14-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த புருஷோத்தம
சங்கமயுகம் நன்மைக்கான யுகமாகும், இதில் தான் மாற்றம் நடக்கிறது,
நீங்கள் கீழான நிலையிலிருந்து உத்தம புருஷர்களாக ஆகின்றீர்கள்.
கேள்வி:
இந்த ஞான மார்க்கத்தில் எந்தவொரு
விசயத்தை யோசிப்பதாலோ அல்லது பேசுவ தாலோ முன்னேற்றம் ஏற்பட
முடியாது?
பதில்:
நாடகத்தில் இருந்தால் முயற்சி
செய்து விடலாம். நாடகம் செய்ய வைத்தால் செய்து கொள்ளலாம். இதை
யோசிக்கக் கூடிய அல்லது பேசக்கூடியவர்களின் முன்னேற்றம்
ஒருபோதும் ஏற்பட முடியாது. இதை சொல்வதே தவறாகும். இப்போது என்ன
முயற்சியை நாம் செய்து கொண்டிருக்கிறோமோ, இது கூட நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முயற்சி
செய்யத் தான் வேண்டும்.
பாடல்:
இது தீபம் மற்றும் புயலின் கதை.......
ஓம் சாந்தி.
இது கலியுக மனிதர்களின் பாடலாகும். ஆனால் இதனுடைய அர்த்தத்தை
அவர்கள் தெரிந்திருக்கவில்லை. இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
நீங்கள் இப்போது புருஷோத்தம சங்கம யுகத்தவர்களாவீர்கள். சங்கம
யுகத்தின் கூடவே புருஷோத்தம என்பதையும் எழுத வேண்டும்.
குழந்தைகளுக்கு ஞானத்தின் கருத்துகள் நினைவு இல்லாத
காரணத்தினால் இப்படிப்பட்ட வார்த்தைகளை எழுத மறந்து
விடுகிறார்கள். இது முக்கிய மானதாகும், இதனுடைய அர்த்தத்தைக்
கூட நீங்கள் தான் புரிந்து கொள்ள இயலும். புருஷோத்தம மாதம் கூட
இருக்கிறது. இது புருஷோத்தம சங்கமயுகமாகும். இந்த சங்கமத்தின்
பண்டிகை கூட ஒன்று இருக்கிறது. இந்த பண்டிகை அனைத்திலும்
உயர்ந்ததாகும். நாம் இப்போது புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்
கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உத்தமத்திலும் உத்தம
புருஷர்களாகிக் கொண்டிருக் கிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த,
செல்வந்தர்களிலும் செல்வந்தர்கள் நம்பர் ஒன் என்று
லஷ்மி-நாராயணனை சொல்லலாம். பெரிய பிரளயம் நடந்தது என்று
சாஸ்திரங்களில் காட்டு கிறார்கள். பிறகு முதல் நம்பரில்
இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலிலையில் கடலின் மீது மிதந்து வந்தார்
என்று காட்டுகிறார்கள். இப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?
இந்த ஸ்ரீகிருஷ்ணர் நம்பர் ஒன் ஆவார், இவரைத் தான்
ஷியாம்-சுந்தர் என்று சொல்கிறார்கள். விரலை சூப்பிக் கொண்டு
வந்தார் என்று காட்டுகிறார்கள். குழந்தை கர்பத்தில் தான்
இருக்கும். எனவே முதல்-முதலில் ஞானக் கடலிலிருந்து வந்த
உத்தமத்திலும் உத்தமமான புருஷர் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார்.
ஞானக்கடலின் மூலம் சொர்க்கத்தின் ஸ்தாபனை நடக்கிறது. அதில்
நம்பர் ஒன் புருஷோத்தமர் இந்த ஸ்ரீகிருஷ்ணர் ஆவார் மேலும் இவர்
ஞானக்கடல் ஆவார், தண்ணீரின் கடல் அல்ல. பிரளயமும் நடப்பதில்லை.
