15-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தேகத்துடன்
சேர்த்து, தேகத்தின் அனைத்து தர்மங்களையும் மறந்து தன்னை ஆத்மா
என்று உணருங்கள். அப்பொழுது எல்லா துக்கங்களும் நீங்கிப் போகும்
என்ற செய்தியை எல்லோருக்கும் கொடுங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்த
விஷயத்தில் (ஃபாலோ ஃபாதர்) தந்தையைப் பின்பற்ற வேண்டும்?
பதில்:
எப்படி இந்த பிரம்மா தனது
அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணம் செய்தார். முழுமையாக டிரஸ்டி
ஆனார். அதே போல டிரஸ்டி ஆகி இருங்கள். ஒரு பொழுதும் தப்பும்
தவறுமாக செலவு செய்து, பாவ ஆத்மாக்களுக்கு கொடுக்காதீர்கள்.
தங்களுடைய அனைத் தையும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்துங்கள்.
முழுமையாக டிரஸ்டி ஆகுங்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து
கொண்டே இருங்கள். எந்த குழந்தை, எந்த அளவிற்கு, ஸ்ரீமத் படி
நடக்கிறது என்று தந்தை பார்க்கிறார்.
பாடல்:
அன்பின் கடல் நீ....
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். பாபா நாங்கள் எங்கிருந்து
வந்தோம். எப்பொழுது வந்தோம். பிறகு திரும்பிச் செல்வதற்கான
வழியை எப்படி மறந்தோம் என்கிறார்கள். இந்த நாடகத்தை காதுகளில்
புரிய வையுங்கள். நாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம். பிறகு
எங்கே சென்று விட்டோம்? ஒரு ஞானத்தின் துளியாவது கொடுத்து
விடுங்கள். ஏனெனில் ஞானக்கடல் அவர் அல்லவா? ஆத்மாக்களாகிய நாம்
எங்கு இருப்பவர்கள், என்பதை இப்பொழுது குழந்தைகள்
அறிந்துள்ளார்கள். பிறகு தந்தை மற்றும் தங்களது சொர்க்கத்தை
எப்படி மறந்தார்கள். மேலும் எப்படி வந்து இங்கு
துக்கமுற்றார்கள் - இந்த இரகசியத்தைக் காதுகளில் கூறுங்கள்.
இப்பொழுது தந்தை ஞானக் கடலும் ஆவார். தூய்மையின் கடலும் ஆவார்.
அன்பின் கடலும் ஆவார். அமைதியின், சுகம் மற்றும் செல்வத்தின்
கடலும் ஆவார். இப்பொழுது எல்லையில்லாத தந்தை மூலமாக இந்த எல்லா
விஷயங்களையும் புரிய வைக்கிறார். ஆரம்பத்தில் எங்கிருந்து
வந்தோம். பின் நாம் வழி மறந்து துக்கமுடையவர்களாக ஆகும் வகையில்
இடையில் என்ன நடந்தது? பிறகு பாபா எங்களுக்கு வழி கூறுங்கள்
என்று இப்பொழுது தந்தையிடம் கூறு கிறார்கள். அப்போது தான்
நாங்கள் எங்களுடைய சுகதாமம் மற்றும் சாந்திதாமத்திற்குப்
போகலாம். நீங்கள் ஆரம்பத்தில் யாராக இருந்தீர்கள் மற்றும்
இடையில் என்ன ஆயிற்று என்பதை தந்தை தான் வந்து கூறுகிறார்.
பக்தி மார்க்கம் எப்படி ஆரம்பமாகியது? கடைசியில் என்ன ஆனது .இந்த
முதல், இடை, கடை பற்றிய இரகசியம், இப்பொழுது புத்தியில்
பதிந்துள்ளது. இது நாடகம் அல்லவா? இதை மனிதர்கள் அவசியம்
அறிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் அல்லவா.
ஆத்மாக்களாகிய நாம் நிராகாரி சாந்திதாமத் திலிருந்து இங்கு
டாக்கி தாமத்திற்கு வருகிறோம் என்பதை அறிந்துள்ளார்கள்.
