15.02.26    காலை முரளி            ஓம் சாந்தி 22.02.2009      பாப்தாதா,   மதுபன்


பிறந்த நாளன்று வேகமாகச் சென்று முதல் டிவிசனில் வரக் கூடிய பரிசு பெறுவதற்கு ஒவ்வொரு சுவாசம், சங்கல்பம் சக்திசாலியாக இருக்க வேண்டும். உள்ளம் பரந்ததாக மற்றும் உண்மையாக இருந்தது எனில் ஒவ்வொரு தேவையும் பூர்த்தியாகும்.

இன்று ஜீரோவாகிய தந்தை தனது ஹீரோ குழந்தைகளை சந்திப்பதற்கு வந்திருக்கின்றார். இன்றைய நாள் நீங்கள் அனைவரும் தந்தை மற்றும் தந்தையின் கூடவே தனது பிறந்த நாளும் கொண்டாடுவதற்கு வந்திருக்கிறீர்கள். ஆக பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும், எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கும், தூரத்தில் அமர்ந்திருந்தாலும் உள்ளத்தில் நெருக்கத்தில் அமர்ந்திருக் கும் நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு சர்வ சம்பந்தங்களினால் வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அதிலும் விசேஷமாக மூன்று வாழ்த்துக்கள் தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குருவின் ரூபத்தில் மூன்று வாழ்த்துக்கள் பாலனை, படிப்பு மற்றும் வரதானங்களை நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு விசேஷமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அனைத்து குழந்தை களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

இன்று இந்த விசேஷ பிறப்பை பக்தர்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் - இந்த பிறந்த நாள் தந்தை மற்றும் குழந்தைகளின் அழிவற்ற அன்பின் பிறந்த நாளாகும். ஆரம்பத்திலிருந்து தந்தை மற்றும் குழந்தைகள் கூடவே இருக்கின்றனர், உலக மாற்றத் திற்கான காரியத்திலும் தந்தை குழந்தைகளுடன் இருக்கின்றார். ஏனெனில் தந்தைக்கு குழந்தை களின் மீது மிக அதிக அன்பு இருக்கிறது. இப்பொழுதும் கூடவே இருக்கின்றார், தனது வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றாலும் கூடவே செல்ல வேண்டும். குழந்தைகளின்றி தந்தை செல்ல முடியாது மற்றும் குழந்தைகள் தந்தையின்றி செல்ல முடியாது. ஏனெனில் உள்ளப்பூர்வமான அன்பு கூடவே இருக்கிறது. வீட்டிற்கு சென்ற பிறகு இராஜ்யத்திற்கு வரும் பொழுதும் பிரம்மா பாபாவின் கூடவே இராஜ்யம் செய்வீர்கள். ஆக அனைத்து பிறவிகளிலும் இந்த பிறவிக்கான அன்பு தனிப்பட்டதாகும். இந்த பிறவிக்கான மகத்துவம் முழு கல்பத்திலும் 84 பிறவிகளிலும் கிடையாது. இவ்வாறு அன்பானவர் மற்றும் கூடவே இருக்கக் கூடிய விசே‘மாக வைரத்திற்குச் சமமான பிறப் பாகும். ஆக நீங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர் களா அல்லது தந்தையின் பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர்களா? அல்லது தந்தை குழந்தை களின் பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கின்றார், குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர்களா? நாலாப் புறங்களிலும் உள்ள