14.12.25    காலை முரளி            ஓம் சாந்தி  18.02.2008      பாப்தாதா,   மதுபன்


உலக மறுமலர்ச்சிக்கு (மாற்றத்திற்கு) அமைதி சக்தியைப் பிரயோகம் (பயன்படுத்துங்கள்) செய்யுங்கள்

இன்று பாப்தாதா தன்னுடைய விஷ்வ பரிவர்த்தக் (உலகை மாற்றம் செய்பவர்கள்) ஆகவும், தந்தையின் நம்பிக்கையின் தீபங்களாகவும் இருக்கின்ற நாலாபுறமும் உள்ள குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். குழந்தைகள் பாப்தாதாவிடம் மிக மிக மிக அன்புடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா அறிவார். மேலும் பாப்தாதாவுக்கும் கூட ஒவ்வொரு குழந்தையிடமும் நூறு மடங்குக்கும் மேலாக அதிக அன்பு இருக்கிறது. மேலும் இந்த அன்பானது சதா இந்த சங்கமயுகத்தில் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். எப்படியெப்படி எல்லாம் சமயம் அருகமையில் வந்து கொண்டிருக்கிறதோ அதற்கேற்ப ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும், இப்போது ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம், உற்சாகத்துடன் இருக்கிறது. ஏனென்றால் தற்சமயம் மூன்று விதமான சக்திகளும் மிகவும் குழப்பத்தில் இருந்து கொண்டிரு க்கின்றன என்பதைப் பார்க்கின்றார்கள். தர்ம பரிபாலனம் ஆனாலும், இராஜ்ய பரிபாலன மானாலும், விஞ்ஞான சக்தியாக இருந்தாலும் சரி. இன்றைய விஞ்ஞான சக்தியும் கூட இயற்கைத் தத்துவத்தை யதார்த்த ரூபத்தில் உபயோகிக்க முடியவில்லை. நடக்கும் என்று கூறுகின்றார்கள் - ஏனென்றால் விஞ்ஞான சக்தியானது தத்துவத்தைப் பயன்படுத்தி காரியம் செய்ய வேண்டும். ஆனால் தத்துவமும் கூட விஞ்ஞான சாதனம் இருந்தும், முயற்சிகள் செய்தாலும் இப்போது வசத்தில் இல்லை (கண்ட்ரோலில் இல்லை).மேலும் இனி போகப்போக இயற்கையின் விளையாட்டு மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டேதானிருக்கும். ஏனென்றால் இயற்கையிலும் கூட முன்பு இருந்ததைப் போன்ற சக்தி இப்போது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போது எந்த சக்தி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள். இந்த அமைதி சக்தி (சைலன்ஸ் பவர் தான் உலக மாற்றம் செய்யும். நாலா பக்கமும் இப்போதுள்ள குழப்பத்திலிருந்து மீட்கக் கூடியவர் யார்? தெரியுமல்லவா? பரமத்மாவின் பாலனைக்கு அதிகாரியான ஆத்மாக்களைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆதலால் உங்கள் எல்லோருக்கும் இந்த ஊக்கம், உற்சாகம் இருக்கிறது பிராமண ஆத்மாக்களாகிய நாம் தான் பாப்தாதாவுடன் இருக்கின்றோம் மேலும் மாற்றம் கொண்டு வரும் காரியத்தில் துணையாகவும் இருக்கின்றோம்.

பாப்தாதா விசேஷமாக அமிர்த வேளையில் மேலும் முழு நாளும் கூடவே இருக்கும்போது பார்த்தார். அதாவது உலகில் மூன்று சக்திகளும் எவ்வளவு குழப்பத்தில் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு சாந்தி தேவிகள், சாந்தி தேவர்களாகிய நீங்கள் எவ்வளவு அமைதி சக்தியை சக்திசாலியாக பிரயோகிக்க வேண்டுமோ அதில் குறை உள்ளது. ஆதலால் பாப்தாதா இப்போது எல்லா குழந்தைகளும் உற்சாகப்படுத்துகின்றார். சேவை செய்யும் இடங்களில் சப்தத்தை (செய்தியை) நன்றாகவே பரப்புகிறீர்கள். ஆனால் அமைதி சக்தியை நாலாபக்கமும் பரப்ப வேண்டும். (குஜார் தாதிக்கு அடிக்கடி இருமல் வந்து கொண்டே இருக்கிறது). வாத்தியம் (தொண்டை) கெட்டுப்போய் விட்டது. இருந்தாலும் கூட பாப்தாதா குழந்தைகளை சந்திக்காமல் இருக்க முடியாது. இதுபோல் குழந்தைகளும் இருக்க முடியாது. ஆதலால் பாபா குழந்தைகளுக்கு நாலாபுறமும் அமைதி சக்தியின் அதிர் வலைகளைப் பரப்புங்கள் என்று சைகை செய்கின்றார்.

