13-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களது
வாழ்க்கையை வைரம் போல ஆக்குவதற்காக தந்தையிடம் வந்துள்ளீர்கள்.
தந்தையின் நினைவினால் தான் அப்பேர்ப்பட்ட வாழ்க்கை அமையும்.
கேள்வி:
புதிய உலகத்தில் உயர்ந்த
பதவிக்காக எந்த ஒரு முக்கியமான முயற்சி செய்ய வேண்டும்?
பதில்:
பாபா கூறுகிறார் - இனிமையான
குழந்தைகளே! எந்த பழைய சம்மந்தியினர் (உறவினர்) இவ்வளவு துக்கம்
தந்தனரோ, அவர்களது மோக வலையிலிருந்து புத்தியை நீக்கி தற்போது
என் ஒருவனை நினைவு செய்யுங்கள். அவர்களுடன் வாழ்ந்து கொண்டே
மனதை என்னிடம் ஈடுபடுத்துங்கள். மன்மனாபவ என்ற மந்திரத்தை
எப்பொழுதும் நினைவில் கொண்டீர்கள் என்றால் நீங்கள் புதிய
உலகத்தில் உயர்ந்த பதவியை அடைவீர்கள்.
பாடல்:
நீ இரவெல்லாம் உறங்கி இழந்தாய்..
.. .. ..
ஓம் சாந்தி.
எப்படி குழந்தைகளுக்கு தந்தை எல்லா சாஸ்திரங்களின் சாரத்தை
புரிய வைக் கிறாரோ, அதே போல இந்த பாடல்களின் சாரத்தைக் கூட
உங்களுக்குப் புரிய வைக்கிறார். அவரே அனைவரின் ஆன்மீகத் தந்தை.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு பிரம்மா உடலில் வந்து புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். ஹே குழந்தைகளே, நமது வைரம் போன்ற பிறவி
அமைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துள்ளீர்கள் என்று தந்தை
புரிய வைக்கிறார். தந்தையிடம் நீங்கள் வருவதே வைரம் போன்ற
பிறவியை அமைத்துக்கொள்தற்காக. சொர்க்கவாசி களினுடையது வைரம்
போன்ற பிறவி என்று கூறப்படுகிறது. நரகவாசிகளி னுடையது சோழி
போன்ற பிறவியாகும். நீங்கள் சங்கம யுகத்தையும் அறிந்து கொண்டு
விட்டுள்ளீர்கள். நாம் இப்பொழுது சங்கமயுகவாசி ஆவோம். இந்த
சங்கமயுகம் அனைவருக்குமே மங்களமானதாகும். இந்த சங்கமயுகத்தில்
தான் அனைவருக்கும் கதி சத்கதி ஆகிறது. யார் செய்கிறார்?
பரந்தாமத் திலிருந்து வரக்கூடிய பிரயாணி. அவர் பிரயாணி ஆவார்.
நீங்கள் பிரயாணி கிடையாது. நீங்கள் வந்து போவது இல்லை. நான்
பழைய உலகத்தில் வந்து பிறகு திரும்பிச் செல்கிறேன் என்று தந்தை
கூறுகிறார். இந்த சேவை செய்யக் கூடிய பிரயாணி ஒரே ஒருவர் ஆவார்
என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவர் வந்து குழந்தைகளாகிய
நமக்கு பெரிய சேவை செய்கிறார். இப்பேர்ப்பட்ட சேவையை வேறு
யாரும் செய்ய முடியாது. பதீதர்களாகிய நமக்கு வந்து சேவை
செய்யுங்கள் என்று சேவைக்காகத் தான் அழைக்கிறார்கள். நான்
குழந்தைகளின் சேவையில் வந்துள்ளேன். ஏனெனில் குழந்தைகள் மிகவும்
துக்க மடைந்துள்ளார்கள் என்று தந்தையும் கூறுகிறார். எங்களது
துக்கத்தை நீக்குங்கள் மற்றும் அமைதியைக் கொடுங்கள் என்று
முறையிடவும் செய்கிறார்கள். சுகம் மற்றும் சாந்தி இரண்டு
விஷயங்கள் எப்பொழுதும் நினைவில் இருக் கின்றன. இங்கு துக்கம்
மற்றும் அசாந்தி உள்ளது. அதனால் தான் அழைக் கிறார்கள். தந்தை
தான் வந்து சிருஷ்டிச் சக்கரத்தின் முழு இரகசியத்தையும்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது பக்தி மார்க்கம்
முடிவடைகிறது என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள்.
