13-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பதவி பெறுவதற்கான ஆதாரம் படிப்பு, யார் பழைய பக்தர்களாக இருக்கிறார்களோ அவர்கள் நன்றாகப் படிப்பார்கள் மற்றும் நல்ல பதவியும் அடைவார்கள்.

கேள்வி:
யார் தந்தையின் நினைவில் இருப்பார்களோ அவர்களது அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:
நினைவில் இருப்பவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கும். அவர்கள் தூய்மையாகிக் கொண்டே செல்வார்கள். ராயல் தன்மை வந்து கொண்டே இருக்கும். தங்களுக்குள் பாற்கடல் போன்று, இருப்பார்கள், மற்றவர்களைப் பார்க்காமல் தன்னைப் பார்ப்பார்கள். யார் செய்வார்களோ அவர்கள் அடைவார்கள் என்பது அவர்களது புத்தியில் இருக்கும்.

ஓம் சாந்தி.
பாரதத்தின் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் கீதை என்பது குழந்தை களுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கீதையைக் கூறியது யார்? என்பது யாருக்கும் தெரியாது. இது ஞான விசயமாகும். மற்றபடி இந்த ஹோலி போன்ற விழாக்கள் நம்முடையது கிடையாது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விழாக் களாகும். விழா என்றாலே ஒரே ஒரு திரிமூர்த்தி சிவஜெயந்தி ஆகும். அவ்வளவு தான்! சிவஜெயந்தி என்று மட்டும் ஒருபொழுதும் கூறி விடக் கூடாது. திரிமூர்த்தி என்ற வார்த்தை சேர்க்கும் பொழுது மனிதர்கள் குழப்பமடைய மாட்டார்கள். திரிமூர்த்தி சித்திரம் இருக்கிறதல்லவா! கீழே தெய்வீக சுயராஜ்யம் உங்களது பிறப்புரிமை என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். சிவபகவான் தந்தையாகவும் இருக்கிறார் அல்லவா! அவசியம் வருகின்றார், வந்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். இராஜ யோகம் கற்பதன் மூலம் தான் சொர்கத்திற்கு எஜமானர்களாக ஆக முடியும். சித்திரங்களுக்குள் அதிக ஞானம் இருக்கிறது. மனிதர்கள் ஆச்சரியப்படுமளவிற்கு சித்திரங்களை உருவாக்க வேண்டும். யார் அதிகம் பக்தி செய்திருப்பார்களோ அவர்கள் தான் ஞானமும் அதிகம் அடைவார் கள். குறைவாக பக்தி செய்தவர்கள் ஞானமும் குறைவாக அடைவார்கள், பிறகு பதவியும் குறைந்து விடும். வேலைக் காரர்களிலும் வரிசைக்கிரமம் இருக்கும் அல்லவா! அனைத்திற்கும் ஆதாரம் படிப்பதில் இருக்கிறது. உங்களிலும் மிகக் குறைவானவர்கள் தான் மிக நல்ல முறையில் யுக்தியாக பேச முடிகிறது. நல்ல குழந்தைகளின் நடத்தைகளும் நன்றாக இருக்கும். குணங்களும் மேன்மையாக இருக்க வேண்டும். எந்த அளவு தந்தையின் நினைவில் இருப்பீர் களோ தூய்மை யாகிக் கொண்டே செல்வீர்கள், மேலும் ராயல் தன்மையும் வந்து கொண்டே இருக்கும். சில இடங்களில் சூத்திரர்களின் நடத்தைகளும் நன்றாக இருக்கிறது, ஆனால் இங்கு பிராமணக் குழந்தைகளின் நடத்தைகள் அப்படி இருக்கிறது, கேட்கவே கேட்காதீர்கள்! அதனால் தான் இவர் களுக்கு ஈஸ்வரன் கற்பிக்கிறாரா? என்று அவர் கள் கேட்கின்றனர். ஆக குழந்தைகளின் நடத்தை இம்மாதிரியாக இருக்கக் கூடாது. மிக இனிமையாக, பாற்கடல் போன்று இருக்க வேண்டும், யார் செய்வார்களோ அவர்கள் அடைவார்கள். மற்றவர்கள் பெறமாட்டார்கள் தந்தை நல்ல முறையில் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். முதன் முதலில் எல்லையற்ற தந்தை யின் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருங்கள். திரிமூர்த்தி