15-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தேக அபிமானம் அசுர
நடத்தையாகும். அதை மாற்றி தெய்வீக நடத்தைகளை தாரணை செய்யுங்கள்.
அப்பொழுது இராவணனின் சிறையிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.
கேள்வி:
ஒவ்வொரு ஆத்மாவும் தனது பாவ
செயல்களின் தண்டனையை எப்படி அனுபவிக்கிறது? அவற்றிலிருந்து
விடுபடுவதற்கான சாதனம் என்ன?
பதில்:
ஒவ்வொருவரும் தங்களது பாவங்களின்
தண்டனையை ஒன்று கர்ப்ப சிறையில் அனுபவிக்கிறார்கள். இன்னொன்று
இராவணனின் சிறையில் அநேக விதமான துக்கங்களை அனுபவிக்கிறார்கள்.
குழந்தைகளாகிய உங்களை இந்த சிறைகளிலிருந்து விடுவிக்க பாபா
வந்துள்ளார். இவற்றிலிருந்து விடுபட தூய பார்வை உடையவர்
ஆகுங்கள்.
ஓம் சாந்தி.
நாடகத்தின் திட்டப்படி தந்தை வந்து புரிய வைக்கின்றார். தந்தை
தான் இராவணனின் சிறையில் இருந்து விடுவிக்கின்றார். ஏனெனில்
எல்லோரும் கிரிமினல் பாவ ஆத்மாக்கள் ஆவார்கள். முழு உலகத்தின்
அனைத்து மனிதர்களும் கிரிமினல் (குற்றம் செய்பவர்) ஆன
காரணத்தால் இராவணின் சிறையில் உள்ளார்கள். பிறகு சரீரம் விடும்
பொழுது அப்பொழுதும் கர்ப்ப சிறையில் செல்கிறார்கள். தந்தை வந்து
இரண்டு சிறைகளிலி ருந்தும் விடுவிக்கிறார். பின் நீங்கள் அரை
கல்பம் இராவணனின் சிறையிலும், கர்ப்ப சிறை யிலும் செல்ல
மாட்டீர்கள். தந்தை மெது மெதுவாக முயற்சியின் அனுசாரப்படி நம்மை
இராவணனின் சிறை மற்றும் கர்ப்ப சிறையிலிருந்து விடுவித்துக்
கொண்டேயிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள்
அனைவரும் இராவண இராஜ்யத்தில் குற்றவாளி ஆவீர்கள் என்று தந்தை
கூறுகின்றார். பின் இராம இராஜ்யத்தில் எல்லோரும் தூய பார்வை
உடையவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு பூதமும் பிரவேசம் ஆவதில்லை.
தேக அகங்காரம் வரும் பொழுதே மற்ற பூதங்களின் பிரவேசம்
ஏற்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புருஷார்த்தம்
செய்து தேகி அபிமானி (ஆத்ம நிலை) ஆக வேண்டும். இவர்கள் போல (இலட்சுமி-
நாராயணர்) ஆகி விடும் பொழுதே தேவதை என்று அழைக்கப்படுவீர்கள்.
இப்பொழுதோ நீங்கள் பிராமணர் என்று அழைக்கப்படுகிறீர்கள்.
இராவணனுடைய சிறை யிலிருந்து விடுவிப்பதற்காக தந்தை வந்து
படிப்பிக்கவும் செய்கிறார் மேலும் அனை வருடைய கெட்டுப்போன
நடத்தைகளை திருத்தவும் செய்கிறார். அரை கல்பமாக நடத்தைகள்
கெட்டு கெட்டு மிகவுமே கெட்டுப் போய்விட்டது. இச்சமயத்தில்
இருப்பது தமோபிரதான நடத்தைகள். தெய்வீக மற்றும் அசுர
நடத்தைகளில் உண்மையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது.
இப்பொழுது புருஷார்த்தம் செய்து தங்களுடைய தெய்வீக நடத்தைகளை
அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார்.
அப்பொழுது தான் அசுர நடத்தைகளிலிருந்து விடுபட்டு கொண்டே
செல்வீர்கள். அசுர நடத்தைகளில் நம்பர் ஒன் (முதலாவது) தேக
அபிமானம் ஆகும். ஆத்ம அபிமானியின் நடத்தைகள் ஒரு பொழுதும்
கெட்டுப் போவதில்லை. எல்லாமே நடத்தைகளைப் பொறுத்து உள்ளது.