கலியுகத்தின் கடைசி என்றால் பக்தி கீழே இறங்கி கொண்டே வருகிறது.
ஞானத்தினால் உங்களுக்கு முன்னேறும் கலை ஆகி விடுகிறது. நீங்கள்
உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறீர்கள். பின்னர்
அந்த பிராப்தியின் சுகம் குறைந்துக் கொண்டே போகிறது. பக்தி
பாரதத்தில் இருக்கும் அளவிற்கு வேறு எங்குமே இல்லை. அரைக்
கல்பம் பக்தி நடக்கிறது. துவாபரம் ஆரம்பமானது முதல் மற்ற
தர்மங்களின் ஸ்தாபனை ஆக ஆரம்ப மானது. முதல் பக்தி ஆரம்பமாகிறது.
பக்தி கூட முதலில் நன்றாக இருக்கும். எப்படி சொர்க்கம் முதலில்
மிகவும் நன்றாக இருக்குமோ அப்படி. பிறகு மெது மெதுவாகக் கலைகள்
குறைந்துக் கொண்டே போகின்றன. பக்தி ஆரம்பமாகும் பொழுது முதன்
முதலில் சிவனின் பூசாரி ஆகிறார்கள். அரை கல்பம் எந்த ஒரு
பூஜையும் ஆவதில்லை. பிறகு பக்தி மார்க்கம் ஆரம்ப மாகும் பொழுது
மற்ற தர்மங்களும் ஆரம்பமாகின்றன. இவ்வளவு பக்தி வேறு யாரும்
செய்ய முடியாது. முழுமையாக அரைக்கல்பம் பக்தி நடக்கிறது. எந்த
தந்தை அனைவருக்கும் குறிப்பாக பாரதத்திற்கு சத்கதி அளிக்கிறாரோ,
சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறாரோ, அதே தூரதேசத்துப்
பிரயாணி இப்பொழுது குழந்தைகளாகிய நமக்கு மீண்டும் சொர்க்கத்தின்
அரசாட்சியை அளிக்க வந்துள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆஸ்தி கூட எவ்வளவு வலிமையானது. ஆனால்
ஒரு விஷயம் கூட யாருடைய புத்தியிலும் பதியவில்லை. பாரதத்தில்
எவ்வளவு பக்தி செய்கிறார்கள். எவ்வளவு கோவில்கள் உள்ளன. பாரத
கண்டத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இவை யாருடைய கோவில்கள்
என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதன் முதலில்
சிவபாபாவின் கோவில் அமைக்கப் படுகிறது. பிறகு தேவதைகளின்
கோவில்கள் அமைக்கப்படுகின்றன. அந்த கோவில்கள் கூட உங்கள்
முன்னால் உள்ளன. ஒரு புறம் சிவபாபாவிற்கு பூஜை செய்துக் கொண்டே
இருக் கிறார்கள், மறுபுறம் சிவபாபா உங்களை பூஜைக்குரியவராக
ஆக்கிக் கொண்டி ருக்கிறார். நீங்கள் பூஜைக்குரிய தேவதை
ஆவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். யாரெல்லாம் தேவதை களுக்குப்
பூசாரியாக இருக்கிறார்களோ உண்மையில் அவர்களும் வந்து இங்கு
பிராமணர்களாக ஆவார்கள். மெள்ள மெள்ள அதிகமாகிக் கொண்டே போகும்.
எல்லோரும் ஒட்டு மொத்தமாக படிக்க முடியாது. நேரம் பிடிக்கிறது.
முந்தைய கல்பத்தில் கூட யார் படித்திருக்கக் கூடுமோ அவர்களே
பின்னர் படிப்பார்கள். ஒருவருக்கொருவர் படிப்பித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அனைவருக்கும் தந்தை மற்றும் சிருஷ்டியின்
முதல், இடை, கடை பற்றிய ஞானத்தைக் கூறுகிறீர்கள். அதன் மூலம்
மனிதர்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆகி விட முடியும். அதை வந்து
புரிந்து கொள்ளுங்கள். இந்த நாடகம் எப்படி சக்கரம் சுற்றி
வருகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது.
இலட்சக் கணக்கான வருடங்களின் கதையை யாருமே கூற முடியாது. 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் என்ன இருந்தது, யாருடைய ஆட்சி
இருந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதத்தில்
பூஜைக்குரிய தேவி தேவதைகளாகிய நம்முடைய இராஜ்யம் இருந்தது. நாம்
பூஜைக் குரியவராக இருந்தோம். பிறகு பூஜாரி ஆனோம் என்பது
நினைவில் வந்தது அல்லவா? இதற்கு முன்பு இது தெரியாமல் இருந்தது.