சித்திரம் மிகவும் நன்றாக இருக் கிறது - சொர்க்கம் மற்றும் நரகம் இரண்டு புறமும் இருக்கிறது. சக்கரத்திலும் தெளிவாக இருக் கிறது. எந்த தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த சக்கரம் அல்லது மரம் பற்றி புரிய வைக்க முடியும். - இந்த கணக்கை பார்க்கும் பொழுது நீங்கள் புது உலகம், சொர்க்கத்திற்கு வர முடியாது. எந்த தர்மம் அனைத்தையும் விட உயர்வாக இருந்ததோ, அனைத்தையும் விட செல்வம் மிக்கதாக இருந்ததோ, அதுவே அனைத்தையும் விட ஏழையாக ஆகிவிட்டது. எது அனைவரையும் விட முதலில் வந்ததோ அதன் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் இந்துக்கள் பலர் மற்ற தர்மங்களில் மாற்றமடைந்து விட்டனர். தனது தர்மத்தை அறியாத காரணத்தினால் பிற மதங்களுக்குச் சென்று விட்டனர் அல்லது இந்து தர்மம் என்று கூறி விட்டனர். தங்களது தர்மத்தைப் புரிந்து கொள்வதும் கிடையாது. அமைதி கொடுப்பவரே என்று ஈஸ்வரனை அதிகம் அழைக்கின்றனர். ஆனால் அமைதியின் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. ஒருவருக் கொருவர் அமைதிக்கான பரிசைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கு உலகில் அமைதி ஸ்தாபனை செய்வதற்கு நிமித்தமாக இருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை உலக இராஜ்யம் பரிசாக கொடுக்கின்றார். இந்த பரிசும் வரிசைக்கிரமமான முயற்சியின் படி கிடைக் கிறது. கொடுக்கக் கூடியவர் பகவான் தந்தை. பரிசு எவ்வளவு உயர்ந்தது - சூரியவம்ச உலக இராஜ்யம்! இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் முழு உலகின் சரித்திர பூகோளம், வர்ணம் போன்ற அனைத்தும் உள்ளன. உலக இராஜ்யம் அடைய வேண்டுமெனில் சிறிது முயற்சியும் செய்ய வேண்டும். கருத்துகள் மிகவும் எளிதாகும். ஆசிரியர் என்ன வேலை கொடுக்கிறாரோ அதை செய்து காண்பிக்க வேண்டும். ஆக யாரிடத்தில் முழு ஞானம் இருக்கிறது? என்பதை பாபா பார்க்கின்றார். சில குழந்தைகள் முரளியின் மீதும் கவனம் கொடுப்பது கிடையாது. தினமும் (தங்ஞ்ன்ப்ஹழ்) முரளி படிப்பது கிடையாது. யார் முரளி படிக்கவில்லையோ அவர்கள் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்! பல குழந்தைகள் எந்த நன்மையும் செய்யாமல் இருக்கின்றனர். தனக்கும், மற்றவர்களுக்கும் செய்யாமல் இருப்பதால் தான் குதிரைப் படை, காலாட்படை என்று கூறப்படுகின்றனர். மிகக் குறைவானவர்கள் தான் மகாரதிகளாக இருக் கின்றனர், யார் யார் மகாரதிகளாக இருக்கின்றனர்? என்பதை சுயம் புரிந்து கொள்ள முடியும். பாபா! குல்சார், குமாரகா, மனோகர் இந்திரா.... போன்றவர்களை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். ஏனெனில் சுயம் குதிரைப் படையாக இருக்கின்றனர். அவர்கள் மகாரதிகளாக இருக் கின்றனர். தந்தை அனைத்து குழந்தைகளையும் நன்றாக அறிவார். சிலர் மீது கிரஹச்சாரமும் ஏற்பட்டு விடுகிறது அல்லவா! சில நேரங்களில் நல்ல நல்ல குழந்தைகளும் மாயையின் புயல்கள் வரும் பொழுது வேதாளமாக ஆகிவிடுகின்றனர். ஞானத்தின் பக்கம் கவனம் செல்வதே கிடையாது. பாபாவிற்கு ஒவ்வொருவரின் சேவையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா! சேவை செய்பவர்கள் தங்களது சேவையின் முழு செய்தியை பாபாவிற்குக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

