14.06.26 காலை முரளி
ஓம் சாந்தி 24.10.2010 பாப்தாதா,
மதுபன்
நேரத்தின் வேகத்தின் படி இப்பொழுது விசேஷமாக சுபாவ-சன்ஸ்காரத்தை
மாற்றுவதில் வேகம் கொண்டு வாருங்கள், மனதின் மூலம்
ஆத்மாக்களுக்கு விதவிதமான கிரணங்கள் கொடுங்கள்.
இன்று நாலாப்புறங்களிலும் உள்ள பரமாத்ம இதய சிம்மாசனதாரி,
பிருகுட்டி சிம்மாசனதாரி மற்றும் உலக சிம்மாசனதாரி குழந்தைகளைப்
பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். இந்த பரமாத்ம
இதய சிம்மாசனம் பிராமணர்களாகிய உங்களுக்காக மட்டுமே இருக்கிறது.
பிரு குட்டி என்ற சிம்மாசனம் அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆனால்
பரமாத்ம சிம்மாசனம் பிராமண ஆத்மாக்களின் பாக்கியத்தில் மட்டுமே
இருக்கிறது. இந்த பரமாத்ம சிம்மாசனம் உலக சிம்மாசனம்
கொடுக்கிறது. ஆக மூன்று சிம்மாசனங்களுக்கும் அதிகாரி ஆத்மாக்கள்
பிராமணர் களாகிய நீங்கள் தான். இந்த பரமாத்ம சிம்மாசனம் எவ்வளவு
சிரேஷ்டமாக இருக்கிறது! வேறு எந்த யுகத்திலும் பரமாத்ம
சிம்மாசனம் கிடைப்பது கிடையாது. இது பரமாத்ம சிம்மாசனம் என்று
பாடப்பட்டிருக் கிறது, பரமாத்ம சிம்மாசனத்திற்கு அதிகாரிகள்
பக்தி மார்க்கத்திலும் மாலையின் மணி ரூபத்தில் புகழ் மற்றும்
பூஜிக்கப்படுகின்றனர். கோடியில் சிலர் என்ற ரூபத்தில் மகிமை
பாடப்படுகின்றனர். மிக உயர்ந்த பாவணையுடன் ஒவ்வொரு மணியையும்
மிக உயர்ந்த திருஷ்டியுடன் பார்க் கின்றனர். ஆக உங்கள்
அனைவருக்கும் போதை இருக்கிறது தானே! நம்மைத் தவிர வேறு யாரும்
இந்த சிம்மாசனத்தின் அனுபவம் செய்ய முடியாது என்ற போதை
இருக்கிறதா? ஆனால் பிராமணர் களாகிய உங்கள் அனைவரின்
பிறப்புரிமையாகும். உங்களுக்கு இந்த சிம்மாசனம் கழுத்து மாலை
யாகும். ஆக அந்த அளவிற்கு போதை இருக்கிறதா? - பகவானின் இதய
சிம்மாசனத்திற்கு அதிகாரி யாக இருக்கிறேன். இந்த போதை மற்றும்
குஷி அனைவருக்கும் சதா நினைவில் இருக்கிறதா? நான் யார்? என்பதன்
நிச்சயம் மற்றும் போதை இருக்கிறதா?
இவ்வாறு மூன்று சிம்மாசனத்திற்கு அதிகாரியாக இருக்கும்
குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார் - ஆஹா
எனது சிரேஷ்ட அதிகாரி குழந்தைகளே ஆஹா! குழந்தைகள் கூறுகின்றனர்
- ஆஹா பாபா ஆஹா! தந்தை கூறுகின்றார் - ஆஹா குழந்தைகளே ஆஹா!
சுயம் தந்தை இப்படிப்பட்ட குழந்தைகளின் மகிமை பாடுகின்றார். ஆக
நான் யார் என்ற போதை இருக்கிறதா? எந்த அளவிற்கு நிச்சயம்
இருக்கிறதோ, அந்த அளவிற்குத் தான் போதை இருக்கும். மேலும்
நிச்சயத்தின் போதை உங்களது முகம் மற்றும் நடத்தையில் தென்படும்.
