14-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவு
யாத்திரையில் ஒருபோதும் களைப்படையக் கூடாது, தேக அபிமானம் என்ற
புயல் களைப்படையச் செய்கிறது, ஆத்ம அபிமானியாகும் போது களைப்பு
தூரமாக விலகிப் போய் விடும்.
கேள்வி:
எந்த சம்ஸ்காரம் 21
பிறவிகளுக்கான உயர்ந்த அதிர்ஷ்டத்தைக் கெடுக்கக் கூடியது?
பதில்:
கோபித்துக் கொள்ளும் சம்ஸ்காரம்
(பழக்கம்) ஆகும். தந்தையிடம் அல்லது படிப்பின் மீது கோபப்பட்டு
விட்டால் 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்டம் கெட்டு விடுகிறது. அதனால்
தான் பாபா கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே! தேக
அபிமானத்திற்கு வசமாகி நான் இத்தனை பேருக்கு புரிய
வைத்திருக்கிறேன், இவ்வளவு உதவி செய்திருக்கிறேன்! என்ற தலை
கீழான போதை ஒருபோதும் ஏற்பட்டு விடக்கூடாது. பாருங்கள், பாபா
எவ்வளவு பெரிய அதிகார முடையவர் (அதாரிட்டி), இருப்பினும்
எவ்வளவு அகங்காரமற்றவராக இருக்கின்றார்! ஆகையால் தந்தையைப்
பாருங்கள்.
பாடல்:
இரவு பயணிகளே களைப்படைந்து
விடாதீர்கள் .......
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளே! பாட்டு கேட்டீர்கள். மேலும் யார் யோகயுக்த்,
நினைவில் இணைந் திருக்கும் சேவாதாரி குழந்தைகளோ அவர்கள் உடனேயே
இதன் பொருளைப் புரிந்து கொள்வார்கள். நாம் இரவு பயணிகள் என்றால்
பிராமணர்களின் இரவு இப்போது முடிவடைந்து விட்டது. பக்தி
மார்க்கம் இரவு என்று கூறப்படுகிறது. அரைக் கல்பத்திற்கான இரவு
முடிவடைகிறது. எல்லைக் குட்பட்ட பகல், இரவும் இருக்கிறது. இது
பிராமணர்களின் அரைக் கல்பத்திற்கான பகல் மற்றும் அரை
கல்பத்திற்கான இரவு ஏற்படுகிறது. தந்தை வரக் கூடிய இந்த நேரம்
காரிருளாக இருக்கிறது. விடியல் ஏற்படக்கூடிய முதல் சாமம் ஆகும்,
அதிகாலை ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறது. இப்போது தந்தை
கூறுகின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நினைவு
யாத்திரையில் களைப்படைந்து விடாதீர்கள். உலகாய யாத்திரையில்
ஏற்படுவது போன்று! முன்பு நடந்து சென்றனர்! மிகவும் மெதுவாக,
இடையிடையே தங்கி சென்றனர். நாம் இந்த இந்த இடங்களில் தங்க
வேண்டும் என்று அறிந்திருப்பர். முன்பு மிகுந்த சிரத்தையுடன்
நடந்து சென்றனர், அதில் மிகுந்த உழைப்பு இருக்கிறது. ஆனால்
இப்போது இது மிகவும் எளிதாகும். இது எளிய நினைவு அல்லது யோகா
என்று கூறப் படுகிறது. தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும்,
களைப்படைகிறீர்கள் என்றாலே தேக அபிமானத்தில் இருக்கிறீர்கள்
என்பதாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை, மாயையின் தடைகள்
ஏற்படும். ஆனால் இதில் களைப்படைந்து விடக் கூடாது. களைப்படைவதன்
மூலம் தேக அபிமானம் வந்து விடுகிறது. குழந்தைகளே! சரீர
நிர்வாகத்திற்காகக் காரியங்கள் செய்யத் தான் வேண்டும்,,
அதற்கான சமயம் ஒதுக்கி கொடுத்திருக்கின்றார். 8 மணி நேரம் சரீர
நிர்வாகத்திற்கு, 8 மணி நேரம் ஓய்வு, பாக்கி 8 மணி நேரம் இதற்கு
(நினைவிற்கு) கொடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது முழு
8 மணி நேரமும் யாரும் கொடுப்பது கிடையாது. கடைசியில் 8 மணி
நேரம் வரை இருக்க முடியும். சார்ட் அதிகப்படுத்திக் கொண்டே
இருங்கள். இங்கு வந்து அமர்கின்ற பொழுது நினைவு
ஏற்படுத்தப்படுகிறது. இதைத் தான் நீங்கள் நிஷ்டை என்று
கூறுகிறீர்கள். பாபாவின் நினைவில் வந்து அமர்கிறீர்கள்.
