14-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உயர்ந்ததிலும்
உயர்ந்த பதவி பெற வேண்டுமானால் நினைவு யாத்திரையில்
மகிழ்ந்திருக்க (முழ்கியிருக்க) வேண்டும். இது தான் ஆன்மிக (வலை)
சுருக்குக் கயிறு. புத்தி தனது வீட்டில் ஒட்டிக் கொண்டிருக்க
வேண்டும்.
கேள்வி:
யாருடைய புத்தியில் ஞான தாரணை
நடைபெறுவதில்லையோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?
பதில்:
அவர்கள் சின்னச் சின்ன
விஷயங்களில் கோபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒருவருடைய
புத்தியில் எவ்வளவு ஞான தாரணை ஆகிறதோ, அந்த அளவு தான்
அவருக்குக் குஷி இருக்கும். இப்போது உலகம் கீழே (தாழ்வான
நிலைக்கு) சென்று தான் ஆக வேண்டும், இதில் நஷ்டம் தான் ஏற்படும்
என்ற ஞானம் புத்தியில் இருக்குமானால் ஒரு போதும் கோபப்பட
மாட்டார்கள். சதா குஷி இருக்கும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தை
வந்து புரிய வைக்கிறார். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் எனச்
சொல்லப் படுவதைக் குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆத்மாவின் புத்தியோகம் வீட்டின் பக்கம் செல்ல வேண்டும். ஆனால்
இந்த எண்ணம் என் புத்தியில் வருகிறது என்று சொல்லக் கூடிய
மனிதர்கள் உலகில் யாருமே இல்லை. சந்நியாசிகளும் கூட பிரம்மத்தை
வீடு எனப் புரிந்து கொள்வதில்லை. அவர்களோ, பிரம்மத்தில்
ஐக்கியமாகி விடுவோம் எனச் சொல்கின்றனர். என்றால் அது வீடு இல்லை
என்றாகிறது. வீட்டில் வசிக்கின்றோம். குழந்தைகள் உங்களுடைய
புத்தி அங்கே இருக்க வேண்டும். எப்படி ஒருவர் தூக்கு மேடையில்
ஏறுகிறார் இல்லையா? நீங்கள் இப்போது ஆன்மிகத் தூக்கு மேடையில்
ஏறியிருக்கிறீர்கள். உள்ளுக்குள் இருக்கிறது, நமக்கு
உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை வந்து உயர்ந்ததிலும் உயர்ந்த
வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இப்போது நாம் வீட்டுக்குச்
செல்ல வேண்டும். உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை பிறகு
உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெறச் செய்கிறார். இராவண
இராஜ்யத்தில் அனைவரும் தாழ்ந்தவர்கள். அவர்களுக்கு
உயர்ந்தவர்களைப் பற்றித் தெரியவே செய்யாது. உயர்ந்தவர்களுக்கும்
கீழானவர்களைப் பற்றித் தெரியாது. இப்போது நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், உயர்ந்த வரிலும் உயர்ந்தவர் என்று ஒரு
பகவான் தான் சொல்லப்படுகிறார். புத்தி மேலே சென்று விடுகின்றது.
அவர் பரந்தாமத்தில் வசிப்பவர். இதை யாருமே புரிந்து கொள்வதில்லை,
ஆத்மாக்கள் நாமும் கூட அங்கே வசிப்பவர்கள் தான். நடிப்பின்
பாகத்தை நடிப்பதற்காக மட்டுமே இங்கே வருகின்றோம். இது யாருடைய
சிந்தனையிலும் இருப்பதில்லை. தங்களுடைய வேலை பளுவிலேயே
ஈடுபட்டுள்ளனர். இப்போது பாபா புரிய வைக்கிறார், எப்போது நினைவு
யாத்திரையில் மூழ்கியிருக்கிறீர்களோ, அப்போது தான் உயர்ந்த
வரிலும் உயர்ந்தவராக ஆவீர்கள். நினைவின் மூலம் தான் உயர்ந்த
பதவி பெற வேண்டும். உங்களுக்குக் கற்றுத் தரப் படும் ஞானம்
மறப்பதற்கானது அல்ல. சின்னக் குழந்தைகள் கூட வர்ணனை செய்வார்கள்.
