15-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய
உங்களது புத்தியை தூய்மையாக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார்,
எப்போது தூய்மையாகின்றீர்களோ அப்போது தான் நீங்கள் தேவதையாக ஆக
முடியும்.
கேள்வி:
இந்த நாடகத்தில் ஏற்கெனவே
உருவாக்கப்பட்ட திட்டம் என்ன? இதிலிருந்து தந்தையும் கூட
விடுபட முடியாது?
பதில்:
ஒவ்வொரு கல்பமும் தந்தை தனது
குழந்தைகளிடத்தில் வந்தே ஆக வேண்டும், பதீதமான, துக்கமான
குழந்தைகளை சுகமானவர்களாக ஆக்கியே தீர வேண்டும் - இந்த திட்டம்
நாடகத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த
பந்தனத்திலிருந்து தந்தையும் விடுபட முடியாது.
கேள்வி:
படிப்பு கற்பிக்கும் தந்தையின்
முக்கிய விசேஷத்தன்மை என்ன?
பதில்:
அவர் மிகவும் அகங்காரமற்றவராகி பதீத உலகில், பதீத சரீரத்தில்
வருகின்றார். தந்தை இந்த நேரத்தில் உங்களை சொர்கத்திற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றார். பிறகு நீங்கள் அவருக்கு
துவாபரயுகத்தில் தங்கக் கோயில் கட்டுகிறீர்கள்.
பாடல்:
இந்த பாவம் நிறைந்த உலகிலிருந்து
.....
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். இரண்டு
உலகம் இருக்கிறது - ஒன்று பாவ உலகம், மற்றொன்று புண்ணிய உலகம்.
துக்கமான உலகம் மற்றும் சுகமான உலகம். சுகம் அவசியம் புது
உலகில், புதிய கட்டிடத்தில் தான் இருக்க முடியும். பழைய
கட்டிடத்தில் துக்கம் தான் இருக்கும். அதனால் தான் அதை இடித்து
விடுவர். பிறகு புதிய கட்டிடத்தில் சுகமாக வசிப்பார்கள். பகவானை
எந்த மனிதரும் தெரிந்து கொள்ளவில்லை என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இராவண இராஜ்யத்தின் காரணத்தினால்
முற்றிலும் கல்புத்தியாக, தமோ பிரதான புத்தியுடையவர்களாக
ஆகிவிட்டனர். தந்தை வந்து புரிய வைக்கின்றார் - என்னை பகவான்
என்று கூறுகின்றனர், ஆனால் யாரும் அறியவில்லை. பகவானையே
அறியவில்லையெனில் பிறகு எதற்கும் பயன்படாதவர்களாக
ஆகிவிடுகின்றனர். துக்கத்தின் பொழுது தான் ஏ பிரபு, ஏ ஈஸ்வரனே!
என்று கூறி அழைக்கின்றனர். ஆனால் அதிசயம் என்னவெனில் ஒரு
மனிதரும் எல்லையற்ற தந்தையாகிய படைப்பவரை அறியவில்லை.
சர்வவியாபி என்று கூறிவிடுகின்றனர், ஆமை, மீன் போன்றவைகளில்
பரமாத்மா இருக்கின்றார் எனக் கூறுகின்றனர். இது பரமாத்மாவை
நிந்தனை செய்வதாகும். தந்தைக்கு எவ்வளவு நிந்தனை செய்கின்றனர்!
அதனால் தான் பகவானின் மகாவாக்கியம் என்னவெனில் எப்பொழுது
பாரதத்தில் எனக்கும், தேவி தேவதைகளுக்கும் நிந்தனை செய்து
செய்து ஏணியில் கீழே இறங்கி தமோ பிரதானம் ஆகிவிடுகிறீர்களோ
அப்பொழுது நான் வருகிறேன். நாடகத்தில் இந்த பாகத்தை நடிக்க
மீண்டும் வந்தே ஆக வேண்டும் என்று குழந்தைகள் கூறுகின்றனர்.
இந்த நாடகம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டது என்று தந்தை
கூறுகின்றார். நானும் நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டு
இருக்கிறேன். இந்த நாடகத்தி-ருந்து நானும் விடுபட முடியாது.
