14-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகி
தந்தையை நினைவு செய்யுங்கள், எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள்
வாக்கு வாதம் செய்யக் கூடாது என்று உங்களுக்கு ஸ்ரீமத்
கிடைத்துள்ளது
கேள்வி:
புத்தியோகம் தூய்மையாகி பாபாவிடம்
ஈடுபட்டிருப்பதற்காக எந்த ஒரு யுக்தி உருவாக்கப்பட்டுள்ளது?
பதில்:
7 நாள் பட்டி. யாராவது புதிதாக
வருகிறார்கள் என்றால் அவர்களை 7 நாள் பட்டியில் அமர்த்தி
வையுங்கள். இதன் மூலம் அவர்களின் புத்தியிலுள்ள குப்பை அகன்று
விடும். மேலும் குப்தமான (மறைமுக) தந்தை, குப்தமான படிப்பு,
குப்தமான ஆஸ்தி பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படியே சும்மா
அமர்ந்து விட்டார்கள் என்றால் குழம்பி விடுவார்கள். எதையும்
புரிந்து கொள்ள மாட்டார்கள்.
பாடல்:
விழித்தெழுங்கள், பிரியதர்சினிகளே,
விழித்தெழுங்கள்..........
ஓம் சாந்தி.
குழந்தைகளை ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக ஆக்குவதற்காக இதுபோன்ற
பாடல் கள் என்னென்ன உள்ளனவோ, அவற்றைச் சொல்லி, பிறகு அதன்
அர்த்தம் சொன்னால் பேச்சுத் திறமை வந்து விடும். எதுவரை
சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் புத்தியில் உள்ளது
என்பது தெரிய வரும். குழந்தைகளாகிய உங்கள் புத்தியிலோ
மேலிருந்து தொடங்கி மூலவதன், சூட்சுமவதன், ஸ்தூலவதனத்தின்
முதல்-இடை-கடையின் இரகசியம் ஜொலிக்கின்றது. பாபாவிடமும் இந்த
ஞானம் உள்ளது. அதை உங்களுக்குச் சொல்கிறார். இது முற்றிலும்
புதிய ஞானம். சாஸ்திரங்கள் முதலியவற்றில் பெயர் உள்ளது என்ற
போதிலும் அந்தப் பெயரைச் சொல்வதால் அதிலேயே ஒட்டிக் கொள்வார்கள்,
வாக்குவாதம் செய்யத் தலைப்படுவார்கள். இங்கோ முற்றிலும் எளிய
முறையில் புரிய வைக்கிறார் - பகவான் வாக்கு, என்னை நினைவு
செய்யுங்கள், நான் தான் பதித பாவனன். ஒருபோதும் கிருஷ்ணரையோ
அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கர் முதலியவர்களையோ பதீத-பாவனன்
எனச் சொல்ல மாட்டார்கள். சூட்சும வதன வாசி களையும் நீங்கள்
பதித பாவனன் எனச் சொல்வதில்லை எனும்போது ஸ்தூல வதனத்தின்
மனிதர்கள் எப்படி பதீத பாவன் ஆக முடியும்? இந்த ஞானமும் கூட
உங்கள் புத்தியில் தான் உள்ளது. சாஸ்திரங் களைப் பற்றி அதிகமாக
வாக்குவாதம் செய்வது நல்லதல்ல. அதிகமான வாத-விவாதங்கள்
ஆகிவிடும். ஒருவர் மற்றவரைத் தடியால் அடிக்கவும் தொடங்கி
விடுகின்றனர். உங்களுக்கோ மிகவும் சகஜமாகப் புரிய
வைக்கப்படுகின்றது. சாஸ்திரங்களின் விசயத்தில் அதிகமாகச்
செல்லத் தேவையில்லை. முக்கியமான விசயமே ஆத்ம அபிமானி ஆவதற்கானது.