பக்தர்களும் சிவஜெயந்தி அல்லது சிவராத்திரி கொண்டாடுகின்றனர். மிக அன்பான கொண்டாடுகின்றனர். பாப்தாதா பக்தர் களைப் பார்த்து பக்தர்களுக்கும் பக்தியின் பலன் கொடுக்கின்றார். ஆனால் நீங்கள் கொண்டாடு வதிலும், பக்தர்கள் கொண்டாடுவதில் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் இரவில் கொண்டாடு கின்றனர், நீங்கள் அமிர்தவேளையில் கொண்டாடுகிறீர்கள். அமிர்தவேளை சிரேஷ்ட நேரமாகும். அமிர்தவேளையில் தான் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் புத்தி என்ற பையில் வரதானங் களினால் நிறைந்து விடுகின்றார். அனைவரின் பையும் வரதானங்களினால் நிறைந்திருக்கிறது அல்லவா! தினமும் வரதாதா தந்தையிடமிருந்து வரதானங்கள் கிடைக்கவே செய்கிறது. குழந்தை களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை வரதானங்கள் பாப்தாதாவின் மூலம் கிடைத்திருக்கிறது! அந்த வரதானங்களினால் பை நிறைந்திருக்கிறது அல்லவா! ஆக அனைவரும் மிகுந்த ஆர்வம்-உற்சாகத்துடன் வந்து சேர்ந்து விட்டீர்கள். பாப்தாதாவும் குழந்தைகளைப் பார்த்து மிகுந்த குஷி அடைந்து கொண்டிருக்கின்றார் மற்றும் ஆஹா குழந்தைகளே ஆஹா என்று பாடல் பாடிக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் கூறுகிறீர்கள் ஆஹா பாபா ஆஹா. தந்தை கூறுகின்றார் ஆஹா குழந்தைகளே ஆஹா! ஏனெனில் யாரெல்லாம் தந்தையின் குழந்தைகளாக ஆகியிருக் கிறீர்களோ, அவர்கள் அனைவரும் கோடியில் சில ஆத்மாக்கள் ஆவர். உலகில் எத்தனை கோடி ஆத்மாக்கள் இருக்கின்றனர்! ஆனால் அதில் குழந்தைகளாகிய நீங்கள், உங்களைத் தான் அதிஷ்டசாலி மற்றும் அன்பான குழந்தைகள் என்று தந்தை கூறுகின்றார், கோடியிலும் சில குழந்தைகளாக நீங்கள் இருக்கிறீர்கள். நான் தான் கல்ப கல்பத்திற்கும் கோடியில் ஒரு சில குழந்தையாக இருக்கிறேன் என்ற போதை இருக்கிறதா! நிகழ்காலத்தில் எவ்வளவு உயர்ந்த பதவி உடைய ஆத்மாக்கள் இருக்கலாம், ஆனால் தந்தையின் புரிந்து கொண்டு தந்தையின் பிறந்த நாள் கொண்டாடக் கூடிய குழந்தைகள் கோடியிலும் சில குழந்தைகள் தான். ஆக நான் கோடியில் சில ஆத்மா என்ற குஷி இருக்கிறதா? போதை இருக்கிறதா? கை உயர்த்துங்கள். அழிவற்ற போதை அல்லவா! அவ்வபொழுது கிடையாது தானே? சதா இருக்கிறது மற்றும் சதா இருக்கும். மாயை சோதனை செய்யும், அனுபவம் இருக்கிறது தானே! மாயாவிற்கும் பரமாத்ம குழந்தைகளின் மீது அதிக அன்பு இருக்கிறது. குழந்தைகள் அறிவீர்கள் - மாயாவிற்கு பரமாத்ம குழந்தைகளிடம் ஆரம்பத்திலிருந்து இன்று வரை சம்பந்தம் இருக்கிறது. மாயா மற்றும் பரமாத்ம குழந்தைகள் இருவருக்கும் தங்களுக்குள் தொடர்பு இருக்கிறது. ஆனால் மாயாவிற் காரியம் வருவது மற்றும் குழந்தைகளாகிய உங்களது காரியம் என்ன? மாயாவை தூரத்திலேயே விரட்டி விடுவதாகும். வர விடக் கூடாது, அல்லது வர அனுமதித்து விடுகிறீர்களா? இல்லை. தூரத்திலேயே விரட்டி விட வேண்டும். வருவதற்கு அனுமதி கொடுத்து விட்டால் பிறகு