13.07.25 காலை முரளி
ஓம் சாந்தி 03.02.2006 பாப்தாதா,
மதுபன்
பரமாத்ம அன்பில் வீணானவைகளின் பெயர், அடையாளம் இல்லாத அளவிற்கு
சம்பூர்ன பவித்திர ஸ்திதியை உருவாக்குங்கள்
இன்று பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள தனது பிரபுவிற்குப்
பிரியமான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். முழு
உலகிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, கோடியிலும் சிலர் மட்டுமே
பரமாத்மாவின் இந்த அன்பிற்கு அதிகாரிகளாக ஆகிறார்கள்.
பரமாத்மாவின் அன்பு தான் குழந்தைகளாகிய உங்களை இங்கு அழைத்து
வந்திருக்கிறது. இந்த பரமாத்ம அன்பானது முழு கல்பத்திலும் இந்த
நேரத்தில் தான் அனுபவம் செய்கிறீர்கள். மற்ற நேரங்களில்
ஆத்மாக்களின் அன்பு, மகான் ஆத்மாக்களின் அன்பு, தர்ம
ஆத்மாக்களின் அன்பு அனுபவம் செய்தீர்கள். ஆனால் இப்பொழுது
பரமாத்மாவின் அன்பிற்கு தகுதியானவர்களாக ஆகி விட்டீர்கள்.
பரமாத்மா எங்கு இருக்கிறார்? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால்
என்ன கூறுவீர்கள்? பரமாத்மத் தந்தை என் கூடவே இருக்கின்றார்.
நாம் அவருடன் இருக்கின்றோம். பரமாத்மாவும் நாம் இன்றி இருக்க
முடியாது, நாமும் பரமாத்மா இன்றி இருக்க முடியாது. அந்த
அளவிற்கு அன்பு அனுபவம் செய்து கொண்டிருக் கிறீர்கள். அவர் என்
உள்ளத்தில் இருக்கின்றார், அவர் உள்ளத்தில் நான் இருக்கிறேன்
என்று மகிழ்ச்சியாக கூறுகிறீர்கள். இப்படிப்பட்ட அனுபவிகள் தானே?
உள்ளத்தில் வருகிறதா என்ன? நான் அனுபவியாக ஆகவில்லை யெனில் வேறு
யார் ஆவார்கள்! தந்தையும் இவ்வாறு அன்பிற்கு அதிகாரி
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்.
பரமாத்ம அன்பின் அடையாளம் - யார் மீது அன்பு இருக்கிறதோ,
அவருக்கு அனைத்தையும் அர்ப்பணிப் பதற்கு எளிதாக தயார்
ஆகிவிடுவார்கள். ஆக நீங்கள் அனைவரும் கூட தந்தை என்ன
விரும்புகிறாரோ- ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு சமம் ஆகிவிட
வேண்டும், ஒவ்வொருவரின் முகத்தின் மூலம் தந்தை வெளிப்படையாக
தென்பட வேண்டும். இவ்வாறு ஆகியிருக்கிறீர்கள் தானே?
பாப்தாதாவிற்கு பிரியமான ஸ்திதியை அறிவீர்கள் தானே! சம்பூர்ண
தூய்மை தான் தந்தைக்குப் பிரியமான ஸ்திதியாகும். இந்த பிராமண
பிறப்பின் அஸ்திவாரமும் சம்பூர்ண தூய்மையாகும். சம்பூர்ண
தூய்மையின் ஆழத்தை அறிவீர்களா? சங்கல்பம் மற்றும் கனவிலும்
தூளியளவும் அசுத்தத்தின் பெயர்-அடையாளம் இருக்கக் கூடாது.