மற்றப்படி யோகத்தின் விசயங்களைக் குழந்தைகள் புரிந்து கொள்ள
மாட்டார்கள். அநேகக் குழந்தைகள் நினைவு யாத்திரையை முழுமையாகப்
புரிந்து கொள்ள வில்லை. நாம் எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த
இடத்திற்குச் செல்கிறோம்! மூலவதன், சூட்சும வதன், ஸ்தூல வதன்.......
5 தத்துவங்களும் இங்கே (ஸ்தூல உலகில்) தான் உள்ளன. சூட்சுமவதன்,
மூலவதனில் இவை இருக்காது. இந்த ஞானத்தை பாபா தான் தருகிறார்.
அதனால் அவர் ஞானக்கடல் எனச் சொல்லப்படுகிறார். அதிகமாக
சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படிப்பது தான் ஞானம் என மனிதர்கள்
நினைக் கின்றனர். எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றனர்!
சாஸ்திரங்களைப் படிப்பவர்களுக்கு எவ்வளவு மதிப்புக் கிடைக்
கின்றது! ஆனால் இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,
இதில் எந்த ஓர் உயர்வும் கிடையாது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவரோ
ஒரு பகவான் மட்டுமே! அவர் மூலமாக நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த
சொர்க்கத்தில் இராஜ்யம் செய்பவர்களாக ஆகிறோம். சொர்க்கம்
என்பதென்ன, நரகம் என்பதென்ன? 84 பிறவிகளின் சக்கரம் எப்படிச்
சுற்றுகிறது? இதை உங்களைத் தவிர இந்த சிருஷ்டியில் யாரும்
அறிந்திருக்கவில்லை. இவையனைத்தும் கற்பனை எனச் சொல்லி
விடுகின்றனர் இவர்கள் நமது குலத்தைச் சேர்ந்தவர் கள் அல்ல
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனமுடைந்து போகக் கூடாது.
இவர்களுக்கு நடிப்பில் பங்கு இல்லையென்றால் எதையும் புரிந்து
கொள்ள மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது
குழந்தைகளாகிய உங்களது பெருமை மிகவும் உயர்ந்தது. உயர்ந்த
உலகத்தில் நீங்கள் இருக்கும் போது தாழ்ந்த உலகைப் பற்றி அறிய
மாட்டீர்கள். தாழ்ந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் பிறகு உயர்ந்த
உலகைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அது சொர்க்கம் எனச்
சொல்லப்படுகின்றது. வெளிநாட்டினர் சொர்க்கத்தில் செல்வதில்லை
என்ற போதிலும் அதன் பெயரைச் சொல்லத் தான் செய்கின்றனர் - ஹெவன்,
பேரடைஸ் இருந்தது எனச் சொல்கின்றனர். முஸ்லிம்களும் கூட
சொர்க்கத்தை பஹிஸ்த் எனச் சொல்கின்றனர். ஆனால் அங்கே எப்படிச்
செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. இப்போது
உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைத்துள்ளது! உயர்ந்தவரிலும்
உயர்ந்த தந்தை எவ்வளவு ஞானம் தருகிறார்! இந்த டிராமா எப்படி
அற்புத மாக உருவாக்கப் பட்டுள்ளது! யார் டிராமாவின் இரகசியத்தை
அறிந்து கொள்ளவில்லையோ, அவர்கள் கற்பனை எனச் சொல்லி
விடுகின்றனர்.
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இதுவோ பதித் உலகம். அதனால்
கூக்குரலிடுகின்றனர் - ஹே பதித பாவனா வந்து எங்களைப்
பாவனமாக்குங்கள். பாபா சொல்கிறார், ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்கும்
பிறகு சரித்திரம் திரும்பவும் நடைபெறுகின்றது. பழைய உலகம் தான்
புது உலகமாக ஆகின்றது. அதனால் நான் வர வேண்டியுள்ளது.
