14.07.24 காலை முரளி
ஓம் சாந்தி 25.11.20 பாப்தாதா,
மதுபன்
பாப்சமான் ஆவதற்கு இரண்டு விசயங்களில் திடமாக இருங்கள் -
சுவமானத்தில் இருக்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் மரியாதை
கொடுக்க வேண்டும்.
இன்று பாப்தாதா தனது அன்பிலும் அன்பான, இனிமையிலும் இனிமையான
சிறிய பிராமணக் குடும்பம் என்று கூறலாம், பிராமண உலகம் என்று
கூறலாம், அதை பார்த்துக் கொண்டிருக் கின்றார். இந்த சிறிய உலகம்
எவ்வளவு விடுபட்டதாகவும் இருக்கிறது, அன்பானதாகவும் இருக்கிறது!
ஏன் அன்பானதாக இருக்கிறது? ஏனெனில் இந்த பிராமண உலகின் ஒவ்வொரு
ஆத்மாவும் விசேஷ ஆத்மாவாகும். பார்ப்பதற்கு மிக சாதாரண
ஆத்மாக்களாக இருக்கின்றனர். ஆனால் அனைத்தையும் விட மிகப் பெரிய
விசேஷதா ஒவ்வொரு பிராமண ஆத்மாவிடமும் இருப்பது பரம் ஆத்மாவை
தனது தெய்வீக புத்தியின் மூலம் அறிந்து கொள்வதாகும். 90 வயதான
வயோதிகராக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், பரமாத்மாவை
அறிந்து கொள்ளும் தெய்வீக புத்தி, தெய்வீகக் கண் பிராமண
ஆத்மாக்களைத் தவிர வேறு எந்த பிரபல மான வி.வி.ஐ.பி களிடமும்
கிடையாது. அனைத்து தாய்மார்களும் இங்கு ஏன் வந்திருக் கிறீர்கள்?
நடக்க முடிந்தாலும், முடியாவிட்டாலும் வந்து சேர்ந்து
விட்டீர்கள். அறிந்து கொண்டதால் தான் வந்து
சேர்ந்திருக்கிறீர்கள் அல்லவா! அறிந்து கொள்ளும் இந்த கண்,
அறிந்து கொள்ளும் புத்தி உங்களைத் தவிர வேறு யாரும்
பிராப்தியாக அடையவே முடியாது. அனைத்து தாய்மார்களும் இந்த
பாட்டு பாடுகிறீர்கள் தானே - நான் பார்த்து விட்டேன், நான்
அறிந்து கொண்டேன் தாய்மார்களுக்கு இந்த போதை இருக்கிறதா? கை
அசைத்துக் கொண்டிருக்கிறார்கள், மிகவும் நன்று. பாண்டவர்களுக்கு
போதை இருக்கிறதா? ஒருவரை விட ஒருவர் முன்னால் இருக்கிறீர்கள்.
சக்திகளிடமும் குறையில்லை, பாண்டவர்களிடமும் குறை யில்லை. ஆனால்
பாப்தாதாவிடம் இந்த குஷி இருக்கிறது - இந்த சிறிய உலகம் எவ்வளவு
அன்பானதாக இருக்கிறது! தங்களுக்குள் சந்தித்துக் கொள்ளும்
போதும் எவ்வளவு அன்பான ஆத்மாக்களாக தோன்றுகிறது.
