13-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரான தந்தையிடம் உங்களுக்கு மிக-மிக அன்பு இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து முதல்-முதலில் சிவபாபா, காலை வணக்கம் எனச் சொல்லுங்கள்.

கேள்வி:
மிகச்சரியான நினைவில் இருப்பதற்காக என்ன தாரணைகள் அவசியம்? மிகச்சரியான நினைவு உள்ளவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:
மிகச்சரியான நினைவிற்காக பொறுமை, கம்பீரத்தன்மை மற்றும் பாபாவைப் பற்றிப் புரிதல் வேண்டும். இந்த தாரணையின் ஆதாரத்தில் யார் நினைவு செய்கிறார்களோ, அவர்களின் நினைவு, (பாபாவின்) நினைவோடு சந்திக்கிறது. மேலும் பாபாவின் கரண்ட் (சக்தி) வரத்தொடங்குகிறது. அந்த சக்தியினால் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியமாக ஆகிக் கொண்டே செல்வார்கள். இதயம் முற்றிலும் குளிர்ந்து விடும். ஆத்மா சதோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்லும்.

ஓம் சாந்தி.
பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, ததத்வம், அதாவது ஆத்மாக்களாகிய நீங்களும் சாந்த சொரூபமானவர்கள். ஆத்மாக்கள் உங்கள் அனைவருடைய சுயதர்மமே சாந்தியாகும். சாந்திதாமத்திலிருந்து பிறகு இங்கே வந்து டாக்கியில் (சப்தத்திற்குள்) வருகிறீர்கள். இந்தக் கர்மேந்திரியங்கள் உங்களுடைய பார்ட்டை நடிப்பதற்காகக் கிடைத்துள்ளன. ஆத்மா சிறியது-பெரியதாக ஆவதில்லை. பாபா சொல்கிறார், நானோ சரீரதாரி அல்ல. நான் குழந்தைகளை நேரில் சந்திப்பதற்காக வரவேண்டி உள்ளது. ஒரு தந்தை இருக்கிறார், அவருக்குக் குழந்தைகள் பிறக்கின்றனர் என வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தை இதுபோல் சொல்லாது - நான் பரந்தாமத்திலிருந்து வந்து ஜென்மம் எடுத்து தாய்-தந்தையைச் சந்திப்பதற்காக வந்துள்ளேன் என்று சொல்லாது. யாரேனும் ஒரு புதிய ஆத்மா யாருடைய சரீரத்திலாவது வருகிறது அல்லது யாராவது பழைய ஆத்மாவுக்குள் பிரவேசமாகிறது என்று சொன்னால் தாய்-தந்தையைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறேன் எனச் சொல்வதில்லை. அவர்களுக்குத் தானாகவே தாய்-தந்தையர் கிடைத்து விடுகின்றனர். இங்கே இது புதிய விஷயமாகும். பாபா சொல்கிறார், நான் பரந்தாமத்திலிருந்து வந்து குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் இருக்கிறேன். குழந்தைகளுக்கு மீண்டும் ஞானத்தைக் கொடுக்கிறேன். ஏனென்றால் நான் ஞானம் நிறைந்தவனாக, ஞானக்கடலாக.......... இருக்கிறேன். நான் வருவது குழந்தைகள் உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருவதற்காக. இராஜயோகத்தைக் கற்றுத் தருபவர் பகவான் தான். கிருஷ்ணரின் ஆத்மாவுக்கு இந்த ஈஸ்வரிய பாகம் கிடையாது. ஒவ்வொருவரின் பாகமும் தனித்தனியானது. ஆக, பாபா புரிய வைக்கிறார் - இனிய குழந்தைகளே, தன்னை ஆத்மா என உணருங்கள். இது போல் தன்னைப் புரிந்து கொள்வது எவ்வளவு இனிமையானதாக உள்ளது! நாம் என்னவாக இருந்தோம்? இப்போது என்னவாக ஆகிக் கொண்டிருக்கிறோம்?

