14-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே, தீயவைகளை கேட்காதீர்கள்...... இங்கே நீங்கள் சத் சங்கத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் மாயாவின் தீய சங்கத்தில் போகக் கூடாது. தீய சங்கத்தின் தொடர்பினால் சந்தேகத்தின் ரூபத்தில் தூக்கம் வருகிறது.

கேள்வி:
இச்சமயம் எந்த ஒரு மனிதரையும் ஆன்மீகவாதி என்று கூற முடியாது ஏன்?

பதில்:
ஏனென்றால் அனைவரும் தேக உணர்வில் இருக்கிறார்கள். தேக உணர்வுடைய வரை ஆன்மீகமானவர் என்று எப்படி கூற முடியும்? ஆன்மீகத் தந்தை ஒரே ஒரு நிராகார தந்தை தான். அவரே உங்களுக்கு ஆத்ம உணர்வு அடைவதற்கான பாடங்களை சொல்லித் தருகிறார். சுப்ரீம் என்ற பட்டம் கூட ஒரு தந்தைக்குத் தான் கொடுக்க முடியும். தந்தையைத் தவிர வேறு யாரும் சுப்ரீம் என்று கூற முடியாது.

ஓம் சாந்தி.
குழந்தைகள் இங்கே அமரும் போது பாபா நமக்கு தந்தையாகவும், டீச்சராகவும், சத்குருவாகவும் இருக்கிறார் என அறிகிறீர்கள். மூவரின் அவசியம் உள்ளது. முதலில் தந்தை, பிறகு படிக்க வைக்கக் கூடிய ஆசிரியர், அதன் பிறகு குரு. இங்கே இவ்வாறு தான் நினைக்க வேண்டும். ஏனென்றால் புது விஷயம் அல்லவா! எல்லையற்ற தந்தையாவார். எல்லையற்ற என்றால் அனைவரின் தந்தை. இங்கே யார் வந்தாலும் இதை நினைவில் கொண்டு வாருங்கள் எனக் கூறுவார்கள். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கையை உயர்த்துங்கள். இது அதிசயமான விஷயம் அல்லவா! எந்த பிறவி யிலாவது ஒருவரே தந்தையாகவும், ஆசிரியராக வும், சத்குருவாகவும் நினைக்கும் அளவுக்கு கிடைத்திருப்பாரா? அதுவும் சுப்ரீம். எல்லையற்ற தந்தை, எல்லையற்ற டீச்சர், எல்லையற்ற சத்குரு ஆவார். இப்படி எப்போதாவது யாராவது கிடைத்திருக்கிறார்களா? இந்த புருஷார்த்தம சங்கமயுகத்தைத் தவிர வேறு எப்போதும் கிடைக்க மாட்டார்கள். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கையை உயர்த்தட்டும். இங்கு அனைவரும் நிச்சய புத்தியோடு அமர்ந்திருக்கிறார்கள். இந்த மூவரும் முக்கியமானவர்கள் தான். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கிறார். இது மட்டும் தான் எல்லையற்ற ஞானம் ஆகும். நீங்கள் பல்வேறு விதமான எல்லைக்குட்பட்ட ஞானத்தைப் படித்து வந்தீர்கள். சிலர் வக்கீலாகிறார்கள், சிலர் சர்ஜன் ஆகிறார்கள். ஏனென்றால் இங்கே டாக்டர், ஜட்ஜ், வக்கீல் போன்ற அனைவரும் தேவை அல்லவா! அங்கே அவசியம் இல்லை. அங்கே துக்கத்தின் விஷயம் எதுவும் இல்லை. இப்போது பாபா அமர்ந்து எல்லையற்ற பாடங் களை நமக்குக் கொடுக்கிறார். எல்லையற்ற தந்தை தான் எல்லையற்ற பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார். பிறகு அரைக் கல்பத்திற்கு எந்த பாடமும் நீங்கள் படிக்க வேண்டியதில்லை. ஒரே ஒரு முறை தான் பாடம் கிடைக்கிறது. அதன் பலன் 21 ஜென்மங்களுக்கு பயனை அடைகிறோம். அதாவது