13.04.25    காலை முரளி            ஓம் சாந்தி  31.12.2004      பாப்தாதா,   மதுபன்


இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து எல்லையற்ற வைராக்கிய விருக்தியை வெளிப்படுத்துங்கள், இதுவே முக்திதாம கதவை திறக்கும் சாவியாகும்

இன்று புது உலகை படைக்கும் பாப்தாதா தனது குழந்தைகளுடன் புது ஆண்டு கொண்டாடு வதற்காக, பரமாத்ம சந்திப்பு கொண்டாடுவதற்காக, குழந்தைகளின் அன்பில் தனது தூர தேசத் திலிருந்து சாகார வதனத்திற்கு சந்திப்பு கொண்டாட வந்திருக்கின்றார். உலகில் அனைவரும் புது ஆண்டிற்கான வாழ்த்துக்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகளாகிய உங்களுக்கு பாப்தாதா புது யுகம் மற்றும் புது ஆண்டு இரண்டிற்கான வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். புது ஆண்டு ஒரு நாள் கொண்டாடுவதாகும். புது யுகம் நீங்கள் சங்கமத்தில் சதா கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் கூட பரமாத்ம அன்பின் ஈர்ப்பில் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். ஆனால் அனைவரையும் விட மிக தூர தேசத்திலிருந்து வரக் கூடியவர் யார்? இரட்டை அயல்நாட்டினர் களா? அவர்கள் இந்த சாகார தேசத்தில் தான் இருக்கின்றனர். ஆனால் பாப்தாதா தூர தேசத் திலிருப்பவர், எவ்வளவு தூரத்திலி ருந்து வருகின்றார்? எவ்வளவு மைல் கடந்து வருகின்றார் என்று கணக்கு எடுக்க முடியுமா? எனவே தூர தேசத்தை சார்ந்த பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள எதிரில் டைமண்ட் ஹாலில் அமர்ந்திருந்தாலும், மதுவனத்தில் அமர்ந்திருந்தாலும், ஞான சரோவரில் அமர்ந்திருந்தாலும், கேலரியில் அமர்ந்திருந்தாலும், உள்நாட்டில், வெளி நாட்டில் தூரத்தில் அமர்ந்து கொண்டு பாப்தாதாவை சந்திப்பு செய்து கொண்டிருக்கின்றனர். அனைவரும் எவ்வளவு அன்பாக தூரமாக இருந்து பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர், கேட்டுக் கொண்டும் இருக்கின்றனர் என்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஆக நாலாப் புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு புது யுகம் மற்றும் புது ஆண்டிற்கான பல மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். மிக நெருங்கிய அனுபவம் ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறதா? இன்று மற்றும் நேற்றைய விசயம் தான். நேற்று இருந்தேன், நாளை மீண்டும் ஆவேன். தனது புது யுகத்தின், தங்கயுகத்தின் தங்க ஆடை எதிரில் தென்பட்டுக் கொண்டி ருக்கிறதா? எவ்வளவு அழகாக இருக்கிறது! தெளிவாக தென்பட்டுக் கொண்டி ருக்கிறது தானே! இன்று சாதாரண ஆடையில் இருக்கிறேன், நாளை புது யுகத்தில் அழகான ஆடையில் ஜொலித்துக் கொண்டிருப்பது தென்படும். புது ஆண்டில் ஒரு நாள் மட்டும் ஒருவருக் கொருவர் பரிசு கொடுப்பர். ஆனால் புது யுகத்தை படைக்கும் பாப்தாதா உங்கள் அனைவருக்கும் தங்க உலகை பரிசாக கொடுத்திருக்கின்றார். அது பல பிறவிகள் கூடவே இருக்கும். அழியக் கூடிய பரிசு அல்ல. அழிவற்ற பரிசு தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கொடுத்து விட்டார். நினைவிருக்கிறது தானே! மறந்து விடவில்லை அல்லவா! விநாடியில் சென்று வர முடியும். அவ்வபொழுது சங்கமத்தில், அவ்வபொழுது தனது தங்க உலகிற்கு சென்று விடுகிறீர்கள். அல்லது தாமதம் ஆகிறதா? தனது இராஜ்யம் நினைவிற்கு வந்து விடுகிறது தானே!

