14-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தினந்தோறும்
ஆத்மாவாகிய நான் எவ்வளவு சுத்தமாக மாற்றியிருக்கிறேன் என்று
தன்னைத் தானே கேளுங்கள். எவ்வளவு சுத்தமாக மாறுகிறோமோ அவ்வளவு
குஷி இருக்கும், சேவை செய்வதற்கான ஊக்கம் வரும்.
கேள்வி:
வைரம் போன்று உயர்ந்தவர்களாக
மாறுவதற்கு என்ன முயற்சி வேண்டும்?
பதில்:
ஆத்ம உணர்வு அடையுங்கள். உடலில்
சிறிது கூட பற்று இருக்கக்கூடாது. கவலையில் இருந்து விடுபட்டு
ஒரு தந்தையின் நினைவில் இருங்கள். இந்த உயர்ந்த முயற்சியே வைரம்
போன்று மாற்றி விடும். ஒரு வேளை தேக உணர்வு இருக்கின்றது
என்றால், நிலை (காயாக) பக்குவமற்றதாக இருக்கின்றது. பாபா
விடமிருந்து தொலைவில் இருக்கின்றீர்கள் என புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த உடலைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த உடலில்
இருந்து கொண்டு தான் கர்மாதீத நிலையை அடைய வேண்டும்.
பாடல்:
முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா......
ஓம் சாந்தி.
யாருக்கு யோக பலத்தினால் பாவங்கள் நீங்குகின்றதோ அவருக்கு
மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கிறது என பாபா குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார். தனது நிலையை குழந்தைகளாகிய நீங்களே
புரிந்து கொள்ள முடியும். நிலை நன்றாக இருக்கும் பொழுது சேவை
யின் ஆர்வம் மிகவும் நன்றாக இருக்கின்றது. எவ்வளவுக் கெவ்வளவு
சுத்தமாகிக் கொண்டே போகிறீர்களோ அவ்வளவு மற்றவர்களைக் கூட
சுத்தமாக மற்றும் யோகியாக மாற்ற ஊக்கம் வரும். ஏனென்றால்,
நீங்கள் இராஜயோகி மற்றும் இராஜரிஷி ஆவீர்கள். ஹடயோகி ரிஷிகள் (இயற்கை)
தத்துவத்தை பகவான் என்கிறார்கள். இராஜயோகி ரிஷிகள் பகவானை தந்தை
என்று ஏற்றுக்கொள்கிறார்கள். தத்துவத்தை நினைவு செய்வதால்
அவர்களின் பாவம் எதுவும் விலகாது. தத்துவத்துடன் தொடர்பு
கொள்வதால் எந்த பலமும் கிடைக்காது. எந்த தர்மத் தினரும் யோகத்தை
அறியவில்லை. எனவே யாருமே உண்மையான யோகி ஆகி திரும்பச் செல்ல
முடியாது, இப்போது குழந்தைகள் நீங்களாகவே நிலையை சுயம்
அற்ந்துக் கொள்ள முடியும். எவ்வளவு தந்தையை நினைவு செய்கின்றனரோ
அவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். தன்னைத்தானே சோதிக்க வேண்டும்.
குழந்தைகள் கூட ஒருவர் மற்றவரின் நிலையையும், தனது நிலையையும்
தெரிந்து கொள்ள முடியும். தனக்கு உடலின் மீது எந்த பற்றும்
இல்லையா என பார்த்துக் கொள்ள வேண்டும். தேக உணர்வு இருக்
கின்றது என்றால், காயாக இருக் கின்றோம், பாபாவை விட்டு மிக
தொலைவில் இருக்கின்றோம் என புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளே!
இப்பொழுது வைரம் போன்று மாற வேண்டும் என பாபா
கட்டளையிடுகின்றார். பாபா ஆத்ம உணர்வு உடையவராக மாற்றுகின்றார்.
