ஓம் சாந்தி.
இன்று குழந்தைகளுக்கு இரக்க்ஷா பந்தன் பற்றி புரிய
வைக்கப்படுகிறது. ஏனென்றால் இப்போது அருகாமையில் வருகின்றது.
குழந்தைகள் ராக்கி அணிவிக்கச் செல் கின்றனர். இப்போது எந்த
விசயம் நடந்து முடிகின்றதோ அதனை விழாவாகக் கொண்டாடு கின்றனர்.
இது குழந்தைகளுக்குத் தெரியும். அதாவது இன்றிலிருந்து 5000
ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த வாக்குறுதிக் கடிதம் எழுதி
வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிறைய பெயர் கொடுத்தார்கள். இது தான்
தூய்மையின் அடையாளம். அனைவருக்கும் சொல்ல வேண்டி யுள்ளது தூய்மை
ஆவதற்கு ராக்கி அணிவியுங்கள் என்று. இதையும் அறிந்துள்ளீர்கள்,
தூய்மை யான உலகம் சத்யுக ஆதியில் தான் இருக்கும். இந்த
புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் ராக்கி பண்டிகை ஆரம்ப மாகின்றது,
பக்தி ஆரம்பமானபோது ராக்கி கொண்டாடப்பட்டது. இதைத் தான் அனாதி
பண்டிகை என்று சொல்லப்படுகிறது. அதுவும் எப்போது ஆரம்பமானது?
பக்தி மார்க்கத்திலிருந்து, ஏனென்றால் சத்யுகத்தில்
இம்மாதிரியான பண்டிகை இல்லை. இவை இங்கு தான் நடக்கிறது. அனைத்து
விழாக்களும் சங்கமயுகத்தில் நடக்கிறது. அதுவே மீண்டும் பக்தி
மார்க்கத்தில் ஆரம்பமாகின்றது. சத்யுகத்தில் எந்த பண்டிகையும்
இல்லை. தீபமாலா அங்கு இருக்குமா (தீபாவளி) என நீங்கள் கேட்கலாம்.
இல்லை. அதுவும் இங்கு தான் கொண்டாடு கின்றனர். அங்கே நடக்காது.
எதை இங்கு கொண்டாடுகிறார்களோ அதனை அங்கே கொண்டாட முடியாது. இவை
அனைத்தும் கலியுகத்தின் பண்டிகை. ரக்க்ஷா பந்தன்
கொண்டாடுகிறார்கள், ராக்கி ஏன் கொணடாடுகிறார்கள் என எப்படி
அறிவீர்கள்? நீங்கள் அனைவருக்கும் ராக்கி அணிவிக்கின்றீர் கள்,
கூறுகிறீர்கள் தூய்மை ஆகுங்கள், ஏனென்றால் இப்போது தூய்மையான
உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. திரிமூர்த்தி சித்திரத்
திலும் எழுதப்பட்டிருக்கிறது. தூய்மையான உலகம் பிரம்மா மூலமாக
ஸ்தாபனை ஆகின்றது. எனவே தூய்மையாவதற்காக ராக்க்ஷா பந்தன்
கொண்டாடப்படுகிறது. இப்போது ஞான மார்க்கத்தின் நேரம்.
குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது,
பக்தியைப் பற்றி யாராவது கூறினால் அவர்களுக்கு ஒரு பகவான் தான்
அவரே முழு உலகத்தையும் நிர்விகாரி ஆக்குகிறார். பாரதம்
நிர்விகாரியாக இருந்த போது முழு உலகமும் நிர்விகாரியாக இருந்தது.
பாரதம் நிர்விகாரியாக ஆவதன் மூலம் முழு உலகமும் நிர்விகாரி
ஆகின்றது. பாரதத்தை உலகம் என்று சொல்வதில்லை. பாரதம் உலகின் ஒரு
கண்டமாக இருக்கின்றது. குழந்தைகள் அறிவீர்கள் பதிய உலகில் ஒரு
பாரத கண்டம் தான் இருக்கும். பாரத கண்டத்தில் அவசியம் மனிதர்கள்
கூட இருந்திருப் பார்கள். பாரதம் சத்திய கண்டமாக இருந்தது,
உலகின் ஆரம்பத்தில் தேவதா தர்மமே இருந்தது, அதைத்தான்
நிர்விகாரி தூய்மையான தர்மம் என கூறப்படுகிறது, ஆக 5000
ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது, இப்போது இந்த பழைய உலகத்தின்
மீதி கொஞ்ச நாட்கள் இருக்கிறது. நிர்விகாரி ஆக எவ்வளவு நாள்
ஆகின்றது? நேரமாகத்தான் செய்கிறது. இங்கு கூட தூய்மையாக முயற்சி
செய்கிறார்கள், அனைத்தையும் விட பெரிய விழா இது தான்.
