15-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு தெய்வீக தர்மம் மற்றும் உயர்ந்த கர்மங்கள் குறித்து கற்றுத் தருகிறார், ஆகையால் உங்களால் எந்த அசுரத்தனமான கர்மமும் ஏற்படக் கூடாது, புத்தி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

கேள்வி:
தேக அபிமானத்தில் வருவதனால் முதலாவதாக எந்த பாவம் ஏற்படுகிறது?

பதில்:
தேக அபிமானம் இருந்தது என்றால் தந்தையின் நினைவிற்குப் பதிலாக தேகதாரியின் நினைவு வரும், திருஷ்டி கெட்ட நிலையில் போனபடி இருக்கும், கெட்ட சிந்தனைகள் வரும். இது மிகப் பெரிய பாவமாகும். மாயை போர் செய்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். உடன் எச்சரிக்கை அடைய வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆன்மீகத் தந்தை எங்கிருந்து வந்தார்? ஆன்மீக உலகிலிருந்து. அதனை நிர்வாண தாமம், சாந்தி தாமம் என்றும் சொல்கின்றோம். இது கீதையின் விˆயமாகும். இந்த ஞானம் எங்கிருந்து வந்தது என உங்களிடம் கேட்கின்றனர். இது அதே கீதையின் ஞானம்தான் என்று சொல்லுங்கள். கீதை யின் பாகம் நடந்து கொண்டிருக்கிறது மற்றும் தந்தை படிப்பித்துக் கொண்டிருக்கிறார். பகவானுடைய மகா வாக்கியம் அல்லவா! மேலும் பகவான் ஒருவர்தான் ஆவார். அவர் அமைதிக் கடல் ஆவார். இருப்பதும் கூட சாந்தி தாமம், அங்கேதான் நாமும் வசிக்கிறோம். இது பதிதமான உலகம், பாவாத்மாக்களின் தமோ பிரதானமான உலகம் என தந்தை புரிய வைக்கிறார். ஆத்மாக் களாகிய நாம் இந்த சமயத்தில் தமோபிரதானமாக இருக்கிறோம் என நீங்களும் அறிவீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தை அனுபவித்து விட்டு சதோ பிரதானத்திலிருந்து இப்போது தமோ பிரதானத்தில் வந்திருக்கிறோம். இது பழைய அல்லது கலியுக உலகமல்லவா! இந்த பெயர்களும் கூட இந்த சமயத்திற்கானதாகும். பழைய உலகத்திற்குப் பின், பிறகு புதிய உலகமாக ஆகிறது. பாரதவாசிகள் இதையும் அறிவார்கள் - உலகம் மாற வேண்டியிருந்த போது மகாபாரதச் சண்டை ஏற்பட்டது, அப்போதுதான் தந்தை வந்து இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தார். தவறு மட்டும் எதில் ஏற்பட்டது? ஒன்று கல்பத்தின் ஆயுளை மறந்து விட்டனர் மற்றது கீதையின் பகவானையும் மறந்து விட்டனர். கிருஷ்ணரை இறை தந்தை என்று சொல்ல முடியாது. ஆத்மா இறை தந்தையே என சொல்கிறது, ஆக அவர் நிராகாரராகி விட்டார். என்னை நினைவு செய்யுங் கள் என்று நிராகார தந்தை ஆத்மாக்களுக்கு சொல்கிறார். நானே பதீத பாவனர், என்னை ஓ பதீத பாவனா என்று அழைக்கவும் செய்கின்றனர். கிருஷ்ணரோ தேகதாரி அல்லவா! எனக்கு சரீரம் எதுவும் கிடையாது. நான் நிராகாரி, மனிதர்களின் தந்தை அல்ல, ஆத்மாக்களின் தந்தை ஆவேன். இதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் அடிக்கடி இந்த தந்தையிட மிருந்து ஆஸ்தியை எடுக்கிறோம். இப்போது 84 பிறவிகள் முடிந்தது, தந்தை வந்திருக்கிறார். பாபா பாபா என்றபடியே இருக்க வேண்டும். பாபாவை மிகவும் நினைவு செய்ய வேண்டும். முழு கல்பமும் ஸ்தூல தந்தையை நினைவு செய்தீர்கள். இப்போது தந்தை வந்துள்ளார், மேலும் மனித சிருஷ்டியிலிருந்து அனைத்து ஆத்மாக்களையும் திரும்ப அழைத்துச் செல்கிறார், ஏனென்றால் இராவண இராஜ்யத்தில் மனிதர்களுக்கு துர்க்கதி ஏற்பட்டுள்ளது, ஆகையால் இப்போது தந்தையை நினைவு செய்ய வேண்டும். இப்போது இராவண இராஜ்யமாக உள்ளது என்பதும் கூட மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. இராவணனின் அர்த்தத்தையே புரிந்து கொள்வதில்லை. தசரா கொண்டாடும் ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது, அவ்வளவு தான். நீங்கள் அர்த்தம் எதுவும் புரிந்து கொண்டிருக்கவில்லை. இப்போது பிறருக்கு அறிவு (ஞானம்) கொடுப்பதற்கான அறிவு கிடைத் துள்ளது. ஒரு வேளை பிறருக்குப் புரிய வைக்க முடியாது என்றால் தானே எதுவும் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். தந்தைக்குள் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் உள்ளது. நாம் அவரது குழந்தைகள் எனும்போது குழந்தைகளுக்குள்ளும் இந்த ஞானம் இருக்க வேண்டும்.