பாபாவிற்கு தேக உணர்வு கிடையாது. தேக உணர்வு குழந்தைகளுக்குத்
தான் ஏற்படுகின்றது. பாபாவின் நினைவினால் நீங்கள் ஆத்ம
உணர்வுடையவராக மாறுகின்றீர்கள். நாம் எவ்வளவு நேரம் பாபாவை
நினைக்கின்றோம் என தனக்குத் தானே சோதியுங்கள். எவ்வளவு
நினைக்கின்றீர்களோ அவ்வளவு மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கும்.
மேலும் தன்னை தகுதி உடையவராக மாற்றிக் கொள்ளலாம். சில
குழந்தைகள் கர்மாதீத் நிலையை அடைந்து விட்டனர் என்றும் நினைக்க
வேண்டாம். அப்படி இல்லை. ரேஸ் நடந்து கொண்டு இருக்கின்றது. ரேஸ்
முடியும் பொழுது ரிசல்ட் முடிவாக வெளிவரும். பிறகு வினாசம் கூட
ஆரம்பமாகி விடும். அது வரை கர்மாதீத நிலையை அடையும் வரை இந்த
ஒத்திகை நடந்து கொண்டே யிருக்கும். நாம் யாருக்கும் துன்பம்
கொடுக்க முடியாது. கடைசி யில் தான் அனைவருக்கும் தெரிய வரும்.
இப்பொழுது இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது. இனிமையான
குழந்தைகளே! இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது என இந்த
தாதாவும் கூறுகின்றார். இச்சமயம் ஒருவர் கூட கர்மாதீத நிலையை
அடைய முடியாது. நோய் போன்றவை ஏற்படுகின்றது என்றால், அதற்கு
கர்ம வினை என்று கூறப்படுகின்றது. அனுபவிப் பதைப் பற்றி
யாருக்கும் தெரியவில்லை. அது உள்ளுக்குள் நோயாக இருக்கின்றது.
இப்பொழுது ஏக்ரச நிலையை (ஒரே ரசனையில்) யாரும் அடையவில்லை.
எவ்வளவு முயற்சி செய் கின்றார்களோ அவ்வளவு வீண் எண்ணங்கள்,
புயல் நிறைய வருகின்றது. எனவே குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும். உலகிற்கே அதிபதியாகின்றோம் என்றால் சாதாரண
விசயமா என்ன? மனிதர்கள் பணக்காரர்களாக இருக்கின்றார்கள். பெரிய
பெரிய பங்களா இருக்கின்றது என்றால் மகிழ்ச்சி இருக்கின்றது
ஏனென்றால் சுகம் நிறைய இருக் கின்றது, இப்பொழுது கூட நீங்கள்
பாபாவிடமிருந்து அளவற்ற சுகத்தை அடைகின்றீர்கள்.
பாபாவிடமிருந்து நாம் இராஜ்யத்தை அடைகிறோம் என அறிகிறீர்கள்.
செல்வத்தில் இருக்கும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ
அவ்வளவு அமைதியில் ஏற்படுவது இல்லை. சந்நியாசி வீடு வாசலைத்
துறந்து காட்டில் வசித்தனர். ஒரு போதும் கையில் பணத்தை வைத்துக்
கொள்வதில்லை. வெறும் உணவு மட்டும் எடுத்துக் கொண்டனர்.
இப்பொழுது எவ்வளவு பணக்காரர்களாக ஆகி விட்டனர். அனைவருக்கும்
நிறைய பணத்தின் கவலை இருக்கின்றது. உண்மையில் இராஜா விற்கு
பிரஜைகளைப் பற்றிய கவலை இருக்கின்றது. ஆகவே போர்க் கருவிகளை
வைத்திருக்கிறார்கள். சத்யுகத்திலோ போர் போன்ற விஷயம் எதுவும்
இல்லை. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு நாம் நம்முடைய
இராஜ்யத் திற்குப் போகிறோம் என்ற மகிழ்ச்சி இருக்கின்றது. அங்கே
பயப்படுவதற்கான விஷயம் எதுவும் இல்லை. வரி போன்ற விஷயமும்
கிடையாது. இந்த உடலைப் பற்றிய கவலை இங்கே தான் இருக்கின்றது.