விசேஷமாக பிரம்மா பாபாவையும், ஜகதம்பாவையும் பார்த்தீர்கள். இவர்கள் சுயம் ஆதி தேவனாக, தேவியாக இருந்தும் கூட அமைதி சக்திக்காக எவ்வளவு குப்தமாக முயற்சி செய்தார்கள். உங்களுடைய தாதியும் கூட கர்மாதீத் நிலை அடைவதற்காக இந்த விஷயத்தை எவ்வளவு உறுதி யாக செய்தார். பொறுப்பு இருந்தபோதும், சேவையின் திட்டங்களை தீட்டினாலும் அமைதி சக்தியை சேமித்தார்கள். (இருமல் அடிக்கடி வந்து கொôண்டிருக்கிறது) தொண்டை (வாத்தியம்) எவ்வளவு தான் சரியில்லாமல் இருந்தாலும் பாப்தாதாவுக்கு அன்பு இருக்கிறது. சேவை சம்மந்தமான பொறுப்புகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், சேவையில் வெற்றிக்கான பிரத்ய க்ஷபலன் அமைதி சக்தி இல்லாது போனால் எவ்வளவு விரும்புகிறீர்களோ, அவ்வளவு கிடைக்க முடியாது. மேலும் ஏனெனில் தனக்கான முழு கல்பத்தின் பலனும் கூட அமைதிசக்தி மூலம் தான் அடைய முடியும். இதற்காக இப்போது ஒவ்வொருவரும் தனக்காக முழு கல்பத்திலும் இராஜ்ய பாக்கியம் அடைவதற்கும், மேலும் பூஜைக்குரியவராக ஆவதற்கும் சேமிப்பதற்கான நேரம் இருக்கிறது. ஏனென்றால் நேரத்தை பயன்படுத்த முடியாமல் போகக்கூடிய ஒரு நிலை வரத்தான் போகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அமைதி சக்தியின் மூலமாக டச்சிங் பவர் மற்றும் கேச்சிங் பவர் அவசியமாக இருக்கும். மேலும் எந்த சாதனமும் உபயோகப்படாமல் போகக்கூடிய அந்த நேரமும் வரும். பாப்தாதாவின் டைரக்ஷன்படி டச்சிங் தான் காரியத்தை செய்விக்கக்கூடிய ஆன்மீக சக்தி மட்டுமே இருக்கும். ஆதலால் தன்னை சோதியுங்கள், இப்படிப்பட்ட நேரத்தில் பாப்தாதாவின் டச்சிங் (தூண்டுதல்) மனதிலும் புத்தியிலும் டச்சிங் ஆகுமா? இதற்கு வெகுகால அப்பியாசம் தேவையாக உள்ளது. இதற்கான சாதனம் மனம் மற்றும் புத்தி அவ்வப்போது மட்டுமல்ல, சதா சுத்தமாகவும் (கிளீன்) தெளிவாகவும் (கிளியர்) இருக்க வேண்டும். இப்போது ஒத்திகை அதிகமாகிக் கொண்டேயிருக்கும். பிறகு ஒரு நொடியில் உண்மையாகி விடும். ஒருவேளை மனதிலும், புத்தியிலும், எந்த ஒரு ஆத்மாவின் மீதும், உதவி செய்துக் கொண்டி ருப்பவர் மீதும் சிறிதளவு எதிர்மறை எண்ணம் இருந்தால் அதை கிளீன் மற்றும் கிளியர் என்று சொல்ல முடியாது. ஆதலால் பாப்தாதா இதற்காக கவனத்தை ஈர்க்கின்றார். முழு நாளும் சோதித்துப் பாருங்கள். அமைதி சக்தி எவ்வளவு சேமிப்பாகியுள்ளது? சேவை செய்து கொண்டி ருந்தலும் கூட அமைதி சக்தி வாய்மொழியில் ஒருவேளை இல்லாமலிருந்தால் பிரத்யட்ச பலன் எவ்வளவு விரும்புகிறீர்களோ அவ்வளவு இருக்காது. முயற்சி அதிகமாகவும் பலன் குறைவாகவும் இருக்கும். சேவை செய்யுங்கள் ஆனால் அமைதி சக்தி நிறைந்த சேவை செய்யுங்கள். அப்போது எவ்வளவு வெற்றி (ரிசல்ட்) விரும்புகின்றீர்களோ அதை விட அதிகமாக கிடைக்கும். அடிக்கடி சோதித்துப் பார்ôக்க வேண்டும். மற்றப்படி பாப்தாதாவிற்கு குஷியாக இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் எங்கெல்லாம் என்ன சேவை செய்கிறீர்களோ அதனை நன்றாகவே செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தனக்காக அமைதி சக்தியை சேமிப்பதில் சுய மாற்றம் கொண்டு வருவதில் இன்னும் கொஞ்சம் கவனம் வேண்டும்.

