14.09.25    காலை முரளி            ஓம் சாந்தி  18.01.2007      பாப்தாதா,   மதுபன்


இப்போது தன்னை விடுவித்துக் கொண்டு மாஸ்டர் முக்தி வள்ளலாகி அனைவருக்கும் முக்தி வள்ளலாகி அனைவருக்கும் முக்தி அளிப்பதில் நிமித்தமாகுங்கள்.

இன்று அன்புக்கடலான பாப்தாதா நாலாபுறமும் உள்ள அன்பான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார். இரு விதமான குழந்தைகளைப் பார்த்து பார்த்து மகிழ்கின்றார். ஒன்று அன்பில் மூழ்கிய குழந்தைகள் மற்றொன்று அன்பான குழந்தைகள் இருவரின் அன்பின் அலையும் தந்தையிடம் அமிர்தவேளைக்கு முன்பிருந்தே வந்தடைந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலிருந்தும் தன்னில் தானாகவே பாடல் ஒலிக்கின்றது. மேரா பாபா பாப்தாதாவின் உள்ளத்திலிருந்தும் இதே பாடல் ஒலிக்கின்றது எனது குழந்தைகளே, பாப்தாதாவிற்கே தலைக் கிரீடமானவர்கள் குழந்தைகள் இன்று நினைவு தினமான காரணத்தினால் அனைவர் மனதிலும் அன்பின் அலை அதிகமாக உள்ளது. அனேக குழந்தைகளின் அன்பெனும் முத்துக்களை மாலைகளாக பாப்தாதாவின் கழுத்தில் விழுந்த வண்ணம் உள்ளது. தந்தையும் தனது அன்பெனும் கரங்களை குழந்தைகளுக்கு மாலையாக அணிவிக்கின்றார். எல்லையில்லா பாப்தாதாவின் மாபெரும் கரங்களுக்குள் அடங்கியுள்ளனர். இன்று அனைவரும் விசேஷமாக அன்பெனும் விமானத்தில் வந்துள்ளீர்கள். தொலைதூரத்திலிருந்தும் மனமெனும் விமானத்தில் அவ்யக்த ஒளி உடலில் பரிஸ்தா ரூபத்தில் வந்துள்ளீர்கள். குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா இன்று நினைவு நாள் மற்றும் சக்தி வாய்ந்த நாளுக்கான பன்மடங்கு நினைவுகளை வழங்கிக் கொண்டி ருக்கின்றார். இந்த நாள் எத்தனை நினைவுகளைத் தருகிறது. மேலும் ஒவ்வொரு நினைவும் நொடியில் சக்திசாலியாக மாற்றி விடுகின்றது. நினைவுகளின் பட்டியல் ஒரு நொடியில் நினைவில் வருகிறதல்லவா! நினைவு எதிரில் வந்த மாத்திரமே சக்தியின் பெருமிதம் போதையாக ஏறுகின்றது. முதன்மையான நினைவு. நினைவு இருக்கின்றதா. தந்தையின் குழந்தையான அந்நாளில் தந்தை எதனை நினைவூட்டினார்? கல்பம் முன்னிருந்த பாக்யவான் ஆத்மா நீங்கள் இந்த முதல் நினைவால் என்ன மாற்றம் நிகழ்ந்தது நினைத்துப் பாருங்கள்? ஆத்மா அபிமானி ஆனதர்ல் பரமாத்மா தந்தையின் அன்பின் பெருமிதம் போதையென ஏறியதா? ஏன் போதை ஏறியது? உள்ளத்திலிருந்து முதலில் வெளிப்பட்ட அன்பான வார்த்தை என்ன? மேரா மீட்டா பாபா இந்த பொன்னான சப்தம் வெளிவந்தவுடன் என்ன போதை ஏறியது? பரமாத்மாவின் பிராப்திகள் அனைத்தும் மேரா பாபா என்று சொன்னவுடன் தெரிந்து கொண்டதால் ஏற்றுக் கொண்டதால் உங்களுக்கு தனது பிராப்திகளாகி விட்டது. அனுபவம் உள்ளதல்லவா!

