14-02-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
(விசேஷமாக சிவஜெயந்திக்கான முரளி)
கேள்வி:
தந்தை, குழந்தைகளுக்கு -
சிருஷ்டியினுடைய (உலகத்தினுடைய) செய்தியை சங்கமத்தில் தான்
சொல்கின்றார், சத்யுகத்தில் சொல்வதில்லை - ஏன்?
பதில்:
ஏனெனில், சத்யுகம் என்பதோ ஆதியின்
சமயம், அந்த சமயம் முழு சிருஷ்டியின் செய்தியை அதாவது உலகின்
ஆதி-மத்ய-அந்திமத்தின் ஞானத்தை எப்படி சொல்வது, எது வரை சக்கரம்
ரிப்பீட் ஆக வில்லையோ (மீண்டும் சுற்றவில்லையோ) அதுவரை செய்தியை
சொல்வதென்பது எப்படி முடியும். சங்கமத்தில் தான் குழந்தைகளாகிய
நீங்கள், தந்தை மூலமாக முழு செய்தியையும் கேட்கின்றீர்கள்.
உங்களுக்குத்தான் ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கின்றது.
ஓம் சாந்தி.
இன்று திரிமூர்த்தி சிவஜெயந்தி, எனவே (இது) பிராமணர்களுக்கான
ஜெயந்தி, எனவே (இது) சங்கமயுக ஜெயந்தியினுடைய சுப நாள். அநேகர்
இருக்கிறார்கள்- அவர்களுக்கு பாபா, ஈஸ்வரிய பிறப்பு உரிமையின்
வாழ்த்துக்களை கூட கொடுக்க முடியாது. (ஏனெனில்) அநேகருக்கு
சிவபாபா யார் என்பது தெரியாது, அவரிடமிருந்து என்ன
கிடைக்கின்றது என்பது தெரியாது. அவர்கள் (தந்தையின்)
வாழ்த்துக்களை என்ன புரிந்து கொள்ள முடியும். புதிய குழந்தைகள்
முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது. இது ஞானத்தினுடைய நடனம்.
ஸ்ரீ கிருஷ்ணர் நடனம் ஆடியதாக சொல்லப்படுகின்றது அல்லவா. இங்கே
குழந்தைகள், ராதை- கிருஷ்ணராக ஆகி நடனம் ஆடுகின்றார்கள். ஆனால்
இது நடனம் சம்மந்தப்பட்ட விஷயமே அல்ல. அவரோ அங்கே சத்யுகத்தில்
குழந்தை பருவத்தில் இளவரசன்-இளவரசியுடன் நடனம் ஆடுவார்.
குழந்தைகள் தெரிந்திருக் கிறார்கள் - இவர் பாப்தாதா. தாதா எனில்
தாத்தா என்று சொல்லப்படுகின்றது (வழக்கத்தில்). இந்த தாதா -
சரீர ரீதியான தந்தையாக (பிராமணர்களுக்கான) இருக்கின்றார். இதுவோ
ஆச்சர்யமான விஷயம். அந்த தந்தை ஆன்மீக தந்தையாகவும் (சிவபாபா),
இவர் (தாதா-பிரம்மா பாபா) சரீர ரீதியான தந்தையாகவும் (பிராமணர்களுக்கான)
இருக்கின்றார் - இதைத்தான் பாப்தாதா என சொல்கின்றோம்.
தந்தையிடமிருந்து (சிவபாபா) ஆஸ்தி-தாதா (பிரம்மா பாபா) மூலமாக
கிடைக்கின்றது. ஆஸ்தி என்பது தாத்தாவினுடையது (பிரம்மா
பாபா-பிராமணர்களின் தந்தை எனில், அவரின் தந்தையாகிய சிவபாபா-
பிராமணர்களுக்கு தாத்தா உறவு முறை). அனைத்து ஆத்மாக் களும்
சகோதரர்கள் எனும் போது ஆஸ்தி என்பது தந்தையிடமிருந்து கிடைக்
கின்றது. தந்தை சொல்கின்றார் - ஆத்மாக்களாகிய உங்களுக்கு
தனக்கென்று சரீரம் இருக்கின்றது, தங்களுடைய கர்மேந்திரியங்கள்
இருக்கின்றது. என்னை நிராகாரமானவர் என்று சொல்லப் படுகின்றது -
கண்டிப்பாக எனக்கு சரீரம் வேண்டும். அப்பொழுதே குழந்தைகளுக்கு
இராஜ யோகத்தை கற்பிப்பேன் அதாவது மனிதனிலிருந்து தேவதையாக,
பதீதத்திலிருந்து பாவனமாக ஆகுவதற்கான வழியை சொல்வேன் மேலும்
அழுக்கான ஆடையை துவைப்பேன்...கண்டிப்பாக பெரிய வண்ணானாக
இருக்கின்றார். முழு உலகத்தினுடைய - ஆத்மாக்கள் மற்றும்
சரீரங்களை துவைக்கின்றார். ஞானம் மற்றும் யோகத்தின் மூலம்
ஆத்மாக்களாகிய நீங்கள் துவைக்கப்படு கின்றீர்கள் (சுத்தம்
செய்யப்படுகின்றீர்கள்).