மூலவதனம், சூட்சுமவதனம் பிறகு இது ஸ்தூல வதனமாகும். பிறகு மூல
வதனத்திலிருந்து ஆத்மாக்கள் சரீரம் தரித்து தமது பாகத்தை
நடிக்க டாக்கி (பேசும்) தாமத்திற்கு வருகிறார்கள். ஆத்மா
வினுடைய இருப்பிடம் சாந்தி தாமம் ஆகும். இந்த விஷயங்கள்
உலகத்தில் யாருக்குமே தெரியாது. இதை ஞானக்கடலான தந்தை தான்
வந்து புரிய வைத்துள்ளார். இப்பொழுது புரிய வைத்துக் கொண்டி
ருக்கிறார் - பரலௌகீக பரமபிதா பரமாத்மாவிற்குத் தான் ஞானக்கடல்
என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்குக் கூற முடியாது. இந்த மகிமை
ஒரு தந்தைக்கு மட்டுமே பாடப்படுகிறது. அவரைப் பற்றி வேறு
யாருக்கும் தெரியாது. இப்பொழுது விநாசத்தின் நேர மாகும். விநாச
காலத்தில் ஐரோப்பியவாசிகளின் அன்பில்லாத புத்தி என்று
பாடப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை என் ஒருவனை நினைவு செய் என்று
உங்களுடைய புத்தி யோகத்தை தன்னுடன் இணைத்துள்ளார். நான்
முகம்மதியன்! நான் இந்து! நான் புத்த மதத்தை சேர்ந்தவன்.... இவை
எல்லாம் தேகத்தின் தர்மங்களாகும் .ஆத்மாவோ ஆத்மா தான்!
தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று
புரிந்து தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால், பதீத
நிலையிலிருந்து பாவனமாக ஆகி விடுவீர்கள் என்று தந்தை புரிய
வைக்கிறார். இந்த தேகத்தைக் கூட மறந்து விடுங்கள் என்று தந்தை
கூறுகிறார். இது எல்லோருக்காகவும் தந்தையின் செய்தியாகும்.
தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து
விடுங்கள். நான் ஆத்மா ஆவேன். சகோதரர்களாகிய நம் அனை வரின்
தந்தை ஒருவரே ஆவார். இந்த பிரம்மா கூட நான் ஆத்மா என்று தான்
கூறுவார். எனவே அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆகிறார்கள்.
இச்சமயத்தில் எல்லா சகோதர சகோதரர்களும் பதீதமாக
துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் காமச் சிதையில்
ஏறி சாம்பலாகி விட்டுள்ளார்கள். துவாபர ஆரம்பத்தில் இராவண
இராஜ்யம் ஆரம்ப மாகும் பொழுது பின்னர் நீங்கள் வாம
மார்க்கத்தில் செல்கிறீர்கள். அப்பொழுது தான் பிறகு மற்ற
தர்மங்கள் ஆரம்பமாகின்றன. பாதி காலம் நீங்கள் துய்மையாக
இருக்கிறீர்கள் .பின்னர் பாதியில் நீங்கள் பதீதமாக ஆகிறீர்கள்.
21 பிறவிகள் பாரதத்தில் தான் பாடப்படுகிறது. 21 குலத்திற்கு
மேன்மையடைய.... செய்பவளே குமாரி ஆவார். குமாரிக்கு மதிப்பு
இருக்கிறது. நீங்கள் பாரதத்திற்கு மட்டுமென்ன முழு உலகத்திற்கு
முன்னேற்றம் செய்து கொண்டி ருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம்
அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். எனவே குமாரர்கள் தான் ஆகிறீர்கள். பிரஜாபிதா
பிரம்மா வின் மக்கள் ஆகும் பொழுது சகோதரன் சகோதரி ஆகிறீர்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. ஆத்மாக்களாகிய
நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம். அனைவரும் தந்தையை ஹே
பதீத பாவனரே! வாருங்கள் என்று அழைக்கிறார்கள். இங்கு இராவண
இராஜ்யத்திலிருந்து, துக்கத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்.