இன்றைய நாளில் நேரத்தின் அனுசாரமாக பாப்தாதா அடிக்கடி கவனம்
ஏற்படுத்துகிறார்- சம்பூர்ண தூய்மையின் கணக்கில் வீண் சங்கல்பம்,
இதுவும் சம்பூர்ணதா அல்ல. ஆக வீண் எண்ணங்கள் வருகிறதா? என்று
சோதனை செய்யுங்கள். எந்த விதமான வீண் எண்ணங்கள் சம்பூர்ண
நிலையிலிருந்து தூரம் ஆக்கவில்லையா? எந்த அளவிற்கு முயற்சியில்
முன்னேறிக் கொண்டு செல்வீர்களோ, அந்த அளவிற்கு இராயல் ரூபத்தில்
வீண் எண்ணங்கள் நேரத்தை வீண் ஆக்கவில்லை தானே? இராயல் ரூபத்தில்
அகங்காரம் மற்றும் அவமானம் வீண் எண்ணங்களின் ரூபத்தில் யுத்தம்
செய்யவில்லையா? அகங்காரத்தின் ரூபத்தில் பரமாத்மாவின்
கொடுப்பினையில் ஏதாவது ஒன்றை தன்னுடைய விசேஷதா என்று நினைத்தால்
அந்த விசேஷதாவின் அகங்காரமும் கீழே கொண்டு வந்து விடும்.
தடையாக ஆகிவிடும். மேலும் அகங்காரமும் சூட்சும ரூபத்தில் - எனது
என்று வருகிறது, எனது பெயர், புகழ், மரியாதை கிடைக்க வேண்டும்,
இந்த எனது என்பது அகங்காரத்தின் ரூபமாக ஆகிவிடுகிறது. இந்த வீண்
எண்ணங்களும் சம்பூர்ண நிலையிலிருந்து தூரமாக்கி விடுகிறது.
ஏனெனில் பாப்தாதா விரும்புவது என்னவெனில் சுவமானத்தில் இருக்க
வேண்டுமே தவிர அகங்காரமும் வேண்டாம், அவமானமும் வேண்டாம். வீண்
எண்ணங்கள் வருவதற்கு இதுவே காரணமாக ஆகிறது.
ஒவ்வொரு குழந்தையையும் இரட்டை எஜமானர் என்ற நிச்சயம் மற்றும்
போதையில் பாப்தாதா பார்க்க விரும்புகின்றார். இரட்டை எஜமான்
நிலை என்ன? ஒன்று தந்தையின் பொக்கிஷங்களுக்கு எஜமான், மற்றொன்று
சுய இராஜ்யத்திற்கு எஜமான். இரண்டிற்கும் எஜமான். ஏனெனில் அனை
வரும் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள், எஜமானர்களாகவும்
இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் குழந்தைகளாக இருக்கிறீர்கள்,
ஏனெனில் என்னுடைய பாபா என்று அனைவரும் கூறுகிறீர்கள். என்னுடைய
பாபா என்றால் குழந்தை தானே. ஆனால் குழந்தையின் கூடவே
இரண்டிற்கும் எஜமானர். எஜமானர் என்பதில் வரிசைக் கிரமம்
ஏற்பட்டு விடுகிறது. நான் குழந்தையாகவும் இருக்கிறேன்,
எஜமானராகவும் இருக்கிறேன். பொக்கிஷம் என்ற ஆஸ்தி
கிடைத்திருக்கிறது, ஆகையால் குழந்தைக் கான நிச்சயம் மற்றும்
போதை இருக்கிறது. ஆனால் எஜமானர் என்ற நிச்சயம், போதை இதில்
வரிசைக்கிரமம் ஏற்பட்டு விடுகிறது. சுயராஜ்ய அதிகாரி எஜமானன்,
இதில் விசேஷமாக மனம் தடைபோடுகிறது. மனதிற்கு எஜமானராகி
ஒருபோதும் மனதிற்கு அடிமை யாகக் கூடாது. சுயராஜ்ய அதிகாரி என்று
கூறுகிறீர்கள். ஆக சுயராஜ்ய அதிகாரி என்றால் ராஜா. எவ்வாறு
பிரம்மா பாபா தினமும் சோதனை செய்து மனதிற்கு எஜமானராகி உலகிற்கு
எஜமானர் என்ற அதிகாரி அடைந்தாரோ, அதே போன்று இராஜா என்று
பார்க்கும் போது இந்த மனம், புத்தியானது மந்திரிகளாகும். இந்த
வீண் எண்ணங்களும் மனதில் உருவாகிறது, ஆக மனம் வீண்
எண்ணங்களுக்கு அடிமையாக்கி விடுகிறது. ஒருவேளை கட்டளைப்படி
நடத்தவில்லையெனில் மனம் சஞ்சலம் ஆகக் கூடிய காரணத்தினால்
அடிமையாக்கி விடுகிறது. எனவே சோதனை செய்யுங்கள். மனதை குதிரை
என்றும் கூறப்படுகிறது, ஏனெனில் சஞ்சலத்துடன் இருக்கிறது அல்லவா!
