12.07.26    காலை முரளி            ஓம் சாந்தி 31.12.2010      பாப்தாதா,   மதுபன்


பழைய ஆண்டிற்கு விடை கொடுப்பதன் கூடவே பழைய சன்ஸ்காரங்களுக்கு விடை கொடுத்து தடையற்று இருப்பதற்கான திட சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் கருணை உள்ளம், மாஸ்டர் வள்ளலாகி மன சேவையின் மூலம் துக்கமான, அசாந்தியான ஆத்மாக்களுக்கு ஆதரவு கொடுங்கள்

இன்று பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு புது ஆண்டு மற்றும் புது உலகிற் கான வாழ்த்துக்கள் கொடுப்பதற்கு, சூட்சும வதனத்திலிருந்து ஸ்தூல வதனத்திற்கு வாழ்த்துக் கள் கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். அனைத்துக் குழந்தைகளும் கூட அன்பினால், பாசத் தினால் தனது மதுவன வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். உலகத்தினர் வெறும் புது ஆண்டை மட்டும் கொண்டாடுகின்றனர், அது ஒரு நாள் மட்டுமே இருக்கும். நீங்கள் புது உலகிற்காக சங்கமத்தில் சதா கொண்டாடிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் முன் புது உலகம் சதா கண்களில் கலந்திருக்கிறது. நினைவு செய்யுங்கள் மற்றும் சென்று விடுங்கள். கண்களில் கலந்திருக்கிறது அல்லவா! அனுபவம் ஆகிறது - இப்பொழுது சங்கமத்தில் இருக்கிறோம், இன்று சங்கமத்தில் இருக்கிறோம், நாளை நமது இராஜ்யத்திற்கு சென்றே விட்டோம். இவ்வாறு கண்களில் தெளிவாக தென்படுகிறது. உலகத்தினர் ஒருவருக்கொருவர் ஒரு நாளுக்கான வாழ்த்துக்கள் கொடுக்கின்றனர். ஆனால் உங்களுக்கு பாப்தாதா தங்க உலகை பரிசாக கொடுத் திருக்கின்றார். அது நீண்ட காலம் கூடவே இருக்கும். அது கண்களில் கலந்திருக்கிறது, ஒரு விநாடியில் அங்கு சென்று விட முடியும். அனைவரின் எதிரில் தங்களது தங்க உலகம் கண் களில் கலந்திருக் கிறது. ஒரு விநாடியில் சென்றடைந்து விட முடியும் அல்லவா! இன்று சங்க மத்தில் இருக்கிறீர்கள், நாளை இராஜ்ய அதிகாரியாகி இராஜ்யம் செய்வீர்கள்.