இன்றைய நாள் விடை கொடுக்கும் நாள் என்றும் கூறப்படுகிறது. மேலும் 12 மணிக்குப் பிறகு வாழ்த்துக்கான நாள் என்றும் கூறப்படுகிறது. ஆக விடை கொடுக்கும் நாள், ஆண்டிற்கு விடை கொடுப்பதன் கூடவே நீங்கள் அனைவரும் எதற்கு விடை கொடுத்தீர்கள்? சோதனை செய்தீர்களா? சதா காலத்திற்கும் விடை கொடுத்தீர்களா? அல்லது சிறிது காலத்திற்காக விடை கொடுத்தீர்களா? பாப்தாதா முன்பே கூறியிருந்தார் - நேரத்தின் வேகம் தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆக முழு ஆண்டின் ரிசல்ட் சோதனை செய்தீர்களா- என்னுடைய முயற்சியின் வேகம் தீவிரமாக இருக்கிறதா? அல்லது சில நேரம் வேகம் சில நேரம் குறைவாக இருக்கிறதா? உலக நிலையைப் பார்த்து இப்பொழுது தனது இரண்டு சொரூபங்களை விசேஷமாக வெளிப்படுத்துங்கள். அந்த இரண்டு சொரூபம் - ஒன்று அனைவரின் மீதும் கருணை உள்ளம் மற்றும் கல்யாணகாரி. இரண்டாவது ஒவ்வொரு ஆத்மாவின் மீது சதா வள்ளலின் குழந்தை மாஸ்டர் வள்ளல். உலக ஆத்மாக்கள் முற்றிலும் சக்தியற்றவர்களாக, துக்கமானவர்களாக, அசாந்தியின் கதறிக் கொண்டிருக்கின்றனர். தந்தையின் முன், பூஜ்ய ஆத்மாக்களாகிய உங்கள் முன் புகார் செய்து கொண்டிருக்கிறார்கள்- சிறிது நேரத்திற்குக் கூட சுகம் கொடுங்கள், அமைதி கொடுங்கள், குஷி கொடுங்கள், தைரியம் கொடுங்கள். தந்தைக்கு குழந்தைகளின் துக்கம், குழப்பத்தை பார்க்க முடியவில்லை, கேட்க முடிய வில்லை. பூஜ்ய ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் கருணை வரவில்லையா! கொடுங் கள், கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே வள்ளலின் குழந்தைகள் சிறிது அஞ்சலி கொடுத்து விடுங்கள். தந்தையும் குழந்தை களாகிய உங்களை துணைவர்களாக ஆக்கி, மாஸ்டர் வள்ளல்களாக ஆக்கி, தனது வலது கரமாக ஆக்கி இந்த சைகை கொடுக்கின்றார் - உலக ஆத்மாக்கள் அனைவருக்கும் முக்தி கொடுக்க வேண்டும். முக்திதாமத்திற்கு செல்ல வேண்டும். ஹே வள்ளலின் குழந்தைகளே, தனது சிரேஷ்ட சங்கல்பத்தின் மூலம், மன சக்தியின் மூலம், வார்த்தைகளின் மூலம், சம்பந்தம்-தொடர்பின் மூலம், சுப பாவனை, சுப விருப்பத்தின் மூலம், அதிர்வலைகள், வாயுமண்டலத்தின் மூலம் ஏதாவது ஒரு யுக்தியின் மூலம் முக்தி கொடுங்கள். முக்தி கொடுங்கள் என்று கதறிக் கொண்டி ருக்கின்றனர். பாப்தாதா தனது வலதுகரமானவர்களுக்கு கூறுகின்றார் - கருண காட்டுங்கள்.