பதீதமானவர்களை பாவனம் ஆக்குவதற்கு நானும் வந்தே ஆக
வேண்டியிருக்கிறது. இல்லையெனில் புது உலகை யார் ஸ்தாபனை
செய்வார்கள்? குழந்தைகளை இராவண இராஜ்யத்தின் துக்கத்திலிருந்து
விடுவித்து புது உலகிற்கு யார் அழைத்துச் செல்வார்கள்? இந்த
உலகில் பல செல்வந்த மனிதர்கள் இருக்கின்றனர், நாம்
சொர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றனர், செல்வம் இருக்கிறது,
மாளிகைகள் இருக்கின்றன, விமானம் இருக்கிறது, ஆனால் எதிர்பாராமல்
யாராவது நோய்வாய்பட்டு விட்டால், திடீரென்று இறந்து விட்டால்
எவ்வளவு துக்கம் ஏற்படுகிறது! சத்யுகத்தில் ஒருபொழுதும் அகால
மரணம் ஏற்படாது, துக்கத்தின் விசயமே கிடையாது என்பது
அவர்களுக்குத் தெரியாது, அங்கு ஆயுளும் அதிகமாக இருக்கும்.
இங்கு திடீரென்று இறந்து விடுகின்றனர். சத்யுகத்தில்
இப்படிப்பட்ட விசயங்கள் இருக்காது. அங்கு எப்படி இருக்கும்?
என்பதையும் யாரும் அறியவில்லை. அதனால் தான் தந்தை கூறுகின்றார்
- எவ்வளவு அசுத்த புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர்! நான் வந்து
இவர்களை தூய்மையான புத்தியுடையவர்களாக ஆக்குகிறேன். இராவணன்
கல்புத்தி உடையவர்களாக, அசுத்த புத்தியுடையவர்களாக
ஆக்குகின்றான். பகவான் தூய்மையான புத்தி யுடைவர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார். தந்தை உங்களை மனிதனிலிருந்து தேவதைகளாக
ஆக்கிக் கொண்டிருக்கின்றார். சூரியவம்சி மகாராஜா, மகாராணி
ஆவதற்காக வந்திருக்கிறோம் என்று அனைத்து குழந்தைகளும்
கூறுகிறீர்கள். இலட்சியம், குறிக்கோள் எதிரில் இருக்கிறது.
நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். இது தான் சத்திய நாராயணனின்
கதையாகும். பிறகு பக்தியில் பிராமணர்கள் கதை கூறிக் கொண்டே
இருக்கின்றனர். உண்மையில் யாரும் நரனிலிருந்து நாராயணனாக ஆவது
கிடையாது. நீங்கள் உண்மையிலேயே நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக
வந்திருக்கிறீர்கள். உங்கள் இயக்கத்தின் குறிக்கோள் என்ன? என்று
சிலர் கேட்கின்றனர். நரனிலிருந்து நாராயணன் ஆவது தான் எமது
குறிக்கோள் என்று கூறுங்கள். ஆனால் இது ஒரு இயக்கமே கிடையாது.
இது குடும்பம் ஆகும். தாய், தந்தை மற்றும் குழந்தைகள்
இருக்கிறோம். நீங்கள் தான் தாய், தந்தை...... என்று பக்தி
மார்க்கத்தில் பாடினீர்கள். ஏ தாய், தந்தையே! நீங்கள் எப்பொழுது
வருவீர்களோ அப்பொழுது நாங்கள் உங்களிடமிருந்து சுகமான உலகை
அடைகிறோம், நாங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம். இப்பொழுது
நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள் அல்லவா! அதுவும்
சொர்க்கத்தில். இப்படிப்பட்ட தந்தையை பார்க்கின்ற பொழுது
குஷியின் அளவு எவ்வளவு அதிகரிக்க வேண்டும்! அவரை அரைக் கல்பமாக
ஹே பகவானே வாருங்கள்! நீங்கள் வந்தால் நாம் உங்களிடமிருந்து
அதிக சுகம் அடைவோம் என்று நினைவு செய்தோம். இந்த எல்லையற்ற
தந்தை எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கின்றார், அதுவும் 21 பிறவிகளுக்கு.