கவலையில் இருந்து விடுவியுங்கள் சுவாமி...... என்று இங்கே தான்
பாடப்படு கிறது. கவலையில் இருந்து விடுபடுவதற்கு இப்பொழுது நாம்
எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என அறிகிறீர்கள். பிறகு 21
பிறவிகளுக்கு எந்த கவலையும் இல்லை. பாபாவை நினைவு செய்தால்
நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கலாம். இராமாயண கதை கூட உங்களைப்
பற்றியதே! நீங்கள் தான் மாகாவீர் ஆகிறீர்கள். எங்களை இராவணன்
அசைக்க முடியாது என்று ஆத்மா கூறுகின்றது. அந்த நிலை கடைசியில்
வரும். இப்பொழுது யார் வேண்டுமானாலும் ஆடிவிட நேரிடலாம்
கவலையும் இருக்கும். உலகத்தில் சண்டை நடக்கும் பொழுது இப்பொழுது
நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொள்வார்கள். எவ்வளவு
பாபாவை நினைப்பதற்கு முயற்சி செய்கிறீர் களோ அவ்வளவு நன்மை
நடக்கும். முயற்சி செய்வதற்கு இப்பொழுது நேரம் இருக்கின்றது.
பிறகு வினாசம் கோலாகலமாக நடக்கும். இப்பொழுது சரீரத்தின் மீது
பற்று இருக்கின்ற தல்லவா? சரீரத்தை நன்றாக பராமரித்துக்
கொள்ளுங்கள் என பாபாவே கூறுகின்றார். கடைசி சரீரம், இதில் தான்
முயற்சி செய்து கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். உயிரோடு
இருப்பீர்கள். பாபாவை நினைவு செய்து கொண்டே இருப்பீர்கள்.
குழந்தைகளே! உயிரோடு இருங்கள் என பாபா புரிய வைக்கின்றார்.
எவ்வளவு உயிரோடு இருக்கின்றீர்களோ அவ்வளவு பாபாவை நினைவு செய்து
ஆஸ்தியை (பெரிய பதவி) அடைய லாம். இப்பொழுது உங்களுக்கு சொத்து
கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. சரீரத்தை நோயற்றதாக
ஆரோக்கியமாக வையுங் கள். கவனக் குறைவாக இருக்காதீர்கள். உணவு
விஷயத்தில் கவனமாக இருந்தால் எதுவும் நடக்காது. ஒரே மாதிரியான
நடத்தை இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இது
விலைமதிப்பற்ற உடல் ஆகும். இதில் முயற்சி செய்து தேவி தேவதையாக
மாறுகின்றீர்கள் என்றால் இந்த நேரத்தினுடைய தியாகம் ஆகும்.
மகிழ்ச்சி இருக்க வேண்டும். எவ்வளவு பாபா மற்றும் ஆஸ்தியை
நினைக்கின்றீர்களோ அவ்வளவு நாராயணன் ஆகப்போகின்றேன் என்ற
பெருமிதம் இருக்கும். பாபாவின் நினை வினால் தான் நீங்கள்
உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெறுவீர்கள். நாம் எவ்வளவு
மகிழ்சியில் இருக்கின்றோம், எவ்வளவு கவலையில் இருக்கின்றோம்
என்று பாருங்கள். ஏழைகளுக்கு இன்னும் மகிழ்ச்சி இருக்க வேண்டும்.
பணக்காரர்களுக்கு பணத்தின் கவலை இருக்கின்றது. உங்களில் கூட
குமாரி களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆம், சிலருடைய நண்பர்கள்,
உறவினர்கள் ஏழையாக இருக்கின்றார்கள் என்றால் கவனம் வைக்க
வேண்டியிருக்கின்றது. எழுப்பியும் விட வேண்டும். ஒரு வேளை
எழவில்லை என்றால் எதுவரை உதவி செய்து கொண்டே இருப்பீர்கள்.
நீங்களே சேவை யாளராக ஆகுங்கள் அல்லது மனைவியை ஆன்மீக சேவையில்
அளியுங்கள் என்று பாபா கூறுகின்றார் அல்லவா? நீங்கள் பாபாவின்
உதவியாளர் ஆவீர்கள். உதவி அனைவருக்கும் வேண்டும் அல்லவா?