ஆனால் உங்களிடம் ஸ்ரீமத் என்ற கடிவாளம் இருக்கிறது. ஸ்ரீமத்
என்ற கடிவாளம் சிறிது தளர்ந்தாலும் மனம் சஞ்சலமாகி விடும்.
கடிவாள் ஏன் தளர்கிறது? ஏனெனில் ஏதாவது ஒரு சாலையோரா காட்சி (சைட்
சீன்) பார்க்க ஆரம்பித்து விடுகிறது. கடிவாளம் தளர்ந்து விடும்
பொழுது மனதிற்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. எனவே நான்
குழந்தை மற்றும் எஜமான் என்ற நினைவில் சதா இருங்கள்.
பொக்கிஷங்களுக்கும் எஜமான், சுயராஜ்யத்திற்கும் எஜமான், இரட்டை
எஜமானாக இருக்கிறேனா? என்று சோதியுங்கள். எஜமான் நிலையில்
குறையிருக்கிறது எனில் பலவீன சன்ஸ்காரம் வெளிப்பட்டு விடுகிறது.
மேலும் சன்ஸ்காரத்தை என்ன கூறுகிறீர்கள்? என்னுடைய சன்ஸ்காரம்
இப்படி இருக்கிறது, எனது குணம் இப்படி இருக்கிறது. ஆனால் இது
என்னுடையதா என்ன? கூறும் போது என்னுடைய சன்ஸ்காரம் என்று
கூறிவிடுகிறீர்கள். இது என்னுடையதா? என்னுடைய சன்ஸ்காரம் என்று
கூறுவது சரியா? சரியா? என்னுடையதா அல்லது இராவணனின் பொருளா?
பலவீன சன்ஸ்காரம் இராவணனின் பொருளாகும், அதை என்னுடையது என்று
எப்படி கூற முடியும். என்னுடைய சன்ஸ்காரம் எது? எது தந்தையின்
சன்ஸ்காரமோ அது என்னுடைய சன்ஸ்காரம். தந்தையின் சன்ஸ்காரம் எது?
உலக நன்மை செய்வது. சுப பாவனை, சுப விருப்பம். எனவே எந்த ஒரு
பலவீன சன்ஸ்காரத்தை என்னுடைய சன்ஸ்காரம் என்று கூறுவதே தவறாகும்.
என்னுடைய சன்ஸ்காரத்தை என்னுடைய உள்ளத்தில் வைத்துக் கொண்டேன்
எனில் அசுத்த பொருளை உள்ளத்தில் வைத்துக் கொண்டேன். என்னுடைய
பொருளின் மீது அன்பு இருக்கும் அல்லவா! ஆக எனது என்று புரிந்து
கொள்வதனால் என்னுடைய உள்ளத்தில் இடம் கொடுத்து விட்டேன். எனவே
தான் பல நேரங் களில் குழந்தைகள் அதிக யுத்தம் செய்ய
வேண்டியிருக்கிறது. ஏனெனில் சுபமற்றது மற்றும் சுபமானது
இரண்டையும் உள்ளத்தில் அமர வைத்து விட்டீர்கள் எனில் இரண்டும்
என்ன செய்யும்? யுத்தம் தான் செய்யும். என்னுடைய சன்ஸ்காரம்
என்று எண்ணத்தில் வரும் போது, வார்த்தைகளில் வரும் போது சோதனை
செய்யுங்கள் - இந்த சுபமற்ற சன்ஸ்காரம் என்னுடையது கிடையாது.