இன்று வரையிலான கணக்கு எடுங்கள். மெகா புரோகிராம் செய்தீர்கள், மாநாடு செய்தீர்கள், பாரதத்தில் அல்லது அயல் நாட்டில் சேவை நிலையங்களும் திறந்தீர்கள். ஆனால் உலக ஆத்மாக்களின் எண்ணிக்கையில் எத்தனை சதவிகித ஆத்மாக்களுக்கு முக்திக்கான வழி கூறியிருக்கிறீர்கள்? பாரதத்தின் கல்யாணகாரியாக மட்டும் இருக்கிறீர்களா? அல்லது அயல் நாட்டில் 5 கண்டங்கள் இருக்கின்றன, அங்கெல்லாம் சேவை நிலையங்கள் திறந்து அங்கிருப்பவர் களுக்கு நன்மை செய்தீர்களா? அல்லது உலகிற்கு நன்மை செய்பவர்களாக இருக்கிறீர்களா? உலக நன்மை செய்வதற்காக ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கும் கைகளாக, வலது கரங்களாக ஆக வேண்டும். ஒருவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் எப்படி கொடுக்கப்படும்? கரங்களால் கொடுக்கப்படும் அல்லவா! எனவே பாப்தாதாவிற்கு நீங்கள் கரங்கள் அல்லவா, கைகள் அல்லவா! ஆக பாப்தாதா வலது கரங்களிடம் கேட்கின்றார் - எத்தனை சதவிகிதம் நன்மை செய்திருக்கிறீர்கள்? எத்தனை சதவிகிதம் செய்தீருக்கிறீர்கள்? கூறுங்கள், கணக்கு எடுங்கள். கணக்கு எடுப்பதில் பாண்டவர்கள் புத்திசாலிகள் அல்லவா? எனவே பாப்தாதா கூறுகின்றார் - இப்பொழுது சுய முயற்சி மற்றும் சேவையின் விதவிதமான விதியின் மூலம் முயற்சியை வேகப்படுத்துங்கள். சுய ஸ்திதியிலும் கூட விசேஷமாக நான்கு விசயங்களை சோதிக்க வேண்டும் - இதைத் தான் தீவிர முயற்சி என்று கூற முடியும்.