இப்போது உலக மாற்றம் ஏற்படுவதற்கு யார் நிமித்தமாக போகின்றார்கள் என்று முழு உலகிலும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் துக்கமும், அசாந்தியும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் அதிகமாகத்தான் செய்யும். ஆதலால் பக்தர்கள் தங்கள் இஷ்ட தேவதைகளை நினைவு செய்கின்றார்கள். சிலர் மிக அதிகமான பிரச்சனைகளுக்கு நாடுவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மத குருமார்களின் பக்கமாக பார்வையை செலுத்திக் கொண்டி ருக்கிறார்கள். மேலும் எவ்வளவு நாள் தான் இப்படி இருக்கும் என்று விஞ்ஞானி களும் கூட இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவை அனைத் திற்கும் பதில் சொல்லக்கூடியவர் யார்? அனைவரின் மனதிலும் பொற்காலம் எப்போது உதய மாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது. மேலும் நீங்கள் அனைவரும் பொற்காலத்தை கொண்டு வரக்கூடியவர்கள் தானே! அப்படிப்பட்டவர்களா? இதற்கு நாங்கள் நிமித்தமாக இருக்கின்றோம் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். (அனைவருமே கை உயர்த்தினார்கள்). நிமித்தமாக இருக்கின்றீர்கள், நல்லருது. இவ்வளவு பேர் நிமித்தமாக இருக்கின்றீர்கள என்றால் எவ்வளவு காலம் தேவைப்படும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சித்தான், பாப்தாதா விற்கும் மகிழ்ச்சி தான். இந்த பொன்னான வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் பொன்னான நேரத்தின் படி கிடைத்து கொண்டிருக்கிறது.

இப்போது உங்களுக்குள் சேவைக்கான கூட்டம் நடக்கும் போது அதில் பிரச்சனைகளுக்கான தீர்வு காண்கின்றீர்கள் அல்லவா? இப்போது இந்த மீட்டிங் (அமைதி சக்தி சேமிப்பது) செய்யுங்கள், திட்டம் தயார் செய்யுங்கள். நினைவு மற்றும் சேவை. நினைவு என்பதன் அர்த்தம் அமைதி சக்தி. இதனை எப்பேபாது அடைகின்றீர்களோ அப்போது உங்களை நிலை உயர்ந்த நிலையில் இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு மிக உயரமான இடத்தில் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தீர் களானால் எல்லாம் தெளிவாகத் தெரிகிறதல்லவா? அதுபோல உங்களுடைய உச்ச நிலை. எல்லா வற்றிலும் உயர்ந்தது எது? பரந்தமம். பாப்தாதா கூறுகின்றார் சேவை செய்தவுடன் உயரத்தில் இருக்கும் தந்தையிடம் வந்து அமர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக களைப்பாக இருக்கும்போது 5 நிமிடம் அமைதியாக இருந்து விடுகிறீர்கள் என்றால் வித்தியாசம் தெரிகிறதல்லவா? இதுபோல் இடையிடையே தந்தையிடம் வந்து அமர்ந்து விடுங்கள். இதற்கு அடுத்த உயரமான இடம் சிருஷ்டி சக்கரத்தைப் பார்ப்பது. சிருஷ்டி சக்கரத்தில் உயர்ந்த இடம் எது? சங்கமம். சங்கமத்தில் முள்ளின் முனையை உச்சத்தில் காண்பிக்கின்றார்கள் அல்லவா? கீழே வந்தீர்கள், சேவை செய்தீர்கள் - பிறகு உயர்ந்த இடத்திற்கு சென்று விடுங்கள். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்களா? சமயம் உங்களை அழைக்கின்றது. நீங்கள் நேரத்தை அருகாமை யில் கொண்டிருக்கிறீர்களா? படைப்பவர் யார்? உங்களுக்குள் இதைப்போன்ற திட்டம் தயார் செய்யுங்கள். நல்லது.