இந்த டிராமா எப்படி அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது! இதையும் நீங்கள் இப்போது புரிய வைக்கிறீர்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் என்பது மட்டும் நினைவிருந்தால் கூட நாம் சத்யுகத்திற்கு செல்லப்போகிறவர்கள் என்பது ஆகி விடும். இப்போது சங்கமயுகத்தில் உள்ளோம். பிறகு நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதனால் தூய்மையாகவோ அவசியம் ஆக வேண்டும். உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். ஓஹோ! எல்லையற்ற தந்தை சொல்கிறார், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னை நினைவு செய்வீர்களானால் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். உலகத்தின் எஜமானர் ஆவீர்கள். பாபா குழந்தைகள் மீது எவ்வளவு அன்பு வைக்கிறார்! வெறுமனே ஆசிரியர் ரூபத்தில் படிப்பு சொல்லித் தந்து விட்டு வேறு வீட்டுக்குச் சென்று விடுவார் எனபதல்ல. இவரோ தந்தையாகவும் ஆசிரியராகவும் இருப்பவர். உங்களுக்குப் படிப்பு சொல்லித் தரவும் செய்கிறார். நினைவு யாத்திரையும் கற்றுத் தருகிறார்.

அதுபோல் உலகத்தின் எஜமானராக ஆக்குபவர், தூய்மையற்றவரை தூய்மையாக்குபவராகிய பாபாவிடம் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்ததுமே முதல்-முதலில் சிவபாபாவுக்கு குட் மார்னிங் (காலை வணக்கம்) சொல்ல வேண்டும். குட் மார்னிங் என்று கூறி நினைவு செய்வீர்களானால் மிகுந்த குஷியில் இருப்பீர்கள். குழந்தைகள் தங்கள் மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும், நாம் அதிகாலையில் எழுந்து எல்லையற்ற தந்தையை எவ்வளவு நினைக்கிறோம்? மனிதர்கள் பக்தியும் கூட அதிகாலையில் செய்கின்றனர் இல்லையா? எவ்வளவு அன்போடு பக்தி செய்கின்றனர்! ஆனால் பாபா அறிவார், அநேகக் குழந்தைகள் இதயப் பூர்வமான அன்போடு நினைவு செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து பாபாவுக்கு குட் மார்னிங் சொல்ல வேண்டும், ஞான சிந்தனையிலேயே இருக்க வேண்டும். அப்போது குஷியின் அளவு அதிகரிக்கும். பாபாவுக்கு குட் மார்னிங் சொல்ல வில்லை என்றால் பாவச் சுமை எப்படி இறங்கும்? முக்கியமானது நினைவு. இதனால் வருங்காலத்திற்காக உங்களுக்கு மிகப் பெரும் வருமானம் சேமிப்பாகும். கல்ப-கல்பாந்தரமாக இந்த வருமானம் பயன்படும். மிகவும் பொறுமை, கம்பீரம் மற்றும் புரிதலுடன் நினைவு செய்ய வேண்டியுள்ளது. மேலோட்டமாக சொல்லி விடுகின்றனர், நான் பாபாவை அதிகம் நினைவு செய்கிறேன் என்று. ஆனால் சரியாக நினைவு செய்வதில் முயற்சி தேவை. யார் பாபாவை அதிகம் நினைவு செய்கிறார்களோ, அவர்களுக்கு சக்தி அதிகம் கிடைக்கிறது. ஏனென்றால் நினைவினால் நினைவு கிடைக்கின்றது. யோகம் மற்றும் ஞானம் இரண்டு பொருள்கள். யோகத்தின் சப்ஜெக்ட் வேறு, மிகப்பெரிய சப்ஜெக்ட். யோகத்தினால் தான் ஆத்மா சதோபிரதானம் ஆகின்றது. நினைவினால் அன்றி சதோபிரதானம் ஆவது முடியாதது. நல்லபடியாக அன்போடு பாபாவை நினைவு செய்வீர்களானால் தானாகவே சக்தி கிடைக்கும். ஆரோக்கியமாக ஆகி விடுவீர்கள். சக்தியினால் ஆயுளும் அதிகமாகும். குழந்தைகள் நினைவு செய்கின்றனர் என்றால் பாபாவும் சர்ச் லைட் (வழி) தருவார்.