தன்னை ஆத்மா என உணர வேண்டும், தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
இந்த ஸ்ரீமத் முக்கியமானதாகும். மற்றவை விவரமானவை. விதை எவ்வளவு
சிறியதாக உள்ளது! மற்றப்படி மரத்தின் விஸ்தாரம் உள்ளது. எப்படி
விதைக்குள் ஞானம் முழுவதும் அடங்கியுள்ளதோ, அதே போல் இந்த முழு
ஞானமும் கூட விதையில் அடங்கியுள்ளது. உங்களது புத்தியில் விதை
மற்றும் மரம் வந்து விட்டது. எவ்விதமாக நீங்கள்
அறிந்திருக்கிறீர்களோ, அதுபோல் வேறு யாரும் புரிந்து கொள்ள
இயலாது. மரத்தின் ஆயுளையே மிக நீண்டதாக எழுதி விட்டனர். பாபா
வந்து விதை மற்றும் மரம் அல்லது டிராமா சக்கரத்தின்
இரகசியத்தைப் புரிய வைக்கிறார். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி.
யாரேனும் புதியவர்கள் வருகிறார்கள், பாபா மகிமை செய்கிறார்,
சுயதரிசனச் சக்கரதாரி என்றால் யாரும் புரிந்து கொள்ள முடியாது.
அவர்களோ, தங்களைக் குழந்தைகள் என்றே புரிந்து கொள்வதில்லை.
இந்தத் தந்தையும் குப்தமாக உள்ளார். ஞானமும் குப்தமானது,
ஆஸ்தியும் குப்த மானது. புதியவர்கள் யாராவது கேட்டால் குழம்பிப்
போவார்கள். அதனால் 7 நாள் பட்டியில் அமர்த்தி வைக்கப்
படுகிறார்கள். 7 நாள் பாகவதம் அல்லது இராமாயணம் வைக்கிறார்கள்
என்றால் அது உண்மையில் இச்சமயம் 7 நாளுக்காக பட்டியில்
வைக்கப்படும் போது புத்தியில் உள்ள குப்பைகள் முழுவதும்
வெளியேறட்டும், பாபாவிடம் புத்தியோகம் ஈடுபட வேண்டும் என்று
தான். இங்குள்ள அனைவரும் நோயாளிகள். சத்யுகத்தில் இந்த நோய்கள்
இருப்பதில்லை. இது அரைக் கல்பத்தின் நோயாகும். 5 விகாரங்களின்
நோய் மிகவும் பெரியது. அங்கோ ஆத்ம அபிமானிகளாக இருப்பார்கள்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை
எடுக்கிறோம். முதலிலேயே சாட்சாத்காரம் கிடைத்து விடுகின்றது.
அகால மரணம் ஒருபோதும் நடப்பதில்லை. நீங்கள் காலனை வெற்றி
அடைகின்றீர்கள்.. காலனுக்கெல்லாம்-காலன் மகா காலன் எனச்
சொல்கின்றனர். மகா காலனுக்கும் கோவில் உள்ளது. சீக்கியர்களுக்கு
அகால தக்த் (அழியாத ஆசனம்) என்று உள்ளது. உண்மையில் அகால தக்த்
என்பது இந்தப் புருவமத்தியாகும். இதில் தான் ஆத்மா
வீற்றிருக்கின்றது. அனைத்து ஆத்மாக்களும் இந்த அகால தக்த்தில்
அமர்ந்துள்ளனர். இதை பாபா வந்து புரிய வைக்கிறார். பாபாவுக்குத்
தம்முடைய ஆசனமோ கிடையாது. அவர் வந்து இவருடைய (பிரம்மா) இந்த
ஆசனத்தை எடுத்துக் கொள்கிறார். இந்த ஆசனத்தின் மீது அமர்ந்து
குழந்தைகளாகிய உங்களை இராஜ மயிலாசனத்திற்கு உரியவர்களாக
ஆக்குகிறார். அந்த இராஜ மயிலாசனம் எப்படி இருக்கும், அதில்
இலட்சுமி- நாராயணர் வீற்றிருப்பார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்,
இராஜ சிம்மாசனமோ பாடப் பட்டுள்ளது இல்லையா?
சிந்தனை செய்ய வேண்டும், அவர் போலாநாத் பகவான் என்று ஏன்
சொல்லப் படுகிறார்? போலாநாத் பகவான் எனச் சொல்வதால் புத்தி மேலே
சென்று விடுகின்றது. சாது-சந்நியாசிகள் முதலானோர் விரலால் மேலே
சமிக்ஞை காட்டவும் செய்கின்றனர் இல்லையா, இவரை நினைவு
செய்யுங்கள் என்று? யதார்த்த ரீதியிலோ யாரும் தெரிந்து கொள்ள
முடியாது. இப்போது பதீத பாவனன் பாபா முன்னிலையில் வந்து
சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள், அப்போது உங்கள்
விகர்மங்கள் விநாசமாகி விடும், இது நிச்சயம் என்று கீதையிலும்
எழுதப் பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கீதையின் ஓர் உதாரணத்தை
வெளிப்படுத்தினால் அவர்கள் பத்தை வெளிப்படுத்து வார்கள். அதனால்
அதன் தேவை கிடையாது. யார் சாஸ்திரங்கள் முதலானவற்றைப்
படித்துள்ளனரோ அவர்கள், நாம் சண்டையிடலாம் என நினைப்பார்கள்.