இது உங்களுடைய கீதா படசாலையாகும். என்ன இலட்சியம்? இந்த இலட்சுமி நாராயணராக ஆக வேண்டும். இது இராஜயோகம் அல்லவா! நரனிலிருந்து நாராயணன், நாரியிலிருந்து இலட்சுமி ஆவதற் கான ஞானம் இது. அந்த மனிதர்கள் அமர்ந்து கதைகளைச் சொல்கின்றனர். இங்கே நாம் படிக்கிறோம், நமக்கு தந்தை இராஜயோகம் கற்றுக் கொடுக்கிறார். இதைக் கற்றுக் கொடுப்பதே கல்பத்தின் சங்கம யுகத்தில்தான். நான் பழைய உலகை மாற்றி புதிய உலகை உருவாக்க வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். புதிய உலகில் இவர்களின் இராஜ்யம் இருந்தது, பழைய உலகில் இல்லை, மீண்டும் ஏற்பட வேண்டும். சக்கரத்தைத் தெரிந்து கொண்டீர் கள். நான்கு தர்மங்கள் முக்கியமானவை. இப்போது தேவதா குலம் இல்லை. தெய்வீக தர்மம் கெட்டு, தெய்வீக கர்மம் கெட்டு விட்டன. இப்போது மீண்டும் உங்களுக்கு தெய்வீகமான உயர்ந்த தர்மத்தையும், உயர்ந்த கர்மத்தையும் கற்றுத் தருகிறார். ஆக தன் மீது கவனம் வைக்க வேண்டும் - என்னால் எந்த அசுரத் தனமான கர்மமும் ஏற்படுவதில்லைதானே? மாயாவினால் எந்த கெட்ட சிந்தனையும் புத்தியில் வருவதில்லைதானே? கெட்ட பார்வை இருப்பதில்லைதானே? பார்க்க வேண்டும் - இவருடைய பார்வை கெட்டதாகியுள்ளதா அல்லது கெட்ட சிந்தனைகள் வரு கின்றனவா? அப்போது இவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து கொண்டு விடக் கூடாது. அவர்களை எச்சரிக்க வேண்டும் - உங்களுக்கு மாயையின் பிரவேசத்தின் காரணமாக இந்த கெட்ட சிந்தனைகள் வருகின்றன. நினைவில் அமரும்போது தந்தையின் நினைவுக்குப் பதிலாக எந்த தேகத்தின் மேலாவது சிந்தனை செல்கிறது என்றால் மாயையின் சண்டை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம், நான் பாவம் செய்து கொண்டிருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதில் புத்தி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். நகைச்சுவையில் (கேலி செய்தல்) ஈடுபட்டாலும் கூட நிறைய நஷ்டம் எற்பட்டு விடும். ஆகையால் உங்களின் வாயிலிருந்து எப்போதும் சுத்தமான பேச்சு வெளிப்பட வேண்டும், கெட்ட பேச்சுக்கள் அல்ல. நகைச்சுவை முதலானதும் கூட அல்ல. நான் நகைச்சுவைக்காக (கே-யாக) சொன்னேன் என்பதல்ல அது கூட நஷ்டத்தை ஏற்படுத்துவதாக ஆகிவிடும். நகைச்சுவையில் கூட விகாரத்தின் வாசம் இருக்கக் கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும் நிர்வாண மனிதர்கள் இருக்கின்றனர், அவர்களின் சிந்தனை விகாரங்களின் பக்கம் செல்வதில்லை. தனியாகத் தான் இருக்கின்றனர். ஆனால் கர்மேந்திரியங்களில் யோகம் செய்யும் நேரத்தைத் தவிர வேறு எப்போதும் அசைவுகள் ஏற்படுவதில்லை. காமம் என்ற எதிரி அப்படிப்பட்டதாக இருக்கிறது - யாரைப் பார்த்தாலும் யோகத்தில் (நினைவில்) முழுமையாக இருக்கவில்லை என்றால் கண்டிப்பாக சலனம் ஏற்படும். தன்னைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தந்தையின் நினைவிலேயே இருந்தீர்கள் என்றால் இது போன்ற எந்த விதமான நோயும் இருக்காது யோகத்தில் இருப்பதன் மூலம் இது எதுவும் இருக்காது. சத்யுகத்தில் எந்த விதமான அழுக்கும் இருக்காது. அங்கே சலனத்தை ஏற்படுத்தும் இராவணனின் சஞ்சலமே இருக்காது. அங்கே யோகியின் வாழ்க்கை இருக்கும். இங்கும் கூட நிலை மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். யோக பலத்தின் மூலம் இந்த அனைத்து வியாதிகளும் நீங்கி விடும். இதில் மிகவும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இராஜ்யத்தை எடுப்பது என்பது ஏதோ சித்தி வீடு போல அல்ல. முயற்சி செய்ய வேண்டுமல்லவா! பாக்கியத்தில் உள்ளது கிடைக்கும் என்பது போல் அல்ல. தாரணையே ஏற்படவில்லை என்றால் சில்லறை பதவி பெறத் தக்கவர் என்று அர்த்தம். பாடங்கள் நிறைய இருக்கும் அல்லவா. சிலர் ஓவியத்தில், சிலர் விளையாட்டில் மதிப்பெண்கள் எடுத்து விடு கின்றனர். அவை பொதுவான பாடங்கள். அதே போல இங்கும் பாடங்கள் உள்ளன. ஏதாவது கொஞ்சம் கிடைக்கும். மற்றபடி இராஜ்யம் கிடைக்க முடியாது. சேவை செய்தால் அப்போது இராஜ்யம் கிடைக்கும். அதற்காக மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது.. பலருடைய புத்தியில் பதிவதே இல்லை - உணவு செரிமானமே ஆகாதது போல. உயர் பதவி அடைவதற்கான தைரியம் இல்லை, இதைக் கூட வியாதி என்று சொல்லலாம் அல்லவா! நீங்கள் எந்த விˆயத்தைப் பார்த்தாலும் பார்க்காதவராக இருங்கள். ஆன்மீகத் தந்தையின் நினைவில் இருந்து பிறருக்கு வழி காட்ட வேண்டும். குருடருக்கு கைத்தடி ஆக வேண்டும். நீங்கள் வழியை அறிந்துள்ளீர்கள். படைப் பவர் மற்றும் படைப்பின் ஞானம், முக்தி மற்றும் ஜீவன்முக்தி உங்களுடைய புத்தியில் சுற்றியபடி இருக்கின்றன. குழந்தைகளின் நிலையிலும் கூட இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. ஓரிடத்தில் மிகவும் செல்வந்தராக, சில இடங்களில் முற்றிலும் ஏழைகளாக ஆகின்றனர். இராஜ்ய பதவியில் வித்தியாசம் உள்ளதல்லவா! மற்றபடி, ஆம், அங்கே இராவணன் இருக்காத காரணத்தால் துக்கம் இருக்காது. மற்றபடி செல்வச் செழிப்பில் வித்தியாசம் உள்ளது. செல்வத்தில் சுகம் இருக்கும்.