நாமே பூஜைக்குரிய தேவதைகளாக இருந்தோம். பிறகு நாம் 84 பிறவிகள்
எடுத்தோம். 84 பிறவிகளின் கதை இலட்சுமி நாராயணருடையதாகும்.
நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறுகிறீர்கள்.
அவர்களுக்கு தங்களுடைய கதையை அமர்ந்து எழுது வதில் நிறைய நேரம்
பிடிக்கிறது. உங்களால் ஒரு நிமிடத்தில் 84 பிறவிகளின் கதையைக்
கூற முடியும். அவர்கள் ஒரு பிறவியின் கதையை எழுதுகிறார்கள்.
சிறிய வயதில் என்னென்ன செய்தோம் என்பதை அவர்களுடைய கதையில்
கூறுகிறார்கள். நாங்கள் எப்படி 84 பிறவியின் சக்கரத்தைச்
சுற்றுகிறோம். ஒருவருடைய விஷயம் கிடையாது. நிறைய பிராமணர்கள்
இருக்கிறார்கள். நீங்கள் தான் இந்த சக்கரத்தை அறிந்துள்ளீர்கள்.
இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதால் நீங்கள் இராஜா இராணி
ஆகிறீர்கள். மேலும் மற்றவர் களை ஆக்கவும் செய் கிறீர்கள். பக்தி
கூட பாரதவாசிகளைப் போல வேறு யாரும் செய்வ தில்லை. மற்றது
எதெல்லாம் மடங்கள், சம்பிரதாயங்கள், தர்மங்கள் ஆகியவை உள்ளனவோ,
அவை நமது பக்தியின் காலத்தில் ஸ்தாபனை ஆகிறது. முதன் முதலில்
நம்முடையது எவ்வளவு சிறிய மலர்களின் செடியாக இருந்தது. ஆன்மீகத்
தோட்டமாக இருந்தது. நீங்கள் உயிரூட்டமுடைய மலர்களாக
இருந்தீர்கள். இதற்கு மலர்களின் தோட்டம் என்று கூறப் படுகிறது.
பிறகு அதுவே முட்களின் தோட்டமாக ஆகிக் கொண்டே போகிறது. இச்சமயம்
எல்லோருமே முட்களாக ஆகி விட்டுள்ளார்கள். பிறகு முட்களிலிருந்து
மலராக எப்படி ஆவது என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார்.
ஒருவருக்கொருவர் துக்கம் கொடுப்பது முள் குத்துவது போல ஆகும்.
மாணவ வாழ்க்கை மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. அது மிகவும்
நன்றாக இருக்கும். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் மிகவும்
மகிழ்ச்சியுடன் படித்துக் கொண்டே இருப்பார்கள். திருமணம்
செய்தார்களோ இல்லையோ பின் ஒருவருக் கொருவர் முள் குத்த
ஆரம்பிப்பார்கள். சத்யுகத்தில் யாருமே முள் குத்துவதில்லை.
இப்பொழுது நீங்கள் மீண்டும் மலர் ஆகிறீர்கள். பாரதம்
சொர்க்கமாக இருக்கும் பொழுது எவ்வளவு அளவற்ற சுகம் இருந்தது
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தங்கச் சுரங்கங்கள் இருந்தன.
இப்பொழுது அவை காலியாகி விட்டது. பிறகு உங்களுக்கு நிரம்ப
கிடைக்கும். பாரதத்தில் தான் தங்கம், வைரம், வைடூரியத்தின்
சுரங்கங்கள் இருந்தன. அச்சமயம் அமெரிக்கா போன்ற எதுவும்
இருக்காது. பாம்பே கூட இருக்காது. ஆச்சரியமல்லவா? கலியுகக்
கடைசியில் சிறிதளவு கூட தங்கம் தென்படுவதில்லை. பிறகு சத்யுக
ஆரம்பத்தில் இத்தனை தங்கச் சுரங்கங்களும் நிரம்பியதாகி
விடுகிறது. தங்க மாளிகை ஆகி விடுகின்றன. ஆச்சரிய மில்லையா?
அங்கு சுரங்கங்களிலிருந்து எவ்வளவு ஏராளமான தங்கத்தை வெளியே
எடுக்கிறார்கள். எப்படி இங்கு மண்ணினால் செங்கல் தயாராகிறதோ,
அதேபோல தியானத்தில் அங்கு தங்கத்தால் செங்கற்கள் தயாராகின்றன.