இப்பொழுது நேரத்தின் அநுசாரமாக நீங்கள் அறிவீர்கள் - மூதாதையர்களாகி உங்களது பக்தர்கள் துக்கம் மற்றும் அசாந்தியில் இருக்கின்ற காரணத்தினால் மூதாதையர்களாகிய உங்களை கூக்குரலிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓசை கேட்க வருகிறதா? எப்படி யெல்லாம் துக்கம், அசாந்தியுடன் அழைத்துக் கொண்டி ருக்கிறார்கள்? எங்களுக்கு அமைதி கொடுங்கள், சுகம் கொடுங்கள், குஷி கொடுங்கள். ஓசை கேட்க முடிகிறதா? கொடுங்கள், கொடுங்கள் எனவே ஆத்மாக்களாகிய நீங்கள் கருணையுள்ளம், கல்யாணகாரி வள்ளலின் குழந்தைகள் ரூபத்தில் ஆத்மாக்களுக்கு மன சேவையின் மூலம் கொடுக்கும் காரியம் செய்ய வேண்டும். பாப்தாதாவிற்கு இந்த துக்கமான, அசாந்தியான ஆத்மாக்களின் மீது மிகவும் இரக்கம் ஏற்படுகின்றது. உங்களுக்கும் இரக்கம் ஏற்படுகிறது தானே! (இருமல் வந்ததது). (இன்று பிரம்மா பாபாவின் இருமல் வந்து விட்டது). ஆக உங்களுக்கும் ஆத்மாக்களின் மீது இரக்கம் ஏற்படு கிறது தானே! இப்பொழுது இந்த ஆண்டில், ஏனெனில் இன்று புது ஆண்டும் வந்து கொண்டு இருக்கின்றது மற்றும் பழைய ஆண்டும் செல்ல இருக்கிறது. ஆக செல்லக் கூடிய ஆண்டில் நீங்கள் என்ன திட்டம் தீட்டி இருக்கிறீர்கள்? ஆண்டு சென்று விடும், ஆனால் நீங்கள் அனை வரும் ஆண்டின் கூடவே எதற்கு விடை கொடுப்பீர்கள்? ஆண்டு விடை கொடுப்பது போன்று நீங்கள் தனது வாழ்வில் எதற்கு விடை கொடுப்பீர்கள்? மேலும் எந்த புதியதை கொண்டு வருவீர்கள்? சதா காலத்திற்கும் விடை கொடுப்பீர்களா? அல்லது சிறிது காலத்திற்காகவா? ஏனெனில் பாப்தாதா சைகை கொடுத்திருக்கின்றார் - இன்று வரை என்ன பழைய சன்ஸ்காரம் பாக்கி இருக்கிறதோ, அந்த சன்ஸ்காரங்களை மனதில் பார்த்து, அறிந்து கொண்டு அழித்தே ஆக வேண்டும். முயற்சி செய்வதில் இந்த பழைய சன்ஸ்காரம் தடையாக இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். பாபா தான் எனது உலகம் என்று குழந்தைகள் ஒருபுறம் கூறுகிறீர்கள், பிறகு பழைய சன்ஸ்காரம் எங்கிருந்து வந்தது? உலகமே தந்தை எனில் முயற்சியில் தடையாக இருக்கும் இந்த பழைய சன்ஸ்காரம் அழிந்து விட வேண்டும் தானே! அமிர்தவேளையில் அனைவரும் உரையாடல் செய்யும் பொழுது தங்களது கணக்குகளை கொடுக்கிறீர்கள். அதில் இன்று வரை பழைய சன்ஸ்காரம் தான் முயற்சியை தளர்வாக்குவதை பாப்தாதா பார்க்கின்றார்.

ஆக இன்றைய நாள் ஆண்டுக்கு விடை கொடுப்பதன் கூடவே இந்த சன்ஸ்காரங்களுக்கும் விடை கொடுக்க முடியுமா? கொடுக்க முடியுமா? கை உயர்த்துங்கள். கொடுத்தே ஆக வேண்டும். கை உயர்த்துவது மிகவும் எளிது. ஆனால் மன கை உயர்த்த வேண்டும். உயர்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். பழைய சன்ஸ்காரங்களை சதா காலத்திற்கும் விடை கொடுப்பதற்காக கை உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் கை உயர்த்துங்கள். நல்லது. மெஜாரிட்டி குழந்தைகள் கை உயர்த்தி பாப்தாதாவை குஷிப்படுத்தி விட்டீர்கள். பாப்தாதாவிற்கு இந்த குஷி தான் இருக்கிறது - இந்தக் குழந்தைகள் தைரியமானவர்கள். எங்கு தைரியம் இருக்கிறதோ, அங்கு பாப்தாதாவின் உதவி சதா இருக்கிறது. இப்பொழுது கை உயர்த்திருக்கிறீர்கள் எனில் தந்தை யின் சிறிய, பெரிய இடங்கள் சதா காலத்திற்கும் தடையற்றதாக ஆகிவிட்டது அல்லவா! ஏனெனில் பாப்தாதாவிடம் வரக் கூடிய ரிசல்ட்டிற்கு காரணம் பழைய சன்ஸ்காரம் ஆகும். எனவே இன்று சன்ஸ்காரங்களை சங்கல்பத்தினால் அழித்து விட்டீர்கள், அதாவது தடை யற்றவர் என்ற வரதானம் அடைந்து விட்டீர்கள். அடைந்து விட்டீர்களா? வரதானம் அடைந்தீர் களா? தைரியத்தின் பலன் கிடைக்கிறது அல்லவா! மேலும் பாப்தாதாவின் வரதானம் கிடைத் திருக்கிறது - குழந்தைகளின் தைரியம் என்ற ஒரு அடி, தந்தையின் உதவி என்ற பல அடிகள் இருக்கவே இருக்கிறது. ஆக இந்த சங்கல்பம் இன்றிலிருந்து நினைவில் வைத்துக் கொள்ளுங் கள் - நான் பழைய சன்ஸ்காரம் கொடுத்து விட்டேன். ஒருவேளை அது திரும்பவும் உங்களிடம் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்? என்ன செய்வீர்கள்? கொடுத்த பொருட்களை தன்னிடம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் கொடுத்து விட்டோம் என்றால் என்னுடைய அல்ல. என்னுடையது இல்லை எனும் பொழுது தன்னிடம் எப்படி வைத்துக் கொள்வீர்கள்? தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள். தந்தையிடம் தான் கொடுப்பீர்கள் அல்லவா! உறுதி தானே! கொடுத்து விட்டீர்கள் தானே! பக்கா? இப்பொழுது இரண்டு இரண்டு கைகளை உயர்த்துங்கள். பக்கா! பின் வரிசையில் உள்ளவர்களும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

