12-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய இந்த
பிராமண குலம் முற்றிலும் தனிப்பட்டதாகும், பிராமணர்களாகிய
நீங்கள் தான் ஞானம் நிறைந்தவர்கள், நீங்கள் ஞானம், விஞ்ஞானம்
மற்றும் அஞ்ஞானத்தை தெரிந்துள்ளீர்கள்
கேள்வி:
எந்த ஒரு எளிய முயற்சியின் மூலம்
குழந்தைகளாகிய உங்களுடைய மனம் அனைத்து விஷயங்களிலிருந்தும்
விடுபட்டுக் கொண்டே செல்லும்?
பதில்:
ஆன்மீகத் தொழிலில் மட்டுமே
ஈடுபடுங்கள், எந்தளவிற்கு ஆன்மீக சேவை செய்து கொண்டே
இருப்பீர்களோ, அந்தளவிற்கு மற்ற அனைத்து விஷங்களிலிருந்தும்
தானாகவே மனம் விடுபட்டுக் கொண்டே செல்லும். இராஜ்யத்தை
அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு விடுவீர்கள். ஆனால் ஆன்மீக
சேவையின் கூடவே என்ன படைப்பைப் படைத்தீர்களோ (குடும்பத்தை),
அதையும் பாதுகாக்க வேண்டும்.
பாடல்:
யார் தலைவனோடு இருக்கிறார்களோ..................
ஓம் சாந்தி.
பாபாவை தலைவன் என்று சொல்லப்படுகிறது. பாபாவிற்கு முன்னால்
குழந்தைகள் அமர்ந்துள்ளார்கள். நாம் எந்த சாது சந்நியாசிக்கு
முன்னால் அமர்ந்திருக்கவில்லை என்பதைக் குழந்தைகள்
தெரிந்துள்ளார்கள். அந்த தந்தை ஞானக்கடலாக இருக்கின்றார்,
ஞானத்தின் மூலம் தான் சத்கதி ஏற்படுகிறது. ஞானம், விஞ்ஞானம்
மற்றும் அஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானம் என்றால்
ஆத்ம-அபிமானியாக ஆவதாகும், நினைவு யாத்திரையில் இருப்பது
மற்றும் ஞானம் என்றால் சிருஷ்டி சக்கரத்தை தெரிந்து கொள்வ
தாகும். ஞானம், விஞ்ஞானம் மற்றும் அஞ்ஞானம் - இதனுடைய
அர்த்தத்தை மனிதர்கள் முற்றிலும் தெரிந்திருக்கவில்லை. நீங்கள்
இப்போது சங்கமயுக பிராமணர்களாவீர்கள். உங்களுடைய இந்த
பிராமணகுலம் தனிப்பட்டதாகும், இதனை யாரும் தெரிந்திருக்கவில்லை.
பிராமணர்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றார்கள் என்ற விஷயம்
சாஸ்திரங்களில் இல்லை. பிரஜாபிதா பிரம்மா இருந்துவிட்டு
சென்றிருக்கிறார், அவரை ஆதி தேவன் என்று சொல்கிறார்கள்
என்பதையும் தெரிந்துள்ளார்கள். ஆதி தேவி ஜகதம்பா, அவர் யார்!
இதையும் உலகம் தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பாக பிரம்மாவின்
வாய் வம்சாவழி யாகத்தான் இருப்பார். அவர் ஒன்றும் பிரம்மாவின்
மனைவி இல்லை. தத்தெடுக்கிறார் அல்லவா! குழந்தைகளாகிய உங்களையும்
தத்தெடுக்கின்றார். பிராமணர்களை தேவதைகள் என்று சொல்ல முடியாது.
இங்கே பிரம்மாவினுடைய கோயில் இருக்கிறது, அவரும் மனிதர் தான்
அல்லவா!. பிரம்மாவோடு சரஸ்வதியும் இருக்கின்றார். பிறகு
தேவிகளின் கோயில்களும் இருக்கின்றன. அனைவரும் இங்கே இருக்கும்
மனிதர்கள் தான் அல்லவா! ஒருவருடைய கோயிலை உருவாக்கி விட்டார்கள்.