தேவதைகளின் நடத்தை எப்படி கெட்டு விடுகிறது? அவர்கள் வாம
மார்க்கத்தில் செல்லும் பொழுது அதாவது விகாரி ஆகும்பொழுது
நடத்தைகள் கெட்டுவிடுகின்றன. ஜெகன்னாத் கோவிலில் வாம
மார்க்கத்தின் மோசமான சித்திரங்கள் காண்பித்துள்ளார்கள். இது
அநேக வருடங்களின் பழைய கோவில் ஆகும். உடைகள் தேவதைகளினுடையதாகவே
உள்ளது. தேவதைகள் எப்படி வாம மார்க்கத்தில் செல்கிறார்கள் என்று
காண்பித்துள்ளார்கள். முதன் முதலில் காமச் சிதையில் செல்வது
தான் குற்றமாகும். பிறகு நிறம் மாறி மாறி முற்றிலும் கறுப்பாக
ஆகிவிடுகிறார்கள். முதன் முதலில் தங்க யுகத்தில் சம்பூர்ண
வெண்மையாக இருப்பார்கள். பிறகு இரண்டு கலை குறைந்து விடுகிறது.
திரேதாவை சொர்க்கம் என்று கூற மாட்டார்கள். அது செமி (பாதி)
சொர்க்கம் ஆகும். இராவணன் வந்ததால் தான் உங்கள் மீது துரு ஏற
ஆரம்பித்துள்ளது என்று தந்தை புரிய வைத்துள்ளார். முழு
கிரிமினலாக கடைசியில் ஆகிறீர்கள். இப்பொழுது 100 சதவிகிதம்
கிரிமினல் (குற்றமுள்ளவராக) என்று கூறுவார்கள். 100 சதவிகிதம்
நிர்விகாரியாக இருந்தீர்கள் பின் 100 சதவிகிதம் விகாரி ஆனீர்கள்.
இப்பொழுது தந்தை கூறுகிறார் திருத்திக் கொண்டே செல்லுங்கள்.
இந்த இராவணனுடைய சிறை மிகவும் பெரியது. எல்லோரையும் கிரிமினல்
என்றே கூறுவோம். ஏனெனில் இராவணனின் இராஜ்யத்தில் உள்ளார்கள்
அல்லவா? இராம இராஜ்யம் மற்றும் இராவண ராஜ்யம் பற்றி
அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இப்பொழுது நீங்கள் இராம
ராஜ்யத்தில் செல்வதற்கான புருஷார்த்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். சம்பூர்ணமாக யாரும் ஆகவில்லை. ஒருவர்
முதலில், மற்றவர் இரண்டாவதில் இன்னொருவர் மூன்றாவதில்
உள்ளார்கள். இப்பொழுது தந்தை படிப்பிக்கிறார். தெய்வீக குணங்களை
தாரணை செய்விக்கிறார். தேக அபிமானமோ எல்லோருக்குள்ளும்
இருக்கிறது. எந்த அளவிற்கு நீங்கள் சேவையில்
ஈடுபட்டிருப்பீர்களோ அந்த அளவு தேக அபிமானம் குறைந்து கொண்டே
போகும். சேவை செய்வதால் தேக அபிமானம் குறைந்து விடும். ஆத்ம
அபிமானி பெரிய பெரிய சேவை செய்வார்கள். பாபா ஆத்ம அபிமானியாக
இருக்கிறார், ஆக எவ்வளவு நல்ல சேவை செய்கிறார். அனைவரையும்
கிரிமினல் இராவணனின் சிறையிலிருந்து விடுவித்து சத்கதியை
பிராப்தியாக தருகிறார். அங்கு பின் இரண்டு சிறையும் இருக்காது.
இங்கு இரண்டு சிறையும் உள்ளது. சத்யுகத்தில் கோர்ட்டும் இல்லை,
பாவ ஆத்மாக்களும் இல்லை. இராவணனுடைய சிறையும் இல்லை.
இராவணனுடையது எல்லையில்லாத சிறை ஆகும். அனைவரும் 5 விகாரங்களின்
கயிறுகளில் பிணைக்கப்பட்டு உள்ளார்கள். அளவற்ற துக்கம் உள்ளது.