பிறகு எங்களுக்கு வழிகாட்டியாகி எங்களை திரும்ப அழைத்துச்
செல்லுங்கள். எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் மற்றும் சுகம்
கொடுங்கள். உண்மையில் பாபா வந்து விட்டுள்ளார் என்பதை இப்பொழுது
நீங்கள் புரிந்துள்ளீர்கள். எங்களை இந்த கலியுக இராவண
இராஜ்யத்திலிருந்து விடுவித்து கூட அழைத்து செல்வார். அனைத்து
ஆத்மாக்களும் பதீதமாக உள்ளார்கள் என்பதை தந்தை அறிந்துள்ளார்.
எனவே சரீரம் கூட பதீதமாக உள்ளது. ஆத்மாவைத் தான் பாவனமாக ஆக்கி
நிர்வாண தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். கடந்த
காலத்திலிருந்து நிகழ்காலம் பிறகு வருங்காலம் ஆகும். ஆதி,
மத்தியம், இறுதி. பிறகு ஆதி, சத்யுக ஆதி, கலியுக இறுதி, பின்
வருங் காலத்தில் சத்யுகம் ஆகும். இதுவோ சுலபம் தானே இல்லையா?
நல்லது, நடுவில் என்ன ஆயிற்று? நாம் எப்படி விழுந்தோம்? நாம்
பாவன தேவதைகளாக இருந்தோம். பிறகு பாவன நிலையிலிருந்து பதீதமாக
எப்படி ஆனோம். இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இராவண
இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது நீங்கள் பதீதமாக ஆகிறீர்கள் என்று
தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது மீண்டும் உங்களை வருங்கால
தேவதையாக ஆக்க வந்துள்ளேன். இதில் கடினம் என்ற எந்த விஷயமும்
கிடை யாது. உங்களை இந்த விகார கடலிலிருந்து அப்பால் அழைத்துச்
செல்கிறேன் என்று தந்தை கூறுகிறார். எனது படகை.... (கரையேற்று)
என்று பாடவும் செய் கிறார்கள். அனைவரும் ஒரு தந்தையை
அழைக்கிறார்கள். மூழ்கி விட்டுள்ள எங்களுடைய படகை பாற்கடலில்
கொண்டு செல்லுங்கள். அவரை படகோட்டி, தோட்டக்காரன் என்றும்
கூறுகிறார்கள். இப்பொழுது முட்களின் காட்டில் இருக்கிறார்கள்.
எங்களை மீண்டும் மலர்களின் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
தேவதைகள் மலர்கள் ஆவார்கள் ! இப்பொழுது எல்லோருமே முட்களாக
இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் துக்கம் தான் கொடுத்துக்
கொண்டே இருக்கிறார்கள். தேவதைகள் ஒரு பொழுதும் யாருக்கும்
துக்கம் கொடுப்பதில்லை. அங்கோ சுகமே சுகமாக இருக்கும். அவர்களோ
பாடுவது மட்டுமே. நீங்கள் இங்கு நடை முறையில் கேட்டுக் கொண்டு
இருக்கிறீர்கள். பாபா நாங்கள் எப்பொழுதிலிருந்து மறந்தோம் என்று
கூறுகிறார்கள் அல்லவா? இந்த சிருஷ்டி சக்கரத்தை நாங்கள் எப்படி
மறந்தோம்? சத்யுக திரேதாவில் இது தெரியாது. ஏனெனில், அங்கோ நாம்
சுகமுடையவர்களாக இருந்தோம். பிறகு துக்க முடையவர்களாக எப்பொழுது
ஆனோம். இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது. பாரதவாசிகள் இராவணனை
எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். எது வரை? அவர் அழியும்
வரையும். பிறகு சத்யுகத்தில் ஒவ்வொரு வருடமும் எரிப்பார்களா
என்ன? இது பக்தி மார்க்கமாகும். இப்பொழுது இராவண இராஜ்யம்
முடியப் போகிறது. பக்தி மார்க்கத்தில் இராவணனை ஒவ்வொரு வருடமும்
எரிக்கிறார்கள். ஆனால் இறப்பதே இல்லை .இப்பொழுது இராவணன் உங்கள்
முன்னால் இறந்து விட்டது போலவே. இராவண இராஜ்யம் இப்பொழுது
முடியப் போகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். 5 பூதங்களின்
தலை வெட்டப்படுகிறது. முதன் முதலில் காமத்தின் தலையை
வெட்டுகிறீர்கள். காமம் தான் மகா எதிரி ஆகும். இந்த 5 பூதங்கள்
மீது வெற்றி அடையும் பொழுது தான் நீங்கள் உலகத்தின் மீது வெற்றி
அடைவீர்கள் என்று தந்தை கூறுகிறார். நாங்கள் பதீதமானவர்கள்
என்று மனிதர்கள் தாங்களே கூறு கிறார்கள். எனவே பதீதர்களை
பாவனமாக ஆக்க வாருங்கள் என்று அழைக்கிறார்கள். ஹே பாபா....