எந்த அளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முயற்சி செய்ய வேண்டும். பலருடைய நடத்தை அஞ்ஞானி மனிதர்களுடையது போல இருக்கிறது. அவர்கள் யாருக்கும் நன்மை செய்ய முடியாது. இறுதி பரீட்சை நடக்கும்போது யார் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைவார்கள் என்பது தெரிந்து விடும். பிறகு அந்த சமயத்தில் ஐயோ ஐயோ என அலற வேண்டியிருக்கும். பாப்தாதா இருவருமே எவ்வளவு புரிய வைத்தபடி இருக்கின்றனர்! தந்தை வந்ததே நன்மை செய்வதற்காக. தனது நன்மையும் செய்து கொள்ள வேண்டும், பிறருடைய நன்மையும் செய்ய வேண்டும். வந்து தூய்மையற்ற எங்களுக்கு தூய்மை யாகும் வழி காட்டுங்கள் என்று தந்தையை அழைக்கவும் செய்தீர்கள். ஆக தந்தை ஸ்ரீமத் கொடுக்கிறார் - நீங்கள் தன்னை ஆத்மா எனப் புரிந்து கொண்டு தேக அபிமானத்தை விட்டு என்னை நினைவு செய்யுங்கள். எவ்வளவு சகஜமான மருந்தாக உள்ளது! நாங்கள் ஒரு சிவ பாபாவை மட்டும் ஏற்கிறோம் என்று சொல்லுங்கள். வந்து எங்களை தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக்குங்கள் என என்னை அழைக்கிறீர்கள் எனும்போது நான் வர வேண்டியுள்ளது என அவர் சொல்கிறார். பிரம்மாவிடமிருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது. அவர் மூத்த அண்ணாராக (தாதாவாக) இருக்கிறார், தந்தை கூட அல்ல. தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக் கிறது. பிரம்மாவிட மிருந்து ஆஸ்தி கிடைக்காது. நிராகார தந்தை இவர் மூலமாக தத்தெடுத்துக் கொண்டு ஆத்மாக்களாகிய நம்மை படிப்பிக்கிறார். இவரைக் கூட படிப்பிக்கிறார். பிரம்மாவிட மிருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆஸ்தி இவர் மூலமாக தந்தையிடமிருந்து கிடைக் கிறது. கொடுக்கக் கூடியவர் ஒருவர். மகிமை அவருடையதே ஆகும். அவர்தான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். இவர் (பிரம்மா) பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரி ஆகிறார். சத்யுகத்தில் இருந்தார், பிறகு 84 பிறவிகள் அனுபவித்து இப்போது தூய்மையற்றவராகி இருக்கிறார், மீண்டும் பூஜைக்குரிய தூய்மையானவர் ஆகிக் கொண்டிருக்கிறார். நாம் தந்தையிட மிருந்து கேட்கிறோம். எந்த மனிதரிடமிருந்தும் கேட்கவில்லை. மனிதர்களுடையது பக்தி மார்க்க மாகத்தான் உள்ளது. இது ஆன்மீக ஞான மார்க்கம். ஞானம் ஒரு ஞானக்கடலிடம் மட்டுமே உள்ளது. ஞான நதிகளாகிய நாம் ஞானக் கடலிலிருந்து வெளிப்படுகிறோம். மற்றபடி அவை யெல்லாம் நீராலான கடல் மற்றும் நதிகள் ஆகும். குழந்தைகளுக்கு இவையனைத்து விசயங்களும் கவனத்தில் இருக்க வேண்டும். உள் நோக்கு முகமாகி புத்தியை செலுத்த வேண்டும். தன்னைத் தான் முன்னேற்றிக் கொள்வதற்காக உள் நோக்கு முகமாகி தன்னை சோதிக்க வேண்டும். ஒருவேளை வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் வெளிப்பட்டால், கெட்ட பார்வை செல்கிறது என்றால் தன்னை கடிந்து கொள்ள வேண்டும் - என் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் ஏன் வந்தன, என்னுடைய திருஷ்டி ஏன் கெட்டுப் போனது? தன்னைத் தான் அடித்துக் கொள்ளவும் வேண்டும். அடிக்கடி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உயர் பதவி அடைய முடியும். வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது. தந்தை அனைத்து விதமான அறிவுரைகளும் கொடுக்க வேண்டியுள்ளது. யாரையாவது பைத்தியம் என்று சொல்வதும் கூட கெட்ட வார்த்தையே ஆகும்.