அதனுடைய பலன் கிடைக்கிறது. அங்கே டாக்டர், வக்கீல், நீதிபதி யாரும் கிடையாது. இது நிச்சயம் அல்லவா! சரியாக அப்படி தான் உள்ளது அல்லவா! அங்கே துக்கம் கிடையாது. கர்ம சுமை கிடையாது. பாபா கர்மங்களின் விளைவுகளைப் புரிய வைக்கிறார். அந்த கீதையை சொல்லக் கூடியவர்கள் இவ்வாறு சொல்கிறார்களா என்ன? நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன் என பாபா கூறுகிறார். அதில் கிருஷ்ண பகவான் வாக்கு என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தெய்வீக குணங்களை உடைய மனிதன். சிவபாபாவிற்கு வேறு எந்த பெயரும் கிடையாது, அவருக்கு இரண்டாவதாக வேறு பெயர் கிடையாது. நான் இந்த சரீரத்தை கடனாகப் பெறுகிறேன் என தந்தை கூறுகிறார். இந்த சரீரம் என்ற வீடு என்னுடையது அல்ல. இதுவும் கூட இவருடைய (பிரம்மா பாபா) வீடாகும். ஜன்னல்கள் போன்ற அனைத்தும் இருக்கின்றது எனவே, நான் உங்களுடைய எல்லை யற்ற தந்தை. அதாவது எல்லா ஆத்மாக்களுக்கும் தந்தை. ஆத்மாக்களை படிக்கவும் வைக்கிறேன் என தந்தை புரிய வைக்கிறார். இவருக்கு தான் ஸ்பிரிட்சுவல் ஃபாதர் அதாவது ஆன்மீகத் தந்தை எனக் கூறப்படுகிறது. வேறு யாருக்கும் ஆன்மீகத் தந்தை என்று கூற முடியாது. இங்கே இவர் எல்லையற்ற தந்தை என குழந்தைகள் அறிகிறீர்கள். இப்போது ஆன்மீக மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ஆன்மீக மாநாடு கிடையாது. அவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் கிடையாது. தேக உணர்வுடையவர்கள். குழந்தை களே, ஆத்ம உணர்வு டையவராகுங்கள் என பாபா கூறுகின்றார். தேக உணர்வை விட்டு விடுங்கள் என்று யாராவது கூறுவார்களா என்ன! ஆன்மீகம் என்ற வார்த்தையை இப்போது போடுகிறார்கள். முன்பு மதங்களின் மாநாடு என்று தான் கூறினார்கள். ஸ்பிரிட்சுவல் என்பதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. ஸ்பிரிட்சுவல் ஃபாதர் என்றால் நிராகார தந்தை. ஆத்மாக் களாகிய நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள், ஆன்மீகத் தந்தை வந்து உங்களைப் படிக்க வைக்கிறார். இதை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நான் யார் என்பதை பாபாவே வந்து தெரிவிக்கிறார். கீதையில் கூட இது கிடையாது. நான் உங்களுக்கு எல்லையற்ற படிப் பினையைக் கொடுக்கிறேன். இதில் வக்கீல், நீதிபதி, டாக்டர் போன்ற யாருடைய அவசியமும் இல்லை. ஏனென்றால் அங்கே சுகமே சுகம். துக்கத்தின் பெயர் அடையாளம் கிடையாது. இங்கேயோ சுகத்தின் பெயர் அடையாளம் கிடையாது. இதற்கு தான் மறைந்து விட்டது எனக் கூறப்படுகிறது. சுகம் என்பது காகத்தின் எச்சத்திற்கு சமம். சிறிதளவு சுகம் மட்டுமே இருந்தால் எல்லையற்ற சுகத்தின் ஞானத்தை எப்படிக் கொடுக்க முடியும்? முதலில் தேவி தேவதா இராஜ்யம் இருந்த போது சத்தியம் 100 சதவீதம் இருந்தது. இப்போதோ பொய்யே பொய்.