உள்நாடு, அயல்நாட்டின் அனைத்து குழந்தைகளின் மூலம் இன்று
பாப்தாதா இந்த ஒரு உள்ளப் பூர்வமான பாட்டு கேட்டுக்
கொண்டிருந்தார் - பாபா, இனிமையான பாபா, நாம் அறிந்து கொண்டோம்,
நாம் பார்த்து விட்டோம். நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகள்
இந்த பாட்டு பாடி பாடி ஒன்று குஷி, மற்றொன்று அன்புக் கட-ல்
மூழ்கியிருந்தனர். இங்கு சாகாரத்தில் இல்லையென்றாலும்
நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள் உள்ளத்தில, திருஷ்டியில்
பாப்தாதாவின் எதிரில் இருக்கின்றனர். சாகாரத்தில் தூரத்தில்
அமர்ந்திருக்கும் குழந்தை களை பாப்தாதா எதிரில் தான் பார்த்துக்
கொண்டிருக்கின்றார். உள்நாட்டில் இருந்தாலும், அயல் நாட்டில்
இருந்தாலும் பாப்தாதா எவ்வளவு நேரத்தில் சென்றடைவார்? சுற்றி
வர முடியுமா? பாப்தாதா நாலாப்புறங்களிமும் உள்ள குழந்தைகளுக்கு
கைமாறாக பல கோடி மடங்கை விட அதிகமாக அன்பு நினைவுகள் கொடுத்துக்
கொண்டிருக் கின்றார். நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளைப்
பார்த்து பார்த்து அனைவரின் உள்ளத்திலும் ஒரே ஒரு சங்கல்பத்தை
தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவரும் கண்களில் இதையே
கூறிக் கொண்டிருக்கிறீர்கள் - பரமாத்மா 6 மாதத்திற்கு கொடுத்த
வீட்டுப் பாடம் எங்களுக்கு நினைவிருக்கிறது. உங்கள்
அனைவருக்கும் நினைவிருக்கிறது தானே? மறந்து விடவில்லை தானே?
பாண்டவர்களுக்கு நினைவிருக்கிறதா? நன்றாக நினைவிருக்கிறதா?
பாப்தாதா அடிக்கடி ஏன் நினைவுப்படுத்து கின்றார்? காரணம்?
நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், பிராமண ஆத்மாக்கள்
தன்னையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனம் இளைஞனாக ஆகிக்
கொண்டிருக்கிறது, உடல் வயோதிகனாக ஆகிக் கொண்டிருக்கிறது. நேரம்
மற்றும் ஆத்மாக்களின் கூக்குரல் நன்றாக கேட்க முடிகிறது தானே!
பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - ஆத்மாக்களின் கூக்குரல்
உள்ளத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது - ஹே சுகத்தை
கொடுப்பவரே, ஹே அமைதி கொடுப்பவரே, ஹே உண்மையான குஷி கொடுப்பவரே,
எங்களுக்கு சிறிதளவு அஞ்ச- கொடுங்கள். யோசியுங்கள், கூக்குரல்
செய்பவர்களின் வரிசை எவ்வளவு பெரியதாக இருக்கிறது! பாபாவின்
பிரத்ட்சயதா மிக விரைவில் ஏற்பட்டு விட வேண்டும் என்று நீங்கள்
நினைக்கிறீர்கள். ஆனால் பிரத்ட்சயதா எந்த காரணத்தினால்
தடைபட்டிருக்கிறது? நீங்கள் அனைவரும் கூட இந்த சங்கல்பம் தான்
செய்கிறீர்கள், உள்ளத்தில் இதையே விரும்பவும் செய்கிறீர்கள்,
வாயினாலும் இதையே கூறுகிறீர்கள் - நான் பாப்சமான் ஆக வேண்டும்.
ஆக வேண்டும் தானே? ஆக வேண்டுமா? நல்லது, பிறகு ஏன் ஆகாமல்
இருக்கிறீர்கள்? பாப்சமான் ஆக வேண்டும் என்று பாப்தாதா
கூறியிருக்கின்றார். என்ன ஆகவேண்டும், எப்படி ஆக வேண்டும் -
சமம் என்ற வார்த்தையில் இந்த இரண்டு கேள்விகளும் எழுப்ப
முடியாது. என்ன ஆக வேண்டும்? பதில் இருக்கிறது அல்லவா -
பாப்சமான் ஆக வேண்டும். எப்படி ஆக வேண்டும்?
தந்தையை பின்பற்ற வேண்டும் - தாய், தந்தையின் அடிகளை பின்பற்ற
வேண்டும். நிராகார தந்தை, சாகார பிரம்மா தாய்.
