13.10.24    காலை முரளி            ஓம் சாந்தி  11.03.2002      பாப்தாதா,   மதுபன்


விசேஷத்தன்மைகள் பரமாத்மாவின் வரமாகும் - அவைகளை உலக சேவையில் அர்ப்பணம் செய்க

இன்று கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் பிரம்மா பாபா மற்றும் சிவபாபா இருவரும் உலகில் நாலாபுறமும் உள்ள சிரேஷ்ட பாக்யவான் பிராமண குலத்திற்கு பல கோடி மடங்கு திவ்ய அலௌகீக பிறவிக்கான வாழ்த்துக்களை தருகின்றார்கள். அதோடு மட்டுமின்றி சினேகத்துடன் உளமார்ந்த அன்புடன் ஆன்மீக மலர்களால் வாழ்த்துக்களை வழங்குகின்றனர். ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் விசேசங்களைப் பார்த்து பார்த்து மகிழ்கின்றனர். மனதிற்குள்ளேயே ஆஹா குழந்தைகளே! ஆஹா எனப்பாடல் பாடுகின்றனர். இன்று அமிர்தவேளையிலிருந்தே அனைவர் மனதிலும் குஷியின் அலைகள் தென்படுகின்றன. ஆஹா, எனக்கும் என் தந்தைக்கும் பிறந்த நாள். பாபாவும் அமிர்த வேளையிலிருந்தே அனைவரது வாழ்த்துக்களின் மாலையை பார்த்துப் பார்த்து மகிழ்கின்றார். இந்த பிறந்த நாளை முழு கல்பத்திலும் இந்த சங்கம யுகத்தில் மட்டுமே கொண்டாடுகின்றனர். சத்யுகத்திலும் இப்படிப்பட்ட அலௌகீக பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அங்கும் இந்த மாதிரி விசித்திரமான பிறந்த நாள் நடைபெறாது. ஒரே நாளில் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த நாள் இதுவரையில் இது போன்ற பிறந்த நாளை கேள்விப்பட்டதுண்டா? ஆனால் இன்று குழந்தைகள் நீங்கள் பாப்தாதாவுடன் ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடுகின்றீர்கள். ஆஹா! ஆஹா! எனம் பாடல் பாடுகின்றீர்கள்.