மேரா பாபா என்று சொன்ன மாத்திரமே எத்தனை பிராப்திகள் உங்களுடையதாகி விட்டது. எங்கே பிராப்திகள் இருக்குமோ அங்கு நினைவு செய்ய வேண்டியதில்லை, தானாகவே வந்து விடும். சுலப மாகவே வந்து விடும். ஏனெனில் எனதாகி விட்டது. தந்தையின் பொக்கிஷம் எனது பொக்கிஷமாகி விட்டது. எனது என்பதை நினைவு செய்ய வேண்டியதில்லை, இயல்பாகவே இருக்கும். எனது என்பதை மறப்பதே கடினம், நினûப்பது கடினமல்ல. எனது இந்த தேகம், மறக்கிறதா, அனுபவம் உள்ளதல்லவா? மறக்க வேண்டியுள்ளது என் ? எனதல்லவா! ஆகவே எங்கே எனது என்ற உணர்வு உள்ளதோ அங்கே நினைவு சகஜமாகின்றது அவ்வாறே நினைவு சக்தி வாய்ந்த ஆத்மாவாக மாற்றியது. ஒரே சொல் என்னுடைய பாபா அவ்வளவே தான் பாக்ய வள்ளல் அழியாத பொக்கிஷத்தின் தலைவனையே எனது என்றாக்கி விட்டீர்கள். அத்தகைய விந்தை செய்யும் குழந்தைகள் அல்லவா. பரமாத்மாவின் பராமரிப்பிற்கே அதிகாரி ஆகி விட்டீர்கள். கல்பத்திலேயே ஒரே ஒரு முறை பரமாத்மா பாலனை கிடைக்கின்றது. ஆத்மாக்கள் மற்றும் தேவ ஆத்மாக்களின் பாலனை கிடைக்கின்றது ஆனால் பரமாத்மா பாலனை ஒரு பிறவியிலே மட்டுமே கிடைக்கின்றது.

இன்று நினைவு மற்றும் சக்தி வாய்ந்த நன்னாளில் பரமாத்ம பாலனையின் பெருமிதமும் குசியும் சகஜமாகவே நினைவில் வருகிறதல்லவா. ஏனெனில் இன்றைய வாயு மண்டலம் சகஜ நினைவைத் தருகின்றது. எனவே இன்று சகஜயோகி ஆனீர்களா அல்லது இன்றும் நினைவிற்காக யுத்தம் நடைபெற்றதா? ஏனெனில் இன்றைய நாளை அன்பு நிறைந்த நன்னாளாக அழைக்கப்படும், இந்த அன்பு உழைப்பினை அகற்றி விடும் அன்பு அனைத்தையும் இலகுவாக மாற்றி விடுடீம். ஆக இன்று அனைவரும் விசேஷமாக சகஜயோகி ஆனீர்களா அல்லது கடினமானதா? இன்று யாருக்கெல்லாம் கடினமானதே அவர்கள் கை உயர்த்துங்கள். யாருக்கும் இல்லையா? அனைவரும் சகஜயோகி ஆனீர்களா நல்லது, சரி சகஜயோகி ஆக இருந்தவர்கள் கை உயர்த்துங் கள் (அனைவரும் கை உயர்த்தினர்) நல்லது சகஜயோகி ஆனீர்களா? இன்று மாயைக்கு விடுமுறை கொடுத்து விட்டீர்கள். இன்று மாயை வரவில்லையா? இன்று மாயைக்கு விடை கொடுத்த அனுப்பிவிட்டீர்களா? நல்லது இன்று விடை கொடுத்து அனுப்பி விட்டீர்கள் அதற்கு வாழ்த்துக்கள், இவ்வாறாக அன்பிலேயே மூழ்கி யிருந்தால் மாயாவற்கு சதா காலத்திற்கும் விடை கொடுத்து அனுப்பி விடலாமே ஏனெனில் இப்போது 70 ஆண்டுகள் பூர்த்தி ஆனது. இந்த ஆண்டினை பாப்தாதா விலகியிருக்கும் ஆண்டாக அனைவருக்கும் அன்பான ஆண்டாக உழைப்பிலிருந்து விடுபட்ட ஆண்டாக இன்னலற்ற ஆண்டாக கொண்டாட விரும்புகின்றார். உங்கள் அனைவருக் கும் பிடித்துள்ளதா? முக்தி ஆண்டாக கொண்டாடலாமா? ஏனெனில் முக்திதாமம் செல்ல வேண்டும். முக்தி வள்ளல் தந்தையுடன் இணைந்து அனேக அமைதியிழந்து துயரத்தில் வாடும் ஆத்மாக்களுக்கு முக்தி தர வேண்டும். எனவே மாஸ்டர் முக்தி வள்ளல் நீங்கள் முதலில் முக்தி அடைந்தால் தான் முக்தி ஆண்டை கொண்டாட முடியும். அல்லவா ! ஏனெனில் பிராமண ஆத்மாக்கள் நீங்கள் முக்தியடைந்து அனேகருக்கு முக்தி தர நிமித்தமானவர்கள். ஒரு சொல் முக்திக்கு மாறாக பந்தனத்தில் கட்டிவிடுகின்றது, இன்னலுக்கு அடிமை யாக்குகின்றது. அது இப்படியில்லை அப்படி என்பதாகும். அப்படியில்லை இப்படி இன்னல் நேரும்போது சொல் கின்றனர் பாபா இப்படியில்லை, அப்படியிருந்தது இப்படி நடக்கவில்லையென்றால் அப்படி நடந்திருக்கும். இதுவே சாக்கு போக்கு எனும் விளையாட்டு.