நிறைய புதிய குழந்தைகள் வரும்போது பாபா பழைய ஞானக்கருத்துகளை
திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. சத்யுகம், திரேத, துவாபர,
கலியுகம்.......... இந்த 4 யுகங்கள் இருக்கின்றன. ஐந்தாவது
இந்த புருஷோத்தம சங்கம யுகமாகும். இந்த யுகத்தில் மனிதர்கள்
மாற்றம் ஆகிறார்கள். கீழான நிலையிலிருந்து சர்வ
உத்தமமானவர்களாக ஆகிறார்கள். சிவபாபாவை கூட புருஷோத்தமன் அல்லது
சர்வோத்தம் என்று சொல்கிறார்கள் அல்லவா. அவர் பரம் ஆத்மா,
பரமாத்மா ஆவார். பிறகு புருஷர்களில் உத்தமமானவர்கள் இந்த
லஷ்மி-நாராயணன் ஆவர். இவர்களை அப்படி மாற்றியது யார்? இதை
குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள்.
குழந்தைகளுக்கும் புரிய வந்துள்ளது. இந்த சமயத்தில் அப்படி
ஆவதற்காக நாம் முயற்சி செய்கின்றோம். முயற்சி ஒன்றும்
பெரியதில்லை (கடினமில்லை), மிகவும் சுலபமானது. கற்றுக்
கொள்பவர்களும் அபலைகள், கூனிகள், எழுத-படிக்கத் தெரியாதவர்
களாவர். அவர்களுக்கு எவ்வளவு சுலபமாக புரிய வைக்கப்படுகிறது.
அஹமதாபாத்தில் ஒரு சாது இருந்தார், நான் எதையும்
சாப்பிடுவதில்லை குடிப்பதில்லை என்று சொன்னார். நல்லது ஆயுள்
முழுவதும் எதையும் சாப்பிடவில்லை-குடிக்கவில்லை பிறகு என்ன?
பலன் எதுவும் இல்லை அல்லவா. மரத்திற்கும் கூட உணவு கிடைக்கிறது
அல்லவா. உரம் தண்ணீர் போன்றவை இயற்கையாக கிடைக்கிறது அல்லவா,
அதன் மூலம் மரம் வளருகிறது. அவர் கூட ஏதாவது சித்திகளை அடைந்
திருப்பார். இதுபோல் நிறைய பேர் நெருப்பில், தண்ணீரின் மேல்
நடப்பவர்கள் இருக்கிறார்கள். இதனால் என்ன பலன். உங்களுக்கு
இந்த சகஜ இராஜயோகத்தின் மூலம் பிறவி-பிறவிகளுக்கும் நன்மையாகும்.
உங்களை பிறவி- பிறவிகளுக்கும் துக்கமுடையவர்களிலிருந்து சுக
முடையவர் களாக்கி விடுகிறது. பாபா கூறுகின்றார் - குழந்தைகளே,
நாடகத் தின்படி நான் உங்களுக்கு ஆழமான விசயங்களைச் சொல்கின்றேன்.
சிவன் மற்றும் சங்கரை ஏன் ஒன்றாக்கினார்கள் என்று பாபா புரிய
வைத்திருக்கிறார் அல்லவா. சங்கருக்கு இந்த சிருஷ்டியில் நடிப்பே
இல்லை. சிவனுக்கு, பிரம்மாவிற்கு, விஷ்ணுவிற்கு நடிப்பு
இருக்கிறது. பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு சக்கரம் முழுவதிலும்
நடிப்பு இருக்கிறது. சிவபாபா விற்கு கூட இந்த சமயத்தில் நடிப்பு
இருக்கிறது, அவர் வந்து ஞானத்தை கொடுக்கின்றார். பிறகு
நிர்வாணதாமத்திற்கு சென்று விடுகிறார். குழந்தைகளுக்கு சொத்தை
கொடுத்து விட்டு அவர் வானப்பிரஸ்தத்தில் சென்று விடுகிறார்.