இன்று குழந்தைகள் நீங்கள் வந்துள்ளீர்கள், நாம் சிவபாபாவிற்கு
வாழ்த்துக்கள் கொடுக்க வந்திருக்கின்றோம் என்பதை
தெரிந்துள்ளீர்கள். தந்தை (பதிலுக்கு) சொல்கின்றார் - நீங்கள்
யாருக்கு வாழ்த்துக்கள் கொடுக்கின்றீர்களோ, அந்த தந்தை கூட
குழந்தைகளாகிய உங்களுக்கு வாழ்த்துக்களை கொடுக்கின்றார் ஏனெனில்
நீங்கள் மிகுந்த சிறப்புமிக்க சௌபாக்கியசாலி பிராமண குல
அலங்காரமாக இருக்கின்றீர்கள். நீங்கள் எத்தனை சிறப்பானவர்களோ,
அத்தனை தேவதைகள் கூட சிறப்பானவர்கள் கிடையாது. பிராமணர்கள்
தேவதைகளை விட உயர்ந்தவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை.
பிறகு அவர் பிரம்மாவின் உடலில் வருகின்றார். நீங்கள் அவருடைய
குழந்தைகள் மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமணர்களாக
ஆகுகின்றீர்கள். பிராமணர்கள் தான் உச்சி குடுமி. அதற்கு கீழே
தேவதைகள் இருக்கிறார்கள். அனைவருக்கும் மேலே பாபா இருக்கின்றார்.
பாபா குழந்தைகளாகிய உங்களை பிராமணன் -பிராமணிகளாக ஆக்கி
இருக்கின்றார், சுவர்கத்தின் ஆஸ்தியை கொடுப்பதற்காக. இந்த
லட்சுமி-நாராயணரை பாருங்கள், எத்தனை கோவில்கள் கட்டப்பட்டு
இருக்கின்றது (இவர்களுக்காக). தலை வணங்குகின்றார்கள். இவர்களும்
மனிதர்கள் தான் என்று பாரதவாசிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
லட்சுமி - நாராயணர் இருவரும் தனித் தனியானவர்கள். இங்கேயோ ஒரு
மனிதருக்கு இந்த இரண்டு பெயர் களையும் (சேர்த்து)
வைக்கின்றார்கள். ஒருவருடைய பெயர் லட்சுமிநாராயண், அதாவது தன்னை
நான்கு புஜங்கள்(கைகள்) கொண்ட விஷ்ணு-ஆக சொல்லிக்
கொள்கின்றார்கள். லட்சுமி-நாராயண், ராதா-கிருஷ்ணா எனப் பெயர்
வைக் கின்றார்கள் எனில் நான்கு புஜங்கள் என்று ஆகி விடுகின்றது
தானே. அந்த விஷ்ணு என்பது சூட்ச வதனத்தின் லட்சியம் மற்றும்
குறிக்கோள். நீங்கள் இந்த (சாகார உலகின்) விஷ்ணு புரியில்
எஜமான் ஆகுவீர்கள். இந்த லட்சுமி நாராயண் விஷ்ணுபுரியின்
எஜமானர்கள். விஷ்ணுவிற்கு 4 புஜங்கள். இரண்டு- லட்சுமியினுடையது,
இரண்டு-நாராயணனு டையது. நாங்கள் விஷ்ணுபுரியின் எஜமானர்களாக
ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்று சொல்வீர்கள். நல்லது,
தந்தையின் மகிமைக்கான பாடலை கேளுங்கள் (எத்தனை இனிமையான, எத்தனை
அன்பான, கள்ளம் கபடமற்ற சிவ பகவான்...)