பாப்தாதா அனைவரது கோப்புகளையும் (ஃபைல்) பார்த்தார் கோப்பில் என்ன பார்த்தார் பெரும்பா லோர் ஃபைல் உறுதிமொழியால் நிரம்பியிருந்தது. மிகவும் விருப்பத்துடன் உறுதிமொழி தருகின்றார்கள், சிந்திக்கின்றார்கள் ஆனால் இதுவரையிலும் ஃபைல் பெரியதாகிக் கொண்டே செல் கின்றது எதுவுமே முடிவிற்கு (ஃபைல்) வரவில்லை. உறுதிமொழிக்காக கூறப்படுகின்றது. உயிரே போனாலும் கொடுத்த வாக்கு மீறக் கூடாது. இன்று பாப்தாதா அனைவர் ஃபைலையும் பார்த்தார் மிக நல்ல நல்ல உறுதி மொழிகள் அதிகம் வைத்துள்ளீர்கள். மனதாலும் செய்தீர்கள், எழுதியும் வைத்துள்ளீர்கள். ஆக இந்த ஆண்டு என்ன செய்வீர்கள். மேலும் ஃபைலை சேர்ப்பீர்கள் அல்லது கொடுத்த வாக்கை ஃபைனல் செய்வீர்களா? என்ன செய்வீர்கள்? முதல் வரிசையில் உள்ளவர்கள் சொல்லுங்கள். பாண்டவர்கள் சொல்லுங்கள். ஆசிரியர்கள் சொல்லுங்கள். இந்த ஆண்டு பாப்தாதா விடம் வளர்ந்து கொண்டே யிருக்கும் கோப்புகளையெல்லாம் முடிவிற்கு கொண்டு வருவீர்களா அல்லது இந்த ஆண்டும் ஃபைலில் பேப்பரை சேர்த்துக் கொண்டே செல்வீர்களா? தலை குணிய வேண்டும், மாற வேண்டும், பொறுத்துக் கொள்ள வேண்டும், கேட்கவும் வேண்டும், ஆனால் மாறியேத் தீருவேன் என்பவர்கள் கை உயர்த்துங்கள். பாருங்கள் அனைவரையும் டி.வியில் படம் பிடியுங்கள். அனைவரையும் படம் பிடியுங்கள் 2,3,4, டி.வி உள்ளது. எல்லா பக்கமும் படம் பிடியுங்கள். இதனை பதிவேட்டில் (ரிக்கார்டு) வையுங்கள். பாபாவிற்கு இதனை படம் பிடித்து கொடுங்கள். டி.வி இயக்குபவர்கள் எங்கே உள்ளீர்கள்? பாப்தாதாவும் ஃபைலின் பலனை பெற வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தனக்காக கைத்தட்டுங்கள்.