வானப்பிரஸ்தி களாக ஆவது என்றால் குருவின் மூலம் சப்தங்களை
கடந்து செல்வதற்கான முயற்சி செய்வதாகும். ஆனால் யாரும்
திரும்பிச் செல்ல முடியாது ஏனென்றால் விகாரிகளாக, கீழானவர்களாக
இருக்கிறார்கள். அனைவருக்கும் விகாரத்தின் மூலம் பிறவி
கிடைக்கிறது. இந்த லஷ்மி-நாராயணன் நிர்விகாரிகளாவர், அவர்
களுடைய பிறவி விகாரத்தின் மூலம் நடப்பதில்லை ஆகையினால்
உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். குமாரிகள் கூட
நிர்விகாரிகளாக இருக்கிறார்கள் - ஆகையினால் அவர் களுக்கு
முன்னால் தலை வணங்குகிறார்கள். எனவே பாபா புரிய
வைத்திருக்கிறார், இங்கே சங்கருக்கு எந்த நடிப்பும் இல்லை,
மற்றபடி பிரஜாபிதா பிரம்மா என்றால் கண்டிப்பாக பிரஜை களுக்கு
தந்தையாகின்றார் அல்லவா. சிவபாபாவை ஆத்மாக்களின் தந்தை என்று
சொல்லலாம். அவர் அழிவற்ற தந்தையாவார், இந்த ஆழமான விசயங்களை
நல்ல விதத்தில் தாரணை செய்ய வேண்டும். பெரிய-பெரிய தத்துவ
ஞானிகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நிறைய பட்டங்கள்
கிடைக்கின்றன. ஸ்ரீ ஸ்ரீ 108 என்ற பட்டம் கூட வித்வான்களுக்கு
கிடைக்கிறது. பனாரஸ் கல்லூரியில் தேர்ச்சி பெற்று பட்டங்கள்
வாங்கி வருகிறார்கள். பாபாவினுடைய பட்டத்தை தங்களுக்கு வைத்துக்
கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்குப் புரிய வையுங்கள்
என்று தான் குப்தாஜியை பனாரஸிற்கு பாபா அனுப்பி வைத்துள்ளார்.
பாபாவை ஸ்ரீ ஸ்ரீ 108 ஜகத்குரு என்று சொல்லப்படுகிறது. 108 மணி
மாலை தான் இருக்கிறது. 8 ரத்தினங்கள் பாடப்பட்டுள்ளது. அவர்கள்
மதிப்புடன் தேர்ச்சி பெறுகிறார்கள் ஆகையினால் அவர்களை
ஜபிக்கிறார்கள். பிறகு அதிலிருந்து கொஞ்சம் குறைந்த 108-ன் பூஜை
செய்கிறார்கள். யக்ஞம் உருவாக்குகிறார்கள் என்றால் சிலர் 1000
சாலிகிராமங்களை உருவாக்குகிறார்கள், சிலர் 10 ஆயிரம், சிலர் 50
ஆயிரம், சிலர் லட்சம் கூட உருவாக்குகிறார்கள். மண்ணால்
உருவாக்கி பிறகு யக்ஞத்தை வளர்க்கிறார்கள். எப்படி நல்லதிலும்
நல்ல, பெரிய சேட்டாக இருந்தார் என்றால் லட்சம் கூட உருவாக்கச்
சொல்வார்கள். 16108 மணி மாலையை பெரியதாக உருவாக்குகிறார்கள்,
மாலை பெரியது என்று பாபா புரிய வைத்திருக்கிறார். நீங்கள்
அனைவரும் பாபாவோடு பாரதத்தின் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
பாபா வின் பூஜை நடக்கிறது என்றால் குழந்தைகளுக்கும் பூஜை நடக்க
வேண்டும், ருத்ர பூஜை ஏன் நடக்கிறது என்பதை தெரிந்திருக்கவில்லை.