கல்ப-கல்ப மாக வந்து குழந்தை களாகிய உங்களை உயர்ந்தவரிலும்
உயர்ந்தவராக ஆக்குகிறேன். தூய்மையானவர்கள் உயர்ந்தவர் கள்
என்றும் தூய்மையற்றவர்கள் கீழானவர்கள் என்றும் சொல்லப்
படுகிறார்கள். இதே உலகம் தான் புதியதாக, பாவனமாக இருந்தது.
இப்போதோ பதித்தாக உள்ளது. இவ்விசயங்களைப் புரிந்து கொள்பவர்கள்
உங்களிலும் கூட வரிசைப்படி உள்ளனர். யாருடைய புத்தியில் இந்த
விசயங்கள் உள்ளனவோ, அவர்கள் சதா குஷியாக உள்ளனர். புத்தியில்
இல்லையென்றால் யாராவது ஏதேனும் சொன்னார்கள், கொஞ்சம் நஷ்டம்
ஆகிவிட்டது என்றால் உடனே கோபப் பட்டு விடுகின்றனர். பாபா
சொல்கிறார், இப்போது இந்தக் கீழான உலகத்திற்குக் கடைசி நேரம்
வரப் போகிறது. இது பழைய உலகம். மனிதர்கள் எவ்வளவு
தாழ்ந்தவர்களாக ஆகி விடுகின்றனர்! ஆனால் நாம் கீழானவர்கள் என்று
யாரும் புரிந்து கொள்வதில்லை. பக்தர்கள் எப்போதுமே தலை
வணங்குகின்றனர். கீழானவர் களின் முன்பு யாரும் தலை
வணங்குவதில்லை. சத்யுகத்தில் ஒருபோதும் இதுபோல் நடப்ப தில்லை.
பக்தர்கள் தான் இதுபோல் செய்கின்றனர். பாபாவோ இதுபோல்
சொல்வதில்லை - தலை வணங்கியவாறு செல்லுங்கள் என்று. இதுவோ
படிப்பு. இறைத்தந்தையின் பல்கலைக் கழகத்தில் நீங்கள் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். ஆகவே எவ்வளவு நஷா இருக்க வேண்டும்!
பல்கலைக் கழகத்தில் இருக்கும் போது நஷா உள்ளது, வீட்டுக்குச்
சென்றால் அந்த நஷா இறங்கி விடுகிறது என்று இருக்கக் கூடாது.
வீட்டிலும் நஷா இருக்க வேண்டும். இங்கோ குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், சிவபாபா நமக்குப் கல்வி கற்பித்துக்
கொண்டிருக்கிறார். இவரோ (பிரம்மா) நான் ஞானக்கடல் எனச் சொல்லிக்
கொள்வதில்லை. இந்த (பிரம்மா) பாபாவும் கூட ஞானக்கடல் அல்ல.
கடலில் இருந்து நதி வெளிப்படுகிறது இல்லையா? கடலோ ஒன்று தான்,
பிரம்மபுத்திரா அனைத் திலும் பெரிய நதியாகும். மிகப்பெரிய
கப்பல்கள் வருகின்றன. நதிகளோ வெளிநாடுகளிலும் அநேகம் உள்ளன.
பதித-பாவனி கங்கை என்று இங்கே மட்டும் தான் சொல்கின்றனர். வெளி
நாடுகளில் நதியை யாரும் இதுபோல் சொல்ல மாட்டார்கள். பதீத-பாவனி
நதி என்றால் பிறகு குருவுக்கு எந்த ஒரு தேவையும் கிடையாது.
நதிகளுக்கும் குளங்களுக்கும் எவ்வளவு அலை கின்றனர்! சில
இடங்களில் குளங்கள் அவ்வளவு அழுக்காக உள்ளன, கேட்கவே வேண்டாம்.
அதன் மண்ணை எடுத்துப் பூசிக் கொள் கின்றனர். இவையனைத்தும் கீழே
இறங்குவதற்கான வழிகள் என்று இப்போது நமது புத்தியில் வந்துள்ளது.
