13-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தேவதைகளாக
ஆக வேண்டும், ஆகையால் மாயையின் அவகுணங்களை தியாகம் செய்யுங்கள்.
கோபப்படுவது, அடிப்பது, தொந்தரவு செய்வது, தீய காரியங்கள்
செய்வது, திருடுவது போன்ற அனைத்தும் மகாபாவம் ஆகும்.
கேள்வி:
இந்த ஞானத்தில் எந்த குழந்தைகள்
வேகமாக செல்ல முடியும்? யாருக்கு நஷ்டம் ஏற்படும்?
பதில்:
யாருக்கு தனது வரவு செலவு கணக்கு
வைப்பதற்கு வருகிறதோ அவர்கள் இந்த ஞான மார்க்கத்தில் தீவிர
வேகத்தில் செல்ல முடியும். யார் ஆத்ம அபிமானியாக இல்லையோ அவர்
களுக்கு நஷ்டம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வரவு செலவு கணக்கு
வைக்கும் பழக்கம் இருக்கிறது, அவர்கள் இங்கும் வேகமாக செல்ல
முடியும்.
பாடல்:
முகத்தை திருப்பி பார் மனிதா
........
ஓம் சாந்தி.
ஆன்மீக நடிப்பு நடிக்கும் குழந்தைகளுக்காக தந்தை புரிய
வைக்கின்றார். ஏனெனில் ஆத்மா தான் எல்லையற்ற நாடகத்தில் நடிப்பு
நடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் மனிதர் களுக்கானது அல்லவா!
குழந்தைகள் இந்த நேரத்தில் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
வேத சாஸ்திரங்கள் படிக்கலாம், சிவ பூஜை செய்யலாம், இருந்தாலும்
இதன் மூலம் என்னை யாரும் அடைய முடியாது என்று தந்தை
கூறுகின்றார். ஏனெனில் பக்தி என்றாலே கீழே இறங்கும் கலை ஆகும்.
ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது எனில் அவசியம் வேறு எதன்
மூலமாவாது கீழே இறங்கவும் வேண்டும்.. இது ஒரு விளையாட்டாகும்.
இதனை யாரும் அறியவில்லை. சிவ லிங்கத்தை பூஜை செய்கின்ற பொழுது
அவரை பிரம்மா என்று கூறமாட்டார்கள். அவ்வாறெனில் யாரை பூஜை
செய்கிறீர்களோ அவர் யார்? அவரை ஈஸ்வரன் என்று புரிந்துக் கொண்டு
பூஜை செய்கின்றனர். நீங்கள் முதன் முத-ல் பக்தி செய்ய
ஆரம்பித்த பொழுது வைரத்தினால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கினீர்கள்.
இப்பொழுது ஏழைகளாக ஆகிவிட்டீர்கள், அதனால் தான் கல்லினால்
உருவாக்கு கிறீர்கள். அந்த கால கட்டத்தில் வைர லிங்கம் 4-5
ஆயிரம் இருந்திருக்கும். இந்த கால கட்டத்தில் அதன் விலை 5-7
லட்சமாகும். அப்படிப்பட்ட வைரம் இப்பொழுது கிடைப் பதும்
கடினமாகும். கல் புத்தியாக ஆகி விட்டீர்கள், அதனால் தான் ஞானம்
இல்லாததால் கல்லை பூஜை செய்கிறார்கள். ஞானம் இருப்பதால் நீங்கள்
பூஜை செய்வது கிடையாது. சைத்தன்யமானவர் எதிரில் இருக்கின்றார்,
அவரைத் தான் நீங்கள் நினைவு செய் கிறீர்கள். நினைவின் மூலம்
பாவங்கள் அழிந்து விடும் என்பதை அறிவீர்கள். கீதையிலும்
கூறப்பட்டிருக்கிறது - ஹே குழந்தை களே! பிராணி (உயிர் வாழ்வன)
என்று ஆத்மாக்களுக்கு கூறப்படுகிறது. பிராணி (உயிர் அல்லது
மூச்சு) நீங்கி விட்டால் பிணங்களாக ஆகிவிடுகிறீர்கள். ஆத்மா
வெளியேறி விடுகிறது. ஆத்மா அழிவற்ற தாகும். ஆத்மா சரீரத்தில்