குழந்தைகள் அனைவரும் சிவபாபா வினுடையவர் களாவர். இந்த சமயத்தில்
உலகில் எவ்வளவு மக்கள்தொகை இருக்கிறது, இதில் அனைத்து
ஆத்மாக்களும் சிவபாபாவின் குழந்தைகள் அல்லவா. ஆனால் அனை வரும்
உதவியாளர்களாக இருப்பதில்லை. இந்த சமயத்தில் நீங்கள்
எந்தளவிற்கு நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்தவர்களாக
ஆகின்றீர்கள். பூஜைக்கு தகுதி யானவர்களாக ஆகின்றீர்கள். இந்த
விசயத்தை புரியவைக்கும் அளவிற்கு சக்தி வேறு யாரிடத்திலும்
இல்லை ஆகையினால் ஈஸ்வரனுடைய முடிவை முழுமையாக யாரும்
தெரிந்திருக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். பாபா தான்
வந்து புரிய வைக்கின்றார், பாபாவை ஞானக்கடல் என்று சொல்லப்
படுகிறது என்றால் கண்டிப்பாக ஞானத்தை கொடுப்பார் அல்லவா.
தூண்டுதலின் விசயமே இல்லை. பகவான் தூண்டுதலின் மூலம் புரிய
வைக்கின்றாரா என்ன? அவரிடம் உலகத்தின் முதல்-இடை-கடைசியின்
ஞானம் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அதை
குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். இந்த நம்பிக்கை
என்னவோ இருக்கிறது - நிச்சயம் இருந்தாலும் கூட பாபாவை மறந்து
விடுகிறார்கள். பாபாவின் நினைவு தான் படிப்பினுடைய சாரமாகும்.
நினைவு யாத்திரையின் மூலம் கர்மாதீத் நிலையை அடைவதில் உழைப்பு
தேவைப்படுகிறது, இதில் தான் மாயையின் தடை வருகிறது. படிப்பில்
இவ்வளவு தடைகள் வருவதில்லை. சங்கர் கண்ணைத் திறந்தார் வினாசம்
நடந்தது என்று சங்கரைப் பற்றி சொல்கிறார்கள், இப்படி சொல்வது
கூட சரியல்ல. நான் வினாசம் செய்யவைப்பதும் அல்ல, அவர் வினாசம்
செய்வதுமில்லை, இது தவறு என்று பாபா கூறுகின்றார். தேவதைகள்
பாவம் செய்வார்களா என்ன? இப்போது சிவபாபா அமர்ந்து இந்த
விசயங்களைப் புரிய வைக்கின்றார். இந்த சரீரம் ஆத்மாவின்
ரதமாகும். ஒவ்வொரு ஆத்மாவும் அதனதனுடைய ரதத்தில் சவாரி
செய்கிறது. பாபா கூறுகின்றார், நான் இவருடைய ரதத்தை கடனாகப்
பெறுகின்றேன், ஆகையினால் என்னுடையது தெய்வீக அலௌகீக பிறவி என்று
சொல்லப்படுகிறது. இப்போது உங்களுடைய புத்தியில் 84
பிறவிகளினுடைய சக்கரம் இருக்கிறது. இப்போது நாம் வீட்டிற்குச்
செல்கிறோம், பிறகு சொர்க்கத்தில் வருவோம் என்பதை
தெரிந்துள்ளீர்கள். பாபா மிகவும் சுலபமாக்கி புரிய வைக்கின்றார்,
இதில் மனமுடைந்து போகக்கூடாது. பாபா நாங்கள் எழுத-படிக்கத்
தெரியாதவர்கள் என்று சொல்கிறார்கள். வாயிலிருந்து பேச எதுவும்
வருவதில்லை என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் ஆகாது
கண்டிப்பாக வாயால் பேசமுடியும். சாப்பிடும்போது வாய்
பயன்படுகிறது அல்லவா. பேச்சு வரவில்லை என்பது இருக்கவே முடியாது.
