13-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உலகம் முழுவதிலும்
விகாரங்களின் வெப்பத்தைத் தணித்து அனைவரையும் குளுர்ச்சிப்
படுத்துவதற்காக பாபா வந்திருக்கின்றார். ஞான மழை
குளுர்ச்சியாக்கி விடுகிறது.
கேள்வி:
எந்த வெப்பம் உலகம் முழுவதையும்
எரித்துக் கொண்டு இருக்கின்றது?
பதில்:
காம விகாரத்தின் வெப்பம் முழு
உலகத்தையும் எரித்துக் கொண்டு இருக்கின்றது. அனை வரும் காம
அக்னியில் எரிந்து கருப்பாகி விட்டனர். பாபா ஞான மழை யினால்
அவர்களை குளுர்ச்சியாக்குகின்றார். மழை பொழிவதால் பூமி
குளிர்வது போல இந்த ஞான மழையினால் 21 பிறவிக்கு குளிர்ச்சி
அடைந்து விடுவீர்கள். எந்த விதமான வெப்பமும் இருக்காது.
தத்துவங்களும் சதோபிரதானம் ஆகிவிடுகிறது. எதுவும் சூடாக
இருக்காது.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் யாருடைய நினைவில் அமர்ந்து இருக்கிறீர்கள்?
நிச்சயமாக தன்னுடைய ஆன்மீகத் தந்தையினுடைய நினைவில் அமர்ந்து
இருக்கிறீர்கள். ஆத்மா தன்னுடைய பரமாத்மாவினுடைய நினைவில்
அமர்ந்து இருக்கின்றது. நமக்கு ஆன்மீகத் தந்தை வந்து
புத்துணர்வு அடையச் செய்து குளுர்ச்சி யாக்குகின்றார்.
ஏனென்றால் காமச்சிதையில் பாரதம் எரிந்து மடிந்திருக்கின்றது.
வெப்பத்தை தணியுங்கள் என பாடுகின்றார்கள். எதனுடைய வெப்பம்?
காமச்சிதையினுடையது. வெப்பம் அதிகரித்தால் மனிதர்கள் இறந்து
போகிறார்கள். இந்த காமச்சிதையின் வெப்பத்தில் பாரதம் ஒரேயடியாக
எரிந்து மடிந்திருக்கின்றது. ஆகையால் எங்களை வந்து
குளுர்ச்சியாக்குங்கள் என பாபாவை நினைக்கிறார்கள். மழை
பொழிந்தால் குளிர்ச்சி ஆகி விடுகிறது. பூமி குளுர்ச்சியாகி
விடுகிறது. இதுவோ ஞான மழையாகும். ஒரே ஒரு முறை வந்து இவ்வளவு
குளுர்ச்சியாக மாற்றுகின்றார். இவ்வளவு அனைத்தையும் கொடுத்து
விடுகின்றார். பிறகு சத்யுகத்தில் எந்த பொருளும் வேண்டும் என்ற
தீவிர ஆசை இருக்காது. அரைக் கல்பமாக தீவிர ஆசையில் இருந்து
வந்துள்ளீர்கள் - பாபா வந்து குளிர்ச்சியாக்குங்கள். பதீத
பாவனர் தந்தை வந்து குளுர்ச்சியாக்குகின்றார். இந்த ஞான மழையால்
பாரதம் மற்றும் உலகம் முழுவதும் குளுர்ச்சியாகின்றது. நீங்கள்
சொர்க்கத்திற்கு அதிபதியாகிறீர்கள். மனிதர்கள் இறந்து விட்டால்.
சொர்க்கவாசி ஆகிவிட்டார் என கூறுகின்றனர். அவர்கள் சும்மா
வாய்க் கினிப்பாக மட்டும் பேசுகின்றார்கள். இப்பொழுது
சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டு இருக்கின்றது என நீங்கள்
மட்டுமே அறிகிறீர்கள். இப்பொழுது பாபா வந்திருக் கின்றார்.
இந்த ஞான மழை பொழிந்து கொண்டு இருக்கின்றது. குளுர்ச்சியின்
தாக்கம் 21 பிறவிகளுக்கு இருக் கின்றது. அங்கே மழையோ, வேறு
எந்த பொருளின் ஆசையோ இருக்காது. எப்போதும் வசந்தமே வசந்தமாக
இருக்கின்றது. அங்கே எந்த விதமான துக்கமும் ஏற்படுவதில்லை.