பிரவேசம் செய்கின்ற பொழுது அது சைத்தன்யமாக இருக்கிறது. தந்தை
கூறுகின்றார்- ஹே ஆத்மாக்களே! எந்த அளவு தெய்வீக குணங்களை தாரணை
செய்திருக்கிறேன்? எந்த விகாரமும் கிடையாது தானே? திருடுவது
போன்ற எந்த அவ குணங்களும் கிடையாது தானே? என்று தனக்குள்
சோதியுங்கள். அசுர காரியங்கள் செய்தால் கீழே விழுந்து
விடுவீர்கள். அந்த அளவிற்கு உயர்ந்த நிலை அடைய முடியாது. கெட்ட
பழக்கங்களை அவசியம் நீக்க வேண்டும். தேவதைகள் ஒருபொழுதும்
யாரிடத்திலும் கோபப்படமாட்டார்கள். இங்கு அசுரர்களின் மூலம்
எவ்வளவு அடி வாங்குகிறீர்கள். ஏனெனில் நீங்கள் தெய்வீக
குலத்தைச் சார்ந்தவர்களாக ஆகின்றீர்கள் எனும் பொழுது மாயை
அந்தளவு எதிரியாக ஆகிவிடுகிறது! மாயையின் அவகுணங்கள் வேலை
செய்ய ஆரம்பித்து விடுகிறது. அடிப்பது, தொந்தரவு செய்வது, தீய
காரியங்கள் செய்வது போன்ற அனைத்தும் பாவமாகும். குழந்தைகளாகிய
நீங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். திருடுவது
போன்றவைகள் மிகப் பெரிய பாவமாகும். பாபா, எனக்கு உங்களைத் தவிர
எனக்கு வேறு யாருமில்லை, நாங்கள் உங்களை மட்டுமே நினைவு செய்
வோம் என்று நீங்கள் தந்தையிடம் உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள்.
பக்தி மார்க்கத்தில் பாடு கின்றனர், ஆனால் நினைவின் மூலம் என்ன
கிடைக்கும்? என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தந்தையை
அறியவேயில்லை. பெயர், உருவத்திலிருந்து விடுபட்டவர் என்று
ஒருபுறம் கூறுகின்றனர், மற்றொருபுறம் லிங்க பூஜை செய்கின்றனர்.
நீங்கள் நல்ல முறையில் புரிந்து கொண்டு பிறகு புரிய வைக்க
வேண்டும். மகான் ஆத்மா என்று யாரைக் கூறுவது? என்பதையும்
நீங்கள் தீர்மானியுங்கள். சிறு குழந்தையாக, சொர்க்கத்தின்
இளவரசராக இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் மகான் ஆத்மாவா? அல்லது
இன்றைய நாட்களின் கலியுக மனிதர் களா? அவர் விகாரத்தின் மூலம்
பிறப்பது கிடையாது அல்லவா! அது விகாரமற்ற உலகமாகும். இது விகார
உலகமாகும். விகாரமற்றவர்களுக்கு பல பட்டங்களைக் கொடுக்க
முடியும். விகாரிகளுக்கு என்ன பட்டம் கொடுக்க முடியும்?
சிரேஷ்டமானவர்களாக ஒரே ஒரு தந்தை தான் ஆக்குகின்றார். அவர்
அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். மற்ற அனைத்து
மனிதர்களும் நடிகர்கள் ஆவர், ஆக அவசியம் நடிப்பதற்கு வந்தே ஆக
வேண்டும். சத்யுகம் என்பது சிரேஷ்டமான மனிதர் களின் உலகமாகும்.
மிருகம் போன்ற அனைத்தும் கூட சிரேஷ்டமாக இருக்கும். அங்கு மாயை
இராவணன் கிடையாது. அங்கு தமோ குண மிருகங்கள் இருக்காது. மயில்
விகாரத்தின் மூலம் குழந்தை பெற்றெப்படுப்பது கிடையாது என்பதை
நீங்கள் அறிவீர்கள். ஆண் மயில் கீழே சிந்தும் கண்ணீரை பெண்
மயில் பருகி விடும். தேசியப் பறவை என்று கூறுகிறோம்.