யாருக்கும் நிச்சயம் இருக்கிறதோ, அவர்களுக்கு அவசியம் போதை
இருக்கும். பாப்தாதாவும் இப்பொழுது ஒவ்வொரு குழந்தையின் முகம்
மற்றும் நடத்தையின் மூலம் ஆத்மாக்களுக்கு அனுபவம் செய்விக்க
விரும்புகின்றார். வார்த்தைகளினால் அனுபவம் செய்ய ஆரம்பித்து
விட்டனர், இப்பொழுது அனுபவம் செய்யும் காரியம் ஆரம்பம்
ஆகிவிட்டது. முன்பு கேட்டனர், யோசித்தன. இப்பொழுது பிராமண
ஆத்மாக்களாகிய உங்களது ஸ்திதியின் தாக்கம் அனுபவம் செய்கின்றனர்.
எனவே தன்னைத் தான் சோதனை செய்யுங்கள் - நான் முழு நாளும்
எவ்வளவு நேரம் பரமாத்ம இதய சிம்மாசனத்தில் இருக்கிறேன்? ஏனெனில்
இந்த இதய சிம்மாசனம் உலக இராஜ்யம் அடை வதற்கு ஆதாரமாகும். எனவே
இந்த இதய சிம்மாசனத்தின் ஆதாரத்தில் எவ்வளவு நேரம் நீங்கள் இதய
சிம்மாசனத்திற்கு அதிகாரியாக இருப்பீர்களோ, அதை விட அதிக காலம்
எதிர்கால இராஜ்ய வம்சத்தில் அதிகாரியாக ஆவீர்கள். நான்
பிராமணனாக ஆனதி-ருந்து எவ்வளவு காலம் இதய சிம்மாசனதாரியாக
இருந்தேன்? என்று சோதனை செய்யுங்கள். சிம்மாசனத்தில்
வரிசைக்கிரமமாக அமர்வீர்கள், ஆனால் ஆனால் இதன் ஆதாரத்தில் சதா
இராஜ்ய குடும்பத்தில், வம்சத்தில் அதிகாரி ஆவீர்கள்.
எப்பொழுதாவது சோதனை செய்திருக்கிறீர்களா? இதய சிம்மாசனத்தை
விட்டு இறங்கி விடுவதில்லை தானே? தனது கணக்கை சோதியுங்கள்.
ஏனெனில் இதன் ஆதாரத்தில் நீங்கள் சதா இராஜ்ய வம்சத்தில்
வருவீர்கள். சிம்மாசனத்தை விட்டு ஒருபோதும் மண்ணில் கால் வைத்து
விடுவதில்லை தானே? என்று சோதனை செய்யுங்கள். 63 பிறவிகளின்
சன்ஸ்காரத்தினால் தேக அபிமானத்தில் மண்ணில் கால் வைத்தீர்கள்.
ஒன்று தேக உணர்வு, மற்றொன்று தேக அபிமானம். தேக அபிமானம் என்ற
மண் மிகவும் ஆழமானது. ஆனால் தேக உணர்வும் மண்ணாகும். மனிதர்
களும் கூறுகின்றனர் - ஒருவர் இறந்து விட்டால், எரித்து விட்டால்
அவர் மண்ணோடு மண்ணாகி விட்டார். ஆக மண்ணில் கால்கள் செல்லவில்லை
தானே? என்று சோதனை செய்யுங்கள். தேக உணர்வில் வருவரு என்றால்
மண்ணில் கால் வைப்பதாகும்.
சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுக்காக பாப்தாதா மூன்று
சிம்மாசனங்கள் கொடுத்திருக்கின்றார். ஏனெனில் செல்லமானவர்கள்
அல்லவா! செல்லமானவர்களாகவும் இருக்கிறீர்கள், பிரியமானவர்
களாகவும் இருக்கிறீர்கள். செல்லமான குழந்தையை ஊஞ்ச-ல் அல்லது
மடியில் அமர்த்திக் கொள்வர். மண்ணில் கால் வைக்க விடமாட்டார்கள்.
