12-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபா கற்ப்பிக்கும் இந்த படிப்பில் அளவற்ற வருமானம் இருக்கிறது, ஆகையினால் படிப்பை நன்றாக படித்துக் கொண்டே இருங்கள், தொடர்பு துண்டிக்கப்படக் கூடாது

கேள்வி:
யாருக்கு வினாச காலத்தில் அன்பில்லாத புத்தி இருக்கிறதோ, அவர்களுக்கு உங்களுடைய எந்த விஷயத்தில் சிரிப்பு வருகிறது?

பதில்:
நீங்கள் வினாசம் இப்போது நெருங்கி விட்டது என்று சொல்லும் போது அவர்களுக்கு சிரிப்பு வருகிறது. பாபா இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார் ஆனால் இங்கேயே இருக்க மாட்டார், பாபா வினுடைய வேலை தூய்மையாக்குவது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தூய்மையாகி விட்டால் இந்த பழைய உலகம் வினாசமாகும், புதியது வந்துவிடும். இந்த சண்டையே வினாசத்திற்காகவே ஆகும். நீங்கள் தேவதையாக ஆகி விட்டீர்கள் என்றால் இந்த கலியுக மோசமான உலகத்தில் வர முடியாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நாம் மிகவும் எதுவும் புரியாதவர்களாக ஆகி விட்டோம் என்று குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். மாயை இராவணன் முட்டாள்களாக்கி விட்டான். புதிய உலகம் ஸ்தாபனை ஆக வேண்டும் அதற்காக பாபா கண்டிப்பாக வந்து தான் ஆக வேண்டும் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். மூன்று சித்திரங்கள் கூட இருக்கிறது - பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, விஷ்ணுவின் மூலம் வளர்ப்பு, சங்கரின் மூலம் வினாசம் ஏனென்றால் செய்பவர் செய்விப்பவர் பாபா தான் அல்லவா. செய்பவர் செய்விப்பவர் ஒருவரே ஆவார். முதலில் யாருடைய பெயர் வந்தது? யார் செய்கிறாரோ அவர் பிறகு யார் மூலமாக செய்விக்கின்றார் என்பது வருகிறது. செய்பவர் செய்விப்பவர் என்று சொல்லப்படுகிறது அல்லவா. பிரம்மாவின் மூலம் புதிய உலகத்தை ஸ்தாபனை செய்விக்கின்றார். நம்முடைய புதிய உலகம் எதை நாம் இப்போது ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோமோ இதனுடைய பெயரே தேவி-தேவதைகளின் உலகம் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் தேவி-தேவதைகள் தான் இருக்கிறார்கள். வேறு யாரையும் தேவி-தேவதைகள் என்று சொல்லப்படுவ தில்லை. அங்கே மனிதர்கள் இருப்பதே இல்லை. ஒரு தேவி-தேவதா தர்மம் தான் இருக்கிறது, வேறு எந்த தர்மமும் இருப்பதில்லை. உண்மை யில் நாம் தான் தேவி- தேவதைகளாக இருந்தோம், அடையாளங்கள் இருக்கின்றன என்ற நினைவிற்கு குழந்தை களாகிய நீங்கள் இப்போது வந்துள்ளீர் கள். இஸ்லாமியர்கள், பௌதர்கள், கிறிஸ்துவர்கள் போன்ற அனைவருக்கும் அவரவருடைய அடையாளம் இருக்கிறது. நம்முடைய இராஜ்யம் இருந்தபோது வேறு யாரும் இருக்கவில்லை. இப்போது மற்ற அனைத்து தர்மங்களும் இருக்கின்றன, நம்முடைய தேவதா தர்மம் மட்டும் இல்லை. கீதையில் மிகவும் நல்ல - நல்ல வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் யாரும் புரிந்து கொள்ள முடியாது. வினாச காலத்தில் அன்பில்லாத புத்தி மற்றும் அன்பான புத்தி என்று பாபா கூறுகின்றார். வினாசம் இந்த சமயத்தில் தான் நடக்க வேண்டும். பாபா சங்கம யுகத்தில் தான் வருகின்றார், உலக மாற்றம் ஏற்படும்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பழையதிற்கு மாற்றாக அனைத்தையும் புதியதாக தருகின்றார். அவர் பொற்கொல்லனாகவும் இருக்கின்றார், சலவை தொழிலாளியாகவும் இருக்கின்றார், பெரிய வியாபாரியாகவும் இருக்கின்றார். மிகக்குறைந்தவர்களே வியாபாரம் செய்கிறார்கள். இந்த வியாபாரத்தில் அளவற்ற நன்மை இருக்கிறது. படிப்பில் நிறைய நன்மை இருக்கிறது. படிப்பில் வருமானம் இருக்கிறது என்று நிறைய மகிமை பாடப்படுகிறது அதுவும் பிறவி- பிறவிகளுக்குமான வருமானம். எனவே அப்படிப்பட்ட படிப்பை நல்ல விதத்தில் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிப்பதையும் மிக எளிமையாக படிப்பிக்கின்றேன். ஒரு வாரம் மட்டும் புரிந்து கொண்டு பிறகு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், உங்களுக்கு இந்த படிப்பின் பிரதி வந்து கொண்டே இருக்கும் அதாவது முரளி கிடைத்துக் கொண்டே இருக்கும் பிறகு ஒருபோதும் தொடர்பு துண்டிக்கப் படாது. இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவோடான தொடர்பாகும். கீதையில் கூட வினாச காலத்தில் அன்பில்லாத புத்தி அழியும் அன்பான புத்தி வெற்றி அடையும் என்பது இருக்கிறது. இந்த சமயத்தில் மனிதர்கள் ஒருவர் மற்றவரை வெட்டி-கொலை செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இவர்களைப் போல் கோபம் அல்லது விகாரம் வேறு யாரிடத்திலும் இல்லை. திரௌபதி அழைத்தார் என்றும் பாடப்பட்டுள்ளது. நீங்கள் அனை வரும் திரௌபதிகள் என்று பாபா புரிய வைத்துள்ளார். பகவானுடைய மகாவாக்கியம், பாபா கூறுகின்றார் - குழந்தைகளே ! இப்போது விகாரத்தில் போகாதீர்கள். நான் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றேன், நீங்கள் தந்தையாகிய என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். இப்போது வினாச காலம் அல்லவா, யார் சொல்வதையும் கேட்பதில்லை, சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அமைதி யாக இருங்கள் என்று எவ்வளவு சொல்கிறார்கள் ஆனால் அமைதியாக இருப்பதில்லை. தங்களுடைய குழந்தைகளிடமிருந்து விடுபட்டு யுத்த மைதானத் திற்குச் செல்கிறார்கள். எவ்வளவு மனிதர்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதர் களுக்கு எந்த மதிப்பும் இல்லை. மதிப்பு இருக்கிறது என்றால், மகிமை இருக்கிறது என்றால் அது இந்த தேவதை களுக்குத்தான் இருக்கிறது. இப்போது நீங்கள் இப்படி ஆவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். உண்மையை சொல்வ தென்றால் இந்த தேவதைகளை விடவும் உங்களுடைய மகிமை அதிகமாகும். உங்களுக்கு இப்போது பாபா கற்பித்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு உயர்ந்த படிப்பாக இருக்கிறது. படிக்கக் கூடியவர்கள் நிறைய பிறவிகளின் கடைசியில் முற்றிலும் தமோபிரதானமாக இருக்கிறார்கள். நான் எப்போதும் சதோபிரதானமாகவே இருக்கின்றேன்.