முழு உலகில்-ஆரம்பத்திலிருந்து இன்று வரை, ஒருவரை தவிர வேறு
யாருக்கும் இத்தனை மகிமை என்பது கிடையாது. வரிசைக்கிரமம் என்பது
இருக்கத்தான் செய்கின்றதுஜ அனைவரைக் காட்டிலும் அதிகமான,
சிறப்பான மகிமை - உயர்ந்ததிலும் உயர்ந்த பரம்பிதா
பரமாத்மாவினுடை யது, நீங்கள் அனைவரும் அவரின் குழந்தைகள்.
நாங்கள் ஈஸ்வரனின் குழந்தைகள் எனக் கூறுகின்றீர்கள். ஈஸ்வரனோ
சுவர்கத்தை படைக்கின்றார், பிறகு நீங்கள் ஏன் நரகத்தில் இருக்
கின்றீர்கள். ஈஸ்வரனின் ஜன்மம் (பிறப்பு) என்பது இங்கே
ஏற்படுகின்றது. கிறிஸ்தவர்கள் - நாங்கள் கிறிஸ்துவுக்கு
உரியவர்கள் எனக் கூறுவார்கள். நாம் பரம்பிதா பரமாத்மாவின் நேரடி
குழந்தைகள் என்பதை பாரதவாசிகள் மறந்து விட்டார்கள்.
குழந்தைகளை தன்னுடையவர்களாக ஆக்கி, பிறகு ராஜ்ய பாக்கியத்தை
கொடுப்பதற்காக தந்தை இங்கே வந்திருக்கின்றார். இன்று தந்தை
நல்ல முறையில் புரிய வைக்கின்றார் ஏனெனில் புதியவர்கள் கூட
அநேகர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு புரிந்து கொள்வது கடினம்.
ஆம், பிறகும் கூட (அதாவது புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும்
கூட) சொர்க்கவாசி ஆகுவார்கள். சொர்க்கத்தில் சூரியவம்சி
ராஜா-ராணியும் இருக்கிறார்கள், பணியாளர்களும் கூட
இருக்கிறார்கள். பிரஜைகளும் கூட இருக்கின்றார்கள். அதில் சிலர்
ஏழை, சிலர் செல்வந்தர் களாக இருப்பார்கள். அவர்களுக்கும் கூட
பணியாளர்களும் இருப்பார்கள். முழு இராஜதானியும் இங்கே
நிறுவப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இது வேறு யாருக்கும்
தெரியாது. அனைவரின் ஆத்மாக்களும் தமோபிர தானமாக இருக்கின்றது,
ஞானத்தின் மூன்றாவது கண் யாருக்கும் கிடையாது. இப்போது
தந்தையின் மகிமையை கேட்டீர்கள். இவர் அனைவருடைய தந்தை. பகவானை,
தந்தை என்று சொல்கின்றோம், எல்லையற்ற சுகத்தை கொடுக்கக்கூடிய
தந்தை. இதே பாரதத்தில் தான் எல்லையற்ற சுகம் இருந்தது, லட்சுமி
நாராயணனின் ராஜ்ஜியம் இருந்தது. இந்த லட்சுமி-நாராயணன் சிறு
வயதில் ராதா-கிருஷ்ணனாக இருக்கிறார்கள் பிறகு லட்சுமி-நராயாணன்
என்று பெயர் வைக்கப்படுகின்றது. இந்த பாரதத்தில் 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பு தேவதைகளின் ராஜ்ஜியம் இருந்தது.
லட்சுமி-நாராயணரின் ராஜ்ஜியத்தை தவிர வேறு எவருடைய ராஜ்ஜியமும்
இருக்கவில்லை. வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை.
லட்சுமி-நராயாணன், இதற்கு முந்தைய பிறவியில் - எப்படிப்பட்ட
கர்மம் செய்திருந்தார்கள் என்பதை இப்போது பாரதவாசிகள்
கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி பிர்லாவுக்கு
சொல்கின்றார்கள் அதாவது - எப்படிப்பட்ட கர்மம் செய்திருந்தால்
இத்தனை செல்வந்தராக ஆகியிருப்பார் என்று. முந்தைய பிறவியில்
தானம்-புண்ணியம் செய்திருப்பார் என்று கண்டிப்பாக சொல்வார்கள்.