தனியாக பாபா என்ன செய்வார். எவ்வளவு பேருக்கு மந்திரம்
அளிப்பார். நான் உங்களுக்கு கொடுக்கின்றேன். பிறகு நீங்கள்
மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நாற்று நட வேண்டும்.
எவ்வளவு முடியுமோ உதவியாளராகுங்கள். மந்திரத்தை அளித்துக்
கொண்டே செல்லுங்கள் என குழந்தைகளுக்கு பாபா கூறிக் கொண்டே
இருக்கின்றார். உங்களுடைய சாஸ்திரங்களில் கூட அனைவருக்கும்
செய்தி அளிக்கப்பட்டது என்று இருக்கின்றது. அதாவது, தந்தை
வந்தார், ஆஸ்தியை அடைய வேண்டும் என்றால், தந்தையை நினையுங்கள்.
மனிதர்களை நினைக்காதீர்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை
நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும். மேலும்
ஆஸ்தியும் கிடைக்கும், கீதையை நிறைய கேட்கிறார்கள்,
கூறுகிறார்கள். அதில் பிரசித்தமான வார்த்தை மன்மனாபவ ஆகும்.
பாபாவை நினைத்தால் முக்தியை பெறலாம் சந்நியாசிகள் கூட இதை
விரும்புவார்கள். மத்தியாஜி பவ என்றால் ஜீவன் முக்தி.
குழந்தைகள் பாபா வினுடையவர் ஆகின்றீர்கள் என்றால் பாபா,
குழந்தைகளே! உங்களுடைய ஆத்மா அழுக்காக இருக்கின்றது.
அழுக்கானவர் போக முடியாது என்று கூறுகின்றார். இது புரிந்து
கொள்ள வேண்டிய விஷயமாகும். பாரதவாசி களாகிய நீங்கள்
சதோபிரதானமாக இருந்தீர்கள், தமோபிர தானமாக ஆகிவிட்டீர்கள்.
இப்போது மீண்டும் சதோபிரதானம் ஆகவேண்டும் என்றால், முயற்சி
செய்தால் உயர்ந்த பதவி அடையலாம் என பாபா கூறுகின்றார். பல
பிறவிகளாக பக்தி செய்து வந்துள்ளீர்கள். முதன் முதலில்
தூய்மையான பக்தி ஆரம்பமாகியது என அறிகிறீர்கள். இப்பொழுது
எவ்வளவு கலப்படமான பக்தியாக இருக்கின்றது. சரீரங்களுக்கு பூஜை
நடக் கின்றது. அதுவும் பூத பூஜை ஆகும். இருப்பினும் தேவதைகள்
தூய்மையானவர்கள் ஆவர். ஆனால் இச்சமயத்திலோ அனைவரும் அழுக்காக
இருக் கின்றனர். எனவே பூஜையும் தமோபிரதானமாக (தரம் குறைந்ததாக)
ஆகியிருக் கின்றது. இப்பொழுது பாபாவை நினைக்க வேண்டும்.
பக்தியின் வார்த்தைகள் எதையும் கூற வேண்டாம். ஐயோ இராமா!
என்பதும் பக்தியின் வார்த்தை ஆகும். இவ்வாறு யாரும்
அழைக்கக்கூடாது. இதில் எதுவும் உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஓம்சாந்தி கூட அடிக்கடி கூற வேண்டியதில்லை. அமைதி என்றால் நான்
ஆத்மா சாந்த சொரூபம். அதே சொரூபமாக இருக்கின்றது. இதில்
பேசக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. வேறு யாராவது மனிதர்களுக்கு
ஓம் சாந்தி என்று கூறினால் அவர்கள் பொருள் எதையும் புரிந்து
கொள்வதில்லை. அவர்களோ ஓம் என்பதற்கு மிகப் பெரிய மகிமைகளைச்
செய்கிறார்கள். நீங்கள் பொருளைப் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு
ஓம் சாந்தி என்று கூறுவது கூட வீண் ஆகும். ஆம், ஒருவர்
மற்றவரிடம் சிவபாபாவின் நினைவில் இருக்கிறீரா என்று கேட்கலாம்.
