14-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! உங்களிடம் மன்மனாபவ, மத்யாஜீபவ என்ற கூர்மையான அம்பு இருக்கின்றது. இந்த அம்புகளால் நீங்கள் மாயாவின் மீது வெற்றி அடைய முடியும்.

கேள்வி:
குழந்தைகளுக்கு பாபாவின் உதவி எந்த ஆதாரத்தில் கிடைக்கிறது? குழந்தைகள் பாபாவிற்கு எவ்வாறு நன்றி செலுத்துகிறார்கள்?

பதில்:
குழந்தைகள் பாபாவை எவ்வளவு அன்போடு நினைக்கிறார்களோ அவ்வளவு உதவி கிடைக்கிறது. அன்போடு பேசுங்கள். தனது தொடர்பை சரியாக வைத்து ஸ்ரீமத்படி நடந்துக் கொண்டே இருந்தால் பாபா உதவி செய்துக் கொண்டே இருப்பார். குழந்தைகள் பாபாவிற்கு நன்றி தெரிவிக் கிறார்கள். பாபா தாங்கள் பரந்தாமத்தில் இருந்து வந்து தூய்மை இல்லாத எங்களை தூய்மையான வர்களாக மாற்றுகிறீர்கள். தங்களிடம் எங்களுக்கு எவ்வளவு சுகம் கிடைக்கிறது. அன்பில் கண்ணீர் கூட வருகிறது.

ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு தாயும் தந்தையும் எல்லோரையும் விட பிரியமானவர்கள். அதே போன்று தாய் தந்தையருக்கு குழந்தைகள் மிகவும் பிரியமானவர்கள். இப்போது தாயும் நீயே ! தந்தையும் நீயே ! என பாபாவைத் தான் கூறுகிறார்கள். லௌகீக தாய் தந்தையருக்கு இவ்வாறு கூற முடியாது. இந்த மகிமை நிச்சயம் இருக்கிறது. ஆனால் யாருக்கு என்று ஒருவருக்கும் தெரிய வில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் அங்கே சென்றிருப்பார்கள். மேலும் பலரையும் அழைத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் நாடகப்படி இப்படித்தான் இருக்கிறது. நாடகம் முடியும் போது தான் வருகின்றார். முன்பெல்லாம் ஊமை நாடகம் இருந்தது நாடகம் முடியும் போது அனைத்து நடிகர் களும் மேடையில் நிற்பர். இதுவும் எல்லையற்ற பெரிய நாடகம் ஆகும். சத்யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இவை அனைத்தும் குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். இது முழுவதும் சிருஷ்டி சக்கரம் ஆகும். மூலவதனம், சூட்சுமவதனத்தில் சக்கரம் சுழலுவதில்லை.