அந்த மனிதர்கள் எவ்வளவு அன்போடு செல் கின்றனர்! இப்போது நீங்கள்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த ஞானத்தினால் நம் கண்களே
திறந்து கொண்டன. உங்களுடைய ஞானத்தின் மூன்றாவது கண்
திறந்துள்ளது. ஆத்மாவுக்கு மூன்றாவது கண் கிடைக்கின்றது. அதனால்
திரிகாலதரிசி எனச் சொல்கின்றனர். மூன்று காலங்களின் ஞானம்
ஆத்மாவுக்குள் வருகின்றது. ஆத்மாவோ சிறு புள்ளியாக உள்ளது.
அதில் கண் எப்படி இருக்கும்? இவையனைத்தும் புரிந்து கொள்ள
வேண்டிய விசயங்கள். ஞானத்தின் மூன்றாவது கண் மூலம் நீங்கள்
திரிகால தரிசியாக, திரிநேத்திரியாக ஆகிறீர்கள். நாஸ்திகரில்
இருந்து ஆஸ்திகராக ஆகி விடுகிறீர்கள். முன்பு நீங்கள் படைப்பவர்
மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி அறியாதிருந்தீர்கள்.
இப்போது பாபா மூலம் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து
கொள்வதால் உங்களுக்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது
ஞானம் இல்லையா? சரித்திர-பூகோளமும் உள்ளது, கணக்கு-வழக்கு
இருக்கிறதல்லவா? நல்லது, திறமைசாலிக் குழந்தை என்றால்
கணக்கிடட்டும், நாம் எத்தனை ஜென்மங்கள் எடுக்கிறோம்? இந்தக்
கணக்கின் படி மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை
ஜென்மங்கள் இருக்கும்? ஆனால் பாபா சொல்கிறார், இந்த அனைத்து
விசயங்களிலும் தலையை உடைத்துக் கொள்வதற் கான தேவை இல்லை. நேரம்
வீணாகி விடும். இங்கோ அனைத்தையும் மறக்க வேண்டும். இதைச்
சொல்வதற்குத் தேவை இல்லை. நீங்களோ படைப்பவராகிய தந்தையின்
அறிமுகம் கொடுக் கிறீர்கள். அவரை யாருமே அறிந்திருக்கவில்லை.
சிவபாபா பாரதத்தில் தான் வருகிறார். நிச்சய மாக ஏதோ நல்ல
காரியம் செய்து விட்டுச் சென்றுள்ளார். அதனால் தான் ஜெயந்தி
கொண்டாடு கின்றனர் இல்லையா? காந்தி அல்லது யாராவது சாது
முதலானவர்கள் இருந்து சென்றுள்ளனர். அவர்களுக்காக ஸ்டாம்ப்
செய்து வெளியிட்டுக் கொண்டுள்ளனர். குடும்பக் கட்டுப்பாட்டின்
ஸ்டாம்ப் அச்சிடுகின்றனர். இப்போது உங்களுக்கோ நஷா உள்ளது -
நாமோ பாண்டவ அரசாங்கம். சர்வசக்திவான் பாபாவின் அரசாங்கம். இது
உங்களுடைய மெடல் பேட்ஜ் (கோட் ஆஃப் ஆம்ஸ்-அரசின் அடையாளச்
சின்னம்). வேறு யாரும் இந்த மெடல் பற்றி அறிந்திருக்கவில்லை.
நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், விநாச காலத்தில் அன்பான
புத்தி நமக்கு மட்டும் தான். பாபாவை நாம் மிகவும் நினைவு
செய்கிறோம். பாபாவை நினைவு செய்து-செய்தே அன்பில் கண்ணீர் வந்து
விடுகின்றது. பாபா, நீங்கள் எங்களை அரைக்கல்பத்திற்கு அனைத்து
துக்கங்களில் இருந்தும் விடுவித்து விடுகிறீர்கள். வேறு எந்த
ஒரு குருவையோ உற்றார் உறவினர் முதலானவர்களையோ நினைவு
செய்வதற்கான தேவை இல்லை. ஒரு தந்தையை மட்டுமே நினைவு
செய்யுங்கள். அதிகாலை நேரம் மிக நல்லது. பாபா, நீங்கள் செய்தது
அற்புதம். ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகு எங்களை நீங்கள்
எழுப்புகிறீர்கள். மனிதர்கள் அனைவரும் கும்பகர்ணனின் அசுர
உறக்கத் தில் உறங்கிப் போயுள்ளனர். அதாவது அஞ்ஞான இருளில்
உள்ளனர். இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் -
பாரதத்தின் புராதன யோகமோ இது தான். மற்றப்படி என்னென்ன ஹடயோகம்
முதலியவற்றைக் கற்பிக் கின்றனரோ, அவை அனைத்தும் உடலை நலமாக
வைத்திருப்பதற்கான உடற் பயிற்சிகள், இப்போது உங்கள் புத்தியில்
முழு ஞானமும் உள்ளது எனும்போது குஷி உள்ளது. இங்கே வருகிறீர்கள்,
புரிந்து கொண்டிருக் கிறீர்கள், பாபா புத்துணர்ச்சி அளிக்கிறார்.
சிலரோ இங்கே புத்துணர்ச்சி பெற்று வெளியே செல்கின்றனர். உடனே
அந்த நஷா முடிந்து போகிறது. வரிசைக்கிரமத்தில் இருக்கத் தானே
செய்கின்றனர்? பாபா புரிய வைக்கிறார் - இது பதித் உலகம்.
அழைக்கவும் செய்கின்றனர் - ஹே பதீத-பாவனா வாருங்கள். ஆனால்
தங்களை பதீத் என உணர்ந்து கொள்வதில்லை. அதனால் பாவங்களைக்
கழுவச் செல்கின்றனர். ஆனால் சரீரத்திற்குப் பாவம் பிடிப்ப
தில்லை. பாபாவோ வந்து உங்களை பாவனமாக்குகிறார். மேலும்
சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் உங்களின்
விகர்மங்கள் விநாசமாகி விடும். இந்த ஞானம் இப்போது உங்களுக்குக்
கிடைத்துள்ளது. பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகமாக
உள்ளது. குழந்தைகள் நீங்களோ இப்போது சங்கமயுகத்தில்
இருக்கிறீர்கள். யாராவது விகாரத்தில் விழுகின்றனர் என்றால்
தோல்வியடைந்து விடுகின்றனர். அப்போது நரகத்தில் சென்று
விழுந்தது போல் ஆகிறது. 5-வது மாடியில் இருந்து விழுந்து
விடுகின்றனர். பிறகு 100 மடங்கு தண்டனை அடைய நேரிடுகின்றது. ஆக,
பாபா புரிய வைக்கிறார், பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது,
இப்போது எவ்வளவு தாழ்ந்ததாக உள்ளது. இப்போது நீங்கள் எவ்வளவு
புத்திசாலி ஆகியிருக்கிறீர்கள்! மனிதர்களோ எவ்வளவு
புத்தியற்றவர்களாக உள்ளனர்! பாபா இங்கே உங்களுக்கு எவ்வளவு நஷா
அதிகரிக்கச் செய்கிறார்! பிறகு வெளியில் செல்வதால் நஷா குறைந்து
விடுகின்றது. குஷி மறைந்து விடுகின்றது. மாணவர்கள் ஏதேனும்
பெரிய பரீட்சையில் தேர்ச்சி பெறுகின்றனர் என்றால் எப்போதாவது
குஷி குறைகிறதா என்ன? படித்துத் தேர்ச்சி பெறுகின்றனர் என்றால்
பிறகு என்னென்னவாக ஆகி விடுகின்றனர்! இப்போது பாருங்கள்,
உலகத்தின் நிலை என்னவாக உள்ளது! உங்களுக்கு உயர்ந்தவரிலும்
உயர்ந்தவராகிய பாபா வந்து படிப்பு சொல்லித் தருகிறார். அதுவும்
நிராகாராக இருப்பவர்! ஆத்மாக்களாகிய நீங்களும் நிராகார். இங்கே
பாகத்தை நடிப்பதற்காக வந்திருக்கிறீர்கள். இந்த டிராமாவின்
இரகசியத்தை பாபா தாம் வந்து புரிய வைக்கிறார். இந்த சிருஷ்டிச்
சக்கரம் டிராமா என்றும் சொல்லப்படுகின்றது. அந்த நாடகத்திலோ
யாராவது நோய்வாய்ப் பட்டால் அதிலிருந்து வெளி யேறி விடுகின்றனர்.
