12-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் நாடகத்தின்
விளையாட்டை அறிவீர்கள், ஆகையால் நன்றி கூறுவதற்கான விசயமும்
கிடையாது.
கேள்வி:
சேவாதாரி குழந்தைகளிடம் எந்த
பழக்கம் முற்றிலுமாக இருக்கக் கூடாது?
பதில்:
கேட்கும் பழக்கம். நீங்கள்
தந்தையிடம் ஆசீர்வாதம் அல்லது கருணை போன்றவைகளை கேட்க வேண்டிய
அவசியமில்லை. நீங்கள் யாரிடத்திலும் பணமும் கேட்கக் கூடாது.
கேட்பதை (யாசிப்பதை) விட இறப்பது நல்லது. நாடகப்படி முந்தைய
கல்பத்தில் யார் விதை விதைத்திருப் பார்களோ அவர்கள்
விதைப்பார்கள், யார் தனது எதிர்கால பதவியை உயர்வாக்கிக் கொள்ள
வேண்டுமோ அவர்கள் அவசியம் உதவி செய்வார்கள் என்பதை நீங்கள்
அறிவீர்கள். சேவை செய்வது தான் உங்களது கடமையாகும். நீங்கள்
யாரிடத்திலும் எதுவும் கேட்கக் கூடாது. பக்தியில் தான்
கேட்பார்கள், ஞானத்தில் அல்ல.
பாடல்:
எனக்கு உதவி செய்யக் கூடியவர்
........
ஓம் சாந்தி.
தந்தை, ஆசிரியர், குருவிற்காக குழந்தைகளின் நன்றி என்ற வார்த்தை
வெளிப்படக் கூடாது. ஏனெனில் இந்த விளையாட்டு
உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர் கள்.
நன்றிக்கான விசயம் எதுவும் கிடையாது. இதையும் குழந்தைகள்
நாடகப்படி அறிந்திருக் கிறீர்கள். நாடகம் என்ற வார்த்தையும்
குழந்தைகளின் புத்தியில் வருகிறது. விளையாட்டு என்ற வார்த்தை
கூறியதும் முழு விளையாட்டும் உங்களது புத்தியில் வந்து
விடுகிறது. அதாவது சுயதரிசன சக்கரதாரிகளாக நீங்கள் ஆகிவிடு
கிறீர்கள். மூன்று லோகங்களும் உங்களது புத்தியில் வந்து
விடுகிறது. மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூல வதனம். இப்பொழுது
விளையாட்டு முடிவடைகிறது என்பதையும் அறிவீர்கள். தந்தை வந்து
உங்களை திரிகால தர்சிகளாக ஆக்கு கின்றார். மூன்று காலம், மூன்று
லோகம், முதல், இடை, கடையின் ரகசியத்தைப் புரிய வைக் கின்றார்.
நேரம் தான் காலம் என்று கூறப்படுகிறது. இந்த விசயங்கள்
அனைத்தையும் குறிப் பெடுத்துக் கொள்ளாமல் நினைவில் வைத்துக்
கொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பல கருத்துக்களை மறந்து
விடுகிறீர்கள். நாடகத்தின் ஆயுளையும் நீங்கள் அறிவீர்கள்.
நீங்கள் திரிநேத்திரி (மூன்று கண்களுடையவர்), திரிகாலதர்சிகளாக
ஆகிறீர்கள். ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்து விடுகிறது.
அனைத்தையும் விட மிகப் பெரிய விசயம் என்னவெனில், நீங்கள்
ஆஸ்திகர்களாக ஆகிவிடுகிறீர்கள், இல்லையெனில் நாஸ்திகர்களாக
இருந்தீர்கள். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்குக்
கிடைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் புத்தியில் சதா
படிப்பின் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். இதுவும் ஞானப்
படிப்பு அல்லவா! உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தான் நாடகப்படி
ஞானம் கொடுக்கின்றார். நாடகம் என்ற வார்த்தை வெளிப்படு கிறது.
