால் சதா ஏக்ரஸ், இதில் வித்தியாசம் ஏற்பட்டு
விடுகிறது. குஷியாக இருக்கிறீர்கள், ஆனால் சதவிகிதத்தில்
வித்தியாசம் வந்து விடுகிறது.
பாப்தாதா தானியங்கி டி.வி யின் மூலம் அனைத்து குழந்தைகளின்
முகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதில் என்ன
தென்படுகிறது? ஒருநாள் முழுவதும் நீங்களும் கூட தனது குஷியின்
சார்ட்டை சோதியுங்கள் - அமிர்தவேளையிலிருந்து இரவு வரை ஒரே
சதவிகிதத்தில் குஷி இருக்கிறதா? அல்லது மாறி விடுகிறதா?
சோதிக்க வருகிறது தானே, இன்றைய நாட்களில் பாருங்கள். அறிவியலும்
சோதனை செய்யும் மெஷினை வேகப்படுத்தி விட்டது. எனவே நீங்களும்
சோதனை செய்யுங்கள் மற்றும் அழிவற்றதாக ஆக்குங்கள். அனைத்து
குழந்தைகளின் நிகழ்கால முயற்சியை பாப்தாதா சோதனை செய்தார்.
அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் - சிலர் இயன்ற
அளவிற்கு, சிலர் சக்திசாலியாக. ஆக இன்று அனைத்து குழந்தைகளின்
மன நிலையை பாப்தாதா சோதனை செய்தார். ஏனெனில் மூலமானது மன்மனாபவ.
சேவையிலும் பாருங்கள் மன சேவை தான் சிரேஷ்ட சேவையாகும். மனதை
வென்றவர் உலகை வென்று விடுவர் என்றும் கூறப்படுகிறது. எனவே
மனதில் வேகத்தை சோதனை செய்தார். என்ன பார்த்தார்? மனதிற்கு
எஜமானர் ஆகி மனதை நடத்துகிறீர்கள். ஆனால் அவ்வப்பொழுது மனம்
உங்களை நடத்துகிறது. மனம் அடிமையாகவும் ஆக்கி விடுகிறது.
பாப்தாதா பார்த்தார் - மனதார ஈடுபடுகிறீர்கள், ஆனால் மனநிலை ஒரே
மாதிரியாக இருப்பது கிடையாது.
நிகழ்காலத்தில் மன ஒருமைப்பாடு ஏக்ரஸ் ஸ்திதியின் அனுபவம்
செய்விக்கும். இப்போதைய ரிசல்டில் மனதை ஒருநிலைப்படுத்த
விரும்புகிறீர்கள், ஆனால் இடையிடையில் அலைய ஆரம்பித்து விடுவதை
பார்த்தார். ஏகாக்ரதா சக்தியானது அவ்யக்த பரிஸ்தா ஸ்திதியின்
அனுபவத்தை எளிதாக அனுபவம் செய்விக்கும். வீண் விசயங்களிலும்,
வீண் சங்கல்பங்களிலும், வீண் விவகாரங்களிலும் மனம் அலைகிறது.
எவ்வாறு சிலருக்கு சரீரத்திலும் ஒரு நிலையுடன் அமரும் பழக்கம்
இருக்காது, சிலருக்கு இருக்கும். எனவே மனதை எங்கு
விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம்
விரும்புகிறீர்களோ அவ்வளவு மற்றும் அவ்வாறு ஒருநிலையாக வேண்டும்.