குழந்தைகள் வரத்தான் வேண்டும் என்று கூறினார்கள். தந்தையும் சரி என்று கூறினார். இதுபோல் ஒருவர்க்கொருவரிடையேனா விஷயத்தை, சுபாவத்தை, விருத்தியை புரிந்து சரி, ஆமாம் என்று சொல்வதன் மூலம் இந்த ஒருங்கிணைந்த சக்தியானது அமைதி சக்தியின் ஜுவாலையை பிரகாசிக்கச் செய்யும். நெருப்புக் கொழுந்தை (ஜுவாலா) பார்த்திருக்கின்றீர்கள் தானே? இந்த ஒருங் கிணைந்த சக்தியானது அமைதி சக்தியின் ஜுவாலையை பிரகாசிக்கச் செய்யும். நல்லது.

சேவைக்கான வாய்ப்பு: மகாராஷ்டிரா, அந்திரா பிரதேஷ் மற்றும் மும்பை: பெயரே மகாராஷ்டிரா, மகாராஷ்டிராவுக்கு டிராமாபடி விசேஷமாக கோல்டன் கிப்ட் கிடைத்திருக்கின்றது. என்ன அன்பளிப்பு? பிரம்மா தந்தை மற்றும் தாயின் பாலனை மகாராஷ்டிராவுக்கு நேர்முகமாகக் கிடைத்துள்ளது. டெல்லி மற்றும் உத்திர பிரதேசத்திலும் கிடைத்துள்ளது. ஆனால் மகாராஷ்டி ராவுக்கு அதிகம். இப்போது மகாராஷ்டிரா மகானாகத்தான் இருக்கிறது. இனி என்ன செய்ய வேண்டும்? மகாரஷ்டிரா எல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் தயார் செய்ய வேண்டும். இதற்காக ஒரு மீட்டிங் செய்து அதில் எல்லோருக்கும் ஒரே சுபாவம், ஒரே சம்ஸ்காரம் ஒரே சேவையின் லட்சியம் அமைதி சக்தியை எப்படி பரப்புவது என்பது பற்றிய பிளான் தயா செய்ய வேண்டும். செய்வீர்கள் அல்லவா? செய்வீர்களா? நல்லது. ஒரு மாதத்திற்குப் பிறகு என்ன பிளான் செய்திருக்கிறீர்கள் என்று ரிப்போர்ட் பாப்தாதாவிற்கு கொடுக்க வேண்டும். உங்களுடைய இந்த ஆன்மீக சாம்பாஷனையின் மூலம் இன்னும் அதிகமாகி விடும். வேறு வேறு மண்டலங்களும் (ஜோன்) உள்ளது அல்லவா? ஆகவே அவர்களும் தயார் செய்வார்கள். நீங்கள் ஒரு சரம் (வழிகாட்டுதல்) தயாரியுங்கள் அவர்கள் அதில் வைரங்களை கோர்க்கட்டும். (சிறப்பாக செய்தல்). உங்களுக்கு தைரியம் இருக்கிறதல்லவா? டீச்சர்களுக்கு தைரியம் இருக்கிறதா? முதலாவது வரிசையில் இருப்பவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? சம்ஸ்காரத்தை ஒன்றாக இணைக்கும் காரியத்தை எந்த ஜோன் செய்வார்கள்? ஏதாவதொரு ஜோன் சுப விருத்தி, சுப திருஷ்டி, சுப கிருத்தி எப்படி கொண்டு வருவது? இதை ஒரு ஜோன் எடுத்துக் கொள்ளட்டும். அடுத்த ஜோன் ஒருவேளை யாரோ ஒரு ஆத்மா சுயமாக தனது சம்ஸ்காரத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை - விரும்புகிறது, ஆனால் செய்ய முடிவதில்லை. இதற்காக அந்த ஆத்மாவுக்காக இரக்க மனம், மன்னிப்பு, உதவி, அன்பு கொடுத்து எப்படி தன்னுடைய பிராமண பரிவாரத்தை சக்திசாலியாக ஆக்கலாம் இந்த பிளானை செய்யட்டும். இப்படிச் செய்ய முடியுமா? செய்ய முடியுமா? முதல் வரிசையில் இருப்பவர்கள் சொல்லுங்கள் - செய்ய முடியுமா என்று? முடியும் என்று நினைப் பவர்கள் கை உயர்த்துங்கள். ஏனெனில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே மகாரதிகள். இப்போது பாப்தாதா பெயர் சொல்லப்போவதில்லை. ஒவ்வொரு ஜோனுக்கும் எது பிடித்தமானதாக இருக்கிறதோ, அதை ஆன்மீக சம்பாஷணை செய்து, பிறகு சிவராத்திரிக்குப் பிறகு கூட, ஒரு மாதத்தில் ரிசல்ட் கூறலாம். மகாரஷ்டிரா அல்லவா? நன்றாக இருக்கிறது. விருத்தி அனைத்து இடங்களிலும் ஆகிக் கொண்டிருக்கிறது. இதற்கு பாப்தாதாவின் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். இதுவரையிலும் செய்ததற்கும் வாழ்த்துக்களை அளிக்கின்றார். ஆனால் இனி விசேஷமானவர்களின் விருத்தி (அதிகப்படுத்துவது) செய்யுங்கள். குவாலிட்டி (தகுதியானவர்கள்) குவாலிட்டி என்றால் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல, குவாலிட்டி என்பதன் பொருள் நினைவை நியமப்படி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் காண்பிப்பவர். மற்றபடி மைக் மற்றும் வாரிசு என்பது பற்றி உங்களுக்குத் தெரியும். நிச்சயபுத்தி உள்ளவராக, உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். நல்லது.