இன்று பாப்தாதா அமிர்த வேளையில் ஒரு மாலையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். எந்த மாலை? இறுதியான 108 மணி மாலை அல்ல அது, எனது பெயர் இருந்ததா, எனது பெயர் இருந்ததா என்று கேட்பதற்கு... ஆனால் ஆரம்பத்தில் யக்ஞ ஸ்தாபனை முதல் இப்போது வினாசத்தின் அருகாமை வரையிலும் யாரெல்லாம் அமர்பவ எனும் வரதானம் பெற்றுள்ள குழந்தைகள் உள்ளனரோ அவர்களின் மாலையை செய்து கொண்டிருந்தனர். நாடகப்படி அந்த ஆத்மாக்களுக்கும், உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடன் அனைவருடய சரித்திரத்தையும் பார்ப்பதற்கு, கேட்பதற்கான உயர்ந்த நடிப்பு உள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு குறைவான வர்கள். உங்களுக்கும் அந்த நடிப்பு உள்ளது ஏன்? பாப்தாதா பிராமண வம்சாவளியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். எனவே உலகை பொருத்த வரையில் பிராமண ஆத்மாக்கள் மிக மிக மிக பாக்கியசாலிகளே, ஏன்? கோடியில் ஒருவர், அந்த ஒருவரிலும் ஒருவராக இருப்பவர் நீங்கள். ஒருபுறம் உலகின் கோடான கோடி ஆத்மாக்கள், மறுபுறம் நீங்கள் ஒவ்வொரு பிராமணக் குழந்தைகள். இந்த பிறந்த நாளில் பாப்தாதா ஒவ்வொருவருக்கும், சிலருக்கு மட்டுமல்ல, அனைத்து குழந்தைகளின் சாதகத்தைப் பார்த்து விசேஷங்களின் மாலையை கழுத்தில் அணிவிக்கின்றார். நீங்கள் அனைவருக்கும் புதியவராயினும், ஆதியில் வந்தவராயினும், இடையில் வந்தவராயினும், விசேஷமானவர்களே! முழு கல்பமும் உலகின் அனைத்து ஆத்மாக்களும் விசேஷ ஆத்மாக்களான உங்கள் மீது உயர்ந்த பார்வையே வைக் கின்றார்கள். ஆக உங்களது சிறப்பம்சங்களை தெரிந்துள்ளீர்களா? ஆம் எனில் கை உயர்த்துங் கள். மிக நல்லது. அந்த சிறப்பம்சங்களை என்ன செய்கின்றீர்கள்? தெரிந்துள்ளீர்கள் மிக நல்லது, ஏற்றுக் கொண்டீர்கள் மிக மிக நல்லது. ஆனால் அந்த சிறப்பம்சங்களை என்ன செய்கின்றீர்கள்? (சேவையில் ஈடுபடுத்துகின்றீர்களா) வேறு வகையில் பயன்படுத்தவில்லை தானே? இந்த சிறப்பம்சங்கள் பரமாத்மாவின் வரமாகும். பரமாத்மா வின் வரத்தினை எப்போதும் உலக சேவையில் அர்ப்பணம் செய்ய வேண்டும். சிறப்பம்சங் களை எதிர்மறையாக பயன்படுத்தினால் அபிமானமாகும். ஏனெனில் பாபாவின் குழந்தையாக பிராமணன் ஆனப்பிறகு சிறப்பம்சமெனும் பொக்கிசங்களுக்கு அதிகாரி ஆகின்றீர்கள். விசேஷங்கள் ஒன்றிரண்டு அல்ல. அநேகம். அவற்றையே நினைவார்த்தமாக வர்ணனை செய்கின்றார்கள். 16 கலை நிரம்பிய வர்கள், 16 மட்டுமல்ல. 16 என்பது முழுமைத் தன்மை. அனைத்து குணங்களிலும் முழுமை. விகாரமே இல்லாத முழுமையின் விளக்கம். சொல்லளவில் சிறிதளவு கூட விகாரமற்ற முழுமைத் தன்மை. ஆனால் சம்பூரண நிலையில் அநேக விளக்கம் உள்ளது. ஆக சிறப்பம்சங்கள் என்பது தந்தை மூலம் ஒவ்வொரு பிராமணர்களுக்கும் ஆஸ்தியாக கிடைக்கின்றது. ஆனால் அந்த சிறம்பம்சங்களை கையாளுவது மற்றும் சேவையில் பயன்படுத்துதல் வேண்டும். இது எனது சிறம்பம்சம் அல்ல, பரமாத்மாவின் வரமாகும். அப்படி வரமாக உணர்வதால் விசேஷங்களில் பரமாத்மா சக்திகள் நிரம்புகின்றது. மாறாக எனது எனும் போது அபிமானம், அவமானம், இரண்டும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ஞானம், யோகம், சேவை, புத்தி, குணம் எதுவானாலும் அதன் அபிமானம் என்பதன் அடையாளம் அவமானம் மிகவும் விரைவாகவே ஏற்படுகின்றது. ஆகவே விசேஷ ஆத்மாக்கள் என்றாலே பரமாத்மாவின் வரத்திற்கு அதிகாரிகள்.