இதைத் தான் மனம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று
கூறப்படுகிறது. ஒருநிலைப்படுத்தும் சக்தி, அதிகாரிக்கான சக்தி
எளிதாக தடைகளை வென்றவர்களாக ஆக்கி விடும். யுத்தம் செய்ய
வேண்டியிருக்காது. ஒருநிலைப்படுத்தும் சக்தியின் மூலம் இயற்கை
யாகவே எனக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்ற அனுபவம்
ஏற்படும். இயற்கை யாகவே இருக்கும், சிரமப்பட வேண்டிய
அவசியமிருக்காது. ஒருநிலைப்படுத்தும் சக்தியின் மூலம் தானாகவே
ஏக்ரஸ் பரிஸ்தா சொரூபத்தின் அனுபவம் ஏற்படும். பிரம்மா பாபாவின்
மீது அன்பு இருக்கிறது அல்லவா - எனவே பிரம்மா பாபாவைப் போன்று
ஆக வேண்டும் அதாவது பரிஸ்தா ஆக வேண்டும். ஒருநிலைப்படுத்தும்
சக்தியின் மூலம் தானாகவே அனைவரின் மீதும் அன்பு, நன்மைக்கான
விருத்தி, மரியாதைக்கான விருத்தி இருக்கவே செய்யும். ஏனெனில்
ஒருநிலைப் படுத்துவது என்றால் சுவமானத்தில் ஸ்திதி. பரிஸ்தா
ஸ்திதி சுவமானமாகும். பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள்,
வர்ணனையும் செய்கிறீர்கள் - முழுமை நிலையின் நேரம்
நெருக்கத்தில் வரும் போது என்ன பார்த்தீர்கள்?
நடந்தாலும்-சுற்றினாலும் பரிஸ்தா ரூபம், தேக உணர்விலிருந்து
விடுபட்டி ருந்தார். தேக உணர்வு வந்ததா? எதிரில் சென்றால் தேகம்
பார்க்க முடிந்ததா? அல்லது பரிஸ்தா ரூபம் அனுபவம் ஆனதா?
காரியங்கள் செய்தாலும், உரையாடல் செய்தாலும், கட்டளைகள்
பிறப்பித்தாலும், ஆர்வம்-உற்சாகம் அதிகப்படுத்தினாலும்
தேகத்திலிருந்து விடுபட்ட, சூட்சும பிரகாச ரூபத்தின் அனுபவம்
செய்தீர்கள். பிரம்மா பாபா உரையாடல் செய்து கொண்டிருந்தாலும்
இங்கு அவர் இல்லை. பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆனால்
திருஷ்டியில் அளெகீகம், ஸ்தூல திருஷ்டி அல்ல என்று
கூறுகிறீர்கள் தானே! தேக உணர்விலிருந்து விடுபட்டு,
மற்றவர்களும் தேக உணர்வில் வரவில்லை, விடுபட்ட ரூபம் தென்பட்டது.
இதைத் தான் தேகத்திலிருந்தாலும் பரிஸ்தா சொரூபம் என்று
கூறப்படுகிறது. ஒவ்வொரு விசயத்திலும், விருத்தியிலும்,
திருஷ்டியிலும், செயலிலும் விடுபட்ட அனுபவம் ஏற்பட வேண்டும்.
இவர் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் விடுபட்ட நிலையில்,
அன்பான நிலை தோன்றுகிறது. ஆன்மீக அன்பு. இப்படிப்பட்ட பரிஸ்தா
நிலையின் அனுபவம் தானும் செய்ய வேண்டும், மற்றவர்களுக்கும்
செய்விக்க வேண்டும். ஏனெனில் பரிஸ்தா ஆகாமல் தேவதை ஆக முடியாது.
பரிஸ்தாவிலிருந்து தேவதை. ஆக நம்பர் ஒன் பிரம்மா பாபாவின் ஆத்மா
நடைமுறையில் சாகார ரூபத்திலும் பரிஸ்தா வாழ்க்கையின் அனுபவம்
ஏற்படுத்தினார் மற்றும் பரிஸ்தா சொரூபம் ஆகிவிட்டார். அந்த
பரிஸ்தா ரூபத்துடன் நீங்கள் அனைவரும் கூட பரிஸ்தாவாகி பரந்தாமம்
செல்ல வேண்டும். இதற்கு மன ஒருநிலைப்படுத்துவதில் கவனம்
கொடுக்க வேண்டும். கட்டளைப்படி மனதை நடத்துங்கள். செய்ய
வேண்டும் எனில் மனதின் மூலம் செயல் செய்யுங்கள். செய்ய வேண்டாம்
ஆனால் செய் என்று மனம் கூறுகிறது. இது அதிகாரி நிலையல்ல.