அதற்கு பழக்கமாகி விடும். அதுவும் புரிந்து கொள்கிறது - வருவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் அல்லவா, செல்லலாம். ஆனால் தந்தை பார்க்கின்றார் - சில குழந்தைகள் மாயாவை வருவதற்கு அனுமதி கொடுத்து விடுகின்றனர், கவனிக்கவும் செய்கின்றனர், தண்ணீர், டீ பருகக் கொடுக்கின்றனர். என்ன கவனிப்பு செய்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? மாயாவின் பாதிப்பில் வந்து இதைத் தான் யோசிக்கிறீர்கள் - இப்பொழுது மிகவும் தாமதம் என்ற பலகை வைக்கப்படவில்லை. இப்பொழுது நேரம் இருக்கிறது. முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், சென்றடைந்து விடுவோம். ஆக மாயாவும் புரிந்து கொள்கிறது - ஒன்று வருவதற்கு அனுமதி கொடுக்கின்றனர், இரண்டாவது இவர் எனக்கு துணை கொடுத்துக் கொண்டிருக்கிறார், கவனித்துக் கொண்டிருக்கிறார். சில குழந்தைகள் மாயாவை கண்டறிந்து விடுகின்றனர். ஆனால் சில குழந்தைகள் கண்டறி வதிலும் தவறு செய்து விடுகின்றனர். மாயாவின் வழியா அல்லது தந்தையின் வழியா என்பதை கண்டறியாத காரணத்தினால் மாயா வின் பாதிப்பில் வந்து விடுகின்றனர். ஆனால் பாப்தாதா தனது அதிஷ்டசாலி, மகாவீர், வெற்றி குழந்தைகளுக்கு கூறுகின்றார் - வருவதற்கு அனுமதி கொடுக்காதீர்கள். வருகிறது பிறகு விரட்டுகிறீர்கள், இதில் நேரம் ஈடுபடுத்தாதீர்கள். ஏனெனில் நேரம் குறைவாக இருக்கிறது. உங்களுடைய உறுதிமொழி, உலகை மாற்றுபவராகி, உலக சேவாதாரி ஆகி உலக ஆத்மாக்களுக்கு தந்தையின் அறிமுகம் கொடுத்து முக்திக்கான ஆஸ்தி ஏற்படுத்துவேன். அந்த காரியம் இப்பொழுது முடிவடையவில்லை. அந்த காரியம் முடிப்பதற்கு நேரம் ஈடுபடுத்துங்கள். ஒரு வேளை மாயாவை விரட்டுவதற்கு நேரம் பயன்படுத்தினால் உலகை மாற்றுபவர் என்ற உறுதி மொழியை எப்போது நிறைவேற்றுவீர்கள்? தந்தைக்கு துணையாக இருக்கிறீர்கள் அல்லவா! பிறந்த வுடனேயே உறுதிமொழி செய்திருக்கிறீர்கள். இப்பொழுதும் துணையாக இருப்பேன், துணையாக செல்வேன் ஆகையால் இப்பொழுது தந்தையிடமிருந்து என்ன சக்திகள் கிடைக்கிறதோ, அந்த சக்திகளின் ஆதாரத்தில் மாயாவை தூரத்திலேயே விரட்டி விடுங்கள். இதில் நேரம் ஈடுபடுத்தாதீர்கள். பாருங்கள், 90 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், இப்பொழுது மாயா வருகிறது மற்றும் விரட்டுகிறீர்கள், இப்பொழுது இதற்கு நேரம் கிடையாது. ஏனெனில் அறிந்திருக்கிறீர்கள், ஞானம் நிறைந்தவர்கள் தானே! முழு நாடகத்தின் ஞானம் இருக்கிறது. ஆகையால் ஞானம் நிறைந்த குழந்தைகள் இப்பொழுது எதில் நேரம் ஈடுபடுத்த வேண்டும்? இரண்டு பொக்கிஷங்களை அதிகம் சேமிக்க வேண்டும். எந்த இரண்டு பொக்கிஷங்கள்? ஒன்று சங்கல்பம், இரண்டாவது நேரம். இரண்டு பொக்கிஷங்களும் உயர்ந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஏனெனில் ஞானம் நிறைந்த தந்தையின் ஞானம் நிறைந்த குழந்தை களாக