ஆக யார் மூன்று சிம்மாசனங்களுக்கும் அதிகாரிகளோ,
அவர்களுக்காகவும் பாப்தாதா விதவிதமான ஊஞ்சல்கள் கொடுத்
திருக்கின்றார். சில நேரம் அமைதி என்ற ஊஞ்ச-ல் ஆடுங்கள், சில
நேரம் சுகம் என்ற ஊஞ்ச-ல் ஆடுங்கள், சில நேரம் அன்பு என்ற ஊஞ்ச-ல்
ஆடுங்கள். சிம்மாசனம் மற்றும் ஊஞ்சல் இதில் மட்டுமே கால் வைக்க
வேண்டும். நான் எதிர்காலத்தில் எங்கு வருவேன்? என்ன ஆவேன்?
என்று சில குழந்தைகள் கேட்கின்றனர். தந்தை கூறுகின்றார் -
எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறீர்களோ, அவ்வளவு காலம் எனது
கால் ஊஞ்ச-ல் இருக்கிறதா? அல்லது சிம்மாசனத்தில் இருக்கிறதா?
என்று சோதனை செய்யுங்கள். அந்த அளவிற்குத் தான் எதிர்காலத்தில்
ராயல் வம்சத்தில் வருவீர்கள். ராயல் பிரஜைகளாகவும்
வரமாட்டீர்கள், ராயல் வம்சத்திற்கு வருவீர்கள். எனவே இந்த
கணக்கு ஒவ்வொருவரும் தனக்குத் தானே பாருங்கள். மற்றவர்களைப்
பார்க்காதீர்கள். தனது கணக்கு பாருங்கள். ஒவ்வொருவரும்
விரும்புவது என்ன? ராயல் வம்சம், ராஜ்ய வம்சத்திலேயே இருக்க
வேண்டும். எனவே இப்பொழுதே எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, ஏனெனில்
அழிவு திடீரென்று ஏற்படும். எதுவரை அழிவு ஏற்படுமோ, அதுவரை,
இப்பொழுதே சோதனை செய்தீர்கள் எனில் எவ்வளவு காலம் தந்தையின்
மடியில், சிம்மாசனத்தில், ஊங்ச-ல் இருப்பீர்களோ, அவ்வளவு காலம்
ராயல் குடும்பத்தில் ராயல் வம்சத்தின் பாக்கியத்தை பலனாக
அடைவீர்கள்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் முழு காலமும் 21 பிறவிகளுக்கும்
ராயல் வம்சத்தில், சூரியவம்சம் அல்லது சந்திரவம்சம், இரண்டு
யுகங்களிலும் ராயல் குடும்பத்தில் இருப்பதற்கான அதிகாரம்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் அதிகாரம் பெறுவது ஒவ்வொரு
குழந்தை யிடம் இருக்கிறது. பிரம்மா பாபாவின் மீது அன்பு
இருக்கிறது எனில் பிரம்மா பாபாவிற்கும் குழந்தைகளாகிய உங்கள்
மீது அன்பு இருக்கிறது. பிரம்மா பாபா குழந்தைகளாகிய உங்களை
ராயல் வம்சத்தில் பார்க்க விரும்புகின்றார். நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள் - பிரம்மா பாபாவின் நெருக்கத்தில் வரும் ராயல்
வம்சத்தில் இருக்கக் கூடியவர்களா? அல்லது சிறிது காலம்
இருப்பீர் களா? அல்லது தூரம் சென்று விட விரும்பவில்லை தானே!
ஆதாரம் சங்கமயுகம் என்று கூறி விட்டேன். பாப்தாதாவிற்கு
குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு இருப்பதால் தான் நீங்கள்
அனைவரும் கூறுகிறீர்கள் - கூடவே இருப்போம், கூடவே செல்வோம்
இப்பொழுது பிரம்மா பாபா மற்றும் பிராமணர்கள் கூடவே
இருக்கிறீர்கள், அது அவ்யக்த ரூபமாக, ஆனால் கூடவே
இருக்கிறீர்கள்.
இப்பொழுது பாப்தாதா பார்த்தார் - குழந்தைகளை மாயையும் இன்று வரை
விடுவதே இல்லை, அதற்கும் அன்பு இருக்கிறது. இன்றைய நாட்களில்
இரண்டு ரூபங்களில் விசேஷமாக மாயை வாய்ப்பு எடுத்துக் கொள்கிறது.