பிரஜாபிதாவிற்கு நிறைய பிரஜைகள் இருப்பார்கள் அல்லவா! இப்போது
உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குலம்
வளர்ந்து கொண்டிருக்கிறது. அனைவரும் தர்மத்தின்
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாவர். இப்போது உங்களை எல்லையற்ற
தந்தை தர்மத்தின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக்கியுள்ளார்.
பிரம்மாவும் கூட எல்லை ய்யற்ற தந்தை யின் குழந்தையே ஆவார்,
இவருக்கும் கூட அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. பேரன்
பேத்திகளாகிய உங்களுக்கும் கூட அவரிடமிருந்து தான் கிடைக்கிறது.
ஞானம் யாரிடமும் இல்லை ஏனென்றால் ஞானக்கடல் ஒருவரே ஆவார், அந்த
தந்தை எதுவரை வர வில்லையோ அதுவரை யாருக்கும் சத்கதி
ஏற்படுவதில்லை. இப்போது நீங்கள் பக்தியிலிருந்து ஞானத்திற்கு
சத்கதிக்காக வந்துள்ளீர்கள். சத்யுகத்தை தான் சத்கதி என்று
சொல்லப்படுகிறது. கலியுகத்தை துர்கதி என்று சொல்லப்படுகிறது
ஏனென்றால் இராவண இராஜ்ஜியமாக இருக்கிறது. சத்கதியை இராம
இராஜ்யம் என்றும் சொல்கிறார்கள். சூரியவம்சம் என்றும்
சொல்கிறார்கள். யதார்த்தமான பெயர் சூரியவம்சத்தவர்,
சந்திரவம்சத்தவர் என்பதாகும். நாம் தான் சூரியவம்ச
குலத்தவர்களாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம்,
என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள், இந்த ஞானம் எந்த
சாஸ்திரங்களிலும் இருக்க முடியாது ஏனென்றால் சாஸ்திரங்கள் பக்தி
மார்க்கத் தினுடையதாகும். அவை அனைத்தும் வினாசமாகி விடும்.
இங்கிருந்து என்ன சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வார்களோ, அங்கு
சென்று அவை அனைத்தையும் உருவாக்க ஆரம்பித்து விடுவார் கள்.
உங்களிடத் திலும் கூட இராஜ்யத்தின் சம்ஸ்காரங்கள்
நிரப்பப்படுகின்றன. நீங்கள் இராஜ்யம் செய்வீர்கள் அறிவியலார்கள்
அந்த இராஜ்யத்தில் வந்து, என்ன கலைகளை கற்கிறார்களோ அதையே அங்கு
செய்வார்கள். கண்டிப்பாக சூரியவம்ச, சந்திரவம்ச இராஜ்யத்தில்
செல்வார்கள். அவர்களிடத்தில் வெறும் அறிவியலின் ஞானம் மட்டுமே
இருக்கிறது. அவர்கள் அதனுடைய சம்ஸ்காரத்தை எடுத்துச்
செல்வார்கள். அது கூட சம்ஸ்காரமே ஆகும். அவர்களும் கூட முயற்சி
செய்கிறார்கள், அவர்களிடத்தில் அந்தப் படிப்பு இருக்கிறது.
உங்களிடத்தில் வேறு எந்தப் படிப்பும் இல்லை. நீங்கள்
பாபாவிடமிருந்து இராஜ்யத்தை அடைவீர்கள். தொழில் போன்றவற்றில்
அந்த சம்ஸ்காரம் இருக்கிறது அல்லவா! எவ்வளவு சச்சரவுகள்
இருக்கின்றன. ஆனால் எதுவரை வானப் பிரஸ்த நிலையை அடையவில்லையோ
அதுவரை வீடு வாசலையும் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால்
குழந்தைகளை யார் பார்ப்பார்கள்? இங்கே வந்து இருந்து கொள்ள
முடியாது. எப்போது இந்தத் தொழிலில் முழுமையான விதத்தில்
ஈடுபட்டு விடுவீர்களோ பிறகு அது விடுபட முடியும் என்று
சொல்கிறார். கூடவே படைப்பையும் கண்டிப்பாக பாதுகாக்க
வேண்டியிருக்கிறது. யாராவது நல்ல விதத்தில் ஆன்மீக சேவையில்
ஈடுபட்டு விடுகிறார்கள் என்றால் பிறகு அதிலிருந்து மனம் விலகி
விடும். எந்தளவிற்கு நேரத்தை இந்த ஆன்மீக சேவையில் கொடுக்
கிறோமோ, அந்தளவிற்கு நல்லது என்று புரிந்து கொள்வார்கள்.
தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆவதற்கான வழியை சொல்லவே
பாபா வந்துள்ளார், எனவே குழந்தைகளும் இந்த சேவையே செய்ய
வேண்டும். ஒவ்வொருவருடைய கணக்கும் பார்க்கப்படுகிறது.
எல்லையற்ற தந்தை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை யாவதற்கான
வழியை மட்டுமே கொடுக்கின்றார், அவர் தூய்மையாவதற்கான வழியை
மட்டுமே கூறுகின்றார். மற்றபடி இதைப் பார்த்துக் கொள்வது, வழி
சொல்வது இவருடைய வேலையாகி விடுகிறது. என்னிடத்தில் எந்த தொழில்
போன்ற விஷயங்களைப் பற்றி கேட்க கூடாது என்று சிவபாபா
கூறுகின்றார். வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து
தூய்மையாக்குங்கள் என்று தான் என்னை நீங்கள் அழைத்தீர்கள், எனவே
நான் இவரின் மூலம் உங்களை தூய்மையாக்கிக் கொண்டிருக்கின்றேன்.
இவரும் தந்தை தான், இவருடைய வழிப்படி நடக்க வேண்டும். அவருடையது
ஆன்மீக வழி, இவருடையது தேகத் தினுடைய வழியாகும். இவருக்கும்
கூட எவ்வளவு பொறுப்பு இருக்கிறது. பாபாவின் கட்டளை என்னை
மட்டும் நினைவு செய்யுங்கள் என்று இவரும் கூட சொல்லிக் கொண்டே
இருக்கின்றார். பாபாவின் வழிப்படி செல்லுங்கள். மற்றபடி
குழந்தைகள் ஏதாவது கேட்க வேண்டியிருக்கிறது, வேலை யில் எப்படி
நடந்து கொள்வது, போன்ற விஷயங்களை இந்த சாகார பாபா(பிரம்மா)
நல்ல விதத்தில் புரிய வைக்க முடியும். அனுபவஸ்தர், இவர்
சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படி-இப்படியெல்லம் நான்
செய்கின்றேன், இவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும், இவர்
கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஏனென்றால் இவர்
அனைத்திலும் முன்னால் இருக்கின்றார். அனைத்து புயல்களும்
முதலில் இவரிடம் வருகிறது ஆகையினால் அனைவரை யும் விட பலசாலி
இவர் ஆவார், ஆகையினால் தான் இவர் உயர்ந்த பதவியும் அடைகின்றார்.
மாயை பலசாலியிடம் தான் சண்டையிடுகிறது. இவர் உடனே அனைத்தையும்
விட்டு விட்டார், இவருடைய நடிப்பு அப்படி இருந்தது. பாபா இவரின்
மூலம் இதை செய்து விட்டார். செய்பவர் செய்விப்பவர் அவர் அல்லவா!