நாளுக்கு நாள் துக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சத்யுகத்திற்கு தங்க யுகம் என்றும் திரேதாவிற்கு வெள்ளியுகம்
என்றும் கூறப்படுகிறது. சத்யுகத்தினுடைய சுகம் திரேதாவில்
இருக்க முடியாது. ஏனெனில் ஆத்மாவின் 2 கலை குறைந்து விடுகிறது.
ஆத்மாவின் கலை குறைந்து விடும்பொழுது சரீரமும் பின் அவ்வாறு
ஆகிவிடுகிறது. எனவே உண்மையில் நாம் இராவணனின் இராஜ்யத்தில் தேக
அபிமானி ஆகி விட்டோம் என உணர வேண்டும். இப்பொழுது தந்தை
இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்க வந்துள்ளார். அரை
கல்பத்தின் தேக அபிமானம் நீங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
நிறைய உழைக்க வேண்டியுள்ளது. சீக்கிரமாக யார் சரீரம் விட்டு
சென்றார்களோ அவர்கள் பிறகும் பெரியவர்களாக ஆகி கொஞ்சம் ஞானம்
கேட்கக் கூடும். எவ்வளவு தாமதம் ஆகிக் கொண்டுபோகிறதோ பின்
புருஷார்த்தம் செய்ய முடியாது. யாராவது இறந்து விட்டார்கள் பின்
வந்து முயற்சி செய்ய வேண்டும் என்றால் உறுப்புக்கள் பெரியதாக
வேண்டும். புரிந்து கொள்பவராக ஆக வேண்டும், அப்பொழுது தான்
கொஞ்சமாவது செய்ய முடியும். தாமதமாகச் செல்பவர்கள் ஒன்றும்
கற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு கற்றார்களோ அவ்வளவு தான். எனவே
இறப்பதற்கு முன்னால் முயற்சி செய்ய வேண்டும். கூடுமானவரை இந்த
பக்கம் வருவதற்கு அவசியம் முயற்சி செய்வார்கள். இந்த நிலையில்
நிறைய பேர் வருவார்கள். விருட்சம் வளர்ந்து கொண்டே போகும்.
புரிய வைப்பதோ மிகவும் சுலபம். மும்பையில் தந்தை யின் அறிமுகம்
அளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் நன்றாக உள்ளது - இவர் நம்
அனைவரின் தந்தை ஆவார். தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின்
ஆஸ்தி தான் வேண்டும் எவ்வளவு சுலபமானது! உள்ளுக்குள் இதயம்
பூரிப்படைய வேண்டும். இவர் நமக்கு படிப்பிப்பவர் ஆவார். இது
நமது இலட்சியம் ஆகும். நாம் முதலில் சத்கதியில் இருந்தோம்.
பிறகு துர்க்கதியில் வந்தோம். இப்பொழுது மீண்டும்
துர்க்கதியிலிருந்து சத்கதிக்குச் செல்ல வேண்டும். என் ஒருவனை
நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள்
அழிந்து போய்விடும் என்று சிவபாபா கூறுகிறார்.
துவாபரத்திலிருந்து இராவண இராஜ்யம் ஏற்படும் பொழுது 5
விகாரங்கள் என்ற இராவணன் சர்வ வியாபி ஆகிவிடுகிறான் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எங்கு விகாரம் சர்வ
வியாபியாக உள்ளதோ அங்கு தந்தை சர்வ வியாபியாக எவ்வாறு ஆக
முடியும்? அனைத்து மனிதர்களும் பாவ ஆத்மாக்கள் ஆவார்கள் அல்லவா?
தந்தை முன்னால் இருப்ப தால் தான் நான் சர்வவியாபி என்று
கூறவேயில்லை என்று (பிரம்மா பாபா) கூறுகிறார். தவறாகப் புரிந்து
கொண்டார்கள். தவறாகப் புரிந்து விகாரத்தில் விழுந்து விழுந்து
நிந்தனை செய்து செய்து பாரதத்திற்கு இந்த நிலைமை ஆகிவிட்டது.