நான் குழந்தைகளாகிய உங்களுடைய கீழ்படிந்த சேவகனாகி வந்துள்ளேன் என்று பாபா கூறு கின்றார். நாம் எவ்வளவு மோசமானவர்களாக ஆகிவிட்டோம் என்று சிந்தனை செய்து பாருங்கள். பாபா தான் நம்மை ஆஹா ஆஹா என்ற நிலைக்கு மாற்றுகின்றார். பகவான் வந்து மனிதர்களுக்குப் கற்பித்து எவ்வளவு உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். நான் நிறைய பிறவிகளின் கடைசியில் உங்கள் அனைவரையும் தமோபிர தானத்திலிருந்து சதோபிர தானமாக்க வந்துள்ளேன் என்று பாபா அவரே கூறுகின்றார். இப்போது உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றேன். நான் உங்களை சொர்க்கவாசியாக்கியிருந்தேன், பிறகு நீங்கள் எப்படி நரகவாசிகளாக ஆனீர்கள், யார் மாற்றியது என்று பாபா கேட்கின்றார். வினாசகாலத்தில் அன்பில்லாத புத்தி அழிவுக்கானது என்று பாடப் பட்டுள்ளது. அன்புள்ள புத்தி வெற்றியடையும். பிறகு எந்தளவிற்கு அன்புள்ள புத்தியாக இருப்பீர்களோ அதாவது அதிகம் நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்குத் தான் நன்மை யாகும். யுத்த மைதானம் அல்லவா. கீதையில் என்ன மாதிரியான யுத்தத்தைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது என்பதை யாருமே தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கௌரவர் களுக்கும் பாண்டவர் களுக்கும் யுத்தம் என்று காட்டி விட்டார்கள். கௌரவ சம்பிரதாயம், பாண்டவ சம்பிரதாயமும் இருக்கிறது ஆனால் யுத்தம் எதுவும் இல்லை. யார் பாபாவை தெரிந்திருக்கிறார்களோ, அவர்களை பாண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. பாபாவோடு அன்பான புத்தியுடையவர்கள். பாபாவோடு அன்பில்லாத புத்தியுடையவர்களை கௌரவர்கள் என்று சொல்லப்படுகிறது. வார்த்தைகள் புரிந்து கொள்வதற்கு தகுந்ததாக மிகவும் நல்ல- நல்லவைகளாக இருக்கின்றன.