படகோட்டி, கருணையுள்ளம் கொண்ட பாபா வாருங்கள் என்று ஆத்மா
அழைக்கிறது. நான் கல்ப கல்பமாக வருகிறேன் என்று தந்தை
கூறுகிறார். எப்படி வருகிறேன் என்பது யாருக்கும் தெரியாது.
பகவான் வந்து இராஜயோகம் கற்பித்தார் என்பது கீதையிலும்
இருக்கிறது. ஆனால் பகவான் யார், எப்பொழுது வந்தார் என்பது
யாருக்கும் தெரியாது. கீதையை குறையுள்ளதாக ஆக்கி
விட்டுள்ளார்கள். கிருஷ்ணரை துவாபரத் திற்கு எடுத்துச்
சென்றுள்ளார்கள். துவாபரத்திற்குப் பின்னரோ உலகம் இன்னுமே
பதீதமாக ஆகிறது. எனவே துவாபரத்தில் கிருஷ்ணர் வந்து என்ன
செய்தார். மனிதர்களோ ஒன்றுமே புரியாமல் உள்ளார் கள். முற்றிலுமே
நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள். சத்யுகத்தில் தூய்மை யுடனும்,
நேர்மை யுடனும் இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது நேர்மையற்ற
நிலையிலிருந்து நேர்மையுடையவராக ஆகிறீர்கள். நீங்கள் தான்
சம்பூர்ண நிர்விகாரி, பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள் என்று
தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் தான் இப்பொழுது விகாரி பூசாரி
ஆகி உள்ளீர்கள். நீங்களே பூஜைக்குரியவர்.... முதலில் நீங்கள்
21 பிறவிகள் வரை பூஜைக்குரியவராக இருந்தீர் கள். பிறகு
பூசாரியாகி உள்ளீர்கள். சத்யுகத்தில் 8 பிறவிகள். பின்
திரேதாவில் 12 பிறவிகள் எடுக் கிறீர்கள். நீங்கள் எப்படி
பதீதமாக ஆனீர்கள். எப்பொழுதிலிருந்து விழுந்தீர்கள் என்பதை
தந்தை தான் கூறுகிறார். இந்த சிருஷ்டியின் சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கிறது. முழு உலகத்தின் சரித்திரம், பூகோளம்
சுற்றிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தின் சரித்திரம்,
பூகோளம், முதல் இடை கடை பற்றிய இரகசியத்தை குழந்தைகளுக்கு தந்தை
வந்து புரிய வைக்கிறார். எல்லோரும் ஒன்று போல புரிந்து கொள்ள
மாட்டார்கள். வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்வார்கள். நான்
வந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன் என்று தந்தை கூறுகிறார்.
இப்பொழுது நீங்கள் சர்வகுண சம்பன்னராக ஆக வேண்டும். அதுவரையும்
சத்யுகத்திற்குப் போக முடியாது. இங்கு தான் ஆக வேண்டி உள்ளது.
பிறகு வருங்காலத்தில் போய் நீங்கள் ஆட்சி புரிவீர்கள்.