எந்த குழந்தைகள் சேவைக்கு தயாராக இருப்பார்களோ, அவர்கள்
வாயிலிருந்து! நாம் அனாதைகளாக இருந்தோம் என்பதை இப்பொழுது
நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது செல்வந்த ராகிய எல்லையற்ற
தந்தையை அடைந்து விட்டதால் செல்வந்தர்களாக ஆகிவிட்டோம். முதலில்
நீங்கள் எல்லையற்ற அனாதைகளாக இருந்தீர்கள், எல்லையற்ற தந்தை
எல்லையற்ற சுகம் கொடுக்கக் கூடியவர் ஆவார். வேறு எந்த தந்தையும்
இப்படிப்பட்ட சுகம் கொடுக்க முடியாது. புது உலகம் மற்றும் பழைய
உலகம் - இந்த அனைத்தும் குழந்தைகளாகிய உங்களது புத்தியில்
இருக்கிறது. ஆனால் மற்றவர்களுக்கும் யதார்த்த முறையில் புரிய
வைக்க வேண்டும், இந்த ஈஸ்வரீய தொழிலில் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொருவரின் சூழ்நிலையும் தனித் தனியானது. யார் நினைவு
யாத்திரையில் இருக்கிறார் களோ அவர்கள் தான் புரிய வைக்கவும்
முடியும். நினைவின் மூலம் பலம் கிடைக்கும் அல்லவா! தந்தை
கூர்மையான அம்பாக இருக்கின்றார். குழந்தை களாகிய நீங்களும்
கூர்மையை நிரப்ப வேண்டும். யோக பலத்தின் மூலம் உலக
சாம்ராஜ்யத்தை அடைகிறீர்கள். யோகத்தின் மூலம் பலம் அடைகிறீர்கள்,
ஞானத்தினால் அல்ல. ஞானம் வருமானத்திற்கான வழி என்று குழந்தைகள்
புரிய வைக்கப்படுகிறீர்கள். யோக பலம் என்று கூறப்படுகிறது. இரவு
பகல் வித்தியாசம் இருக்கிறது. யோகா முக்கிய மானதா? அல்லது ஞானம்
முக்கியமானதா? யோகா தான் பிரபலமானது. யோகா என்றால் தந்தையின்
நினைவு. இந்த நினைவின் மூலம் தான் உங்களது பாவங்கள் அழிந்து
போகும் என்று தந்தை கூறுகின்றார். இதற்குத் தான் தந்தை
அறிவுறுத்துகின்றார். ஞானம் எளிது. பகவானின் மகாவாக்கியம் -
நான் உங்களுக்கு எளிய ஞானம் கூறுகிறேன். 84 பிறவிச் சக்கரத்தின்
ஞானம் கூறுகிறேன். இதில் அனைத்தும் வந்து விடுகிறது. சரித்திர
பூகோளம் அல்லவா! ஞானம் மற்றும் யோகா இரண்டும் விநாடிக்கான
விசயமாகும். நான் ஆத்மா, நான் தந்தையை நினைவு செய்ய வேண்டும்,
அவ்வளவு தான். இதில் தான் முயற்சி இருக்கிறது. நினைவு
யாத்திரையில் இருப்பதன் மூலம் சரீரத்தை மறந்து கொண்டே
செல்வீர்கள். மணிக்கணக்கில் இவ்வாறு அசரீரியாக அமர்கின்ற பொழுது
எவ்வளவு தூய்மை யாக ஆகிவிடுவீர்கள்! மனிதர்கள் சிலர் இரவு 6 மணி
நேரம், சிலர் 8 மணி நேரம் தூங்குகின்றனர் எனில் அசரீரியாகி
விடுகின்றனர் அல்லவா! அந்த நேரத்தில் எந்த பாவ காரியமும்
ஏற்படுவது கிடையாது. ஆத்மா களைப்படைந்து தூங்கி விடுகிறது.
அதனால் பாவங்கள் அழிகிறது என்பது கிடையாது. அது தூக்கமாகும்.