வாக்குறுதி செய்ய வேண்டும் - பாபா நாங்கள் அவசியம் தூய்மை ஆவோம்.
இதை அனைத்தையும் விட பெரிய விழாவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனை வரும் அழைக்கின்றனர், ஹே! பரமபிதா பரமாத்மா, அவ்வாறு
சொல்லியும் கூட பரம்பிதா என்பது புத்தியில் வரவில்லை. நீங்கள்
அறிந்துள்ளீர்கள் ஜீவ ஆத்மாக்களுக்கு ஞானம் கொடுப் பதற்காக
பரமபிதா பரமாத்மா வந்திருக்கிறார். ஆத்மா - பரமாத்மாவை பிரிந்து
இருந்தது.... இந்த சந்திப்பு இந்த சங்கமயுகத்தில் மட்டுமே
ஏற்படுகிறது. இதைத்தான் கும்பமேளா என சொல்லப்படுகிறது. அதாவது
ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை தான் ஏற்படுகிறது.
தண்ணீரில் ஸ்நானம் செய்யும் மேளா அனேக முறை கொண்டாடி வந்தீர்கள்.
அது பக்தி மார்க்கம். இது ஞான மார்க்கம். சங்கமத்தைக் கூட
கும்பம் என சொல்லப்படுகிறது. மூன்று நதிகள் நடைமுறையில் இல்லை.
தண்ணீர் நதியானது ரகசியமாக எப்படி இருக்க முடியும்? தந்தை
கூறுகின்றார்: உங்களுடைய இந்த கீதை ரகசியமானது. ஆக புரிய
வைக்கப் படுகிறது. நீங்கள் யோக பலத்தால் உலக அரசாட்சியை
அடைகிறீர்கள், இதில் ஆட்டம் பாட்டம் எதுவுமில்லை. அந்த பக்தி
மார்க்கம் முழு அரைக் கல்பமாக நடக்கிறது. மேலும் இந்த ஞானம் ஒரு
பிறவிக்கு நடக்கிறது. பிறகு இரண்டு யுகம் ஞானத்தின் பிராப்தி
இருக்கிறது, ஞானம் இருப்பதில்லை, பக்தி என்பது
துவாபர-கலியுகத்தில் நடக்கிறது. ஞானம் ஒருமுறை மட்டுமே
கிடைக்கிறது. பிறகு அதன் பிராப்தி 21 பிறவிக்கு தொடர்கிறது.
இப்போது உங்களுடைய கண்கள் திறந்து விட்டது. இதற்கு முன் அஞ்ஞான
தூக்கத்தில் இருந்தீர்கள். இப்போது ரக்க்ஷா பந்தனத்தில்
பிராமணர்கள் ராக்கி அணிவிக்கின்றனர். நீங்கள் பிராமணர்கள்.
அவர்கள் குக வம்சாவளி, நீங்கள் முக வம்சாவளி. பக்தி
மார்க்கத்தில் எவ்வளவு மூட நம்பிக்கை இருக்கிறது, புதை குழியில்
மாட்டிக் கொண்டுள்ளனர். புதை குழியில் கால் வைத்தால் மாட்டிக்
கொள்வார்கள் தானே! ஆக பக்தியின் புதை குழியில் மாட்டிக் கொண்டு
ஒரேயடியாக கழுத்து வரை முழ்கி விட்டனர். அப்போது மீண்டும்
காப்பாற்ற தந்தை வருகின்றார். மற்றபடி குடுமி தான் இருக்கிறது,
பிடிப்பதற்கு வேண்டும் தானே! குழந்தைகள் புரிய வைப்பதற்கு
மிகவும் முயற்சி செய்கின்றனர். கோடிக்கணக்கான மனிதர்கள்
இருக்கிறார்கள், ஒவ்வொருவரின் பக்கம் செல்ல கடினமாக இருக்கிறது.
செய்தித்தாள் மூலமாக உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டது, இவர்கள்
வசப்படுத்துகிறார்கள், வீடு வாசலை விட வைக்கின்றனர்,
சகோதரன்-சகோதரி ஆக்குகின்றனர் என ஆரம்பத்தில் பரவியது,
செய்தித்தாள் மூலம் குழப்பம் ஏற்பட்டது. இப்போது
ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முடியாது. பிறகு உங்களுக்கு
செய்தித்தாள் காரியத்தில் பயன்படும். செய்தித்தாள் மூலமாகவே
உங்களது புகழ் வெளிப்படும். பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள
என்ன செய்வது என சிந்தனை செய்யுங்கள். ரக்க்ஷா பந்தன் என்பதன்
அர்த்தம் என்ன? தந்தை வருகின்றார் தூய்மையாக்குவதற்காக,
குழந்தைகளிடம் தந்தை தூய்மைக்கான உறுதிமொழி பெற்றுள்ளார்.
தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குபவர் ராக்கி அணிவிக் கின்றார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். பிறகு
அவசியம் சிம்மாசனத்தில் அமர்வார். பட்டாபிஷேகம் ஒருபோதும்
காட்டுவதில்லை. சத்யுக ஆரம்பத்தில் லட்சுமி நாராயணன்
இருந்தார்கள், அவர்களுக்கு பட்டாபிஷேகமும் நடந்திருக்கும்.
இளவரசரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். பிறகு எங்கே
பட்டாபிஷேகம்? அங்கு சத்யுகத்தில் தீபாவளி யன்று மிகவும்
கோலாகலமாக பட்டாபிஷேகம் நடக்கும். சங்கமயுகத்தில் எந்த விசயம்
உள்ளதோ அவை அங்கு இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் வெளிச்சம் இங்கு
தான் ஏற்படும். (தீபம் ஏற்றப்படுகிறது) அங்கே தீபாவளி
கொண்டாடப்படுவதில்லை. அங்கே ஆத்மாக்களின் தீபம் ஒளியேற்றப்பட்டு
இருக்கும். அங்கு பட்டாபிஷேகம் கொண்டாடப்படும், தீபாவளி
கொண்டாடுவதில்லை. எதுவரை ஆத்மாக்களின் தீபம்
ஒளியேற்றப்படவில்லையோ அதுவரை வீடு திரும்ப முடியாது. இப்போது
அனைவரும் தூய்மையின்றி உள்ளனர், அவர்களை தூய்மை யாக்குவதற்காக
சிந்தனை செய்ய வேண்டும், குழந்தைகள் பெரிய பெரிய மனிதர்களிடம்
யோசித்து செல்கின்றனர். குழந்தைகளின் அவப்பெயர் செய்தித்தாள்கள்
மூலமாக ஏற்பட்டது, பிறகு பெருமையும் இதன் மூலம் ஏற்படும்.
சிறிது பணம் கொடுத்தால் நன்றாகப் போடுவார்கள். இப்போது நீங்கள்
பணம் எவ்வளவு காலம் தருவீர்கள், பணம் தருவது கூட லஞ்சமாகும்,
விதிமுறையற்றதாகும். இன்றைய காலத்தில் லஞ்சம் இல்லலாமல் காரியம்
நடப்பதில்லை. நீங்களும் லஞ்சம் கொடுக்கிறீர்கள், அவர்களும்
லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், இருவரும் ஒரே மாதிரி
ஆகிவிடுவீர்கள். உங்களுடையது யோக பலத்திற்கான விஷயமாகும்.
நீங்கள் யார் மூலமாவது காரியத்தை செய்விக்க வேண்டும். அந்தளவு
யோக பலம் வேண்டும். பூம், பூம் என்ற ஞானத்தை ஊத வேண்டும்.
ஞானத்தின் சக்தி உங்களிடத்திலும் உள்ளது. இந்த சித்திரங்களில்
ஞானம் இருக்கிறது, யோகம் ரகசியமாக இருக்கிறது. எல்லையற்ற
பிராப்தி அடைவதற்காக, தன்னைத்தான் ஆத்மா என புரிந்து கொண்டு
தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவர் ரகசியமாக இருக்கிறார்,
அவர் மூலமாக நீங்கள் உலகத்திற்கு எஜமானர் ஆகின்றீர்கள்.
எங்கேயும் அமர்ந்து கொண்டு நீங்கள் நினைவு செய்ய முடியும்.
இங்கு மட்டும் அமர்ந்து கொண்டு யோகம் செய்வதல்ல. ஞானம் மற்றும்
யோகம் இரண்டும் சகஜமானது. 7 நாட்கள் மட்டும் பாட முறை எடுத்துக்
கொண்டால் போதும். வேறு ஏதும் அவசியமில்லை. பிறகு நீங்கள் சென்று
மற்றவர்களைத் தனக்கு சமமாக்குங்கள். தந்தை ஞானத்தின் அமைதி யின்
கடலாகி இருக்கின்றார், இந்த இரண்டு விசயங்கள் முக்கியமானது.
இதன் மூலம் அமைதிக்கான பிராப்தியை அடைந்துக்
கொண்டிருக்கிறீர்கள். நினைவும் மிகவும் சூட்சுமமானது.