குஷியோடு விட்டு விட்டார், காட்சி ஏற்பட்டு விட்டது. இப்போது
நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம். இந்த பைசாவிற்கு
ஒப்பான பொருளை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது? வினாசத்தின்
காட்சியையும் காட்டி விட்டேன். புரிந்து கொண்டார், இந்தப் பழைய
உலகம் வினாசம் ஆகப்போகிறது. நமக்கு மீண்டும் இராஜ்யம்
கிடைக்கிறது எனும்போது உடனே விட்டு விட்டார். இப்போது
பாபாவினுடைய வழிப்படி நடக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள்
என்று பாபா கூறுகின்றார். நாடகத்தின்படி பட்டி உருவாக
வேண்டியிருந்தது. இவ்வளவு பேர் இவர்கள் அனைவரும் ஏன் ஓடி
வந்தார்கள் என்று மனிதர்கள் புரிந்து கொண்டார்களா என்ன? இவர்
ஒன்றும் சாதுவோ சன்னியாசியோ அல்ல. இவர் எளிமையானவராக இருக்
கின்றார், இவர் யாரையும் ஓடி வர வைக்கவில்லை. கிருஷ்ணருடைய
சரித்திரம் எதுவும் இல்லை. மனிதர்கள் அனைவருடைய மகிமை எதுவும்
இல்லை. மகிமைகள் அனைத்தும் ஒரு தந்தையினுடைய தாகும். அவ்வளவு
தான். பாபா தான் வந்து அனைவருக்கும் சுகம் கொடுக்கின்றார்.
உங்களோடு பேசுகின்றார். நீங்கள் இங்கே யாரிடம் வந்துள்ளீர்கள்?
உங்களுடைய புத்தி அங்கேயும் செல்லும், இங்கேயும் இருக்கும்
ஏனென்றால் சிவபாபா அங்கே (பரந்தாமத்தில்) இருக்கக் கூடியவர்
என்பதை தெரிந்துள்ளீர்கள். இப்போது இவருக்குள் வந்துள்ளார்.
பாபாவிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும்.
கலியுகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சொர்க்கம் வரும். கிருஷ்ணர்
கூட பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெற்று சென்று இராஜ்ஜியம்
செய்கின்றார், இதில் சரித்திரத்தின் விஷயமே இல்லை.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு தந்தையே ஆவார். அவருக்கு தான்
மகிமையும் நடக்கிறது. இவர் கூட அவருடைய அறிமுகத்தை
கொடுக்கின்றார். ஒருவேளை அவர் நான் சொல்கின்றேன் என்று சொன்னால்
இவர் தன்னைப்பற்றி சொல்கின்றார் என்று மனிதர்கள் புரிந்து
கொள்வார்கள். இந்த விஷயங் களை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள், பகவானை ஒருபோதும் மனிதன் என்று சொல்ல முடியாது.
அவர் எப்போதுமே ஒரு நிராகாரமானவராகவே இருக்கின்றார்.
பரந்தாமத்தில் இருக் கின்றார். உங்களுடைய புத்தி மேலேயும்
செல்கிறது பிறகு கீழேயும் வருகிறது.
பாபா தூரதேசத்திலிருந்து மாற்றானுடைய தேசத்தில் வந்து நமக்கு
படிப்பித்துவிட்டு பிறகு சென்று விடுகின்றார். நான் ஒரு
வினாடியில் வருகின்றேன் என்று அவரே கூறுகின்றார். நேரம்
பிடிப்பதில்லை. ஆத்மாவும் கூட ஒரு சரீரத்தை விட்டு விட்டு
மற்றொன்றில் செல்கிறது. யாரும் பார்க்க முடியாது. ஆத்மா மிகவும்
வேகமானதாகும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்
பட்டுள்ளது. இராவண இராஜ்ஜியத்தை ஜீவன்பந்தன இராஜ்ஜியம் என்று
சொல்லலாம். குழந்தை பிறந்தது என்றால் தந்தையின் ஆஸ்தி கிடைத்தது.
நீங்களும் கூட பாபாவை அறிந்து கொண்டீர் கள் பிறகு
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆனீர்கள் பிறகு அதில்
வரிசைக்கிரமமான முயற்சிக்கு ஏற்றபடி பதவி இருக்கிறது. பாபா
மிகவும் நல்ல விதத்தில் புரிய வைத்துக் கொண்டே இருக் கின்றார்,
இரண்டு தந்தையர் இருக்கின்றனர் - ஒருவர் லௌகீகம், மற்றொருவர்
பரலௌகீக தந்தை யாவார். துக்கத்தில் அனைவரும் நினைப்பார்கள்,
சுகத்தில் யாரும் நினைவு செய்ய மாட்டார்கள் என்று பாடுகிறார்கள்.