கலியுகத்தில் இருந்தாலும் கூட தந்தையின் மூலம் பிராப்தியாக அடைந்ததின் அனுபவம் இப்பொழுது சங்கமத்தில் செய்கிறீர்கள் என்ற குஷி பாப்தாதாவிற்கு இருக்கிறது. உலகத்தினர் களுக்கு கலியுகம், ஆனால் உங்களுக்கு சங்கமயுகம் அதாவது அனைத்து பிராப்திகளின் யுகமாகும். பரமாத்ம பிராப்திகள், சர்வசக்திகள், சர்வ குணங்கள், சர்வ ஞானப் பொக்கிஷம் பலனாக கிடைத்திருக்கிறது. அதை நடைமுறையில் அனுபவம் செய்வீர்கள். ஆக இன்றைய நாள் யாரெல்லாம் கை உயர்த்தினீர்களோ அந்த அனைத்து குழந்தைகளுக்கும், எதிரில் அமர்ந்திருந்தாலும் சரி, தூரத்தில் உள்நாடு, அயல்நாட்டில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் மிக உள்ளப்பூர்வமாக பாப்தாதா என்ன கொடுத்துக் கொண்டிருக்கின்றார்? வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார். ஆனால் வாழ்த்துக்களின் கூடவே அனைவரின் நெற்றியில் கை வைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்களும், பாப்தாதாவும் மனதிற்குள் நடனமாடிக் கொண்டிருக் கிறீர்கள் ஆஹா குழந்தைகளே ஆஹா. இப்பொழுது நீங்களும் மனதில் நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! ஆமாம் என்று கூறுங்கள். இப்பொழுது ஆசிரியர் பார்க்க வேண்டும், ஆசிரியர்கள் அனைவரும் கை உயர்த்துங்கள். அயல்நாட்டு ஆசிரியர்களும் இருக்கிறீர்கள் அல்லவா! ஒவ்வொரு குழந்தை களின் இந்த திட சங்கல்பம் கேட்டு பாப்தாதாவிற்கு குஷி ஏற்படுகிறது - பாப்சமான் சம்பன்னம் மற்றும் சம்பூர்னம் ஆவதற்கான இலட்சியம் குழந்தைகள் வைத்திருக்கிறீர்கள். அதில் இந்த தடையற்ற நிலையில் இருப்பதற்கான திட சங்கல்பமானது நேரத்தை நெருக்கத்தில் கொண்டு வரும். பாப்தாதாவிற்கு இந்த குஷியும் இருக்கிறது - அனைத்துக் குழந்தை களும் எந்த சங்கல்பம் செய்தீர்களோ, அதை நிறைவேற்றுவீர்கள் மற்றும் உலகிலுள்ள துக்கமான, அசாந்தி யானவர்களுக்கு மன சேவை செய்து அவர்களுக்கும் ஏதாவது ஆதரவு கொடுப்பீர்கள். ஏனெனில் குழந்தைகளின் கூக்குரல், கதறல் பாப்தாதாவிற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் உங்களது குடும்பத்தினர்களாகவும் இருக்கின்றனர் அல்லவா! துக்கம், அசாந்தி வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது, எனவே இப்பொழுது கருணையுள்ளம் உடையவர் ஆகுங்கள். இந்த சங்கல்பமும் கூடவே செய்யுங்கள் - நடக்கும் போதும், காரியம் செய்யும் போதும் மற்றும் விசேஷமாக அமிர்தவேளையில் ஆத்மாக்களுக்கு மன சேவையும் செய்வேன் என்ற சங்கல்பம் எடுத்துக் கொள்ள முடியுமா? சதா காலத்திற்கும் பழைய சன்ஸ்காரங்களை அழித்து விடுவேன் என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டது போன்று! சதா காலத்திற்காகவும் எடுத்துக் கொண்டீர்கள் தானே! சிறிது காலத்திற்காக கிடையாது. சன்ஸ்காரங்களை அழித்து பாப்சமான் ஆவேன், அதே போன்று வள்ளலின் குழந்தையாகி மாஸ்டர் வள்ளல் சொரூபத்தின் மூலம் மன சேவையும் செய்ய வேண்டும். இதற்கு தயாராக இருக்கிறீர்களா? மன சேவை செய்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? கை உயர்த்துங்கள், மன சேவையும் செய்வீர்களா? முழு நாளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம் மன சேவை செய்ய வேண்டும். ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் தான் சுகமான உலகம் கொண்டு வர வேண்டும். தந்தை குழந்தை களாகிய உங்களை இந்த சேவைக்காகத் தான் வலது கரமாக ஆக்கியிருக்கின்றார். கை கொடுக்கப்படும் அல்லவா! ஆக நீங்கள் தந்தையின் வலது கரமாக இருக்கிறீர்கள். பாப்தாதா வலது கரமாகிய உங்கள் மூலம் அனைவருக்கும் இந்த சேவை கொடுக்க விரும்புகின்றார் - ஏதாவது கொடுத்துக் கொண்டே இருங்கள். அவர்கள் கொடுங்கள்-கொடுங்கள் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் துக்கமானவர்களுக்கு சுகம் கொடுங்கள், குழப்பமானவர்களுக்கு சக்தி கொடுத்து புண்ணிய காரியம் செய்யுங்கள். நீங்கள் குழந்தைகள் தன்னை புரிந்து கொண்டீர்கள், தந்தையை புரிந்து கொண்டீர்கள், ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆகிவிட்டீர்கள். அதே போன்று மற்றவர்களையும் ஆக்குங்கள். ஏனெனில் இப்பொழுது அனைவரும் முக்தி விரும்புகின்றனர். அனைவரையும் முக்திக்கு அனுப்பி விட்டு நீங்கள் தந்தையின் வரதானத் தினால் இராஜ்ய அதிகாரிகளாக ஆவீர்கள். ஆகையால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தந்தை இந்த சங்கல்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் - நிர்விக்ன பவ, சேவாதாரி பவ. எந்தக் குழந்தைகள் தந்தையினுடையவர்களாக ஆகிவிட்டார்களோ, அந்த குழந்தைகளுக்கு சங்கமயுக பிராமண வாழ்க்கையின் போதை அனுபவம் ஆகிக் கொண்டிருக்கிறது, ஆகிக் கொண்டே இருக்கும். புதிதாக வந்தவர்களும் சரி, பழைய ஆத்மாக்களும் சரி, யார் தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரி என்று தன்னை நினைக்கிறார்களோ, அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்களோ, சன்ஸ்காரங்களின் மீது வெற்றி அடைவதற்கான சங்கல்பம் செய்திருக்கிறார்களோ, அந்த அனைத்து ஆத்மாக்களும் கோடியில் சிலராக ஆகியிருக்கிறீர்கள், அல்லது சிலரிலும் சிலராக ஆகியிருக்கிறீர்களா? ஜனக் குழந்தை கூறியிருக்கிறார் அல்லவா - 108 மாலை, 16 ஆயிரம் மாலையுடன் சந்திப்பு செய்யுங்கள். நான் 16 ஆயிரம் அல்லது 108 மாலையில் வரக் கூடியவன் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள்.