கீதையின் பகவான் நம்மை உலகிற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பலர் அந்த கீதையையும் கூட மனப்பாடம் செய்து விடு கின்றனர். ஆயிரக் கணக்கில் சம்பாதிக் கின்றனர். நீங்கள் பிராமண வம்சத்தினர்களாக இருக் கிறீர்கள், பிறகு தெய்வீக வம்சத்தினர்களாக ஆவீர்கள். தன்னை ஈஸ்வரனின் வம்சத்தினர் என்று அனைவரும் கூறிக் கொள்கின்றனர், பிறகு நம் அனைவருக்குள்ளும் ஈஸ்வரன் இருக்கின்றார் என்றும் கூறிவிடுகின்றனர். யாருக்கு என்ன தோன்று கிறதோ அதை கூறிக் கொண்டு இருக் கின்றனர். பக்தி மார்க்கத்தில் மனிதர்களின் நிலை எப்படி ஆகிவிட்டது! இந்த உலகம் இரும்பு யுகம், தூய்மையற்றதாகும். இந்த சித்திரத்தின் மூலம் மிக நல்ல முறையில் புரிய வைக்க முடியும். கூடவே தெய்வீக குணங்களும் தேவை. உள்ளே வெளியே சத்தியமாக இருக்க வேண்டும். ஆத்மா தான் பொய்யானதாக ஆகிவிட்டது, பிறகு அதையே சத்திய தந்தை சத்தியமானதாக ஆக்குகின்றார். தந்தை வந்து தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். தெய்வீக குணங்களை தாரணை செய்விக் கின்றார். நாம் இவ்வாறு (லெட்சுமி நாராயணன்) குணவான்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். என்னிடத்தில் எந்த அசுர குணங்களும் இல்லை தானே? என்று தனக்குள் சோதனை செய்து கொண்டே இருங்கள். போகப் போக மாயையின் தாக்குதலினால் பலர் கீழே விழுந்து விடுகின்றனர்.

உங்களுக்கு இந்த ஞானம் மற்றும் விஞ்ஞானம் தான் ஹோலி மற்றும் துரியா ஆகும். அவர்களும் கூட ஹோலி மற்றும் துரியா கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் பொருள் என்ன? என்பதை யாரும் அறியவில்லை. உண்மையில் இது ஞானம் மற்றும் விஞ்ஞானம் ஆகும். இதன் மூலம் நீங்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள். அவர்கள் என்ன என்ன செய் கின்றனர்! தூபம் போடுகின்றனர், ஏனெனில் பயங்கரமான நரகமாக இருக்கிறது. புது உலக ஸ்தாபனை மற்றும் பழைய உலக விநாசத்தின் காரியம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஈஸ்வரிய குழந்தைகளாகிய உங்களையும் கூட மாயை அந்த அளவிற்கு குத்து விடுகிறது, அதாவது மிக வேகமாக சாக்கடையில் விழுந்து விடுகிறீர்கள். பிறகு அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. பிறகு இதில் ஆசீர்வாதம் போன்ற விசயங்கள் எதுவும் இருப்பது கிடையாது. இந்த பக்கம் முன்னேறுவது கடினமாக ஆகிவிடும். ஆகையால் மிக எச்சரிக்கை தேவை. மாயையின் யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒருபொழுதும் தேக அபிமானத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். சதா எச்சரிக்கையுடன் இருங்கள், அனைவரும் சகோதர சகோதரிகள் ஆவர். பாபா என்ன கற்றுக் கொடுத்தாரோ அதையே சகோதரிகள் கற்றுக் கொடுக்கின்றனர். தந்தையிடத்தில் பலியாக வேண்டுமே தவிர சகோதரிகளிடத்தில் அல்ல. பிரம்மா விடத்திலும் பலியாகக் கூடாது. இவரும் முயற்சி செய்து கற்றிருக்கின்றார். முயற்சி நன்றாக செய்திருக்கின்றார், அதாவது சுய நன்மை செய்திருக்கின்றார். நமக்கு கற்றுக் கொடுக்கின்றார், ஆக நாமும் சுய நன்மை செய்து கொள்ள வேண்டும்.