குழந்தைகள் நீங்கள் இந்த சாஸ்திரங்கள் பற்றித் தெரிந்து
கொள்ளவில்லை. அதனால் நீங்கள் ஒருபோதும் அவற்றின் பெயரைக் கூட
எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை மட்டும் அவர்களுக்குச்
சொல்லுங்கள் - தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று
பகவான் சொல்கிறார். அவர் தான் பதீத-பாவனன் எனச் சொல்லப்
படுகிறார். பாடவும் செய்கின்றனர், பதீத-பாவன சீதாராம்.......
சந்நியாசி களும் கூட எங்கெங்கோ ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டே
உள்ளனர். இதுபோல் மதங்கள்-வழிமுறைகள் ஏராளமாக உள்ளன இல்லையா?
இந்தப் பாடல் எவ்வளவு அழகாக உள்ளது! டிராமா பிளான் படி
கல்ப-கல்பமாக இது போன்ற பாடல்கள் உருவாகின்றன. குழந்தைகளாகிய
உங்களுக் காகவே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இது போன்ற
நல்ல-நல்ல பாடல்கள் உள்ளன. எப்படி - கண்ணில்லாதவர்களுக்கு வழி
காட்டுங்கள் பிரபு! என்பது போல. பிரபு என்று கிருஷ்ணரைச்
சொல்லவில்லை. பிரபு அல்லது ஈஸ்வரா என்று நிராகாரைத் தான்
சொல்வார்கள். பாபா, பரமபிதா பரமாத்மா என்று இங்கே நீங்கள்
சொல்கிறீர்கள், அவரும் கூட ஆத்மா தான் இல்லையா? பக்தி
மார்க்கத்தில் மிக அதிகமாகவே சென்று விட்டுள்ளனர். இங்கோ
மிகவும் எளிமையான விசயம். தந்தை (அலஃப்) மற்றும் ஆஸ்தி (பே).
அலஃப் - அல்லா, பே - இராஜ பதவி. இவ்வளவு எளிமையான விசயம் தான்.
தந்தையை நினைவு செய்வீர்களானால் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்
ஆவீர்கள். நிச்சயமாக இந்த இலட்சுமி-நாராயணர் சொர்க்கத்தின்
எஜமானர்களாக, சம்பூர்ண நிர்விகாரிகளாக இருந்தனர். ஆக, பாபாவை
நினைவு செய்வதன் மூலம் நீங்கள் இதுபோல் சம்பூர்ணமாக ஆவீர்கள்.
எவ்வளவு ஒருவர் நினைவு செய்கிறாரோ, மற்றும் சேவை செய்கிறாரோ,
அவ்வளவு உயர்ந்த பதவியை அடைவார். அது புரிந்து கொள்ளப்படுகிறது.
பள்ளிக்கூடத்தில் நாம் குறைவாகப் படிக் கிறோம் என்று மாணவர்கள்
புரிந்து கொள்வதில்லையா என்ன? யார் முழு கவனம் செலுத்து
வதில்லையோ, பின்னடைந்து விடுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாக ஃபெயிலாகி
விடுவார்கள்.
தனக்குத் தானே புத்துணர்வளித்துக் கொள்வதற்காக ஞானத்தின்
நல்ல-நல்ல பாடல்கள் என்ன உள்ளனவோ, அவற்றைக் கேட்க வேண்டும்.
இப்படிப் பாடல்களைத் தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
யாருக்காவது எப்படி மாயாவின் நிழல் மீண்டும் படுகின்றது என்று
இதைப் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கவும் முடியும்.