பின்பற்றுவதற்கும் வரவில்லையா? இன்றைய நாட்களில் குருடர் களும்
பின்பற்றி விடுகின்றனர். பார்த்திருப்பீர்கள், இன்றைய நாட்களில்
அந்த மரக் குச்சியின் ஓசை, மரக்குச்சியை பின்பற்றி பின்பற்றி
எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றடைந்து விடுகின்றனர். நீங்கள்
மாஸ்டர் சர்வ சக்திவான்கள், திரிநேத்திரிகள் (மூன்று கண்கள்
உடையவர்கள்), திரிகாலதர்சிகள். பின்பற்றுவது உங்களுக்கு ஒன்றும்
பெரிய விசயம் கிடையாது. பெரிய விசயமா என்ன? சொல்லுங்கள் பெரிய
விசயமா? இல்லை தான், ஆனால் பெரிய விசயமாக ஆகிவிடுகிறது.
பாப்தாதா அனைத்து இடங்களுக்கும் சேவை நிலையங் களுக்கும்,
குடும்பத்தில் உள்ளவர்களின் வீட்டிற்கும் சென்று பார்க்கின்றார்.
ஒவ்வொரு பிராமண ஆத்மாவிடத்திலும், ஒவ்வொரு சேவை நிலையத்திலும்,
ஒவ்வொரு குடும்பத்தினரின் வீட்டிலும் இங்கு, அங்கு என்று
பிரம்மா பாபாவின் சித்திரங்கள் அதிகம் வைத்திருப்பதை பாப்தாதா
பார்த்தார். அவ்யக்த பாப்தாதா அல்லது பிரம்மா பாபா என்று
சித்திரங்கள் தான் தென்படுகிறது. நல்ல விசயம் தான். ஆனால்
சித்திரத்தை பார்க்கையில் சரித்திரத்தின் நினைவும் வரும் தானே!
என்று பாப்தாதா யோசிக்கின்றார். அல்லது சித்திரம் மட்டுமே
பார்க்கிறீர்களா? சித்திரத்தைப் பார்த்து தூண்டுதல்
அடைகிறீர்கள் தானே! ஆக பாப்தாதா வேறு எதுவும் கூறவில்லை, ஒரே
ஒரு வார்த்தை மட்டுமே கூறுகின்றார் - பின்பற்றுங்கள் போதும்.
யோசிக்காதீர்கள், அதிக திட்டங்கள் உருவாக்காதீர்கள், இது
கிடையாது அது செய்யலாம், இப்படி அல்ல அப்படி செய்யலாம். பாபா
என்ன செய்தாரோ, (நகல்) காபி செய்யுங்கள், போதும். காபி செய்ய
வரவில்லையா? இன்றைய நாட்களில் விஞ்ஞானம் போட்டோகாபி (ஜெராக்ஸ்)
மிசினும் கண்டுபிடித்திருக்கிறது. கண்டுபிடித்திருக்கிறது தானே!
இங்கு ஜெராக்ஸ் இருக்கிறது தானே? எனவே தான் இங்கு பிரம்மா
பாபாவின் சித்திரம் வைக்கின்றோம். வைத்துக் கொள்ளுங்கள்,
நன்றாக வைத்துக் கொள்ளுங்கள், பெரியதாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் போட்டோ காபியும் செய்யுங்கள்.
ஆக இன்று பாப்தாதா நாலாப்புறங்களிலும் சுற்றி வந்து இதை
பார்த்துக் கொண்டிருந்தார் - சித்திரத்தின் மீது அன்பு
இருக்கிறதா? அல்லது சரித்திரத்தின் மீது அன்பு இருக்கிறதா?
சங்கல்பமும் இருக்கிறது, ஆர்வமும் இருக்கிறது, இலட்சியமும்
இருக்கிறது, பாக்கி என்ன வேண்டும்? எந்த ஒரு பொருளையும் நன்றாக
உறுதியுடையதாக ஆக்குவதற்கு நான்கு திசைகளிலும் பக்கா
செய்வார்கள். மூன்று திசைகளில் பக்காவாக இருக்கிறது, ஒரு திசை
இன்னும் பக்கா ஆக வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்தார்.