பாவ காரியங்கள் ஏற்படுவது கிடையாது. தூங்க வில்லையெனில்
பாவங்கள் செய்து கொண்டே இருப்பர். ஆக தூக்கமும் ஒரு
பாதுகாப்பாகும். முழு நாளும் வேலை செய்த பின்பு நான் இப்பொழுது
தூங்குகிறேன் என்று ஆத்மா கூறுகிறது. அசரீரியாகி விடுகிறது.
நீங்கள் சரீரத்துடன் இருந்து கொண்டே அசரீரியாக ஆக வேண்டும்.
நான் ஆத்மா, இந்த சரீரத்திலிருந்து விடுபட்ட அமைதி சொரூபமானவன்.
ஆத்மாவின் மகிமை ஒருபொழுதும் கேள்விப் பட்டிருக்கமாட்டீர்கள்.
ஆத்மாவானது சத், சித் ஆனந்த சொரூபமானது. சத்தியமானவர்,
சைத்தன்யமானவர், சுகம் மற்றும் அமைதிக் கடலானவர் என்று
பரமாத்மாவின் மகிமை பாடுகின்றனர். உங்களை இதில் மாஸ்டர் என்று
கூறலாம், குழந்தைகளை மாஸ்டர் என்று கூறுகின்றனர். ஆக தந்தை
யுக்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றார். அதற்காக முழு நாளும்
தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள்
நினைவில் இருந்து பாவங்கள் அழிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ
தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை நம்மீது கருணை அல்லது
இரக்கம் காட்டுகின்றார் என்றும் கிடையாது. கருணை உள்ளம் உடைய
சக்கரவர்த்தி என்று அவருக்கு புகழ் பாடப்படுகிறது. தமோ
பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக்குவதும் அவரது பாகமாகும்.
பக்தர்கள் மகிமை செய்கின்றனர், நீங்கள் மகிமை மட்டுமே செய்து
விடக் கூடாது. இந்த பாடல்களும் நாளுக்கு நாள் முடிவடைந்து
கொண்டே செல்கிறது. பள்ளிகளில் பாட்டுக்கள் இருக்குமா என்ன?
குழந்தைகள் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பர். ஆசிரியர்
வருகின்றார் எனில் எழுந்து நின்று விடுவர், பிறகு அமர்ந்து
விடுவர். கல்வி கற்பிக்கும் பாகம் எனக்கு கிடைத்திருக்கிறது,
ஆக கற்பித்தே ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். குழந்தை
களாகிய நீங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் கிடையாது.
ஆத்மாவானது அமர்ந்து கேட்க வேண்டும். உங்களது விசயமே முழு
உலகிலிருந்து தனிப்பட்டது. நீங்கள் எழுந்து நில்லுங்கள் என்று
குழந்தைகளுக்கு கூறுவார்களா என்ன! பக்தி மார்க்கத்தில் தான்
அவ்வாறு செய்கின்றனர், இங்கு கிடையாது. தந்தை சுயம் எழுந்து
நமஸ்தே கூறுகின்றார். பள்ளியில் ஒருவேளை குழந்தைகள் தாமதமாக
வருகின்றனர் எனில் ஆசிரியர் தண்டனை கொடுப்பார் அல்லது வெளியில்
நிற்க வைத்து விடுவார். ஆகையால் சரியான நேரத்தில் செல்ல
வேண்டும் என்ற பயம் இருக்கும். இங்கு பயத்திற்கான விசயம்
கிடையாது. தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக் கின்றார், முரளி
கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.
முரளி படித்தால் உங்களுக்கு வருகைப்பதிவு செய்யப்பட்டு விடும்.
இல்லையெனில் வரவில்லை என்றாகி விடும். இது புது விசயமாகும்,
உலகத்தினர் யாரும் அறியவில்லை. உங்களது சித்திரங் களை
பார்த்ததும் ஆச்சரியமடைந்து விடுகின்றனர். எந்த
சாஸ்திரங்களிலும் கிடையாது. பகவான் சித்திரங்களை உருவாக்கி
யிருக்கின்றார். உங்களது இந்த ஓவியக் கூடம் புதுமையானது.