விரும்பவில்லை ஆனால் ஆகிவிட்டது என்று இப்போது சில குழந்தைகள்
கூறுகிறீர்கள். யோசிக்கவில்லை, ஆனால் ஆகிவிட்டது. செய்ய
விரும்பவில்லை, ஆனால் நடந்து விடுகிறது - இது மனதிற்கு அடிமை
நிலையாகும். இப்படிப்பட்ட மனநிலை பிடிக்கவில்லை தானே! பிரம்மா
பாபாவை பின்பற்றுங்கள். பிரம்மா பாபாவைப் பார்த்தீர்கள்,
எதிரில் நின்றிருந்தாலும் என்ன அனுபவம் ஏற்பட்டது? பரிஸ்தா
நின்று கொண்டிருக்கிறார், பரிஸ்தா திருஷ்டி கொடுத்துக்
கொண்டிருக்கிறார். ஆக மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தி எளிதாக
பரிஸ்தா ஆக்கி விடும். பிரம்மா பாபாவும் குழந்தைகளுக்கு இதுவே
கூறுகின்றார் - சமம் ஆகுங்கள். சிவபாபா கூறுகின்றார் - நிராகாரி
ஆகுங்கள். பிரம்மா பாபா கூறுகின்றார் - பரிஸ்தா ஆகுங்கள். ஆக
என்ன புரிந்து கொண்டீர்கள்? ரிசல்டில் என்ன பார்த்தார்? மன
ஒருநிலைப்பாடு குறைவாக இருக்கிறது. இடையிடையில் மனம் அதிகம்
அலைபாய்கிறது. எங்கு செல்லக் கூடாதோ, அங்கு செல்கிறது எனில் அதை
என்னவென்று கூறுவது? அலைகிறது என்று கூறலாம் அல்லவா! எனவே
ஒருநிலைப்படுத்தும் சக்தியை அதிகப்படுத்துங்கள். அதிகாரி என்று
இருக்கையில் செட்டாகி இருங்கள். செட் ஆகியிருந்தால் அப்செட்
ஆகமாட்டீர்கள். செட் ஆகவில்லை எனில் அப்செட் ஆவீர்கள். எனவே
விதவிதமான சிரேஷ்ட ஸ்திதி என்ற இருக்கையில் செட் ஆகியிருங்கள்.
இது தான் ஒருநிலைப்படுத்தும் சக்தி என்று கூறப்படுகிறது. சரி
தானே? பிரம்மா பாபாவின் மீது அன்பு இருக்கிறது அல்லவா! எவ்வளவு
அன்பு இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது? அதிக அன்பு இருக்கிறது.
அன்பிற்கு கைமாறாக பாபாவிற்கு என்ன கொடுத்தீர்கள்? பாபாவின்
அன்பு இருப்பதால் தான் நீங்கள் அன்பாக இருக்கிறீர்கள் அல்லவா!
ஆக கைமாறு என்ன செய்தீர்கள்? சமம் ஆக வேண்டும் - இது தான்
கைமாறு. நல்லது.
இரட்டை அயல்நாட்டினரும் வந்திருக்கின்றனர். நன்றாக இருக்கிறது.
இரட்டை அயல்நாட்டினர்களால் மதுவனமும் அலங்காரம் ஆகிவிடுகிறது.