இனிமையான குழந்தைகள் இதை உறுதியாக நினைவில் வைக்க வேண்டும் - சிவபாபா நமக்கு படிப்பு சொல்லித் தருகிறார். சிவபாபா பதீத பாவனராகவும் உள்ளார். சத்கதி அளிப்பவராகவும் உள்ளார். சத்கதி என்றால் சொர்க்கத்தின் இராஜபதவி தருகிறார். பாபா எவ்வளவு இனிமையானவர்! எவ்வளவு அன்போடு குழந்தைகளுக்கு அமர்ந்து கற்றுத் தருகிறார்! பாபா, தாதா மூலம் நமக்கு படிப்பு சொல்லித் தருகிறார். பாபா எவ்வளவு இனிமையானவர்! எவ்வளவு அன்பு செய்கிறார்! எந்த ஒரு கஷ்டமும் கொடுப்பதில்லை. என்னை நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் சொல்கிறார். பாபாவின் நினைவில் ஒரேயடியாக மனம் மூழ்கிவிட வேண்டும். ஒரு பாபாவின் நினைவு மட்டுமே இருந்து கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் பாபாவிடமிருந்து ஆஸ்தி எவ்வளவு பெரியதாகக் கிடைக்கிறது! தன்னைத் தான் பார்க்க வேண்டும், நமக்கு பாபா மீது எவ்வளவு அன்பு என்று. எது வரை நமக்குள் தெய்வீக குணங்கள் உள்ளன? ஏனென்றால் குழந்தைகள் நீங்கள் இப்போது முள்ளில் இருந்து மலராகிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு யோகத்தில் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு முள்ளிலிருந்து மலராக, சதோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். மலராக மாறி விட்டீர்கள் என்றால் பிறகு இங்கே இருக்க முடியாது. சொர்க்கம் என்பது மலர்களின் தோட்டமாகும். யார் அநேக முட்களை மலர்களாக மாற்று கிறார்களோ, அவர்களைத் தான் உண்மையான மணமுள்ள மலர்கள் எனச் சொல்வார்கள். அவர்கள் ஒரு போதும் யாரையும் முள்ளாகக் குத்த மாட்டார்கள். கோபம் கூட பெரிய முள்ளாகும். அநேகருக்குத் துக்கம்

தருவதாகும். இப்போது குழந்தைகள் நீங்கள் முட்களின் உலகத்தில் இருந்து விலகி மறு கரையில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இருப்பது சங்கமயுகத்தில். எப்படி தோட்டக்காரர் மலர்களைத் தனியாக வெளியில் எடுத்து பாத்திரத்தில் வைக்கிறாரோ, அதே போல் மலர்களாகிய நீங்களும் கூட இப்போது சங்கமயுகம் என்ற பாத்திரத்தில் வைக்கப் பட்டிருக்கிறீர்கள். பிறகு மலர்கள் நீங்கள் சொர்க்கத்திற்குச் சென்று விடுவீர்கள். கலியுக முட்கள் சாம்பலாகி விடும்.