சூரியன் கூட சதோபிரதானமாக மாறி விடுகிறது. ஒருபோதும்
வெப்பத்தைக் காண்பிப்பதில்லை. நீங்கள் முழு உலகிற்கும் அதிபதி
ஆகிவிடுகிறீர்கள். இப்பொழுது அடிமையாக இருக்கின்றீர்கள் அல்லவா?
நான் அடிமை, நான் அடிமை உண்னுடைய..... என பாடுகிறார்கள். பாபாவை
நினைக்கிறார்கள். உங்களுடைய சேவையில் நான், நான் வந்து
உங்களுடைய அடிமையாக மாறியிருக்கிறேன் என இப்பொழுது பாபா
கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்கிறேன்.
வேற்றுலகம் அழுக்கான தேசம், அழுக்கான உடலில் நான் வருகிறேன்.
இந்த அழுக்கான உலகத்தில் ஒருவர் கூட தூய்மையாக இருக்க முடியாது.
சத்யுகம் தூய்மையானது. கலியுகம் அழுக்கு நிறைந்தது என
கூறப்படுகிறது. ஏனென்றால், அனைவரும் விகாரிகளாக இருக்கிறார்கள்.
பாரதவாசிகள் தான் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். யார்
84 பிறவிகளை எடுக்கிறார்களோ அவர்களே இந்த ஞானத்தைக் கேட்பார்கள்.
யார் சத்யுகம் திரேதாவில் வருவார்களோ அவர்களே வந்து
வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப பிராமணர் ஆவார்கள்.
இப்பொழுது நீங்கள் பிராமண வர்ணத்தில் இருக்கிறீர்கள். பிறகு அதே
தேவதா வர்ணத்தில் வருவீர்கள் என பாபா புரிய வைத் திருக்கிறார்.
பிராமண வர்ணம் என்றால், பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்ய பாபா
வருகிறார். பரம்பிதா பரமாத்மா வந்து சூத்திரர்களை பிராமணனாக
மாற்று கின்றார் என்று கூறமாட்டார்கள். இது உங்களுடைய
குட்டிக்கரண விளையாட்டு நடக்கிறது. இது மிகவும் எளிதாகும்.
இந்த சக்கரம் எப்படி சூழல்கிறது என அறிகிறீர்கள். விராட
ரூபத்தில் பிராமணர்களின் குடுமி மற்றும் சிவபாபாவை
மறந்துவிட்டர்கள். தேவதை, சத்திரியர், வைசியர் மற்றும்
சூத்திரன்.... மேலும் சூத்திரனி லிருந்து தேவதை என்கின்றனர்.
இப்பொழுது பிராமணர் எங்கே சென்று விட்டனர். பிராமண தேவதாய நமஹ
என்று பாடு கிறார்கள். அப்போது பிரஜா பிதா பிரம்மாவின் வம்சாவளி
என்று பாடுகிறார்கள். பிரஜா பிரதா பிரம்மாவின் பெயர் எவ்வளவு
பிரசித்தி பெற்றது. சித்திரங்களில் கூட எவ்வளவு தவறு செய்து
விட்டனர். பிரஜாபிதா பிரம்மாவின் வாரிசுகளின் பெயர் அடையாளம்
இல்லை. பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் படிக்க வைக் கின்றார். அது
வருமானத்திற்கான மூலதனம் ஆகும். குறிக்கோள் நிச்சயமாக வேண்டும்.
இந்த படிப்பினால் தான் பதவி கிடைக்கிறது என குழந்தைகளாகிய
நீங்கள் அறிகிறீர்கள். அழுக்கான உலகத்தில் பகவான் வந்து
அழுக்கானவர்களை படிக்க வைக்கின்றார். நான் குழந்தைகளாகிய உங்களை
படிக்க வைத்து தூய்மையாக மாற்றுகின்றேன் என்று பாபா
கூறுகின்றார். இந்த கல்வியினால் எவ்வளவு பெரிய வருமானம்
கிடைக்கின்றது பாருங்கள். அரைக்கல்பத்திற்கு நீங்கள்
அதிர்ஷ்டசாலி ஆகிறீர்கள். பாரதத்தில் 21 தலைமுறை என்று
பாடப்படுகிறது. இப்போது நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து
21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அடைகிறீர்கள். லௌகீக தந்தை கொடுப்பது
அல்பகால நொடிப்பொழுது ஆஸ்தியாகும். இந்த தந்தை யிடமிருந்து
நீங்கள் 21 தலை முறைக்கு துக்கம் அடையாத அளவு ஆஸ்தி
அடைகிறீர்கள். பாரதத்தில் தான் எல்லையற்ற சுகம் உள்ளது. இந்த
ஞானம் வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. இந்த ஞானத்தை
அளிக்கக்கூடிய பாபாவிற்குத் தான் தெரியும். மேலும் யாருக்கு
அளிக்கிறாரோ அவர்களுக்குத் தான் தெரியும். வேறு யாரும்
அறியவில்லை. கிரந்தத்தில் கூட அவர்களுடைய மகிமை பாடப்பட்டு
இருக்கின்றது. ஓங்கார மானவர்...... நிராகாரர், அகங்காரம்
அற்றவர் இதனுடைய பொருளையும் இப்பொழுது நீங்கள் தான்
அறிகிறீர்கள். அவர்களோ நிரகங்காரி என்று மட்டும் பாடுகிறார்கள்.