இது எல்லையற்ற நாடகம். யதார்த்த ரீதியில் குழந்தைகளாகிய உங்கள்
புத்தியில் உள்ளது, நீங்கள் அறிவீர்கள், இங்கே தனது நடிப்பின்
பங்கினை நடிப்பதற்காக வருகிறோம். நாம் எல்லையற்ற நடிகர்கள்.
இங்கே சரீரத்தை எடுத்துக் கொண்டு பார்ட்டை நடிக்கிறோம், பாபா
வந்திருக்கிறார் - இவையனைத்தும் புத்தியில் இருக்க வேண்டும்.
எல்லையற்ற உலகத்தின் இராஜபதவி கிடைக்கின்றது. என்றால் அதற்காகப்
புருஷார்த்தமும் அப்படி நன்றாகச் செய்ய வேண்டும் இல்லையா?
இல்லற விவகாரங்களில் வேண்டுமானாலும் இருங்கள், ஆனால்
பவித்திரமாகுங்கள். வெளிநாடுகளில் இதுபோல் அநேகர் உள்ளனர் -
வயதாகி விட்டால் ஒரு துணை வேண்டுமென்பதற்காகத் திருமணம் செய்து
கொள்கின்றனர்......... பராமரிப்பிற்காக. பிறகு உயில் எழுதி
வைக்கின்றனர். கொஞ்சம் அவர்களுக்கு, கொஞ்சம் தர்ம காரியத்திற்கு.
விகாரத்தின் விசயம் இருப்பதில்லை. நாயகன்-நாயகியும் கூட
விகாரத்திற்காக பலியாவதில்லை. தேகத்தின் அன்பு மட்டும் உள்ளது.
நீங்கள் ஆன்மிக நாயகிகள், ஒரு நாயகனை நினைவு செய்கிறீர்கள்.
நாயகி கள் அனை வருக்கும் ஒரு நாயகன். அனைவரும் ஒருவரையே நினைவு
செய்கின்றனர். இது எவ்வளவு அழகானது! ஆத்மா வெள்ளையானது (தூய்மையானது)
இல்லையா? அவர் (சிவபாபா) எப்போதுமே தூய்மையாக இருப்பவர்.
நீங்களோ கறுப்பாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டிருக் கிறீர்கள்.
உங்களை அவர் கருப்பிலிருந்து வெள்ளையாக ஆக்குகிறார். இங்கே
அநேகர் உள்ளனர் - அவர்கள் என்னென்ன சிந்தனைகளில் அமர்ந்துள்ளனர்
என்று தெரியாது. பள்ளிக்கூடத்தில் இதுபோல் உள்ளனர் -
உட்கார்ந்திருக்கும் போதே புத்தி சினிமாவின் பக்கம், நண்பர்கள்
முதலானவர்களின் பக்கம் சென்று விடுகிறது. சத்சங்கத்திலும்
இதுபோல் நடைபெறுகின்றது. இங்கேயும் அதுபோலத் தான். புத்தியில்
பதியவில்லை என்றால் நஷா அதிகரிப்பதில்லை, தாரணையாவதில்லை -
மற்றவர்களையும் செய்விக்க முடிவதில்லை. அநேகப் பெண்குழந்தைகள்
வருகின்றனர், அவர்களுக்கு எங்காவது சேவையில் ஈடுபட்டுவிட
வேண்டும் என எண்ணம் உள்ளது. ஆனால் சின்னச் சின்னக் குழந்தைகள்.