இன்டர்நேஷனல் ஆகிவிடுகிறது அல்லவா! பாருங்கள், மதுவனத்தில்
வர்க சேவை நடைபெறுகிறது. இதன் மூலம் ஓசை நாலாபுறங்களிலும்
பரவுகிறது. எப்போது இந்த வர்க சேவை ஆரம்பமானதோ முக்கிய
பிரமுகர்களிடத்தில் ஓசை அதிகம் பரவியிருக்கிறது என்பதை நீங்கள்
பார்க்கிறீர்கள். மிக மிக முக்கிய பிரமுகர்களின் விசயத்தை
விட்டு விடுங்கள். அவர்களுக்கு நேரம் எங்கிருக்கிறது! வேறு
பெரிய பெரிய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறீர்கள், அதன் மூலமாகவும்
ஓசை பரவியிருக்கிறது. இப்பொழுது டெல்லி மற்றும் கொல்கத்தா
செய்து கொண்டிருக்கிறது. நன்றாக திட்டம் தீட்டிக்
கொண்டிருக்கிறீர்கள். உழைப்பும் நன்றாக செய்து
கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதாவிடம் செய்திகள் வந்து
கொண்டிருக்கின்றன. டெல்லியின் ஓசை அயல்நாடு வரை சென்றடைய
வேண்டும். ஊடகத்தினர் என்ன செய்கிறீர்கள்? பாரத அளவில் மட்டும்
தானே! டெல்லியில் இந்த நிகழ்ச்சி நடந்தது, கொல்கத்தாவில் இந்த
நிகழ்ச்சி நடந்தது என்று அயல்நாட்டிலிருந்து ஓசை வர வேண்டும்.
அங்கிருந்து இந்த ஓசை இந்தியாவிற்கு வர வேண்டும். இந்திய
கும்பகர்ணர்களை அயல்நாட்டினர் தான் எழுப்ப வேண்டும் அல்லவா! ஆக
அயல்நாட்டு செய்திக்கு மகத்துவம் இருக்கிறது. நிகழ்ச்சி
பாரதத்தில் நடைபெறும். ஆனால் செய்தி அயல்நாட்டு
செய்தித்தாள்களில் வெளிவரும் போது தான் ஓசை பரவும். பாரதத்தின்
ஓசை அயல்நாட்டில் சென்றடைய வேண்டும் மற்றும் அயல்நாட்டின் ஓசை
பாரதத்திற்கு வர வேண்டும். அதன் பிரபாவம் ஏற்படும். நல்லது.
என்ன நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்களோ, நன்றாக
செய்து கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா டெல்லியிலுள்ளவர்களுக்கு
அன்பான உழைப்பிற்கான வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்.
கொல்கத்தாவினருக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்கள், ஏனெனில்
சகயோகம், அன்பு மற்றும் தைரியம் மூன்றும் இணைந்து விடும் போது
ஓசை அதிகரிக்கும். ஓசை பரவும், ஏன் பரவாது! இப்பொழுது ஊடகத்
துறையினர் இந்த அதிசயம் செய்ய வேண்டும். அனைவரும் டி.வி. யில்
பார்த்தீர்கள். இது டி.வி. யில் வந்தது என்று மட்டும் இருக்கக்
கூடாது. அது பாரதத்தில் வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது
அயல்நாடு வரை சென்றடைய வேண்டும். இந்த ஆண்டு ஓசை பரப்புவதற்கு
எவ்வளவு தைரியம் மற்றும் ஜோராக கொண்டாடுகிறீர்கள் என்பதை
பார்க்கிறேன். அயல்நாட்டினருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது
என்ற செய்தி பாப்தாதாவிற்கு கிடைத்தது. இருக்கிறது அல்லவா?
ஒருவருக்கொருவர் பார்த்து இன்னும் ஆர்வம் வருகிறது, யார்
செய்கிறார்களோ அவர்கள் பிரம்மாவிற்கு சமம் ஆகிறார்கள். நன்றாக
இருக்கிறது. தாதிக்கும் சங்கல்பம் வருகிறது, பிசி ஆக்குவதற்கான
முறை நன்றாக வருகிறது. நல்லது. நிமித்தமாக இருக்கிறார் அல்லவா!