இருக்கிறீர்கள். மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் அல்லவா! நிறைந்தவர்கள், காளைகள் அல்ல. சிலர் ஞானத்தின் காளைகளாக இருக்கின்றனர், ஞானம் நிறைந்தவர்களாக ஆகவில்லை. நீங்கள் யார்? ஞானம் நிறைந்தவர்களா? கை உயர்த்துங்கள். ஞானம் நிறைந்தவர்களா அல்லது ஞானக்காளைகளா? அனைவரும் ஞானம் நிறைந்தவர்களா? கை உயர்த்தினீர்கள், நல்லது. ஆஹா நிறைந்த ஞானம் வந்து விட்டது. மாயாவை விரட்டும் ஞானம் இருக்கிறதா? பின்னால் அமர்ந்திருப் பவர்களிடம் இருக்கிறதா? நல்லது. கொடி அசைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். தாய்மார்கள் இருக்கிறீர்களா? தாய்மார்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்களா? இரட்டை அயல் நாட்டினர்! இரட்டை அயல்நாட்டினரும் கொடி அசைத்துக் கொண்டிருக் கின்றனர். நல்லது. பாருங்கள் எவ்வளவு நல்ல காட்சியாக இருக்கிறது! கொடி பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது! ஆக ஞானம் நிறைந்தவர் என்றால் மாயாவை தூரத்திலேயே விரட்டக் கூடியவர்கள். இவ்வாறு இருக்கிறீர்களா? ஏனெனில் பாப்தாதா முன்பே கூறிவிட்டார் - பொக்கி‘ங்களை சேமிப்பதற்கான வங்கி இந்த நேரம் சங்கமயுகத்தில் மட்டுமே இருக்கிறது. பிறகு முழு கல்பத் திலும் சேமிக்கும் வங்கி இருக்காது. இப்பொழுது என்ன சேமித்தீர்களோ அது காரியத்தில் பயன்படும். சேமிக்கும் வங்கி இப்பொழுது சங்கமயுகத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது, ஆகையால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்! அனைவருக்கும் செய்தி கொடுக்கும் போது இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை! உங்கள் அனைவருக்கும் நினைவு இருக்கிறது தானே! இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை. இது சதா நினைவில் இருக்கிறதா? ஏனெனில் சங்கமயுக பிறப்பு அனைத்தை யும் விட மிகச் சிறியது. ஆனால் விலைமதிக்க முடியாத பிறப்பு. இந்த பிறப்பின் மகத்துவம் (வருமானம்) முழு கல்பத்திலும் நடைபெறுகிறது. எனவே சோதனை செய்து கொண்டே இருங்கள் - நான் இந்த பிறவியில் எவ்வளவு சேமித்திருக்கிறேன்? எவ்வளவு விரும்பு கிறீர்களோ அவ்வளவு சேமிப்பு ஆகிறதா? ஏனெனில் பாப்தாதா முன்பே கூறிவிட்டார் - இப்பொழுது நடப்பதற்கான நேரம் முடிவடைந்து விட்டது. பறப்பதற்கான நேரமாகும். முயற்சிக்கான நேரம் முடிந்து விட்டது, ஆனால் இப்பொழுது தீவிர முயற்சிக்கான நேரமாகும், அதுவும் குறைவாக இருக்கிறது. ஆகையால் இரட்டை அயல்நாட்டினருக்கு பட்டம் கொடுத்திருக்கின்றார் - இரட்டை தீவிர முயற்சியாளர்கள். கூறுங்கள், இரட்டை தீவிர முயற்சியாளர்களாக இருக்கிறீர்களா? கை உயர்த்துங் கள். இரட்டை தீவிர முயற்சியாளர்கள். உறுதியாகத் தானே! நல்லது. பாப்தாதா பிறந்த நாள் பாராட்டின் கூடவே வாழ்த்துக்களும் கொடுக்கின்றார். பல கோடி மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