புதிதாக வந்தவர்களும் கை உயர்த்துகிறார்கள். வாழ்த்துக்கள். நிச்சயபுத்தி உடையவர்கள் வெற்றி அடைவார் கள். பாப்தாதாவிற்கும் தெரியும் - நிச்சயபுத்தியுடையவர்கள் முன்னேறிச் செல்ல முடியும், செல்வார்கள். நல்லது. முதல் முறை வந்தவர்கள் கை உயர்த்துங்கள். அனைவரின் சார்பாக பாப்தாதா உங்களுக்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். என்ன நிச்சயம் செய்தீர்களோ, அதை அமிர்தவேளையில் சதா திரும்பவும் (ரிவைஸ்) நினையுங் கள். நல்லது. குழந்தைகளைப் பார்த்து பாப்தாதாவிற்கு குஷி ஏற்படுகிறது - மிகவும் தாமதம் (டூ லேட்) ஆவதற்கு முன்னதாக தனது ஆஸ்திக்கு அதிகாரி ஆகிவிட்டீர்கள். ஆகையால் இங்கு வந்திருக்கும் குடும்பத்தினர் அனைவரின் சார்பாக அல்லது அவரவர்களது சேவை நிலையத் தில் இருக்கும் அனைத்து குழந்தைகளின் சார்பாக பாப்தாதா உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது நீங்கள் ஒரு அதிசயம் செய்ய வேண்டும். தைரியம் இருக்கிறதா? கூறுங்கள், தைரியம் இருக்கிறதா? நீங்கள் முன் கூட்டியே தடையற்றவர்களாக இருக்க வேண்டும். நிச்சயம் மற்றும் போதையில் நம்பர் ஒன்னில் செல்ல வேண்டும். பழையவர்கள் பழையவர்கள் தான், ஆனால் புதியவர்கள் சிறிது காலத்தில் அதிசயம் செய்து காட்டுவார்கள் என்ற குஷி பாப்தாதாவிற்கு இருக்கிறது. நல்லது.