சங்கல்பமும் இருக்கிறது, இலட்சியமும் இருக்கிறது. என்ன ஆக
வேண்டும்? என்று யாரிடத்தில் கேட்டாலும் ஒவ்வொரு வரும்
பாப்சமான் ஆக வேண்டும் என்று கூறுகிறீர்கள். பாபாவை விட
குறைவாக ஆக வேண்டும் என்று யாரும் கூறுவது கிடையாது. சமம் ஆக
வேண்டும். நல்ல விசயம். ஒரு திசையை உறுதியானதாக ஆக்குகிறீர்கள்,
ஆனால் நாளடைவில் தளர்ந்து விடுகிறது. அது திடமானதாக இருக்க
வேண்டும். சங்கல்பம் இருக்கிறது, இலட்சியம் இருக்கிறது. ஆனால்
ஏதாவது பிரச்சனை வந்து விடுகிறது, சாதாரண வார்தையில் நீங்கள்
அதை விசயங்கள் வந்து விடுகிறது என்று கூறுகிறீர்கள். அது திட
தன்மையை தளர்த்தி விடுகிறது. திட தன்மை என்றால் - இறந்தாலும்,
அழிந்து போனாலும் செய்த சங்கல்பத்தை விடமாட்டேன். தலை குனிய
வேண்டியிருக்கும், உயிருடன் இருந்து இறக்க வேண்டியிருக்கும்,
தன்னை வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும், பொறுத்து போக
வேண்டியிருக்கும், கேட்க வேண்டியிருக்கும். ஆனால் சங்கல்பம்
விட்டு விடக் கூடாது. இது திடதா என்று கூறப்படுகிறது. சிறு சிறு
குழந்தைகள் ஓம் நிவாஸ் வந்த பொழுது பிரம்மா பாபா அவர்களை
மகிழ்வித்துக் கொண்டே நினைவு ஏற்படுத்தினார், உறுதியானவர்களாக
ஆக்கினார் - அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அதிக மிளகாய்
சாப்பிட வேண்டும், பயப்படக் கூடாது. பிறகு கண் முன் கைகளால்
இவ்வாறு காண்பிப்பார் .. ஆக பிரம்மா பாபா சிறு சிறு குழந்தைகளை
பக்கா செய்தார், பிரச்சனைகள் எவ்வளவு வந்தாலும், சங்கல்பம்
என்ற கண் அசையக் கூடாது. அது சிகப்பு மிளகாய் மற்றும் தண்ணீர்
குவளை வைத்தார், ஏனெனில் சிறு குழந்தைகளாக இருந்தனர் அல்லவா!
நீங்கள் அனைவரும் இப்பொழுது பெரியவர்களாக இருக்கிறீர்கள். எனவே
இன்றும் பாப்தாதா குழந்தைகளிடம் கேட்கின்றார் - உங்களது
சங்கல்பம் திடமாக இருக்கிறதா? பாப்சமான் ஆகியே தீர வேண்டும்
என்று சங்கல்பத்தில் திடமாக இருக்கிறீர்களா? ஆகவேண்டும் என்பது
கிடையாது, ஆகியே தீர வேண்டும். நல்லது, இதற்கு கை அசையுங்கள்.
டி.வி. -க்காரர்கள் பதிவு செய்து கொள்ளுங்கள். டி.வி
பயன்பாட்டிற்கு வரும் அல்லவா! கைகளை உயர்வாக தூக்குங்கள்.
நல்லது, தாய்மார்களும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
கடைசியில் அமர்ந்திருப்பவர்கள் இன்னும் உயரமாக கை உயர்த்துங்கள்.
மிக்க நல்லது. கேபினில் அமர்ந்திருப்பவர்கள் உயர்த் தவில்லை.
கேபினில் இருப்பவர்கள் நிமித்தமானவர்கள். நல்லது. சிறிது
நேரத்திற்கு கைகளை உயர்த்தி பாப்தாதாவை மகிழ்வித்து விட்டீர்கள்.
இப்பொழுது பாப்தாதா குழந்தைகளிடம் ஒரே ஒரு விசயம் தான்
செய்விக்க விரும்புகின்றார். சொல்ல விரும்பவில்லை, செய்விக்க
விரும்புகின்றார். தனது மனதில் திடதன்மை கொண்டு வாருங்கள்.
சிறிய விசயத்திற்கு சங்கல்பத்தை தளர்த்திக் கொள்ளாதீர்கள்.