இன்று நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் பிறந்த நாளை கொண்டாட வந்துள்ளீர் கள். தந்தையும் உங்களது பிறந்த நாளை கொண்டாட வந்துள்ளார். நீங்களோ பாப்தாதாவின் பிறந்த நாளை மட்டும் கொண்டாடுவீர்கள். ஆனால் பாப்தாதா பிராமண குலத்தைச் சார்ந்த அனை வருக்கும் கொண்டாட வந்துள்ளார். உள்நாட்டில் தொலைவில் இருப்பினும், வெளிநாட்டில் தொலைவில் அமர்ந்திருப்பினும் எங்கிருந்தாலும் அனைவரும் பிராமண குலத்தவராகி விட்டீர்கள். அவர்களின் பிறந்த நாளை பாப்தாதாவும் கொண்டாடுகின்றார். நீங்களும் கொண்டு கின்றீர்கள். அனைவருக்கும் கொண்டாடுகின்றீர்களா? இங்கே அமர்ந்துள்ளவர் களுக்காக மட்டும் கொண்டாடுகின்றீர்களா? அனைவர் நினைவும் உள்ளதா? அனைவரும் பார்க்கின்றார்கள், நமக்கும் கொண்டாடுகின்றார்கள் இல்லையா? அனை வருக்கும் கொண்டாடுகின்றீர்கள். அனை வருக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். கொண்டாடுவது என்றாலே ஊக்கம் உற்சாகத்தில் வருவது ஆகும். ஆக உள்ளத்தில் உற்சாகம் உள்ளதல்லவா? ஆஹா, நமது அலௌகீக பிறந்த நாள்.

இன்று அமிர்த வேளை முதலாகவே அனைவருக்குள்ளும் ஊக்கம், உற்சாகம் மிக மிக அதிகமாகவே உள்ளது. பாப்தாதா கார்டுகளை பார்த்தார், நீங்கள் இந்த கண்களால் பார்க்கின்றீர் கள். பாப்தாதா சூட்சுமத்திலும் உங்களுக்கு முன்பாகவே பார்த்து விடுகின்றார். குழந்தைகள் அனைவரும் தனது ஊக்கத்தை காண்பிப்பதற்காக எவ்வளவு ஊக்கம், உற்சகாத்துடன் உள்ளனர். இன்றெல்லாம் ஈ மெயில் மிகவும் எளிதாகி விட்டது. எனவே அநேகர் ஈ மெயில் அனுப்பு கின்றனர். பாப்தாதாவிடம் அனைத்தும் வந்தடைகின்றது. ஈ மெயில், கார்டு, கடிதம் உள்ளத்தின் எண்ணம் எதுவாயினும் தந்தையை வந்து சேர்கின்றது. அமிர்தவேளையிலிருந்து நாலா புறமுமிருந்தும் வந்துள்ள கார்டு, கடிதம், ஈ மெயில் அனைத்தைம் ஒன்று சேர்த்தால் மிகவும் ஆனந்தமே! விசித்திரமான ஒரு காண்காட்சியே வைக்கலாம். பிறந்த நாளில் எதிர்காலத் திற்காக எண்ணம் வைப்பதுண்டு. பிறந்த நாளில் எண் முன்னேறுகிறது. ஆண்டு முன்னோக்கி நகர்கின்றது. அவ்வாறே முயற்சியிலும் தனது மதிப்பு வாய்ந்த வாழ்விலும், மனிதின் எண்ணத்தில், புத்தியின் நிர்ணய சக்தியில், சொல்லில் ஒரு நொடியில் வெற்றி