இரண்டு ரூபத்தில் வருகிறது - ஒன்று வீண் எண்ணங்கள், இரண்டாவது
அவ்வப்பொழுது, ஆங்காங்கே இந்த அலையும் இருக்கிறது - நான் என்ன
செய்தேனோ அல்லது யோசிக்கிறேனோ அது தான் சரியானது, நான்
குறைந்தவன் கிடையாது. இந்த அலை பரவியிருக்கிறது - நான் தான்
சரியானவன். ஆனால் தொடர்பில் வரக் கூடியவர்கள் அல்லது
நிமித்தமாக இருக்கக் கூடியவர்கள் இருவரும் உங்கள்
கருத்துகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா?
மற்றவர்களிடத்திலும் சரிபார்க்க வேண்டும். இந்த வீண்
எண்ணங்களினால் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஆகையால் தினசரி முரளி
சிந்தனை செய்வதற்காக, சேவை செய்வதற்காக பாப்தாதா வீட்டுப்
பாடமாக தினமும் கொடுக்கின்றார். சிந்தனை செய்யுங்கள் அல்லது
சிந்தனை செய்து செய்து அதில் மூழ்கி விடுங்கள். இந்த தினசரி
வீட்டுப் பாடம் மனதை பிசியாக வைத்துக் கொள்வதற்கான சாதனமாகும்.
கேட்பது மற்றும் சிந்திப்பது அல்லது மூழ்கி விடுவது, இதற்காகத்
தான் பாப்தாதா தினசரி வீட்டுப் பாடம் கொடுக்கின்றார்.
குழந்தைகளுக்கு அதிக வீட்டுப் பாடம் கொடுத்து விடும் போது
அவர்களது புத்தி பிசியாக ஆகிவிடுகிறது. அதே போன்று தினசரி
முரளியில் நான்கு பாடங்களுக்கான வீட்டுப் பாடம் இருக்கிறது.
மனதிற்காகவும் இருக்கிறது, வார்த்தைகளுக்காகவும் இருக்கிறது,
செயல்களிலும் கவனம் மற்றும் தெய்வீகத்திற் கான சமிக்ஞை வீட்டுப்
பாடத்தில் இருக்கிறது. எனவே வீட்டுப் பாடத்தில் பிசியாக
இருந்தீர்கள் எனில் வீண் எண்ணங்கள் வருவதற்கான இடைவெளி
இருக்காது. இந்த விதியை கடைபிடிக்கும் போது வீண் எண்ணங்கள்
தானாகவே உங்களிடம் விடை பெற்று சென்று விடும். ஏனெனில் பாப்தாதா
பார்த்தார் - நினைவு யாத்திரையில் அனைவருக்கும் வரிசைக்கிரமமான
கவனம் இருக்கிறது, வார்த்தைகளின் சேவையிலும் கவனம் இருக்கிறது.
ஆனால் இப்பொழுது தனது சன்ஸ்காரம் அல்லது பிறரது சன்ஸ்காரங்களை
மாற்ற வேண்டும், இந்த சுபாவ, சன்ஸ்காரம் இதையே நீங்கள் ராயல்
ரூபத்தில் எனது குணம் என்று கூறுகிறீர்கள், இது தாரணைக்கான
பாடம் இப்பொழுதும் ராயல் ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஆக
பாப்தாதா இன்றைய நாட்களில் இந்த சமிக்ஞை தான் கொடுக்கின்றார் -
தாரணையில் என்ன குறையிருக்கிறதோ, அதில் இப்பொழுது விசேஷ கவனம்
செலுத்த வேண்டும்.
பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார் - இந்த முக்கிய தாரணையில்
இப்பொழுது கவனம் செலுத்துங்கள். ஏதாவது விசயம் நடந்து விட்டால்
சோதனை செய்யுங்கள் - விநாடியில் முற்றுப் புள்ளி வைக்க
முடிகிறதா? முற்றுப் புள்ளி வைக்க விரும்புகின்றேன், ஆனால்
கேள்விக் குறி வந்து விடுகிறது? முற்றுப்புள்ளி அல்ல, பாதி
முற்றுப்புள்ளி வைக்கும் போது அளவு மாறி விடுகிறது. நாட்கள்
செல்ல செல்ல அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும் விநாடியில்
முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில்
கேள்விக்குறி, ஆச்சரியக் குறி சரி செய்வதற்கு நேரம் இருக்காது.