இது எல்லையற்ற ஞானம் ஆகும். இது மனித சிருஷ்டி என்ற மரம். இதனுடைய விதையாக நான் இருக்கிறேன் என நீங்கள் அறிகிறீர்கள். அவருக்குள் மரத்தின் அனைத்து ஞானமும் இருக்கிறது. மனிதர்களுக்கு இந்த ஞானம் இல்லை. நான் சைத்தன்ய விதையாக இருக்கிறேன். என்னை ஞானக்கடல் என்கிறார்கள். ஞானத்தினால் ஒரு நொடியில் கதி, சத்கதி கிடைக்கிறது. நான் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறேன். என்னைத் தெரிந்து கொள்வதால் குழந்தை களாகிய உங்களுக்கு சொத்து கிடைக்கிறது. ஆனால் அது இராஜ்யம் அல்லவா! சொர்க்கத்தில் பதவிகள் வரிசைக்கிரமத்தில் நிறைய இருக்கிறது. பாபா ஒரே ஒரு படிப்பை படிக்க வைக்கிறார். படிக்கக் கூடியவர்கள் வரிசைக்கிரமத்தில் இருக்கிறார்கள். இதில் வேறு எந்த படிப்பின் அவசியமும் கிடையாது. அங்கே எந்த நோயும் கிடையாது. நயா பைசா வருமானத்திற்காக படிப்பைப் படிக்க மாட்டார்கள். நீங்கள் இங்கிருந்து எல்லை யற்ற சொத்து எடுத்துச் செல்கிறீர் கள். இந்த பதவி நமக்கு யாரோ கொடுத்திருக்கிறார் என அங்கே தெரியாது. இதை இப்போது தான் புரிந்து கொள்கிறீர்கள். எல்லைக்குட்பட்ட ஞானத்தை நீங்கள் படித்து வந்துள்ளீர்கள். இப்போது எல்லையற்ற ஞானத்தை படிக்க வைப்பவரைப் பார்த்து விட்டீர்கள், தெரிந்து கொண்டீர்கள். தந்தை தந்தையாகவும் இருக்கிறார், டீச்சராகவும் இருக்கிறார், நம்மை படிக்கவும் வைக்கிறார் என அறிகிறீர்கள். சுப்ரீம் டீச்சர் இராஜ யோகத்தை கற்பிக்கிறார். உண்மையான சத்குருவாகவும் இருக்கிறார். இது எல்யைற்ற இராஜயோகம் ஆகும். அவர்கள் வக்கீல், மருத்துவம் போன்றவற்றைத் தான் கற்பிப்பார்கள். ஏனென்றால் இந்த உலகம் துக்கத்தினுடைய தாகும். அது அனைத்தும் எல்லைக்குட்பட்ட படிப்பாகும். இது எல்லைக்கப்பாற்பட்ட படிப்பாகும். பாபா உங்களுக்கு எல்லையற்ற படிப்பை படிக்க வைக்கிறார். இவர் தந்தை டீச்சர், சத்குரு என கல்ப கல்பமாக வருகிறார். பிறகு இதே படிப்பை சத்யுகம் திரேதாயுகத்திற்காக படிக்க வைக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு மறைந்து போகிறது. நாடகத்தின் படி சுகத்தின் சொத்து நிறைவடை கிறது. இதை எல்லையற்ற தந்தை புரிய வைக்கிறார். அவருக்கு தான் பதீத பாவனர் என்று பெயர். கிருஷ்ணரை தாயும் நீயே, தந்தையும் நீயே, என்றோ பதீதபாவனர் என்றோ கூறுவார்களா? இவருடைய பதவி மற்றும் அவருடைய பதவியில் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. என்னை தெரிந்து கொள்வதால் நீங்கள் ஒரு நொடியில் ஜீவன் முக்தியைப் பெற முடியும் என பாபா கூறுகிறார். இப்போது கிருஷ்ண பகவான் இருக்கிறார் என்றால் யார் வேண்டுமானாலும் உடனடியாக புரிந்து கொள்வார்கள். கிருஷ்ணரின் பிறவியை யாரும் தெய்வீகமாக, அலௌகிகமாகப் பாடவில்லை. தூய்மையினால் மட்டும் பிறக்கிறார். தந்தையோ யாருடைய கர்பத்திலிருந்தும் வரவில்லை. இனிமையிலும் இனிமை யான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆத்மா தான் படிக்கிறது எனப் புரிய வைக்கிறார். அனைத்து சம்ஸ்காரங்களும் நல்லது கெட்டது ஆத்மாவில் தான் இருக்கிறது. எப்படி கர்மம் செய்கிறார் களோ அதற்கேற்ப அவர்களுக்கு சரீரம் கிடைக்கிறது. சிலர் நிறைய துக்கத்தை அடைகிறார்கள். சிலர் ஒற்றை பார்வை உடையவராக, சிலர் காது கேளாதவர்களாக பிறக்கிறார்கள் கடந்த காலத்தில் செய்த கர்மத்தின் பலன் இது என கூறுகிறார்கள். ஆத்மா வின் கர்மத்திற்கு ஏற்ப நோயான உடல் கிடைக்கிறது.