எவ்வளவு பெரிய அதிகாரம் இருந்தும் அவருக்கு எந்த அகங்காரமும்
இல்லை. இங்கே சிறிய பதவியில் இருப்பவராக இருந்தாலும் எவ்வளவு
பெருமிதம் அவர்களுக்கு இருக்கிறது. அது அல்பகால பதவியின்
பெருமிதம். நான் இன்னார்...... இப்பொழுது உங்களுக்கு இந்த
ஆன்மீகப் படிப்பின் பெருமிதம் இருக்கின்றது. ஆத்ம உணர்வு
உடையவர் ஆனால் தான் அப்பாவை நினைக்க முடியும் என உங்களுடைய
ஆத்மா இப்பொழுது அறிகிறது. பாபாவுடன் தொடர்பு துண்டிக்கப்
படுவதால் மாயாவின் குண்டு பாய்கிறது, வாடிப்போய் விடுகிறார்கள்.
நினைத்துக் கொண்டே யிருந்தால் மகிழ்ச்சியின் அளவு அதிகரித்துக்
கொண்டே யிருக்கும். சிலர் பெரிய தேர்வு தேர்ச்சி அடை கிறர்கள்
என்றால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதற்கு மேல் எந்த படிப்பும்
இல்லை அவ்வளவு தான் என்று நினைக்கின்றார்கள். நம்முடைய இந்த
படிப்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறு எந்தப்படிப்பும் இல்லை என
நீங்கள் அறிகிறீர்கள். இந்த லட்சுமி நாராயணன் கடந்த காலத்தில்
நிச்சயமாக இது போன்ற படிப்பை படித்திருப்பார்கள். இராஜயோகத்தைக்
கற்றிருக்கிறார்கள். அதனால் தான் மகாராஜா மகாராணி ஆகியிருக்
கிறார்கள். இராஜயோகம் பழமையானது. பரம்பிதா பரமாத்மா வந்து
சொர்க்கத்திற்கான இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். கடந்த காலத்தில்
இதுபோன்ற கர்மத்தைச் செய்திருக்கிறார்கள். அதனால் இவ்வாறு
மாறியிருக்கிறார்கள் என கூறுகிறார்கள் இப்பிறவியில் நாம் 21
பிறவிகளுக்கு இராஜ்யம் செய்ய வேண்டும். சொர்க்கத்தில்
வீற்றிருப் பதற்கு ஏற்ற கர்மங்களைக் கற்கின்றோம். இராஜா இராணி
எவ்வாறோ அதே போன்று பிரஜைகள் அல்லவா. இராஜ்யம் இருக்கின்றது
அல்லவா? இராஜ்யத்தை நிறுவு வதற்காக பாபா வந்திருக் கின்றார்.
பிறகு நீங்கள் சென்று 21 பிறவிகளுக்கு பாலனை செய்வீர்கள். 63
பிறவிகளாக துக்கத்தை அனுபவித்துள்ளீர்கள். இப்பொழுது அது
அனைத்தும் முடிந்துபோகும். பாரதத்திற்கு சொர்க்கம் என்று
கூறப்படுகிறது. இப்போது நரகமாக இருக்கின்றது. சிருஷ்டி எவ்வாறு
மாறிவிட்டது. அந்த இராஜ்யம் எங்கே சென்று விட்டது. இராவண
இராஜ்யம் ஆரம்பித்ததால் நீங்கள் அழுக்காக ஆகி விட்டீர்கள்.