விநாடியில் முற்றுப்புள்ளி வைப்பது அவசியமானதாக இருக்கும்.
இதற்கான பயிற்சி அதிக காலம் இருக்க வேண்டும், அப்போது தான்
சரியான நேரத்தில் வெற்றி அடைய முடியும். பிரச்சனையான நேரத்தில்
சன்ஸ்காரம், சுபாவத்திற்கான சோதனைகள் இருக்கும். அதற்காக
இப்பொழுதி-ருந்தே பயிற்சி செய்தீர்கள் எனில் நீண்ட கால பயிற்சி
ஆகிவிடும், அது நாட்கள் செல்ல செல்ல உங்களுக்கு மிகுந்த உதவி
செய்யும்.
பாப்தாதா அமிர்தவேளையில் சுற்றி வந்து பார்க்கின்றார், ஒவ்வொரு
குழந்தையின் முயற்சியை சோதனை செய்கின்றார். நான்கு பாடங்களிலும்
முயற்சி தீவிரமாக இருக்கிறதா? அல்லது சாதாரணமாக இருக்கிறதா?
என்ன பார்த்தார்? நேரத்தின் வேகத்தின் படி இப்பொழுது
முயற்சியில் சதா தீவிர முயற்சி அவசியமாக இருக்கிறது. பாப்தாதா
சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருக் கின்றார் - நேரம் தீவிர
வேகத்தில் முடிவை நெருக்கத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது,
அந்த கணக்கில் இப்பொழுது விசேஷமாக சுபாவம் மற்றும்
சன்ஸ்காரங்களை மாற்றுவதில் தீவிர வேகம் தேவை.
இப்பொழுது அனைத்துக் குழந்தைகளையும் சமம் ஆக்குவதற்கு பாப்தாதா
விரும்புகின்றார். உங்களது இலட்சியமும் பாப்சமான் ஆகியே தீர
வேண்டும். இதற்கு எளிய சாதனம் - பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள்.
ஒப்பிட்டு பாருங்கள், எந்த காரியம் செய்தாலும் ஒப்பிட்டுப்
பாருங்கள். பிரம்மா பாபா இவ்வாறு காரியம் செய்வாரா அல்லது
பேசுவாரா அல்லது சங்கல்பம் செய்வாரா? முத-ல் யோசியுங்கள் பிறகு
செய்யுங்கள் என்றும் கூறப்படுகிறது. பேசுவதற்கு முன் முத-ல் எடை
போடுங்கள், பிறகு பேசுங்கள். பாப்தாதா இப்பொழுது என்ன
விரும்புகின்றார் என்று கேட்டீர்களா? நீங்களும் விரும்பத்தான்
செய்கிறீர்கள், உரையாடல் செய்கின்ற பொழுது பாப்தாதா மிகவும்
இனிமையான விசயங்களை கேட்கின்றார். உற்சாகம் நிறைந்த விசயங்கள்
மிகவும் நன்றாக பேசுகிறீர்கள் - இது செய்து காட்டுவேன், இது
செய்தே தீருவேன், இது நடந்தே தீரும். சங்கல்பம் மிகவும்
ஆர்வமுடையதாக இருக்கிறது. ஆனால் செய-ல் வரும் போது சிறிது மாறி
விடுகிறது. மற்றபடி சேவைக்கான விதவிதமான திட்டங்கள்
உருவாக்கிறீர்கள், அது பாப்தாதாவிற்கு பிடித் திருக்கிறது.
ஆங்காங்கே முன்னேற்றமும் நன்றாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது
எவ்வளவு வார்த்தைகளின் மூலம் அல்லது வித விதமான விதியின் மூலம்
செய்து கொண்டிருக்கிறீர்களோ, வெற்றியும் கிடைக்கிறது, பாப்தாதா
மகிழ்ச்சியும் அடைகின்றார். இப்பொழுது மனதின் மூலம் அநேக
ஆத்மாக்களுக்கு சுகத்தின் கிரணங்கள், அமைதியின் கிரணங்கள்,
குஷியின் கிரணங்கள், அன்பின் கிரணங்கள் சென்றடைய வேண்டும்.