தந்தை கூறுகின்றார் - நான் உங்களை தெய்வீக வம்சத்தினர்களாக
ஆக்குகின்றேன். இராவணன் அசுர வம்சத்தினர்களாக ஆக்குகிறான். நான்
ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன். தூய்மையின்
காரணத்தினால் அங்கு ஆயுளும் அதிகமாக இருக்கும். இங்கு போகிகளாக
இருப்பதால் அகால மரணம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். அங்கு
யோகத்தின் பலனாக ஆஸ்தி அடைந்திருப்பீர்கள். ஆயுளும் 150
ஆண்டுகள் இருக்கும். தனக்குரிய நேரத்தில் ஒரு சரீரத்தை விடுத்து
மற்றொன்றை எடுப்பீர்கள். ஆக இந்த ஞானத்தை தந்தை தான் வந்து
கொடுக்கின்றார். பக்தர்கள் பகவானை தேடிக் கொண்டிருக்கின்றனர்,
சாஸ்திரங்கள் படிப்பது, தீர்த்த யாத்திரை செல்வது - இவைகள்
அனைத்தும் பகவானை சந்திக்கும் வழிகள் என்று நினைக்கின்றனர். இது
வழியே கிடையாது என்று தந்தை கூறுகின்றார். வழியை நான் தான்
கூறுவேன். குருடர்களுக்கு ஊன்றுகோலாக இருக்கக் கூடிய ஹே பிரபுவே!
வாருங்கள், எம்மை சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள் என்று நீங்கள் கூறி வந்தீர்கள். ஆக தந்தை தான்
சுகதாமத்திற்கான வழி கூறுகின்றார். தந்தை ஒருபொழுதும் துக்கம்
கொடுப்பது கிடையாது. தந்தையின் மீது இவ்வாறு பொய்யான களங்கம்
ஏற்படுத்தி விட்டனர். யாராவது இறக்கின்றனர் என்றால் பகவானை
திட்ட ஆரம்பித்து விடுகின்றனர். நான் யாரையும் தண்டிப்பதோ
அல்லது துக்கம் கொடுப்பதோ கிடையாது. இது அவரவர்களது பாகமாகும்.
நான் எந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேனோ அங்கு அகால மரணம்,
துக்கம் போன்றவைகள் ஒருபொழுதும் இருக்கவே இருக்காது. நான்
உங்களை சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். குழந்தைகளுக்கு
மெய் சிலிர்க்க வேண்டும். ஆஹா, பாபா நம்மை புருஷோத்தமர்களாக
ஆக்கிக் கொண்டிருக்கின்றார்! சங்கமயுகம் புருஷோத்தம யுகம் என்று
கூறப்படுகிறது என்பது மனிதர்களுக்குத் தெரியாது. பக்தி
மார்க்கத்தில் பக்தர்கள் புருஷோத்தம மாதம் என்று உருவாக்கி
விட்டனர். உண்மையில் இருப்பது புருஷோத்தம யுகமாகும், இதில் தான்
தந்தை வந்து உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார்.
இப்பொழுது நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த புருஷோத்தமர்கள் இலட்சுமி
நாராயணன் ஆவர். மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது.
முன்னேறும் கலையில் அழைத்துச் செல்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
ஏணிப்படி படத்தில் மற்றவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும்
எளிதாகும். இப்பொழுது விளையாட்டு முடிவடைந்து விட்டது,
வீட்டிற்கு திரும்புங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது
இந்த பழைய சீ சீ சரீரத்தை விட வேண்டும். நீங்கள் முதலில் புது
உலகில் சதோ பிரதானமாக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து
தமோ பிரதான சூத்திரர்களாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மீண்டும்
சூத்திரனிலிருந்து பிராமணர் களாக ஆகியிருக்கிறீர்கள். பக்தியின்
பலன் கொடுப்பதற்காக இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார்.
சத்யுகத்தில் பலன் தந்தை கொடுத்திருந்தார். தந்தை சுகம்
கொடுக்கும் வள்ளல் ஆவார். பதீத பாவனாகிய தந்தை வருகின்றார்
எனில் முழு உலக மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையையும் சதோ
பிரதானமாக ஆக்குகின்றார். இப்பொழுது இயற்கையும் தமோ பிரதானமாக
இருக்கிறது. தானியம் போன்றவைகள் கிடைப்பதே கிடையாது. நான்
இதையெல்லாம் செய்வதாக அவர்கள் நினைக்கின்றனர். அடுத்த ஆண்டில்
அதிக தானியங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் எதுவும்
ஏற்படுவது கிடையாது. இயற்கையின் சீற்றங்களை யார் என்ன செய்ய
முடியும். வெள்ளம் ஏற்படும், பூகம்பங்கள் நிகழும், வியாதிகள்
ஏற்படும். இரத்த நதி ஓடும். இது அதே மகாபாரத யுத்தம் ஆகும்.