சத்யுகத்திலும் விகாரத்தின் பெயர் கிடையாது. சத்யுகத்தின் முதல்
இளவரசராகிய ஸ்ரீகிருஷ்ணரின் தலையின் மீது மயில் இறகை
காண்பிக்கின்றனர். ஏதாவது ரகசியம் இருக்கும் அல்லவா! ஆக இவை
யனைத்து விசயங்களையும் தந்தை தெளிவுப்படுத்தி புரிய
வைக்கின்றார். அங்கு குழந்தை எப்படி பிறக்கும்? என்பதை நீங்கள்
அறிவீர்கள். அங்கு விகாரம் இருக்காது. உங்களை தேவதைகளாக
ஆக்குகிறேன் எனில் நீங்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பின்றி உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியாது.
எவ்வாறு உங்களது ஆத்மா பிந்துவாக இருக்கிறதோ அதே போன்று
தந்தையும் பிந்துவாக இருக்கின்றார். இதில் குழப்பமடைய வேண்டிய
அவசியம் கிடையாது. நான் பார்க்க வேண்டும் என்று சிலர்
கூறுகின்றனர். பார்க்கக் முடிகின்றவர்களை நீங்கள் அதிகமாக பூஜை
செய்து விட்டீர் கள் என்று தந்தை கூறுகின்றார். எந்த லாபமும்
ஏற்படவில்லை. இப்பொழுது நான் யதார்த்த முறையில் நான்
உங்களுக்குப் புரிய வைக்கிறேன். எனக்குள் நடிப்பின் முழு
பாகமும் நிறைந்திருக்கிறது. பரம் ஆத்மா (சுப்ரீம் ஆத்மா) அல்லவா!
சுப்ரீம் தந்தை யாகவும் இருக்கின்றார். எந்த குழந்தையும்
தங்களது லௌகீகத் தந்தையை இவ்வாறு கூறமாட்டார்கள். ஒருவர்
மட்டுமே கூறப்படுகின்றார். அப்பா என்று கூறுவதற்கு சந்நியாசி
களுக்கு குழந்தைகள் கிடையாது. இவர் அனைத்து ஆத்மாக்களுக்கும்
தந்தை ஆவார், ஆஸ்தி கொடுக்கின்றார். அவர்களுடையது இல்லற ஆசிரமம்
கிடையாது. நீங்கள் தான் 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள் என்று
தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார், முதன் முதலில் நீங்கள் சதோ
பிரதானமாக இருந்தீர்கள், பிறகு கீழே இறங்கி வந்தீர்கள்.
இப்பொழுது யாரும் தங்களை சுப்ரீம் என்று கூறிக் கொள்ள முடியாது.
இப்பொழுது தன்னை கீழானவன் என்று நினைக்கின்றனர். தந்தை அடிக்கடி
புரிய வைக்கின்றார் - எனக்குள் எந்த விகாரமும் கிடையாது தானே?
என்று தனக்குள் சோதியுங்கள். இரவில் தினமும் தனது கணக்கைப்
பாருங்கள். வியாபாரிகள் எப்பொழுதும் தங்களது கணக்கைப்
பார்ப்பார்கள். அரசாங்க ஊழியர்கள் கணக்கைப் பார்ப்பது கிடையாது.
அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைக் கிறது. இந்த ஞான
மார்க்கத்திலும் வியாபாரிகள் வேகமாக முன்னேறிச் செல்கின்றனர்,
படித்த ஆபிசர்கள் அந்த அளவிற்கு கிடையாது. வியாபாரத்தில் இன்று
50 ரூபாய் சம்பாதிப்பார்கள், நாளை 60 ரூபாய் சம்பாதிப்போம்.
சில நேரங்களில் நஷ்டமும் ஏற்பட்டு விடும். அரசாங்க
ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இருக்கும். இந்த ஆன்மீக
வருமானத்திலும் ஒருவேளை ஆத்ம அபிமானியாக இல்லையெனில் நஷ்டம்
ஏற்பட்டு விடும். தாய்மார்கள் வியாபாரம் செய்வது கிடையாது.
அவர்களுக்கு மிகவும் எளிதாகும். கன்னிகைகளுக்கும் எளிதாகும்.
ஏனெனில் தாய்மார் கள் ஏணியில் இறங்க வேண்டி யிருக்கிறது. யார்
அந்த அளவிற்கு முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் மகிமை
பாடப்படுகிறது. கன்னிகைகள் விகாரத்தில் செல்லவேயில்லை எனும்
பொழுது விடுவதற்கு என்ன இருக்கிறது! ஆண்களுக்கு உழைப்பு
தேவைப்படுகிறது. குடும்பத்தை பாதுகாக்க வேண்டி யிருக்கிறது.