இதற்காக இங்கு வரும் போது தான் நினைவில் அமர வேண்டும் என்பது
கிடையாது. 5-10 நிமிடம் நினைவில் இருந்து விட்டு எழுந்திருக்க
வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் தந்தை கூறுவது
என்னவெனில் தொழில் செய்யுங்கள், எங்கு சென்று வந்தாலும்
நினைவில் இருங்கள். கங்கையில் குளிக்க செல்கின்றனர் எனில் ராம்
ராம் என்று ஜெபிக்கின்றனர் அல்லவா! இங்கு நீங்கள் எதையும்
ஜெபிக்க வேண்டாம், தந்தையை நினைவு செய்தால் போதும். இவ்வாறு
தந்தை குழந்தை களிடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார். நினைவு
யாத்திரையில் தான் உங்களுக்கு நன்மை அடங்கியிருக்கிறது, இதில்
களைப்படையக் கூடாது. இதில் அதிக புயல்கள் வரும், புயல் என்றால்
மண் போன்ற வைகளினால் ஏற்படும் புயல் அல்ல. மாயையின் புயல்
வருவதன் மூலம் நினைவு யாத்திரை துண்டிக்கப்பட்டு விடுகிறது.
பிறகு தேக அபிமானத்தில் வருவதன் மூலம் தொழில், குழந்தை கள்
போன்ற நினைவுகள் வந்து விடுகிறது. இந்த தொழில் போன்ற அனைத்தும்
அழியப் போகிறது என்று தந்தை கூறுகின்றார். உங்களது குழந்தை
வாரிசாக ஆகவே முடியாது. அனைத்தும் அழிந்து விடும். இப்போது
எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார். எல்லைக் குட்பட்ட ஆஸ்தி
அழியப் போகிறது. இப்போது குழந்தை வளரும், திருமணம் செய்வோம்
பிறகு இது நடக்கும் என்றெல்லாம் செல்வந்தர்கள் நினைக்கின்றனர்.
அந்த அளவிற்கு இப்போது நேரம் கிடையாது என்று தந்தை கூறுகின்றார்.
ஆகையால் உலகத்தின் மீதிருக்கும் பற்றுதலை முழுமையாக நீக்கி
விடுங்கள். இது சுடுகாடாகும். தொழில், குழந்தைகள் போன்ற சிந்தனை
யிலேயே இறந்தால் தன்னை நாசப்படுத்திக் கொள்கிறீர்கள். சிவபாபாவை
நினைவு செய்தால் அதிக லாபம் ஏற்படும். தேக அபிமானத்தில் வருவதன்
மூலம் நாசம் ஏற்படுகிறது. ஆத்ம அபிமானி ஆகின்றபோது லாபம்
ஏற்படும். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு
எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைவீர்கள். நினைவு
செய்யவில்லை யெனில் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும். பிறகு அது
கல்ப கல்பத்திற்காக என்றாகிவிடும். அந்த அளவிற்கு நஷ்டம்
ஏற்படுத்தக் கூடிய விசயமாகும். நான் முழு ஆஸ்தியை எப்படி அடைவது?