மனிதர்கள் யாரைப்பற்றி என்ன தோன்றுகிறதோ அதை சொல்லியபடி இருக்கின்றனர். நாம் யாருடைய மகிமையைப் பாடுகிறோம் என்பதும் தெரிவதில்லை. ஒரே பதீத பாவன தந்தையை மகிமை செய்ய வேண்டும். வேறு யாருமில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட பதீத பாவனர் என சொல்லப் படுவதில்லை. இவர்கள் யாரையும் தூய்மையாக்குவதில்லை. பதீதரிலிருந்து பாவனமாக்குபவர் ஒரு தந்தைதான் ஆவார். தூய்மையான சிருஷ்டி தான் புதிய உலகமாகும். அது இப்போது இல்லை. சொர்க்கத்தில்தான் தூய்மை இருக்கும். தூய்மைக் கடலாகவும் இருக்கும். இதுவோ இராவண இராஜ்யமாகும். குழந்தைகள் இப்போது ஆத்ம அபிமானி ஆவதற்காக மிகவும் முயற்சி செய்ய வேண்டும். வாயிலிருந்து எந்த கற்களும் அதாவது கடுமையான வார்த்தைகளும் வெளி வரக்கூடாது. மிகவும் அன்புடன் நடக்க வேண்டும். கெட்ட திருஷ்டியும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். பெரு முயற்சி தேவை. ஆத்ம அபிமானம் அழிவற்ற அபிமானமாகும். தேகம் அழியக்கூடியது. ஆத்மாவைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆத்மாவுக்கும் தந்தை என ஒருவர் இருப்பார் அல்லவா! அனைவரும் சகோதர-சகோதரர் என சொல்லவும் செய்கின்றனர். பிறகு அனைவருக்குள்ளும் பரமாத்மா தந்தை எப்படி அமர்ந்திருக்க முடியும்? அனைவரும் எப்படி தந்தை ஆக முடியும்? இவ்வளவு கூட புத்தி இல்லையா? அனைவரின் தந்தை ஒரே ஒருவர்தான், அவரிடமிருந்துதான் ஆஸ்தி கிடைக்க முடியும். அவருடைய பெயர் சிவன். சிவராத்திரியும் கூட கொண்டாடுகின்றனர். ருத்ர இராத்திரி அல்லது கிருஷ்ண இராத்திரி என்று சொல்வதில்லை. மனிதர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. இவையனைத்தும் அவருடைய ரூபமாகும், அவருடைய லீலையாகும் என்று சொல்வார்கள்.

எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது எனும்போது அந்த தந்தையின் சிரேஷ்ட வழிப்படி நடக்க வேண்டும் என இப்போது நீங்கள் புரிந்து கொண்டி ருக்கிறீர்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். தொழிலாளர்களுக்கும் கூட கற்பிக்க வேண்டும், அப்போது அவர்களின் நன்மையும் ஏற்படும். ஆனால் தானே நினைவு செய்ய முடிவதில்லை எனும்போது மற்றவர்களுக்கு என்ன நினைவு செய்விக்க முடியும். இராவணன் ஒரேயடியாக பதீதராக ஆக்கிவிடுகிறார், தந்தை வந்து பரிஸ்தானத்தை (சொர்க்கத்தை) சேர்ந்தவர்களாக ஆக்குகிறார். அதிசயம் அல்லவா! யாருடைய புத்தியிலும் இந்த விˆயங்கள் இல்லை. இந்த இலட்சுமி நாராயணர் எவ்வளவு உயர்ந்த பரிஸ்தானத்திலிருந்து பிறகு எவ்வளவு பதிதராகி விடுகின்றனர்! ஆகையால் பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு பாடப்பட்டுள்ளது. சிவன் கோவிலில் நீங்கள் நிறைய சேவை செய்ய முடியும். என்னை நீங்கள் நினைவு செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். வாசல் தோறும் அலைவதை விட்டு விடுங்கள். இந்த ஞானமே அமைதியின் ஞானமாகும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதானம் ஆகி விடுவீர்கள். இந்த மந்திரத்தை மட்டுமே கொடுத்தபடி இருங்கள். பக்குவப்படும் வரை யாரிட மிருந்தும் பணம் வாங்கக் கூடாது. நாங்கள் தூய்மையாக இருப்போம் என்று உறுதிமொழி கொடுங்கள், அப்போது நாங்கள் உங்கள் கையால் சமைத்ததை சாப்பிட முடியும், எதையும் வாங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லுங்கள். பாரதத்தில் கோவில்கள் ஏராளமாக உள்ளன. வெளி நாட்டவர்கள் முதலானவர்கள் யார் வந்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற செய்தியை அவர்களுக்குக் கூறுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. விகாரங்களின் வாடை வீசக்கூடிய நகைச்சுவையில் ஈடுபடக்கூடாது. தன்னை மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்க வேண்டும். வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் வெளிப்படக் கூடாது.