மூர்த்தியாகும் சக்தியில் தொடர்பில் வரும் உறவுகளுக்கும் ஏதேனும் ஒரு பிராப்தியை அனுபவம் செய்விக் கும் வகையில் தனது எதிர்காலத்திற்காக உறுதிவாய்ந்த எண்ணத்தை விரதமாக வைத்துள்ளீர் களா? ஏனெனில் சிவஜெயந்தி நாளில் இரு லட்சியங்கள் பிராமண ஆத்மாக்களுக்கு இருக் கின்றது. ஒன்று தன் பொருட்டு உறுதி மொழி செய்வது, மற்றொன்று தந்தையின் வெளிப் பாட்டிற்கான (பிரத்யட்சம்) கொடியேற்றுவது. இவ்வாறு இலட்சியமும் விசேஷமாக இந்நாளில் ஒவ்வொருவர் மனதிலும் வருகின்றது. பாப்தாதா நீங்கள் அனைவரும் செய்துள்ள உறுதி மொழியின் கணக்கை (முந்தைய ஆண்டுகளில் செய்த உறுதி மொழிகளை) பார்த்தார். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவரும் விதிப்பூர்வமாக எண்ணத்தாலும், சொல்லாலும் உறுதி செய்கிறீர்கள். மிக நன்றாகவே செய்தீர்கள். ஆனால் இனி இந்த பிறந்த நாளுக்குப் பிறகு ஒரு வார்த்தையின் (சொல்) மீது விசேஷ கவனம் செலுத்துங்கள். பொதுவான வார்த்தை தான் அது. புதியதல்ல. அந்த வார்த்தை நிரந்தர உறுதி. சில நேரம் உறுதி சில நேரம் தொய்வு என்பது கூடாது. நிரந்தர உறுதியின் அடையாளம் - நிரந்தரமாக ஒவ்வொரு எண்ணம், சொல், செயல் மூலமாக தன்னிலும், சேவையிலும், தொடர்பிலும் 100 சதவிகிதம் வெற்றி. எது வரையிலும் இவை அனைத்திலும் பிராமணர்கள் சதா வெற்றி குறைவோ அதுவரையில் வெளிப்பாடும். நாடகப்படி பின்தங்கியே இருக்கும். வெற்றியே வெளிப்பாட்டிற்கான ஆதாரம். ஒவ்வொரு சொல்லும், எண்ணமும் வெற்றியாக வேண்டும். எனவே தான் நினைவார்த்தமாக குரு என சொல்பவர்களை சத் வச்சன் மகாராஜா என்பார்கள். பொய்யே உரைத்தாலும் பக்தர்கள் உண்மை என்பார்கள். இது உங்களுடைய சொல்லின் மகிமை ஆகும். மகாராஜா நீங்களும் மகான் ஆகின்றீர்கள். ஆகவே சத்தியம் உரைக்கும் மகாராஜா என்றால் மகான் ஆத்மா நீங்களே ஆவீர்கள். ஒருபோதும் இப்படி யோசிக்காதீர்கள், எனது உள்ளுணர்வு இல்லாமல் அப்படி ஒரு போதும் வெளிப்படாது. இது சமாளிப் பதாகும். சில சமயம் வாயில் வந்து விட்டது என சொல்வதுண்டு, ஏன் வந்தது? கட்டுப் படுத்தும் சக்தியை மீறி வந்துவிட்டது, ஆகிவிட்டது எனில் ராஜா இல்லையா? சிலசில கர்மேந்திரியங்களுக்கு வசமாகி விட்டீர்கள். எனவே வந்து விட்டது, ஆகிவிட்டது.