5000 வருடங்களுக்கு முன் பாரதம் சொர்க்கமாக இருந்தது. எல்லோரும்
சதோபிரதானமாக இருந்தார்கள் என்பதை கிறிஸ்தவர் களும்
அறிந்துள்ளார்கள். பாரதவாசிகளோ இலட்சக்கணக்கான வருடங்கள் என்று
கூறிவிடு கிறார்கள். ஏனெனில் தமோபிரதான புத்தி உடையவராக ஆகி
விட்டுள்ளார்கள். அவர்கள் பின் அவ்வளவு உயர்ந்தவர்களும்
ஆகவில்லை. தாழ்ந்தவர்களும் ஆவதில்லை. அவர்களோ உண்மையில்
சொர்க்கமாக இருந்தது என்று புரிந்திருக்கிறார்கள். தந்தை
கூறுகிறார் - இதை சரியாக கூறுகிறேன் - 5000 வருடங்களுக்கு
முன்பும் நான் குழந்தைகளாகிய உங்களை இராவணனின் சிறையிலிருந்து
விடுவிக்க வந்திருந்தேன். இப்பொழுது மீண்டும் விடுவிக்க
வந்துள்ளேன். அரை கல்பம் இராம இராஜ்யம் ஆகும், அரை கல்பம்
இராவண ராஜ்யம் ஆகும். குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது
என்றால் புரிய வைக்க வேண்டும்.
பாபா கூட குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார்.
குழந்தைகளே இதுபோல புரிய வையுங்கள். இவ்வளவு அளவற்ற துக்கம் ஏன்
ஏற்பட்டுள்ளது? முதலிலோ அளவற்ற சுகம் இருந்தது, இலட்சுமி
நாராயணருடைய இராஜ்யம் இருக்கும் பொழுது அவர்கள் சர்வகுண
சம்பன்னராக (அனைத்துக் குணங்களும் நிறைந்தவர்களாக) இருந்தார்கள்.
இப்பொழுது இந்த ஞானம் இருப்பதே நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காக.
இது படிப்பு ஆகும். இதனால் தெய்வீக நடத்தை உள்ளவர்களாக
ஆகின்றனர். இச்சமயம் இராவண இராஜ்யத்தில் எல்லோருடைய நடத்தைகளும்
கெட்டுப்போய் உள்ளது. எல்லோருடைய நடத்தைகளை திருத்துபவர் ஒரே
ஒரு இராமர் ஆவார். இச்சமயம் எவ்வளவு தர்மங்கள் உள்ளன! மனிதர்
களின் விருத்தி எவ்வளவு ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படியே
விருத்தி ஆகிக் கொண்டே இருந்தால் பின் உணவு எங்கிருந்து
கிடைக்கும்? சத்யுகத்திலோ இப்பேர்ப்பட்ட விஷயங்களே இருக்காது.
அங்கு துக்கத்தின் எந்த விஷயமும் இருக்காது. இந்த கலியுகம்
துக்கதாமம் ஆகும். எல்லோரும் விகாரி ஆவார்கள். அது சுகதாமம்
ஆகும். அனைவரும் சம்பூர்ண நிர்விகாரி ஆவார்கள். அடிக்கடி
அவர்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும். அப்பொழுது கொஞ்சம்
புரிந்து கொள்வார்கள். நான் பதீத பாவனன் ஆவேன் என்று தந்தை
கூறுகிறார். என்னை நினைவு செய்வதால் உங்களுடைய பல பிறவிகளின்
பாவங்கள் அழிந்து விடும். இப்பொழுது தந்தை எப்படி கூறுவார்.
அவசியம் சரீரத்தை தாரணை செய்து பேசுவார் அல்லவா? பதீத பாவனர்
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை ஆவார். அவசியம்
அவர் ஏதாவது இரதத்தில் வந்திருக்கக்கூடும். நான் எந்த இரதத்தில்
வருகிறேன் என்றால் அவருக்கே தனது பிறவிகளைப் பற்றி தெரியாது
என்று தந்தை கூறுகிறார். இது 84 பிறவிகளின் விளையாட்டு என்று
தந்தை புரிய வைக்கின்றார். யார் முதன் முதலில் வந்திருப்பார்களோ
அவர்களே தான் வருவார்கள். அவர்களுக்குத்தான் அதிக பிறவிகள்
இருக்கும். பிறகு குறைந்து கொண்டே போகும். எல்லோரையும் விட
முதலில் தேவதைகள் வந்தார்கள். பாபா குழந்தைகளுக்கு
சொற்பொழிவாற்றக் கற்பிக்கிறார் - இப்படி இப்படி புரிய வைக்க
வேண்டும் என்று. நல்ல முறையில் நினைவில் இருந்தீர்கள் என்றால்
தேக அபிமானம் இல்லை என்றால் நன்றாக சொற்பொழிவாற்றுவீர்கள்.