பாப்தாதா என்ன வீட்டுப்பாடம் கொடுத்திருந்தாரோ - ஓ.கே. என்பதை பார்த்தார். சில குழந்தைகள் அதிகல் கவனம் செலுத்தி இருக்கின்றனர். ஆனால் 100 மதிப்பெண்கள் மிகச் சிலரே அடைந்திருக் கின்றனர். 50 சதவிகிதம் உடையவர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனால் பாப்தாதா விரும்புவது இது தான், என்னவென்று கூறவா? ஒவ்வொரு ஆசை தீபம், ஆசைகளை நிறைவேற்றக் கூடிய மகாவீர் குழந்தைகளிடம் தந்தையின் விருப்பம் இது தான் - நேரத்தின் அநுசாரமாக இப்பொழுதிலிருந்தே தீவிர முயற்சிக்கான சார்ட் சேமிக்கவில்லை யெனில் பிறகு எப்பொழுது செய்வீர்கள்? பாப்தாதா மூன்று வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றார் - ஒன்று எதிர்பாராமல் திடீரென்று நடக்கும், இரண்டாவது எவரெடி மற்றும் மூன்றாவது நீண்ட கால சேமிப்பு. ஏனெனில் பாப்தாதா விரும்புவது என்னவெனில் குழந்தைகள் தங்களது இராஜ்யத்தில் முதல் பிறவியிலிருந்து 21 பிறவி கடைசி பிறவி வரை முழு இராஜ்ய பாக்கியத்திற்கு அதிகாரி ஆக வேண்டும். இப்பொழுது இந்த குஷி இருக்கிறது அல்லவா - தனது இராஜ்யம் வந்தே விட்டது. தந்தை வந்து விட்டார் என்ற செய்தி கொடுப்பது போன்று தங்களது தெய்வீக இராஜ்யம், சுகம், சாந்தி நிறைந்த இராஜ்யம் வந்தே விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியும் கூறுகிறீர்கள். அனைவருக்கும் இந்த செய்தி கொடுக்கிறீர்கள் எனில் தனது முயற்சியும் தீவிரமாக, நீண்ட காலத்திற்கு சேமிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த கணக்கு நீண்ட காலம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புது வீட்டில் தான் மகிழ்ச்சி இருக்கும். ஒருவேளை இரண்டு, மூன்று பிறவிகளுக்குப் பிறகு வந்தீர்கள் எனில் இரண்டு மூன்று மாத கட்டிடமாக ஆகிவிடும். அதை என்னவென்று கூறுவது! புதியதா அல்லது 3 மாதம் ஆகிவிட்டதா? எனவே பாப்தாதா விரும்புவது என்னவெனில் ஒவ்வொரு வரும் பாப்தாதாவின் செல்லமான குழந்தைகள், ஆஹா ஆஹா குழந்தைகள், தந்தையின் இதய சிம்மாசனதாரி குழந்தைகள், முதல் பிறவியில் பிரம்மா பாபாவிற்கு துணையாக வர வேண்டும். விருப்பம் இருக்கிறது தானே! விரும்பம் இருக்கிறதா? நல்லது. ஆக என்ன செய்ய வேண்டியிருக்கும்? செய்தே ஆக வேண்டும் அல்லவா! விருப்பம் இருக்கிறது, தந்தைக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும்? இப்பொழுதிலிருந்தே, கடந்தவைகளை கடந்தவைகளாக ஆக்கி விடுங்கள், பாப்தாதா மன்னித்து விடுவார். இப்பொழுது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக என்ன கொடுப்பீர்கள்? தந்தைக்கு ஏதாவது பரிசு கொடுப்பீர்கள் தானே! தந்தை யின் பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர்கள் எனில் தந்தைக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்? ஒவ்வொரு குழந்தையிடத்தில் தந்தை என்ன ஆசை வைத்திருக்கிறாரோ, கடைசியில் வந்திருந் தாலும் வேகமாக செல்வது, முடியுமா? முதல் முறை வந்தவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது.