பாபா மிகவும் சுலபமாக புரிய வைத்திருக்கிறார். யாராவது மௌனமாக
இருக்கிறார்கள் என்றால் கூட அவரை நினைவு செய்யுங்கள் என்று மேலே
கை காட்டுகிறார்கள். துக்கத்தை போக்குபவர் சுகத்தை வழங்குபவர்
அந்த ஒரு வள்ளலே ஆவார். பக்தி மார்க்கத்திலும் வள்ளலாக
இருக்கின்றார் என்றால் இந்த சமயத்திலும் வள்ளலாக இருக்கின்றார்
பிறகு வானப்பிரஸ்த நிலையில் அமைதியாக இருக் கின்றார்.
குழந்தைகளும் சாந்தி தாமத்தில் இருக்கின்றார்கள். நடிப்பு
பதிவாகியுள்ளது, அது காரியத் தில் வருகிறது. இப்போது நம்முடைய
நடிப்பு உலகத்தை புதியதாக்குவதாகும். அவருடைய பெயர் மிகவும்
நன்றாக இருக்கிறது - சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை தந்தை.
பாபா சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். பாபா நரகத்தை படைப்பாரா
என்ன? பழைய உலத்தை யாராவது படைக்கிறார்களா என்ன. வீடு எப்போதும்
புதியதாகவே கட்டப்படுகிறது. சிவபாபா பிரம்மாவின் மூலம் புதிய
உலகத்தைப் படைக்கின்றார். இவருக்கு நடிப்பு கிடைத்திருக்கிறது
- இங்கே பழைய உலகத்தில் இருக்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒருவர்
மற்றவருக்கு துக்கம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாம் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
பிறகு சரீரமுடைய பிரஜா பிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட
குழந்தைகளாகி விட்டீர்கள். நமக்கு ஞானத்தை சொல்லிக் கொடுக்கக்
கூடியவர் படைப்பவராகிய சிவபாபா ஆவார். அவர் தன்னுடைய படைப்பின்
முதல்-இடை-கடைசியின் ஞானத்தைக் கூறுகின்றார். உங்களுடைய குறிக்
கோளே லஷ்மி-நாராயணன் ஆவதாகும். பாருங்கள் மனிதர்கள் எவ்வளவு
செலவு செய்து பளிங்கு கற்களால் மூர்த்திகளை உருவாக்குகிறார்கள்.
இது ஈஸ்வர்ய விஷ்வ வித்தியால யமாகும், உலக பல்கலைக்கழகம். முழு
உலகத்தையும் மாற்றம் செய்யப்படுகிறது. அவர் களுடைய நடத்தைகள்
அனைத்தும் அசுரத்தன முடையதாக இருக்கிறது. முதல்-இடை-கடைசி
அனைத்தும் துக்கம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஈஸ்வரிய
பல்கலைக்கழகமாகும். ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் ஒன்று தான்
இருக்கிறது, இதை ஈஸ்வரன் வந்து திறக்கின்றார், இதன்மூலம் முழு
உலகத்திற்கும் நன்மை உண்டாகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு
இப்போது சரி மற்றும் தவறு எது என்ற புத்தி (அறிவு) கிடைக்கிறது
மேலும் வேறு எந்த மனிதரும் இதை புரிந்தவர் இல்லை. சரி, தவறு
என்பதை புரிய வைக்கக் கூடியவர் ஒரேயொரு அதிகாரமுடையவர் தான்
இருக்கிறார், அவரைத் தான் சத்தியம் என்று சொல்லப்படுகிறது. பாபா
தான் வந்து ஒவ்வொருவரையும் சரியானவர்களாக மாற்றுகின்றார்.