அதற்கிடையே எல்லாமே விநாசம் ஆகி விடும். விநாசத்தைக் கூட
அவசியம் பார்ப்பீர்கள். நீங்கள் நடைமுறையில் (பிராக்டிகலாக)
உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். இனி முன்னால் என்ன ஆகப்போகிறது
என்பது உங்களுக்கு தெரிய வருமா என்ன? முந்தைய கல்பத்தில் என்ன
நடந்ததோ அதுவே நடக்கும்.
ஸ்தாபனை மற்றும் விநாசமாகும் என்று உங்களுக்கு மொத்தமாகக்
கூறப்படுகிறது. விநாசம் எப்படி ஆகும்? அவ்வாறு நடக்கும் பொழுது
பார்ப்பீர்கள். திவ்ய திருஷ்டி மூலமாக விநாசத்தையோ
பார்த்துள்ளீர்கள். இனி முன்னால் போகும் பொழுது
பிராக்டிகலாகவும் பார்ப்பீர்கள். ஸ்தாபனையின் சாட்சாத்காரம்
கூட திவ்ய திருஷ்டி மூலமாக பார்த்துள்ளீர்கள். பின்
பிராக்டிகலாகவும் பார்ப்பீர்கள். மற்றபடி அதிகமாக தியானத்தில்
செல்வது கூட சரி யில்லை. பிறகு வைகுண்டத்திற்கு போய் நடனமாட
முற்பட்டு விடுகிறார்கள். ஞானமும் இல்லை, யோகமும் இல்லை
இரண்டும் இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள். தியானத்தில்
செல்வதற்கான எந்த அவசியம் கூட கிடையாது. இதுவோ போக் மட்டும்
வைக்கப்படுகிறது. பிராமணர்களாகிய நீங்கள் அங்கு செல்கிறீர்கள்
.தேவதைகள் மற்றும் பிராமணர்களின் சபை கூடுகிறது. இங்கு நீங்கள்
பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். பிறகு உங்களை விஷ்ணுபுரி
செல்வதற்கு லாயக்காக ஆக்கப்படுகிறது. கன்னிகைக்கு
நிச்சயதார்த்தம் செய்யும் பொழுது அவருக்கு புரிய
வைக்கப்படுகிறது - புகுந்த வீட்டில் எப்படி நடக்க வேண்டும்.
எல்லோரிடமும் அன்புடன் நடக்க வேண்டும். சண்டை போடக் கூடாது.
இதுவும் முற்றிலும் அவ்வாறே ஆகும். நீங்கள் சர்வகுண சம்பன்ன....
இங்கு ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். சொர்க்கத்தில் இந்த
சண்டை சச்சரவுகள் ஆகியவை இருக்காது.இப்பொழுது நீங்கள் விஷ்ணு
புரியான புகுந்த வீட்டிற்குச் செல்கிறீர்கள். அங்கு
இருப்பவர்கள் மகான் வைஷ்ணவர்கள் ஆவார்கள். அவர்களை போல
வைஷ்ணவர்கள் சிருஷ்டியில் இருப்பதில்லை. வைஷ்ணவ தேவதைகள்
விகாரத்தில் போக மாட்டார்கள் அல்லவா. விகாரம் ஹிம்சை ஆகும்.
அஹிம்சா பரமோ தேவி தேவதா தர்மம் என்று கூறப்படுகிறது. நாம்
பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும்.