ஆக இந்த ஆண்டு வாழ்த்துக்களுடன் இணைந்து ஒவ்வொரு விசயத்திலும் நிரந்தர உறுதியினை கோடிட்டு வையுங்கள். இன்று பிறந்த நாள் - எனவே பாப்தாதா இன்று சொல்ல வில்லை. ஆனால் அனைவரின் கார்டிலும் பாப்தாதா ஒரு விசயத்தை குறிப்பாக கவனித்தார். அதனை இறுதி முறையில் கூறுவார். இன்று கொண்டாடலாம், சொல்ல மாட்டோம். 15 நாட்களுக்குப் பிறகு சொல்வோம். ( பாப்தாதா கூறிவிட்டால் 15 நாட்களில் சரியாகி விடுவீர்களா) நல்லது. முதலில் சொல்லுங்கள், 15 நாட்களில் சரியாகி விடுமா? பிறகு சொல்வது சரியா? அப்படி 15 நாட்களில் மாறிவிட்டால் பாப்தாதா என்ன செய்வார் என தெரியாது. சொல்லட்டுமா அதனை? 15 நாட்களில் மாற்றம் நிகழுமா? எண்ணம் வைப்பீர்களா? நல்லது. பாண்டவர்கள் செய்வீர்களா? சொல்லட்டுமா? சொல்வது எளிது, செய்வீர்களா? செய்ய வேண்டும். (பாப்தாதா பின்னால் இருப்பவர்களிடம் தாய்மார்களிடம், ஆசிரியர்களிடம், இரட்டை அயல் நாட்டவரிடம் ஆக அனைவரிடமும் கேட்கின்றார். அனை வரும் கை அசைத்தார்கள்.) நன்றாக கை உயர்த்துகின்றீர்கள். இரட்டை அயல் நாட்டு குழந்தைகள் மூன்று குழுவாக உள்ளீர்களா? (அக நோக்கு முகம், ஆனந்தம், சக்தி) நல்லது. அந்தர்முகி (அகநோக்கு முகம்) குழு கை உயர்த்துங்கள். அந்தர்முகி குழுவில் சிலரே உள்ளனர். அடுத்த குழு ஆனந்தம் நல்லது. ஆனந்தம் குழுவினர் எழுந்து நில்லுங்கள். சதா அனந்தமா? ஆனந்தம் என்பதன் பொருள் என்ன? சதா ஆனந்தமாக இருப்பவர்கள். மூன்றாவது குழு சக்தி சக்திசாலியாக இருக்கும் குழு அல்லவா? நன்றாக பெயர் வைத்துள்ளீர் கள். ஆரம்பத்தில் பட்டி நடைபெற்றது. அப்போது உங்களுடைய குழுவிற்கு என்ன பெயர் இருந்தது? (டிவைன் யுனிட்டி, மனோகர் பார்ட்டி, சப்ரீம் பார்ட்டி) நல்ல பெயர் அல்லவா? இதுவும் நல்ல குழுவாக உள்ளது. பெயர் நினைவிருந்தால் பெயருடன் செயலும் நினைவில் இருக்கும். நல்லது. இரட்டை அயல் நாட்டு குமார்கள் எழுந்து நில்லுங்கள். நல்லது. குமாரர்களின் குழு நன்றாக செய்துள்ளீர்கள். பாப்தாதா இரட்டை அயல் நாட்டவரின் புத்தாண்டு சேவை செய்திகளை மிக நன்றாக கேட்டார். பாப்தாதா உளப்பூர்வமாக வாழ்த்துக் களை வழங்கியப் படியே அனைத்து குழுவிற்கும் இன்றைய விசயத்தை கோடிட்டு காண்பிக்கச் செய்தார். அதனை நினைவூட்டவும் செய்கின்றார்.