இனிமையான குழந்தைகள் அறிவீர்கள், பரலௌகீக் தந்தையிடமிருந்து நமக்கு அவிநாசி ஆஸ்தி கிடைக்கிறது. யார் உண்மையிலும் உண்மையான குழந்தைகளாக இருக்கிறார்களோ, பாப்தாதாவின் மீது முழுமையான அன்பு உள்ளதோ, அவர்களுக்கு மிகுந்த குஷி இருக்கும். நாம் உலகத்தின் எஜமானர் ஆகிறோம். ஆம், புருஷார்த்தத்தின் மூலம் தான் உலகத்தின் எஜமானர்கள் உருவாகிறார்கள். வெறுமனே சொல்வதால் அல்ல. யார் மிக முக்கியமான குழந்தைகளாக உள்ளனரோ, அவர்களுக்கு சதா இது நினைவிருக்கும், அதாவது நாம் நமக்காக மீண்டும் அதே சூரியவம்சி, சந்திரவம்சி இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, எவ்வளவு நீங்கள் அநேகருக்கு நன்மை செய்வீர்களோ, அவ்வளவு தான் உங்களுக்குப் பலன் கிடைக்கும். அநேகருக்கு வழி சொல்வீர்களானால் அநேகரின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஞான இரத்தினங்களால் பையை நிரப்பிக் கொண்டு பிறகு தானம் செய்ய வேண்டும். ஞானக்கடல் உங்களுக்கு இரத்தினங்களின் தட்டை நிரப்பி-நிரப்பிக் கொடுக்கிறார். யார் பிறகு தானம் செய்கின்றனரோ, அவர்கள் தாம் அனைவருக்கும் பிரியமானவர்களாக ஆகிறார்கள். குழந்தைகளுக்கு உள்ளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! புத்திசாலிக் குழந்தைகளாக யார் இருக்கிறார்களோ, அவர்களோ சொல்வார்கள், நாங்கள் பாபாவிடமிருந்து முழுமையாக ஆஸ்தியைப் பெறுவோம் முற்றிலும் கூர்மையாக இருப்போம். பாபாவிடம் மிகுந்த அன்பு இருக்கும். ஏனென்றால் உயிர்மூச்சை அளிக்கும் பாபா கிடைத்துள்ளார். ஞானத்தின் வரதானத்தை அதுபோல் தருகிறார், அதன் மூலம் நாம் எதிலிருந்து எதுவாக மாறி விடுகிறோம்! திவாலான நிலையிலிருந்து மிகப்பெரும் செல்வந்தராக ஆகி விடுகிறோம். அந்த அளவு நம் கஜானாவை நிரப்பி விடுகிறார். எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு அன்பு இருக்கும், கவர்ச்சி ஏற்படும். ஊசி சுத்தமாக இருந்தால் காந்தத்தின் பக்கம் ஈர்க்கப் பட்டு விடும் இல்லையா? பாபாவின் நினைவினால் கறை நீங்கிக் கொண்டே போகும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக்கூடாது. எப்படி மனைவிக்குக் கணவர் மீது எவ்வளவு அன்பு உள்ளது! உங்களுக்கும் கூட நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது இல்லையா? நிச்சயதார்த்தத்தின் குஷி குறைந்து விடுகிறதா என்ன? சிவபாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, உங்களுக்கு என்னோடு நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது. பிரம்மாவோடு நிச்சதார்த்தம் இல்லை. நிச்சயதார்த்தம் உறுதி ஆகிவிட்டதென்றால் பிறகோ அவருடைய நினைவு தான் வந்து கொண்டிருக்க வேண்டும்.

பாபா புரிய வைக்கிறார், இனிமையான குழந்தைகளே, கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள். சுயதர்ஷன் சக்கரதாரி ஆகுங்கள். லைட் ஹவுஸ் ஆகுங்கள். சுயதர்ஷன் சக்கரதாரி ஆவதற்கான பயற்சி நல்லபடியாக ஆகி விடுமானால் பிறகு நீங்கள் ஞானக்கடல் போல் ஆகி விடுவீர்கள். எப்படி மாணவர்கள் படித்து ஆசிரியராக ஆகி விடுகின்றனர் இல்லையா? உங்களுடைய தொழிலே இது தான். அனைவரையும் சுயதர்ஷன் சக்கரதாரி ஆக்குங்கள். அப்போது தான் சக்கவர்த்தி இராஜா-இராணி ஆவீர்கள். அதனால் பாபா எப்போதும் குழந்தைகளிடம் கேட்கிறார் - சுயதர்ஷன் சக்கரதாரி ஆகி அமர்ந்திருக்கிறீர்களா? பாபாவும் சுயதர்ஷன் சக்கரதாரி இல்லையா? பாபா வந்திருக்கிறார், இனிமையான குழந்தைகளாகிய உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக. குழந்தைகளாகிய நீங்கள் இல்லாமல் எனக்கும் கூட ஓய்வற்ற நிலையாகி விடுகிறது. எப்போது சமயம் வருகிறதோ, ஓய்வற்ற நிலை ஆகி விடுகிறது. சரி, இப்போது நாம் போக வேண்டும், குழந்தைகள் மிகவும் அழைக்கின்றனர். அதிக துக்கத்தில் உள்ளனர். இரக்கம் வருகின்றது. இப்போது குழந்தைகள் நீங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து நீங்கள் தாங்களாகவே சுகதாமத்திற்குச் செல்வீர்கள். அங்கே நான் உங்களுக்குத் துணையாக வர மாட்டேன். தனது மன நிலையின் அனுசாரம் ஆத்மா சென்று விடும்.

குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நஷா இருக்க வேண்டும், நாம் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் இறை மாணாக்கர்கள். நாம் மனிதரிலிருந்து தேவதையாக அல்லது உலகத்தின் எஜமானர் ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் அமைச்சரவையின் துறைகள் அனைத்திலும் பாஸாகி விடுகிறோம். ஆரோக்கியத்திற்கான கல்வியும் கற்கிறோம். பண்புகளைச் சீர்திருத்துவதற்கான ஞானத்தையும் கற்கிறோம். சுகாதார அமைச்சகம், நில அமைச்சகம், கட்டட அமைச்சகம் அனைத்தும் இதில் வந்து விடுகின்றன.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், எப்போது ஏதேனும் சபையில் சொற்பொழிவு செய்கிறீர்களோ, அல்லது யாருக்காவது புரிய வைக்கிறீர்களோ, அப்போது அடிக்கடி சொல்லுங்கள், தன்னை ஆத்மா என உணர்ந்து பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்யுங்கள். இந்த நினைவின் மூலம் தான் உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். அடிக்கடி இந்த நினைவு செய்ய வேண்டும். ஆனால் எப்போது நீங்களும் பாபா நினைவில் இருக்கிறீர்களோ, அப்போது தான் இதை மற்றவர்களுக்குச் சொல்ல முடியும். இவ்விஷயத்தில் குழந்தைகளுக்கு அதிக பலவீனம் உள்ளது. உள்ளுக்குள் குழந்தைகளாகிய உங்களுக்குக் குஷி இருக்கும். நினைவில் இருந்தால் தான் மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கான தாக்கம் இருக்கும். நீங்கள் பேசுவது அதிகம் இருக்கக் கூடாது. ஆத்ம அபிமானி ஆகிக் கொஞ்சம் புரிய வைத்தாலும் கூட புத்தியில் நன்கு பதியும். பாபா சொல்கிறார், குழந்தைகளே, நடந்து முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். இப்போது முதலில் உங்களைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். தான் நினைவு செய்வதில்லை, மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இந்த ஏமாற்று செல்லுபடியாகாது. உள்ளுக்குள் மனம் நிச்சயமாக அரித்துக் கொண்டே இருக்கும். பாபாவிடம் முழு அன்பு இல்லையென்றால் ஸ்ரீமத்படி நடப்பதில்லை. எல்லையற்ற தந்தையைப் போலவோ வேறு யாரும் கற்றுத்தர முடியாது. பாபா சொல்கிறார், இனிமையான குழந்தைகளே, இந்தப் பழைய உலகத்தை இப்போது மறந்து விடுங்கள். கடைசியிலோ இவையனைத்தையும் மறந்தேயாக வேண்டும். புத்தி தன்னுடைய சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தின் மீது ஈடுபட்டு விடுகின்றது. பாபாவை நினைவு செய்து-செய்தே பாபாவிடம் சென்றுவிட வேண்டும். பதீத் ஆத்மாவோ செல்ல முடியாது. அதுவே பாவன ஆத்மாக்களின் வீடு. இந்த சரீரம் 5 தத்துவங்களால் ஆனது. ஆக, 5 தத்துவங்கள் இங்கே இருப்பதற்காக ஈர்க்கின்றன. ஏனென்றால் ஆத்மா இதை சொத்தாக எடுத்துக் கொண்டுள்ளது. இப்போது இதன் மீது வைத்த மோகத்தை விட்டு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். அங்கோ இந்த 5 தத்துவங்கள் கிடையாது. சத்யுகத்திலும் கூட சரீரம் யோகபலத்தினால் உருவாகின்றது. சதோபிரதான இயற்கை உள்ளது. அதனால் ஈர்ப்பதில்லை. துக்கம் ஏற்படுவதில்லை. இவை புரிந்து கொள்வதற்கான மிகவும் நுட்பமான விஷயங்கள் ஆகும். இங்கே 5 தத்துவங்களின் பலம் ஆத்மாவை ஈர்க்கின்றது. அதனால் சரீரத்தை விடுவதற்கான மனம் இருப்பதில்லை. இல்லையென்றால் இதில் இன்னும் கூட குஷியடைய வேண்டும். பாவனமாகி சரீரத்தை அப்படியே விட்டுவிடுவீர்கள், வெண்ணெயில் இருந்து முடி வெளிவருவது போல. ஆக, சரீரத்திலிருந்து, அனைத்துப் பொருட்களிடமிருந்து மோகத்தை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். இதனுடன் நமக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அவ்வளவு தான், நாம் போகிறோம் பாபாவிடம். இவ்வுலகில் தன்னுடைய பெட்டி-படுக்கைகளைத் தயார் செய்து முன்கூட்டியே அனுப்பியாயிற்று. கூடவோ செல்ல முடியாது. மற்றப்படி ஆத்மாக்கள் தாம் செல்ல வேண்டும். சரீரத்தையும் இங்கே விட்டாயிற்று. பாபா புதிய சரீரத்தின் சாட்சாத்காரம் செய்வித்துள்ளார். வைரம்- வைடூரியங்களின் மாளிகை கிடைத்து விடும். அதுபோன்ற சுகதாமத்திற்குச் செல்வதற்காக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! களைத்துப் போகக் கூடாது. இரவும் பகலும் அதிக வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதனால் பாபா சொல்கிறார், உறக்கத்தை வெல்லக் கூடிய குழந்தைகளே! என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். மேலும் விசார் சாகர் மந்தன் செய்யுங்கள். டிராமாவின் இரகசியத்தைப் புத்தியில் வைப்பதால் புத்தி முற்றிலும் குளிர்ந்து விடும். மகாரதி குழந்தைகள் என்றால் ஒருபோதும் ஆட மாட்டார்கள். சிவபாபாவை நினைவு செய்வீர்களானால் அவர் பாதுகாக்கவும் செய்வார்.