மாயா மச்சந்தர் என்ற நாடகத்தைக் காண்பிக்கிறார்கள். அங்கு
தங்கமே தங்கம் என்ற காட்சியைப் பார்த்தார். உண்மை யில்
சத்யுகத்தில் தங்கம் இருக்கும். இங்கே பாருங்கள், மண்ணினுடைய
செங்கற்கள் கூட கிடைப்பதில்லை. இங்கு எந்த அளவிற்கு செங்கற்கள்
பைசா கொடுத்து கிடைக் கிறதோ, அந்த அளவு அங்கு தங்க செங்கற்கள்
இலவச மாக கிடைக்கும். இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பின்
ஏன் புது உலகத்தில் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி செய்யக்
கூடாது. இங்கு மோகத்தின் வலையில் ஏன் சிக்க வேண்டும்?
பழைய சம்மந்தங்களில் நீங்கள் எவ்வளவு துக்கம் எடுக்கிறீர்கள்
என்று தந்தை கூறுகிறார்? இவர்களை விட்டு விடுங்கள் என்று அப்படி
ஒன்றும் பாபா கூறுவதில்லை. புத்தியோகத்தை ஒரு தந்தையிடம்
ஈடுபடுத்தினால் மட்டும் போதும். பின் நீங்கள் உலகத்தின் அதிபதி
ஆகி விடுவீர்கள். மன்மனாபவ என்பதன் பொருளே என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் விஷ்ணு சதுர்புஜ - அதாவது விஷ்ணுபுரியை
நினைவு செய்யுங்கள். அடிப்படை வார்த்தை ஒன்றே ஒன்று தான். பக்தி
மார்க்கத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இப்பொழுது
ஆத்மாக் களாகிய நீங்கள் அனைவரும் பிரியதரிசனான ஒரே ஒரு பரமபிதா
பரமாத்மாவின் பிரிய தரிசினிகள் ஆவீர்கள். அவர் உங்களை
சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். அனைத்து ஆத்மாக்களும்
அவரை நினைவு செய்கிறார்கள். நீங்கள் ஆன்மீக பிரியதரிசனருக்கு
உடையவர் களான ஆன்மீக பிரியதரிசினிகளாக ஒரே ஒரு முறை ஆகிறீர்கள்.
மற்றபடி எல்லா மனிதர் களும் உலகியலிலான பிரியதரிசினி மற்றும்
பிரியதரிசனர் களாக இருக்கிறார்கள். இப்பொழுது எல்லையில்லாத
பிரியதரிசினிகளுக்கு எல்லையில்லாத பிரியதரிசனர் வந்து
கிடைத்துள்ளார். வாருங்கள் வந்து எங்களை பதீத நிலையிலிருந்து
பாவனமாக ஆக்குங்கள் என்றும் அவருக்குக் கூறுகிறார்கள். ஒருவரைத்
தான் அழைக்கிறார்கள். நமது ஆத்மா பதீதமாக ஆகி விட்டுள்ளது. எனவே
பதீத பாவனரே! வாரும், என்று அழைக்கிறார்கள் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். கும்பமேளா நடைபெறுகிறது. அதில் எத்தனை பேர்
போய் கங்கா ஸ்நானம் செய்கிறார்கள். நன்மை எதுவும் கிடையாது.
யாருமே தூய்மையாக ஆவதில்லை. இப்பொழுது தந்தை வந்து ஞான மழை
பொழிகிறார். உங்கள் மீது ஞானமழை பொழிந்துக் கொண்டிருக்கிறது.
அதன் மூலம் மீண்டும் முட்களின் காடு மலர்களின் தோட்டமாக ஆகி
விடும். நமது இராஜ்யம் இருக்கும் பொழுது அங்கு பதீதமானோர்
எவரும் இருக்கவே மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
முழு உலகத்தின் மீது ஞான மழை பெய்து விடுகிறது. எல்லாமே
பசுமையாக ஆகி விடுகிறது. வைரம், வைடூரியங்களின் சுரங்கங்கள்
கூட புதியதாகி விடுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
எவ்வளவு குஷியில் இருக்க வேண்டும். நீங்கள் என்னை நினைவு
செய்தீர்கள் என்றால், உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும்
என்று எல்லையில்லாத தந்தை வந்து புரிய வைக்கிறார் என்பதை
நேரிடையாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் எங்கு அமர்ந்
திருந்தாலும் சரி, ஸ்நானம் செய்யுங்கள், புத்தியில் தந்தையின்
நினைவிருக்கட்டும். அங்கு நினைவு செய்வதற்கான நேரம் உள்ளது.