நல்லது, அனைவரும் பறக்கும் கலையில் இருக்கிறீர்களா? பறக்கும்
கலை விரைவான கலையாகும். நடக்கும் கலை, ஏறும் கலை என்பது
விரைவான கலை அல்ல. பறக்கும் கலை விரைவாகவும் இருக்கிறது மற்றும்
முதலில் கொண்டு வரக் கூடியதாகவும் இருக்கிறது. நல்லது.
தாய்மார்கள் என்ன செய்வீர்கள்? தாய்மார்கள் தங்களது அருகில்
உள்ளவர்களை எழுப்புங்கள். குறைந்தது தாய்மார்கள் யாரும் புகார்
கொடுப்பவர்களாக இருந்து விடக் கூடாது. தாய்மார்களின் எண்ணிக்கை
எப்பொழுதும் அதிகமாக இருக்கிறது. பாப்தாதாவிற்கு குஷி
ஏற்படுகிறது மற்றும் இந்த முறை அனைவரின் எண்ணிக்கையும் நன்றாக
இருக்கிறது. குமாரர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருக்கின்றனர்.
குமாரர்கள் தங்களது அருகாமையில் உள்ளவர்களை எழுப்புங்கள்.
நன்றாக இருக்கிறது. குமாரர்கள் இந்த அதிசயம் செய்து காட்டுங்கள்
- கனவிலும் தூய்மையின் பரிபக்குவம் இருக்கிறது. பாப்தாதா
உலகத்தினருக்கு சவால் விட்டு கூற வேண்டும் - பிரம்மா குமார்
இளைஞர்கள் குமார், டபுள் குமார்கள் அல்லவா! பிரம்மா குமாராகவும்
இருக்கிறீர்கள் மற்றும் சரீரத்திலும் குமாரர்களாக
இருக்கிறீர்கள். எனவே தூய்மையின் வரையறை நடைமுறையில் இருக்க
வேண்டும். உங்களது தூய்மையை சோதிக்கலாமா? கட்டளையிடலாமா?
செய்யவா கட்டளை? இதில் கை உயர்த்தவில்லை. சோதிப்பதற்கு மிஷின்
இருக்கிறதா? கனவிலும் அசுத்தம் வருவதற்கு தைரியம் இருக்கக்
கூடாது. குமாரிகளும் இவ்வாறு ஆக வேண்டும், குமாரி என்றால்
பூஜ்ய பவித்ர குமாரி. குமாரர்கள் மற்றும் குமாரிகள்
பாப்தாதாவிடம் உறுதிமொழி செய்ய வேண்டும் - நாம் அனைவரும் அந்த
அளவிற்கு தூய்மையாக இருக்கின்றோம், கனவிலும் சங்கல்பம் வர
முடியாது. அப்போது குமாரர்கள் மற்றும் குமாரிகளுக்கு
தூய்மைக்கான விழா கொண்டாடப்படும். இப்பொழுது சிறிது சிறிது
இருக்கிறது. பாப்தாதா அறிவார். அசுத்தம் என்பதே இல்லாமல்
இருக்க வேண்டும். ஏனெனில் புது பிறப்பு எடுத்திருக்கிறீர்கள்
அல்லவா! அசுத்தம் என்பது உங்களது கடந்த காலத்தின் விசயமாகும்.
மறுபிறவி, பிறப்பே பிரம்மாவின் வாய் வழி தூய்மையான பிறப்பாகும்.
எனவே தூய பிறப்பின் மரியாதை மிகவும் அவசியமாகும். குமாரர்கள்,
குமாரிகள் இந்த கொடியை பறக்க விட வேண்டும். தூய்மையாக
இருக்கிறோம், தூய்மைக்கான சன்ஸ்காரம் உலகில் பரப்புவோம் என்ற
முழுக்கம் ஏற்பட வேண்டும். குமாரிகள் கேட்டீர்கள் தானே!