பாரதவாசிகளாகிய நாம் சுகத்தில் இருந்தபோது நினைவு செய்யவில்லை
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு நாம் 84 பிறவிகள்
எடுத்திருக்கிறோம். ஆத்மாவில் அழுக்கு சேரும்போது கலைகள்
குறைந்து கொண்டே செல்கிறது. 16 கலைகள் முழுமை யானவர்கள் பிறகு
2 கலைகள் குறைந்து விடுகிறது. குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி
பெற்றதால் இராமருக்கு வில்-அம்பை காட்டியுள்ளார்கள். மற்றபடி
எந்த வில்லையும் உடைக்கவில்லை. இது ஒரு அடையாளத்தை கொடுத்து
விட்டார்கள். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங் களாகும்.
பக்தியில் மனிதர்கள் எவ்வளவு அலைகிறார்கள்! இப்போது உங்களுக்கு
ஞானம் கிடைத் திருக்கிறது, எனவே அலைவது நின்று விடுகிறது.
ஹே சிவபாபா என்று சொல்வது அழைக்கும் வார்த்தையாகும். நீங்கள்
ஹே என்ற வார்த்தையை சொல்லக் கூடாது. பாபாவை நினைவு செய்ய
வேண்டும். புலம்பினீர்கள் என்றால் பக்தியின் அம்சம் வந்து
விட்டது. ஹே பகவானே என்று சொல்வது கூட பக்தியின் வழக்கமாகும்.
ஹே பகவான் என்று சொல்லி நினைவு செய்யுங்கள் என்று பாபா சொன்னாரா
என்ன! உள் நோக்குமுக முடையவராக ஆகி என்னை நினைவு செய்யுங்கள்.
ஜபிக்கக் கூட தேவையில்லை. ஜபிப்பது கூட பக்தி மார்க்கத்தின்
வார்த்தையாகும். உங்களுக்கு தந்தையின் அறிமுகம்
கிடைத்திருக்கிறது, இப்போது பாபாவின் ஸ்ரீமத்படி செல்லுங்கள்.
எப்படி லௌகீக குழந்தை தேகதாரி தந்தையை நினைவு செய்வதைப் போல்
பாபாவை நினைவு செய்யுங்கள். அவர்கள் தேக- அபிமானத்தில்
இருக்கின்ற காரணத் தினால் தேகதாரி தந்தையையே நினைவு
செய்கிறார்கள். பரலௌகீக தந்தை ஆத்ம-அபிமானியாக இருக்கின்றார்.
இவருக்குள் வருகின்றார் என்றாலும் கூட தேக-அபிமானியாக ஆவதில்லை.
நான் இந்த சரீரத்தை உங்களுக்கு ஞானம் கொடுப்பதற்காக கடனாகப்
பெற்றுள்ளேன் என்று கூறுகின்றார். ஞானக்கடலாக இருக் கின்றேன்,
ஆனால் ஞானத்தை எப்படி கொடுக்கக் முடியும்? நீங்கள் கர்பத்தில்
செல்கிறீர்கள், நான் செல்கின்றேனா என்ன? என்னுடைய நிலையே வழியே
தனிப்பட்டதாகும். தூண்டுதல் கொடுக்க முடியுமா என்ன! நான்
சாதாரண உடலில் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். அவருடைய
பெயரை பிரம்மா என்று வைக்கின்றேன் ஏனென்றால் சன்னியாசம்
செய்கிறார் அல்லவா.!