சாஸ்திரங்களிலோ இந்த விசயங்கள் கிடையாது - கல்பத்தின் ஆயுள்
5000 ஆண்டுகள். பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு
பாதி-பாதி. இந்தப் பாடலும் கூட யாரோ இயற்றியுள்ளனர். பாபா
புத்திவான்களின் புத்தியாக உள்ளார் என்றால் யாருடைய புத்தியிலோ
வந்து அமர்ந்து இயற்றியுள்ளார். இந்தப் பாடல்கள்
முதலியவற்றிலும் கூட உங்களிடம் எத்தனைப் பேர் டிரான்ஸில் சென்று
விட்டனர்! ஒரு நாள் வரப்போகிறது, இந்த ஞானத்தின் பாடலைப்
பாடுகிறவர்களும் உங்களிடம் வருவார்கள். பாபாவின் மகிமையில்
அத்தகைய பாடல்களைப் பாடுவார்கள், அதன் மூலம் கேட்பவர்களைக்
மிகுந்த மகிழ்ச்சிக் குள்ளாக்கி விடுவார்கள். இப்படி
பட்டவர்களும் வருவார்கள். இராகத்திலும் கூட ஆதாரம் உள்ளது.
பாடற் கலைக்கும் கூட அதிகம் பெயர் உள்ளது. இப்போதோ அதுபோல்
யாரும் கிடையாது. ஒரு பாடலை இயற்றியிருந்தார்கள், எவ்வளவு
இனிமையான, எவ்வளவு அன்பானவர்......... பாபா மிகவும் இனிமையானவர்,
மிகவும் அன்பானவர். அதனால் தான் அனைவரும் அவரை நினைவு
செய்கின்றனர். தேவதைகள் அவரை நினைவு செய்கின்றனர் என்பது
கிடையாது. சித்திரங்களில் இராமருக்கு முன்னாலும் கூட சிவனைக்
காட்டியுள்ளனர். இராமர் பூஜை செய்து கொண்டுள்ளார். இது தவறானது.
தேவதைகள் யாரையும் நினைவு செய்வதில்லை. மனிதர்கள் தான் நினைவு
செய்கின்றனர். நீங்களும் இப்போது மனிதர்கள், பிறகு தேவதை
ஆவீர்கள். தேவதை மற்றும் மனிதருக்கிடையில் இரவு-பகலுக்குள்ள
வேறுபாடு! அதே தேவதைகள் பிறகு மனிதராக ஆகின்றனர். எப்படி
சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது, யாருக்கும் தெரியாது.
உங்களுக்கு இப்போது தெரிந்து விட்டது, நாம் உண்மையிலும்
உண்மையான தேவதை ஆகிறோம். இப்போது நாம் பிராமணர். புது உலகத்தில்
தேவதை எனச் சொல்லப் படுவோம். இப்போது நீங்கள் வியப்படைகிறீர்கள்.
இந்த பிரம்மா தாமே இந்தப் பிறவியில் முதலில் பூஜாரியாக
இருந்தார், நாராயணனிடம் மிகுந்த அன்பு இருந்தது. இப்போது
ஆச்சரியமாக உள்ளது, நாமே அதுபோல் ஆகிக் கொண்டிருக்கிறோம். ஆக,
எவ்வளவு குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும்! நீங்கள் தான் அறியப்
படாத போர்வீரர்கள் (அன்னோன் வாரியர்ஸ்). அகிம்சையாளர்கள்.
உண்மையில் நீங்கள் டபுள் அகிம்சையாளர்கள். காமக் கட்டாரியும்
இல்லை, அந்த சண்டையும் (வன்முறை) இல்லை. காமம் வேறு, கோபம் வேறு
பொருள். ஆக, நீங்கள் இரட்டை அகிம்சையாளர்கள். வன்முறை இல்லாத
சேனை. சேனை என்ற வார்த்தையினால் அவர்கள் பிறகு சேனைகளை நிறுத்தி
விட்டுள்ளனர். மகாபாரத யுத்தத்தில் ஆண்களின் பெயர்கள்
காட்டப்பட்டுள்ளன. பெண்கள் கிடையாது. உண்மை யில் நீங்கள்
சிவசக்திகள். உங்களுடையது பெரும்பான்மையாக இருப்பதால் சிவசக்தி
சேனை எனச் சொல்லப் படுகின்றது. இவ்விஷயங்களை பாபா தான் வந்து
புரிய வைக்கிறார்.
இப்போது குழந்தைகள் நீங்கள் புது யுகத்தை நினைவு செய்கிறீர்கள்.