எப்படி நான் கூட குழந்தையிடம் யாருடைய அலங்காரம் செய்கிறாய்
என்று கேட்கிறேன். சிவபாபாவின் ரதத்தை என்று கூறுகிறார். இது
சிவபாபாவின் ரதம் அல்லவா? உசேனின் ரதம் இருக்கின்றது அல்லவா?
குதிரையை அலங்காரம் செய் கிறார்கள். குதிரையின் பொருளைப்
புரிந்து கொள்ளவில்லை. தர்மத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர்கள்
யார் வருகிறார்களோ அவர் களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கின்றது.
பழைய பதீத ஆத்மா தர்மத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. நீங்கள்
தர்மத்தை ஸ்தாபனை செய்வதில்லை. சிவபாபா உங்கள் மூலமாக
செய்கிறார். உங்களை பவித்திரமாக மாற்று கின்றார். அவர்கள் பக்தி
மார்க்கத்தில் மிகவும் அலங்காரம் செய்கிறார்கள். இங்கே
அலங்காரத்தை விரும்பு வதில்லை. பாபா எவ்வளவு நிர்அகங்காரியாக
இருக்கின்றார். நான் பல பிறவிகளின் கடைசியிலும் கடைசியில்
வருகின்றேன் என அவரே கூறுகின்றார். முதலில் சத்யுகத்தில்
ஸ்ரீநாராயணன் இருப்பார். ஸ்ரீ லட்சுமிக்கும் முன்பு ஸ்ரீ
நாராயணன் வருவார். அவர் வளர்ந்து பெரியவராக இருப்பார் அல்லவா?
ஆகவே கிருஷ்ணரின் பெயர் பாடப்பட்டிருக்கின்றது. நாராயணரை விட
அதிகமாக கிருஷ்ணருக்கு மகிமை செய்கிறார்கள். கிருஷ்ணருடைய
பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். நாராயணருடைய பிறந்த
நாளைக் கொண்டாடு வதில்லை. கிருஷ்ணர் தான் நாராயணன் ஆகிறார்
என்பது தெரியவில்லை. முதன் முதலில் சிவஜெயந்தி, பிறகு கிருஷ்ண
ஜெயந்தி, பிறகு இராமருடையது...... சிவன் கூடவே கீதையின்
ஜன்மமும் ஏற்படுகின்றது. பல பிறவிகளில் கடைசி பிறவியில் சிவபாபா
வருகின்றார். வயதான அனுபவி ரதத்தில் தான் வருகின்றார். எவ்வளவு
நன்றாக புரியவைக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும். சிலருடைய
புத்தியில் ஏறுவதில்லை.
இந்த ஞானம் மறைந்து போய் விடுகின்றது என பாபா கூறுகின்றார்.
நான் வந்து கூறும் பொழுது தான் நீங்களும் கேட்க முடியும். நாம்
எதிர் காலத்தில் துல்லியமாக இவ்வாறு (தேவி தேவதா) மாறுவோம் என
குழந்தைகள் இப்பொழுது அறிகிறீர்கள். பாபா 2-3 விதமாக
சாட்சாத்காரம் அடைந்து இருக்கின்றார். இவ்வாறு மாறுவேன்,
கிரீடம் உடையவராக மாறுவேன், தலைப்பாகை உடையவராக மாறுவேன். 2-4
இராஜ்யத்தின் பிறவிகளின் காட்சி கிடைத்திருக் கின்றது. இந்த
விஷயங்களை உலகத்தில் வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது என
இப்பொழுது நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும். நல்ல கர்மம்
செய்தால் நல்ல பிறவி கிடைக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆம்,
இப்பொழுது நீங்கள் முயற்சியை எதிர் காலத்திற்காக செய்து கொண்டு
இருக் கின்றீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக! நாம் இந்த
பதவியை பெறுவோம் என நீங்கள் அறிகிறீர்கள். யார் கர்மாதீத்
நிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்களோ
அவர்களுக்கு இந்த மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். பாபா நாங்கள்
மம்மா பாபாவைப் பின்பற்றுவோம், அப்போது தான் சிம்மாசனத்தில்
அமர முடியும் என கூறுகின்றார்கள். எவ்வளவு நாம் சேவை
செய்கின்றோம், மேலும், எவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கின்றோம்
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். யார் முதலில் தான்
மகிழ்ச்சியில் இருப்பாரோ அவரே பிறரையும் மகிழ்ச்சியில் கொண்டு
வருவார்கள். உள்ளே ஏதாவது தீயவை இருந்தால் மனதை அரித்துக்
கொண்டே இருக்கும். பாபா எங்களுக்குள் கோபம் இருக்கின்றது, இந்த
பூதம் எங்களுக்குள் இருக்கின்றது என சிலர் கூறுகின்றார்கள்.