இப்போது பிராமணர்களின் மாலை உருவாக முடியாது என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள் ஏனென்றால் உடைந்து
கொண்டே இருக்கிறது. எப்போது பிராமணர் கள் இறுதியை அடைந்து
விடுகிறார்களோ, அப்போது ருத்ர மாலை உருவாகிறது, பிறகு
விஷ்ணுவின் மாலையில் செல்கிறார்கள். மாலையில் வருவதற்கு நினைவு
யாத்திரை வேண்டும். இப்போது உங்களுடைய புத்தியில் நாம் தான்
முதல்-முதலில் சதோபிரதானர்களாக இருந்தோம் பிறகு சதோ, இரஜோ
தமோவில் வருகின்றோம். நாம் தான் அது என்பதின் அர்த்தம்
இருக்கிறது அல்லவா. ஓம் என்பதின் அர்த்தம் தனிப்பட்டது, ஓம்
என்றால் ஆத்மா. பிறகு அதே ஆத்மா சொல்கிறது, ஆத்மாக்களாகிய நாம்
தேவதா, சத்திரிய..... பிறகு அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா
வாகிறது என்று சொல்லி விடுகிறார்கள். உங்களுடைய ஓம் மற்றும்
நாம் தான் அது என்பதின் அர்த்தம் முற்றிலும் தனிப் பட்டதாகும்.
பிறகு ஆத்மா வர்ணங்களில் வருகிறது, ஆத்மாக்களாகிய நாம் முதலில்
தேவதைகளாகவும் சத்திரியர்களாகவும் ஆகின்றோம். ஆத்மா தான்
பரமாத்மா வாகிறது என்பது அல்ல, முழுமையான ஞானம் இல்லாத
காரணத்தினால் அர்த்தத்தையே குழப்பி விட்டார்கள். அகம்
பிரம்மாஸ்மி என்று சொல்கிறார்கள், இது கூட தவறாகும். நான்
படைப்பிற்கு எஜமானனாக ஆவதில்லை என்று பாபா கூறுகின்றார். இந்தப்
படைப்பினுடைய எஜமானர்கள் நீங்களா வீர்கள். நீங்கள் தான்
உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். பிரம்மம் என்பது
தத்துவமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்தப் படைப் பினுடைய
எஜமானர்களாக ஆகின்றீர்கள். இப்போது பாபா அனைத்து வேதங்கள்
சாஸ்திரங் களின் யதார்த்தமான அர்த்தத்தை அமர்ந்து கூறுகின்றார்.
இப்போது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பாபா உங்களுக்கு
புதிய புதிய விஷயங்களை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார்.
பக்தி என்ன சொல்கிறது, ஞானம் என்ன சொல்கிறது. பக்தி
மார்க்கத்தில் கோயில்களை உருவாக்கியுள்ளார்கள், ஜபம்-தவம்
செய்துள்ளார் கள், பணத்தை செலவளித்துள்ளார்கள். உங்களுடைய
கோயில்களை நிறைய பேர் கொள்ளை யடித்துள்ளார்கள். இது கூட
நாடகத்தின் நடிப்பாகும் பிறகு கண்டிப்பாக அவர்களிடமிருந்து
திரும்ப கிடைக்க வேண்டும். இப்போது பாருங்கள் எவ்வளவு
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! நாளுக்குள் நாள் அதிகரித்துக்
கொண்டே இருக்கிறார்கள். இவர்களும் வாங்கிக் கொண்டே இருக்
கிறார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்தார்களோ, அவ்வளவு முழுமையான
கணக்கைக் கொடுப்பார் கள். உங்களுடைய பணத்தை யார்
சாப்பிட்டார்களோ, அவர்கள் விழுங்கி விட முடியாது. பாரதம்
அழிவற்ற கண்டம் அல்லவா! பாபாவினுடைய பிறப்பிடமாக இருக்கிறது.
இங்கே தான் பாபா வருகின்றார். பாபாவினுடைய கண்டத்திலிருந்து
தான் எடுத்துச் செல்கிறார்கள் என்றால் திருப்பி தரத்தான்
வேண்டும். பாருங்கள் சமயப்படி எப்படி கிடைக் கிறது!. இந்த
விஷயங்களை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எந்த சமயத்தில் வினாசம்
வரும் என்பதை அவர்கள் தெரிந்துள்ளார்களா என்ன! அரசாங்கம் கூட
இந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ளாது. நாடகத்தில் பதிவாகியுள்ளது,
கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். திரும்ப வந்து
கொண்டிருக்கிறது. நம்முடைய இராஜ்யத் திலிருந்து நிறைய பணத்தை
கொண்டு சென்றார்கள், அதை திரும்ப கொடுத்துக் கொண்டிருக்
கிறார்கள். உங்களுக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் கவலை இல்லை.