இந்த சேவையும் கூடவே செய்யுங்கள். தனது சன்ஸ்காரங்களையே மாற்றக்
கூடிய அல்லது பிறரது சன்ஸ்காரங்களுக்கு உதவி செய்வதிலேயே சிலரது
நேரம் அதிகம் செல்கிறது. எனவே மனதின் சேவையின் மூலம் விதவிதமான
கிரணங்கள் ஆத்மாக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் கவனம்.
நாட்கள் செல்ல செல்ல மிகவும் அவசியமானதாக இருக்கும், இதன்
மீதும் கவனம் கொடுத்துக் கொண்டே இருங்கள். இந்த சேவை நான்
செய்து கொண்டிருக்கிறேன் என்று எந்தக் குழந்தைகள்
நினைக்கிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது, செய்து
கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். செய்யாதவர்கள் செய்ய
வேண்டும். ஏனெனில் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரயிருக்கிறது,
கேட்பவர்கள் மற்றும் கூறுபவர் கள், இருவரும் இணைவது கடினமாகி
விடும். ஆகையால் இரண்டு சேவையும் இப்பொழுதி-ருந்தே எவ்வளவு
முடியுமோ அவ்வளவு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனம்
பிசியாகவும் இருக்கும், மன்மனாபவ ஆவதும் எளிதாகி விடும். மனம்
பிசி ஆவதினால் சன்ஸ்காரம், சுபாவம் மாற்றுவதில் எளிதாக உதவி
கிடைக்கும்.
இன்று விசேஷமாக இரட்டை அயல்நாட்டினர்களின் சந்திப்பிற்கான
நாளாகும். பாப்தாதாவிற்கு குஷி ஏற்படுகிறது - ஆஹா இரட்டை
அயல்நாட்டினர்கள் ஆஹா! பாப்தாதாவிற்கு குஷி இருக் கிறது -
உலகின் மூலை முடுக்கில் மறைந்திருந்த குழந்தைகள் உலக சேவைக்காக
நிமித்தம் ஆகியிருக்கின்றனர். மேலும் பாப்தாதா கேள்விப்பட்டார்
- ஒவ்வொருவரும் அவரவர்களது ஏரியாவில், ஊர்களில் அல்லது
நகரங்களில் எஞ்சியிருக்கும் இடங்களுக்கு செல்லும் திட்டம்
உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள். இல்லையெனில் சமாப்திக்கான நேரத்தில்,
சூழ்நிலைகள் மாறும் போது பாரதத்தில் அல்லது அயல்நாட்டில் உங்கள்
அனைவரிடத்திலும் கேள்வி கேட்பார்கள் - நம்முடைய தந்தை
வந்திருக்கின்றார், நீங்கள் எங்களுக்கு கூறவேயில்லை. செய்தி
கொடுக்கிறீர்கள், இருப்பினும் கேள்வி கேட்பார்கள். ஆகையால்
இப்பொழுது செய்து கொண்டிருக்கிறிர்கள், வேறு எந்த ஒரு மூலையும்
இருந்து விடக் கூடாது, அதற்கான முயற்சி செய்யுங்கள். மற்றபடி
பாப்தாதா இரட்டை அயல்நாட்டினர் அல்லது பாரத தேசத்தினர் இரண்டு
குழந்தைகளும் நாலாப்புறங்களிலும் என்ன முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்களோ அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்.
மிக்க மகிழ்ச்சி. ஏன்? ஏன் மகிழ்ச்சி அடைகின்றார்? இப்பொழுது
பாரதத்தில், அயல்நாட்டில் இந்த திட்டம் உருவாகிக்
கொண்டிருக்கிறீர்கள், பாப்தாதாவிற்கு பிடித்திருக்கிறது. ஏதாவது
ஒரு சாதனத்தின் மூலம் செய்தி சென்றடைய வேண்டும். இந்த விஞ்ஞான
சாதனம் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவி செய்யும். நாளுக்கு
நாள் புதிது புதிதாக சாதனம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதை
காரியத் தில் தடையற்றவர்களாகி பயன்படுத்திக் கொண்டே செல்லுங்கள்.