இப்போது சங்கமயுகமாகும். புதிய உலகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தை களாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். புத்தியின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது உலகம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது. சத்யுகத்தில் எவ்வளவு குறைவான மனிதர்கள் இருப்பார்கள். சிறிய மரமாக இருக்கும் அல்லவா. அந்த மரம் பெரியதாக இருக்கிறது. மனித சிருஷ்டியின் இந்த தலைகீழ் மரம் எப்படி இருக்கிறது, என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இதனை கல்ப விருட்சம் என்று சொல்லப்படுகிறது. மரத்தின் ஞானமும் வேண்டும் அல்லவா. மற்ற மரங்களின் ஞானம் மிக-மிக சுலபமாகும், உடனே சொல்லி விடுவார்கள். இந்த மரத்தின் ஞானம் கூட அதுபோல் சுலபமானது தான் ஆனால் இது மனித மரமாகும். மனிதர்களுக்கு தங்களுடைய மரத்தைப்பற்றி தெரியவில்லை. கடவுள் படைப்பவர் என்று சொன்னால் கண்டிப்பாக உயிரோட்ட முள்ளவர் தான் அல்லவா. பாபா சத்தியமானவர், உயிரோட்டமுள்ளவர், ஞானக்கடலாக இருக் கின்றார். அவரிடத்தில் என்ன ஞானம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. பாபா தான் விதை ரூபமாக, உயிரோட்டமுள்ளவராக இருக்கின்றார். அவரிடமிருந்து தான் அனைத்து படைப்புகளும் வருகின்றன. எனவே பாபா வந்து புரிய வைக்கின்றார், மனிதர்களுக்கு தங்களுடைய மரத்தைப் பற்றி தெரியவில்லை, மற்ற மரங்களைப் பற்றி நல்ல விதத்தில் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மரத்தின் விதை உயிரோட்டமுடையது என்றால் சொல்லும் அல்லவா ஆனால் அது ஜடமாகும். எனவே இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தான் படைப்பவர் மற்றும் படைப்பினுடைய இரகசியத்தை தெரிந்துள்ளீர்கள். இவர் சத்தியமானவர், உயிரோட்ட முடையவர், ஞானக்கடலாக இருக்கின்றார். உயிரோட்டமுடையவரிடம் பேசலாம் அல்லவா. மனிதர்களுடைய உடல் அனைத்திலும் உயர்ந்த மதிப்புமிக்கது என்று பாடப்படுகிறது. இதனுடைய மதிப்பை சொல்லவே முடியாது. பாபா வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார்.