சிலரிடம் நிறைய செல்வம் இருக் கின்றது, சிலருக்கு உண்ணுவதற்கு
எதுவும் கிடைப்பதில்லை ஏனெனில் அப்படிப்பட்ட கர்மம்
செய்திருக்கின்றார்க்ள. கர்மம் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள்
தானே. கர்மம்-அகர்மம்-விகர்மத்தினுடைய கதியை, கீதையின் பகவான்
சொல்லியிருந்தார். அவருடைய மகிமையை கேட்டோம். சிவ பகவான் ஒருவர்
தான். மனிதர்களை பகவான் என்று சொல்வதில்லை. இப்போது தந்தை எங்கே
வந்திருக்கின்றார்! புரியவைக்கப்படுகின்றது -(கண்) முன்னே
மகாபாரத சன்டை நின்று கொண்டு இருக்கின்றது; எனவே இனிமையிலும்
இனிமையான தந்தை புரியவைக்கின்றார், இவரை துக்கத்தில் அனைவரும்
நினைவு செய்கின்றார்கள். துக்கத்தில் அனைவரும் நினைக்
கின்றார்கள்... சிவபாபாவை துக்கத்தில் அனைவரும் நினைவு
செய்கின்றார்கள். சுகத்தில் எவரும் நினைப்பதில்லை.
சொர்க்கத்தில் துக்கம் என்பது இல்லாமல் இருந்தது. அங்கே
தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்தி இருந்தது. 5 ஆயிரம் வருடங்களுக்கு
முன்பு எப்பொழுது சிவபாபா வந்திருந்தாரோ அப்போது பாரதத்தை
சொர்க்கம் ஆக்கினார். இப்பொழுது நரகமாக இருக்கின்றது.
சுவர்க்கம் ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். உலகத்திற்கோ
இது தெரிய கூட இல்லை. நாங்கள் எல்லோரும் குருடர்கள்;
குருடர்களுக்கு ஊண்றுகோலான பிரபுவே வாருங்கள், வந்து கண்களை
தாருங்கள் என்று சொல்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கின்றது. ஆத்மாக்களாகிய (சரீரமற்று)
நாம் எங்கே இருக்கின்றோமோ அது சாந்திதாமம். தந்தையும் கூட அங்கே
தான் இருக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் மேலும் நாமும் (சிவபாபா
மற்றும் பிரம்மா பாபாவின் ஆத்மா) அங்கே வசிக்கின்றோம். இவருடைய
ஆத்மாவை பார்த்து (பிரம்மா பாபா) சொல்லப்படுகின்றது - அதாவது
ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரின் தந்தையாகிய நான் அங்கே (சாந்திதாமத்தில்)
இருக்கின்றேன். நீங்கள் மறுஜென்மத் திற்கான பங்கை
நடிக்கின்றீர்கள், நான் நடிப்பதில்லை. நீங்கள் விஷ்வத்திற்கு
எஜமானர்கள் ஆகுகின்றீர்கள், நான் ஆகுவதில்லை. உங்களுக்கு 84
பிறவிகள் எடுக்கவேண்டி இருக்கின்றது. குழந்தை களே-நீங்கள்
உங்களுடைய ஜென்மங்களை பற்றி தெரிந்திருக்கவில்லை என உங்களுக்கு
புரிய வைத்திருந்தேன். 84 லட்ச ஜென்மங்கள் என்று
சொல்கின்றார்கள் - இது பொய்யான விஷயங்கள். நான் ஞான கடல், பதீத
பாவனனாக இருக்கின்றேன், எப்பொழுது எல்லோரும் பதீதம்
ஆகின்றார்களோ அப்பொழுது நான் வருகின்றேன். அப்பொழுது தான் வந்து
சிருஷ்டியின் ஆதி-மத்ய- அந்திமத்தின் இரகசியத்தை புரியவைத்து
திரிகாலதரிசியாக ஆக்குகி ன்றேன். முதன் முதலில் மனிதன் எப்படி
படைக்கப்பட்டான்? என்று அநேகர் கேட்கின்றார்கள். பகவான்
சிருஷ்டியை எப்படி படைத்தார்? ஒரு சாஸ்திரத்தில் கூட
காட்டப்பட்டுள்ளது - அதாவது பிரளயம் ஏற்பட்டு பிறகு அரச
மரத்தின் இலையில்-குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார். தந்தை
சொல்கின்றார் - அப்படிப்பட்ட விஷயங்கள் எதுவும் கிடையாது, இது
எல்லையற்ற டிராமா. பகல் என்பது சத்யுகம்-திரேதாயுகம், இரவு
என்பது துவாபரயுகம்-கலியுகம்.