தந்தையை எவ்வளவு நினைவு செய்வீர்களோ அவ்வளவு வருமானம் உள்ளது.
நினைவினால் தான் வருமானம் உள்ளது. நினைவினால் சேமிப்பு ஆகிறது
என்று எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? எவ்வளவு
பெரிய வருமானம் ஆகும். நீங்கள் விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகி
விடுவீர்கள். ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை நிராகாரமானவர் ஆவார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் இந்த சரீரத்தின் ஆதாரம்
எடுத்துள்ளார். பாகீரதனின் வர்ணனை கூட உள்ளது அல்லவா?
பாக்கியசாலி ரதம் ஆகும். அந்த ரதத்தில் பரமபிதாவின் பரம ஆத்மா
சவாரி செய்கிறார். ஆத்மாவின் ரதம் தயாராக ஆகி விடும் பொழுது
சட்டென்று ஆத்மா வந்து பிரவேசம் செய்கிறது. தந்தை இந்த ரதத்தில்
தான் வந்து ஞானத்தை மட்டும் அளிக்க வேண்டி உள்ளது. அநேக
பிறவிகளின் கடைசி பிறவியில், வானப் பிரஸ்த நிலையாகும் பொழுது,
நான் வந்து இவருக்குள் பிரவேசம் செய்கிறேன் அல்லது இந்த
ரதத்தில் வந்து அமருகிறேன். மற்றபடி எந்த ஒரு குதிரை வண்டி,
ரதத்தின் விஷயம் கிடையாது. இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானம்
கிடைத்துள்ளது. தந்தை வந்து நேரிடையாக குழந்தை களாகிய
உங்களுக்குப் புரிய வைக்கிறார். உங்களுக்கு மிகுந்த குஷி
இருக்க வேண்டும். ஐ.சி.எஸ். பரீட்சைக்காகப் படிக்கிறார்கள்
என்றால், மிகுந்த போதை இருக்கும். அது எல்லாவற்றையும் விட
உயர்ந்த பரீட்சையாகும். உங்களுடையதும் இது படிப்பு ஆகும். இது
பகவானின் பாடசாலையாகும். இப்பொழுது பகவான் யார் என்ற கேள்வி
எழுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரா இல்லை சிவபாபாவா? அனைவருக்கும் பகவான்
யார்? ஒரே ஒரு நிராகாரமான வரைத் தவிர எல்லோருமே கிருஷ்ணரை
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அனைத்து ஆத்மாக் களின் தந்தை அவர்
நிராகாரமான பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் எப்பொழுதும்
பரந்தாமத்தில் இருக்கிறார். குழந்தைகளை சொர்க்கத்திற்கு
அதிபதியாக ஆக்க ஒரே ஒரு முறை வருகிறார். அதே பாபா கல்ப கல்பமாக
வந்து நம்மை ஆண்டியிலிருந்து அரசனாக ஆக்குகிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பாரதம் இப்பொழுது மிகவும் ஏழையாக உள்ளது
அல்லவா? பிறகு அடுத்த பிறவியில் என்ன ஆக வேண்டி உள்ளது என்பது
எல்லாமே உங்களுக்கு சாட்சாத் காரம் ஆகி உள்ளது. விநாசத்தினுடைய
சாட்சாத்காரம் கூட செய்துள்ளீர் கள். ஸ்தாபனை யையும்
பார்த்துள்ளீர்கள். நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜா
வாக ஆக்குகிறேன் என்று பகவான் கூறுகிறார். நிறைய தான புண்ணியம்
செய்வதால் ஒரு சிலருக்கு அல்ப கால சுகம் கிடைக்கிறது.
இராஜாக்களிடம் பிறவி எடுத்து பிறகு உடனே இறந்து விடுகிறது. ஒரு
சில கர்ப்பத்திலேயே இறந்து விடுகிறது. ஒரு சில அங்கஹீனம்
உடையவராக, காது கேளாதவர்களாக ஆகி விடுகிறார்கள். எப்படி கர்மம்
செய்கிறார்களோ, அப்படி பதவியை அடைகிறார்கள். இப்பொழுது உங்களை
இராஜாக்களுக்கெல்லாம் இராஜா வாக ஆக்குகிறார். பாபா நாங்கள்
சமர்ப்பணம் ஆகிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே அவசியம்
நீங்கள் இராஜ்யத்தையும் பெறுவீர்கள். பாரத தேசம் மகாதானி கண்டம்
என்று கூறப்படுகிறது. இங்கு தான புண்ணியம் நிறைய செய்கிறார்கள்.