நீங்கள் ஞானத்தை தாரணை செய்து ஞான மழை பொழியும் மேகங்களாக இருக்கிறீர்கள்) பாபா ஞானக்கடலாக இருக்கின்றார். அவரிடமிருந்து உங்களுக்கு ரத்தினங்கள் கிடைக்கிறது. இவை ஞான ரத்தினங்களாகும், இந்த ரத்தினங்களின் மூலம் உங்களுக்கு அந்த ரத்தினங்களும் அதிகம் கிடைத்து விடுகிறது. லஷ்மி-நாராயணனிடம் பாருங்கள் எவ்வளவு ரத்தினங்கள் இருக்கின்றன. வைர-வைடூரியங்களினால் ஆன மாளிகைகளில் இருக்கிறார்கள். பெயரே சொர்க்கமாகும், அதற்கு நீங்கள் எஜமானர்களாக ஆகின்றீர்கள். யாராவது ஏழைக்கு திடீரென்று பெரிய லாட்டரி கிடைக்கிறது என்றால் பைத்தியமாகி விடுவார்கள் அல்லவா. உங்களுக்கு உலக இராஜ்யம் கிடைக்கிறது என்றால் மாயை எவ்வளவு எதிர்க்கிறது என்று பாபா கூறுகின்றார். மாயை எவ்வளவு நல்ல - நல்ல குழந்தை களையும் விழுங்கி விடுகிறது என்பதை இன்னும் போகப்போக உங்களுக்குத் தெரிய வரும். ஒரேயடி யாக விழுங்கி விடுகிறது. நீங்கள் பாம்பை பார்த்திருக்கிறீர்களா - தவளையை எப்படி பிடிக்கிறது, முதலை யானையை விழுங்குகிறது. பாம்பு தவளையை முழுவதுமாக விழுங்கி விடுகிறது. மாயையும் அப்படியே ஆகும், குழந்தைகளை வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பிடித்து ஒரேயடியாக முடித்து விடுகிறது, பிறகு அவர்கள் பாபாவின் பெயரையே உச்சரிப்பதில்லை. உங்களிடத்தில் யோக பலத்தின் சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அனைத்தும் யோக பலத்தில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. எப்படி பாம்பு தவளையை விழுங்குகிறதோ, அதுபோல் குழந்தைகளாகிய நீங்களும் முழு இராஜ்யத்தையும் எடுத்துக் கொள்கிறீர்கள். முழு விஷ்வ இராஜ்யத்தையும் நீங்கள் வினாடியில் எடுத்துக் கொள்வீர்கள். பாபா எவ்வளவு சகஜமான யுக்தியை கூறுகின்றார். ஆயுதங்கள் எதுவும் இல்லை. பாபா ஞான-யோகத் தின் அஸ்திர-சஸ்திரங்களை கொடுக்கின்றார். அவர்கள் ஸ்தூல ஆயுதங்கள் போன்றவற்றை கொடுத்து விட்டார்கள்.