இரட்டை அயல் நாட்டு ஆசிரியர்கள் அதிகம். ஆசிரியர் (சமர்பண சகோதரிகள்) ஆவது மிக மிக உயர்ந்த பாக்கியத்தின் அடையாளம். ஏனெனில் பாப்தாதா ஆசிரியர்ளை குருபாயாக பார்க்கின்றார். அந்தளவு மதிப்புடன் பார்க்கின்றார். ஏனெனில் பாபாவின் ஆசனத்தில் அமர் கின்றீர்கள். ஆசிரியர்களுக்கு இந்த உரிமை கிடைக்கின்றது. குருவின் ஆசனமே இந்த முரளியின் ஆசனம். முரளியை கையாளுவது பிறகு கூறுவது. கூறுவது மட்டுமின்றி முரளியை தன்னுள் கடைபிடிப்பது, ஆசிரியர்களுக்கு பாப்தாதா குருபாய் ஆசனத்தை கொடுத்துள்ளார், அயல் நாடுகளில் மிக விரைவாகவே ஆசனத்தில் அமர்ந்து விடுகின்றார்கள். பாப்தாதா மகிழ்கின்றார். பொறுப்பெனும் கிரீடம் அணிந்து கொள்வது, தைரியம் வைப்பது இது சாதாரண விசயம் அல்ல. குருபாய் என்றாலே பாப்சமான அனைவருமே பாப்சமான் (பாபாவிற்கு சமமாக) ஆகியே தீர வேண்டும். இருப்பினும் ஆசிரியர்கள் விசேஷமாக பொறுப் பெனும் கிரீடம் வைத்தவர்கள். ஆசிரியர்களின் குழுவைப் பார்க்க பாப்தாதாவிற்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் முக்கிய வார்த்தை நிரந்தர கவனம் நல்லது. பாரதத்தின் ஆசிரியர்கள் எழுந்திரியுங்கள். பாரதத்தின் ஆசிரியர்களும் குறைந்தவர்கள் அல்ல. கேட்டீர்களா, ஆசிரியர் களை பாபா எந்தப் பார்வையில் பார்க்கின்றார். வகுப்பில் முரளி வாசிப்பதற்கான சீட்... மிகவும் பாக்கியசாலிகளே! மிகமிக அதிர்ஷ்டமே. ஏனெனில் நேரில் நிமித்தமாக இருப்பது யார்? நல்லது. தாதிகள் ஒருவர் அயல் நாட்டிலும் ஒருவர் மதுபனிலும் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு சென்டரிலும் நேரில் நிமித்தமாக இருப்பது ஆசிரியர்கள், பாண்டவர்களும் நிமித்தமாக உள்ளனர். ஆசிரியர்கள் சகோதரிகள் மட்டும் என்பதல்ல, சகோதரர்களும் உள்ளனர். அவர்களை மூத்த சகோதரர்கள் என்பீர்கள் அல்லவா! பாண்டவர்களும் மிகவும் அவசியமே. சக்திகளும், பாண்டவர்களும் இணைந்தே ஆரம்பத் திலிருந்து காரியங்கள் நடைபெறுகின்றது. பாண்டவர்கள் குறைவே யென்றாலும் விஷ்வ கிசோர் இருந்தார். ஆனந்த கிசோர், விஷ்வ கிஷோர் ஆரம்பத் தில் இருந்தார்கள். ஆக பாண்டவர்களும் உடனிருந்தனர். ஆயினும் பெரும்பாலான ஆசிரியர் களே (சகோதரிகள்) அதிகம் நிமித்தமாயினர். பாண்டவர்கள் சகோதரிகளுக்கு முதுகெலும்பாக உள்ளீர்கள். ஒவ்வொருவருக்கும் நடிப்பு. அயல் நாட்டின் விசேஷம் யாதெனில் பாண்டவர்களும் ஆசிரியர் ஆகின்றனர். பாரதத்தில் குறைவே. ஆசிரியர் என்றாலே எப்போதும் பாப்தாதா கூறுவார் தனது முகத்தின் மூலம் பாபாவை வெளிப்படுத்துபவர்கள். முகத்தின் மூலம் நாளை எதிர் காலத்தை தெளிவாக காண்பிப்பார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் தானே? உங்களை பார்த்தால் பாபாவின் பாலனை அனுபவம் ஆக வேண்டும். பரமாத்மாவின் குணம், சக்திகள் உங்கள் முகத்தில், சொல்லில், செயலில் தென்படவேண்டும். அப்படிப்பட்ட ஆசிரிர்கள் தானே! எங்களுக்கு எந்த ஆசிரியரும் சொல்லவில்லையே என்று கூறக்கூடாது. பாப்தாதா ஆசிரிர்கள் முகத்தின் மூலம் அனுபவம் செய்வித்தார். தந்தையுடன் ஒவ்வொருவரையும் இணைப்பது. இது ஆசிரியர்களின் செயலாகும். ஒவ்வொருவரின் இதயத்திலும் எந்த நேரமும் பாபா எனும் சொல்ல வெளிப்பட வேண்டும்.