முதல் விசயம் - முதலில் இதை சோதியுங்கள் நிமித்த உணர்வு (பொறுப்புணர்வு) இருக்கிறதா? எந்த ராயல் ரூபத்திலும் நான் என்பது வரவில்லையா? எனது என்பது இல்லையா? சாதாரண மனிதர்களிடம் நான் மற்றும் எனது என்பதும் சாதாரணமாக இருக்கும், மேலோட்டமாக இருக்கும். ஆனால் பிராமண வாழ்க்கையில் நான் மற்றும் எனது சூட்சுமத்தில் மற்றும் ராயலாக இருக்கிறது. அவர்களது மொழி என்ன என்பது தெரியுமா? இது நடக்கத் தான் செய்யும், இவ்வாறு நடக்கத்தான் செய்கிறது. இது நடந்தே தீரும். நடந்து கொண்டி ருக்கிறது, பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆக ஒன்று பொறுப்புணர்வு. ஒவ்வொரு விசயத்திலும் பொறுப்புணர்வு. சேவையிலும், ஸ்திதியிலும், சம்பந்தம்-தொடர்பில் முகம் மற்றும் நடத்தையில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அவர்களது மற்றொரு விசேஷதா பணிவு. பொறுப்பு மற்றும் பணிவு மூலம் படைத்தல் காரியம் செய்ய வேண்டும். மூன்று விசயங்கள் கேட்டீர்கள் - பொறுப்பு, பணிவு மற்றும் படைத்தல் காரியம், நான்காவது நிர்வான். எப்போது விரும்பு கிறீர்களோ அப்போது நிர்வான்தாமம் (பரந்தாமம்) சென்று விட வேண்டும், நிர்வான் ஸ்திதியில் நிலைத்து விட வேண்டும். ஏனெனில் சுயம் நிர்வான் ஸ்திதியில் நிலைத்திருக்கும் போது தான் மற்றவர்களையும் நிர்வான்தாமம் வர அழைத்துச் செல்ல முடியும். இப்பொழுது அனை வரும் முக்தி விரும்புகின்றனர். விடுவியுங்கள், விடுவியுங் கள் என்று கதறிக் கொண்டிருக் கின்றனர். எனவே இந்த நான்கு விசயங்களையும் மிக நல்ல சதவிகிதத்தில் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவது என்றால் தீவிர முயற்சி யாளர் ஆவதாகும். அப்போது பாப்தாதா கூறுவார் - ஆஹா, ஆஹா, ஆஹா குழந்தைகளே ஆஹா! நீங்களும் கூறுவீர்கள் ஆஹா பாபா ஆஹா, ஆஹா. ஆஹா டிராமா ஆஹா. ஆஹா முயற்சி ஆஹா! ஆனால் இப்பொழுது என்ன செய்கிறீர்கள் என்பது தெரியுமா? தெரியுமா? அவ்வபொழுது ஆஹா என்று கூறுகிறீர்கள். சில நேரம் ஏன் என்று கூறுகிறீர்கள். ஆஹா என்பதற்குப் பதிலாக ஏன் என்றும், பிறகு ஐயோ என்றும் கூறுகிறீர்கள். எனவே ஏன் கிடையாது, ஆஹா. உங்களுக்கும் ஏன் என்பது பிடித்திருக்கிறதா? அல்லது ஆஹா என்பது பிடித்திருக்கிறதா? எது பிடித்திருக் கிறது? ஆஹா. ஒருபோதும் ஏன் என்று கூறுவது கிடையாதா? தவறுதலாக வந்து விடுகிறது.

இரட்டை அயல்நாட்டினர் ஏன், ஏன் என்று கூறுகிறீர்களா? அவ்வபோது கூறிவிடுகிறீர் களா? எந்த இரட்டை அயல்நாட்டினர் ஏன் என்று கேட்பது கிடையாதோ அவர்கள் கை உயர்த்துங்கள். மிக குறைவாக இருக்கிறீர்கள். நல்லது, பாரதவாசிகள் ஆஹா, ஆஹா என்பதற்குப் பதிலாக ஏன் ஏன் கூறுபவர்கள் கை உயர்த்துங்கள். ஏன்-எதற்கு என்று கூறுகிறீர் களா? யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது? சன்ஸ்காரங்களா? பழைய சன்ஸ்காரங்கள் ஏன் என்று கேட்பதற்கு அனுமதி கொடுத்து விட்டது. ஆனால் தந்தை கூறுகின்றார் ஆஹா ஆஹா என்று கூறுங்கள். ஏன் ஏன் என்பது கூடாது. ஆக இப்போது இந்த புது ஆண்டில் என்ன செய்வீர்கள்? ஆஹா ஆஹா செய்வீர்களா? அல்லது அவ்வபொழுது ஏன் என்று கேட்பதற்கு அனுமதி கொடுத்து விடவா? ஏன் என்பது நன்றாக இல்லை. வயிற்றில் வாயுத் தொல்லை ஏற்பட்டு விடுகிறது அல்லவா, அது கெடுத்து விடுகிறது. ஆக ஏன் என்பது வாயுத் தொல்லையாகும். இதை செய்யாதீர்கள். ஆஹா ஆஹா எவ்வளவு நன்றாக இருக்கிறது. ஆம் என்று கூறுங்கள், ஆஹா ஆஹா ஆஹா.