குணமுடையவர்களாக ஆனால் தான் முக்திக்குச் சென்று பிறகு
ஜீவன்முக்தியில் வருவார்கள். நாடகத்தையும் குழந்தைகளாகிய
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முதலில் இருந்து கடைசி வரை நடிப்பை
நடிக்க வரிசைகிரமமாக வருகின்றீர்கள். இந்த விளையாட்டு நடந்து
கொண்டே இருக்கிறது. நாடகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டே
இருக்கிறது. இது எப்போதும் புதியதாக இருக்கிறது. இந்த நாடகம்
ஒருபோதும் பழையதாக ஆவதே இல்லை, மற்ற அனைத்து நாடகம் போன்றவைகள்
அழிந்து விடுகிறது. இது எல்லையில்லாத அழிவற்ற நாடகமாகும். இதில்
அனைவரும் அழிவற்ற நடிகர்களாவர். அழிவற்ற விளையாட்டு அல்லது
மேடையைப் பாருங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கிறது. பாபா வந்து
பழைய உலகத்தை மீண்டும் புதியதாக மாற்று கின்றார். அவையனைத்தும்
உங்களுக்கு காட்சியாகத் தெரியும். எந்தளவிற்கு நெருக்கத்தில்
செல்வீர்களோ அந்தளவிற்கு குஷி ஏற்படும். காட்சிகளைப்
பார்ப்பீர்கள். இப்போது நடிப்பு முடிகிறது என்று சொல்வீர்கள்.
பிறகு நாடகத்தை திரும்பவும் நடிக்க வேண்டும். பிறகு கல்பத்
திற்கு முன்னால் என்ன நடிப்பை நடித்தோமோ அந்த நடிப்பை புதிதாக
நடிப்போம். இதில் கொஞ்சம் கூட வித்தியாசப்பட முடியாது,
ஆகையினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளாகிய நீங்கள்
உயர்ந்த பதவியை அடைய வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்,
குழப்பமடையக் கூடாது. நாடகம் எதை செய்ய வைக்க வேண்டுமோ அதை
செய்ய வைக்கும் என்று சொல்வது கூட தவறாகும். நாம் முயற்சி
செய்யத் தான் வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) படிப்பினுடைய சாரத்தை புத்தியில் வைத்து நினைவு யாத்திரையின்
மூலம் கர்மாத்தீத் நிலையை அடைய வேண்டும். உயர்ந்த
பூஜிக்கத்தக்கவர்களாக ஆவதற்காக பாபாவிற்கு முழுமையாக
உதவியாளர்களாக ஆக வேண்டும்.
2) சத்தியமான தந்தையின் மூலம் கிடைத்திருக்கக் கூடிய எது
சரி-தவறு என்ற ஞானத்தின் மூலம் நற்குணமுடையவர்களாக ஆகி
வாழ்க்கையின் பந்தனத்திலிருந்து விடுபட வேண்டும். முக்தி
மற்றும் ஜீவன்முக்தி ஆஸ்தியை அடைய வேண்டும்.
வரதானம்:
தங்களுக்குள் சிநேகத்தின் பரிமாறுதல் மூலமாக அனைவரையும்
ஒத்துழைப்பு அளிப்பவர்களாக ஆக்கி விடக்கூடிய வெற்றி மூர்த்தி
ஆவீர்களாக.
இப்பொழுது ஞானம் கொடுப்பது மற்றும் பெறுவதன் நிலையை கடந்து
விட்டீர்கள். இப்பொழுது சிநேகத்தின் பரிமாறுதல்
செய்யுங்கள்.யார் எதிரில் வந்தாலும் சிநேகம் கொடுக்க வேண்டும்
மற்றும் சிநேகம் பெற வேண்டும் -இதற்கு தான் அனைவரின் சிநேகி
மற்றும் அன்பானவர் என்று கூறப்படுகிறது. ஞான தானம்
அஞ்ஞானிகளுக்கு செய்ய வேண்டும். ஆனால் பிராமண பரிவாரத்தில்
இந்த தானம் செய்வதில் மகாதானி ஆகுங்கள். எண்ணத்தின் அளவில் கூட
யார் பொருட்டும் சிநேகத்தை தவிர வேறு எதுவும் உற்பத்தி
ஆகாமலிருக்கட்டும். எல்லோர் பொருட்டும் சிநேகம் மட்டுமே
ஏற்பட்டு விடும் பொழுது பின் சிநேகத்திற்கு கைமாறாக ஒத்துழைப்பு
கிடைத்து விடுகிறது. மேலும் சகயோகத்தின் பலன் வெற்றி
கிடைக்கிறது.