தேவதையாகக் கூடிய பிராமணக் குலத்தினரின் புத்தியில் தான் அமரும்.
இது சரியானது தான் என்று கூறுவர். கல்பத்திற்கு முன்பும் நான்
படித்திருந்தேன், பகவான் தான் கற்பிக்கின்றார்.
பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களில் முதல் நம்பரில் வருவது
கீதையாகும். ஏனெனில் முதல் தர்மமே இது தான். அரை கல்பத்திற்குப்
பிறகு, வெகு காலம் கழித்து தான் மற்ற சாஸ்திரங்கள் உருவாகின்றன.
முதலில் இப்ராஹிம் வந்த பொழுது தனியாகத் தான் இருந்தார். பிறகு
ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து நான்காக ஆயின. எப்பொழுது
தர்மம் விருத்தி அடைந்து அடைந்து லட்சக்கணக்கானவர்களாக
ஆகிவிடுகின்றனரோ அப்பொழுது சாஸ்திரங்கள் உருவாக் கப்படுகின்றன.
அவர்களுடையதும் பாதி காலத் திற்குப் பிறகு தான்
உருவாக்கப்பட்டிருக்கும், கணக்கு உருவாக்குகின்றனர் அல்லவா!
குழந்தைகளுக்கு மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். தந்தையிடமிருந்து
நமக்கு ஆஸ்தி கிடைக்கிறது. முழு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானத்தை
தந்தை நமக்கு புரிய வைக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இது எல்லையற்ற சரித்திர பூகோளம் ஆகும். இங்கு உலகத்தின்
சரித்திர பூகோளம் புரிய வைக்கப்படுகிறது, வேறு யாரும் கற்றுக்
கொடுக்க முடியாது என்று அனைவருக்கும் கூறுங்கள். உலக வரைபடம்
உருவாக்குகின்றனர். ஆனால் அதில் இந்த லெட்சுமி நாராயணனின்
இராஜ்யம் எப்போது இருந்தது? எவ்வளவு காலம் நடை பெற்றது? என்பதை
காண்பிப்பது கிடையாது. உலகம் ஒன்று தான். பாரதத்தில் தான்
இராஜ்யம் செய்திருக்கின்றனர், இப்பொழுது கிடையாது. இந்த
விசயங்கள் யாருடைய புத்தியிலும் கிடையாது. அவர்கள் கல்பத்தின்
ஆயுளை லட்சம் ஆண்டுகள் என்று கூறி விட்டனர். இனிமை யிலும் இனிய
குழந்தைகளாகிய உங்களுக்கு வேறு எந்த கஷ்டமும் கொடுப்பது
கிடையாது. பாவனம் ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தூய்மை
ஆவதற்காக நீங்கள் பக்தி மார்க்கத் தில் எவ்வளவு ஏமாற்றம்
அடைந்து வந்தீர்கள்! ஏமாற்றம் அடைந்து அடைந்து 2500 ஆண்டுகள்
கழிந்து விட்டது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டீர்கள்.
மீண்டும் இராஜ்ய பாக்கியம் கொடுப்பதற்காக மீண்டும் பாபா
வந்திருக்கின்றார். உங்களுக்கு இதே நினைவு இருக்கிறது.
பழையதிலிருந்து புதியது மற்றும் புதியதிலிருந்து பழையதாக
அவசியம் ஆகின்றது. இப்பொழுது நீங்கள் பழைய பாரதத்திற்கு
எஜமானர்கள் அல்லவா! பிறகு புதிய பாரதத்திற்கு எஜமானர்களாக
ஆவீர்கள். ஒருபுறம் பாரதத்திற்கு அதிக மகிமை பாடிக்
கொண்டிருக்கின்றனர், மறுபுறம் அதிக நிந்தனையும் செய்து
கொண்டிருக்கின்றனர். அதற்கான பாட்டும் உங்களிடம் இருக்கிறது.