ஆக பாப்தாதா கடைசி வரக் கூடிய அனைத்து குழந்தைகளுக்கும், முதல் வருகைக்காக பல கோடி மடங்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் ஒன்று பாக்கியத்தையும் கூறிக் கொண்டிருக்கின்றார், பாக்கியம் உருவாக்குவதற்கு வாய்ப்பு (மார்ஜின்) இருக்கிறது. ஏனெனில் மிக தாமதம் என்ற பலகை வைக்கப்படவில்லை. ஒருவேளை ஒருவர் கடைசியில் வந்திருந்தாலும் வேகமாக முயற்சி செய்தால் முதல் டிவிசனில் வர முடியும். முதல் நம்பர் அல்ல, அது பிரபலமாகி விட்டது, ஆனால் முதல் டிவிசனில் வர முடியும். விருப்பம் இருக்கிறதா? வந்திருக்கும் புதுக் குழந்தைகளுக்கு விருப்பம் தானே? வாய்ப்பு இருக்கிறது. பாப்தாதா இருக்கை கொடுத்து விடுவார், ஆனால் ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு சுவாசம், ஒவ்வொரு சங்கல்பம் மீது கவனம், ஒவ்வொரு சுவாசம், ஒவ்வொரு சங்கல்பம் சக்திசாலியாக இருக்க வேண்டும், வீண் ஆகிவிடக் கூடாது. ஏனெனில் முதலில் வந்தவர்களோ அல்லது தாமதமாக வந்தவர்களோ, உங்கள் அனைவரின் பட்டம் என்ன? சக்திசாலியான குழந்தைகள், பலவீனமான குழந்தைகள் அல்ல. பாப்தாதா என்ன அன்பு நினைவுகள் கொடுக்கின்றார்? தினமும் செல்லமான, அன்பான, இதய சிம்மாசனதாரி குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் கொடுக்கின்றார். ஆகையால் தந்தை இந்த தங்கமான வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் பயன்படுத்துபவர்களாக ஆகுங்கள். தந்தை கொடுப்பார், கட்டுப்பட்டு இருக்கின்றார். தீவிர முயற்சியாளர்கள் யாராவது இருக்கிறீர்களா? வாய்ப்பு இருக்கிறது. மிகவும் தாமதம் என்ற பலகை வைக்கப்பட்டு விட்டால் அவ்வளவு தான், முடிந்து விட்டது. ஆனால் பாப்தாதாவிற்கு பிறந்த நாள் பரிசாக என்ன கொடுப்பீர்கள்? பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர்கள் அல்லவா! குழந்தைகளாகிய உங்களது பிறந்த நாளன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் விசேஷ பரிசு கொடுத்திருக்கின்றார் - இன்றிலிருந்து கடைசி வரை உங்களது முயற்சி 90 சதவிகிதம் இருந்தது எனில் 10 சதவிகிதம் பாப்தாதா அதிகப்படுத்தி விடுவார். சரி தானே! இப்பொழுது வீணானவைகள் அழித்து விட வேண்டும். சத்யுக தேவதைகள் வருகின்ற பொழுது இங்கு என்ன மொழி பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. முயற்சி என்ற வார்த்தைர கூறுகிறீர்கள் தானே! முயற்சி என்றால் என்ன? என்று அவர்கள் கேட்பார்கள். ஏனெனில் பிராப்தி அனுபவிக்கக் கூடியவர்கள் அல்லவா! அதே போன்று தீவிர முயற்சியாளர் களாகிய உங்களது கனவிலும் அல்லது சங்கல்பத்திலும் அல்லது நடைமுறை காரியத்திலும் வீணானவைகள் என்றால் என்ன? என்று கூறுமளவிற்கு அதை அழித்து விட வேண்டும். தைரியம் இருக்கிறதா? 10 சதவிகிதம் தந்தை கருணை மதிப்பெண் கொடுப்பார். சரி தானே! கை உயர்த்துங் கள். எத்தனை சதவிகிதம் பக்கா? 