என்று சிந்திக்க வேண்டும். செல்வத்திற்காகவும் அதிகப் பேராசை
படக் கூடாது. எதிலும் அதிக பேராவல் கொள்ள வேண்டாம். யாராவது
திவால் ஆகின்றனர் எனில் மிக அதிகமாக கவலைப் படுவர். சிவபாபாவை
முற்றிலும் மறந்து விடுவர். ஞானத்திற்கு வந்த பின்பு தான்
திவால் ஆனது, வியாதி வந்தது என்று குற்றம் கூறுவர். இவ்வாறு
ஒருபோதும் நினைக்கக் கூடாது. வியாதி போன்றவைகள் வருகிறது எனில்
அது கர்ம கணக்காகும். விகர்மங்கள் விநாசம் ஆகிறது எனில் நல்லது
தான். தர்மராஜரின் தண்டனை அடைவதை விட வியாதி நல்லது அல்லவா!
கர்ம கணக்கை முடிக்க வேண்டும். இது மகா நோயாளி சரீரமாகும்.
எவ்வளவு பாதுகாக்க வேண்டியிருக்கிறது. நடந்து சென்று
கொண்டிருக்கும் போதே நின்று விடுகின்றனர். இதய துடிப்பு (ஹார்ட்
பெயில்) நின்று விடுகிறது. இப்படிப்பட்ட பழைய உலகை புத்தியினால்
முற்றிலும் மறந்து விட வேண்டும். தந்தை புதிய வீடு கட்டிக்
கொண்டிருக்கிறார் எனில் பழையதிலிருந்து உள்ளத்தை நீக்கி விட
வேண்டும். பாபா, விரைவில் கட்டடம் கட்டுங்கள் என்று குழந்தைகள்
கூறுகின்றனர். பழைய கட்டடத்தில் அதிக தொந்தரவு ஏற்படுகிறது.
இந்த பழைய உலகம் மிகவும் அசுத்தமானது என்பதை நீங்களும்
அறிவீர்கள். இது உங்களது எல்லையற்ற சந்நியாசமாகும். அவர்கள்
வீடு வாசலை சந்நியாசம் செய்கின்றனர். அது எல்லைக் குட்பட்ட
சந்நியாசம் என்று கூறப்படுகிறது. நீங்கள் விகாரங்களை சந்நியாசம்
செய் கிறீர்கள். தேக சகிதமாக தேகத்தின் உங்களது சம்மந்தகளைத்
துண்டித்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இந்த கண்களினால் பார்க்கக் கூடிய உலகை மறந்து
விடுங்கள். நாம் சொர்க்கத்தின் இராஜ்யத்திற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம் என்பதை உங்களது புத்தி அறிந்திருக்கிறது.
ஞானம் என்ற மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும்
சுடுகாடாக ஆகி விடும், இதன் மீது அன்பு வைக்காதீர்கள். இன்றைய
நாட் களில் மனிதர்களிடத்தில் அதிக செல்வம் இருப்பதால் விகாரமும்
மிக அதிகமாக ஆகிவிட்டது. காம விகாரம் எவ்வளவு வேகமாக இருக்கிறது!
காமம் இல்லாமல் இருக்கவே முடியாது. 4-5 ஆண்டுகள் தூய்மையாக
இருந்து விட்டு பிறகு பாபா, இன்று இந்த பூதம் வந்து, முகத்தை
கருப்பாக்கிக் கொண்டேன் என்று கடிதம் எழுதுகின்றனர். எவ்வளவு
ஏமாற்றம் அடைகின்றனர்! ஒரேயடியாக ஐந்தாவது மாடியிலிருந்து கீழே
விழுந்து விடுகின்றனர். முதலில் இருப்பது தேக அபிமானமாகும்.