நீங்கள் உங்களது ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு சொர்க்கத்தின்
ஆஸ்தி கொடுப்பதற்காகவே வந்திருக்கிறேன். மாயை இராவணன் சாபம்
கொடுக்கிறது, நரகத்தின் ஆஸ்தியை கொடுக்கிறது. இந்த விளையாட்டும்
உருவாக்கப் பட்டிருக்கிறது. தந்தை கூறுகின்றார் - நாடகப்படி
நான் சிவாலயம் ஸ்தாபனை செய்கிறேன். இந்த பாரதம் சிவாலயமாக
இருந்தது, இப்பொழுது விகார உலகமாக இருக்கிறது. விஷக்கடலில்
மூழ்கி ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர்.
பாபா நம்மை சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆக இந்த குஷி
இருக்க வேண்டும் அல்லவா! நமக்கு எல்லையற்ற பகவான் கற்பித்துக்
கொண்டிருக்கிறார். தந்தை கூறுகின்றார் - நான் உங்களை உலகிற்கு
எஜமானர்களாக ஆக்குகிறேன். பாரதவாசிகள் தங்களது தர்மத்தைப்
பற்றியே தெரிந்து கொள்ளவில்லை. நமது இனம் உயர்ந்ததிலும்
உயர்ந்தது ஆகும், இதிலிருந்து தான் மற்ற இனங்கள் உருவாகின்றன.
ஆதி சநாதன் என்பது எந்த தர்மம்? எந்த இனமாக இருந்தது? என்பதை
புரிந்து கொள்வது கிடையாது. ஆதி சநாதனர்கள் தேவி தேவதா
தர்மத்தின் இனத்தவர்கள், பிறகு இரண்டாவது நம்பரில் சந்திரவம்சி
இனத்தவர்கள், பிறகு இஸ்லாமிய வம்சத்தின் இனத்தவர்கள். இந்த முழு
மரத்தின் இரகசியம் வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இப்பொழுது
எத்தனை இனங்கள் உள்ளன என்பதைப் பாருங்கள்! எத்தனை கிளைகள்
உள்ளன! இது பல வகையான தர்மங்களின் மரமாகும், இந்த விசயங்களை
தந்தை வந்து தான் புத்தியில் அமரச் செய்கின்றார். இது
படிப்பாகும், இது தினமும் படிக்க வேண்டும். பகவானின்
மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து
இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன். அழியக் கூடிய செல்வங்
களை தானம் செய்வதன் மூலம் பதீத இராஜாவாக ஆகிவிட முடியும். நான்
உங்களை அந்த அளவிற்கு பாவனம் ஆக்குகிறேன் அதாவது நீங்கள் 21
பிறவிகளுக்கு உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். அங்கு ஒருபோதும்
அகால மரணம் ஏற்படாது. தனக்குரிய நேரத்தில் சரீரத்தை விட்டு
விடுவர். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை நாடகத்தின்
இரகசியத்தைப் புரிய வைத்திருக்கின்றார். சினிமா, நாடகம்
போன்றவைகள் உருவாகியிருக்கிறது, ஆக இவைகள் மூலம் புரிய
வைப்பதும் எளிதாகி விடுகிறது. இன்றைய நாட்களில் பல நாடகங்கள்
உருவாக்குகின்றனர். மனிதர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டு விட்டது.
அவையனைத்தும் எல்லைக்குட்பட்டது, இது எல்லையற்ற நாடகமாகும்.
இந்த நேரத்தில் மாயையின் பகட்டு அதிகமாக இருக்கிறது. இப்பொழுது
சொர்க்கமாகவே ஆகிவிட்டது என்று மனிதர்கள் நினைக்கின்றனர்.
முன்பு இவ்வளவு கட்டிடங்கள் கிடையாது. ஆக எவ்வளவு எதிர்ப்பு
இருக்கிறது! பகவான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார் எனில்
மாயையும் தனது சொர்க்கத்தை காண்பிக்கிறது. இவை அனைத்தும்
மாயையின் பகட்டு ஆகும். இது வீழ்ச்சியடைய வேண்டும். எவ்வளவு
சக்தி வாய்ந்ததாக மாயை இருக்கிறது! நீங்கள் அதனிடமிருந்து
முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். தந்தை ஏழைப் பங்காளனாக
இருக்கின்றார். செல்வந்தர்களுக்கு சொர்க்கம் ஆகும், ஏழைகள்
பாவம் நரகத்தில் இருக்கின்றனர். ஆக இப்பொழுது நரகவாசிகளை
சொர்க்கவாசிகளாக ஆக்க வேண்டும். ஏழைகள் தான் ஆஸ்தியை அடைவர்.