கவலையின் விஷயம் ஆகிவிட்டதல்லவா? பூதத்தை உள்ளே இருக்க விடக்
கூடாது. ஏன் கோபப்பட வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும்.
பாபா யார் மீதும் கோபப்பட மாட்டார். சிவபாபாவின் மகிமை
இருக்கின்றதல்லவா? நிறைய வீணான பொய்யான மகிமை களைக் கூட
செய்கிறார்கள். நான் என்ன செய்கிறேன். எப்படி மருத்துவரிடம்
எங்களிடம் நோயை விரட்டுங்கள் என்கிறார்களோ அதுபோல
அழுக்கிலிருந்து என்னை தூய்மை யாக்குங்கள் என்று
கூறுகின்றார்கள். அவர்கள் மருந்து கொடுத்து ஊசி போடுகிறார்கள்.
அதுவே அவர்களுடைய வேலை யாகும். பெரிய விஷயம் கிடையாது.
சேவைக்காகப் படிக்கிறார்கள். நிறைய படிக்கிறார்கள் என்றால்
நிறைய சம்பாதிக்கின்றார்கள். பாபாவிற்கு எதையும் சம்பாதிக்க
வேண்டியது இல்லை. அவருக்கு சம்பாதிக்க வைக்க வேண்டும். என்னை
நீங்கள் அழிவற்ற சர்ஜன் என்று கூட கூறுகிறீர்கள். இப்படி
அதிகமாக மகிமை செய்திருக்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
பதீத பாவனரை யாரும் சர்ஜன் என்று கூற முடியாது. இது வெறும்
மகிமையாகும். என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மம் அழியும்
என்று மட்டும் பாபா கூறுகின்றார். அவ்வளவு தான்! என்னுடைய
நடிப்பே உங்களுக்குப் புரிய வைப்பது தான். அதாவது என்னை மட்டும்
நினையுங்கள். எவ்வளவு நினைக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி
பெறுவீர்கள். இதுவே இராஜயோகத்தின் ஞானம் ஆகும். யார் கீதையை
படித்திருக் கின்றார்களோ அவர்களுக்குப் புரிய வைப்பது எளிதாக
இருக்கின்றது. நீங்கள் பூஜைக்குரிய இராஜாக்களுக்கு இராஜா
ஆகிறீர்கள். பிறகு பூஜாரி ஆகிறீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க
வேண்டும். நீங்கள் உலகத்தைத் தூய்மையாக மாற்று கின்றீர்கள்.