ஒருவர் நிந்தனை செய்தாலும், பொறாமைபட்டாலும்,
அவமானப்படுத்தினாலும், ஏதாவது துக்கம் கொடுத்தாலும் உங்களது
சுப பாவனை அழிந்து விடக் கூடாது. நாம் மாயாவை, இயற்கையை மாற்றக்
கூடியவர்கள், உலகை மாற்றக் கூடியவர்கள் என்று நீங்கள் சவால்
விடுகிறீர்கள். தனது தொழில் நினைவிருக்கிறது தானே? உலகை
மாற்றுபவர்கள் அல்லவா! ஒருவேளை ஒருவர் தனது சன்ஸ்காரத்திற்கு
வசமாகி உங்களுக்கு துக்கம் கொடுத்தாலும், அடித்தாலும், அசைத்
தாலும் - நீங்கள் துக்கத்தின் விசயத்தை சுகமாக மாற்றி விட
முடியாதா? நிந்தனையை பொறுத்துக் கொள்ள முடியாதா? திட்டுபவரை
ரோஜாவாக ஆக்கி விட முடியாதா? பிரச்சனைகளை பாப்சமான் ஆவதற்கான
சங்கல்பமாக மாற்றி விட முடியாதா? உங்கள் அனைவருக்கும்
நினைவிருக்கும் - எப்போது நீங்கள் பிராமண பிறப்பு எடுத்தீர்களோ,
நிச்சயம் செய்தீர்கள் - அது ஒரு விநாடியில் செய்திருக்கலாம்
அல்லது ஒரு மாதத்தில் செய்திருக் கலாம், நான் பாபாவினுடையவன்,
பாபா என்னுடையவர் என்ற நிச்சயம் மனதார செய்தீர்கள். சங்கல்பம்
செய்தீர்கள் தானே! அனுபவம் செய்தீர்கள் தானே! அப்போதி-ருந்தே
நான் மாயாஜீத் ஆவேன் என்று மாயாவிற்கு சவால் விடுத்தீர்கள்.
இந்த சவால் மாயாவிடம் விடுத்தீர்கள் தானே? மாயாஜீத் ஆக வேண்டுமா
இல்லையா? நீங்கள் தான் மாயாஜீத் ஆக வேண்டுமா? அல்லது வேறு
யாராவது வர வேண்டுமா? மாயாவிற்கு சவால் விடுத்திருக்கிறீர்கள்
எனில் இந்த பிரச்சனைகள், விசயங்கள், குழப்பங்கள் போன்றவைகள்
மாயாவின் ராயல் ரூபமாகும். மாயை வேறு எந்த ரூபத்திலும் வரவே
வராது. இந்த ரூபத்தில் தான் மாயாஜீத் ஆக வேண்டும். விசயங்கள்
மாறாது, சேவை நிலையம் மாறாது, இடம் மாறாது, ஆத்மாக்கள் மாற
மாட்டார்கள், நான் மாற வேண்டும். உங்களுடைய சுலோகன்
அனைவருக்கும் மிக நன்றாக பிடித்திருக்கிறது - மாறி காட்ட
வேண்டும், மாற்ற வேண்டும் அல்ல, மாற வேண்டும். இது பழைய சுலோகன்.