டபுள் ஃபாரினர்ஸ் (வெளிநாட்டவரிடம்: யுகல் மற்றும் குமாரிகளுக்கான ரிட்ரீட் விசேஷமாக நடந்தது. இவர்கள் அடையாளத்துடன் வந்திருக்கின்றார்கள். நன்றாக இருக்கிறது. குமாரிகள் கூட்டமாகச் செல்லுங்கள். அனைவரும் பார்க்கட்டும். சுற்றி வாருங்கள். நல்லது. அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் தான். என்றாலும் குமாரிகள் டபுள் லக்கி. ஏன்? மேலும் குமாரர்களும் லக்கி தான். ஆனால் குமாரிகளுக்கு பாப்தாதாவின் குருபாயின் (குருவின் சிம்மாசனம்) ஆசனம் கிடைக்கிறது. மன சிம்மாசனம் இருக்கவே இருக்கிறது. அது எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் குருவின் ஆசனம் என்பது எதில் அமர்ந்து கொண்டு முரளி படிக்கிறார்களோ அது தான். டீச்சராகி படிப்பிக்கின்றார்கள். ஆகவே தான் பாப்தாதா கூறுகின்றார் குமாரிகள் லக்கி என்று. குமாரிகளின் புகழ் 21 பரம்பரையை முன்னேற்றுபவர்கள். ஆகவே நீங்கள் உங்களுடைய 21 பிறவிகளை முன்னேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் யாருக்காக நிமித்தமாகிறீர்களோ அவர்களையும் கூட 21 ஜென்மம் முன்னேற்றுகின்றீர்கள். நீங்கள் அப்படிப்பட்ட குமாரிகள் தானே! அப்படித்தானே! பக்காவா? அல்லது கொஞ்சம் கொஞ்சம் கச்சாவா (பக்குவப்படாத) இப்படி நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். பக்காவாக இருக்கிறார்கள். (தாதிகளிடம்) நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா - உறுதியான குமாரிகள், முதிர்ச்சி அடைந்தவர்கள். மோகினி சகோதரி மட்டும் கூறட்டும் (நியூயார்க்) முதிர்ச்சி அடைந்திருக்கிறார்களா? குமாரிகள் குரூப் பக்காவாக இருக்கிறது. இவர்களுடைய டீச்சர் யார் (மீரா சகோதரி) பக்கா என்றால் கரஒலி எழுப்புங்கள். பாப்தாதாவுக்கும் குஷியாக இருக்கின்றது. (இது குமாரிகளுக்கான 8வது ரிட்ரீட்) இதன் விஷயம் நம்முடையவர் என்ற அனுபவம். 30 தேசங்களிலிருந்து 80-குமாரிகள் வந்திருக்கின்றனர். எல்லோருமே நம்முடையவர் என்ற அனுபவத்தை நன்றாக செய்தனர். வாழ்த்துக்கள். இது குமாரிகளுக்கு ஆகிவிட்டது. நீங்கள் அனைவரும் யார்? (தம்பதியர்களிடம்) நீங்கள் கூறுங்கள் - இவர்களோ குமாரிகள் தான் நாங்கள் பிராம்மா குமார்-பிரம்மா குமாரிகள். யுகல் குரூப் நன்றாக இருக்கிறது. குமாரர்களின் குரூப் கலந்திருக்கின்றது. குரூப் நன்றாக உள்ளது. யுகலாக இருப்பவர்களுக்கு ஆன்மீக போதை (நஷா) இருக்கிறது அல்லவா? அதிகப்படியான நஷா என்ன என்பது தெரியுமா? எப்போதிலிருந்து குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த ஞானத்தை தாரணை செய்ய (நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வந்தார்களோ) ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்து அதிகமான மக்களிடம் தைரியம் வந்திருக்கிறது. நாமும் கூட இப்படி இருக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஆரம்பத் தில் என்ன நினைத்தார்கள் என்றால் பிரம்மா குமாரிகள் ஆகிவிட்டால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியதாக இருக்கும் என்று. ஆனால் இப்போது பிரம்மா குமார்- பிரம்மா குமாரி ஆனாலும் குடும்ப விவகாரங்களையும் நடத்த முடியும் என்று புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் யுகலாக இருப்பவர்களிடம் இன்னும் ஒரு விசேஷம் இருக்கிறது. இவர்கள் மகாத்மாக் களுக்கு சவால் விட்டிருக்கிறார்கள். நாங்கள் ஒன்றாக இருந்தாலும், காரிய விவகாரங்களை செய்துக் கொண்டிருந்தாலும் எங்களது ஆன்மீகம் சிரேஷ்டமானதாக இருக்கிறது. வெற்றி யாளர் களாக இருக்கிறோம். ஆகவே வெற்றியுடன் நடந்து காட்டுவது தம்பதியாக இருப்பவர் களுடைய காரியம். ஆதலால் பாப்தாதா யுகலாக இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை அளிக்கின்றார். சரி தானே! சவால் விடுபவர்கள் தானே! யாராவது சிஐடி வந்து சோதித்தால் செய்யட்டும். நீங்கள் கூறுங்கள் சோதித்துப் பாருங்கள் என்று கூறுங்கள். துணிச்சல் இருக்கிறதா? கை உயர்த்துங்கள். நல்லது.