நல்லது. தூர தேசத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், பார்த்துக் கொண்டி ருக்கிறீர்கள் - பாரதத்திலும், அயல் நாட்டிலும். அந்த குழந்தைகளிடத்திலும் கேட்கிறேன் ஆஹா ஆஹா செய்கிறீர்களா அல்லது ஏன் ஏன் என்று கேட்கிறீர்களா? யோசிக்கவே மாட்டீர்கள். கேள்விக் குறி கிடையாது, ஆச்சரியக் குறி கிடையாது, புள்ளி. கேள்விக் குறி எழுதுங்கள் எவ்வளவு வளைவாக இருக்கிறது! புள்ளி எவ்வளவு எளிதாக இருக்கிறது! கண்களில் தந்தை பிந்துவை வைத்துக் கொள்ளுங்கள் போதும். பார்ப்பதற்கு கண்களில் புள்ளி இருக்கிறது அல்லவா! அதே போன்று சதா கண்களில் புள்ளி தந்தையை வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக் கொள்ள வருகிறதா? வருகிறதா? அல்லது சரிந்து விடுகிறதா? மேல் கீழ் ஆகி விடுகிறதா? ஆக என்ன செய்வீர்கள்? எதற்கு விடை கொடுப்பீர்கள்? ஏன் என்பதற்கு? ஒருபோதும் ஆச்சரியக் குறியும் வரக் கூடாது, இதுவா! இப்படியும் நடக்குமா என்ன! நடக்கக் கூடாது, ஏன் நடந்தது. கேள்விக்குறி கூடாது, ஆச்சரியக் குறியும் கூடாது. தந்தை மற்றும் நான் அவ்வளவு தான். சில குழந்தைகள் கூறுகின்றார் - இப்படி நடக்கத் தான் செய்கிறது அல்லவா! உரையாடலின் பொழுது மிகவும் சுவாரஸ்மான விசயங்கள் கூறுகிறீர்கள், எதிரில் கூற முடியாது அல்லவா! எனவே உரையாடலின் போது அனைத்தையும் கூறிவிடு கிறீர்கள். சரி, என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டும். ஆனால் நீங்கள் நடக்கக் கூடாது, நீங்கள் பறக்க வேண்டும் எனில் நடக்கக் கூடிய விசயங்களை ஏன் பார்க்க வேண்டும்? பறக்கவும் மற்றும் பறக்க வையுங்கள். சுப பாவனை, சுப விருப்பம் அந்த அளவிற்கு சக்திசாலியாக இருக்க வேண்டும் - இடையில் ஏன் என்று வரக் கூடாது. அந்த அளவிற்கு சக்திசாலியாக இருக்க வேண்டும் - கெட்ட பாவனை உடையவர்களையும் சுப பாவனை உடையவர்களாக மாற்ற விட வேண்டும். இரண்டாம் நம்பர் - ஒருவேளை மாற்ற முடியவில்லை என்றாலும் உங்களது சுபபாவனை, சுப விருப்பம் அழிவற்றதாகும். சில நேரங்களுக்கானது அல்ல, அழிவற்றது. எனவே உங்கள் மீது கெட்ட பாவனையின் பாதிப்பு ஏற்பட முடியாது. கேள்வியில் சென்று விடுகிறீர்கள் - இவ்வாறு ஏன் நடக்கிறது? எவ்வளவு காலம் இவ்வாறு நடக்கும்? எப்படி நடக்கும்? இதன் மூலம் சுபபாவனையின் சக்தி குறைந்து விடுகிறது. இல்லையெனில் சுபபாவனை, சுப விருப்பத்திற்கான சங்கல்பத்தில் அதிக சக்தி இருக்கிறது. பாருங்கள், நீங்கள் அனைவரும் பாப்தாதாவிடம் வந்திருக்கிறீர்கள். முதல் நாளை நினைவு செய்யுங்கள், பாப்தாதா என்ன செய்தார்? பதீதமாக வருவார்கள், பாவியாக வருவார்கள், சாதாரணமாக வருவார்கள், விதவிதமான விருக்தியுடையவர்கள் வருவார்கள், விதவிதமான பாவனை உடையவர்கள் வருவார்கள், ஆனால் பாப்தாதா என்ன செய்தார்? சுப பாவனை வைத்தார் அல்லவா! என்னுடையவர்கள், மாஸ்டர் சர்வசக்திவான்கள், இதய சிம்மாசன தாரிகள் என்ற சுபபாவனை வைத்தார் அல்லவா! சுப விருப்பம் வைத்தார் அல்லவா! அதனால் தான் தந்தையினுடையவர்களாக ஆகிவிட்டீர்கள் அல்லவா! ஹே பாவிகளே, ஏன் வந்தீர்கள் என்று தந்தை கேட்டாரா என்ன? சுபபாவனை வைத்தார், என்னுடைய குழந்தை, மாஸ்டர் சர்வ சக்திவான் குழந்தை. தந்தை உங்கள் அனைவரின் மீதும் சுபபாவனை வைத்தார், சுப விருப்பம் வைத்தார் எனில் உங்களது உள்ளம் என்ன கூறியது? என்னுடைய பாபா. தந்தை என்ன கூறினார்? என்னுடைய குழந்தை. அதே போன்று சுபபாவனை, சுப விருப்பம் வைத்தீர்கள் எனில் என்ன தென்படும்? கல்பத்திற்கு முந்தைய என்னுடைய இனிய சகோதரர், என்னுடைய செல்லமான சகோதரி. மாற்றம் ஏற்பட்டு விடும்.