இப்பொழுது நாம் விஷ்ணுபுரிக்குச் செல்ல வேண்டும். அங்கு நிறைய
சுகம் இருக்கும் என்பதை அறிந்துள்ளீர்கள். திருமணத்திற்கு
முன்பு கன்னிகை கிழிந்த ஆடையை அணிகிறாள். அதற்கு வனவாசம்
என்பார்கள். உங்களிடம் கூட இப்பொழுது என்ன இருக்கிறது? எதுவுமே
இல்லை. இதுவோ மண்பாண்டங்களின் உடைசல்கள் போல. இங்கு உங்களுக்கு
எந்த ஒரு நகை ஆகியவைகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்
இல்லறத்தில் இருக்க வேண்டும். திருமணம் ஆகியவற்றிற்கு செல்ல
வேண்டும் என்றால் நகைகள் ஆகியவை கூட தாராளமாக அணியுங்கள் என்று
கூறுகிறார். தடை கிடையாது. இல்லை என்றால், இவர்கள் நகை
அணிவதில்லை, விதவை என்பார்கள். பெயர் கெட்டு விடும். அதனால்
பாபா கூறுகிறார் பெயர் கெடுக்கக் கூடாது. எது வேண்டுமானாலும்
அணியுங்கள். தங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு
செய்யுங்கள். எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். இந்த
மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைவில் இருக்கிறோமா
என்று சோதித்து பாருங்கள். இங்கு நாம் பாபாவின் உத்திரவு படி
செல்கிறோம். அவர்களுடனும் கடமையை நிறைவேற்ற வேண்டும்.. ஆனால்
கைகள் காரியம் செய்து கொண்டிருக்க, மனம் நினைவு செய்து
கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது இவர்கள் உறுதியானவர்கள் என்று
நினைக்கலாம். நகைகள் ஆகியவை அணிந்து கொண்டு தாராளமாக
திருமணத்திற்கு செல்லுங் கள். சேர்ந்து இருங்கள். ஆனால்
மகாவீரர் ஆக வேண்டும். சந்நியாசிகளினுடைய விஷயத் தையும்
காண்பிக்கிறார்கள் அல்லவா? குரு வேசியிடம் அனுப்பி விட்டார்.
பாம்பிடம் அனுப்பி விட்டார். யார் தைரியத்துடன் தேர்ச்சி
அடைந்து காண்பிக்கிறார் களோ அவர்களுக்கு மகாவீர் என்று
கூறப்படுகிறது. தந்தையின் நினைவில் இருந்தீர்கள் என்றால்
பின்னர் எந்த ஒரு கர்ம இந்திரியமும் சஞ்சலப்படாது. தந்தையை
மறந்தீர்கள் என்றால் கர்ம இந்திரியங்கள் சஞ்சலப்படும்.
உலகத்திற்கு நீங்கள் அதிபதி ஆகிறீர்கள்.இது குறைவான விஷயமா
என்ன?சந்நியாசிகள் இந்த விஷயங்களை முற்றிலும் அறியாமல் உள்ளார்
கள். சாஸ்திரங் களில் ஒரு சில விஷயங்கள் இருக்கிறது என்றாலும்
கூட குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள். பகவான் கூறுகிறார் -
நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். உயிருள்ளவரையும் ஞான
அமிருதம் பருகிக் கொண்டே இருப்போம். கேட்டுக் கொண்டே இருப்போம்.
இராஜதானி ஸ்தாபனை ஆகி விடும். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள்.
தெய்வீக லட்சணங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று குழந்தைகளுக்கு
அடிக்கடி அறிவுரை அளிக்கப்படுகிறது. எந்த ஒரு விகர்மம் கூட
ஆகாதிருக்கட்டும். இதுவோ அசுரர்களின் காரிய மாகும். நீங்கள்
இப்பொழுது தேவதை ஆகிறீர்கள். எனவே தெய்வீக குணங்களைத் தாரணை
செய்ய வேண்டும். காமத்தின் முள் எல்லாவற்றையும் விட பெரிய
முள்ளாகும். பழக்கம் ஏற்பட்டு விட்டுள்ளது என்றால் அடிக்கடி
விழுந்து விடுகிறார்கள். மாயை ஓங்கி அறைந்து மூர்ச்சை அடையச்
செய்து விடுகிறது. அப்பொழுது தான் ஆச்சரியப்படும் வகையில்
கேட்டார்கள், (பிறருக்கு) கூறினார்கள்..... என்று பாடப்படுகிறது.
இப்பொழுது நீங்கள் ஒரு தந்தை யினுடையவராக ஆகி உள்ளீர்கள். இவை
எல்லாமே இறைவனால் கொடுக்கப்பட்டது என்று கூறவும் செய்கிறீர்கள்.