எனவே சன்ஸ்காரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பல கோடி மடங்கு பாக்கியவான்
நடத்தை மற்றும் முகத்தை உடையவர்களாக பார்க்க விரும்புகின்றார்.
பாக்கியவான்களாக ஆகிவிட்டோம், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல
பாக்கியம் வெளிப்படுவதற்குப் பதிலாக உள்ளடங்கி விடுகிறது என்று
சில குழந்தைகள் கூறுகின்றனர். பாப்தாதா ஒவ்வொரு நேரத்திலும்,
ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாக்கிய நட்சத்திரம்
ஜொலிப்பதை பார்க்க விரும்புகின்றார். யார் உங்களைப்
பார்த்தாலும் முகத்தின் மூலம், நடத்தையின் மூலம்
பாக்கியவான்களாக தென்பட வேண்டும். அப்போது தான் குழந்தைகளாகிய
உங்கள் மூலம் தந்தை வெளிப்படுவார். ஏனெனில் நிகழ் காலத்தில்
மெஜாரிடி அனுபவம் செய்ய விரும்புகின்றனர். இன்றைய நாட்களில்
விஞ்ஞானம் வெளிப்படையான ரூபத்தில் காண்பிக்கிறது அல்லவா!
அனுபவம் செய்விக்கிறது அல்லவா! வெப்பத்தின் அனுபவமும்
செய்விக்கிறது, குளிர்ச்சியின் அனுபவமும் செய்விக்கிறது. ஆக
அமைதி சக்தியையும் அனுபவம் செய்ய விரும்புகின்றனர். எந்த
அளவிற்கு சுயம் அனுபவத்தில் இருப்பீர் களோ, அந்த அளவிற்கு
மற்றவர்களுக்கும் அனுபவம் செய்விக்க முடியும். இப்பொழுது
இணைந்த ரூபத்தில் சேவை செய்யுங்கள் என்று பாப்தாதா சைகை
கொடுத்து விட்டார். வெறும் வார்த்தை களினால் மட்டுமல்ல,
வார்த்தைகளின் கூடவே அனுபவி மூர்த்தியாகி அனுபவம் செய்விக்கும்
சேவையும் செய்யுங்கள். ஏதாவது அமைதியின் அனுபவம், குஷியின்
அனுபவம், ஆன்மிக அன்பின் அனுபவம். அனுபவம் அப்படிப்பட்ட ஒரு
பொருள், ஒருமுறை அனுபவம் ஏற்பட்டு விட்டால் விடவே முடியாது.
கேள்விப் பட்ட விசயங்களை மறந்து விடுவார்கள், ஆனால் அனுபவித்த
விசயம் மறக்கமாட்டார்கள். அந்த அனுபவம் செய்விப்பவர்களின்
நெருக்கத்தில் கொண்டு வருகிறது.