மேலிருந்து கீழே விழும் போது மரத்துண்டுகள் போல துண்டு துண்டாகி
விடும். எலும்பு முற்றிலும் உடைந்து விடும். பிறகு முயற்சி
செய்வதற்கு நேரம் ஏற்படும். இது தான் அனைத்தையும் விட மிகப்
பெரிய அடியாகும், ஆகையால் காமம் மிகப் பெரிய எதிரி என்று பாபா
கூறுகின்றார். விகாரத்தை தான் பதீதம் என்று கூறப் படுகிறது.
பாபா, எங்களை பதீதத்திலிருந்து பாவனம் ஆக்குங்கள் என்று
கூறுகின்றனர். பாரதத்தில் தான் சம்பூர்ண நிர்விகாரிகள்
இருந்தனர் அல்லவா! பாரதமே விகாரமற்றதாக இருந்தது. இப்போது
பாரதம் விகாரியாக இருக்கிறது. சம்பூர்ண நிர்விகாரிகள் என்று
சூரியவம்சத் தினர்களை கூறலாம். இராமச் சந்திரனின்
இராஜ்யத்திலும் விகாரங்களுக்கான விசயம் இருக்காது. ஆனால் கலைகள்
குறைந்து விடுகிறது. 1250 ஆண்டுகள் குறைந்து விடும் போது அந்த
உலகின் சக்தியும் குறைந்து விடும் அல்லவா! அதனால் தான் அதை சதோ
பிரதானம் என்றும் இதை சதோ என்றும் கூறப்படுகிறது. நாம் மம்மா,
பாபாவை பின்பற்றி சூரியவம்சி மகாராஜா, மகாராணியாக ஆவோம் என்று
நீங்கள் விரும்புகிறீர்கள், இதில் கஷ்டம் அல்லது செலவிற்கான
விசயமே கிடையாது. இதற்காக வாயில் எதுவும் பேசவும் வேண்டாம்.
நினைவு செய்தால் போதும், இது தான் எளிய யோகம் என்று
கூறப்படுகிறது. இதற்கு மிகுந்த முயற்சி தேவை. பாபாவிற்கு முன்
அனைவரும் மகாரதி ஆவீர்கள். இதற்கு யோகா முழுமையாக இருக்க
வேண்டும், அப்போது தான் சிறிதாவது அம்பு பாயும். யோக பலம்
அல்லவா! யோகா மிகவும் குறைவாக இருக்கிறது. நினைவு யாத்திரையில்
தான் அதிக தடைகளும் ஏற்படுகிறது. எல்லையற்ற தந்தை இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார்.
தந்தையிடமோ அல்லது படிப்பின் மீதோ ஒருபோதும் கோபித்துக் கொள்ளக்
கூடாது. கோபித்துக் கொண்டால் 21 பிறவிகளுக்கான அதிர்ஷ்டத்திடம்
கோபித்துக் கொள்கிறீர்கள். மிக நல்ல நல்ல குழந்தை களும் கூட
கோபித்துக் கொள்கின்றனர். தேக அபிமானத்திற்கான போதை அதிகரித்து
விடு கிறது. நான் இத்தனை பேருக்கு புரிய வைத்தேன். தேக
அகங்காரம் வந்தவுடனேயே கீழே விழுந்து விடுவர். இதில் அகங்காரம்
வரவே கூடாது. சிவபாபாவிற்கு ஏதாவது அகங்காரம் இருக்கிறதா?