100 சதவிகிதம், கிடையாது, 101 சதவிகிதம். ஏனெனில் பாப்தாதா விற்கு குழந்தைகளின்றி, குழந்தைகளின் துணையின்றி இருப்பது பிடிக்கவில்லை. என்னுடைய பாபா என்று கூறி விட்டீர்கள், மேலும் தந்தையும் என்னுடைய குழந்தைகளே என்று கூறிவிட்டார் எனில் தந்தைக்குச் சமம் ஆக வேண்டியிருக்கும். இப்பொழுது திடசங்கல்பம் அவசியமாகும். நீங்கள் புத்தகம் அச்சடித்திருக்கிறீர்கள் அல்லவா - திட சங்கல்பம் தான் வெற்றிக்கான சாவி. எனவே சங்கல்பத்தை பொதுவானதாக ஆக்காதீர்கள். நீங்கள் யார்? இங்கிருக்கும் ஜனாதிபதி சாதாரணமாக நடந்து கொண்டால் நன்றாக இருக்குமா? நீங்கள் யார்? நீங்கள் மூன்று சிம்மாசனத் தில் வசிக்கக் கூடியவர்கள். அனைத்தையும் விட உயர்ந்த சிம்மாசனம் பாப்தாதாவின் இதய சிம்மாசனமாகும். இதயத்தில் அமர்ந்திருப்பவர்கள் முதல் பிறப்பில் துணையாக ஆவார்கள். அரியணையில் ஒருவர் தான் அமருவார், ஆனால் ராயல் குடும்பத்தின் இராஜ்ய அதிகாரிகளாக ஆக முடியும். எனவே துணையாக இருப்பவர்கள், வீடு வரை கூடவே செல்வார்கள். பாப்தாதா எப்படியாவது அழைத்துச் செல்வார். நேராக அழைத்துச் செல்வார் அல்லது வேறு வழியாகவும் அழைத்துச் செல்வார். ஆனால் அழைத்துச் செல்வார். பிறகு வீட்டிலேயே அமர்ந்து விடுவீர்களா! பிரம்மா பாபா சென்று விடுவார், நீங்கள் அமர்ந்து விடுவீர்களா, நன்றாக இருக்குமா? இராஜ யோகிகள் அல்லவா! தனக்கு எந்த பட்டம் கொடுத்துக் கொள்கிறீர்கள்? மற்றவர்களுக்கும் என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்? இராஜயோகமா அல்லது பிரஜா யோகாவா? இராயல் பிரஜை யாகவும் இருக்கலாம், ஆனால் பிரஜா யோகிகள் கிடையாது தானே? இராஜயோகிகள். ஆக அனைத்து குழந்தைகளுக்கும் தந்தை கொடுத்த பரிசு நினைவிருக்குமா? எவ்வளவு காலம்? கடைசி வரை. அதிக முயற்சி செய்வதை பாப்தாதா பார்க்கின்றார். குழந்தைகள் அதிக முயற்சி செய்து கொண்டி ருப்பதை பாப்தாதா பார்க்கும் பொழுது தந்தைக்கு பிடிக்கவில்லை. ஆகையால் அன்பில் மூழ்கி யிருங்கள், உழைப்பு நீங்கி விடும். என்னுடைய பாபா எனில் வேறு எனது நீங்கி விட்டது. என்னுடைய பாபா என்று கூறி விட்டீர்கள் எனில் பல என்னுடையது அதில் சமாப்தி ஆகிவிடும் அல்லவா! ஒரு பொருளுக்குள் மற்றொன்று, அதற்குள் மற்றொன்று என்று ஒன்றுக்குள் ஒன்று என்று 10-12 அடங்கியிருக்கும். அதே போன்று என்னுடைய பாபா என்று கூறக் கூடியவர்கள் தானே! என்னுடைய பாபா அல்லவா! மகாரதிகளின் பாபா இல்லை. என்னுடைய பாபா. ஆக என்னுடைய பாபா எனில் எல்லைக்குட்பட்ட என்னுடையவை உன்னிடத்தில் கலந்து விடுங்கள். என்னுடையது என்பதற்குப் பதிலாக உன்னுடையது என்று கூறுங்கள், எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! என்னுடையது மற்றும் உன்னுடையது எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? நான் மற்றும் உனது. ஒரு வார்த்தை வித்தியாசம் இருக்கிறது. ஆக என்னுடைய பாபா என்பது பக்கா தானே! பக்கா தானே! எத்தனை சதவிகிதம்? 100 சதவிகிதம், 100 சதவிகிதம் மற்றும் ஒன்று. இவ்வாறு ஒரு விரல் உயர்த்துங்கள். யார் 101 என்று கூறுகிறீர்களோ அவர்கள் உயர்த்துங்கள். பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார். டி.வி யும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நல்லது.