ஏணியில் ஏறியவர்கள் முழுமையாக இறங்க வேண்டியிருக்கிறது.
அடிக்கடி மாயை அடிகொடுத்து கீழே தள்ளி விடுகிறது. இப்பொழுது
நீங்கள் பி.கு ஆகியிருக்கிறீர்கள். குமாரிகள் தூய்மையாகவே
இருப்பர். அனைத்தையும் விட அதிகமான அன்பு பதியின் மீது
வைத்திருக்கும் அன்பாகும். நீங்கள் பதிகளுக்கெல்லாம் பதியை (பரமாத்மா)
நினைவு செய்ய வேண்டும். மற்ற அனைத்தையும் மறந்து விட வேண்டும்.
தாய், தந்தைக்கு குழந்தைகளின் மீது பற்று இருக்கும். குழந்தை
என்றாலே ஒன்றும் அறியாதவர். திருமணத்திற்குப் பிறகு பற்று
ஆரம்பமாகி விடுகிறது. முதலில் மனைவி பிரிய மானவராக தோன்றுவார்,
பிறகு விகாரத்தில் செல்லும் ஏணி ஆரம்பமாகி விடுகிறது. குமாரி
விகாரமற்றவராக இருக்கின்ற பொழுது பூஜிக்கப்படுகின்றார். உங்களது
பெயர் பி.கு ஆகும். நீங்கள் மகிமைக்குரியவர்களாகி பிறகு
பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்கள். தந்தை தான் உங்களது
ஆசிரியராகவும் இருக்கின்றார். ஆக நான் மாணவன் என்ற போதை குழந்தை
களாகிய உங்களிடம் இருக்க வேண்டும். பகவான் அவசியம் பகவான்,
பகவதிகளாகத் தான் ஆக்குவார். புரிய வைப்பதற் காகத் தான் பகவான்
ஒருவர் என்று கூறுகின்றார். மற்ற அனைவரும் சகோதர சகோதரர்கள்.
வேறு எந்த தொடர்பும் கிடையாது. பிரஜாபிதா பிரம்மா வின் மூலம்
படைப்புகள் படைக்கப்படுகின்றனர், பிறகு வளர்ச்சி ஏற்படுகிறது.
ஆத்மாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று கூறுவது கிடையாது.
மனிதர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகிறது. ஆத்மாக்களின்
எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதாகும். பலர் வந்து கொண்டே
இருக்கின்றனர். எதுவரை அங்கு இருப்பார்களோ வந்து கொண்டே
இருப்பார் கள். மரம் வளர்ந்து கொண்டே இருக்கும். காய்ந்து
விடும் என்று கூற முடியாது. இது ஆல மரத்துடன் ஒப்பிடப்படுகிறது.
அஸ்திவாரம் கிடையவே கிடையாது. மற்றபடி முழு மரமும் நின்று
கொண்டிருக்கிறது. உங்களுடையதும் அவ்வாறு தான் இருக்கிறது.
அஸ்திவாரம் கிடையாது. ஏதாவது அடையாளங்கள் உள்ளன. இன்னமும் கூட
கோவில்கள் கட்டிக் கொண்டே இருக் கின்றனர். தேவதைகளின் இராஜ்யம்
எப்போது இருந்தது? பிறகு எங்கு சென்றது? என்று மனிதர் களுக்குத்
தெரியாது. இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களிடத்தில் மட்டுமே
இருக்கிறது. மனிதர்களுக்கு பரமாத்மாவின் சொரூபம் புள்ளி என்று
தெரியாது. அவர் அகண்ட ஜோதி வடிவமானவர் என்று கீதையில்
எழுதப்பட்டுள்ளது. முன்பு பாவனையைப் பொருத்து பலருக்கு
சாட்சாத்காரம் ஏற்பட்டது. மிகவும் பிரகாசமான செந்நிறம் ஆகி
விடுகிறது. போதும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (கண்
கூசுகிறது) என்று கூறுகிறார்கள். உண்மையில் அது
சாட்சாத்காரமாகும். சாட்சாத்காரத்தினால் எந்த நன்மையும்
கிடையாது என்று தந்தை கூறுகின்றார். இங்கு முக்கியமானது நினைவு
யாத்திரை யாகும். எவ்வாறு பாதரசம் நழுவி விடுகிறது அல்லவா!