எவ்வளவு பெரிய பதவி. கலியுக மலையைத் திருப்புவதற்காக நீங்கள்
அனைவரும் விரல் கொடுக் கின்றீர்கள். மற்றபடி மலை எதுவும்
கிடையாது. புது உலகம் வரவேண்டும். ஆகவே நிச்சயம் இராஜயோகத்தைக்
கற்க வேண்டும் என இப்பொழுது நீங்கள் அறிகிறீர்கள். பாபா தான்
வந்து கற்பிக்கிறார். சதோபிரதானம் ஆக வேண்டும். யார் போன
கல்பத்தில் மாறினார்களோ அவர்களுக்குப் புரிய வைக்கும் பொழுது
சரியான விஷயத்தை கூறுகிறார்கள் என தோன்றும். உண்மையில் பாபா
மன்மனா பவ என கூறினார். வார்த்தை சமஸ்கிருதம் ஆகும். பாபா
இந்தியில் என்னை நினையுங்கள் என கூறினார். நாம் எவ்வளவு
உயர்ந்த தர்மம், உயர்ந்த கர்மம் செய்பவர் என்று இப்பொழுது
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எனவே தான் 16 கலைகள்...... என
பாடப்பட்டு இருக்கின்றது. இப்போது மீண்டும் இவ்வாறு மாற
வேண்டும். எவ்வளவு நாம் சதோபிரதானமாக தூய்மையாக
மாறியிருக்கிறோம், எவ்வளவு நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக மாற்றும்
சேவை செய்திருக் கின்றோம் என தன்னையே பார்த்துக் கொள்ள
வேண்டும்.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவிற்கு சமமாக நிர்அகங்காரியாக வேண்டும். இந்த சரீரத்தை
பராமரித்துக் கொண்டே சிவபாபாவையும் நினைக்க வேண்டும். ஆன்மீக
சேவையில் பாபாவிற்கு உதவியாளர் ஆக வேண்டும்.
2. உள்ளுக்குள் எந்த ஒரு பூதமும் இருக்க விடக் கூடாது.
ஒருபோதும் யார் மீதும் கோபப் படக்கூடாது. அனைவரிடமும் மிகவும்
அன்போடு நடக்க வேண்டும். தாய் தந்தையைப் பின்பற்றி
சிம்மாசனத்தில் அமரக்கூடியவர் ஆக வேண்டும்.
வரதானம்:
சுயநலம் என்ற வார்த்தையின் பொருள் அறிந்து சதா ஏக்ரஸ்
ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடிய சகஜ முயற்சியாளர் ஆகுக.
இன்றைய நாட்களில் ஒருவருக்கொருவர் பற்றுதலுடன் இருப்பது
அன்பினால் அல்ல, சுயநலத்தினால் இருக்கின்றனர். சுயநலத்தின்
காரணத்தினால் பற்று இருக்கிறது. மேலும் பற்றுதலின் காரணத்தினால்
விடுபட்டவர்களாக இருக்க முடியவில்லை. ஆகையால் சுயநலம் என்ற
வார்த்தையின் பொருளில் நிலைத்து விடுங்கள். அதாவது முதலில்
சுயத்தின் (ஆத்மாவின்) ரதத்தை (தேகம்) சுவாஹா செய்யுங்கள்.
இந்த சுயநலம் நீங்கி விட்டால் விடுபட்டவர்களாக ஆகிவிடுவீர்கள்.
இந்த ஒரு வார்த்தையின் பொருள் அறிவதன் மூலம் சதா ஒருவரின்
மற்றும் ஏக்ரஸ் ஆகிவிடுவிர்கள். இதுவே சகஜ முயற்சி ஆகும்.
சுலோகன்:
பரிஸ்தா ரூபத்தில் இருப்பதன் மூலம் எந்த ஒரு தடையும்
தனது தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
அவ்யக்த இசாரே: அசுத்தத்தின் விதையையும் கூட அழித்து
சம்பூர்ண சுத்தம் (தூய்மை) ஆகுங்கள்
சம்பூர்ண தூய்மை என்பது பிராமணர்களாகிய உங்களது அலங்காரமாகும்.
சதா அலங்கரிக்கப் பட்ட மூர்த்தி அதாவது சதா தூய்மை சொரூபத்தில்
நிலைத்திருந்து எல்லையற்ற மேடையில் ஹீரோ நடிப்பு நடிக்க
வேண்டும். சதா பிரம்மச்சாரி அதாவது சங்கல்பத்திலும் கூட எந்த
அசுத்த விருத்தியையும் சஞ்சலம் ஆக்க விடாதீர்கள். விருத்தியின்
சஞ்சலமும் ரிஜிஸ்டர் கறையாக்கி விடும். ஆகையால் விருத்தியிலும்
கூட சதா பிரம்மச்சாரியாக ஆகுங்கள்.