வரும் நாட்களின் என்ன புதுமை செய்ய வேண்டும்? என்று அனைவரும்
கேட்கின்றனர். அனைவரும் ஆர்வம்-உற்சாகத்துடன் சேவை செய்து
கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஒவ்வொரு வர்க்கமும் (துறை)
செய்து கொண்டிருக்கிறது. இன்றும் பல வர்க்கங்கள் கூடியிருக்
கிறீர்கள் அல்லவா! மெகா புரோகிராமும் செய்து விட்டீர்கள்,
செய்தியும் கொடுத்து விட்டீர்கள், தங்களது புகார்களை முடித்து
விட்டீர்கள், இதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது பரமாத்மாவின்
ஞானம் என்ற ஒரு ஓசை இதுவரை வெளிப்படவில்லை. பிரம்மா குமாரிகள்
நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறார்கள், பிரம்மா குமாரிகளின்
ஞானம் நன்றாக இருக்கிறது. ஆனால் இது தான் பரமாத்மாவின் ஞானம்,
பரமாத்மாவின் காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற ஓசை
பரவ வேண்டும். தியானப் பயிற்சியும் செய்விக்கிறீர்கள், ஆத்மாவை
பரமாத்மாவுடன் தொடர்பும் இணைக் கிறீர்கள். ஆனால் இப்பொழுது
பரமாத்மாவின் காரியம் சுயம் பரமாத்மாவே செய்வித்துக்
கொண்டிருக்கின்றார் என்ற இந்த அனுபவம் மிகக் குறைவாக
செய்கின்றனர். ஆத்மா மற்றும் தாரணைகள் வெளிப்பட்டுக்
கொண்டிருக்கிறது, நல்ல காரியம் செய்து கொண்டிருக் கிறார்கள்,
நல்ல வார்த்தைகள் பேசுகிறார்கள், நல்லதை கற்றுக்
கொடுக்கிறார்கள், இந்த அளவிற்கு நன்றாக இருக்கிறது. ஞானம்
நன்றாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால் பரமாத்மாவின்
ஞானம் இந்த ஓசை தந்தையின் நெருக்கத்தில் கொண்டு வரும். மேலும்
எந்த அளவிற்கு தந்தையின் நெருக்கத்தில் வருவார்களோ, அந்த
அளவிற்கு தானாகவே அனுபவம் செய்து கொண்டே இருப்பார்கள். எனவே
அந்த மாதிரியான திட்டம் போடுங்கள், சொற்பொழிவில் அப்படிப் பட்ட
கூர்மையை நிரப்புங்கள். அதன் மூலம் பரமாத்மாவின் நெருக்கத்தில்
வந்து விட வேண்டும். தெய்வீக குணங்களின் தாரணையில் கவனம்
ஏற்பட்டிருக்கிறது, ஆத்மாவின் ஞானம் கொடுக் கிறீர்கள்,
பரமாத்மாவின் ஞானம் கொடுக் கிறீர்கள். ஆனால் பரமாத்மா வந்து
விட்டார், பரமாத்மாவின் காரியம் சுயம் பரமாத்மா நடத்திக்
கொண்டிருக்கின்றார் என்ற வெளிப்பாடு காந்தம் போன்று
நெருக்கத்தில் கொண்டு வரும். நீங்களும் கூட தந்தை கிடைத்து
விட்டார், தந்தையை சந்திக்க வேண்டும் என்று புரிந்து கொண்ட
பின்பு தான் நெருக்கத்தில் வந்தீர்கள். மெஜாரிடி அன்பானவர்களாக
ஆகிறார்கள். அவர்கள் எதைப் புரிந்து கொண்டு ஆகிறார்கள்? நல்ல
காரியம் செய்கிறார்கள். பிரம்மா குமாரிகள் என்ன காரியம் செய்து
கொண்டிருக்கிறார்களோ, அந்த காரியம் வேறு யாரும் செய்ய முடியாது,
மாற்றி விடுகிறார்கள். ஆனால் பரமாத்மா பேசிக் கொண்டிருக்
கின்றார், பரமாத்மாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும் என்ற
அளவிற்கு நெருக்கத்தில் வரவில்லை. ஏனெனில் பிரம்மா குமாரிகள்
என்ன செய்கிறார்கள்? இவர்களது ஞானம் என்ன? என்பதை முன்பு
புரிந்து கொள்ளாமல் இருந்தனர், இப்பொழுது புரிந்து கொள்கின்றனர்.
ஆனால் பரமாத்மாவின் ஞானம் என்பதை ஒருவேளை புரிந்து கொண்டால்
பரமாத்மாவின் பிரத்ட்சதா நிறுத்த முடியுமா என்ன! எவ்வாறு
நீங்கள் ஓடோடி வந்து விட்டீர்கள் அல்லவா, அவ்வாறு ஓடி
வருவார்கள். எனவே இப்போது அந்த மாதிரியான திட்டம்
உருவாக்குங்கள், அந்த மாதிரியான சொற்பொழிவு தயார் செய்யுங்கள்,
பரமாத்ம அனுபவத்தின் நடைமுறை நிரூபனமாக ஆகுங்கள். அப்போது தான்
தந்தையின் பிரத்ட்சதா நடைமுறையில் தென்படும். இப்பொழுது நன்றாக
இருக்கிறது என்று கூறும் அளவிற்கு வந்திருக்கின்றனர்.