இப்பொழுது என்ன என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள்
புரிய வைக்கிறீர்கள். இந்த இரண்டு பாடல் களையும் கேட்கச் செய்ய
வேண்டும். இராம இராஜ்யம் எங்கு இருக்கிறது! எங்கு இந்த இராஜ்யம்........
என்பதை நீங்கள் கூற முடியும்.
தந்தை ஏழைப் பங்காளன் ஆவார். ஏழைகள் தான் குழந்தைகளாக ஆகின்றனர்.
செல்வந்தர்களுக்கு தங்கள் போதை இருக்கிறது. கல்பத்திற்கு முன்பு
யார் வந்தார்களோ அவர்களே வருவார்கள். கவலைப்படுவதற்கான விசயம்
எதுவுமில்லை. சிவபாபாவிற்கு ஒருபொழுதும் எந்த கவலையும் கிடையாது.
தாதாவிற்கு (பிரம்மாவிற்கு) இருக்கலாம். நான் நம்பர் ஒன்
தூய்மையாக ஆக வேண்டும் என்ற தனது கவலையும் இருக்கிறது. இதில்
தான் குப்தமான (மறைவான) முயற்சி இருக்கிறது. சார்ட் வைப்பதன்
மூலம் புரிந்து கொள்ள முடியும், இவரது முயற்சி அதிகமாக
இருக்கிறது. டைரி வையுங்கள் என்று தந்தை சதா புரிய வைத்துக்
கொண்டிருக்கின்றார். பல குழந்தைகள் எழுதவும் செய்கின்றனர்,
சார்ட் எழுதுவதன் மூலம் அதிக விழிப்புணர்வும் அடை கின்றனர்.
இந்த யுக்தி மிகவும் நல்ல யுக்தியாகும், ஆக அனைவரும் செய்ய
வேண்டும். டைரி வைப்பதன் மூலம் உங்களுக்கு மிகுந்த நன்மை
ஏற்படும். டைரி வைப்பது என்றால் தந்தையை நினைவு செய்வதாகும்.
அதில் தந்தையின் நினைவு பற்றி எழுத வேண்டும். டைரியும் உதவி
யாளராக ஆகிவிடும், நல்ல முயற்சி ஏற்படும். குறிப்பெடுப்பதற்காக
லட்சம், கோடிக்கணக்கான டைரிகள் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பெடுப்பதற்கு அனைத்தையும் விட முக்கியமான விசயம்
இதுவாகும். இதை ஒருபொழுதும் மறந்து விடக் கூடாது. அந்த
நேரத்திலேயே டைரியில் எழுதி விட வேண்டும். இரவில் கணக்கு வழக்கு
எழுத வேண்டும். எனக்கு நஷ்டமாகிக் கொண்டி ருக்கிறது என்பதை
அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் பல பிறவிகளின் பாவங்களை
அழிக்க வேண்டும்.
தன் மீது தானே கருணை அல்லது இரக்கம் காட்டுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். ஆசிரியர் கற்பிப்பாரே அன்றி ஆசீர்வாதம்
செய்யமாட்டார். ஆசீர்வாதம், கருணை, இரக்கம் போன்றவை களைக்
கேட்பதற்குப் பதிலாக இறப்பது சிறந்தது. யாரிடத்திலும் பணம்
கேட்கக் கூடாது. குழந்தைகளுக்கு இது கடுமையாக தடை
செய்யப்பட்டிருக்கிறது. நாடகப்படி யார் கல்பத்திற்கு முன்பு
விதை விதைத்திருக்கிறார்களோ, ஆஸ்தி அடைந்திருந்தார்களோ அவர்கள்
தானாகவே செய்வார்கள். நீங்கள் எந்த காரியத்திற்காகவும்
கேட்காதீர்கள். செய்யவில்லையெனில் அடைய மாட்டார்கள். மனிதர்கள்
தானம், புண்ணியம் செய்கின்றனர் எனில் கைமாறாக அடைகின்றனர்
அல்லவா! அரசரின் வீட்டில் அல்லது செல்வந்தர்களின் வீட்டில்