ஓங்காரமானவர் சத்தியமான பெயருடையவர்...... எனப் பாடப்பட்டு இருக்கிறது. யாருடைய மகிமை? கிரந்தத்தில் சீக்கியர்கள் மகிமை செய்திருக்கிறார்கள். குருநானக் வாக்கு...... இப்போது ஓங்கார மானவர் என்பது ஒரே ஒரு நிராகார பரமாத்மாவின் மகிமையாகும். ஆனால் அவர்கள் பரமாத்மா வின் மகிமையை மறந்து குருநானக்கின் மகிமையைச் செய்கிறார்கள். நானக்தான் சத்குரு என்று கூட நினைக்கிறார்கள். உண்மையில் இந்த சிருஷ்டி முழுவதிலும் உள்ள மகிமைகள் அனைத்தும் அவர் ஒருவருக்குத்தான். வேறு யாரையும் மகிமை செய்ய முடியாது. இப்போது பாருங்கள் ஒருவேளை பிரம்மாவின் உடலில் பாபா பிரவேசம் ஆகவில்லை என்றால் இவர் சோழி போன்றவர். இப்பொழுது நீங்கள் சோழியிலிருந்து வைரம் போன்று பரம்பிதா பரமாத்மா மூலம் மாறிக் கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது இது அசுத்தமான உலகம், பிரம்மாவின் உலகம் ஆகும். தூய்மை இல்லாத உலகத்தில் பாபா வரும் போது யார் அவரைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் அவருக்கு பலி ஆகிறார்கள். இன்றைய உலகில் குழந்தைகள் கூட இருளில் இருக்கிறார்கள். தேவதைகள் எவ்வளவு உயர்வாக இருந்தனர். இப்பொழுது அவர்கள் மறுபிறவி எடுத்து எடுத்து தமோபிரதானமாகிவிட்டனர். சந்நியாசிகள் கூட முதலில் மிகவும் நன்றாக இருந்தனர், தூய்மையாக இருந்தனர். பாரதத்திற்கு உதவி செய்தனர். பாரதத்தில் ஒரு வேளை தூய்மை இல்லை என்றால் காமச்சிதையில் எரிந்து போயிருப்பர். சத்யுகத்தில் இந்த காம விகாரம் இல்லை. இந்த கலியுகத்தில் அனைவரும் காமச்சிதை என்ற முட்களில் அமர்ந்திருக்கின்றனர். சத்யுகத்தில் இவ்வாறு கூற மாட்டார்கள். அங்கே இந்த விஷலிம் கிடையாது. அமிர்தத்தை விட்டு விட்டு விஷத்தை அருந்தினார் கள் என கூறுகின்றார்கள் அல்லவா? விகாரிகளுக்குத்தான் தூய்மை இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த மனிதர்களைப் பாருங்கள். 10-12 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே போகிறார்கள். எந்த விதிமுறையும் இல்லை. சத்யுகத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே காட்சி கள் கிடைக்கின்றது. சத்யுகத்தில் சரீரம் விடுவதற்கு முன்பே நான் இந்த சரீரத்தை விட்டு குழந்தை யாகப் பிறப்பேன் என காட்சி கிடைக்கிறது. மேலும் ஒரு பிள்ளைதான். அதிகம் கிடையாது. சட்டப்படி நடக்கிறது. நிச்சயம் வளர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அங்கு விகாரம் கிடையாது. நிறைய பேர் அங்கு குழந்தைகள் எப்படி பிறக்கும் என்று கேட்கிறார்கள். அங்கு யோக பலத்தினால் அனைத்து வேலை களும் நடக்கின்றது எனக் கூறவேண்டும். நாம் யோகபலத்தினால் தான் சிருஷ்டியின் இராஜ் ஜியத்தை அடைகின்றோம். உடல் பலத்தினால் சிருஷ்டியின் இராஜ்யம் கிடைக்காது.

ஒருவேளை கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் இணைந்து விட்டால் இந்த முழு சிருஷ்டியின் இராஜ்யத்தை அடையலாம். ஆனால் தங்களுக்குள் இணையமாட்டார்கள். சட்டம் இல்லை. ஆகவே தான் இரண்டு பூனைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறது, வெண்ணெய் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் காட்டப்பட்டுள்ளது. இந்த சிருஷ்டி என்பதே வெண்ணெயாகும்.