செல்வந்தர்கள் நாம் சொர்க்கத்தில் அமர்ந்திருப்பதாக
நினைக்கின்றனர். சொர்க்கம், நரகம் இங்கு தான் இருக்கிறது. இந்த
அனைத்து விசயங்களையும் இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
பாரதம் எவ்வளவு பிச்சைக்கார நாடாக ஆகிவிட்டது! பாரதம் தான்
செல்வமிக்கதாக இருந்தது! ஒரே ஒரு ஆதி சநாதன தர்மம் இருந்தது!
இப்பொழுதும் எவ்வளவு பழைய பொருட்களை கண்டுபிடித்துக் கொண்டே
இருக்கின்றனர்! இத்தனை ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர்.
எலும்புகளைக் கண்டுபிடிக்கின்றனர், இலட்சம் ஆண்டுகளுக்கானது
என்று கூறுகின்றனர். இலட்சம் ஆண்டிற்கான எலும்புகளை எப்படி
வெளிக் கொணர முடியும்! பிறகு அதற்கு விலையும் எவ்வளவு அதிகமாக
வைக்கின்றனர்!
நான் வந்து அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன் என்று தந்தை புரிய
வைக்கின்றார். இவரிடம் பிரவேசமாகி வருகிறேன். இந்த பிரம்மா
சாகாரி ஆவார், இவரே பிறகு சூட்சுமவதனவாசி பரிஸ்தாவாக ஆகின்றார்.
அவர் அவ்யக்தமானவர் (நிராகார்), இவர் வியக்தமானவர் (சரீரதாரி).
தந்தை கூறுகின்றார் - நான் பல பிறவிகளின் கடைசி யிலும்
கடைசியில் வருகின்றேன், யார் நம்பர் ஒன் பாவனமாக இருந்தாரோ அவரே
நம்பர் ஒன் பதீதமாக ஆகின்றார். நான் இவரிடத்தில் வருகின்றேன்.
ஏனெனில் இவர் தான் பிறகு நம்பர் ஒன் பாவனமாக ஆக வேண்டும். நான்
பகவான் அல்லது இன்னாராக இருக்கிறேன் என்று இவர் ஒருபொழுதும்
கூறியது கிடையாது. நான் இவரது உடலில் பிரவேசம் செய்து இவர்
மூலமாக அனைவரையும் சதோ பிரதானமாக ஆக்குகிறேன் என்று தந்தையும்
கூறுகின்றார். நீங்கள் அசரீரியாக வந்தீர்கள், பிறகு 84 பிறவிகள்
எடுத்து நடிப்பு நடித்தீர்கள், இப்பொழுது திரும்பிச் செல்ல
வேண்டும் என்று தந்தை குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். தன்னை
ஆத்மா என்று உணருங்கள், தேக அபிமானத்தை நீக்குங்கள். நினைவு
யாத்திரையில் மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த கஷ்டமும்
கிடையாது. யார் தூய்மையாக ஆவார்களோ, ஞானம் கேட்பார்களோ அவர்கள்
தான் உலகிற்கு எஜமானர் களாக ஆவார்கள். எவ்வளவு உயர்ந்த
பள்ளிக்கூடம்! கற்பிக்கக் கூடிய தந்தை எவ்வளவு அகங்காரமற்றவராகி
பதீத உலகில், பதீத சரீரத்தில் வருகின்றார்! பக்தி மார்க்கத்தில்
நீங்கள் அவருக்கு தங்கத்தினால் எவ்வளவு நல்ல நல்ல கோவில்
கட்டுகிறீர்கள்! இந்த நேரத்தில் உங்களை சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆக்குகிறேன், பதீத சரீரத்தில் வந்து அமர்கிறேன்.
பிறகு பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை சோமநாத கோவிலில் அமரச்
செய்கிறீர்கள். தங்கம், வைரத்தினால் கோயில் கட்டுகிறீர்கள்.
ஏனெனில் நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் கவனிப்பு செய்கிறீர்கள்.
இந்த அனைத்து இரகசியங்களையும் புரிய வைத் திருக்கின்றார். பக்தி
முதலில் கலப்படமற்று இருந்தது, பிறகு கலப்படம் ஆகிவிட்டது.
இன்றைய நாட்களில் பாருங்கள், மனிதர்களுக்கும் பூஜை செய்து
கொண்டிருக்கின்றனர்! கங்கைக் கரையில் சிவோஹம் என்று கூறி
அமர்ந்து விடுகின்றனர். தாய்மார்கள் சென்று பாலாபிஷேகம்
செய்கின்றனர், பூஜை செய்கின்றனர். இந்த தாதா கூட தானே
செய்திருக்கின்றார், நம்பர் ஒன் பூஜாரியாக இருந்தார் அல்லவா!