உலகத்தில் யாருக்குமே புது யுகம் பற்றித் தெரியாது. அவர்களோ
புது யுகம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என
நினைக்கின்றனர். சத்யுகம் புது யுகம் - இதுவோ மிகத் தெளிவாக
உள்ளது. ஆக, பாபா அறிவுரை தருகிறார், இப்படி நல்ல பாடல்களையும்
கேட்டுப் புத்துணர்வு பெறுவீர்கள். மேலும் யாருக்காவது புரிய
வைக்கவும் செய்வீர்கள். இவையனைத்தும் யுக்திகளாகும். இவற்றின்
அர்த்தமும் நீங்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தன்னைப்
புத்துணர்வுள்ளவராக ஆக்கிக் கொள்வதற்கு மிக நல்ல-நல்ல பாடல்கள்.
இந்தப் பாடல்கள் மிகவும் உதவி செய்கின்றன. அர்த்தத்தை
வெளிப்படுத் தினால் வாயும் (பேசுவதற்காக) திறந்து கொள்ளும்.
குஷியும் இருக்கும். மற்றப்படி யார் அதிகம் தாரணை செய்ய
முடிவதில்லையோ, அவர்களுக்காக பாபா சொல்கிறார், வீட்டில்
அமர்ந்தவாறே பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். இல்லற
விவகாரங்களில் இருந்தவாறே இந்த மந்திரத்தை மட்டும் நினைவு
வையுங்கள் - பாபாவை நினைவு செய்யுங்கள், மற்றும்
பவித்திரமாகுங்கள். முன்பு ஆண்கள் தங்கள் மனைவியருக்குச்
சொன்னார்கள், பகவானையோ வீட்டில் கூட நினைவு செய்ய முடியும்,
பிறகு கோவில்கள் முதலியவற்றுக்கு அலைவதற்கான அவசியம் என்ன? நான்
உனக்கு வீட்டிலேயே மூர்த்தி ஏற்பாடு தந்து விடுகிறேன், இங்கேயே
அமர்ந்து நினைவு செய். அலைந்து திரிந்து கஷ்டப்படுவதற்கு ஏன்
செல்கிறாய்? இதுபோல் அநேக ஆண்கள் மனைவிமாரை செல்ல விடுவதில்லை.
பொருள் ஒன்று தான். பூஜை செய்ய வேண்டும் மற்றும் நினைவு செய்ய
வேண்டும். ஒரு முறை பார்த்து விட்டால் அப்படியே நினைவு செய்ய
முடியும். கிருஷ்ணரின் சித்திரமோ பொதுவானது - மயில்தோகைக்
கிரீடதாரி. குழந்தைகள் நீங்கள் சாட்சாத்காரம்
பார்த்திருக்கிறீர்கள் - எப்படி அங்கே ஜென்மம் நிகழ்கிறது
என்பதையும் சாட்சாத் காரமாகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால்
உங்களால் அதன் ஃபோட்டோவை வெளிக்கொண்டு வர முடியுமா? மிகச்
சரியாக யாராலும் அதுபோல் வெளிக்கொண்டுவர முடியாது. திவ்ய
திருஷ்டி மூலம் பாôக்க மட்டுமே முடியும். உருவாக்க முடியாது.
ஆம், பார்த்து வர்ணனை செய்ய முடியும். மற்றப்படி அதைப் படமாக
வரையவோ முடியாது. திறமை மிக்க ஓவியராக இருக்கலாம்,
சாட்சாத்காரமும் பார்த்தாலும் கூட மிகச்சரியான தோற்ற அமைப்பினை
வெளிக்கொண்டுவர முடியாது. ஆக, பாபா புரிய வைத்துள்ளார்,
யாரிடமும் அதிக வாக்குவாதம் செய்யக் கூடாது. சொல்லுங்கள்,
உங்களுக்கு தூய்மையாக வேண்டியது ஒன்று தான் வேலை. மேலும் சாந்தி
வேண்டு மென்றால் தந்தையை நினைவு செய்யுங்கள், பவித்திரமாகுங்கள்.