2. ஆத்ம அபிமானி ஆவதற்காக அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும். அனைவருடனும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். கெட்ட திருஷ்டி வைக்கக் கூடாது. கெட்ட திருஷ்டி செல்கிறது என்றால் தனக்குத் தானே தண்டனை கொடுக்க வேண்டும்.

வரதானம்:
நிரந்தர நினைவு மற்றும் சேவையினுடைய சமநிலையின் மூலம் குழந்தைப்பருவ குறும்புத்தனத்தை முடிவடையச் செய்யக்கூடிய வானப்பிரஸ்தி ஆகுக.

சின்னச்சின்ன விசயங்களில் சங்கமயுகத்தின் விலைமதிப்பற்ற நேரத்தை குழந்தைப்பருவ குறும்புத்தனத்தால் இழக்கக்கூடாது. இப்பொழுது இந்த குறும்புத்தனம் அழகல்ல. தந்தையின் நினைவு மற்றும் சேவை என்ற இந்த ஒரே ஒரு காரியம் மட்டும் வானப்பிரஸ்த நிலையில் இருக்கின்றது. இதைத் தவிர வேறு எதனுடைய நினைவும் வரக்கூடாது, எழுந்திருக்கும்பொழுது கூட நினைவு மற்றும் சேவை, தூங்கும்பொழுதும் கூட நினைவு மற்றும் சேவை - நிரந்தரமாக இந்த சமநிலை இருக்கவேண்டும். திரிகாலதரிசி ஆகி குழந்தைப்பருவத்தின் விசயங்கள் மற்றும் குழந்தைப்பருவ சமஸ்காரங்களுடைய முடிவு விழா கொண்டாடுங்கள், அப்பொழுதே வானப்பிரஸ்தி என்று கூறமுடியும்.

சுலோகன்:
சர்வ பிராப்திகளில் சம்பன்னமான ஆத்மாவின் அடையாளம் திருப்தி ஆகும், திருப்தியாக இருங்கள் மற்றும் திருப்திப்படுத்துங்கள்.

அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்

ஏகாந்தம் - ஒன்று ஸ்தூலமாக இருக்கின்றது, மற்றொன்று சூட்சுமமாகவும் இருக்கின்றது. ஏகாந்தத்தினுடைய ஆனந்தத்தின் அனுபவி ஆனீர்கள் என்றால் வெளிநோக்குமுகம் பிடிக்காது. அவ்யக்த ஸ்திதியை அதிகரிப்பதற்காக ஏகாந்தத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ஒற்றுமை யின் (ஏக்தா) கூடவே ஏகாந்தப்பிரியர் ஆகவேண்டும்.