பாருங்கள் ஒரு புறம் அறிவியல், மறுபுறம் மூன்றாம் தரமான மனிதர்கள், மூன்றாவது பாவாத்மாக்கள் அனைவரும் அவரவரது காரியத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கின்றார்கள். புத்தம் புதிய திட்டங்களை அமைக்கின்றார்கள். நீங்களோ உலகையே படைப்பவரின் பிள்ளைகள் நீங்களும் இந்த ஆண்டு புதிய சாதனத்தை கையாளுங்கள் உறுதிமொழி உறுதியாகட்டும் ஏனெனில் அனைவரும் வெளிப்பாட்டை விரும்புகின்றனர். எவ்வளவு செலவு செய்கின்றீர்கள், ஆங்காங்கே பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றீர்கள். ஒவ்வொரு துறையினரும் நன்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆனால் இவ்வாண்டு ஒன்றை இணையுங்கள் எந்த சேவை செய்தாலும் வார்த்தைகளின் சேவையாயினும், வார்த்தை மட்டுமல்லாது மனம், சொல் மற்றும் அன்பின் ஒத்துழைப்பு எனும் செயல் என ஒரே நேரத்தில் மூன்று சேவை நடைபெற வேண்டும். பாப்தாதா விரும்பும் வண்ணம் பலன் இருப்பதில்லை. நீங்களும் வெளிப்பாட்டையே விரும்புகின்றீர்கள். ஆரம்பம் முதல் இன்று வரையிலும் மிக நன்றாக உள்ளது அனைவரும் நன்றாக உள்ளது, நன்றாக உள்ளது மிக நன்றாக உள்ளது என்றே சொல்லிச் செல்கின்றனர். ஆனால் நல்லவர்களாக மாறுவதே வெளிப்பாடாகும். ஆகவே இப்போது ஒன்றை இணையுங்கள், ஒரே நேரத்தில் மனம், சொல், செயலால் அன்பான ஒத்துழைப்பு தருவது, உடனிருக்கும் பிராமணரும், வெளியில் சேவை யில் நிமித்தமானவரும், துணை செய்பவரும் அன்பு ஒத்துழைப்பு தருவது இதுவே செயல் வடிவத்தில் சேவையில் நற்பெயர் பெறுவதாகும். இப்படி சொல்லக் கூடாது இவர் இப்படி செய்ததால் இப்படி செய்ய வேண்டியதாயிற்று. அன்பிற்கு மாறாக சிறிதளவு பேச வேண்டியிள்ளது. பாபா என்று சொல்வதில்லை. இதனை செய்ய வேண்டியுள்ளது, சொல்ல வேண்டியுள்ளது, பார்க்க வேண்டியுள்ளது.... இவையெல்லாம் கூடாது. இத்தனை ஆண்டுகள் படித்து விட்டீர்கள், பாப்தாதா அனுபமதி கொடுத்துவிட்டார். இப்படியே இன்னும் எவ்வளவு நாள் செய்து கொண்டிருப்பீர்கள், ஆனால் இன்னும் எதுவரை ? பாப்தாதாவுடன் அனைவரும் ஆன்மீக உரையாடலில் பெரும்பாலும் பாபா இன்னும் எப்போது திரையை திறப்பீர்கள்? என்று கேட்கின்றீர்கள். எதுவரையில் நடக்கும்? அவ்வாறே பாப்தாதாவும் உங்களிடம் கேட்கின்றார் இந்த பழைய வார்த்தை, பழைய நடத்தை, அலட்சியம், கசப்புத்தன்மை இன்னும் எதுவரை? பாப்தாதாவின் கேள்வியும் இதுவே, எதுவரை? நீங்கள் பதில் கொடுங்கள் அப்போதே பாப்தாதாவும் பதில் தருவார் எப்போது வினாசம் ஆகும் என்று கூறுவார். ஏனெனில் பாப்தாதா வினாசத்திற்கான திரையை இப்போதே கூட ஒரு நொடியில் திறக்க முடியும் ஆனால் முதலில் இராஜ்யம் செய்பவர்கள் தயாரா உள்ளீர்களா. இப்போதிலிருந்தே தயார் செய்தால் முடிவினை அருகே கொண்டு வர முடியும், எந்த ஒரு பலவீனத்திற்கும் காரணம் காட்டாதீர்கள், நிவாரணம் செய்யுங்கள். இது காரணம் என்று சொல்லாதீர்கள், பாப்தாதா நாள் முழுவதும் குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் மீது அன்பு இருப்பதால் மீண்டும் மீண்டும் விளையாட்டைப் பார்க்கின்றார். பாப்தாதாவிடம் மிகப்பெரிய டி.