பவித்திர ஆத்மா இங்கே இருக்க முடியாது. அது திரும்பிச் சென்று
விடும். ஆத்மாக்களைப் பாவனமாக்குவதற்கான சக்தி ஒரு தந்தையிடம்
உள்ளது. வேறு யாரும் பாவனமாக்க முடியாது. குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், இது முழுவதும் உலக நாடக மேடை. இதில் நாடகம்
நடைபெறுகின்றது. இச்சமயம் முழு உலகிலும் இராவணனின் இராஜ்யம்
உள்ளது. முழு சமுத்திரத்தின் மீதும் சிருஷ்டி நின்று
கொண்டுள்ளது. இது எல்லையற்ற தீவு. அது எல்லைக்குட்பட்டது. இது
எல்லையற்ற விசயமாகும். இதில் அரைக்கல்பம் தெய்வீக இராஜ்யம்,
அரைக்கல்பம் அசுர இராஜ்யம் நடைபெறு கின்றது. அவ்வாறே
கண்டங்களும் தனித்தனியாக உள்ளன. ஆனால் இவை அனைத்தும் எல்லையற்ற
விசயங்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் கங்கை, யமுனை நதிகளின்
இனிய நீர்க்கரையில் வசிப்போம். சமுத்திரங்கள் முதலியவற்றிற்குள்
செல்வதற்கான அவசியம் இல்லை. துவாரகை எனச் சொல் லப்படுவது
ஒன்றும் சமுத்திரத்திற்குக் கீழே இல்லை. துவாரகை வேறொரு பொருள்
இல்லை. குழந்தைகள் நீங்கள் அனைத்தையும் சாட்சாத்காரமாகப்
பார்த்திருக்கிறீர்கள். ஆரம்பத்தில் இந்த சந்தேஷி மற்றும்
குல்ஜார் அதிக சாட்சாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் பெரிய
பார்ட் நடித்துள்ளனர். ஏனென்றால் பட்டியில் குழந்தைகளை
மகிழ்விக்க வேண்டி இருந்தது. ஆக, சாட்சாத்காரத்தினால் மிக-மிக
மகிழ்ச்சி யடைந்தனர். பாபா சொல்கிறார், பிறகு கடைசியில் அநேகர்
மகிழ்வார்கள். அந்தப் பார்ட் பிறகு வேறொன்றாகும். பாடலும்
உள்ளது இல்லையா - நாங்கள் எதைப் பார்த்தோமோ, அதை நீங்கள்
பார்க்கவில்லை. நீங்கள் சீக்கிரம்-சீக்கிரமாக சாட்சாத்
காரங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். எப்படி பரீட்சையின்
நாள் அருகில் நெருங்கி வரும் போது தெரிய வரும், அதாவது நாம்
எத்தனை மார்க்குகள் வாங்கிப் பாஸாவோம். உங்களுக்கும் இது
படிப்பாகும். இப்போது நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக
அமர்ந்திருக்கிறீர்கள். அனைவரும் முழுமையாகவோ ஆகவில்லை.
பள்ளிக்கூடத்தில் எப்போதுமே நம்பர்வார் உள்ளனர். இதுவும்
ஞானமாகும் - மூலவதனம், சூட்சும வதனம், மூன்று உலகங்களைப்
பற்றிய ஞானம் உங்களுக்கு உள்ளது. இந்த சிருஷ்டிச் சக்கரத்தை
நீங்கள் அறிவீர்கள். இது சுற்றிக் கொண்டே உள்ளது. பாபா
சொல்கிறார், உங்களுக்கு நான் தரும் இந்த ஞானத்தை வேறு யாராலும்
புரிய வைக்க முடியாது. உங்கள் மீது எல்லையற்ற தசா (தந்தையின்
பார்வை) உள்ளது. சிலர் மீது பிரகஸ்பதி தசா (பார்வை), சிலர் மீது
இராகு தசா உள்ளதென்றால் அவர்கள் போய் சண்டாளர் முதலானவர் களாக
ஆவார்கள். இது எல்லையற்ற தசா, அது எல்லைக்குட் பட்ட தசா.
எல்லையற்ற தந்தை எல்லையற்ற விசயங்களைச் சொல்கிறார், எல்லையற்ற
ஆஸ்தி தருகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி
இருக்க வேண்டும்! நீங்கள் அநேக தடவை இராஜ்யத்தை
அடைந்திருக்கிறீர்கள், பிறகு இழந்திருக்கிறீர்கள். இதுவோ
முற்றிலும் உறுதியான விசயமாகும். எதுவும் புதிதல்ல. அதனால்
நீங்கள் சதா மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். இல்லையென்றால்
மாயா ஏமாற்றம் தந்து விடுகின்றது. ஆக, ஒரு நாயகனுக்கு நீங்கள்
அனைவரும் நாயகிகள். நாயகிகள் அனைவரும் அந்த ஒரு நாயகனையே நினைவு
செய்கின்றனர். அவர் வந்து அனைவருக்கும் சுகம் தருகிறார்.