இந்த யோக பலத்தின் சண்டைதான் சாஸ்திரங்களில் காட்டப்பட்டு இருக்கின்றது. மற்றபடி உடல் வலிமை கிடையாது என தந்தை கூறுகின்றார். ஆனால் அவர்கள் இம்சை நிறைந்த போரை சாஸ்திரங்களில் காண்பித்து விட்டனர். அவைகளோடு நமக்கு எந்த சம்மந்தமும் இல்லை. பாண்டவர்கள், கௌரவர்களின் போர் இல்லை. பல தர்மங்கள் (மதங்கள்) 5000 வருடங்களுக்கு முன்பும் இருந்தது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர். பாண்டவர்கள் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தனர். இது யோக பலமாகும். இதன் மூலம் சிருஷ்டியின் இராஜ்யம் கிடைக்கின்றது. மாயாஜீத், ஜகத்ஜீத் ஆகிறார்கள். சத்யுகத்தில் மாயை இராவணன் கிடையாது. அங்கே இராவணனின் பூதத்தை செய்து எரிக்க மாட்டார்கள். பூதத்தை (சித்திரம்) எப்படி யெல்லாம் உருவாக்குகிறார்கள். இவ்வாறு யாரும் அசுரர்கள் இருக்க மாட்டார்கள். 5 விகாரங்கள் பெண் களுக்குள்ளும் இருக்கிறது, 5 விகாரங்கள் ஆண்களுக்குள்ளும் இருக்கிறது. இதைக் கூட புரிந்து கொள்ளவில்லை. அவற்றை ஒன்றாக இணைத்து 10 தலை இராவணனாக உருவாக்கியிருக் கிறார்கள். விஷ்ணுவிற்குக் கூட நான்கு புஜங்களை கொடுத்திருக்கிறார்கள். மனிதர்கள் இந்த பொதுவான விஷயத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. மிகப்பெரிய இராவணனை உருவாக்கி எரிக்கிறார்கள். மிகவும் அன்பான குழந்தைகளுக்கு எல்லையற்ற தந்தை புரிய வைக்கிறார். எப்பொழுதும் தந்தைக்கு குழந்தைகள் மீது வரிசைக்கிரமத்தில் அன்பு இருக்கும். சிலர் மீது அன்பு அதிகமாக இருக்கும். சிலர் மீது அன்பு சற்று குறைவாக இருக்கும். எவ்வளவு செல்லமான பிள்ளை யாக இருப்பாரோ அவ்வளவு அதிகமாக அன்பு இருக்கும். இங்கு கூட யார் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றார்களோ இரக்க மனமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது அன்பு அதிகமாக இருக்கும். பக்திமார்க்கத்தில் கூட இரக்கம் காட்டுங்கள் என கேட்கிறார்கள் அல்லவா? கடவுளே இரக்கம் காட்டு ! ஆனால் நாடகத்தைப் பற்றி யாரும் அறியவில்லை. எப்பொழுது மிக மிக தமோபிரதனமாக ஆகிறார்களோ அப்போது தான் பாபா வரக்கூடிய நிகழ்ச்சியும் ஏற்படுகிறது. ஈஸ்வர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்யலாம் அல்லது எப்போது விரும்புகிறாரோ அப்போது வரலாம் என்பது கிடையாது. ஒருவேளை அப்படிப்பட்ட சக்தி இருந்தால் பிறகு ஏன் அவ்வளவு திட்டு. ஏன் வனவாசம் கிடைத்தது. இந்த விஷலியங்கள் மிகவும் குப்தமாக இருக்கின்றது. கிருஷ்ணருக்கு திட்டு கிடைத்திருக்க முடியாது. பகவான் இவ்வாறு செய்ய முடியாது என கூறுகின்றார்கள். ஆனால் வினாசம் நடந்து தான் ஆகவேண்டும். பிறகு காப்பாற்றுவதற்கான விசயமே இல்லை. அனைவரும் வீட்டிற்குத் திரும்பிப் போக வேண்டும். ஸ்தாபனை - வினாசம் செய்விக்கின்றார் என்றால் நிச்சயமாக பகவான் இருப்பார் அல்லவா? பரம்பிதா பரமாத்மா எதை ஸ்தாபனை செய்கின்றார். கீதையின் பகவான் யார் என்ற முக்கியமான விஷலியத்தைக் கேளுங்கள். முழு உலகமும் இதில் குழப்பமடைந்திருக்கின்றது. அவர்கள் மனிதனின் பெயரைப் போட்டு விட்டார்கள். ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தை பகவானைத் தவிர வேறு யாரும் ஸ்தாபனை செய்ய முடியாது. அப்படியிருக்கும் பொழுது கீதையின் பகவான் கிருஷ்ணர் என்று எப்படி கூறுகின்றீர் கள். வினாசம் மற்றும் ஸ்தாபனை செய்வது யாருடைய வேலை. கீதையின் பகவானை மறந்து கீதையையே தவறாக்கி விட்டனர். இது மிகப் பெரியதிலும் பெரிய தவறாகும். இன்னொன்று ஜகன்நாத்புரியில் மிகவும் மோசமான சித்திரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த மோசமான சித்திரங்களை வைப்பதற்கு அரசாங்கமே தடை விதித்திருக்கிறது. இதையும் புரிய வைக்க வேண்டும். இந்த கோவில்களில் யாருடைய புத்தியிலும் இந்த விஷலியங்கள் தோன்றுவதில்லை. இந்த விஷலியங்களை தந்தையே உட்கார்ந்து புரியவைக்கிறார்.