குழந்தைகள் நீங்கள் வெளியே சுற்றி வாருங்கள், தந்தையை நினைவு
செய்யுங்கள். தூய்மை ஆக வேண்டும். தெய்வீக குணங்களையும் தாரணை
செய்ய வேண்டும். எந்தவொரு அவகுணமும் இருக்கக்கூடாது. காமம் கூட
பெரிய அவகுணமாகும். தந்தை கூறுகின்றார், இப்போது நீங்கள்
தூய்மையை இழக்காதீர்கள். மனைவி எதிரில் இருந்தாலும் கூட,
நீங்கள் பார்த்தும் பார்க்காமல் இருங்கள். தன்னைத்தான் ஆத்மா
என புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்.
நாங்கள் எங்களது தந்தையை நினைவு செய் கின்றோம், அவர்
ஞானக்கடலாக இருக்கிறார். உங்களையும் தன்னைப்போல் ஆக்குகின்றார்,
ஆக நீங்களும் ஞானக்கடல் ஆகின்றீர்கள், இதில் குழப்பமடையக்கூடாது.
அவர் பரமாத்மாவாக இருக்கிறார். பரந்தாமத்தில் இருப்பதனால் பரம்
என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் நீங்களும் இருப்பீர்கள்.
இப்போது வரிசைக்கிரமமாகி முயற்சி செய்து நீங்கள் ஞானம்
அடைகின்றீர்கள். கௌரவத்தோடு யார் முழு தேர்ச்சி அடைகிறார்களோ
அவர்களைத்தான் முழுமையாக ஞானக்கடல் ஆகிவிட்டதாக கூறப்படும்.
தந்தையும் ஞானக்கடல், நீங்களும் ஞானக்கடல். ஆத்மாவில் சிறியது,
பெரியது என்பது இல்லை. பரமபிதாவும் பெரியதாக இல்லை. ஆயிரக்
கணக்கான சூரியனை விட அதிகமாக பிரகாசிப்பவர் என கூறுவது எல்லாம்
பொய்யானதாகும். புத்தியில் எந்த ரூபத்தோடு நினைவு செய்கிறார்களோ
அது சாட்சாத்காரமாகத் தென்படுகிறது. இதை புரிந்துக் கொள்ள
வேண்டும். ஆத்மாவின் சாட்சாத்காரம் அல்லது பரமாத்மாவின்
சாட்சாத்காரம், இரண்டும் ஒன்றாகி விடுகிறது. தந்தை புரிய
வைத்திருக் கின்றார் - நான் தான் தூய்மை ஆக்கக் கூடியவன்,
ஞானக்கடலாக இருக்கிறேன். சமயப்படி வந்து அனைவருக்கும் சத்கதி
தருகின்றேன். அனைவரையும் விட அதிகமாக பக்தி நீங்கள் தான்
செய்தீர்கள். பிறகு தந்தை உங்களுக்குத்தான் படிப்பிக்கின்றார்.
ரக்க்ஷா பந்தனுக்கு பிறகு கிருஷ்ண ஜென்மாஷ்டமி வருகின்றது,
பிறகு தசரா நடக்கின்றது, பொதுவாக தசராவிற்கு முன்பாக கிருஷ்ணர்
வரமுடியாது. தசரா முதலில் வரவேண்டும். பிறகு கிருஷ்ணர் வர
வேண்டும். இந்தக் கணக்கையும் நீங்கள் தான் கூறுவீர்கள். முதலில்
நீங்களும் எதுவும் புரியாதவராக இருந்தீர்கள். இப்போது தந்தை
எவ்வளவு புரிந்து கொண்டவராக (புத்திசாலி) ஆக்கியுள்ளார்.
ஆசிரியர் புத்திசாலியாக ஆக்குவார் தானே! இப்போது நீங்கள்
அறிந்துள்ளீர்கள், பகவான் புள்ளி வடிவமாக இருக்கிறார். மரம்
எவ்வளவு பெரியதாக இருக்கிறது. ஆத்மாக்கள் மேலே புள்ளி வடிவமாக
இருக்கிறது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்படுகிறது, நடை முறைப்படி ஒரு விநாடியில் புத்திசாலியாக
வேண்டும். ஆனால் புரிந்து கொள்ளாமல் அவ்வாறு கல்புத்தியாக
இருக்கிறார்கள். இல்லையென்றால் ஒரு விநாடிக்கான விசயம் தான்.