நம்மை படிக்க வைக்கக் கூடியவர் காட் ஃபாதர் என இப்போது குழந்தைகள் அறிகிறீர்கள். காட் டீச்சர், காட் குரு ஆவார். அவருக்கு காட், பரம் ஆத்மா என்கிறார்கள். அதை இணைத்து பரமாத்மா சுப்ரீம் சோல் எனவும் கூறுகிறார்கள். பிரம்மாவிற்கு சுப்ரீம் என்று கூற முடியாது. சுப்ரீம் என்றால் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தூய்மையிலும் தூய்மையானவர். பதவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இருக்கின்றது. கிருஷ்ணருக்கு என்ன பதவி இருக் கின்றதோ அது மற்றவருக்குக் கிடைக்காது. பிரதம மந்திரியின் பதவியை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். பதவி தனியாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பதவி தனியாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கர் தேவதைகள் ஆவர். சிவனோ பரமாத்மா ஆவார். இருவரையும் இணைத்து சிவ சங்கர் என எப்படி கூறுவார்கள்? இருவரும் தனித்தனி அல்லவா! புரிந்து கொள்ளாத காரணத்தால் சிவ சங்கரரை ஒன்று எனக் கூறுகிறார்கள் பெயரும் அவ்வாறே வைக்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் பாபா தான் வந்து புரிய வைக்கிறார். இவர் தந்தையாகவும், ஆசிரியராகவும், சத்குருவாகவும் இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் தந்தை இருக்கிறார், டீச்சரும் இருக்கிறார், குருவும் இருக்கிறார். வயதாகும் போது குருவிடம் செல்கிறார்கள். தற்காலத்தில் சிறிய வயதில் கூட குருவை வைத்துக் கொள்கிறார்கள். குரு இல்லை என்றால் தவறுகள் நடந்து விடும் என நினைக் கிறார்கள். 60 வயதிற்கு பிறகு குருவிடம் சென்றார்கள். அது வான பிரஸ்த நிலை யாகும். நிர்வாணம் அதாவது சப்தத்திலிருந்து விடுபட்டு இனிமையான அமைதியான வீட்டிற்குப் போவதற்காக அரைக் கல்பம் நீங்கள் முயற்சி செய்தீர்கள். ஆனால் யாருமே போக முடியாது என்பது தெரியவில்லை. மற்றவர்களுக்கு எப்படி வழி காட்ட முடியும்? ஒருவரைத் தவிர வேறு யாரும் வழி காட்ட முடியாது. அனைவரின் புத்தியும் ஒன்று போல இல்லை. சிலரோ கதைகளை கூறுகிறார்கள். அதனால் நன்மை இல்லை. முன்னேற்றமும் இல்லை. இப்போது நீங்கள் தோட்டத்தின் மலர்களாகிறீர்கள். மலரிலிருந்து முள்ளாகி விட்டீர்கள். இப்போது மீண்டும் முள்ளிலிருந்து மலராக தந்தை மாற்றுகிறார். நீங்கள் தான் பூஜைக்குரிய வரிலிருந்து பூஜாரி ஆகிறீர்கள். 84 பிறவிகளை எடுத்து எடுத்து சதோபிரதானத் திலிருந்து தமோபிரதானமாக பதீதமாகி விட்டீர்கள். பாபா ஏணிப்படியைப் பற்றி முழுமை யாகப் புரிய வைத்திருக்கிறார். இப்போது மீண்டும் பதீதத்திலிருந்து எப்படி பாவனமாக முடியும்? இது யாருக்கும் தெரியாது. ஓ, பதீத பாவனா வருங்கள், வந்து எங்களை தூய்மை யாக்குங்கள் எனப் பாடுகிறார்கள். பிறகு நதிகள், கடலை பதீத பாவனன் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்று நீராடுகிறார்கள். கங்கையை பதீத பாவனி என்கிறார்கள். ஆனால் நதிகள் எங்கிருந்து தோன்றுகிறது? கடலிலிருந்து தோன்றுகிறது அல்லவா! இது அனைத்தும் கடலின் (கடல் நீரால் உருவான) சந்ததிகள். எனவே ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கே குழந்தைகளாகிய நீங்கள் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். வெளியே கெட்ட சங்கத் திற்கு