இன்று ஹோலியாகும், இப்பொழுது ஹோலிக்கான ஞானமும் கூறிக் கொண்டிருக்கிறேன். ஞானம் மற்றும் விஞ்ஞானமாகும். ஞானம் தான் படிப்பு என்று கூறப்படுகிறது. விஞ்ஞானம் என்றால் என்ன? என்பது யாருக்கும் தெரியாது. விஞ்ஞானம் என்றால் ஞானத்தையும் கடந்து இருப்பது. இங்கு உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் பிராப்தி (பலனை) அடைகிறீர்கள். மற்றபடி அது சாந்திதாமம் ஆகும். இங்கு நடிப்பு நடித்து களைப்படைந்து விடும் பொழுது அமைதியாக இருக்க விரும்புகிறீர்கள். இப்பொழுது உங்களது புத்தியில் இந்த சக்கரத்தின் ஞானம் இருக்கிறது. இப்பொழுது நாம் சொர்க்கத்திற்கு செல்வோம், பிறகு 84 பிறவிகள் எடுத்து நரகத்திற்கு வருவோம். மீண்டும் அதே நிலை பிறகு ஏற்படும். இது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இதிலிருந்து யாரும் விடுபட முடியாது. இந்த நாடகம் ஏன் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது? என்று சிலர் கேட்கின்றனர். அடே, இது புது உலகம் மற்றும் பழைய உலகிற்கான விளையாட்டு ஆகும். அழிவற்றதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தை வைத்து புரிய வைப்பது மிகவும் நல்லது. அனைத்தையும் விட முதல் முக்கிய விசயம் - தந்தையை நினைவு செய்தால் தூய்மையானவர் களாக ஆகிவிடுவீர்கள். மற்ற தர்மங்களில் மாற்றலாகிச் சென்றவர்களில் யார் யார் இந்த குலத்தைச் சார்ந்தவர்களோ? அவர்களும் வெளிப்படுவார்கள் என்பது நாளடைவில் தெரிந்து விடும். எப்பொழுது அனைவரும் வந்து விடுவார்களோ அப்பொழுது மனிதர்கள் ஆச்சரியப்படுவார்கள். தேக அபிமானத்தை விட்டு விட்டு ஆத்ம அபிமானியாக ஆகுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். உங்களுக்கு படிப்பு தான் மிகப் பெரிய திருவிழா ஆகும். இதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு வருமானம் ஏற்படுகிறது! அவர்கள் இது போன்ற திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு எவ்வளவு பணத்தை வீணாக்குகின்றனர்! எவ்வளவு சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன! பஞ்சாயத்து இராஜ்யத்தில் சண்டையோ சண்டை தான். யாருக்காவது லஞ்சம் கொடுத்தாவது கொல்வதற்கு முயற்சி செய்கின்றனர். இவ்வாறு பல உதாரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சத்யுகத்தில் இப்படிப்பட்ட உபத்திரவங்கள் நடைபெறாது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இராவண இராஜ்யத்தில் அதிக உபத்திரவங்கள் ஏற்படுகின்றன. இப்பொழுது தமோ பிரதானம் அல்லவா! ஒருவருக்கொருவரின் கருத்துகள் ஒன்று சேராத காரணத்தினால் எவ்வளவு சண்டைகள் நடைபெறுகின்றன! ஆகையால் இந்த பழைய உலகை மறந்து தனிமையானவர்களாக (ஏகாந்தம்) ஆகிவிடுங்கள், வீட்டை நினைவு செய்யுங்கள், தனது சுகதாமத்தை நினைவு செய்யுங் கள் என்று தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். யாரிடத்திலும் அதிகம் பேசவும் செய்யாதீர்கள். இல்லையெனில் நஷ்டமாகி விடும். மிக இனிமையாக, அமைதியாக, அன்பாகப் பேசுவது நல்லதாகும். அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. அமைதியாக இருப்பது அனைத்தையும் விட மிக நல்லது. குழந்தைகளாகிய நீங்கள் அமைதியின் மூலம் வெற்றி அடைகிறீர்கள். ஒரு தந்தையிடமின்றி வேறு யாரிடத்திலும் அன்பு செலுத்தக் கூடாது. தந்தையிடமிருந்து எவ்வளவு சொத்துக்களை அடைய விரும்புகிறீர்களோ அந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் லௌகீக தந்தையின் சொத்துக்களை அடைவதற்கு எவ்வளவு சண்டைகள் ஏற்படுகின்றன! இதில் எந்த மோதலும் கிடையாது. எவ்வளவு விரும்புகிறீர்களோ அவ்வளவு தனது படிப்பின் மூலம் அடைய முடியும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சத்தியமான தந்தை சத்தியமானவர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றார், ஆகையால் சத்தியமாக நடந்து கொள்ள வேண்டும். எனக்குள் எந்த அசுர குணங்களும் இல்லை தானே? நான் அதிகம் பேசுவது கிடையாது அல்லவா? என்று தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும். மிக இனிமையானவர்களாக ஆகி அமைதியாக மற்றும் அன்பாகப் பேச வேண்டும்.