நல்லவர்களாக ஆக வேண்டும் என்ற அலையானது பரமாத்ம அன்பின்
அனுபவத்தின் மூலம் ஏற்படும். எனவே அனுபவி மூர்த்தியாகி அனுபவம்
செய்வியுங்கள். இப்பொழுது இரட்டை எஜமானர்கள் என்ற நினைவின்
மூலம் சக்திசாலியாகி சக்திசாலியாக ஆக்குங்கள். நல்லது.
சேவைக்கான முறை பஞ்சாப் மண்டலமாகும்:
கை அசையுங்கள். நன்றாக இருக்கிறது, எந்த மண்டலத்திற்கு சேவையின்
முறை கிடைத்தாலும் அவர்கள் திறந்த மனதுடன் வந்து விடு கின்றனர்.
(பஞ்சாப் மண்டலத்திலிருந்து 4000 பேர் வந்திருக்கின்றனர்)
ஒவ்வொரு மண்டலமும் சேவைக்கான வாய்ப்பு நன்றாக எடுத்துக்
கொள்வதைப் பார்த்து பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி ஏற்படு கிறது.
பஞ்சாபை அனைவரும் பொதுவான முறையில் சிங்கம் என்று கூறுகின்றனர்,
பஞ்சாப் சிங்கம் மற்றும் பாப்தாதா கூறுகின்றார் சிங்கம் என்றால்
வெற்றி. ஆக பஞ்சாப் ஆத்மாக்கள் தங்களது நெற்றியின் நடுவில்
வெற்றித் திலகத்தின் அனுபவம் சதா செய்ய வேண்டும். வெற்றித்
திலகம் கிடைத்திருக்கிறது. நாம் தான் கல்ப கல்பத்திற்கும்
வெற்றியாளர்கள் என்ற நினைவு சதா இருக்க வேண்டும். இருந்தோம்,
இருக்கிறோம், மேலும் கல்ப கல்பத்திற்கும் ஆவோம். நல்லது.
பஞ்சாப் ஆத்மாக்களும் வாரிசு குவாலிடியை தந்தையின் முன் அழைத்து
வரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டி ருக்கிறீர்கள் அல்லவா!
இப்பொழுது பாப்தாதாவின் முன் வாரிசு குவாலிடி அழைத்து வரவில்லை.
அன்பான குவாலிடியை அழைத்து வந்திருக்கிறீர்கள், அனைத்து
மண்டலமும் அன்பு, சகயோகி குவாலிடியை அழைத்து வந்திருக்கிறீர்கள்.
ஆனால் வாரிசு குவாலிடியை அழைத்து வரவில்லை. ஏற்பாடு செய்து
கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! அனைத்து வகையினரும் தேவை அல்லவா!