இப்பொழுது பாப்தாதா புதியவர்களுக்கும், பழையவர்களுக்கும் ஒரு விநாடிக்கான காரியம் கொடுக்கின்றார். அனைவரும் இப்பொழுதே ஒரு விநாடியில் தன்னை மற்ற அனைத்து சங்கல்பங்களிலிருந்து தூரமாக்கி ஒரு விநாடியில் தனது பிந்து ரூபத்தில் நிலைக்கச் செய்ய முடியுமா? செய்வீர்களா? ஒரு விநாடியில் நான் பிந்து, வேறு எந்த சங்கல்பமும் கிடையாது. நான் பிந்து. (டிரில் செய்வித்தார்). யார் விநாடியில் தன்னை பிந்து ஸ்திதியில் நிலைக்கச் செய்தீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். விநாடியில் செய்தீர்கள். நல்லது. இப்பொழுது இந்த பயிற்சி 15 நாட்களுக்கு, முழு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விநாடியில் புள்ளி (பிந்து) வையுங்கள். இந்த பயிற்சி ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் மற்றும் அங்கு அந்த சூழல் நிலையில் இருந்து கொண்டு, தனது காரியம் செய்தாலும் ஒரு விநாடியில் பிந்து ரூபத்தில் நிலைப்பதில் வெற்றி கிடைத்தா? என்று சேதானை செய்ய வேண்டும். ஏனெனில் இங்கிருக்கும் சூழல் வேறு. ஆனால் அவரவர்களது இடத்தில் இருந்தாலும் விநாடியில் பிந்து சொரூபத்தில் நிலைத்திருக்க முடிகிறதா? இந்த பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பாப்தாதா கூறி விட்டார் - நாட்கள் செல்லச் செல்ல ஒரு விநாடியில் பிந்து ஸ்திதியில் நிலைத்திருப்பது அவசியமானதாக இருக்கும். ஆகையால் தன்னைத் தான் சோதனை செய்யுங்கள் மற்றும் அவரவர்களது இடங்களிலிருந்து சோதனை செய்து ஆசிரியர்களுக்கு எழுதிக் கொடுங்கள். பிறகு ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளின் இந்த வீட்டுப்பாடத்தின் ரிசல்ட் பாப்தாதாவிடம் வந்து சேரும் போது பார்த்துக் கொள்கிறேன். இதன் மூலம் நீங்கள் 108 அல்லது 16 ஆயிரம் மாலைக்கு அதிகாரி என்பது தெரிந்து விடும். தினசரி அட்டவணையில் எத்தனை விநாடிகள் வெற்றியானது. இதன் மூலம் நீங்கள் எதற்கு தகுதியானவர் என்பது தெரிந்து விடும். ஏனெனில் இப்பொழுது கை உயர்த்துவீர்கள், தனது நடைமுறை தாரணையில் நான் 108 அல்லது 16 ஆயிரம் மாலையில் வருவீர்கள் என்று தன்னை நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அனைவரும் உயர்த்தி விடுவீர்கள். ஆகையால் நீங்கள் ரிசல்ட் மட்டும் எழுத வேண்டும், அதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தாதிகள் பெயர் கூறும் பொழுது நானும் வர முடியும் என்று சிலர் நினைப்பீர்கள் அல்லவா! ஆக இந்த ரிப்போர்ட் மூலம் தெரிந்து விடும்.