சுலோகன்:
ஒரு நொடியில் வீண் சங்கல்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து
விடுங்கள்- இதுதான் தீவிர முயற்சி ஆகும்.
மாதேஷ்வரி அவர்களின் விலை மதிக்க முடியாத மகாவாக்கியம்
தற்சமயத்தில் மனிதர்கள் முக்திக்குத்தான் மோட்சம் என்று
கூறுகிறார்கள். முக்தி பெறுபவர்கள் பிறப்பு இறப்பில் இருந்து
விடுபட்டு விடுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்த
மனிதர்கள் பிறப்பு இறப்பில் வராமல் இருப்பது தான் உயர்ந்த பதவி
என்று நினைக்கிறார்கள். அதையேதான் வினைப்பயன் என்று கருது
கின்றனர். பிறகு யார் வாழ்க்கையில் வாழும் பொழுது நல்ல
கர்மங்கள் செய்கிறார்களோ, எப்படி தர்மாத்மா மனிதர்கள்
இருக்கிறார்கள் அவர்களை ஜீவன் முக்தர்கள் என்றும் அந்த வாழ்க்கை
தான் ஜீவன் முக்தி வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள். மற்றபடி
கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு விடவேண்டும் என்று கோடியில்
யாரோ ஒருவர்தான் புரிந்து கொள்கிறார்கள். இப்பொழுது இது
அவர்களது சொந்த வழி. ஆனால் நாமோ பரமாத்மா மூலமாக என்ன தெரிந்து
கொண்டு விட்டோம் என்றால் முதலில் மனிதர்கள் விகாரங்களின்
கர்மபந்தனத்திலிருந்து விடுபடாத வரை முதல் இடை கடை
துக்கத்திலிருந்து விடுபட முடியாது. எனவே இதிலிருந்து
விடுபடுதல்-இதுவும் ஒரு நிலை ஆகும். அதுவும் முதலில் ஈஸ்வரிய
ஞானத்தை தாரணை செய்தால் தான் அந்த நிலைக்கு போய் சேர முடியும்.
மேலும் அந்த நிலைக்கு சேர்ப்பிப்பவர் சுயம் பரமாத்மா தான்
வேண்டும். ஏனெனில் அவர்தான் முக்தி ஜீவன் முக்தி அளிப்பவர் -
அதுவும் ஒரே நேரத்தில் வந்து அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்தி
கொடுத்து விடுகிறார். மற்றபடி பரமாத்மா ஒன்றும் அநேக முறை
வருவதும் இல்லை. மற்றபடி பரமாத்மா தான் எல்லா அவதாரங்களையும்
தரிக்கிறார் என்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள். ஓம் சாந்தி.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
மனசா சேவை எல்லையில்லாத சேவை ஆகும். எந்த அளவு நீங்கள் மனதால்
சொல்லால் சுயம் (ஸேம்பிள்) மாதிரி ஆவீர்களோ ஸேம்பிளை பார்த்து
இயல்பாகவே கவரப்பட்டு விடுவார்கள். திட சங்கல்பம் வைத்தாலே
போதுமானது. அப்பொழுது சுலபமாக சேவை நடந்து கொண்டே இருக்கும்.
சொற்கள் மூலமாக சேவை செய்ய நேரமில்லை என்றால் உள்ளுணர்வு
மூலமாக மனசாசேவை மூலமாக பரிவர்த்தனை செய்வதற்கான நேரமோ
இருக்கிறது அல்லவா. இப்பொழுது சேவையை தவிர வேறெதிலும் நேரத்தை
இழக்கக்கூடாது. நிரந்தர யோகி நிரந்தர சேவாதாரி ஆகுங்கள்.
மனசாசேவை செய்ய தெரியவில்லை என்றால் தங்களது தொடர்பின் மூலமாக
தங்களது நடத்தை மூலமாக கூட சேவை செய்ய முடியும்.