குழந்தைகள் தந்தைக்கு வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்கள். தந்தை
சொல்கின்றார் - தத்வம் (நீங்களே அது-அதுவே நீங்கள்). நீங்கள்
தான் 100 சதவீதம் துர்பாக்கியசாலியிலிருந்து 100 சதவீதம்
சௌபாக்கியசாலியாக ஆகி இருக்கின்றீர்கள். நீங்கள் பாரதவாசிகள்
தான் அப்படி (சௌபாக்கிய சாலியாக) இருந்தீர்கள் ஆனால் உங்களுக்கு
தெரியாது. தந்தை வந்து சொல்கின்றார். நீங்கள் உங்களுடைய
பிறவிகளை பற்றி அறிந்திருக்கவில்லை. நான் வந்து சொல்கின்றேன் -
நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். தந்தை சங்கமத்தில்
உங்களுக்கு முழு சிருஷ்டியின் செய்தியை சொல்கின்றார்.
சத்யுகத்தில் சொல்வேனா என்ன. எந்த சமயத்தில் சிருஷ்டியின்
ஆதி-மத்ய-அந்திமம் என்பதே ஏற்படவில்லையோ அப்போது அதைப் பற்றிய
செய்தியை எப்படி புரிய வைப்பது? நான் வருவது அந்திமத்தில் (முடிவில்),
கல்பத்தினுடைய சங்கமயுகத்தில். சாஸ்திரங் களில்
எழுதப்பட்டுள்ளது - ஒவ்வொரு யுகத்திலும் (இறைவன் அவதரிகின்றார்),
ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வாக்கியம் - (என) கீதையில்
எழுதப்பட்டுள்ளது. அனைத்து தர்மங்களை சார்ந்தவர் களும் ஸ்ரீ
கிருஷ்ணரை பகவானாக ஏற்றுக்கொள்வார்களா என்ன? பகவான் என்பவரோ
நிராகார மானவர் இல்லையா. அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை.
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக் கின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள்
அனைவரும் சகோதரர்கள். பரமாத்மாவை, சர்வ வியாபி என்று சொல்லும்
போது அனைவரும் தந்தை (அனைவருக் குள்ளும் பரமாத்மா) என்றாகி
விடுகின்றது. தந்தைக்கு ஒருபோதும் ஆஸ்தி கிடைக்கின்றதா என்ன?
ஆஸ்தி என்பது குழந்தைகளுக்கு கிடைக்கின்றது. ஆத்மாக்கள் நீங்கள்
எல்லோரும் குழந்தைகள். கண்டிப்பாக தந்தையின் ஆஸ்தி வேண்டும்.
எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தி மூலம் நீங்கள் திருப்தி அடைவதில்லை;
எனவே - உங்களுடைய கருணை மூலமாக வலிமையான சுகம் கிடைத்திருந்தது
என அழைக்கின்றீர்கள்; பிறகு ராவண ராஜ்ஜியத்தின் மூலம் இப்போது
துக்கம் கிடைப்பதனால் அழைக்க ஆரம்பித் துள்ளீர்கள். அனைத்து
ஆத்மாக்களும் அழைக்கின்றார்கள் ஏனெனில் துக்கம், அதனால் நினைவு
செய்கின்றார்கள் - தந்தையே, வந்து சுகத்தை கொடுங்கள் என்று.
இப்போது இந்த ஞானத்தின் மூலம் சுவர்கத்தின் எஜமானர்களாக
ஆகுகின்றீர்கள். உங்களுக்கு சத்கதி ஏற்படுகின்றது எனவே
அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரு தந்தை என்று
புகழ்பாடப் படுகின்றது. இப்போது அனைவரும் துர்கதியில் (துன்பமான
நிலையில்) இருக்கின்றார்கள் பிறகு அனைவருக்குமான சத்கதி
ஏற்படும். இந்த லட்சுமி- நாராயணரின் ராஜ்ஜியம் இருந்தது,
அப்போது நீங்கள் சுவர்கத்தில் இருந்தீர்கள். மற்ற அனைவரும்
முக்திதாமத்தில் இருந்தார்கள். இப்போது நாம் தந்தை மூலமாக
ராஜயோகம் கற்கின்றோம். தந்தை சொல்கின்றார் - கல்பத்தின்
சங்கமயுகத்தில் நான் உங்களுக்கு படிப்பிக்கின்றேன்.
மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகின்றேன்.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு சிவராத்திரி எப்பொழுது
ஏற்படுகின்றது-என்ற அனைத்து இரகசியங் களையும் புரிய
வைக்கின்றேன், இதை தெரிந்து கொள்ள வேண்டும். என்ன நடந்தது,
சிவபாபா எப்பொழுது வந்தார்? எதுவும் தெரியாது. அப்படியெனில்
கல்புத்தி தானே. இப்பொழுது நீங்கள் தங்கபுத்தியாக ஆகின்றீர்கள்.
பாரதம் தங்க புத்தியாக - தங்கயுகமாக இருந்தது. லட்சுமி-நாராயணரை
பகவான்-பகவதி என்று சொல்கின்றார்கள். அவர்களுக்கு அந்த ஆஸ்தியை
கொடுத்தது பகவான், மீண்டும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
உங்களை மீண்டும் பகவான்-பகவதியாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றேன்.
இது உங்களுடைய அநேக பிறவிகளுடைய கடைசி பிறவி. தந்தை
சொல்கின்றார் - விநாசம் கண் முன்னால் நிற்கிறது. இதை தான்
ருத்ர ஞான யக்ஞம் என்று சொல்கின்றோம். அங்கே(உலகில்) அனைத்தும்
-யக்ஞத்திற்கான (ஸ்தூல) பொருட் கள் ஆகும். இங்கே ஞானத்தினுடைய
விஷயம் ஆகும். இங்கே தந்தை வந்து மனிதர்களை தேவதையாக ஆக்கு
கின்றார். நீங்கள் சிவபாபாவின் வருகைக்கு வாழ்த்துக்கள்
கூறுகின்றீர்கள். பாபா (அதற்கு பதிலாக) சொல்கிறார் - நான் என்ன
தனியாகவா வருகின்றேன். எனக்கும் கூட சரீரம் வேண்டும். பிரம்மா
உடலில் வரவேண்டியதாக இருக்கின்றது. முதன் முதலில் சூட்சம
வதனத்தை படைக்க வேண்டி இருக்கின்றது, அதனால் இவரிடத்தில்
பிரவேசம் ஆகின்றேன், இவரோ பதீதமாக இருந்தார். 84 பிறவிகள்
எடுத்து பதீதமாக ஆகியிருக்கின்றார். அனைவரும் அழைத்து
இருந்தீர்கள். இப்போது தந்தை சொல்கின்றார் - நான் மீண்டும்
குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியை கொடுக்க வந்திருக் கின்றேன்.
தந்தை தான் பாரதத்திற்கு, சுவர்கத்தின் ஆஸ்தியை கொடுக்கின்றார்.
சுவர்கத்தை படைக்கக்கூடிய தந்தை, கண்டிப்பாக சுவர்கத்தின்
பரிசைத் தானே தருவார். இப்பொழுது நீங்கள் சொர்க்கத்தின்
எஜமானர்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள். இது பாடசாலை -
மனிதர்களை எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்காக தேவதை ஆக்கக்கூடியது.
நீங்கள் சுவர்கத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டு
இருக்கின்றீர்கள். 21 பிறவி களுக்கு நீங்கள் சுகத்தை
பெறுகின்றீர்கள். அங்கே திடீர் மரணம் என்பது ஏற்படாது.
எப்பொழுது சரீரத்தின் ஆயுள் முடிவடைகின்றதோ அப்பொழுது
சாட்சாத்காரம் ஏற்படும். ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்று
எடுப்பீர்கள். பாம்பின் உதாரணம் (சட்டை உரிப்பதற்கான) கூட
இருக்கின்றது அல்லவா.
குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாழ்த்துக்களை
கொடுக்கின்றீர்கள். தந்தை பிறகு உங்களுக்கு வாழ்த்துக்களை
கொடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது துர்பாக்கியசாலியிலிருந்து
சௌபாக்கிய சாலியாக ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள். பதீத
மனிதனிலிருந்து பாவன தேவதையாக ஆகுகின்றீர்கள். சக்கரம்
சுற்றுகின்றது இல்லையா. குழந்தைகளாகிய உங்களுக்கு இதை (நான்)
புரிய வைக்க வேண்டும். பிறகு இது மறைந்து போய்விடும்.
சத்யுகத்தில் ஞானத்திற்கான அவசியம் இருக்காது. இப்பொழுது
நீங்கள் துர்கதியில் இருக்கின்றீர்கள் அதனால் தான் இந்த
ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கின்றது. தந்தை தான் வந்து
சுவர்கத்தை நிறுவுகின்றார். அனைவரின் சத்குரு ஒருவர் மட்டுமே.
மற்றபடி பக்தி மார்கத்தின் கர்ம காண்டத்தின்(சடங்குகள்,
யாகங்கள் பற்றிய வேதத்தின் ஒரு பகுதி) மூலம் எவருக்கும் சத்கதி
ஏற்படாது. அனைவரும் ஏணிப்படியில் இறங்கித்தான் ஆக வேண்டும்.
பாரதம் சதோபிரதானமாக இருந்தது பிறகு 84 பிறவிகள் எடுக்க
நேரிட்டது பிறகு இப்பொழுது நீங்கள் ஏற வேண்டும். தம்முடைய
வீடான முக்திதாமிற்கு செல்ல வேண்டும். இப்பொழுது நாடகம்
முடிவடைகின்றது. இந்த பழைய உலகம் முடிவடைந்து போய்விடும்.
பாரதத்தை அழிவற்ற கண்டம் என சொல்லப்படுகின்றது. தந்தையின்
ஜன்மஸ்தான் (பிறப்பிடமான பாரதம்) ஒருபோதும் அழியாது. நீங்கள்
சாந்திதாம் சென்றுவிட்டு பிறகு வருவீர்கள், வந்து ராஜ்ஜியம்
செய்வீர்கள். பாவனம் மற்றும் பதீத்தம் என்பது பாரதத்தில் தான்
ஏற்படுகின்றது. 84 பிறவிகள் எடுத்து எடுத்து பதீதம்
ஆகின்றீர்கள். யோகியிலிருந்து போகியாக ஆகின்றீர்கள். இது
கொடூரமான நரகம். மகான்(பெரிய அளவிற்கான) துக்கத்திற்கான சமயம்.
இப்பொழுதோ நிறைய துக்கம் வரவேண்டியதாக இருக்கிறது. அநியாயமாக
இரத்தக் களறியின் (தேவையற்ற மரணங்களின்)விளையாட்டு நடைபெறும்.
அமர்ந்தவாறே குண்டுகளை போடுவார்கள். நீங்கள் என்ன குற்றம்
செய்தீர்கள். காரணமின்றி அனைவருக்குமான விநாசம் ஏற்பட்டுவிடும்.
விநாசத்தின் சாட்சாத்காரம் என்பதை குழந்தைகள் செய்துள்ளார்கள்.
இப்பொழுது நீங்கள் சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை தெரிந்து
கொண்டீர்கள். உங்களிடம் ஞானத்தின் வாள் என்பது உள்ளது, ஞான
ஆயுதம் இருக்கின்றது. நீங்கள் பிரம்மாவின் முக வம்சாவளி
பிராமணர்கள். பிரஜாபிதா கூட தந்தையாக இருக்கின்றார்.
கல்பத்திற்கு முன்பு கூட இவர் வாய் மூலமாக வம்சம் (முக வம்சாவளி)
படைக்கப்பட்டு இருந்தது. தந்தை சொல்கின்றார் - நான் கல்பம்
கல்பமாக வருகின்றேன். இவரிடத்தில் பிரவேசம் ஆகி உங்களை முக
வம்சாவளியாக ஆக்குகின்றேன். பிரம்மா மூலமாக சுவர்கத்தின்
நிறுவுதலை செய்விக்கின்றேன். சொர்க்கத்திற்கு எதிர்காலத்தில்
தான் செல்வீர்கள். ச்சீ ச்சீ உலகம் என்பது அழிந்து போக வேண்டும்.