இந்த குழு நன்றாக அமைத்துள்ளீர்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் புத்துணர்ச்சி கிடைப்பதால் நன்கு அனுபவம் செய்கின்றனர். குழுவில் நல்ல பயன் வெளிப்பட்டுள்ளது. நல்லது.

நாலாபுறமும் பிறந்த நாளை உற்சவமாக கொண்டாடும் சிரேஷ்ட பிராமண ஆத்மாக் களுக்கு, எப்போதுமே அலௌகீக பிறவியின் அலௌகீக திவ்ய செயலின் செய்யும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு என்றுமே ஒரு தந்தையன்றி வேறு யாருமில்லை என்ற ஒருவர் பெயரையே (ஏக்ணாமி) உச்சரித்து சர்வ பொக்கிஷங்களையும் சிக்னமாக (ஏக்கானாமி) செயல்படும் அவதார மான குழந்தைகளுக்கு சதா ஒவ்வொரு வரதானத்தையும் ஆஸ்தியையும் வாழ்வின் மூலம் வெளிப்படுத்தும் ஊக்கம், உற்சாகம் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அலௌகீ பிறந்தாளின் வாழ்த்துக்களுடன் இணைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாதிமார்களுடன்: தாதி அவர்கள் பாப்தாதாவிற்கு பிறந்தநாளுக்கான மிக அதிகமாக வாழ்த்துக்களை வழங்கினர்.

இன்றைய மாலையில் நீங்கள் அனைவரும் வந்தீர்கள், மாலையை நினைத்தீர்களா! ஆதியில் ஸ்தாபனை யின் ரத்தினம் - அதில் நீங்கள் மாலையின் மணியானீர்கள். நல்லது. ஸ்தாபனை யிலும் நிமித்தமானீர்கள், பாலனையிலும் நிமித்தமானீர்கள், இப்போது தந்தையுடன் சேர்ந்தே செல்வதிலும் நிமித்தமாவீர்கள். கதவை பாப்தாதா மட்டும் தனியே திறப்பாரா என்ன? (இல்லை). உங்களுக்காகவே காத்திருக்கின்றார். வாருங்கள் கதவை திறப்போம். ஆனால் சேவையை பூர்த்தி செய்ய வேண்டுமே. ஏனெனில் நேரில் நீங்களே நிமித்தமாக்கப் பட்டுள்ளீர்கள். நேரில் உள்ள நீங்கள் செயலை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போதெல்லாம் எல்லோரும் யாரை பார்க்கின்றார்கள்? அனைவரது பார்வையும் எங்கே செல்கினற்து? உங்கள் மீது தான் செல்கிறது. நிமித்தமானவர்கள் மீதே அனைவரின் பார்வையும் செல்கிறது. பாபாவின் பார்வையில் அனைவருமே அமர்ந்துள்ளீர்கள். ஏனெனில் பாபாவின் பார்வை சிறியதல்லவே! எல்லை யில்லாதது. ஆகவே அனைவரும் பார்வையில் உள்ளீர்கள். அனைவருமே கண்மணி ரத்தினங்களே! மிக்க நல்லது.

ஒவ்வொருவரும் அவரவது நடிப்பை நடிக்கின்றீர்கள். நடித்தே ஆக வேண்டும். நாடகத்தில் கட்டுப்பட்டவர்கள். ஆனந்தம் வருகிறதல்லவா! மிக நல்லது.

வரதானம்:
அற்பகால ஆதரவுகளை ஒதுக்கி விட்டு ஒரு தந்தையை ஆதரவென ஏற்றுக் கொண்டு யதார்த்தமான முயற்சியாளர் ஆகுக!

ஒருமுறை செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது முயற்சியாகாது. முயற்சியை தனது ஆதரவாக அமைத்துக் கொள்க. உண்மையில் புருஷார்த் என்பது புருஷ்+ரத் புருஷ் என்பது ஆத்மா. இந்த ரதத்தின் மூலமாக செயலை செய்பவன். இப்போது அற்பகால ஆதரவை ஒதுக்கி விடுங்கள். சில குழந்தைகள் தந்தையை விடுத்து எல்லைக்குட்பட்ட விசயங்களை ஆதரவாக்கிக் கொள்கின்றனர். தனது சுபாவம், சம்ஸ்காரம், இன்னல்கள் யாவும் அற்பகால ஆதரவு தருவது போன்று தென்படும். ஏமாற்றமே மிஞ்சும். ஒரு தந்தையின் ஆதரவே நிழல் குடையாகும்.

சுலோகன்:
மாயையினை தொலைவிலிருக்கும் போதே கண்டறிந்து தன்னை சக்திசாலியாக மாற்றுபவரே ஞானம் நிறைந்தவர் ஆகின்றார்.