நினைவும் அடிக்கடி வழுக்கி (மறந்து) விடுகிறது. தந்தையை அதிகம்
நினைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மற்ற எண்ணங்கள் வந்து
விடுகின்றன. இதில் தான் உங்களுக்கு போட்டி இருக்கிறது. உடனேயே
பாவங்கள் அழிந்து விடும் என்பது கிடையாது. கால நேரம்
தேவைப்படுகிறது. கர்மாதீத் நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு இந்த
சரீரமே இருக்காது. ஆனால் இப்பொழுது யாரும் கர்மாதீத் நிலை அடைய
முடியாது. பிறகு அவர்களுக்கு சத்யுக சரீரம் தேவை. ஆக இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.
என் மூலம் எந்த கெட்ட காரியமும் ஏற்படுவதில்லை தானே? என்று
தனக்குள் பார்த்துக் கொண்டே இருங்கள். கணக்கு அவசியம் வைக்க
வேண்டும். இப்படிப்பட்ட வியாபாரி உடனேயே செல்வந்தர்களாக ஆகி
விட முடியும்.
தந்தையிடத்தில் என்ன ஞானம் இருக்கிறதோ அதை கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். எனது ஆத்மாவிற்குள் இந்த ஞானம்
நிறைந்திருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். கல்பத்திற்கு
முன்பு எந்த ஞானம் கொடுத்திருந் தேனோ அதையே உங்களுக்குக்
கூறுவேன். குழந்தைகளுக்குத் தான் புரிய வைப்பேன், மற்றவர்கள்
எப்படி புரிந்து கொள்ள முடியும்! நீங்கள் இந்த சிருஷ்டி
சக்கரத்தை அறிந்து கொண்டீர்கள். இதில் அனைத்து நடிகர்களின்
பாகமும் பதிவாகியிருக்கிறது. சிறிதும் மாற்ற முடியாது.
இதிலிருந்து யாரும் விடுபடவும் முடியாது. ஆம், சிறிது
காலத்திற்கு முக்தி கிடைக்கும். நீங்கள் முழு சக்கரத்திலும்
வரக் கூடியவர்கள். 84 பிறவிகள் எடுக் கிறீர்கள். மற்ற அனைவரும்
தமது வீட்டில் (முக்தி தாமத்தில்) இருப்பார்கள். பிறகு
கடைசியில் வருவார்கள். மோட்சத்தை விரும்புபவர்கள் இங்கு வரவே
மாட்டார்கள். அவர்கள் கடைசிக்கு சென்று விடுவார்கள். ஒரு
பொழுதும் ஞானம் கேட்கவே மாட்டார்கள். கொசுக் கூட்டம் போன்று
வருவார் கள், பிறகு சென்று விடுவார்கள். நாடகப்படி நீங்கள்
படிக்கிறீர்கள். பாபா 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போல் இவ்வாறு
இராஜயோகம் கற்பித்திருந்தார் என்பதை அறிவீர்கள். சிவபாபா
இவ்வாறு கூறுகின்றார் என்று நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய
வைக்கிறீர்கள். நாம் எவ்வளவு உயர்ந்தவர் களாக இருந்தோம்,
இப்பொழுது எவ்வளவு கீழானவர்களாக ஆகிவிட்டோம் என்பதை இப்பொழுது
நீங்கள் அறிவீர்கள். பிறகு தந்தை மீண்டும் உயர்ந்தவர்களாக
ஆக்குகின்றார். ஆக அந்த மாதிரி முயற்சி செய்ய வேண்டும் அல்லவா!