பாப்தாதா கேட்கின்றார் - விநாடியில் எந்த ரூபம் அனுபவம் செய்ய விரும்புகிறீர்களோ, அதை அனுபவம் செய்ய முடியுமா? விநாடியில்? 5 சொரூபம் கூறியிருந்தேன், அதையும் எப்பொழுது விரும்புகிறீர்களோ, அப்பொழுது விநாடியில் அந்த சொரூபம் ஆகிவிட முடியுமா? இந்த பயிற்சி செய்யும் தன்னைத் தானே அறிந்து கொள்ள முடியும் - நான் எந்த விரும்புகிறேனோ, அந்த ஸ்திதியில் விநாடியில் இருக்க முடிகிறதா? அல்லது காலம் தேவைப்படுகிறதா? மற்றபடி கைகளை உயர்த்தி பாப்தாதாவை குஷிப்படுத்தி விட்டீர்கள், மெஜாரிட்டி கை உயர்த்துகிறீர்கள். இந்த கைகளை உயர்த்தி விட்டீர்கள், துவாபர, கலியுகத்தில் தேக அபிமானத்திற்கான பயிற்சி இயற்கையாக ஆனது போன்று இந்த பயிற்சி செய்து செய்து அதே மாதிரி ஆகிவிடும். எந்த சொரூபத்தில் நிலைத்திருக்க விரும்புகிறீர்களோ, அது அந்த அளவிற்கு எளிதாக ஆகிவிட வேண்டும். ஏனெனில் அப்படிப்பட்ட நேரம் வரயிருக்கிறது - அந்த நேரத்தில் உங்களுக்கு இந்த பயிற்சி அவசியமானதாக இருக்கும். எனவே ஒவ்வொருவரும் அவரவர்களது காரியம் செய்து கொண்டிருந்தாலும் இந்த பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் ரிசல்ட் தனது நிமித்த ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு முடிவடையும் நேரத்தில் இந்த பயிற்சி செய்து கொண்டே இருங்கள். சுயமாக செய்யுங்கள், தனக்கு ஆசிரியராக தானே ஆகுங்கள். ஆனால் ரிசல்ட் காண்பிப்பதற்கு தனது சார்ட் கொடுக்கும் போது கவனம் ஏற்படும். எவ்வாறு கையை எங்கு விரும்புகிறோமோ அங்கு நிறுத்த முடிகிறது அல்லவா! அதே போன்று மனத்தையும் எந்த ஸ்திதியில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த ஸ்திதியில் வைத்துக் கொள்ள வேண்டும். மகா மந்திரமும் நினைவுச் சின்னமாக மன்மனாபவ. மன பயிற்சியில் எவ்வளவு வெற்றி அடைந்திருக்கிறேன்? என்பதை தானே அனுபவம் செய்யுங்கள். பாப்தாதா இதைத் தான் விரும்புகின்றார் - ஒவ்வொரு குழந்தையும் சங்கமயுகத்தின் சுகம், சங்கம யுகத்தின் பிராப்திகள், ஒவ்வொரு பிராப்தியின் அனுபவிகளாக ஆக வேண்டும். தன்னைத்தானே சோதனை செய்யுங்கள். ஒவ்வொரு பிராப்தி, ஒவ்வொரு சக்தி, ஒவ்வொரு ஞான இரகசியம், யோகத்தின் ஒவ்வொரு விதி, தாரணையில் ஒவ்வொரு தாரணையிலும் அனுபவியாக ஆகியிருக்கிறேனா? தன்னை முழுமையாக சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். ஆக இன்று பாப்தாதா சோதனை மற்றும் பிராப்தி இதை சோதனை செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக் கின்றார். ஏதாவது பிராப்தியில் குறை இருந்து விட்டால் நாடகப்படி சோதனைகளும் அதன் படியே வரும். ஆகையால் அனைத்துப் பாடங்களிலும் சம்பன்னம் மற்றும் சம்பூர்னமாக சோதனை செய்யுங்கள் மற்றும் மாற்றிக் கொள்ளுங்கள்.