வாரிசும் தேவை, அன்பானவர்களும் தேவை, சகயோகி களும் தேவை,
மைக்கும் தேவை, மைட்டும் தேவை. அனைத்து வகையினரும் தேவை. நல்லது,
சேவை நிலையங்களில் விருத்தியாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் ஆர்வம்-உற்சாகத்துடன் சேவை விருத்தி செய்து
கொண்டிருக்கிறீர்கள். எந்த மண்டலத்தினர் பரமாத்மா வந்து
விட்டார் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தந்தையை பிரத்ட்சம் எந்த மண்டலத்தினர் செய்கிறார்கள் என்பதை
பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார். அயல்நாட்டினர்
செய்வீர்களா? அயல்நாட்டினரும் செய்ய முடியும். பஞ்சாப் நம்பர்
எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொள்ளுங்கள் நன்றாக
இருக்கிறது. அனைவரும் உங்களுக்கு சகயோகம் செய்வார்கள். இதுவே,
இதுவே, இதுவே இந்த ஓசை பரப்புவதற்கான அதிக காலம் முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது - இதுவும் இருக்கிறது, இதுவே
என்று கிடையாது. ஆக பஞ்சாப் என்ன செய்வீர்கள்? இந்த ஓசை வந்து
விட வேண்டும் - இதுவே, இதுவே ஆசிரியர்கள் சரியா? என்றைக்குள்
செய்வீர்கள்? இந்த ஆண்டு செய்வீர்களா? புது ஆண்டு ஆரம்பமாகி
இருக்கிறது அல்லவா! எனவே புது ஆண்டில் ஏதாவது புதுமை ஏற்பட
வேண்டும் அல்லவா! இதுவும் இருக்கிறது - என்பதை பல முறை கேட்டு
விட்டோம். உங்களது மனதில் பாபா, பாபா, பாபா என்று தானாகவே
நினைவு இருப்பது போன்று அவர்களது வாயில் என்னுடைய பாபா வந்து
விட்டார் என்று வெளிப்பட வேண்டும். அவர்களும் என்னுடைய பாபா,
என்னுடைய பாபா என்று கூற வேண்டும். இந்த ஓசை
நாலாப்புறங்களிலிருந்தும் வெளிப்பட வேண்டும். ஆனால் ஆரம்பம் ஒரு
திசையிலிருந்து ஏற்படும் அல்லவா! ஆக பஞ்சாப் அதிசயம்
செய்வீர்களா? ஏன் செய்யமாட்டீர்கள்! செய்தே ஆக வேண்டும். மிக்க
நல்லது. முன் கூட்டியே வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். நல்லது.
அனைத்து திசைகளில் இருக்கும் ஆன்மிக ரோஜா குழந்தைகளுக்கு, சதா
தந்தைக்கு மிகப் பிரியமான மற்றும் தேக அபிமானத்திலிருந்து
விடுபட்டிருக்கும், பாப்தாதாவின் உள்ளத்திற்குப் பிரியமான
குழந்தைகளுக்கு, சதா ஒரு தந்தை, ஏகாக்ர மனம் மற்றும் ஏக்ரஸ்
ஸ்திதியில் இருக்கும் குழந்தைகளுக்கு, நாலாப்புறங்களிலும் உள்ள
விதவிதமான நேரத்தில் விதவிதமான இடங்களில் இருந்தாலும் விஞ்ஞான
சாதனங்களின் மூலம் மதுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கும்,
எதிரில் பார்த்துக் கொண்டிருக்கும், அனைத்து செல்லமான, காணாமல்
போய் தேடிக் கண்ùடுக்கப்பட்ட, கல்ப கல்பத்திற்கும் பரமாத்ம
அன்பிற்கு தகுதியான அதிகாரி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் உள்ளப்பூர்வமான ஆசிர்வாதங்களை பல கோடி மடங்கு
ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் இரட்டை எஜமானர் குழந்தைகளுக்கு
பாப்தாதாவின் நமஸ்தே.
தாதியிடம்:
மதுவனத்தின் ஹீரோ நடிகராக இருக்கிறீர்கள், சதா ஜீரோ நினைவு
இருக்கிறது. சரீரம் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டாலும் சிறிது
மெல்ல மெல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறது. ஆனால் அனைவரின் அன்பு
மற்றும் ஆசிர்வாதம் நடத்திக் கொண்டு இருக்கிறது. தந்தையினுடையது
இருக்கவே செய்கிறது, ஆனால் அனைவருடையதும் இருக்கிறது. அனைவரும்
தாதிக்கு மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள் அல்லவா! தாதிகள்
வேண்டும், தாதிகள் வேண்டும், தாதிகள் வேண்டும் என்று அனைவரும்
கூறுகிறீர்கள். ஆக தாதிகளின் விசேஷதா என்ன? தாதிகளின் விசேஷதா
தந்தையின் ஸ்ரீமத் படி ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பது.