இங்கு நீங்கள் புத்துணர்வு பெறு வதற்காக வருகிறீர்கள். இதன்
பெயரே மதுவனம் ஆகும். உங்களது கல்கத்தா அல்லது மும்பையில் முரளி
நடத்தப்படுவது கிடையாது. மதுவனத்தில் தான் முரளி (புல்லாங்குழல்)
இசைக்கப்படுகிறது. முரளி கேட்பதற்காக, புத்துணர்வு பெறுவதற்காக
தந்தையிடத்தில் வர வேண்டியிருக்கிறது. புதுப்புது கருத்துகள்
உருவாகிக் கொண்டே இருக்கிறது, எதிரில் கேட்கும் பொழுது
உணர்கிறீர்கள், அதிக வேறுபாடு இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல
பல காட்சிகளைப் பார்ப்பீர்கள். பாபா முன் கூட்டியே கூறிவிட்டால்
சுவை நீங்கி விடும். சிறிது சிறிதாக வெளிப்பட்டுக் கொண்டே
இருக்கும். ஒரு விநாடி போன்று மற்றொன்று இருக்காது. ஆன்மீக சேவை
செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார் எனில் குழந்தைகளின்
கடமையும் ஆன்மீக சேவை செய்வதாகும். குறைந்தது இந்த விசயத்தை
கூறுங்கள் - தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மையாக
ஆகுங்கள். தூய்மையில் தான் தோல்வியடைகின்றனர். ஏனெனில் நினைவு
செய்வது கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக் குள் அதிக குஷி
ஏற்பட வேண்டும். யாரை இதுவரை அறியாமல் இருந்தோமோ அந்த எல்லை
யற்ற தந்தையின் எதிரில் நான் அமர்ந்திருக்கிறேன். சிவபாபா தான்
ஞானக் கடலாகவும் இருக் கின்றார். தேகதாரிகளிடமிருந்து
புத்தியின் தொடர்பை நீக்கி விட வேண்டும். இது சிவபாபாவின்
ரதமாகும். இவருக்கு மரியாதை கொடுக்கவில்லையெனில் தர்மராஜரின்
மூலம் அதிக தண்டனை அடைய வேண்டியிருக்கும். பெரியவர்களுக்கு
மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா! ஆதிதேவனுக்கு எவ்வளவு மரியாதை
செலுத்து கின்றனர் ஜட சிலைகளுக்கு இவ்வளவு மரியாதை இருக்கும்
பொழுது சைத்தன்ய மானவருக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்! நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனக்குள் சோதனை செய்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய
வேண்டும். தீய பழக்கங்களை நீக்கிவிட வேண்டும். பாபா, நான்
ஒருபொழுதும் தீய காரியங்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி
செய்ய வேண்டும்.
2) கர்மாதீத் நிலை அடைவதற்காக நினைவிற்கான போட்டி போட வேண்டும்.
ஆன்மீக சேவைக்கு தயாராக இருக்க வேண்டும். பெரியவர்கள் மீது
மரியாதை வைக்க வேண்டும்.
வரதானம்:
தந்தையை பின்பற்றுக எனும் பாடத்தின் மூலம் கடினத்தையும்
சுலபமாக்கிவிடும் தீவிர முயற்சியாளர் ஆகுக !
கடினத்தை சுலபமாக்கவும், இறுதி முயற்சியில் வெற்றி பெறவும்
முதல் பாடம் தந்தையை பின்பற்றுக இந்த முதல் பாடமே இறுதி நிலையை
அருகே கொண்டு வரும். இந்த பாடத்தால் தவறில்லாது, ஏக்ரஸ் மற்றும்
தீவிர முயற்சியாளர் ஆவீர்கள். ஏனெனில் எந்த ஒரு விசயத்திலும்
பின்பற்றுவதற்கு பதிலாக தன் புத்தியை பயன்படுத்தும் பொழுதே
கடினமாகிறது. இதனால் தனது எண்ணங்களெனும் வலையில் தானே சிக்கிக்
கொள்வர். பிறகு அதிலிருந்து விடுபட நேரமும் சக்தியும்
விரயமாகின்றது. மாறாக பின்பற்று சென்றால் நேரமும் சக்தியும்
மிதமாகும், சேமிப் பாகும்.
சுலோகன்:
உண்மையையும் தூய்மையினையும் கையாள தனது சுபாவத்தை சரளமாக்குக.
அவ்யக்த சமிக்ஞை : தனக்காகவும், பிறருக்காகவும் மனதின் மூலம்
யோக சக்திகளை பயன்படுத்துங்கள்.
எந்தளவிற்கு தன்னை மனதின் சேவையில் ஈடுபடுத்துவீர்களோ அந்தளவு
சுலபமாகவே மாயாவை வெற்றி கொள்வீர்கள். தனக்காக மட்டும் நன்மை
நினைப்பதல்லாமல் பிறருக்கும் நல்லாசை மற்றும் நல் விருப்பங்கள்
மூலம் மாற்றியமைக்கும் சேவை செய்யுங்கள். நல்ல பாவனையும்
ஞானமும், அன்பும் யோகமும் இரண்டும் சமநிலை வேண்டும். கல்யாணகாரி
ஆகி விட்டீர்கள் இப்போது அகிலத்திற்கே நன்மை செய்பவராகுங்கள்.