நீங்கள் சேவைக்கான மீட்டிங் எங்கு செய்தாலும், பாப்தாதா
கேட்கின்றார், குஷியடைகின்றார். சாதனங்களை சேவையில்
பயன்படுத்துவதற்கு குழந்தைகளின் புத்தி இப்பொழுது
ஆல்ரவுண்ட்டாக சென்று கொண்டிருக் கிறது. ஆக நீங்கள் என்ன
திட்டம் உருவாக்குகிறீர்களோ, அதை பாப்தாதா கேட்கன்றார், சுற்றி
வந்து பார்க்கின்றார். நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் கூட்டம்
கூட்டுங்கள், டெல்-யில் செய்யுங்கள், உள்நாட்டில் செய்யுங்கள்
அல்லது அயல்நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் செய்யுங்கள்.
அனைத்தையும் பாப்தாதா கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
பாப்தாதாவிடமும் சாதனம் இருக்கிறது. இதற்காக பாப்தாதா
அயல்நாட்டின் ஒவ்வொரு தேசத்தி-ருந்து வந்திருக்கும்
ஒவ்வொருவருக்கும் பாப்தாதா என்ன கொடுக்கின்றார்? மிகுந்த அன்பு
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது இதில் சிறிது வேகம்
கொண்டு வாருங்கள். திட்டத்தின் நடைமுறையில் புதுப் புது
விசயங்களை கொண்டு வந்து கொண்டே இருங்கள். பாருங்கள் - உங்களது
இந்த யக்ஞம் ஆரம்பம் ஆவதற்கு சிறிது ஆண்டுகளுக்கு முன் இந்த
அனைத்து கண்டுபிடிப்புகளும் ஆரம்பமானது. உங்களது சேவைக்கு
விஞ்ஞானமும் உதவியாக இருக்கிறது. நன்றாக இலாபத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளுக்கு
நாள் பாருங்கள் எவ்வளவு புதுப்புது விசயங் கள் உருவாகிக்
கொண்டிருக்கின்றன. இந்த நாடகம் உங்களுக்கு உதவி செய்து
கொண்டிருக்கிறது. சாதனம் உங்களுக்கு உதவி செய்து
கொண்டிருக்கிறது. நல்லது.
அனைவரும் சதா குஷியாக இருக்கிறீர்கள் தானே! சதா குஷியாக
இருக்கிறீர்களா? யார் சதா குஷியாக இருக்கிறீர்களோ, அவர்கள் கை
உயர்த்துங்கள். சதா குஷி. ஏதாவது விசயம் நடந்து விட்டாலும் குஷி?
பிரச்சனைகள் வருகின்றன அல்லவா! இருப்பினும் குஷியாக
இருக்கிறீர்களா? இருக்கிறீர்களா? நன்றாக கை உயர்த்துங்கள்.
வரவேற்பு செய்கிறீர்கள் தானே! பயப்படுவது கிடையாது, வரவேற்பு
செய்கிறீர்கள். அனுபவிகளாக ஆக்குகிறது. இந்த தடைகள் அனுபவ
அதாரிட்டியை அதிகப்படுத்துகிறது. மாயை வந்து விட்டது, மாயை
வந்து விட்டது என்று கூறாதீர்கள். இது பேப்பர் ஆகும். மாயை-மாயை
என்று கூறி மாயாவை முன்னேறுகிறீர்கள். பேப்பர் ஆகும். மாயை
நீங்கள் அறிந்து கொண்டீர்கள். எவ்வளவு ஆண்டுகளாக
அறிந்திருக்கிறீர்கள். மாயை என்றால் என்ன? ஆகையால் மாயாவைப்
பார்த்து பயப்படாதீர்கள். பேப்பர் என்று புரிந்து கொண்டு குஷி
குஷியாக அனுபவ வகுப்பில் முன்னேறுங்கள். இந்த வகுப்பில்
முன்னேற வேண்டும். என்ன செய்வது, எப்படி செய்வது, ஏன், எதற்கு
என்று குழப்பமடையக் கூடாது. இவ்வாறு யோசிப்பது பிராமணர்களின்
வேலை கிடையாது. திரிகாலதர்சியாக இருக்கிறீர்கள். ஏன், எதற்கு,
எப்படி என்பது வரவே முடியாது. பேப்பர் வந்தது, அனுபவ வகுப்பில்
முன்னேறுவீர்கள். குஷியாக இருக்கிறீர்கள். இப்பொழுது
அனுபவிகளாக ஆகிவிட்டீர்கள் மற்றும் ஆகிக் கொண்டே இருப்பீர்கள்.