புதுப்புது ரூபத்தில் ராயல் ரூபத்தில் மாயை இன்னும் அதிகமாக
வரயிருக்கிறது, பயப்படாதீர்கள். பாப்தாதா அடிக்கோடிட்டு
கூறுகின்றார் - மாயா இந்த மாதிரியான ரூபத்தில் வரும், வந்து
கொண்டிருக்கிறது. இது மாயை என்று உணரவே முடியாது. தாதி இது மாயை
இல்லை, இது உண்மையான விசயம், நீங்கள் சரியாக புரிந்து
கொள்ளவில்லை என்று கூறுவீர்கள். இன்னும் ராயல் ரூபத்தில்
வரயிருக்கிறது, பயப்படாதீர்கள். ஏன்? ஒரு எதிரி தோல்வியடைகிறார்
அல்லது வெற்றியடைகிறார் எனில் அவரிடத்தில் என்ன என்ன சிறிய
பெரிய ஆயுதங்கள் இருக்கிறதோ அதை பயன்படுத்துவாரா
பயன்படுத்தமாட்டாரா? பயன்படுத்துவார் தானே? எனவே மாயாவிற்கும்
அழிவு ஏற்பட இருக்கிறது. ஆனால் எவ்வளவு அழிவு நெருங்குகிறதோ,
அவ்வளவு அது புதுப்புது ரூபத்தில் தனது ஆயுதங்களை பயன்படுத்திக்
கொண்டிருக்கிறது, பயன்படுத்தும். பிறகு உங்களது பாதங்களில்
தலைவணங்கும். முத-ல் உங்களை தலைவணங்க வைக்க முயற்சிக்கும்,
பிறகு சுயம் தலைவணங்கி விடும். இன்று பாப்தாதா ஒரே ஒரு
வார்த்தையை அடிக்கடி அடிகோடிட்டு கூறிக் கொண்டிருக்கின்றார் -
பாப்சமான் ஆக வேண்டும். நீங்கள் உங்களது இந்த இலட்சியத்தின்
சுவமானத்தில் இருங்கள் மற்றும் மரியாதை கொடுப்பது என்றால்
மரியாதை அடைவதாகும். மரியாதை கேட்பதனால் கிடைத்து விடாது,
கொடுப்பது என்றால் அடைவதாகும். மரியாதை கொடுங்கள் என்று கேட்பது
யதார்த்தம் அல்ல. மரியாதை கொடுப்பதில் தான் அடைவது இருக்கிறது.
சுவமானம் என்பது தேக அபிமானத்திற்கான சுவமானம் அல்ல. பிராமண
வாழ்க்கையின் சுவமானம், சிரேஷ்ட ஆத்மாவின் சுவமானம், சம்பன்ன
நிலையின் சுவமானம். ஆக சுவமானத்தில் இருக்க வேண்டும், பிறகு
மரியாதை கேட்க வேண்டாம், கொடுத்து அடைய வேண்டும் என்ற இந்த
இரண்டு விசயங்களில் திடமாக இருங்கள். உங்களது திடத்தன்மையை
ஒருவர் எவ்வளவு அசைக்க நிலைத்தாலும், தளர்வாக்காதீர்கள்.
உறுதியாக்குங்கள், ஆடாதவர்களாக ஆகுங்கள். அப்போது தான்
பாப்தாதாவிடம் 6 மாதத்திற்காக கூறிய உறுதிமொழி, உறுதிமொழி
நினைவிருக்கிறது தானே! இப்போது 15 நாட்கள் முடிவடைந்து விட்டது,
இன்னும் ஐந்தரை மாதம் இருக்கிறது என்று பார்துக்
கொண்டிருக்காதீர்கள். உரையாடல் செய்கின்ற பொழுது –
அமிர்தவேளையில் உரையாடல் செய்கிறீர்கள், பாப்தாதாவிடம் மிக
நல்ல நல்ல விசயங்களை கூறுகிறீர்கள். தனது விசயங்களை அறிவீர்கள்
தானே? எனவே இப்பொழுது திடதன்மையை கடைபிடியுங்கள். தலைகீழான
விசயங்களில் திடமாக இருக்காதீர்கள். கோபப்பட்டு ஆக வேண்டும்
என்பதில் எனக்கு திட நிச்சயம் இருக்கிறது என்று இருக்கக் கூடாது.
ஏன்? இன்றைய நாட்களில் விதவிதமான ரூபத்தில் கோபத்திற்கான
ரிப்போர்ட் வருகிறது. மிகப் பெரிய ரூபம் என்பது குறைவாக
இருக்கிறது, ஆனால் அம்சத்தின் ரூபத்தில் விதவிதமான முறையில்
கோபம் அதிகம் இருக்கிறது. கோபம் எத்தனை ரூபத்தில் இருக்கிறது?
என்பதைப் பற்றி வகுப்பு நடத்துங்கள். பிறகு என்ன கூறுகிறீர்கள்,
என்னுடைய உணர்வு அவ்வாறு இல்லை, என்னுடைய பாவனை இல்லை,
தற்செயலாக கூறி விட்டேன். இதைப் பற்றி வகுப்பு நடத்துங்கள்.