எவ்வளவு அகங்கார மற்றவராக இருக்கின்றார்! ஆனால் மிகப் பெரிய
அதிகார முடையவராக இருக்கின்றார்! நான் சாதாரண உடலில், சாதாரண
வீட்டில் வருகிறேன் என்று கூறுகின்றார். செல்வந்தரின் வீட்டில்
வருவது கிடையாது. ஆக இப்போது குழந்தைகளை விழிப்படையச் செய்ய
வேண்டும். பாபா மிக நல்ல யுக்திகளை கூறிக் கொண்டிருக்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் தான் தாமதப்படுத்துகிறீர்கள். நாடகப்படி
இன்னும் மனநிலையில் வேகம் ஏற்படவில்லை. நாளடை வில் வேகம்
ஏற்பட்டு விடும். இத்தனை ஆண்டுகளுக்குள் சொர்க்கம் ஸ்தாபனை
ஆகிவிடும் என்று நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். இதை
செய்தித்தாள்களில் படிக்கும் போது மனிதர்கள் வந்து உங்களிடம்
கேட்பார்கள். சிறிது ஆண்டு களுக்குள் ஸ்தாபனை ஆகும் எனில்
அவசியம் விநாசமும் ஏற்படும். பலர் வருவார்கள். இந்த சொத்து
போன்றவைகள் சிறிது காலத்திற்காகவே. இந்த சொத்துக்களை நீங்கள்
சொத்து என்ற நினைப்பதே கிடையாது. இவைகள் சிறிது காலத்திற்குத்
தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கட்டடம் போன்றவைகள்
வசிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் மதுவனத் திற்கு
பல குழந்தைகள் புத்துணர்வு பெறுவதற்காக வருவார்கள். தலைமை
நிலையம் மதுவனம் ஆகும். இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நாளை
என்ன செய்வீர்கள்? இங்கு தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்கள்,
பிறகு டெல்லி பிருந்தாவனத்திற்கு சென்று இராஜ்யம் செய்வீர்கள்.
நமது நினைவுச் சின்னம் எப்படி இருக்கிறது! என்பதை நல்ல முறையில்
காண்பிக்க வேண்டும். எந்த காரியம் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு
செய்திருந்தோமோ அதை இப்போது செய்து கொண்டிருக்கிறோம். முதன்
முதலில் சிவபாபாவின் கோயில் கட்டுகிறோம். மற்றபடி தில்வாடா
கோயில் பிறகு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. புத்திக்கு வேலை
கொடுக்க வேண்டும். தில்வாடா கோயிலின் கணக்கு எடுக்க
வேண்டுமென்றாலும் எடுத்து விட முடியும். முழுவதும் நமது
நினைவுச் சின்னமாகும். இது ஸ்தாபனைக்கான நினைவுச் சின்னம்
என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி
இருக்க வேண்டும். சேவைகள் அதிகரிக்கச் செய்வதற்கான யுக்திகளை
உருவாக்க வேண்டும். இராமர் ஆண்டால் என்ன!, இராவணன் ஆண்டால்
என்ன ......... அதற்கு பெரிய குடும்பம் இருக்கிறது. இராவணனுக்கு
எவ்வளவு பெரிய குடும்பம் இருக்கிறது பாருங்கள்! இராமருக்கு
மிகவும் சிறிய குடும்பமாகும். சரியாகத் தான் புகழ்
பாடப்பட்டிருக்கிறது. ஆனால் யாரும் புரிந்து கொள்வது கிடையாது.
தந்தையே அமர்ந்து புரிய வைக்கின்றார் என்றாலும் கூட நம்பிக்கை
ஏற்படுவது கிடையாது. சரீர நிர்வாகத்திற்காக நீங்கள் அவசியம்
காரியங்களும் செய்ய வேண்டும். யார் சேவாதாரி பாண்டவ குழந்தைகளோ
அவர்கள் அரசாங்கத்திடமிருந்து உதவியும் பெற்றுக் கொள்ளலாம்.