2) முரளியின் மீது மிகுந்த கவனம் கொடுக்க வேண்டும். தினமும் முரளி படிக்க வேண்டும். தனக்கு மற்றும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். ஆசிரியர் என்ன காரியம் சேவை கொடுக்கின்றாரோ அதை செய்து காண்பிக்க வேண்டும்.

வரதானம்:
ஹோலி சப்தத்தின் அர்த்தத்தை வாழ்வில் கொண்டு வந்து புருஷார்த்தின் வேகத்தை அதிகரிக்க கூடிய தீவிர புருஷார்த்தி ஆகுக

ஹோலி என்றால் எந்த விசயம் முடிந்துவிட்டதோ. கடந்து விட்டதோ அதை முற்றிலும் அழித்து விடவேண்டும். கடந்ததை கடத்திவிட்டு முன்னேறிச் செல்லவேண்டும், இது தான் ஹோலி கொண்டாடுவதாகும். கடந்த விசயங்கள் மிகவும் பழைய ஏதோ ஜென்மத்திற்கானதாகும் என்று அனுபவம் ஆகவேண்டும், எப்பொழுது அப்படிப்பட்ட ஸ்திதி இருக்குமோ அப்பொழுது புருஷார்த் தத்தின் வேகம் அதிகமாகும், எனவே தனது மற்றும் மற்றவரிகளின் கடந்த விசயங்களை ஒரு பொழுதும் சிந்தனையில் கொண்டு வராதீர்கள், புத்தியில் வைக்காதீர்கள். மற்றும் வர்ணனையும் செய்யாதீர்கள், அப்பொழுதே தீவிர புருஷார்த்தி ஆகமுடியும்,

சுலோகன்:
அன்பு (சினேகம்) தான் சகஜ நினைவிற்கான சாதனமாகும், ஆகையால் சதா அன்புடன் இருக்கவேண்டும் மற்றும் அன்பானவர் ஆக்கவேண்டும்.

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம் குப்த (மறைமுக) பந்தனத்தில் உள்ள கோபிகைகளின் புகழ்

பாடல் :- பாராமல் நேசிக்கிறேன் இருந்த இடத்திலே உன்னை யோசிக்கிறேன்...