பாருங்கள், குழந்தைகள் எவ்வளவு உறுதிமொழிக் கடிதங்களை எழுதுகின்றார்கள். இரத்தத் தினால் கூட எழுதுகின்றார்கள். ஒரு முறை கிருஷ்ணருக்கு இரத்தம் வந்தபோது திரௌபதி தனது ஆடையை கிழித்து கட்டினார் என்ற ஒரு கதை இருக்கிறதல்லவா? இது அன்பு அல்லவா! உங்களுக்கு சிவபாபா மீது அன்பு இருக்கின்றது. இவருக்கு (பிரம்மா) இரத்தம் வரலாம், இவருக்கு துக்கம் ஏற்படலாம், சிவபாபாவிற்கு ஒருபோதும் துக்கம் ஏற்படாது. ஏனென்றால் அவருக்கு என்று உடல் கிடையாது. ஒருவேளை கிருஷ்ணருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் துக்கம் ஏற்படும் அல்லவா? பிறகு அவரை எப்படி பரமாத்மா என்று கூறுவது. நான் சுக துக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றேன். ஆம், நான் வந்து குழந்தைகளை சதா சுகமுடையவர்களாக மாற்றுகின்றேன். சதாசிவன் என்று போற்றப்படுகின்றது. சதாசிவன் சுகத்தை அளிப்பவர் என்று கூறுகின்றார்கள். என்னுடைய இனிமையிலும் இனிமையான செல்ல குழந்தைகள் யார் நல்லவர்களோ, யார் ஞானத்தைக் கடைபிடித்து தூய்மையாக இருக்கிறார்களோ, உண்மையான யோகி மற்றும் ஞானி களாக இருக்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். லௌகீக தந்தைக்குக் கூட சிலர் நல்ல குழந்தைகளாகவும், சிலர் கெட்ட குழந்தைகளாகவும் இருக்கிறார்கள். குலத்தின் பெயரை களங்கப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இங்கேயும் அவ்வாறு இருக்கிறார்கள். வியக்கத்தக்க வகையில் குழந்தைகள் ஆகிறார்கள், கேட்கிறார்கள், பிறகு கூறுகிறார்கள், பிறகு பிரிந்து வெளியே சென்று விடு கிறார்கள். ஆகவே தான் நிச்சய பத்திரம் எழுத வைக்கப்படுகிறது. பிறகு அவர்கள் எழுதிக் கொடுத்ததை அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இரத்தத்தினால் கூட எழுதிக் கொடுக்கின்றார்கள். இரத்தத்தினால் எழுதி உறுதிமொழி எடுக்கிறார்கள். இன்றோ சத்தியம் கூட செய்கிறார்கள். ஆனால் அது பொய் சத்தியம். ஈஸ்வரன் எதிரில் இருக்கின்றார் என்றால் இவரும் ஈஸ்வர் தான், நானும் ஈஸ்வர் தான், உறுதி செய்கிறேன். இப்பொழுது நடைமுறையில் நம்மிடம் இருக்கின்றார் என அறிகிறீர்கள் என பாபா கூறுகின்றார். இந்த கண்கள் என்ற ஜன்னல்களினால் பார்க்கின்றார். இது பிறருடைய சரீரம் ஆகும். லோனாக பெற்றிருக்கின்றார். பாபா வாடகைக்கு குடியிருப்பவர் ஆவார். வீட்டை பயன்படுத்துவார்கள் அல்லவா? நான் இந்த உடலைப் பயன்படுத்துகிறேன் என பாபா கூறு கின்றார். பாபா இந்த சன்னல்களினால் பார்க்கின்றார். பாபா முன்னாலேயே இருக்கின்றார். ஆத்மா நிச்சயமாக உடலினால் தான் வேலை செய்கிறது. நான் வந்திருக்கிறேன் என்றால் நிச்சயமாகக் கூறுவேன் அல்லவா? உடலைப் பயன்படுத்துகின்றார் என்றால் நிச்சயமாக வாடகை கூட கொடுக்க வேண்டியிருக்கும்.