பாபா குழந்தைகளாகிய உங்களை துக்கத்திலிருந்து விடுவித்து சாந்தியின் தானம் கொடுக்கிறார். நீங்களும் மற்றவர்களுக்கு சாந்தியின் தானம் கொடுக்க வேண்டும். இது உங்களுடைய எல்லையற்ற சாந்தி. அதாவது யோகபலம் மற்றவர்களையும் முற்றிலும் சாந்தமாக்கி விடும். உடனே தெரிய வரும், இவர் நம்முடைய வீட்டைச் (தர்மத்தை) சேர்ந்தவரா, இல்லையா? ஆத்மாவுக்கு உடனே கவர்ச்சி ஏற்படும், இவர் நம்முடைய பாபா. நாடியையும் பார்க்க வேண்டியுள்ளது. பாபாவின் நினைவில் இருந்து பிறகு பாருங்கள், இந்த ஆத்மா நமது குலத்தைச் சேர்ந்தவரா? அப்படி இருப்பாரானால் முற்றிலும் சாந்தமாகி விடுவார். யார் இந்தக் குலத்தைச் சேர்ந்தவராக இருப்பார்களோ, அவர்களுக்குத் தான் இவ்விஷயங்களில் இரசனை வரும். குழந்தைகள் நினைவு செய்கின்றனர் என்றால் பாபாவும் அன்பு செலுத்துவார். ஆத்மாவுக்கு அன்பு செலுத்தப்படுகின்றது. இதையும் அறிவீர்கள், யார் அதிக பக்தி செய்திருக்கிறார்களோ, அவர்கள் தான் அதிகம் படிப்பார்கள். அவர்களின் முகத்திலிருந்து தெரிய வரும், இவர்களுக்கு பாபா மீது எவ்வளவு அன்பு உள்ளது என்று! ஆத்மா தந்தையைப் பார்க்கின்றது. தந்தை ஆத்மாக்களாகிய நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். பாபாவும் புரிந்திருக்கிறார், நாம் இவ்வளவு மிகச்சிறிய ஆத்மாவுக்குப் படிப்பு சொல்லித் தருகிறோம். இன்னும் போகப்போக உங்களுக்கும் இந்த மனநிலை அமைந்துவிடும். நாம் சகோதரன்-சகோதரனுக்குக் கற்றுத் தருகிறோம் என்று. முகம் சதோதரியினுடையதாக இருந்தாலும் திருஷ்டி ஆத்மாவின் பக்கம் செல்ல வேண்டும். சரீரத்தின் பக்கம் முற்றிலும் செல்லவே கூடாது. இதில் மிகுந்த முயற்சி உள்ளது. இவை மிகவும் நுட்பமான விஷயங்களாகும். மிக உயர்ந்த படிப்பாகும். எடை போட்டுப் பார்ப்பீர் களானால் இந்தப் படிப்பின் பக்கம் அதிக பாரம் ஆகி விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனது பையை ஞான இரத்தினங்களால் நிரப்பிப் பிறகு தானமும் செய்ய வேண்டும். யார் தானம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அளவற்ற குஷி இருக்கும்.