பிறப்பு எடுப்பர். யார் செய்ய வேண்டுமென்று இருக்கிறதோ அவர்கள்
தானாகவே செய்வார்கள், நீங்கள் கேட்கக் கூடாது. கல்பத்திற்கு
முன்பு யார், எவ்வளவு செய்திருந்தார்களோ நாடகம் அவர்கள் மூலம்
செய்விக்கும். கேட்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? சேவைக்காக
உண்டியல் நிறைந்து கொண்டே இருக்கும் என்று பாபா கூறிக் கொண்டே
இருக்கின்றார். பணம் கொடுங்கள் என்று குழந்தைகள் நாம் கேட்கவே
கூடாது. பக்தி மார்க்கத்தின் விசயம் ஞான மார்க்கத்தில்
இருக்காது. யார் கல்பத்திற்கு முன் உதவி செய்திருந்தார்களோ
அவர்கள் தானாகவே செய்து கொண்டே இருப்பார்கள், ஒரு பொழுதும்
கேட்கக் கூடாது. குழந்தைகளே! நீங்கள் பணத்தை சேமித்து வைக்கக்
கூடாது என்று பாபா கூறுகின்றார். சந்நியாசிகள் தான் இவ்வாறு
செய்வார்கள். பக்தி மார்க்கத்தில் சிறிது கொடுத்தாலும் அதற்குப்
பலனாக ஒரு பிறவிக்கு கிடைத்து விடும். இது பல பிறவிகளுக்காகும்.
ஆக பல பிறவிகளுக்காக அனைத்தையும் கொடுத்து விடுவது நல்லது
அல்லவா! இவரது பெயர் கபடமற்ற களஞ்சியமுடையவர் ஆகும். நீங்கள்
முயற்சி செய்தால் வெற்றி மாலையில் வந்து விட முடியும்,
களஞ்சியம் நிறைந்து விடும், கஷ்டங்கள், கவலைகள் நீங்கி விடும்.
அங்கு ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படாது. இங்கு மனிதர்கள்
காலனுக்கு எவ்வளவு பயப்படுகின்றனர்! ஏதாவது ஏற்பட்டு விட்டால்
உடனேயே காலனின் நினைவு வந்து விடுகிறது. அங்கு இந்த எண்ணமே
இருக்காது, நீங்கள் அமரபுரிக்குச் செல்கிறீர்கள். இது சீ சீ
மரண உலகமாகும். பாரதம் தான் அமரலோகமாக இருந்தது, இப்பொழுது
மரணலோகமாக இருக்கிறது.
உங்களது அரை கல்பம் மிகவும் சீ சீ ஆக கழிந்தது. கீழே விழுந்து
கொண்டு வந்தீர்கள். ஜெகந்நாத் புரியில் மிகவும் அசுத்தமான
சித்திரங்கள் உள்ளன. பாபா அனுபவி அல்லவா! நாலாபுறமும் சுற்றி
வந்திருக்கின்றார். தூய்மையான நிலையிலிருந்து அசுத்தமாக
ஆகிவிட்டார். கிராமத்தினராக இருந்தார். உண்மையில் இந்த முழு
பாரதமும் கிராமம் ஆகும். நீங்கள் கிராமத்து சிறுவனாக
இருந்தீர்கள். நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாம் மும்பையில்
வசிக்கக் கூடியவர்கள் என்று நினைக்காதீர்கள். மும்பை கூட
சொர்கத்திற்கு முன்பு என்ன? எதுவும் கிடையாது. ஒரு கல் அளவும்
கிடையாது. நாம் கிராமத்துத் சிறுவனாக (ஏழைகளாக),
செல்வமற்றவர்களாக ஆகிவிட்டோம். இப்பொழுது நாம் மீண்டும்
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் எனில்
குஷியிருக்க வேண்டும். பெயரே சொர்க்கம். மாளிகையில் எவ்வளவு
தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கும்! சோமநாத கோயிலும்