வி உள்ளது. ஒரே நேரத்தில் முழு உலகையும் பார்க்க முடியும். பாப்தாதா அனேக விளையாட்டுக்களைப் பார்க்கின்றார். இதில் நாலாபுறமும் உள்ள குழந்தைகள் தென்படுகின்றனர். அமெரிக்காவாயினும் குர்காவ் ஆயினும் அனைவரும் தெரிகின்றனர். சாக்கு போக்கு நன்றாகவே சொல்கின்றனர். இதுதான் காரணம், பாபா எனது தவறில்லை, இவர் இப்படி செய்தார். அவர் தான் காரணம், பாபா எனது தவறில்லை, இவர் அப்படி செய்தார். அவர் தான் செய்தார் ஆனால் நீங்கள் சமாதானம் செய்தீர்களா? காரணத்தை காரணமாகவே இருக்கச் செய்தீர்களா, அல்லது காரணத்தை நிவாரணமாக மாற்றினீர்களா? அனைவரும் பாபா உங்கள் ஆசை என்னவென்று கேட்கின்றீர்கள் தானே. ஆகவே பாப்தாதா தனது ஆசையை சொல்கின்றார். பாப்தாதாவிற்கு ஒரே ஒரு ஆசைதான், நிவாரணம் தென்பட வேண்டும், காரணம் அழிந்தே போக வேண்டும் இன்னல்கள் அகன்று சதா சமாதானவே திகழ வேண்டும்.முடியுமா? முடியுமா? முதல் வரிசையில் உள்ளவர்கள் கூறுங்கள், முடியுமா? தலையாவது அசையுங்களேன். பின்னால் உள்ளவர்கள் முடியுமா? (அனைவரும் கை உயர்த்துகின்றனர்) நல்லது நாளை டி.வியைத் திறந்தால் அவசியம் தெரியுமல்லவா? நாளை பார்க்கும் போது அயல் நாடாயினும், குக்கிராமமாயினும், பெரிய மாநிலமாயினும் எங்குமே காரணம் தென்படக் கூடாது உறுதியா? இதில் ஆம் என்று சொல்லவில்லையே? உறுதியா? கை உயர்த்துங்கள். பாப்தாதா மகிழும் வண்ணம் கை உயர்த்துகின்றார்கள். கை உயர்த்துவதில் விந்தையே குழந்தைகளுக்கு மகிழ்விக்கத் தெரிகின்றது. ஏனெனில் பாப்தாதா பார்த்து சிந்திக் கின்றார். கோடியில் ஒருவரான நீங்கள் சிலரிலும் சிலரான நீங்களே நிமித்தமாக உள்ளீர்கள், குழந்தைகளான உங்களையன்றி வேறு யார் செய்வார் நீங்களே செய்தாக வேண்டும். பாப்தாதா விற்கு குழந்தைகள் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. மேலும் வருபவர்களும் உங்கள் நிலை பார்த்து சரியாகி விடுவார்கள், கடினமாகாது, நீங்கள் மாறி விடுங்கள் போதும் ஏனெனில் நீங்கள் பிறந்த நாள் அன்றே உறுதி செய்துள்ளீர்கள், துணையாக இருந்து செயல்படுவோம், பாபாவுடனேயே செல்வோம். பிரம்மா பாபாவுடன் இராஜ்யம் செய்ய வருவோம். இந்த உறதி கொடுத்தீர்கள் தானே? உடன் இருப்போம், உடன் செல்வோம் எனில் உடனிருந்து சேவையிலும் துணை புரிவீர்கள் தானே. இப்போது என்ன செய்யலாம்? கை நன்கு உயர்த்துகின்றீர்கள். பாப்தாதா மகிழ்கின்றார், ஏதேனும் விசயங்கள் வரும்போது நாம் இந்த தேதியில், இந்த நாளில் இதற்காக கை உயர்த்தினோம் என்பதைநினைத்தாலே போதும், உதவி கிடைத்து விடும். நீங்கள் ஆகவே வேண்டும். இப்போது அதனை துரிதப்படுத்துங்கள். நாமே முந்தைய கல்பம் இருந்தோம் என நினைக்கி:னறீர்கள் தானே, இப்போதும் ஒவ்வொரு கல்பமும் நாமே ஆக வேண்டும் இது உறுதிதானே. அல்லது இரண்டு வருடம் விட்டு மூன்றாம் வருடம் விட்டுவிட்டீர்களா? நாமே நிமித்தம் என்பதை சதா நினைவில் வையுங்கள். நாமே கோடியில் சிலர், சிலரிலும் சிலர் கோடி யில் சிலர் வருவார்கள். ஆனால் நீங்களே சிலரிலும் சிலர் இன்று அன்பு நிறைந்த நன்னாள் அன்பில் எதையும் செய்வது கடினமாகாது. எனவே பாப்தாதா இன்றே அனைவருக்கும் நினைவூட்டுகின்றார். பிரம்மா பாபாவிடம் குழந்தைகளுக்கு எவ்வளவு அன்பு உள்ளது. இதை பார்த்து சிவபாபாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியே உள்ளது. இதை பார்த்து சிவபாபாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியே நாலாபுறமும் பார்க்கின்ற பொழுது ஒருவாட மாணவராயினும் 70 வருட மாணவரா யினும் அனைவரும் இன்று அன்பில் மூழ்கி உள்ளனர். ஆகவே சிவபாபாவும் பிரம்மா பாபாவின் மீது குழந்தைகளுக்கு உள்ள அன்பினைக் கண்டு பெருமிதம் கொள்கின்றார்.