அவர்களை முழுமையாக நாம் வளர்க்க வேண்டியிருக்கும். குழந்தைகளின்
மனநிலை அந்த அளவிற்கு இருக்க வேண்டும். பாபாவின் நினைவில் இந்த
உலகின் அனைத் தையும் மறந்து விட வேண்டும். நினைவு யாத்திரையில்
யார் பக்காவாக மூழ்கியிருக் கிறார்களோ அவர்களது மனநிலையும் மிக
உறுதியானதாக இருக்கும். சிவபாபாவின் நினைவில் நீங்கள் சரீரம்
விடுவது போன்று! சந்நியாசிகள் பிரம்மத்தின் நினைவில் சரீரத்தை
விடுகின்றனர் எனில் வாயுமண்டலம் முற்றிலும் அமைதியாக
ஆகிவிடுகிறது. பாபாவிற்கு அனுபவம் இருக்கிறது. மனிதர்கள்
இறக்கின்ற போது வீட்டில் அமைதி நிலவுகிறது அல்லவா! இங்கும்
அப்படியே இருக்கிறது. கடைசியில் அனைத்தும் மறந்து போய்
விடுவீர்கள். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல
வேண்டும். தேக அபிமானம் நீங்கிக் கொண்டே செல்லும். கடைசியில்
குஷியுடன் சரீரம் விட வேண்டும், மலர்ந்த முகத்துடன்! அவ்வளவு
தான்! நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், வெற்றி மாலையில்
வருவதற்கு தகுதியானவர்களாக ஆகின்ற போது தான் அப்படிப்பட்ட
மனநிலை ஏற்படும். உங்களிடம் அமைதிக்கான சக்தி இருக்கிறது. யார்
வந்தாலும் இங்கு அமைதி நிலவுகிறது என்று கூறுகின்றனர். இது தான்
உண்மையான அமைதியாகும். ஆத்மா சரீரத்திலிருந்து விடுபட்டு
விடுகிறது. நான் ஆத்மா, சாந்த சொரூபமானவன் என்பதை நீங்கள்
அறிவீர்கள். நாம் நமது சுயதர்மத்தில் அமர்ந்து விடுகிறோம்.
காரியங்கள் செய்யாமல் எந்த மனிதனும் இருந்து விட முடியாது.
அவர்கள் ஹடயோகா மூலம் எதைத் தான் செய்யாமல் இருக்கின்றனர்! நமது
சுயதர்மமே அமைதி தான் என்பதை இப்போது நீங்கள் புரிந்து
கொண்டீர்கள். நாம் நடிப்பதற் காக இங்கு வந்திருக்கிறோம்.
இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும் வீட்டையும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். தந்தையை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும்.
என்னையும் வீட்டில் நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இங்கு நான் தற்காலிகமாக வந்திருக்கிறேன். உங்களது
புத்தி பாபாவின் நினைவின் மூலம் சாந்தி தாமத்தில் நிலைக்க
செய்ய வேண்டும். வீட்டின் ஆஸ்தியையும் அடைய வேண்டும் அல்லவா!
அது ஆத்மாக்களின் வீடாகும். இது ஜீவாத்மாக்களின் வீடாகும். தனது
வீட்டையும் மறந்து விடாதீர்கள். தந்தையையும் மறந்து விடாதீர்கள்.
தந்தையை நினைவு செய்தால் தான் தூய்மையாகி வீட்டிற்குச் சென்று
விடுவீர்கள். ஞானத்தை தாரணை செய்வதால் புது உலகில் இராஜ்யம்
செய்ய வருவீர்கள். எவ்வளவு முடியுமோ மற்றவர்களுக்கு வழி கூறிக்
கொண்டே செல்லுங்கள். எப்போதும் தந்தையைப் பாருங்கள். தந்தை
என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்தையும்
தாய்மார்களிடம் கொடுத்து விட்டார். அனைத்தையும் தாய்மார்களின்
சேவையில் ஈடுபடுத்துங்கள் என்று அவர் தான் கட்டளையிட்டார்.
ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பின்பற்றினார். சுவாஹா (அர்ப்பணம்)
ஆகிவிட்டனர். ஆனால் பிறகு நிலைத் திருக்கவும் வேண்டும் அல்லவா!
நாடகப்படி பட்டியும் நடக்க வேண்டும் என்று இருந்திருக் கிறது.