நாலாப்புறங்களிலும் உள்ள பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி குழந்தைகளுக்கு, நாலாப்புறங்களிலும் உள்ள தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கு, நாலாப்புறங்களிலும் பாப்தாதா கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்ட மற்றும் எந்தக் குழந்தைகள் சங்கல்பத்தினால் பாப்தாதாவிற்கு பரிசு கொடுத்தவர்களுக்கு, அந்த சங்கல்பத்தில் சதா திடமாக இருக்கக் கூடிய திட முயற்சியாளர் களுக்கு, உறுதிமொழி எடுத்து பிரத்ட்சயம் செய்யக் கூடிய அனைத்து குழந்தைகளுக்கு பாப்தாதா மிக மிக உள்ளப்பூர்வமான பாசம் மற்றும் உள்ளப்பூர்வமான அன்பு நினைவுகள் ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

ஆசீர்வாதம்:
விருந்தாளி என்ற விருத்தியின் மூலம் இல்லறத்தை சிரேஷ்டமாக, ஸ்திதியை உயர்வானதாக ஆக்கக் கூடிய சதா விடுபட்டவர் ஆகுக.

யார் தன்னை விருந்தாளி என்று புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார்களோ, அவர்கள் தனது தேகம் என்ற கட்டிடத்திலிருந்தும் பற்றற்றவர்களாக ஆகிவிடுவார்கள். விருந்தாளிக்கு தன்னுடையது என்று எதுவும் இருக்காது, அனைத்து பொருட்களையும் காரியத்தில் பயன்படுத் துவார்கள், ஆனால் என்னுடையது என்ற உணர்வு இருக்காது. அவர்கள் அனைத்து சாதனங்களை பயன்படுத்தினாலும் கூட எவ்வளவு விடுபட்டவராக இருப்பாரோ, அவ்வளவு தந்தைக்கு பிரியமானவராக இருப்பார். தேகம், தேக சம்பந்தம் மற்றும் பொருட்களிலிருந்து எளிதாக விடுபட்டு விடுவார்கள். எந்த அளவிற்கு விருந்தாளி என்ற விருத்தி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இல்லறம் சிரேஷ்டமானதாக மற்றும் ஸ்திதி உயர்ந்ததாக இருக்கும்.

சுலோகன்:
தனது சுபாவத்தை நிர்மலமாக ஆக்கிக் கொண்டால் ஒவ்வொரு அடியில் வெற்றி நிறைந்திருக்கும்.


அவ்யக்த இஷாரே: ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் விசேஷதா மூலம் வெற்றி நிறைந்தவர் ஆகுக

உலகின் முன் இப்பொழுது இந்த உண்மையைத் தான் காண்பிக்க வேண்டும் - நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், ஒருவருடையவராக இருக்கின்றோம், ஒரே ஸ்திதியில் இருக்கின்றோம். ஒருவரின் ஈடுபாட்டில் மூழ்கியிருந்து ஒருவரின் பெயரை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இப்பொழுது இந்த விடுபட்ட மற்றும் அன்பான கோல்டன் ஸ்திதி என்ற கொடியை பறக்க வையுங்கள். சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும், நோயாளியாக இருந் தாலும்-ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும், மகாரதியாக இருந்தாலும்-குதிரைப் படை யினராக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து சகயோகி ஆகும் போது எளிதாக வெற்றிமூர்த்தி ஆகிவிடுவீர்கள்.