எனவே இந்த ஆண்டு ஏதாவது செய்து காண்பிக்க வேண்டும். கைகளை மட்டும் உயர்த்தி விடக் கூடாது. கை உயர்த்துவது மிக எளிது. மனதின் கை உயர்த்த வேண்டும். ஏனெனில் அதிக காரியம் பாக்கி இருக்கிறது. பாப்தாதா பார்க்கின்றார், உலக ஆத்மாக்களின் மீது அதிக கருணை ஏற்படுகிறது. இப்பொழுது இயற்கையும் களைப்படைந்து விட்டது. இயற்கை சுயம் களைப்படைந்து விட்டது எனில் என்ன செய்யும்? ஆத்மாக்களை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. தந்தைக்கு குழந்தை களைப் பார்த்து கருணை ஏற்படுகிறது. உங்கள் அனை வருக்கும் கருணை வரவில்லையா? செய்தி மட்டும் கேட்டு அமைதியாகி விடுகிறீர்கள், அவ்வளவு தான், இவ்வளவு ஆத்மாக்கள் சென்று விட்டனர். அந்த ஆத்மாக்கள் செய்தி கிடைப்பதிலிருந்து வஞ்சிக்கப்பட்டு விட்டனர். இப்பொழுது வள்ளல் ஆகுங்கள், கருணை யுள்ளம் உடையவர் ஆகுங்கள். கருணை ஏற்படும் போது தான் அவ்வாறு ஆக முடியும். இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தனக்குள் எல்லையற்ற வைராக்கிய விருக்தி வெளிப்படுத் துங்கள். எல்லையற்ற வைராக்கிய விருக்தி. இந்த தேகம், தேக உணர்வின் நினைவு, இதுவும் எல்லையற்ற வைராக்கிய விருத்தியில் குறையிருக்கிறது. சிறிய சிறிய எல்லைக்குட்பட்ட விசயங்கள் ஸ்திதியை ஏற்றயிறக்கம் செய்கிறது. காரணம்? எல்லையற்ற வைராக்கிய விருக்தியில் குறையிருக்கிறது, பற்று இருக்கிறது. வைராக்கியம் இல்லை, பற்று இருக்கிறது. எப்போது முற்றிலுமாக எல்லையற்ற வைராக்கியமுடையவர்களாக ஆகிவிடுவீர் களோ, விருக்தியிலும் வைராக்கியம், திருஷ்டியிலும் எல்லையற்ற வைராக்கியம், சம்பந்தம்-தொடர்பில், சேவையில் அனைத்திலும் எல்லையற்ற வைராக்கியம் அப்போது தான் முக்திதாமத் தின் வாசற்கதவு திறக்கும். இப்போது எந்த ஆத்மாக்கள் சரீரம் விட்டு செல்கிறதோ மீண்டும் பிறப்பு எடுக்கும், மீண்டும் துக்கமுடையதாக ஆகும். இப்போது முக்திதாமத்தின் கதவு திறப்பதற்கு நிமித்தம் நீங்கள் தானே? பிரம்மா பாபாவிற்கு துணைவர்களாக அல்லவா! ஆக கதவு திறப்பதற் கான சாவி எல்லையற்ற வைராக்கிய விருக்தி. இப்போது சாவி போடப்படவில்லை, சாவி தயார் செய்யப்படவில்லை. பிரம்மா பாபாவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார், அட்வான்ஸ் பார்ட்டியும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இயற்கையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது, அதிகம் களைப்படைந்து விட்டது. மாயாவும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூறுங்கள், ஹே மாஸ்டர் சர்வசக்திவான்களே! கூறுங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆண்டு ஏதாவது புதுமை செய்வீர்கள் தானே! புது ஆண்டு என்று கூறுகிறீர்கள் எனில் புதுமை செய்வீர்கள் தானே! இப்பொழுது எல்லையற்ற வைராக்கியம், முக்திதாமம் செல்வதற்கான சாவி தயார் செய்யுங்கள். நீங்கள் அனைவரும் கூட முதலில் முக்திதாமத்திற்கு செல்ல வேண்டும் அல்லவா! பிரம்மா பாபாவிடம் உறுதி கொடுத்திருக்கிறீர்கள் - கூடவே செல்வோம், கூடவே வருவோம், கூடவே இராஜ்யம் செய்வோம், கூடவே பக்தி செய்வோம் எனவே இப்போது தயார் செய்யுங்கள். இந்த ஆண்டு செய்வீர்களா? அல்லது அடுத்த ஆண்டும் தேவையா? இந்த ஆண்டு கவனம் செலுத்துவோம், அடிக்கடி செய்வோம் என்று கூறுபவர்கள் கை உயர்த்துங்கள். செய்வீர் களா? பிறகு உங்களுக்கு அட்வான்ஸ் பார்ட்டிகள் அதிகம் வாழ்த்துக்கள் கூறுவார்கள். அவர்களும் களைப் படைந்து விட்டார்கள். நல்லது. ஆசிரியர்கள் என்ன கூறுகிறீர்கள்? முதல் வரிசையில் உள்ளவர்கள் என்ன கூறுகிறீர்கள்? முதல் வரிசையில் உள்ள பாண்டவர்கள் மற்றும் முதல் வரிசையில் உள்ள சக்திகள் யார் செய்வீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். பாதி கைகள் அல்ல, பாதி கை உயர்த்தினால் பாதி செய்வீர்கள். உயரமாக கை உயர்த்துங்கள். நல்லது. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நல்லது. இரட்டை அயல்நாட்டினர் கை உயர்த்துங்கள். யார் கை உயர்த்தவில்லை என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுங்கள். நல்லது, சிந்தி குழுவும் கை உயர்த்துகின்றனர், அதிசயமாக இருக்கிறது. நீங்களும் செய்வீர்களா? சிந்தி குழு செய்வீர்களா? அதற்கு இரட்டை வாழ்த்துக்கள். மிக்க நன்று. ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, சுபபாவனைக்கான சைகை கொடுத்து, கையோடு கை கோர்த்து செய்தே தீர வேண்டும். நல்லது. (சபையில் ஒருவர் ஓசை எழுப்புகிறார்) அனைவரும் அமருங்கள், எதுவும் புதிதல்ல.