பாகிஸ்தான் இந்துஸ்தானாக மாறியது. உங்களது பட்டி முதலில்
பாகிஸ்தானில் ஆரம்ப மானது. நீங்கள் நதியை கடந்தீர்கள்,
சாஸ்திரங்களில் என்ன என்ன விசயங்களை எழுதி விட்டனர்.
நடைமுறையில் இப்போது நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா! பிறகு
கல்பத்திற்கு பின் நீங்களே கேட்பீர்கள். இப்போது தந்தை
கூறுகின்றார் - தீயவைகளைக் கேட்காதீர்கள், தொழில் போன்றவைகளைச்
செய்யுங்கள், ஆனால் தீயவைகளைக் கேட்காதீர்கள். ஒவ்வொரு
விசயத்திலும் ஸ்ரீமத் பெறுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பாபா,
இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? பாபா உடனேயே
கூறிவிடுவார். ஏதாவது விசயம் நீங்கள் கேட்க வேண்டுமென்றால்
பாபாவிடம் வாருங்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? ஒவ்வொரு
அடியிலும் கேட்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்கும் போது ஒவ்வொரு
அடியிலும் பல மடங்கு வருமானம் இருக்கிறது. நீங்கள் கடக்கும்
ஒவ்வொரு நொடியிலும் பல மடங்கு வருமானம் இருக்கிறது. ஆக எவ்வளவு
வருமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) வெற்றி மாலையில் வருவதற்காக இந்த சரீரத்திலிருந்து விடுபட்டு
இருப்பதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும். தேக அபிமானத்தை
விட்டுக் கொண்டே செல்ல வேண்டும். இந்த உலகை புத்தியினால் மறக்க
வேண்டும்.
2) பணத்தின் பேராசையில் செல்லக் கூடாது. தந்தையின் நினைவு தவிர
வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது. ஒருபோதும் தந்தையிடமோ
அல்லது படிப்பின் மீதோ கோபித்துக் கொள்ளக் கூடாது.
வரதானம்:
எஜமானத்தன்மையின் நினைவு மூலமாக உயர்ந்த அதிகாரத்தை
அனுபவம் செய்யக்கூடிய இணைந்த சொரூபதாரி ஆவீர்களாக.
முதலில் தனது சரீரம் மற்றும் ஆத்மாவின் கம்பைண்டு ரூபத்தை
நினைவில் கொள்ளுங்கள். சரீரம் படைப்பு ஆகும். ஆத்மா படைப்பு
கர்த்தா ஆவார். இது நினைவில் இருக்கும் பொழுது எஜமானத்தன்மை
இயல்பாகவே நினைவில் இருக்கும். எஜமானத்தன்மையின் நினைவு மூலமாக
சுயம் தங்களின் மிக உயர்ந்த அதிகாரி என்ற அனுபவம் செய்வார்கள்.
சரீரத்தை இயக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இரண்டாவது -தந்தை
மற்றும் குழந்தையின் (சிவசக்தி) இணைந்த சொரூபத்தின் நினைவு
மூலமாக மாயையின் தடைகளை அதிகாரத்துடன் கடந்து சென்று
விடுவார்கள்.
சுலோகன்:
விஸ்தாரத்தை ஒரு நொடியில் உள்ளடக்கி ஞானத்தின் சாரத்தை
அனுபவம் செய்யுங்கள் மற்றும் செய்வியுங்கள்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
நினைவு ஜுவாலை சொரூபமாக ஆகும் பொழுதே நீங்கள் பாபகடேஷ்வரர் ஆக
முடியும். இதே நினைவு மூலமாக அநேக ஆத்மாக்களின் பலவீனத்தன்மை
நீங்கி விடும். இதற்காக ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு மூச்சிலும் தந்தை
மற்றும் நீங்கள் இணைந்தவராக ஆகி இருங்கள். எந்த நேரத்திலும்
சாதாரண நினைவு இல்லாதிருக்கட்டும். சிநேகம் மற்றும் சக்தி
மற்றும் - இரண்டு ரூபமும் இணைந்திருக்கட்டும்.