நீங்கள் உங்களுடைய 84 பிறவியின் சக்கரத்தை அறியவில்லை என பாபா
கூறுகின்றார். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு அடிக்கடி
புரிய வைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் 84 பிறவிகளின்
சக்கரத்தை முழுமை செய்துள்ளீர்கள். இப்பொழுது இது உங்களின்
கடைசி பிறவியாகும். இப்பொழுது மீண்டும் ஆஸ்தியை அடைய வேண்டும்.
நீங்கள் முக்தி தாமத்திலேயே உட்கார்ந்து கொள்ளக் கூடாது.
உங்களுடையது ஆல்ரவுன்ட் பார்ட் ஆகும். சத்யுகத்திலிருந்து
துவாபர், கலியுகம் வரை கூட பலர் முக்திதாமத்தில் இருக்கிறார்கள்.
இங்கே வருவதை விட முக்தி தாமத்தில் இருப்பது நல்லது என
கூறமாட்டார்கள். அதுவோ கொசுக்கூட்டத்தைப் போன்று ஆகிவிட்டது.
வந்தனர், சென்றனர். மனிதர்களின் மகிமைகள் பாடப்பட்டு
இருக்கின்றது. இந்த கோவில் யாருடையது? யார் ஆரம்பத்தில் இருந்து
நடித்துக் கொண்டு வந்தனரோ அவர் களுடைய நினைவுச் சின்னத்தை
உருவாக்கிக் கொண்டே வந்தனர். கடைசியில் வந்தவருக்கு நினைவுச்
சின்னங்கள் இருக்கின்றதா? எதுவும் இல்லை. உங்களுக்கு எவ்வளவு
பெரிய நினைவுச் சின்னம் இருக்கின்றது. எல்லோரையும் விட அதிகமாக
நீங்கள் நடிக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய பிராப்தியை
அனுபவித்து முடித்த பிறகு பக்தி மார்க்கத்தில் வரும் போது
உங்களுடைய நினைவுச் சின்னம் மற்றும் சிவபாபாவின் கோவில்களைக்
கட்ட ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு மற்ற தர்மத்தினர் (மதம்)
வருகிறார்கள். அவர்களின் தர்மம் உருவாகின்றது. நீங்கள்
உங்களுடைய வரலாறு புவியியலைக் கூட அறிகிறீர்கள். மற்ற
தர்மத்தினர் அனைவரையும் அறிகிறீர்கள். 84 பிறவி களின்
ஏணிப்படியாகும். முதலில் நாம் சொர்க்கத்தில் வருகிறோம் என்பது
உங்களுடைய புத்தியில் இருக் கின்றது. ஒவ்வொரு பிறவியிலும்
வெவ்வேறு பெயர் ரூபம் உடையவர்கள் நண்பர் உறவினராக கிடைத்தனர்.
நாடகத்தில் இது அனைத்தும், உங்களுடைய நடிப்பும் முதலிருந்தே
நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இது எல்லையற்ற நாடகம் ஆகும். அது
அப்படியே திரும்ப நடக்கிறது. நாமே தேவி தேவதையாக இருந்தோம்.
பிறகு 84 பிறவிகள் எடுத்து சூத்திரனாக ஆனோம் என அறிகிறீர்கள்.
பிறகு நாமோ தேவி தேவதையாக மாறுகின்றோம். மனிதர்களோ ஆத்மா
பரமாத்மா ஆகிறது என கூறிவிட்டனர். உண்மையில் நானே அது (ஹம்ஸோ)
என்பதன் பொருள் இதுவாகும். அவர்களோ ஆத்மாவிலிருந்து பரமாத்மா,
பரமாத்மாவிலிருந்து ஆத்மா என கூறிவிட்டனர். இரவு பகல்
வித்தியாசம் இருக்கிறது அல்லவா? இப்பொழுது நீங்கள் இந்த
விஷயங்கள் அனைத்தையும் அறிகிறீர்கள். இப்பொழுது நீங்கள்
பாண்டவர்கள் ஆகியிருக்கிறீர்கள். கௌரவர் பாண்டவர் சகோதரர்கள்
அல்லவா? இப்பொழுது பாபா கிடைத்திருக்கிறார் என்றால் நீங்கள்
கௌரவர்களி லிருந்து பாண்டவர் ஆகிறீர்கள். பாபா உங்களை
துக்கத்திலிருந்து விடுவித்து வழிகாட்டியாக இருந்து அழைத்துச்
செல்கிறார். வீட்டைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆத்மா
பிரம்மத்தில் கலந்து போகும் என அவர்கள் கூறுகின்றனர்.