இப்பொழுது இந்த பாடல் ஏதோ பந்தனத்தில் இருந்த அன்பில் மூழ்கிய கோபிகையின் புகழாகும், இது கல்ப கல்பத்திற்கான விசித்திர விளையாட்டாகும். உன்னை பாராமலே நேசிக்கிறேன். பாவம் இந்த உலகம் என்னவென்று அறியும், கல்பத்திற்கு முன் நடந்தது மீண்டும் திரும்ப நடந்து கொண்டி ருக்கின்றது. அந்த கோபிகைகள் வீடு வாசல் விடவில்லை ஆனால், நினைவில் கர்மபந்தனத்தை முடித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தான் எத்தனை மகிழ்ச்சியில் நடனமாடி ஆனந்தத்தில் பாடுகின்றார்கள். எனவே உண்மையில் வீட்டை விடுவதற்கான விசயமில்லை. வீட்டில் இருந்தவாரே அவரைப் பார்க்காமலே அந்த சுகத்தில் இருந்து சேவை செய்யவேண்டும். எப்படிப் பட்ட சேவை செய்ய வேண்டும்? பவித்திரமாகி பவித்திர ஆக்கவதற்கானதாகும். உங்களுக்கு இப்பொழுது மூன்றாவது கண் கிடைத்துள்ளது. ஆதியிலிருந்து இறுதி வரை விதை மற்றும் மரத்தின் இரகசியம் உங்களின் பார்வையில் உள்ளது. அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது இந்த வாழ்க்கை, இந்த ஞானம் 21 ஜென்மத்திற்கு சௌபாக்கியத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம், இதில் ஏதேனும் பழைய குலமரியாதையாக விகாரங்கள் இருந்தால், சேவை செய்ய முடியாது, அது தனது குறையாகும். அனேக பேருக்கு இந்த பிரம்மா குமாரிகள் வீடு வாசலை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள் என்று சிந்தனை வருகின்றது. ஆனால் வீடு வாசலை விடுவதற்கான விசயமி ல்லை, வீட்டில் இருந்தவாறே பவித்திரமாக இருக்கவேண்டும் மற்றும் சேவை செய்யவேண்டும். இதில் எந்த கடினமும் இல்லை. பவித்திரமானால் தான் தூய்மையான உலகத்திற்கு செல்லும் அதிகாரி ஆவீர்கள். மற்றபடி யார் செல்லவில்லையோ, அவர்கள் கல்பத்திற்கு முதலிலேயே வில்லன் பாகத்தை நடித்தவர்கள். இதில் யாருடைய குறையும் இல்லை. எப்படி நாம் பரமாத்மா வின் காரியத்தை அறிந்துள்ளோம் அதுபோன்று டிராமாவில் ஒவ்வொருவரின் பாகத்தையும் அறிந்துவிட்டோம் எனவே இதில் வேறுப்பு வருவதில்லை. அப்படிப்பட்ட தீவிர புருஷார்த்தி கோபிகைகள் ஓட்டம் பிடித்து வெற்றி மாலையிலும் வரமுடியும். நல்லது ஓம் சாந்தி

அவ்யக்த பிரேரணை - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

என்னவெல்லாம் ஞானத்திற்கான அழமான விசயங்களோ, அதை தெளிவாக்கும் விதி உங்களிடம் மிகவும் நன்றாக உள்ளது மற்றும் விளக்கமும் உள்ளது. ஒவ்வொரு விசயத்தையும் தர்க்கரீதி யாக தெளிவு செய்ய முடியும். தனது அதிகாரமுடையவர்கள். எந்த மனதின் கற்பனைக்கான விசயங்களும் கிடையாது. யாதார்த்தமானது மற்றும் அனுபவம். அனுபவத்தின் அதிகாரம், ஞானத்தின் அதிகாரம், சத்தியத்தின் அதிகாரம் எத்தனை அதிகாரம் உள்ளது. எனவே அதிகாரம் மற்றும் அன்பு - இந்த இரண்டையும் கூடக்கூடவே காரியத்தில் ஈடுபடுத்துங்கள்.