இன்றைய நாளில் இன்னொரு செய்தியும் சொல்லட்டுமா. இன்று அட்வான்ஸ் பார்ட்டியினரும் பாப்தாதாவின் முன்பு தோன்றுகின்றனர் ஆகவே அட்வான்ஸ் பார்ட்டியினரும் பாபாவும் சேர்ந்து எப்போது முக்திதாமம் கதவை திறப்பீர்கள் என கேட்கின்றனர். அட்வான்ஸ் பார்ட்டியின் அனை வரும் இன்று பாப்தாதாவிடம் எங்களுக்கும் தேதி சொல்லுங்கள் என்று கேட்கின்றார்கள், என்னபதில் தரட்டும்? சொல்லுங்கள் என்ன பதில் சொல்ல? பதில் தருவதில் யார் புத்திசாலி? பாப்தாதா மிக விரைவாகவே நடந்தேறும் என்று சொல்கின்றார். ஆனால் பாப்தாதாவிற்கு இதில் குழந்தைகளான உங்கள் உதவி தேவைப்படுகின்றது. அனைவரும் உடன் செல்வோம் அல்லவா. உடன் இணைந்தே செல்பவர்களா? அல்லது நின்று நின்று தயங்கி தயங்கி செல்பவர்களா? உடன் செல்பவர்கள் தானே உடல் செல்வதில் விருப்பம் தானே. அப்படியெனில் சமமாக வேண்டும் உடன் சேர்ந்தே செல்ல வேண்டுமென்றால் சமமாகியேத் தீர வேண்டும். பழமொழி என்ன உள்ளது? கையோடு கை சேர்த்து உடன் செல்வோம் கையோடு கை என்றால் சமநிலை என்பதாகும். தாதிகள் சொல்லுங்கள், தயாராவீர்களா? தாதிகள் சொல்லுங்கள், தாதிகள் கை உயர்த்துங்கள் உங்களை பெரியவர்கள் என்று சொல்கிறார்கள், சொல்லுங்கள், தாதா மற்றும் தாதிகள் ஏதேனும் தேதி உள்ளதா? (இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை) இதன் பொருள் என்ன ? இப்போது தயார் தானே பதில் நன்றாக தருகின்றீர்கள், தாதிகள்? முழுமை அடைந்தே சூக வேண்டும். சிறியவர்கள் பெரியவர் ஒவ்வொருவரும் இதில் பொறுப்பேற்க வேண்டும். இதில் சிறியவர் ஆகக் கூடாது 7 நாள் குழந்தைகள் பொறுப்பானவரே ஏனெனில் உடன் செல்ல வேண்டும் தானே. தனியாக செல்ல வேண்டுமென்றால் தந்தை சென்று விடுவார் ஆனால் தந்தை செல்ல முடியாது. உடன் அழைத்தே செல்ல வேண்டும். தந்தைக்கும் குழந்தைக்கும் உறுதிமொழி இதுவே தான். உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற வேண்டும் அல்லவா? நல்லது.