நாம் எப்படியிருந்து எப்படி ஆகிவிட்டோம், என்று குழந்தைகளாகிய நீங்கள் இந்த சமயத்தில் கூறுகின்றீர்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நாம் கண்டிப்பாக அப்படி இருந்தோம். மனிதர்களாகத் தான் இருந்தோம் ஆனால் குணம் மற்றும் அவகுணம் என்று இருக்கிறது அல்லவா. தேவதைகளிடத்தில் தெய்வீக குணம் இருக்கிறது ஆகையினால் அவர்களுடைய மகிமை பாடுகிறார்கள் - தாங்கள் சர்வகுணங்களும் நிறைந்தவர்கள்....... நாங்கள் குணமில்லாதவர்களாக இருக்கின்றோம், எங்களிடத்தில் குணங்கள் எதுவும் இல்லை. இந்த சமயத்தில் முழு உலகமும் குணமற்றதாக இருக்கிறது அதாவது ஒரு தெய்வீக குணமும் இல்லை. குணங்களை கற்றுக் கொடுக்கக் கூடிய பாபாவையே தெரிந்திருக்கவில்லை ஆகையினால் வினாச காலத்தில் அன்பில்லாத புத்தி என்றும் சொல்லப் படுகிறது. இப்போது சங்கமயுகத்தில் வினாசம் ஆகித்தான் தீர வேண்டும். இப்போது தான் பழைய உலகம் வினாசம் அடைந்து புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது. இதனை வினாச காலம் என்றும் சொல்லப்படுகிறது. இது கடைசி வினாசமாகும் பிறகு அரைக் கல்பத்திற்கு எந்த சண்டையும் நடப்பதே இல்லை. மனிதர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. வினாச காலத்தில் அன்பில்லாத புத்தி இருந்தது என்றால் கண்டிப்பாக பழைய உலகம் வினாசம் ஆகும் அல்லவா. இந்த பழைய உலகத்தில் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன. இறந்து கொண்டே இருக்கிறார்கள். பாபா இந்த சமயத்தின் நிலையை கூறுகின்றார். நிறைய வித்தியாசம் இருக்கிறது அல்லவா. இன்றைக்கு பாரதத்தின் நிலை இப்படி இருக்கிறது, நாளை பாரதம் என்னவாக இருக்கும்? இன்றைக்கு இது இருக்கிறது, நாளை நீங்கள் எங்கே இருப்பீர்கள்? முதலில் புதிய உலகம் எவ்வளவு சிறியதாக இருந்தது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அங்கே மாளிகைகளில் எவ்வளவு வைர-வைடூரியங்கள் போன்றவை இருக்கின்றன. பக்திமார்க்கத்தில் கூட உங்களுடைய கோயில்களில் என்ன குறைவாகவா இருக்கிறது. ஒரு சோமநாத் கோயில் மட்டுமா இருக்கும். யாராவது ஒருவர் உருவாக்கினால் அவரை பார்த்து மற்றவர்களும் உருவாக்குவார்கள். ஒரு சோமநாத் கோயிலில் எவ்வளவு கொள்ளையடித்தார்கள். பிறகு தங்களுடைய நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார் கள். அப்போது சுவர்களில் கற்கள் போன்றவற்றை வைக்கிறார்கள். இந்த கற்களுக்கு என்ன மதிப்பு இருக்கும். இவ்வளவு சிறிய வைரத்திற்கு கூட எவ்வளவு விலை இருக்கிறது. பாபா நகை வியாபாரி யாக இருந்தார், ஒரு குன்றுமணி அளவு வைரம் இருந்தது, 90 ரூபாய். இப்போது அதனுடைய மதிப்பு ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கிடைப்பதே இல்லை. மதிப்பு அதிகம் கூடிவிட்டது. இந்த சமயத்தில் வெளி நாடுகள் போன்ற இடங்களில் நிறைய செல்வம் இருக்கிறது ஆனால் சத்யுகத்திற்கு முன்னால் இவை ஒன்றுமே இல்லை.