பாருங்கள் குமாரிகள் எவ்வளவு பேர் வந்திருக்கின்றனர்! இப்பொழுது
பார்க்கிறேன் - இந்த ஓசை குமாரிகள் பரப்புவார்களா அல்லது
குமாரர்களா? பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள். அசுத்தத்தின் பெயர்
அடையாளம் இருக்கக் கூடாது. பிராமண வாழ்க்கை என்றால் இது தான்.
தாய்மார்களிடமும் பற்று இருக்கிறது எனில் அசுத்தம் இருக்கிறது.
தாய்மார்களும் பிராமணர்கள் அல்லவா! எனவே தாய்மார்களிடம்,
குமாரிகளிடம், குமாரர்களிடம், சகோதரர்களிடம் கூடாது. பிராமணன்
என்றாலே தூய்மையான ஆத்மா. அசுத்த காரியம் செய்கிறீர்கள் என்றால்
இது மிகப் பெரிய பாவமாகும். இந்த பாவத்திற்கான தண்டனை மிகக்
கடுமையானது. இது நடக்கத் தான் செய்கிறது என்று நினைக்காதீர்கள்.
சிறிது அதிகமாகவே நடக்கும் என்று நினைக்காதீர்கள். இது முதல்
பாடமாகும். புதுமையே தூய்மையாகும். பிரம்மா பாபா தூய்மையின்
காரணத்தினால் நிந்தனைகள் அடைந்தார். நடந்து விட்டது என்று
இருந்து விடாதீர்கள். இதில் சோம்பலுடன் இருக்காதீர்கள். எந்த
ஒரு பிராமணன் அது சமர்பனமானவர்களாக இருந்தாலும், சேவாதாரியாக
இருந்தாலும், இல்லறத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் - இந்த
விசயத்தில் தர்மராஜரும் விட்டு விடமாட்டார். பிரம்மா பாபாவும்
தர்மராஜருக்கு துணையாக இருப்பார். ஆகையால் குமார், குமாரிகள்
எங்கிருந்தாலும், மதுவனத்தில் இருந்தாலும், சேவை நிலையத்தில்
இருந்தாலும் இந்த காயம் அதாவது சங்கல்பத்திலும் காயம் அடைவது
மிகப் பெரிய காயமாகும். தூய்மையான மனதுடன் இருங்கள், தூய்மையான
உடலுடன் இருங்கள் என்று பாட்டு பாடுகிறீர்கள் அல்லவா! ஆக மனம்
தூய்மையாக இருக்கிறது எனில் வாழ்க்கை தூய்மையாக இருக்கிறது.
இதில் இலேசாக இருந்து விடாதீர்கள். சிறிது இருந்து விட்டால்
என்ன! சிறிது அல்ல, அதிகம். பாப்தாதா அதிகாரப்பூர்வமாக கட்டளை
கொடுத்துக் கொண்டிருக்கின்றார் - இதில் தப்பிக்க முடியாது.
யாராக இருந்தாலும் இதற்கான கணக்கு வழக்கு மிக நன்றாக பார்ப்பேன்.
ஆகையால் கவனமாக, எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவரும் கவனமாக
கேட்டீர்கள் தானே! இரண்டு காதுகளும் திறந்து கேட்க வேண்டும்.
விருத்தியிலும் டச் செய்யக் கூடாது. திருஷ்டியிலும் டச் செய்யக்
கூடாது. சங்கல்பத்தில் இல்லையெனில் விருத்தி, திருஷ்டியில்
எப்படி இருக்கும்! ஏனெனில் சம்பன்ன நேரம், முழு தூய்மை ஆகக்
கூடிய நேரம் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த
விசயங்கள் வெள்ளை காகிதத்தில் கருப்பு கரையாக இருக்கும். நல்லது.
எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறீர்களோ வந்திருக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
நல்லது, மனதை கட்டளைப்படி நடத்துங்கள். விநாடியில் எங்கு
விரும்புகிறீர்களோ அங்கு ஈடுபட வேண்டும், நிலைத்து விட வேண்டும்.
இந்த பயிற்சி செய்யுங்கள். (டிரில்).