அரைக்கல்பமாக அவரை நினைவு செய்திருக்கிறீர்கள். இப்போது அவர்
கிடைத்து விட்டார் என்றால் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்!
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சதா மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக நத்திங் நியு (எதுவும்
புதிதல்ல) என்ற பாடத்தை (மனதில்) உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எல்லையற்ற தந்தை நமக்கு எல்லையற்ற இராஜபதவியை தந்து
கொண்டிருக்கிறார் - இந்தக் குஷியிலேயே இருக்க வேண்டும்.
2) ஞான சம்மந்தப்பட்ட நல்ல-நல்ல பாடல்களைக் கேட்டுத் தனக்கு
புத்துணர்ச்சி அளித்துக் கொள்ள வேண்டும். அதன் அர்த்தத்தை
வெளிப்படுத்தி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
வரதானம்:
மாயாவின் சம்பந்தங்களுக்கு விவாகரத்து கொடுத்து தந்தையின்
சம்பந்தத்தில் ஒப்பந்தம் செய்யக் கூடிய மாயாஜீத், மோகத்தை
வென்றவர் ஆகுக.
இப்பொழுது நினைவுகளில் பழைய ஒப்பந்தங்களை நீக்கி விட்டு தனிமை
ஆகுங்கள். தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருங்கள்.
ஆனால் துணையாக இருக்காதீர்கள். ஒரே ஒருவரை மட்டும் துணையாக
ஆக்கிக் கொண்டால் மாயாவின் சம்பந்தங்களில் விவாகரத்து ஏற்பட்டு
விடும். மாயாஜீத், மோகத்தை வென்றவர் வெற்றியாளர் ஆகிவிடுவீர்கள்.
ஒருவேளை துளியளவும் யார் மீதாவது மோகம் இருந்தால் தீவிர
முயற்சியாளருக்குப் பதிலாக முயற்சியாளர் ஆகிவிடுவீர்கள்.
ஆகையால் என்ன நடந்தாலும், எது நடந்தாலும் குஷியில் நடனமாடிக்
கொண்டே இருங்கள். வேட்டைக்காரனுக்கு எத்தனை மிருகம்
கிடைத்தாலும் மகிழ்ச்சியே - இது தான் நஷ்ட மோகா என்று
கூறப்படுகிறது. இவ்வாறு பற்றற்றவர்களாக இருப்பவர்கள் தான்
வெற்றி மாலை யில் மணியாக ஆகின்றனர்.
சுலோகன்:
சத்தியம் என்ற விசேஷதா மூலம் வைரத்தின் ஜொலிப்பை அதிகரிக்கச்
செய்யுங்கள்.
அவ்யக்த இˆôரே - ஏகாந்தவாசி ஆகுங்கள், ஏக்தா (ஒற்றுமை) மற்றும்
ஏகாக்ரதா (ஒருநிலைப்படுத்தல்) கொண்டு வாருங்கள்
பாப்தாதா விரும்புகின்றார் - ஒவ்வொரு குழந்தையும் ஏக்ரஸ்
சிரேஷ்ட ஸ்திதி என்ற ஆசனதாரியாக, ஏகாந்தவாசியாக, அசரீரியாக,
ஒற்றுமை ஸ்தாபனை செய்பவராக, சிக்கனமான வராக, ஏகாந்தவாசியின்
அவதாரமாக ஆக வேண்டும். ஒருவருக்கொருவரின் சிந்தனைகளை புரிந்து
கொண்டு மரியாதை கொடுங்கள். ஒருவருக்கொருவர் சைகை கொடுத்து,
கொடுக்கல்-வாங்கல் செய்து தங்களுக்குள் குழுவின் சக்தியை
பிரத்ட்சயம் செய்ய வேண்டும். ஏனெனில் உங்களது குழுவின் ஒற்றுமை
சக்தி தான் முழு பிராமணர்களையும் குழுவில் கொண்டு வருவதற்கு
நிமித்தம் ஆகும்.