வினாச காலத்தில் அன்பில்லாத புத்தி இருக்கிறது என்று இப்போது பாபா கூறுகின்றார். வினாசம் நெருக்கத்தில் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும்போது மனிதர்கள் சிரிக்கிறார்கள். நான் எவ்வளவு காலம் அமர்ந்து கொண்டிருப்பேன், எனக்கு என்ன மகிழ்ச்சியாக இருக்கிறதா என்ன? நான் சுகமும் அடைவதில்லை, துக்கமும் அடைவதில்லை. தூய்மையாக்குவதற்கான கடமை என் மீது இருக் கிறது. நீங்கள் எப்படி இருந்தீர்கள், இப்போது இப்படி ஆகி விட்டீர்கள், மீண்டும் உங்களை அப்படியே உயர்ந்தவர்களாக மாற்றுகின்றேன். நாம் மீண்டும் அப்படி ஆகக்கூடியவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உங்களுக்கு இப்போது இந்த அறிவு வந்துள்ளது, நாம் இந்த தெய்வீக வம்சத்தின் சம்மந்திகளாக இருந்தோம். இராஜ்யம் இருந்தது. பிறகு அப்படியே தங்களுடைய இராஜ்யத்தை இழந்தோம். பிறகு மற்றவர்கள் வர ஆரம்பித்தார்கள். இப்போது இந்த சக்கரம் முடிகிறது. இலட்சக் கணக்கான ஆண்டுகளின் விஷயம் இல்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த சண்டையே வினாசத்தினுடையது ஆகும், அந்தப்பக்கம் மிக அமைதியாக இறப்பார்கள். எந்த கஷ்டமும் ஏற்படாது. மருத்துவ மனைகள் போன்றவை இருக்காது. சேவை செய்வதற்கு, அழுவ தற்கு யார் இருப்பார்கள். அங்கு இந்த வழக்கமே இல்லை. அவர்களுடைய மரணம் சகஜமாக நிகழ்கிறது. இங்கே துக்கப்பட்டு இறக்கிறார்கள் ஏனென்றால் நீங்கள் நிறைய சுகத்தை அடைந்துள்ளீர்கள் எனவே துக்கத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும். இரத்த ஆறு இங்கே தான் ஓடும். இந்த சண்டைக்குப் பிறகு அமைதியாகி விடும் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் அமைதி யாகவே ஆகாது. வேட்டையில் மிருகத்தின் இறப்பு வேட்டைக்காரனுக்கு மகிழ்ச்சி. நீங்கள் தேவதைகளாக ஆகின்றீர்கள், பிறகு கலியுக மோசமான உலத்தில் நீங்கள் வர முடியாது. வினாசத்தையும் பாருங்கள், ஸ்தாபனையையும் பாருங்கள் என்று கீதையில் கூட பகவானுடைய மகாவாக்கியம் இருக்கிறது. காட்சிகள் கூட ஏற்பட்டது அல்லவா. இந்த காட்சிகள் அனைத்தும் கடைசியிலும் ஏற்படும் - இவர்-இவர் இப்படி ஆகின்றார் பிறகு அந்த சமயத்தில் அழுவார்கள், நிறைய பச்சாதாபப்படுவார்கள், தண்டனை அனுபவிப்பார்கள், அதிர்ஷ்டத்தை நொந்து கொள்வார்கள். ஆனால் என்ன செய்ய முடியும்? இது 21 பிறவிகளின் லாட்டரியாகும். நினைவு வருகிறது அல்லவா. காட்சி இல்லாமல் யாருக்கும் தண்டனை கிடைக்க முடியாது. நீதி விசாரனை குழு அமரும் அல்லவா. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தங்களுக்குள் ஞான ரத்தினங்களை தாரணை செய்து ஞான மழை பொழியும் மேகங்களாக ஆக வேண்டும். ஞான ரத்தினங்களின் மூலம் உலக இராஜ்யம் எனும் லாட்டரியை அடைய வேண்டும்.

2) இந்த வினாச காலத்தில் பாபாவிடம் அன்பு வைத்து ஒருவருடைய நினைவிலேயே இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் பச்சாதாபம் படும்படியான அல்லது அதிர்ஷ்டத்தை கெடுத்துக் கொள்ளும் படியாக எந்த கர்மத்தையும் செய்யக் கூடாது.

வரதானம்:
சதா சினேகியாகி பறக்கும் கலையின் வரதானத்தை அடைந்து நிர்ணயிக்கப்பட்ட வெற்றி எனும் நினைவில் கவலையற்றவர் ஆகுக!

அன்பான குழந்தைகளுக்கு பாப்தாதாவிடமிருந்து பறக்கும் கலைக்கான வரதானம் கிடைத்து விடுகின்றது. பறக்கும் கலை மூலம் பாப்தாதாவிற்கு அருகில் சென்றுவிட்டால் எப்படிப்பட்ட ரூபத்தில் மாயா வந்தாலும் உங்களை தொடக்கூட முடியாது. பரமாத்மாவின் குடைக்கு உள்ளே மாயாவின் நிழல் கூட வரமுடியாது. அன்பு. முயற்சியை விளையாட்டாக மாற்றிவிடும். அன்பு ஒவ்வொரு காரியத்திலும் நிர்ணயிக்கப்பட்ட வெற்றியின் ஸ்திதியை அனுபவம் செய்விக்கின்றது. அன்பான குழந்தைகள் ஒவ்வொருவரும் எப்பொழுதும் கவலையற்று இருப்பார்கள்.

சுலோகன்:
எதுவும் புதியது இல்லை என்ற நினைவின் மூலம் ஆடாது இருந்தால் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டேயிருப்பீர்கள்.