குழந்தைகளாகிய நீங்கள் இச்சமயம் நரகத்தை சொர்க்கமாக மாற்றக்கூடியவர்கள். நீங்கள் பிரகாசத்தை அளிக்கக்கூடியவர்கள், எழுப்பக்கூடியவர்கள். மற்ற அனைவரும் கும்பகர்ண உறக்கத் தில் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தாய்மார்கள் எழுப்புகிறீர்கள். சொர்க்கத்திற்கு அதிபதி யாக்குகிறீர்கள். இதில் பெரும்பான்மை யான பங்கு தாய்மார்களுடையதாகும். ஆகவேதான் வந்தே மாதரம் என்று கூறப்படுகிறது. பீஷ்ம பிதாமகர் போன்றோர்களுக்கு கூட நீங்கள் தான் அம்பு எய்துகிறீர்கள். மன்மனாபவ, மத்யாஜீபவ என்ற அம்பு எவ்வளவு எளிதாக இருக்கின்றது. இந்த அம்புகளினால் தான் நீங்கள் மாயையை வெற்றி அடைகிறீர்கள். நீங்கள் ஒரு பாபாவின் நினைவில், ஒருவருடைய ஸ்ரீமத்படி தான் நடக்க வேண்டும். பாபா உங்களுக்கு இப்படிப்பட்ட உயர்ந்த கர்மத்தைக் கற்பிக்கின்றார். இதனால் 21 பிறவிகளுக்கு ஒருபோதும் தீயகர்மங்கள் நடக்காது. நீங்கள் சதா ஆரோக்கியமானவராக சதா செல்வந்தராக மாறுகின்றீர்கள். பல முறைகள் நீங்கள் சொர்க்கத்திற்கு அதிபதியாகியிருக்கிறீர்கள். இராஜ்யத்தை அடைந்துள்ளீர்கள். பிறகு இழந்துள்ளீர்கள். நீங்கள் பிராமண குல பூஷணர்கள் தான் ஹீரோ ஹீரோயின் பாகத்தை நடிக்கின்றீர்கள். நாடகத்தில் குழந்தைகளாகிய உங்களின் பாகம் எல்லோரையும் விட உயர்ந்தது. இவ்வாறு உயர்ந்தவர்களாக மாற்றக்கூடிய தந்தையுடன் மிகுந்த அன்பு வேண்டும். பாபா தாங்கள் அதிசயம் செய்கிறீர்கள். மனதிலோ எண்ணத்திலோ கூட நாங்கள் நாராயணனாக இருந்தோம் என்பது தெரியாது. நீங்களே நாராயணன் மற்றும் லட்சுமியாக, தேவி தேவதைகளாக இருந்தீர்கள். பிறகு மறுபிறவி எடுத்து எடுத்து அசுரராகிவிட்டீர்கள் என பாபா கூறுகின்றார். இப்போது மீண்டும் முயற்சி செய்து சொத்தை அடைகிறீர்கள். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ சாட்சாத்காரம் கிடைத்துக் கொண்டே யிருக்கின்றது.

ஒரு பாபாதான் இராஜயோகத்தைக் கற்பித்தார். உண்மையிலும் உண்மையான சகஜ இராஜயோகத்தை இப்பொழுது நீங்கள் கற்பிக்க முடியும். பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுப்பதே உங்களுடைய கடமையாகும். அனைவரும் ஏழைகளாகி விட்டனர். இந்த விஷயங் களைக் கூட போன கல்பத்தில் புரிந்து கொண்ட கோடியில் ஒரு சிலரே புரிந்து கொள்வார்கள். முழு உலகத்தில் மிகப்பெரிய முட்டாளை பார்க்க வேண்டும் என்றாலும் இங்கே பாருங்கள் என பாபா புரிய வைத்திருக்கின்றார். பாபாவிடமிருந்து 21 பிறவிகளுக்கு சொத்து கிடைக்கின்றது. அவரையே விவாகரத்து செய்து விடுகின்றனர். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இப்பொழுது நீங்களே ஈஸ்வரனின் வாரிசு. பிறகு தேவதை, சத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரனின் வாரிசாகின்றீர்கள். இப்பொழுது அசுரனின் வாரிசிலிருந்து ஈஸ்வரனின் வாரிசாக மாறியிருக் கின்றீர்கள். பாபா பரந்தாமத்திலிருந்து வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக மாற்று கின்றார் என்றால், எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட நன்றி சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். துக்கத்தில் யாரும் நன்றி செலுத்துவதில்லை. இப்பொழுது உங்களுக்கு எவ்வளவு சுகம் கிடைக்கின்றது எனும் போது, எவ்வளவு அன்பு ஏற்பட வேண்டும். நாம் பாபாவிடம் அன்போடு பேசினால் ஏன் கேட்க மாட்டார். தொடர்பு இருக்கின்றதல்லவா? இரவு எழுந்து பாபாவுடன் பேசவேண்டும். பாபா தனது அனுபவத்தை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றார். நான் மிகவும் நினைக்கின்றேன். பாபாவின் நினைவில் கண்ணீர் கூட வந்து விடுகின்றது. நான் எப்படி இருந்தேன். பாபா எப்படி மாற்றியிருக்கின்றார். அப்படியே ஆகட்டும். நீங்களும் அவ்வாறே மாறுகின்றீர்கள். யோகத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு பாபா உதவியும் செய்கிறார். தானாகவே கண்கள் திறக்கும். கட்டில் அசைந்து ஆடும். பாபா பல பேரை எழுப்பியிருக்கின்றார். எல்லையற்ற தந்தை எவ்வளவு இரக்கம் காட்டுகின்றார். நீங்கள் இங்கே ஏன் வந்துள்ளீர்கள்? எதிர்காலத்தில ஸ்ரீ நாராயணனை மணப்பதற்கான பாடத்தைப் பெற வந்தள்ளோம் அல்லது ஸ்ரீ லட்சுமியை மணப்பதற்காக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுக் கொண்டு இருக்கிறோம் பாபா என கூறுவீர்கள். எவ்வளவு அதிசயமான பள்ளிக்கூடம். எவ்வளவு அதிசயமான விஷயங்கள். மிகப் பெரியதிலும் பெரிய யுனிவர்சிட்டி ஆகும். ஆனால் இறைவனின் யுனிவர்சிட்டி என்ற பெயர் வைக்க அனுமதியளிக்க மாட்டார்கள். ஒரு நாள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். வந்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு பெரிய யுனிவர்சிட்டி என நிச்சயம் கூறுவார்கள். பாபா தனது கண்களில் வைத்து உங்களைப் படிக்க வைக்கின்றார். உங்களை சொர்க்கத்தில் சேர்த்து விடுவேன் என கூறுகின்றார். இப்படிப்பட்ட தந்தையுடன் எவ்வளவு பேச வேண்டும். பிறகு பாபா நிச்சயம் உதவி செய்வார். யாருடைய தொண்டை அடைபட்டு இருக்கின்றதோ அவர்களுடைய பூட்டைத் திறந்துவிடுவார். இரவு நினைக்கும் பொழுது மிகவும் ஆனந்தமாக இருக்கும். பாபா தனது அனுபவத்தைத் தெரிவிக்கின்றார். நான் அமிர்த வேளையில் எப்படிப் பேசுகின்றேன்!