பாபா சொல்கிறார், குழந்தைகளைப் பராமரிப் பதற்காக யாராவது தாயை
உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள். இதுவோ அநேகருக்கு நன்மை
செய்யும். திறமைசாலிகள் என்றால் ஏன் ஆன்மிக சேவையில் ஈடுபடக்
கூடாது? 5-6 குழந்தை களைப் பராமரிப்பதற்காக ஒரு தாயை
வைத்திருங்கள். இந்த மாதாக்களுக்கு இப்போது சுழல் முறை உள்ளது
இல்லையா? நஷா அதிகம் இருக்க வேண்டும். இனி நடக்கப் போவதை
கணவன்மார் பார்ப்பார்கள், நம் மனைவியோ சந்நியாசிகளைக் கூட
வென்று விட்டார்கள். இந்த மாதாக்கள் லௌகிக் மற்றும்
பரலௌகிக்கின் பெயரைப் புகழ் பெறச்செய்து காட்டுவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நீங்கள் புத்தி மூலம் அனைத்தையும் மறக்க வேண்டும். எந்த
விசயங்களில் நேரம் வீணாகிறதோ, அதைக் கேட்பதற்கோ சொல்வதற்கோ
அவசியமில்லை.
2) படிப்பின் சமயம் புத்தியோகம் ஒரு பாபாவிடம் மட்டுமே
ஈடுபட்டிருக்க வேண்டும். புத்தி வேறெங்கும் அலையக் கூடாது.
நிராகார் தந்தை நமக்குப் படிப்பு சொல்லித் தந்து
கொண்டிருக்கிறார். இந்த நஷாவில் இருக்க வேண்டும்.
வரதானம்:
தனது மகான் நிலை மற்றும் மகிமையை அறிந்து அனைத்து
ஆத்மாக்களையும் விட சிரேஷ்ட உலகின் பூஜைக்குரியவர் ஆகுக.
ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் நிகழ்காலத்தில் உலகின் அனைத்து
ஆத்மாக்களிலும் சிரேஷ்ட மானவர்கள் மற்றும் எதிர்காலத்தில்
உலகத்தின் மூலம் பூஜைக்குரியவர்களாகவும் இருக் கின்றனர்.
வரிசைக்கிரமமாக இருப்பினும் கடைசி நம்பரில் உள்ள மணியும் கூட
உலகின் முன் மகான் ஆவார். இன்றைய நாட்களில் பக்த ஆத்மாக்கள்
கடைசி நம்பரிலுள்ள மணியையும் கண்களில் ஒத்திக் கொள்கின்றனர்.
ஏனெனில் அனைத்து குழந்தைகளும் பாப்தாதாவின் கண்ணின் மணிகளாக
இருக்கிறீர்கள். யார் ஒரே முறையேனும் மனதில், உண்மையான
உள்ளத்துடன் தன்னை தந்தையின் குழந்தை என்று நிச்சயம்
செய்தார்களோ, தந்தையின் நேரடிக் குழந்தையாக ஆனார்களோ அவர்கள்
மகான் அல்லது பூஜைக்குரியவர் ஆவதற்கான லாட்டரி அல்லது வரதானம்
கிடைத்தே விடுகிறது.
சுலோகன்:
ஸ்திதி சதா பொக்கிஷங்களினால் நிறைந்து மற்றும் திருப்தியாக
இருந்தீர்கள் எனில் பிரச்சனைகள் மாறி விடும்.
அவ்யக்த சமிக்ஞை - அசரீரி அல்லது விதேகி ஸ்திதியின் பயிற்சியை
அதிகப்படுத்துங்கள்
பாப்தாதா திடீரென்று கட்டளையிடுகின்றார் - இந்த சரீரம் என்ற
வீட்டை விட்டு, தேக அபிமான ஸ்திதியை விட்டு விட்டு ஆத்ம அபிமானி
ஆகிவிடுங்கள். இந்த உலகிலிருந்து விலகி தனது இனிமையான
வீட்டிற்கு சென்று விடுங்கள் என்றால் சென்று விட முடியுமா? போர்
களத்தில் போர் செய்து செய்து நேரத்தை வீணாக்கி விடமாட்டீர்களா!
அசரீரி ஆவதில் போர் புரிய வைதிலேயே நேரம் சென்று விட்டால் கடைசி
பேப்பரில் மதிப்பெண்கள் அல்லது எந்த டிவிசனில் வருவீர்கள்!