பாப்தாதா எப்போதும் வெளிநட்டவர்களை தைரியசாலிகாக புரிந்திருக்கின்றார்? ஏன்? பாப்தாதா பார்க்கின்றார் அவர்கள் வேலைக்கும் செல்கின்றார்கள், வகுப்பும் நடத்துகின்றார்கள். சிலர் வகுப்பு மட்டும் நடத்துகிறார்கள். ஆனால் சென்டரில் அனைத்துவிதமான சேவையிலும் உதவி செய்வர் களாகவும் இருக்கின்றார்கள். ஆகையால் இவர்களுக்கு பாப்தாதா ஆல்ரவுண்டர் குரூப் என்ற டைட்டில் கொடுக்கின்றார். இவ்வாறு முன்னேறிக் கொண்டே இருங்கள் மேலும் மற்றவர்களையும் முன்னேற்றிக் கொண்டே இருங்கள். நல்லது.

ஆசிரியர்களிடம் (சமர்பண சகோதரிகள்): டீச்சர்கள் நன்றாக இருக்கின்றீர்களா? டீச்சர்கள் நிறைய பேர் வந்திருக்கின்றார்கள். நல்லது. மூத்தவர்களும் கூட எழுந்திருங்கள். நன்றாக இருக்கிறது. பாருங்கள் பாப்சமான் டைட்டில் உங்களுக்கும் கூட இருக்கிறது. தந்தையும் கூட டீச்சராக வருகின்றார். டீச்சர் என்றால் சுய அனுபவத்தின் ஆதாரத்தில் மற்றவர்களையும் அனுபவசாலி களாகக்குவது. அனுபவம் என்ற அத்தாரிட்டி எல்லாவற்றையும் விட விசேஷமானது. ஒருவேளை ஏதோ ஒரு விஷயத்தில் அனுபவசாலியாக ஆகியிருந்தாலும் கூட வாழ்க்கை முழுவதம் மறக்க முடியாது. கேட்கும் விஷயம், பார்க்கும் விஷயம் மறந்து விடும். ஆனால் அனுபவம் செய்த விஷயம் மறக்காது. ஆகவே டீச்சர்ஸ் என்றால் அனுபவசாலிகளாகி அனுபவம் செய்விப்பவர்கள். இந்த காரியம் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? நல்லது. இப்போது ஏதாவது அனுபவத்தின் குறை இருந்தால் ஒரு மாதத்தில் நிரப்பி விடுங்கள். பிறகு பாப்தாதா ரிசல்ட் கேட்பார். நல்லது.

நாலா பக்கமும் உள்ள பாப்தாதாவினுடைய மன சிம்மாசனத்திற்கு அதிகாரியாக இருக்கின்ற, சதா தன்னுடைய சைலன்ஸ் சக்தியை அதிகரித்துக் கொண்டும், மற்றவர்களும் முன்னேறுவதற்கு ஊக்கம், உற்சாகம் அளித்துக் கொண்டும் சதா குஷியாக இருக்கின்ற மேலும் எல்லோருக்கும் குஷியின் அன்பளிப்பை அளிக்கின்ற நாலா பக்கமும் உள்ள பாப்தாதாவின் லக்கி மற்றும் லவ்லி (அதிர்ஷ்டம் மற்றும் அன்பு நிறைந்த) குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் ஆசிர்வாதங்கள் மேலும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு கட்டுப்பாட்டிலும் (கண்டிஷனிலும்) பாதுகாப்பாக இருக்கக்கூடிய, ஏர்கண்டிஷன் டிக்கெட் வாங்குவதற்கு அதிகாரி அகுக.