ஆசிரியர்கள் அதிகம் வந்திருக்கிறீர்கள் அல்லவா? (1200
ஆசிரியர்கள் இருக்கின்றனர்). 1200 பேரும் திட சங்கல்பம்
செய்தால் நாளைக்கே மாற்றம் ஏற்பட்டு விடும். பிறகு இவ்வளவு
விபத்து ஏற்படாது, அனைவரும் தப்பித்து விடுவீர்கள். ஆசிரியர்கள்
கை உயர்த்துங்கள். அதிகம் இருக்கிறீர்கள். ஆசிரியர் என்றால்
பொறுப்பான அஸ்திவாரம். ஒருவேளை அஸ்திவாரம் உறுதியாக அதாவது
திடமாக இருந்தது எனில் மரம் தானாகவே சரியாகி விடும். இன்றைய
நாட்களில் உலகிலும், பிராமண உலகிலும் ஒவ்வொருவருக்கும் தைரியம்
மற்றும் உண்மை யான அன்பு தேவைப்படுகிறது. மேலோட்ட அன்பு அல்ல,
சுயநல்ல அன்பு அல்ல. ஒன்று உண்மையான அன்பு, இரண்டாவது தைரியம்.
ஒருவர் 95 சதவிகிதம் சன்ஸ்காரத்திற்கு வசமாகியிருக்கிறார் என்று
வைத்துக் கொள்ளுங்கள், வசமாகி ஏதாவது தவறு செய்து விட்டார்.
ஆனால் 5 சதவிகிதம் நல்லது செய்திருக்கிறார். இருப்பினும்
நீங்கள் அவரது 5 சதவிகித நல்லதை பார்த்து முத-ல் அவரிடத்தில்
நீங்கள் இதை நன்றாக செய்தீர்கள் என்று கூறி தைரியம்
உருவாக்குங்கள். பிறகு இதை சரி செய்து கொள்ளுங்கள் என்று
அவரிடம் கூறுங்கள். அவருக்கு பாதிப்பு ஏற்படாது. பதிலாக நீ ஏன்
இதை செய்தாய்? இவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று கூறினால்
பாவம் அவர் ஏற்கெனவே சன்ஸ்காரத்திற்கு வசமாகியிருக்கிறார்,
பலவீனமாக இருக்கிறார், பிறகு இன்னும் பாதிப்படைந்து விடுவார்.
முன்னேற்றம் ஏற்படாமல் போய் விடும். 5 சதவிகிதத்திற்கு முத-ல்
தைரியம் ஏற்படுத்துங்கள், உன்னிடம் இந்த விசயம் மிக நன்றாக
இருக்கிறது, இதை உன்னால் நன்றாக செய்ய முடியும். பிறகு நேரம்
மற்றும் அவரது சொரூபத்தை புரிந்து கொண்டு அறிவுரை கூறும் போது
அவர் மாறி விடுவார். தைரியம் கொடுங்கள், வசமாகியிருக்கும்
ஆத்மாவிடம் தைரியம் இருக்காது. பாபா உங்களுக்கு எப்படி மாற்றம்
ஏற்படுத்தினார்? உங்களது குறைகளை கூறினாரா? நீ விகாரியாக
இருக்கிறாய், நீ அசுத்தமாக இருக்கிறாய் என்று கூறினாரா? நீ ஒரு
ஆத்மா என்று நினைவு ஏற்படுத்தினார். இந்த நினைவின் மூலம்
உங்களுக்குள் சக்தி வந்து விட்டது, மாற்றம் ஏற்பட்டது. எனவே
தைரியத்திற்கான நினைவுகளை ஏற்படுத்துங்கள். நினைவு என்பது
தானாகவே சக்தி கொடுக்கும். புரிந்ததா! ஆக இப்போது சமம்
ஆகிவிடுவீர்கள் தானே? ஒரே ஒரு வார்த்தை நினைவு செய்தால் போதும்
- தந்தையை பின்பற்ற வேண்டும். பாபா என்ன செய்தாரோ, அதை செய்தால்
போதும். அடி மீது அடி வைக்க வேண்டும். பிறகு சன்ம் ஆவது எளிதாக
அனுபவம் ஆகும்.