2) உயிர்மூச்சைத் தரும் பாபாவை மிகுந்த அன்போடு நினைவு செய்து கொண்டு அனைவருக்கும் சாந்தியின் தானம் கொடுக்க வேண்டும். சுயதர்ஷனச் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே ஞானக்கடலாக ஆக வேண்டும்.

வரதானம்:
ஒளி உடல் மூலமாக சேவை செய்து கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டு டபுள் லைட் ஆகுக

எப்படி இந்த மானுடல் மூலமாக ஈஸ்வரிய சேவையில் இணைந்துள்ளீர்களோ அவ்வாறே தனது ஒளி உடல் மூலமாக இறுதி செய்தி தருவதற்கான சேவையும் இணைந்தே செய்யுங்கள். பிரம்மா பாபா மூலமாக ஸ்தாபனை வளர்ச்சி அடைந்தது. அவ்வாறே இப்போது உங்களுடைய இணைந்த ரூபத்தின் மூலமாக சாட்சாத்காரத்தின் செய்தி கிடைக்கும் சேவை செய்யுங்கள். ஆனால் இந்த சேவை செய்வதற்காக செயல்கள் பல செய்த பொழுதும் எந்த விதமான கர்ம சுமையின்றி சதா டபுள் லைட் வடிவத்தில் இருங்கள்.

சுலோகன்:
ஞான சிந்தனை செய்யும் பொழுது கிடைக்கும் குஷியெனும் வெண்ணெய் தான் வாழ்வை சக்திசாலியாக மாற்றுகிறது.

தன்னுடைய சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுக்கும் சேவை செய்யுங்கள்

எனக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை என்று ஒருவரும் சொல்ல முடியாது. ஒருவரும் உங்களுக்கு கூறாத போதும் மனதால் சுற்றுச் சூழலை சுகமயமாக்கும் உள்ளுணர்வு மற்றும் மனோ நிலையுடன் சேவை செய்யுங்கள். உடல் நோய்வாய்ப்பட்ட போதும் வீட்டிலிருந்தபடியே சகயோகி ஆகுங்கள். அதற்காக மனதில் சுத்த எண்ணங்களின் சேமிப்பை மட்டும் வையுங்கள். சுபபாவனைகளால் நிரம்பியிருங்கள்.