அப்படியானால் அது வீடு கிடையாது. வீடு என்றால்,
வசிக்குமிடமாகும். அதற்கு நிராகார உலகம் என்று கூறப் படுகிறது.
நாம் நிராகார ஆத்மா நிராகார உலகத்தில் புள்ளியைப் போன்று
வசிக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். அங்கேயும்
நிராகார மரமாகும். இந்த நாடகம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
விதை மற்றும் மரத்தை அறிய வேண்டும். இதனுடைய பெயரே பல்வேறு
தர்மங்களின் மரம் ஆகும், இது மனித சிருஷ்டியாகும். இதனுடைய விதை
வடிவம் பாபா ஆவார். எவ்வளவு வகைகள் இருக்கின்றது. ஒவ்வொரு
தர்மத்தினரின் தோற்றமும் தனிப்பட்டதாக இருக்கின்றது. பிறகு
இங்கு கூட ஒருவரின் முகம் இன்னொருவரைப் போன்று கிடையாது.
இவ்வாறு நாடகம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கல்ப
விருட்ஷத்தின் ஆயுள் 5000 வருடங்கள் ஆகும். இதை பாபா தான்
புரிய வைக்கின்றார். மனிதர்கள் நடிகர்கள், இங்கே நடிப்பதற்காக
வருகிறார்கள். இது மேடை யாகும். வெளிச்சம் தருவதற்காக சூரியன்
சந்திரன் இருக்கின்றது. இவை ஒன்றும் தேவதை கிடையாது. இதுவோ (ஒளி
தரும்) விளக்குகள் ஆகும். ஆனால் சேவை செய்கின்றது. ஆகையால்
தேவதை என்கிறார் கள். உண்மையில் தேவதைகள் யாரும் சேவை
செய்யவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தான் சேவை செய்கிறீர்கள்.
தந்தை கீழ்படிந்த வேலைக்காரனாக இருக்கின்றார். குழந்தைகள்
துக்கப்படு கின்றார்கள் என்றால் அப்பாவிற்கு இரக்கம் வருகின்றது.
பாபா புரிய வைப்பதற்காக வந்திருக் கின்றார். குழந்தைகளாகிய
உங்களை மீண்டும் தேவதா பதவி அடைய வைப்ப தற்காக வருகிறேன். ஏறும்
கலை, இறங்கும் கலை ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கின்றது. பழைய
உலகம் மிக அழுக்கானது, புது உலகம் மிகத் தூய்மையானது என்று
கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து பழையதாகிறது.
இந்த உடல் கூட மிகவும் அழுக்கானதாக இருக்கிறது என ஆத்மா
கூறுகின்றது. இந்த சத்யுகத்தில் ஆத்மா மற்றும் சரீரம் மிக
உயர்ந்ததாக இருந்தது. தலையை உருட்டிக் ((குழப்பத்தில்
வருவதில்லை) கொள்ளவில்லை. இப்பொழுது ஆத்மாவிற்கு ஞானம்
கிடைத்திருக்கிறது. நாம் 84 பிறவிகளை எடுக்கிறோம் என்பது
நினைவிற்கு வருகிறது. இந்த இரகசியத்தை எல்லையற்ற தந்தை
புரியவைக்கிறார். துக்கத்தில் தந்தையைத் தான் அழைத்துக் கொண்டு
இருக்கிறார்கள். துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே இரக்கம்
காட்டுங்கள்...... பாரதம் தான் அனைத்தையும் விட சுகமாக இருந்தது
!. பாரதத்தைப் போன்று தூய்மையான கண்டம் வேறு எதுவும் இல்லை.