இன்றைய நாள் பாப்தாதா உங்கள் அனைவரின் சாதரண சொரூபத்திலும் உங்களது எதிர்கால ரூபம், பிராப்திகளின் ரூபம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நல்லது. அனைத்து திசைகளிலும் இருக்கும் செல்லமான, பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி, பாப்தாதாவின் கட்டளைப்படி நடக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கு பாப்தாதா மிக மிக உள்ளப்பூர்வமான அன்பு மற்றும் பாப்தாதாவின் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். பாப்தாதாவிற்கும் குழந்தைகளைப் பார்த்து குஷி ஏற்படுகிறது, ஆஹா ஆஹா ஆஹா என்னுடைய குழந்தைகளே ஆஹா.

முழு ஆண்டும் தடைகளற்று மற்றும் குஷியாக இருக்க வேண்டும். தனது நடத்தை மற்றும் முகத்தின் மூலம் அனைவருக்கும் குஷி மற்றும் புன்முறுவல் கற்றுக் கொடுக்க வேண்டும். சதா பறக்க வேண்டும் மற்றும் பறக்க வைக்க வேண்டும். நடக்கக் கூடாது, பறக்க வேண்டும். பறக்கும் கலையானது அனைவருக்கும் பிடிக்கும். எனவே அனைவருக்கும் பறந்து பறந்து செய்தி கொடுக்க வேண்டும். அனைவரும் உங்களைப் பார்த்து குஷி என்ற ஊஞ்சலில் ஆட வேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சியான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நல்லது ஓம்சாந்தி.

ஆசீர்வாதம்:
ஈஸ்வரிய பாக்கியத்தில் ஒளிக்கிரீடம் பலனாக
அடையக் கூடிய அனைத்துப் பிராப்தி சொரூபம் ஆகுக.

உலகில் பாக்கியத்தின் அடையாளம் இராஜ்யமாகும், இராஜ்யத்தின் அடையாளம் கிரீடம். அதே போன்று ஈஸ்வரிய பாக்கியத்தின் அடையாளம் ஒளிக்கிரீடமாகும். இந்த கிரீடம் பலனாக அடைவதற்கு ஆதாரம் தூய்மை. சம்பூர்ன தூய்மையான ஆத்மாக்கள் ஒளிக்கிரீடத்துடன் அனைத்து பிராப்திகளிலும் சம்பன்னமாக இருப்பார்கள். ஒருவேளை ஏதாவது பிராப்திகளில் குறையிருந்தால் ஒளிக்கிரீடம் தெளிவாக தென்படாது.

சுலோகன்:
தனது ஆன்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பவர்கள்
தான் மனதில் மகாதானிகள் ஆவர்.


அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்

இப்பொழுது நல்லது, நல்லது என்று கூறுகிறார்கள், ஆனால் நல்லவர்களாக ஆக வேண்டும் என்ற தூண்டுதல் கிடைப்பது கிடையாது. அதற்கு ஒரே ஒரு சாதனம் தான் இருக்கிறது - குழுவாக இருந்து ஜுவாலா சொரூபம் ஆகுங்கள். ஒவ்வொருவரும் லைட் ஹவுஸ் ஆகுங்கள். சேவாதாரிகளாக இருக்கிறீர்கள், அன்பானவர் களாக இருக்கிறீர்கள், ஒரே பலம் ஒரே நம்பிக்கை யுடையவர்களாக இருக்கிறீர்கள், இவை அனைத்தும் சரி தான். ஆனால் மாஸ்டர் சர்வ சக்திவான் நிலையில் மேடைக்கு வந்து விட்டீர்கள் எனில் அனைவரும் உங்கள் முன் விட்டில் பூச்சி போன்று சுற்ற ஆரம்பித்து விடுவார்கள்.