சிவபாபா தேகீ அபிமானி (ஆத்ம அபிமானி) ஆவார் அல்லவா! குழந்தைகளே,
தேகீ அபிமானி ஆகுக என்று கூறிக் கொண்டேயிருக்கிறார். எந்த ஒரு
விகாரமும் இருக்கக் கூடாது. உள்ளுக்குள் எந்த ஒரு அவகுணமும்
இருக்கக்கூடாது. நீங்கள் யாருக்குமே துக்கம் கொடுக்கக்கூடாது.
யாரையுமே நிந்தனை செய்யக்கூடாது. குழந்தை களாகிய நீங்கள்
ஒருபொழுதும் காதால் கேள்விப்படும் விஷயங்கள் மீது நம்பிக்கை
கொள்ளக் கூடாது. இவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள், இது உண்மையா
என்று தந்தையிடம் கேளுங்கள். பாபா கூறிவிடுவார். இல்லாவிட்டால்
நிறைய பேர் பொய்யான விஷயங்களை உருவாக்கு வதில் தாமதிப்பதேயில்லை.
குறிப்பிட்ட இவர் உங்களைப் பற்றி இப்படி இப்படி கூறினார் என்று
கூறி அவர்களேயே நாசமாக்கி விடுவார்கள். இதுபோல நிறைய ஆகிறது
என்பதை பாபா அறிவார். தப்பும் தவறுமான விஷயங்களைக் கூறி மனதைக்
கெடுத்து விடுவார்கள். எனவே ஒருபொழுதும் பொய்யான விஷயங்களைக்
கேட்டு உள்ளுக்குள் எரிந்து கொண்டு இருக்கக் கூடாது. கேளுங்கள்
குறிப்பிட்ட இன்னார் என்னைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளாரா?
உள்ளுக்குள் தூய்மை இருக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள்
கேள்விப்பட்ட விஷயங்கள் காரணமாகவும் தங்களுக்குள் பகைமையை
ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். தந்தை கிடைத்திருக்கின்றார்
என்றால் தந்தையிடம் கேட்க வேண்டுமல்லவா? பிரம்மா பாபா மீதும்
அநேகருக்கு நம்பிக்கை இருப்பதில்லை. சிவபாபாவையும் மறந்து
விடுகிறார்கள். தந்தை அனைவரையும் உயர்ந்தவர்களாக ஆக்க
வந்துள்ளார். அன்புடன் உயர்த்திக் கொண்டே யிருக்கிறார்.
ஈஸ்வரிய வழி பெற வேண்டும். நம்பிக்கையில்லை என்றால் கேட்கவே
மாட்டார்கள். பின் பதிலும் கிடைக்காது. தந்தை என்ன புரிய
வைக்கிறாரோ அதை தாரணை செய்ய வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்படி உலகத்தில் அமைதியை ஸ்தாபனை
செய்வதற்கு நிமித்தமாக (கருவியாக) ஆகியுள்ளீர்கள். ஒரு
தந்தையைத் தவிர வேறு யாருடைய வழியும் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக
இருக்க முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த வழியே பகவானினுடையது.
அதன் மூலம் பதவி கூட எவ்வளவு உயர்ந்ததாக கிடைக்கிறது! தனக்கு
நன்மை செய்து கொண்டு உயர்ந்த பதவியை அடையுங்கள். மகாரதி
ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். படிக்கவே இல்லை என்றால் என்ன
பதவி அடைவீர்கள்?. இது கல்ப கல்பாந்திரத் தின் விஷயம் ஆகும்.
சத்யுகத்தில் வேலைக்காரன், வேலைக்காரிகள் கூட நம்பர் பிரகாரம்
இருப்பார்கள். தந்தையோ உயர்ந்தவராக்க வந்துள்ளார். ஆனால்
படிக்கவே இல்லை என்றால் என்ன பதவி அடைவார்கள்? பிரஜை களில் கூட
உயர்ந்த, தாழ்ந்த பதவி இருக்கும் அல்லவா? இதை புத்தி மூலம் உணர
வேண்டும். மனிதர்களுக்கு நாம் எங்கு போகிறோம் என்பதே தெரியாது.