சென்றீர்கள் என்றால் மிகவும் தவறான விசயங்களைக் கூறுவார்கள். பிறகு இவ்வளவு விஷயங்களையும் மறந்து போவார்கள். கெட்ட சங்கத்திற்கு போவதால் ஏமாற்றம் ஏற்படுகிறது. சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் இந்த விஷயங்களை மறக்கக் கூடாது. பாபா நமக்கு தந்தையாகவும், ஆசிரியராகவும் இருக்கிறார். எல்லாவற்றையும் கடந்து அழைத்துச் செல்கிறார். இந்த நிச்சயத்தோடு நீங்கள் வந்துள்ளீர்கள். அது அனைத்தும் உலகியல் லௌகீக படிப்பு, லௌகீக மொழிகள். இதுவோ அலௌகீகமானது. என்னுடைய பிறவி கூட அலௌகீகமானது என பாபா கூறுகிறார். நான் கடனாகப் பெறுகிறேன். பழைய செருப்பை எடுக்கிறேன். பழைய திலும் பழையது. எல்லாவற்றையும் விட பழைய செருப்பு இது. பாபா எடுத்துள்ள இந்த உடலை லாங் பூட் எனவும் கூறுகிறார்கள். இது எவ்வளவு எளிய விஷயம்! இது மறக்கக் கூடியது அல்ல. ஆனால் மாயை இவ்வளவு எளிய விஷயங் களையும் மறக்க வைக்கிறது. தந்தை தந்தையாகவும் இருக்கிறார், எல்லையற்ற பாடங்களை சொல்லியும் கொடுக்கிறார். வேறு யாரும் சொல்லித்தர முடியாது. எங்காவது கிடைக்கிறதா என்று சென்று தேடுங்கள் என பாபா கூறுகிறார். அனைவரும் மனிதர்கள். அவர்கள் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. பகவான் ஒரே ஒரு இரதத்தை தான் எடுக்கிறார். அவருக்கு பாக்கியசாலி இரதம் என்று பெயர். பல கோடி மடங்கு பாக்கியசாலி ஆக்குவதற்காக அவருக்குள் பாபா பிரவேசமாகிறார். மிகவும் அருகாமையில் இருக்கக் கூடிய மணி. பிரம்மா விலிருந்து விஷ்ணு ஆகிறார். சிவபாபா இவரையும் மாற்றுகிறார், உங்களையும் இவர் மூலமாக உலகத்திற்கு அதிபதியாக்குகிறார். விஷ்ணு புரியின் ஸ்தாபனை நடக்கிறது. இதுவே இராஜ்யத்தை உருவாக்குவதற்கான இராஜ யோகம் ஆகும். இப்போது இங்கே அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் பலரின் காது களிலிருந்து வெளியேறிவிடுகிறது. சிலர் தாரணை செய்து கூறவும் செய்கிறார்கள் என்பது பாபாவிற்கு தெரியும். அவர்களுக்கு மகாரதி என்று பெயர். கேட்டு தாரணை செய்கிறார் கள். மற்றவர்களுக்கும் ஆர்வத்தோடு புரிய வைக்கிறார்கள். மகாரதியாக இருப்பவர்கள் புரிய வைத்தால் உடனே புரிந்து கொள்வார்கள். குதிரைப்படை யினரிடமிருந்து குறைவாகப் புரிந்துக் கொள்வார்கள். காலாட் படையினரிடமிருந்து அதைவிட குறைவாக புரிந்து கொள்வார்கள். மகாரதி யார்? குதிரைப் படையினர் யார்? என பாபாவிற்குத் தெரியும். இப்போது இதில் குழப்பம் அடைவதற்கு எந்த விஷயமும் இல்லை. ஆனால் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் குழப்பம் அடைகிறார்கள். பிறகு தூங்கி விடுகிறார்கள். கண்களை மூடிக் கொண்டு அமர்கிறார்கள். வருமானம் அடையும் போது தூக்கம் வருமா? தூங்கிக் கொண்டே இருந்தால் எப்படி தாரணை ஆகும்? கொட்டாவி விடுவதால் களைப் பாக இருக்கிறார்கள் என பாபா புரிந்து கொள்வார். வருமானத்தில் ஒரு போதும் களைப் படைவதில்லை. கொட்டாவி என்பது மனச் சோர்வின் அடையாளம். ஏதாவது ஒரு விஷயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டி ருந்தால் கொட்டாவி நிறைய வரும். இப்போது நீங்கள் பாபாவின் வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். எனவே குடும்பமும் இருக்கிறது. ஆசிரியராகவும் ஆகிறீர்கள், வழி காண்பிப்பதற்காக