பாபாவை நினைவு செய்வதற்கான கவலை மட்டுமே இருக்கிறது. நினைவின்
மூலம் தான் பாவம் பஸ்பமாகும். ஞானம் மிகவும் சுலபமாகும்.
மற்றபடி யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அப்படி ஆகும்.
ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அழிவற்ற டாக்டரிடம்
ஒவ்வொரு விஷயத்திலும் வழி கேட்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் இந்த ஆன்மீகத்
தொழிலை செய்ய வேண்டும். ஆன்மீகத் தொழிலின் சம்ஸ்காரத்தை
ஏற்படுத்த வேண்டும். தூய்மையற்றவர் களை தூய்மையாக்கும் சேவையை
செய்ய வேண்டும்.
2) உள் நோக்குமுகமுடையவர்களாக ஆகி பாபாவை நினைவு செய்ய வேண்டும்.
வாயி லிருந்து ஹே என்ற வார்த்தை வரக்கூடாது. எப்படி பாபாவிற்கு
அஹங்காரம் இல்லையோ, அதுபோல் அகங்காரம் இல்லாதவர்களாக ஆக
வேண்டும்.
வரதானம்:
மனதின் எண்ணம் மற்றும் விருத்தி மூலம் சிரேஷ்டமான அதிர்வலைகளின்
நறுமணத்தை பரப்பக்கூடிய சிவசக்தி கம்பைண்டு ஆகுக.
எவ்வாறு தற்காலத்தில் ஸ்தூலமான நறுமணத்திற்கான சாதனங்களால் ரோஜா,
சந்தனம் மற்றும் வெவ்வேறு விதமான நறுமணத்தைப் பரப்புகின்றார்களோ,
அதுபோல் சிவனோடு சக்தியாக இணைந்து நீங்கள் மனதின் எண்ணம்
மற்றும் விருத்தி மூலம் சுகம், சாந்தி, அன்பு, ஆனந்தத்தின்
நறுமணத்தைப் பரப்புங்கள். தினமும் அமிர்தவேளையில் விதவிதமான
சிரேஷ்டமான அதிர்வலை களின் நீரூற்று போல் ஆத்மாக்கள் மீது
பன்னீர் தெளித்திடுங்கள். எண்ணம் என்ற தானியங்கி சுவிட்சை
மட்டும் ஆன் செய்திடுங்கள், அப்பொழுது உலகத்தில் அசுத்தமான
விருத்திகளின் துர்நாற்றம் என்ன உள்ளதோ, அது சமாப்தி ஆகிவிடும்.
சுலோகன்:
சுகத்தை வழங்கும் வள்ளல் மூலம் சுகத்தின் பொக்கிசத்தைப் பெறுவது
- இதுவே அவருடைய அன்பின் அடையாளம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை - இணைந்த ரூபத்தின் நினைவினால் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்.
எந்தளவு சக்திகளிடம் சக்தி உள்ளதோ, அந்தளவே பாண்டவர்களுக்கும்
விசாலமான சக்தி உள்ளது, ஆகையினால், நான்கு கரங்கள் கொண்ட ரூபம்
(விஷ்ணு) காட்டப்பட்டுள்ளது. சக்திகள் மற்றும் பாண்டவர்கள் -
இவர்கள் இருவரின் இணைந்த ரூபத்தின் மூலமே விஷ்வ சேவை
காரியத்தில் வெற்றி கிடைக்கிறது. ஆகையினால், சதா
ஒருவருக்கொருவர் சகயோகி ஆகி இருங்கள். பொறுப்பு கிரீடத்தை சதா
அணிந்தே இருக்க வேண்டும்.