நல்லது. பல இடங்களில் குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
நினைவும் செய்து கொண்டிருக்கிறார்கள், கேட்டுக் கொண்டும்
இருக்கிறார்கள். விஞ்ஞான சாதனங்கள் உண்மையில் குழந்தைகளாகிய
உங்களுக்கு சுகம் கொடுக்கிறது என்பதை கேட்டு மகிழ்ச்சியும்
அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து பொக்கிஷங்களிலும் சதா
சம்பன்னமான குழந்தைகளுக்கு, சதா அதிஷ்டசாலி, குஷியான முகம்
மற்றும் நடத்தையின் மூலம் குஷியின் அஞ்சலி கொடுக்கக் கூடிய
விஷ்வ கல்யாணகாரி குழந்தைகளுக்கு, சதா மனதிற்கு அதிகாரியாகி
ஒருநிலைப்படுத்தும் சக்தியின் மூலம் மனதை கட்டுப்படுத்தக்
கூடிய மனதை வென்று, உலகை வெல்லும் குழந்தைகளுக்கு, சதா பிராமண
வாழ்க்கையின் விசேஷதா தூய்மையின் தனித்தன்மையுடன் இருக்கக்
கூடிய பிராமண ஆத்மாக்களுக்கு, சதா டபுள் லைட் ஆகி பரிஸ்தா
வாழ்க்கையில் பிரம்மா பாபாவை பின்பற்றக் கூடிய, இவ்வாறு பிரம்மா
பாபாவிற்கு சமமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் நமஸ்தே. நாலாபுறங்களிலும் கேட்கக் கூடிய, நினைவு
செய்யக் கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் கூட மிக மிக உளமார
ஆசிர்வாத சகிதமாக அன்பு நினைவுகள், அனைவருக்கும் நமஸ்தே.
வரதானம்:
சாகார தந்தையை பின்பற்றி நம்பர்ஒன் ஆகக் கூடிய சம்பூர்ன பரிஸ்தா
ஆகுக.
நம்பர் ஒன் வருவதற்கு எளிய சாதனம் - நம்பர் ஒன்னாக இருக்கும்
பிரம்மா பாபாவைப் பாருங்கள். பலரைப் பார்ப்பதற்குப் பதிலாக
ஒருவரைப் பாருங்கள் மற்றும் ஒருவரை பின்பற்றுங்கள். நான் தான்
பரிஸ்தா என்ற மந்திரத்தை பக்கா செய்து கொண்டால் வித்தியாசம்
நீங்கி விடும். பிறகு விஞ்ஞான சாதனங்கள் தனது காரியம் செய்ய
ஆரம்பித்து விடும். மேலும் நீங்கள் சம்பூர்ன பரிஸ்தா தேவதை ஆகி
புது உலகில் அவதரிப்பீர்கள். ஆக சம்பூர்ன பரிஸ்தா ஆவது என்றால்
சாகார தந்தையை பின்பற்ற வேண்டும்.
சுலோகன்:
மானத்தை தியாகம் செய்வதில் அனைவரிடத்திலும் மரியாதை அடைவதற்கான
பாக்கியம் நிறைந்திருக்கிறது.
தனது சக்திசாலியான மனதின் மூலம் சக்தி கொடுக்கும் சேவை
செய்யுங்கள்:
பாப்தாதாவிற்கு கருணை வருவது போன்று குழந்தைகளாகிய நீங்களும்
மாஸ்டர் கருணையுள்ளம் உடையவராகி தனது விருத்தியின்
வாயுமண்டலத்தின் மூலம் ஆத்மாக்களுக்கு தந்தையின் மூலம் அடைந்த
சக்திகளை கொடுங்கள். குறுகிய காலத்தில் முழு உலக சேவை நிறைவு
செய்ய வேண்டும், தத்துவங்கள் சகிதமாக அனைவரையும் பாவனம் ஆக்க
வேண்டும் எனில் தீவிர வேகத்தில் சேவை செய்யுங்கள்.