இப்பொழுது பாபா குழந்தை களாகிய உங்களின் பையை அழியாத ஞான
ரத்தினங்களால் நிரப்புகின்றார். எப்போதாவது இதுபோன்ற தந்தையை
பார்த்திருக் கின்றீர்களா ? குழந்தைகளே ! நான் உங்களுக்காக
வைகுண்டம் என்ற பரிசை கொண்டு வந்திருக் கின்றேன் என
கூறுகின்றார்? நீங்கள் சொர்க்கவாசியாக இருந்தீர்கள். இப்போது
பதீத நரகவாசியாகி விட்டீர்கள். யார் விகாரத்தில் ஈடுபடவில்லையோ
அவர்களுக்கு தூய்மை யானவர் என்று கூறப்படுகிறது. சத்யுகத்தில்
சம்பூர்ண நிர்விகாரியாக இருக்கிறார்கள். இச்சமயம் சம்பூர்ண
விகாரியாக இருக்கிறார்கள். நீங்களும் சம்பூர்ண நிர்விகாரியாக
இருந்தீர்கள் என பாபா கூறு கின்றார். இப்பொழுது சம்பூர்ண
விகாரியாக இருக்கிறீர்கள். மீண்டும் சம்பூர்ண நிர்விகாரி தேவதா
பதவியை பாபாவை நினைவு செய்து பெற வேண்டும். மன்மனாபவ என்ற
வார்த்தையைப் பாருங்கள். எவ்வளவு நன்றாக இருக்கிறது.
தந்தையாகிய என்னை நினைத்தால் நீங்கள் அழுக் கிலிருந்து
தூய்மையாகி விடுவீர்கள். நான் சர்வ சக்திவான் அல்லவா? என்னை
நினையுங்கள் நினைவு தான் யோக அக்னி என்று கூறப்படுகிறது. இதனால்
உங்களுடைய பாவம் எரிந்து போகும். நீங்கள் தூய்மை
யாகிவிடுவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆன்மீகக் கல்வியின் பெருமிதத்தில் இருக்க வேண்டும்.
பாபாவிற்குச் சமமாக நிரகங்காரி ஆகவேண்டும். பதவி போன்றவற்றின்
அகங்காரம் இருக்க கூடாது.
2. தன்னுடைய புத்தி என்ற பையை ஞான ரத்தினங்களால் நிரப்பிக்
கொள்ள வேண்டும். சம்பூர்ண நிர்விகாரி ஆகி தேவதா பதவி அடைய
வேண்டும். ஒருபோதும் வாடிப்போகக் கூடாது.
வரதானம்:
ஸ்தூலம் மற்றும் சூட்சும் ஆகிய இரு விதத்திலும் தன்னை
பிஸியாக வைக்கும், மாயையை வென்ற (மாயாஜீத்) வெற்றியாளர் ஆகுக.
தன்னை ஒரு சேவாதாரி என்று புரிந்து, தனது விருப்பத்தோடும்,
ஊக்கம் உற்சாகத்தோடும் சேவையில் பிஸியாக இருந்தால், மாயைக்கு
வாய்ப்பு கிடைக்காது. சங்கல்பத்திலோ, புத்தியிலோ அல்லது ஸ்தூல
கர்மத்திலோ நீங்கள் ஓய்வாக இருக்கும்போது மாயை வாய்ப்பைப்
பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் இரு விதத்திலும் மகிழ்ச்சியுடன்
சேவையில் மூழ்கியிருந்தால், அந்த மகிழ்ச்சியின் காரணமாக மாயை
உங்களை எதிர்க்கத் துணியாது. எனவே, தனக்குத் தானே ஆசிரியராகி
புத்தியை பிஸியாக வைப்பதற்கான தினசரி அட்டவணையை உருவாக்கினால்,
மாயையை வென்ற வெற்றியாளர் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
பாபா என்னுடன் துணையாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடனும்,
உறுதியுடனும் சொல்லுங்கள், அப்போது மாயை அருகில் கூட வர
முடியாது.
அவ்யக்த சமிக்ஞை : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
பாப்தாதா அனைத்து குழந்தைகளின் நடத்தை, முகம், சொல் மற்றும்
செயலில் எளிமையையும் இனிமை யையும் காண விரும்புகிறார்.
ஆவேசத்தினாலோ அல்லது சோர்வினாலோ பேச்சிலும் முகத்திலும் சிறிது
இனிமை குறைந்தாலும், முகம் கடுகடுப்பாக (சீரியஸ்) இருந்தாலும்,
அவர்களை குணங்கள் நிறைந்தவர்கள் என்று சொல்ல முடியாது.
சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், என்னுடைய அசல் குணங்கள்
வெளிப்பட வேண்டும். பாப்தாதாவைப் போலவே அதே குணங்கள், அதே கடமை,
அதே சொல் மற்றும் அதே சங்கல்பம் அனுபவமாக வேண்டும்; அனைவருடைய
வாயிலிருந்தும் இவர்கள் அவரைப் போலவே இருக்கிறார்கள் என்ற
வார்த்தை வர வேண்டும்.