இப்பொழுது ஒருவிநாடியில் புள்ளியாகி பிந்து பாபாவை நினைவு செய்யுங்கள். மேலும் வேறு எந்த விசயங்களாக இருந்தாலும் அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வைக்க முடியுமா? ஒரு விநாடியில் நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர் அவ்வளவு தான். நல்லது.

இப்பொழுது நாலாப்புறங்களிலும் உள்ள புது யுகத்தின் அனைத்து எஜமானர் குழந்தை களுக்கு, நாலாப்புறங்களிலும் புது ஆண்டு கொண்டாடும் ஆர்வம்-உற்சாகம் உடைய குழந்தை களுக்கு சதா பறக்க வேண்டும் மற்றும் பறக்க வைக்க வேண்டும், இவ்வாறு பறக்கும் கலையிலுள்ள குழந்தை களுக்கு, சதா தீவிர முயற்சியின் மூலம் வெற்றி மாலையில் மணியாக ஆகக் கூடிய வெற்றி இரத்தினங்களுக்கு பாப்தாதாவின் புது ஆண்டு மற்றும் புது யுகத்தின் ஆசிர்வாதங்களின் கூடவே தட்டுக்கள் நிறைத்து நிறைத்து பலகோடி மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். ஒரு கையினால் கை தட்டுங்கள். நல்லது.

வரதானம்:
ஏகாக்ரதா (ஒருநிலைபடுத்தும்) பயிற்சியின் மூலம் ஏக்ரஸ் (ஒரே ரசனை) ஸ்திதியை உருவாக்கக் கூடிய அனைத்திலும் வெற்றி சொரூபமானவர் ஆகுக.

எங்கு ஏகாக்ரதா இருக்கிறதோ அங்கு தானாகவே ஏக்ரஸ் ஸ்திதி இருக்கும். ஏகாக்ரதாவின் மூலம் சங்கல்பம், வார்த்தை மற்றும் செயலில் வீணானவை அழிந்து விடும், சக்தி வந்து விடும். ஏகாக்ரதா என்றால் ஒரே ஒரு சிரேஷ்ட சங்கல்பத்தில் நிலைத்திருப்பதாகும். அந்த ஒரு விதை ரூப சங்கல்பத்தின் மூலம் முழு மரம் என்ற விஸ்தாரமும் அடங்கியிருக்கும். ஏகாக்ரதாவை அதிகப் படுத்தும் பொழுது அனைத்து விதமான குழப்பங்களும் சமாப்தி ஆகிவிடும். அனைத்து சங்கல்பம், வார்த்தை மற்றும் செயலில் எளிதாக வெற்றி கிடைத்து விடும். இதற்கு ஏகாந்தவாசி ஆகுங்கள்.

சுலோகன்:
ஒருமுறை செய்த தவற்றை அடிக்கடி யோசிப்பது என்றால் கறை மீது கறை ஏற்படுத்துவதாகும். ஆகையால் கடந்து முடிந்தவைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

அவ்யக்த இஷாரே: இணைந்த ரூப நினைவின் மூலம் சதா வெற்றியாளர் ஆகுங்கள்

இந்த நேரத்தில் ஆத்மா மற்றும் சரீரம் இணைந்திருப்பது போன்று தந்தை மற்றும் நீங்கள் இணைந்து இருங்கள். என்னுடைய பாபா என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். தனது நெற்றியில் சதா துணையின் திலகம் வைத்துக் கொள்ளுங்கள். யார் சுமங்கலியாக இருக்கிறார்களோ, துணை இருக்கிறார்களோ அவர்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள். எனவே துணைவனை சதா கூடவே வைத்துக் கொள்ளுங்கள். கூடவே வைத்துக் கொண்டால் கூடவே செல்வீர்கள். கூடவே இருக்க வேண்டும், கூடவே செல்ல வேண்டும், ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பத்திலும் கூடவே இருக்க வேண்டும்.