தங்கம், வைரத்தினால் எவ்வளவு நிறைந்திருந்தது! முதன் முதலில்
சிவன் கோயில் தான் உருவாக்கினர். எவ்வளவு செல்வம் நிறைந்ததாக
இருந்தது! இப்பொழுது பாரதம் கிராமமாக இருக்கிறது. சத்யுகத்தில்
மிகுந்த செல்வந்தராக இருந்தது. இந்த விசயங்கள் உலகில் உங்களைத்
தவிர வேறு யாருக்கும் தெரியாது. நேற்று நாம் தான்
சக்கரவர்த்திகளாக இருந்தோம், இன்று ஏழைகளாக இருக்கிறோம்,
மீண்டும் உலகிற்கு எஜமானர்களாக ஆவோம் என்று நீங்கள் கூறுவீர்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் தங்களது பாக்கியத்தைப் பார்த்து நன்றி
கூற வேண்டும். நாம் பலமடங்கு பாக்கியசாலிகளாக இருக்கிறோம்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாவ காரியங்களிலிருந்து தப்பிப்பதற்கு இந்த சரீரத்திலிருந்து
கொண்டே அசரீரி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். சரீர நினைவு
மறந்து கொண்டே செல்லுமளவிற்கு நினைவு யாத்திரை இருக்க வேண்டும்.
2) ஞானச் சிந்தனை செய்து ஆஸ்திகர்களாக ஆக வேண்டும். முரளி
ஒருபொழுதும் கேட்காமல் இருக்கக் கூடாது. சுய
முன்னேற்றத்திற்காக டைரியில் நினைவிற்கான சார்ட் வைக்க வேண்டும்.
வரதானம்:
ஆன்மிக சக்தியை ஒவ்வொரு கர்மத்திலும் பயன்படுத்தக் கூடிய
யுக்தியுக்த், ஜீவன் முக்த் ஆகுக.
இந்த பிராமண வாழ்க்கையின் விசேஷத் தன்மை - ஆன்மிகத் தன்மை ஆகும்.
ஆன்மிகத் தன்மையின் சக்தி மூலம் தான் தன்னை மற்றும் அனைவரையும்
மாற்ற முடியும். இந்த சக்தி மூலம் அநேக விதமான சரீர சம்பந்தமான
பந்தனங்களில் இருந்து முக்தி (விடுதலை) கிடைக்கும். ஆனல்
யுக்தியுக்த் ஆகி ஒவ்வொரு கர்மத்திலும் லூஸ் ஆவதற்கு பதிலாக
ஆன்மிக சக்தியைப் பயன்படுத்துங்கள். மனசா-வாச்சா மற்றும் கர்மணா
மூன்றிலும் கூடக்கூடவே ஆன்மிகத் தன்மை யின் சக்தியை அனுபவம்
செய்யுங்கள். யார் முற்றிலும் யோகயுக்த்தாக இருக்கிறார்களோ,
அவர்கள் தாம் ஜீவன்முக்த் ஆவார்கள்.
சுலோகன்:
சத்யதாவின் விசேஷத் தன்மை மூலம் குஷி மற்றும் சக்தியை அனுபவம்
செய்து கொண்டே செல்லுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை - அசரீரி அல்லது விதேகி ஸ்திதியின் பயிற்சியை
அதிகப்படுத்துங்கள்
என்னென்ன பரிஸ்திதிகள் வந்து கொண்டுள்ளனவோ, மற்றும்
வரப்போகின்றனவோ, அவற்றில் விதேகி ஸ்திதியின் அப்பியாசம் அதிகம்
தேவை. எனவே மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டு, இதுவோ ஆகாது,
இதுவோ ஆகாது என்னவாகும்? இந்தக் கேள்வியை விட்டுவிடுங்கள்.
இப்போது விதேகி ஸ்திதியின் அப்பியாசத்தை அதிகப் படுத்துங்கள்.
விதேகி குழந்தைகளுக்கு எந்த ஒரு பரிஸ்திதி அல்லது எந்த ஒரு
குழப்பமும் பிரபாவத்தை ஏற்படுத்த முடியாது.