ஆச்சரியம் அல்லவா! தந்தை கூறுகின்றார் - இது ஆச்சரியமான
உலகமாகும். சொர்க்கமாக எப்படி ஆகிறது? நரகமாக எப்படி ஆகிறது?
அனைத்து இரகசியங்களையும் குழந்தைகளுக்குப் புரிய வைத்துக்
கொண்டே இருக்கின்றார். இந்த ஞானம் சாஸ்திரங்களில் கிடையவே
கிடையாது. அது தத்துவ சாஸ்திரங்களாகும். இது ஆன்மீக ஞானமாகும்,
இதை ஆன்மீகத் தந்தை மற்றும் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு
யாரும் கொடுக்க முடியாது. மேலும் பிராமணர்களாகிய உங்களைத் தவிர
வேறு யாரும் இந்த ஆன்மீக ஞானத்தை அடையவும் முடியாது. எதுவரை
பிராமணன் ஆகவில்லையோ அதுவரை தேவதையாகவும் ஆக முடியாது. பகவான்
நமக்கு படிப்பு கற்பிக்கின்றார், கிருஷ்ணர் அல்ல என்ற குஷி
குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகம் இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மாயையின் பகட்டு மிக அதிகமாக இருக்கிறது, இதனிடமிருந்து தனது
முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். நாம் இப்பொழுது
புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம், பகவான் நமக்கு
கற்பிக்கின்றார் என்ற குஷியில் மெய் சிலிர்த்துப் போக வேண்டும்.
2) உலக இராஜ்ய பாக்கியம் அடைவதற்காக தூய்மையானால் போதும்.
எவ்வாறு தந்தை அகங்காரமற்றவராகி பதீத உலகில், பதீத சரீரத்தில்
வருகின்றாரோ அவ்வாறு பாப்சமான் அகங்காரமற்றவராகி சேவை செய்ய
வேண்டும்.
வரதானம்:
ஒருவருடன் அனைத்து சம்பந்தங்களையும் பேணக்கூடிய அனைத்துப்
பற்றுக் கோடுகளில் இருந்தும் விடுபட்ட சம்பூர்ண ஃபரிஸ்தா ஆகுக.
எப்படி ஒரு பொருளை உருவாக்கும் போது அது உருவாகி, தயாராகி
விட்டால், அது தனது பற்றுக்கோட்டை விட்டு விடுகிறது. அது போல்
எந்த அளவு சம்பன்ன ஸ்டேஜின் சமீபமாக வந்து கொண்டே
இருக்கிறீர்களோ, அந்த அளவு அனைவரிடம் இருந்தும் விலகிக் கொண்டே
செல்வீர்கள். எப்போது அனைத்து பந்தனங்களில் இருந்தும்
உள்ளுணர்வு மூலம் விலகி விடுகிறீர்களோ, அதாவது எவரிடத்தும்
பற்றுதல் இல்லாமற் போகிறதோ, அப்போது சம்பூர்ண ஃபரிஸ்தா ஆவீர்கள்.
ஒருவருடன் அனைத்து உறவுகளையும் கடைப்பிடிப்பது தான் சென்று சேர
வேண்டிய இலக்காகும். இதன் மூலம் தான் கடைசி ஃபரிஸ்தா
வாழ்க்கையின் குறிக்கோள் சமீபத்தில் அனுபவமாகும். அப்போது
புத்தி அலைவது நின்று போகும்.
சுலோகன்:
அன்பு என்பது அத்தகைய ஒரு காந்தமாகும் -- அது நிந்தனை
செய்பவைரையும் கூட அருகில் கொண்டு வந்து விடும்.
தனது சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுப்பதற்கான சேவை
செய்யுங்கள்
மனசா சேவைக்காக மனம், புத்தி, வீணானவற்றை யோசிப்பதிலிருந்து
விடுபட வேண்டும். மன்மனாபவ மந்திரத்தின் சகஜ சொரூபம் ஆக
வேண்டும். எந்த சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு சிரேஷ்ட மனம், அதாவது
சங்கல்பம் சக்திசாலியாக உள்ளதோ, சுப பாவனை, சுப விருப்பம்
உள்ளவராக இருக்கிறார்களோ, அவர்கள் மனதின் மூலம் சக்திகளை தானம்
செய்ய முடியும்.