அது பிறகு பக்தி மார்க்கத்தில் ஆரம்பமாகிறது. இப்பொழுது தந்தை
உங்களுக்கு 21 பிறவிகளுக்கு தானம் கொடுக்கிறார். இப்பொழுது
நீங்கள் பாபா மீது சமர்ப்பணம் ஆகிறீர்கள். உடல், மனம், பொருள்
ஆகிய எல்லாவற்றையும் கொடுத்து விட்டீர்கள். இப்பொழுது டிரஸ்டி
ஆகி இருங்கள் என்று தந்தை கூறுகிறார். உங்கள் வீடு வாசலை
பராமரியுங்கள். எல்லாமே சிவபாபாவினுடையதாகும். நான்
உங்களுடையவன் ஆவேன். உங்களைத் தான் நினைவு செய்கிறேன். மனதார
சமர்ப்பணம் செய்கிறார்கள். தாரளமாக மாளிகையில் இருங்கள்,
உலாவுங்கள், சுற்றுங்கள், குஷியைக் கொண்டாடுங்கள். என்னை நினைவு
மட்டும் செய்தீர்கள் என்றால், நீங்கள் மகிழ்ச்சியாக
இருப்பீர்கள் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் உலகிற்கு
அதிபதியாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் நீங்கள் முயற்சி
செய்து அது போல ஆகிறீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே !
இந்த யோக பலத்தினால் தான் நீங்கள் விகர்மங்களை வென்றவர்களாக
ஆவீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். தந்தையின் நினைவினால்
நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்குத் தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இராஜ்ய பதவியைப் பெறுவதற்காக தந்தை மீது முழுமையாக
சமர்ப்பணமாக வேண்டும். உடல், மனம், பொருள் அனைத்தையும்
சமர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி இருக்க வேண்டும். விகர்மங்களை
வென்றவராக (விகர்மாஜீத்) ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
2. நினைவில் தான் வருமானம் உள்ளது. எனவே நிரந்தர நினைவில்
இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். மலர்களின் உலகத்திற்கு
அதிகாரியாகி விடக் கூடிய வகையில் அப்பேர்ப்பட்ட ஆன்மீக மலராக
வேண்டும். உள்ளுக்குள் எந்த ஒரு முள் கூட இருக்கக் கூடாது.
வரதானம்:
ஒரு பாபாவிடமே முழு உலகையும் அனுபவம் செய்யும்
எல்லையில்லா வைராக்கியம் உள்ளவர் ஆகுக
ஒரு தந்தையை மட்டுமே தனது உலகமாக நினைப்பவரே எல்லையில்லா
வைராக்கிய முடையவர் ஆவார். தந்தையை தன் உலகமென உணர்ந்தவர் தன்
உலகிலேயே உறைந்திருப் பார், வேறு பக்கம் செல்லவே மாட்டார்
எனும்போது தானாகவே ஒதுங்கிவிடும். உலகத்திற்குள் மனிதர்கள்
வைபங்கள் அனைத்தும் வந்துவிடும் தந்தையின் செல்வமே தனது செல்வ
மானதால் இதே நினைவால் எல்லையில்லா வைராக்கியம் அடைவர். எவரையும்
பார்த்தும் பாராதிருப்பார். எதுவும் கண்ணில் தென்படாது.
சுலோகன்:
சக்திவாய்ந்த மனோநிலையை அனுபவம் செய்ய வேண்டுமெனில்
ஏகாந்தம் மற்றும் இனிமையில் சமநிலை வையுங்கள்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
பிரஜைகளின் பாதுகாப்பிற்காக கோட்டை கட்டப்படுகின்றது. ஒரு
ராஜாவிற்காக குடில் அமைப்பதில்லை, கோட்டை அமைப்பார்கள். நீங்கள்
அனைவரும் தனக்காகவும் துணையாக இருப்பவர்களுக்காகவும் பிற
ஆத்மாக் களுக்காகவும் ஜுவாலா வடிவிலான நினைவெனும் கோட்டையை
கட்டுங்கள். நினைவு சக்தி வாய்ந்த அக்னி ஜுவாலையாக இருந்தால்
ஒவ்வொரு ஆத்மாவும் பாதுகாப்பினை அனுபவம் செய்வார்கள்.