எச்சரிக்கையாக இருங்கள் என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். குலத்தை களங்கப் படுத்தக் கூடாது. 5 விகாரங்களை தானமாகக் கொடுத்துவிட்டு பிறகு திரும்ப எடுக்கக் கூடாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபாவிற்கு பிரியமானவராகி, இரக்கமனமுடையவராகி சேவையில் ஈடுபடவேண்டும். தகுதியான குழந்தையாகி கட்டளைக்குக் கீழ்படிந்தவராகி உண்மையான யோகி மற்றும் ஞானி ஆக வேண்டும்.

2. அமிர்தவேளையில் எழுந்து பாபாவிடம் மிகவும் இனிமையிலும் இனிமையாகப் பேச வேண்டும். பாபாவிற்கு நன்றி செலுத்த வேண்டும். பாபாவின் உதவியை அனுபவம் செய்வதற்காக மிகவும் அன்பான தந்தையை மிகவும் அன்போடு நினைக்க வேண்டும்.

வரதானம்:
சதா ஊக்க உற்சாகத்தில் இருந்து மனதால் குஷியின் பாடல் பாடக்கூடிய அழிவற்ற அதிர்ஷ்டசாலி ஆகுக.

அதிர்ஷ்டசாலி குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற விதியினால் அழிவற்ற வெற்றிகளை அடைகின்றீர்கள். உங்களுடைய மனதில் இருந்து சதா ஆஹா ஆஹா என்ற குஷியின் பாடல் இசைத்துக் கொண்டே இருக்கின்றது. ஆஹா பாபா! ஆஹா அதிர்ஷ்டம்! ஆஹா இனிமையான பரிவாரம்! ஆஹா சிரேஷ்ட சங்கமயுக இன்பகரமான சமயம்! ஒவ்வொரு கர்மமும் ஆஹா ஆஹா ஆகும், ஆகையினால், நீங்கள் அழிவற்ற அதிர்ஷ்டசாலி ஆவீர்கள். உங்களுடைய மனதில் ஒருபொழுதும் ஏன், நான் என்பது வரவே முடியாது. ஏன் என்பதற்கு பதிலாக ஆஹா ஆஹா என்ற வார்த்தை மற்றும் நான் என்பதற்கு பதிலாக பாபா பாபா என்ற வார்த்தை தான் வருகின்றது.

சுலோகன்:
என்ன சங்கல்பம் செய்கின்றீர்களோ, அவற்றில் அழிவற்ற அரசாங்கத்தின் முத்திரை பதித்து விட்டீர்கள் என்றால் அது உறுதியானதாக ஆகிவிடும்.