எல்லைக்குட்பட்ட தந்தை ஒவ்வொரு பிறவியிலும் புதியதாக
கிடைக்கின்றார். இந்த எல்லையற்ற தந்தை ஒரு முறையே வந்து 21
பிறவிகளுக்கான பிராப்தி தருகின்றார். இப்போது எல்லையற்ற
தந்தையிடமிருந்து நீங்கள் எல்லையற்ற பிராப்தியை அடைகின்றீர்கள்.
ஆயுட் காலமும் அதிகமாகி விடுகின்றது. 21 பிறவியும் ஒரு தந்தை
என்பதில்லை. உங்களுடைய ஆயுள் அதிகமாகி விடும். நீங்கள்
ஒருபோதும் துக்கத்தைப் பார்க்க மாட்டீர்கள். கடைசியில் உங்களது
புத்தியில் இந்த ஞானம் இருக்கும் தந்தையை நினைவு செய்ய வேண்டும்
மற்றும் பிராப்தி அடைய வேண்டும். அவ்வளவு தான், குழந்தை பிறந்து
விட்டது மற்றும் வாரிசாகி விட்டது. தந்தையைப் புரிந்து கொள்வது
எனில் தந்தை மற்றும் பிராப்தியை நினைவு செய்வது, தூய்மையாக
வேண்டும் அவ்வளவு தான்! தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும்.
தந்தை மற்றும் பிராப்தி எவ்வளவு சுலபமானது. லட்சியம்,
குறிக்கோளும் எதிரில் இருக்கின்றது.
இப்போது குழந்தைகள் சிந்தனை செய்ய வேண்டும் - நாம்
செய்தித்தாள் மூலம் எப்படி புரிய வைப்பது. திரிமூர்த்தியும்
கொடுக்க வேண்டும். ஏனென்றால் புரிய வைக்கப்படுகிறது, பிரம்மா
மூலமாகப் படைத்தல்... பிராமணர்களை பாவனமாக்க (தூய்மையாக்க)
தந்தை வந்திருக்கிறார். எனவே, ராக்கி அணிவிக்கின்றார். பதீத
பாவனர் பாரதத்தை பாவனமாக்குகின்றார். ஒவ்வொரு வரும் தூய்மையாக
வேண்டும். ஏனென்றால், இப்போது தூய்மையான உலகம் படைக்கப்
படுகிறது. இப்போது உங்களுடைய 84 பிறவிகள் முடிவடைகின்றது. யார்
அதிக பிறவிகள் எடுத்தார்களோ அவர்கள் மிகவும் நல்ல முறையில்
புரிந்து கொள்வார்கள். கடைசியில் வருவோர்க்கு அவ்வளவு மகிழ்ச்சி
ஏற்படாது. ஏனென்றால் பக்தி குறைவாக செய்வார்கள். பக்திக்கான
பலன் தருவதற்கு தந்தை வருகின்றார். யார் பக்தி அதிகமாக
செய்தார்கள் என்பதையும் இப்போது நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
முதல் நம்பரில் நீங்கள் தான் வந்தீர்கள், நீங்கள் தான் முறையான
(சரியான) பக்தி செய்தீர்கள். நீங்களே தன்னைத்தானே கேட்டுக்
கொள்ளுங்கள் நாங்கள் அதிகமாக பக்தி செய்தோமா அல்லது இவர்கள்
செய்தார்களா? அவசியம் அதிகமாக பக்தியும் செய்திருப்பார்கள்.
பாபா பெயரும் எழுதுகின்றார் - குமார்கா (தாதி பிரகாஷ்மணி)
ஜனக், மனோகர், குல்ஜார் இருக்கின்றார்கள். வரிசைக்கிரமமாகத்தான்
இருக்கிறார்கள். இங்கு வரிசைப்படி அமர வைக்க முடியாது. ஆக
சிந்தனை செய்யுங்கள் - ரக்க்ஷா பந்தன் பற்றி செய்தித்தாளில்
எப்படி வெளியிடு வது? இதுவும் சரி தான், மந்திரிகளிடம்
செல்கிறீர்கள், ராக்கி அணிவிக்கின்றீர்கள், ஆனால் அவர்கள்
தூய்மையாவது இல்லை. நீங்கள் கூறுகின்றீர்கள் தூய்மை ஆகுங்கள்
அப்போது தான் தூய்மையான உலகம் படைக்கப்படும். 63 பிறவிகள்
விகாரி ஆனீர்கள், இப்போது தந்தை கூறுகின்றார்: இந்த கடைசி
பிறவியில் தூய்மையாகுங்கள்! தந்தையை நினைவு செய்யுங்கள் அப்போது
தான் உங்கள் தலையில் எந்த பாவச் சுமை உள்ளதோ அது நீங்கி விடும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!