நாலாபுறமிருந்தும் கடிதம், நினைவுகள், இமெயில் போன் அனேகம் வந்த வண்ணம் உள்ளது. இங்கு மதுபனில் வந்தது அங்கு வதனத்திலும் வந்து சேர்ந்தது, இன்றைய நாளில் பந்தனத்தில் உள்ள மாதர்களின் அன்பு நிறைந்த மனதின் நினைவுகளும் பாப்தாதாவை வந்தடைந்தது, அத்தகைய அன்பான குழந்தைகளை பாப்தாதாவும் மிக அதிகமாகவே நினைவும் செய்கின்றார், ஆசிகளும் தருகின்றார் நல்லது.

நாலாபுறமும் உள்ள சினேகி, லவ்லி, லவ்லீன் இரு தரப்பு குழந்தைகளுக்கும் எப்போதும் ஸ்ரீமத்படியே ஒவ்வொரு அடியும் வைத்து பன்மடங்கு சேமிப்புனை செய்யும் ஞானம் நிறைந்த சக்திசாலி குழந்தைகளுக்கு என்றென்றும் அன்பாகவும், சுயமரியாதையிலும் இருந்து பிறருக்கும் சுயமரியாதை கொடுக்கும் குழந்தைகள் இவ்வாறெல்லாம் எப்போதுமே சதா பாபாவின் அடி மீது அடி வைத்து செல்லும் சகஜயோகி குழந்தைகளுக்க பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் நமஸ்காரமும்.

ஆசீர்வாதம்:
தெளிவான புத்தியெனும் கோட்டின் ஆதாரத்தால் முதல் எண்ணில் தேர்ச்சி அடையும் எவரெடி ஆகுக !

எப்போதும் தயாராக இருப்பது இதுவே பிராமண வாழ்வின் சிறப்பியல்பு. தந்தையிடமிருந்து எந்த கட்டளை கிடைத்தாலும் ஏற்கும் அளவிற்கு புத்தி எனும் கோடு தெளிவாக இருக்க வேண்டும். அந்த சமயத்தில் எதுவும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்பாராது ஒரே கேள்வி வரும் கட்டளை வரும் இங்கேயே அமருங்கள் இங்கு செல்லுங்கள் என்று அப்போது எந்த விசயமோ, சம்மந்தமோ வராதபோதே முதல் எண்ணில் வெற்றியடைய முடியும். ஆனால் இவையாவும் எதிர்பாராத சோதனைத் தாளாகவே இருக்கும். எனவே எவரெடியாக இருங்கள்.

சுலோகன்:
மனதை சக்திசாலியாக வைப்பதற்கு ஆத்மாவிற்கு ஈஸ்வரிய நினைவு மற்றும் சக்தி எனும் உணவை தாருங்கள்.


அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

அனேக குழந்தைகள் யோகத்தில் அமரும் போதே ஆத்மாபிமானி ஆவதற்கு பதிலாக சேவை நினைவில் வருகிறது என்று சொல்கின்றார்கள். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. ஏனெனில் இறுதி நேரம் அசரீரி ஆவதற்கு பதிலாக சேவை குறித்து எண்ணம் வருமேயானால் ஒரு நொடிக் கான சோதனைத் தாளில் தோல்வியே அடைய நேரிடும். அச்சமயம் ஒரு தந்தை தவிர நிராகாரி, நிர்விகாரி, நிர்அகங்காரி இவையன்றி வேறு நினைவு கூடாது. சேவையெனும் போது உடல் நினைவில் வந்து விடக்கூடும். எனவே தேவையான நேரத்தில் அந்த மனோநிலையில் நிலை பெற முடியவில்லையென்றால் ஏமாற்றமே கிடைக்கும்.