எல்லையற்ற தந்தை வருவதே - புதிய உலகை படைப்பதற்காக. தந்தை
சொல்கின்றார் - நான் குழந்தைகளாகிய உங்களுக்காக உள்ளங்கையில்
சுவர்கத்தை கொண்டு வந்துள்ளேன். உங்களுக்கு எந்த சிரமத்தையும்
கொடுப்பதில்லை. நீங்கள் அனைவரும் திரௌபதிகள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக்கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக
- தாயும், தந்தையுமாகிய பாப்தாதாவின் - அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீக தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) தேவதைகளை விட நீங்கள் சர்வ உத்தம பிராமணர்கள் - இந்த
ஆன்மீக போதையில் இருங்கள். ஞானம் மற்றும் யோகத்தின் மூலம்
ஆத்மாவை சுத்தமானதாக ஆக்குங்கள்.
(2) அனைவருக்கும் சிவபாபாவுடைய, அவதாரத்திற்கான வாழ்த்துக்கள்
கொடுக்கப்பட வேண்டும். தந்தையின் அறிமுகத்தை கொடுத்து,
பதீதத்திலிருந்து பாவனமாக ஆக்குங்கள். ராவணன் எதிரியிடமிருந்து
விடுதலை பெறுங்கள்.
வரதானம்:
விஸ்தாரத்தினுடைய வண்ணமயமான (கலர்புல்) விஷயங்களிலிருந்து தன்னை
ஒதுக்கிக் கொண்டு - கடினமானதை, இலகுவானதாக ஆக்கக்கூடிய சகஜயோகி
ஆகுக.
எப்பொழுது தந்தையை பார்ப்பதற்கு பதிலாக விஷயங்களை
பார்க்கின்றீர்களோ அப்பொழுது அநேக கேள்விகள் (உங்களுக்கு)
உற்பத்தி ஆகின்றது மேலும் சகஜமான விஷயம் கூட கடின மானதாக
அனுபவம் ஆக தொடங்குகின்றது ஏனெனில் விஷயங்கள் என்பது-மரம்
மேலும் தந்தை என்பவர்-விதை. விஸ்தாரத்தில் செல்பவர்கள்,
எப்பொழுது மரத்தை கையில் எடுக்கின்றார்களோ அப்பொழுது தந்தையை
ஒதுக்கி விடுகின்றார்கள், பிறகு விஸ்தாரம் என்பது ஒரு சிறையாக
ஆகி விடுகின்றது, இதில் மாட்டிக் கொள்கின்றார்கள்.
விஷயங்களுடைய விஸ்தாரத்தில் வண்ணமயமான விஷயங்கள் இருக்கின்றது
அது தன் பக்கம் (உங்களை) ஈர்க்கின்றது, எனவே விதை ரூப தந்தையின்
நினைவு மூலமாக-புள்ளி வைத்து விட்டு, அதனிடமிருந்து தன்னை
ஒதுக்கிக் கொள்ளுங்கள் அப்பொழுது சகஜயோகி ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
நான் மற்றும் எனது என்ற கலவையை (கலப்பு உலோகத்தை) அழித்து
விடுவது தான் உண்மையான தங்கம் ஆகுவதாகும்.
அவ்யக்த சமிக்ஞை : ஒற்றுமை மற்றும் நம்பிக்கையெனும் சிறப்புகள்
மூலம் வெற்றி நிரம்பியவராகுக
இப்பொழுது நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்துடன்
(ஏக்மத்) சேவையினுடைய எந்த ஒரு காரியத்தையும் பிரமாதமாக
செய்வதன் மூலம் முன்னேறிச் செல்லுங்கள். ஒவ்வொரு பிராமண
ஆத்மாவின் - சகயோகத்தின் மூலம், சுப ஆசைகள், சுப பாவனா(சுபமான
மனப்பான்மை) மூலம் சேவைகளின் சிறப்பான கொண்டாட்டத்தை
கொண்டாடுங்கள் . எங்கும் செல்ல முடிய வில்லை, உடல்நிலை
சரியில்லை எனில் வீட்டில் அமர்ந்தவாரே இந்த சேவையை செய்யுங்கள்
(சுப ஆசை, சுப பாவனை), சேவையில் கண்டிப்பாக சகயோகி ஆகுங்கள்,
அப்பொழுது அனை வரின் சகயோகத்தின் மூலம் சுகமயமான உலகம்
உருவாகும்.