நல்லது.
கடிதம், தொலைபேசி மற்றும் அன்பு நினைவுகள் அல்லது செய்தி
பாப்தாதாவிற்காக வந்திருக்கிறதோ, அந்த அனைத்துக்
குழந்தைகளுக்கும் பாப்தாதா தனது கண்களில் வைத்துக் கொண்டு அன்பு
நினைவுகள் அல்லது சேவைச் செய்திகள் அல்லது மனதிற்கான முயற்சி
பற்றிய செய்தி அனுப்பியிருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும்
பாப்தாதா மனதின் மூலம் வெளிப்படுத்தி சுகம், அமைதி, குஷியின்
கிரணங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சிலர் இங்கு அனுப்பி
வைக்காமல் இருந்தாலும் உள்ளத்தில் சங்கல்பம் செய்தாலும் அந்த
சங்கல்பமும் தந்தையிடம் வந்து சேர்ந்து விட்டது.
நாலாப்புறங்களிலும் உள்ள தைரியமான குழந்தைகளாகி தந்தையின் உதவி
அடையக் கூடிய, இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
மேலும் இந்த ஆண்டு தனக்காக அல்லது சேவை நிலையத்திற்காக அல்லது
உலக ஆத்மாக்களுக்காக ஏதாவது அப்படிப்பட்ட திட்டம் உருவாக்க
வேண்டும், சேவையின் பலம் மற்றும் பலன் அனைத்து ஆத்மாக்களுக்கும்
கிடைக்க வேண்டும். நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு
பாப்தாதாவின் உள்ளப்பூர்வமான அன்பு மற்றும் அன்பு நினைவுகள்
ஏற்றுக் கொள்ளுங்கள். ஓம் சாந்தி.
ஆசீர்வாதம்:
சாதாரண நிலையின் மூலம் மகான் நிலையை பிரசித்தப்படுத்தக் கூடிய
எளிமையான மற்றும் உதாரணமானவர் ஆகுக.
ஒரு எளிய பொருள் சுத்தமாக இருந்தது எனில் அது தன் பக்கம்
அவசியம் ஈர்க்கும். அதே போன்று மனதின் எண்ணத்தில்,
சம்பந்தத்தில், விவகாரத்தில், இருக்கும் இடத்தில் யார்
எளிமையாக மற்றும் சுத்தமாக இருக்கிறார்களோ, அவர்கள்
உதாரணமானவர்களாகி அனைவரையும் தன் பக்கம் தானாகவே ஈர்ப்பார்கள்.
எளிமை என்றால் சாதாரணம். சாதாரண நிலையின் மூலம் தான் மகான் நிலை
பிரசித்தம் ஆகும். யார் சாதாரணம் அதாவது எளிமையாக இல்லையோ,
அவர்கள் பிரச்சனை ரூபமாக ஆகிவிடுகின்றனர்.
சுலோகன்:
என்னுடைய பாபா என்று மனதார கூறினால் மாயை மயக்கத்தில்
மூடியிருந்த கண் திறக்கப்பட்டு விடும்.
அவ்யக்த சமிக்ஞை : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றால் தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
அவ்வப்பொழுது சப்தங்களில், அவ்வப்பொழுது சப்தங்களை கடந்து
செல்ல வேண்டும். எந்த அளவிற்கு இந்த பயிற்சி சரளமாக மற்றும்
சகஜமாக ஆகிவிடுகிறதோ, அந்த அளவிற்கு சம்பூர்ண நிலை
நெருக்கத்தில் தென்படும். சம்பூர்ன நிலையின் அடையாளம் -
அவர்களது முயற்சி சரளமாக இருக்கும். நினைவு யாத்திரை, சேவை
இரண்டும் சகஜ முயற்சியில் வந்து விடுகின்றன. எப்போது இரண்டிலும்
சரளம், சகஜம் அனுபவம் ஏற்படுமோ, அப்போது புரிந்து கொள்ளுங்கள்
சம்பூர்ன நிலை பிராப்தியாக அடையப் போகிறோம்.