மேலே செல்கிறோமா, இல்லை கீழே இறங்கிக் கொண்டு செல்கிறோமோ? தந்தை
வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார் - நீங்கள்
தங்கயுகம், வெள்ளி யுககத்தில் இருந்து இப்பொழுது இங்கே
இரும்புயுகத்தில் வந்துவிட்டீர்கள்! இச்சமயத்திலோ மனிதர்கள்
மனிதர்களை சாப்பிட்டு விடுகிறார்கள். இப்பொழுது இந்த எல்லா
விஷயங்களையும் புரிந்து கொண்டால் தான் ஞானம் என்று எதற்குக்
கூறப்படுகிறது என்று கூறமுடியும். ஒரு சில குழந்தைகள் ஒரு
காதால் கேட்டு மறு காதால் வெளியேற்றி விடுகிறார்கள். நல்ல நல்ல
சென்டர்களின் நல்ல நல்ல குழந்தைகளுக்குக் கூட குற்ற பார்வை
இருக்கிறது. இலாபம், நஷ்டம், கௌரவம் பற்றி
பொருட்படுத்துகிறார்களா என்ன? முக்கியமான விஷயமே குற்றப்
பார்வையினுடையது. காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தை புரிய
வைக்கின்றார். இதன் மீது வெற்றி அடைந்தால் தான் உலகத்தை
வென்றவர் ஆக முடியும். தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரி ஆவார்கள்
அல்லவா! போகப்போக புரிந்து கொள்வார்கள். ஸ்தாபனை ஆகியே தீரும்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) ஒரு பொழுதும் காதால் கேள்விப்படும் விஷயங்கள்
மீது நம்பிக்கை கொண்டு உங்களது நிலையை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
உள்ளுக்குள் தூய்மையாக இருக்க வேண்டும். பொய்யான விஷயங்களை
கேட்டு உள்ளுக்குள் எரியக்கூடாது, ஈஸ்வரிய வழியைப் பெற வேண்டும்.
(2) ஆத்ம அபிமானி ஆவதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும்.
யாரையும் நிந்தனை செய்யக்கூடாது. இலாபம், நஷ்டம் மற்றும்
கௌரவத்தை கவனத்தில் கொண்டு குற்றப் பார்வையை நீக்கிவிட வேண்டும்.
தந்தை கூறுவதை ஒரு காதால் கேட்டு மறுகாதால் வெளியேற்றி
விடக்கூடாது.
வரதானம்:
திரிகாலதரிசி - மூன்று காலத்தை உணர்ந்தவர்கள் என்ற சீட்டில்
செட் ஆகி (பதவியில் நிலைத்திருந்து), ஒவ்வொரு செயலையும் செய்யக்
கூடிய, சக்திசாலி ஆத்மா ஆவீர்களாக.
எந்த குழந்தைகள் திரிகாலதரிசி என்ற சீட்டில் செட் ஆகி, ஒவ்வொரு
நேரமும், ஒவ்வொரு செயலையும் செய்கிறார்களோ, அவர்கள் விஷயங்களோ
நிறைய வரப் போகிறது, ஆகப் போகிறது, சுயத்தின் மூலமாகட்டும்,
மற்றவர்கள் மூலமாகட்டும், மாயை மூலமாகட்டும், இயற்கை
மூலமாகட்டும், அனைத்துவிதமான சூழ்நிலைகள் வரப்போகிறது, வரத்தான்
போகிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் சுய ஸ்திதி
சக்திசாலியாக இருந்தது என்றால், பர-ஸ்திதி - வெளியிலிருந்து
வரக் கூடிய சூழ்நிலைகள், சுய ஸ்திதிக்கு முன்னால் எதுவும் இல்லை.
ஆனால் ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன், அதனுடைய முதல், இடை, கடை
ஆகிய மூன்று காலங்களையும் பரிசோதனைச் செய்து, புரிந்து கொண்டு,
பிறகு எது வேண்டு மானாலும் செய்யுங்கள், அப்பொழுது நீங்கள்
சக்திசாலியாகி, சூழ்நிலைகளை கடந்து சென்று விடுவீர்கள்.
சுலோகன்:
அனைத்து சக்திகள் மற்றும் ஞானத்தில் (சம்பன்னம்) நிறைந்து
இருப்பது தான் சங்கமயுகத்தின் (பிராலப்தம்) பாக்கியம் ஆகும்.