மனதையும் தந்தையின் நினைவு மற்றும் சேவையில் சமர்ப்பணம் செய்வது.
நீங்கள் அனைவரும் கூட அவ்வாறு செய்கிறீர்கள் அல்லவா! மனதை
சமர்ப்பணம் செய்யுங்கள். பாப்தாதா பார்த்தார் - மனம் மிகப்
பெரிய அதிசயம் செய்து காட்டுகிறது. என்ன அதிசயம் செய்கிறது?
சஞ்சலம் செய்கிறது. மனம் ஒருநிலைப்பட வேண்டும். கொடியை மேலே
பறக்க விடுவது போன்று மனம் என்ற கொடி சிவபாபா, சிவபாபாவிடம்
ஒருநிலைப்பட வேண்டும். வந்து கொண்டிருக்கிறது, நேரம்
நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. சில நேரங் களில்
குழந்தைகளின் மிக நல்ல நல்ல சங்கல்பங்களை பாப்தாதா கேட்கின்றார்.
அனைவரின் இலட்சியம் மிக நன்றாக இருக்கிறது. நல்லது. பாருங்கள்,
ஹாலின் அழகு எவ்வளவு நன்றாக இருக்கிறது! மாலை இருக்கிறது அல்லவா!
மாலையின் நடுவில் மணிகள் வீற்றிருக்கின்றன. நல்லது. ஓம்சாந்தி.
ஆசீர்வாதம்:
அமைதி சக்தியின் மூலம் விநாடியில் முக்தி மற்றும் ஜீவன்
முக்தியின் அனுபவம் செய்விக்கக் கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.
விசேஷ ஆத்மாக்களின் கடைசி விசேஷதா - விநாடியில் எந்த ஒரு
ஆத்மாவையும் முக்தி மற்றும் ஜீவன் முக்தியின் அனுபவியாக ஆக்கி
விடுவார்கள். வெறும் வழி மட்டும் கூறமாட்டார்கள், ஆனால் ஒரு
விநாடியில் அமைதி அல்லது அதீந்திரிய சுகத்தின் அனுபவம்
செய்விப்பார்கள். ஜீவன் முக்தியின் அனுபவம் சுகம், முக்தியின்
அனுபவம் அமைதி. ஆக எதிரில் யார் வந்தாலும் அவர்கள் விநாடியில்
இதன் அனுபவம் செய்ய வேண்டும் - இப்படிப்பட்ட வேகம் இருக்கும்
போது தான் விஞ்ஞானத்தின் மீது அமைதி வெற்றி அடைவதை பார்த்து
அனைவரின் வாயில் ஆஹா ஆஹா என்ற ஓசை வெளிப்படும் மற்றும்
பிரத்ட்சதா காட்சி எதிரில் வரும்.
சுலோகன்:
தந்தையின் ஒவ்வொரு கட்டளைக்கும் தன்னை அர்ப்பணிக்கக் கூடிய
உண்மையான விட்டில் பூச்சி ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த
சேவைக்கு கருவி ஆகுங்கள்.
இப்போது வார்த்தைகளின் மூலம் கட்டளை கொடுப்பது போன்று சிரேஷ்ட
சங்கல்பத்தின் மூலம் முழு காரியங்களும் செய்ய முடியும்.
விஞ்ஞானிகள் கீழே பூமியிலிருந்து கொண்டு மேலே வரை கட்டளைகளை
பிறப்பிக்கின்றனர் எனில் நீங்கள் சிரேஷ்ட சங்கல்பத்தின் மூலம்
முழு காரியத்தை யும் நடத்த முடியாதா என்ன! எவ்வாறு
வார்த்தைகளின் மூலம் விசயங்களை தெளிவு படுத்து கிறீர்களோ,
அவ்வாறு நாள் செல்லச் செல்ல சங்கல்பத்தின் மூலம் முழு
காரியங்களும் நடை பெறும். இதற்கு சிரேஷ்ட சங்கல்பங்களின்
இருப்பை (ஸ்டாக்) சேமியுங்கள்.