குருவாகவும் ஆகிறீர்கள். மாஸ்டர் குரு எனக் கூறப்படு கிறது. எனவே இப்போது பாபாவின் வலது கரம் ஆக வேண்டும் அல்லவா. அப்போது தான் நிறைய பேருக்கு நன்மை செய்ய முடியும். நரனிலிருந்து நராயணனாகும் தொழிலைத் தவிர மற்ற அனைத்து தொழில்களிலும் நஷ்டம் இருக்கிறது. அனைவரின் வருமானமும் அழிந்து போகக் கூடியது. நரணினிலிருந்து நாராயணன் ஆகும் படிப்பை பாபா தான் கற்பிக்கிறார். அப்படி என்றால் எந்தப் படிப்பை படிக்க வேண்டும்? யாரிடம் நிறைய பணம் இருக்கிறதோ அவர்கள் இங்கேயே சொர்க்கம் இருக்கிறது என நினைக்கிறார்கள். தந்தை காந்தி இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தாரா? அட, உலகம் அதே பழைய தமோ பிரதானமாக இருக்கிறது அல்லவா! மீண்டும் துக்கம் அதிகமாகிக் கொண்டி ருக்கிறது. இதற்கு இராம இராஜ்யம் என்று எப்படிக் கூற முடியும்? மனிதர்கள் எவ்வளவு முட்டாளாகி இருக்கிறார்கள். முட்டாள்களுக்கு தமோபிரதானம் என்று கூறப்படுகிறது. புத்திசாலிகள் சதோபிரதானமாக இருப்பார்கள். இந்த சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. இதில் எதுவுமே தந்தையிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பாபாவின் கடமை படைப்பவர், படைப்பின் ஞானத்தைக் கொடுத்தல். அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். முரளியில் அனைத்தையும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். அனைத்து விஷயங்களுக்கும் பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கேட்பதற்கு என்ன இருக்கிறது, தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது என்றால் எப்படிக் கேட்க முடியும்? எவர் ஹெல்தி, 21 பிறவிகளுக்கு எவர் ஹெல்தியாக வேண்டும் என்றால் இங்கு வந்து புரிந்துக் கொள்ளுங்கள் என நீங்கள் போர்டில் எழுதலாம். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபா என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு நன்கு தாரணை செய்து ஆர்வத்தோடு மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். ஒரு காதில் கேட்டு இன்னொரு காதில் விட்டு விடக்கூடாது. சம்பாதிக்கும் நேரத்தில் கொட்டாவி விடக் கூடாது.

2. பாபாவின் வலது கரமாகி நிறைய பேருக்கு நன்மை செய்யவும், நரனிலிருந்து நராயணனாக மாறி மற்றவர்களை மாற்றும் தொழில் செய்ய வேண்டும்.

வரதானம்:
எவருடைய வீண் விசயங்களையும் கேட்டு ஆர்வத்தை அதிகரிப்பதை விடுத்து முற்றுப்புள்ளி வைத்து பிறர் வழியிலிருந்து (பரமத்) விலகியிருங்கள்

சில குழந்தைகள் போகப்போக ஸ்ரீமத்துடன் பரமத்தையும் கலந்து விடுகின்றார்கள். எவரேனும் பிராமண உலகின் செய்தியை சொல்ல வந்தால் ஆர்வத்துடன் கேட்கின்றனர். எதுவும் செய்ய முடியாது. இருப்பினும் கேட்பதால் அது புத்தியில் சென்று விடுகிறது. பிறகு நேரம் வீணாகின்றது. எனவே பாபாவின் அறிவுரை யாதெனில் கேட்டும் கேளாதிருங்கள். சொல்பவர் சொன்னாலும் நீங்கள் முற்றுப்புள்ளி வையுங்கள். எவரைப் பற்றிய செய்தி கேட்டீர்களோ அதனால் பார்வையிலும் எண்ணத்திலும் வெறுப்புணர்வு கூடாது. அப்போதே பிறர் வழியிலிருந்து விடுபட்டவர் ஆவீர்கள்.

சுலோகன்:
யாருடைய உள்ளம் விசாலமானதோ அவர்கள் கனவிலும் எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரம் வெளிப்படாது.