எந்த குழந்தைகள் ஒவ்வொரு கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பாக இங்கு இருப்பார்களோ அந்த குழந்தைகளுக்கு ஏர்கண்டிஷன் டிக்கெட் கிடைத்துக் கொண்டேயிருக்கும். எந்த சூழ்நிலைகள் வந்தாலும், எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும், ஆனால் ஒவ்வொரு பிரச்சனைகளையும் ஒரு வினாடியில் கடந்து செல்வதற்கான சர்டிபிúக்ட் தேவையாக உள்ளது. எப்படி அந்த டிக்கெட் வாங்கு வதற்கு பைசா (ரூபாய்) கொடுப்பது போல் இங்கும் எப்போதும் வெற்றியாளர் என்ற பணம் (மணி) தேவையாக உள்ளது. அதன் மூலம் தான் டிக்கெட் கிடைக்கும். இந்த பணம் பெறுவதற்காக உழைப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாபாவின் கூடவே எப்போதும் இருந்தால் மட்டும் போதுமானது. அவர்களுக்கு அளவிடமுடியாத வருமானம் கிடைத்துக் கொண்டே யிருக்கும்,.

சுலோகன்:
எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் சரி, பிரச்சனைகள் போகவேண்டுமே தவிர மகிழ்ச்சி (குஷி) ஒருபோதும் போகக்கூடாது.


அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத் ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.

எப்படி உங்களது படைப்பான ஆமை ஒரு வினாடியில் தனது அனைத்து கர்மேந்திரியங்களையும் உள்ளடக்கி விடுகிறது. இந்த உள்ளடக்கும் சக்தி உங்களது படைப்பில் கூட உள்ளது - நீங்கள் மாஸ்டர் படைப்பாளர், உள்ளடக்கும் சக்தியின் ஆதாரத்தில் ஒரு வினாடியில் அனைத்து சங்கல்பங்களையும் உள்ளடக்கி ஒரே சங்கல்பத்தில் இருக்கும் ஸ்திதியில் வாருங்கள். எப்போது கர்மேந்திரியங்களின் கர்மத்தின் ஸ்மிருதியில் இருந்து விலகி ஒரே ஆன்மீக சொரூபத்தின் ஸ்திதியில் இருந்தால் அப்போது தான் கர்மாதீத் அவஸ்தாவின் அனுபவம் ஏற்படும்.