நாடகம் சிறிய சிறிய விளையாட்டுக்களை காண்பித்துக் கொண்டே
இருக்கிறது. ஆச்சரியக் குறி போடமாட்டீர்கள் தானே? நல்லது.
அநேக குழந்தைகளின் வாழ்த்து அட்டை, பத்திரம், உள்ளத்தின் பாட்டு
பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விட்டது. என்னுடைய நினைவும்
கொடுங்கள், என்னுடைய நினைவும் கொடுங்கள் என்று அனைவரும்
கூறுகின்றனர். ஆக தந்தையும் கூறுகின்றார் என்னுடைய அன்பு
நினைவுகளும் கொடுங்கள். தந்தையும் நினைவு செய்கின்றார்,
குழந்தைகளும் நினைவு செய்கின்றனர். ஏனெனில் இந்த சிறிய உலகில்
இருப்பதே பாப்தாதா மற்றும் குழந்தைகள் தான், மற்ற உறவுகள்
கிடையாது. பிறகு யாருடைய நினைவு வரும்? குழந்தை களுக்கு தந்தை,
தந்தைக்கு குழந்தை. ஆக உள்நாடு-வெளிநாட்டு குழந்தைகளுக்கு
பாப்தாதாவும் மிக மிக மிக மிக அன்பு நினைவுகள் கொடுக்கின்றார்.
நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள பிராமண உலகின் விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா
திடதன்மையின் மூலம் வெற்றியை பலனாக அடையக் கூடிய வெற்றி
நட்சத்திரங்களுக்கு, சதா தன்னை சம்பன்னமாக்கி ஆத்மாக்களின்
வேண்டுதல்களை நிறைவேற்றக் கூடிய சம்பன்ன ஆத்மாக் களுக்கு, சதா
பலமற்ற, வசமாகியிருப்பவர்களுக்கு தனது தைரியம் என்ற வரதானத்தின்
மூலம் தைரியம் கொடுக்கக் கூடியவர்களுக்கு, தந்தையின் உதவிக்கு
தகுதியான ஆத்மாக்களுக்கு, சதா உலகை மாற்றுபவர்களாகி சுய
மாற்றத்தின் மூலம் மாயை, இயற்கை மற்றும் பலவீன ஆத்மாக்களை
மாற்றக் கூடிய ஆத்மாக்களுக்கு, நாலாபுறங்களிலும் உள்ள சிறிய
உலகின் அனைத்து ஆத்மாக்களுக்கு, எதிரில் வந்திருக்கும் சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் பல கோடி மடங்கு அன்பு நினைவுகள்
மற்றும் நமஸ்தே.
வரதானம்:
அமைதிக்கான சாதனங்களின் மூலம் மாயாவை தூரத்திலேயே அறிந்து
கொண்டு விரட்டக் கூடிய மாயாஜீத் ஆகுக.
மாயை கடைசி நிமிடம் வரை வரும். ஆனால் மாயாவின் வேலை வருவது,
உங்களுடைய வேலை தூரத்திலேயே விரட்டி விடுவது. மாயை வருகிறது-
உங்களை அசைக்கிறது, பிறகு நீங்கள் விரட்டுகிறீர்கள் எனில்
இதுவும் நேரம் வீண்ணாகிறது. ஆகையால் அமைதிக்கான சாதனங்களின்
மூலம் நீங்கள் தூரத்திலேயே இது மாயை என்று அறிந்து கொள்ளுங்கள்.
அதை அருகில் வருவதற்கு அனுமதிக்காதீர்கள். என்ன செய்வது. எப்படி
செய்வது, இப்போது முயற்சி யாளராக இருக்கிறேன் என்று யோசித்தால்
இது கூட மாயாவை வளர்க்கிறீர்கள் என்று பொருள். பிறகு
களைப்படைந்து விடுகிறீர்கள். எனவே தூரத்திலேயே கண்டறிந்து
விரட்டி விடுங்கள், மாயாஜீத் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
சிரேஷ்ட பாக்கிய ரேகைகளை வெளிப்படுத்துங்கள், பழைய
சன்ஸ்காரங்களின் ரேகை அமிழ்து (மெர்ஜ்) விடும்.