எனவே நீங்கள் டிரஸ்டியாகி விடுகிறீர்கள். இவை எல்லாமே அவருடையது.
நாம் அவரது ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நமக்கு எல்லாமே
அர்ப்பணம் செய்து நமது ஸ்ரீமத்படி எப்படி நடக்கிறார்கள் என்பதை
தந்தையும் பார்க்கிறார்.எந்த ஒரு தப்பும் தவறு மான செலவு செய்து
பாவ ஆத்மாக்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லையே? ஆரம்பத்தில் இவர்
(பிரம்மா) கூட டிரஸ்டியாகி காண்பித்தார் அல்லவா? எல்லாமே
இறைவனுக்கு அர்ப்பணம் செய்து சுயம் டிரஸ்டியாகி விட்டார்.
அவ்வளவே! யாருக்கும் எதுவுமே கொடுக்கவில்லை. இறைவனின் பொருட்டு
செய்தார். எனவே இறைவனின் காரியத்தில் தான் ஈடுபட வேண்டும்.
சரீர நிர்வாகம் கூட ஆகிக் கொண்டு இருந்தது அல்லவா? எதெல்லாம்
இருந்ததோ எல்லாமே சேவையில் ஈடுபடுத்தி விட்டார். இவரைப்
பார்த்து பின்னர் மற்றவர் களும் அவ்வாறே செய்தார்கள். பட்டி
அமைக்கப்பட்டு விட்டது, .பட்டி நடைபெறாமல் இருந்திருந்தால்
இத்தனை குழந்தைகள் எப்படி சேவைக்காக சாமர்த்தியம் உடையவர்களாக
ஆகி இருக்க முடியும்? பாகிஸ் தானிலும் கற்றுக் கொண்டார்கள்.
பிறகு இங்கு வந்து கற்றுக் கொண்டார்கள். புரிய வைப்பதற்கு
லாயக்காக ஆன பிறகு தான் வெளியில் வந்தார்கள். இப்பொழுதோ
பாருங்கள் எவ்வளவு கண்காட்சிகள் ஆகியவை நடத்திக் கொண்டே
இருக்கிறார்கள். மிகப் பெரியவர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.
இந்த ஞான யக்ஞத்தில் தடைகள் கூட அநேகவிதமாக ஏற்படும் .தடை
களுக்கு பயப்படக் கூடாது. அபலைகள் மீது எவ்வளவு கொடுமைகள்
ஆகின்றன. யோக பலத்தில் இருந்து அவர்களுக்குப் புரிய வையுங்கள்
என்று தந்தை கூறுகிறார். தந்தையாகிய கடவுளின் குழந்தைகளாக ஆன
பிறகும் தந்தையை மறந்து விடுகிறீர்கள். மாயை யினுடையவராக ஆகி
விடுகிறீர்கள். இது கூட வெற்றி தோல்வியின் குத்து சண்டை ஆகும்.
இதுவும் குத்துச் சண்டை போன்றதே ஆகும். மாயை குத்து விடும்
பொழுது மூர்ச்சை அடைந்து விடுகிறார்கள். மாயையிடம் ஒரு பொழுதும்
தோற்று விடக் கூடாது என்று தந்தை கூறுகிறார். தூய்மையாக
இருந்தீர்கள் என்றால் உலகிற்கு அதிபதி ஆகி விடுவீர்கள். எவ்வளவு
பெரிய வருவாய் இது! முழுமையாக முயற்சி செய்ய வில்லை என்றால்
போய் தாச தாசியாக ஆகி விடுவீர்கள். இராஜதானி முழுவதும் இங்கேயே
ஸ்தாபனை ஆகி கொண்டிருக்கிறது .நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயிருள்ளவரையும் ஞான அமிருதம் பருகிக் கொண்டே இருக்க
வேண்டும். மகாவீரர் ஆகி மாயை உடனான குத்துச் சண்டையில் வெற்றி
அடைபவராக வேண்டும். எல்லோருடனும் உறவை பேணிக்காப்பதோடு இதயத்தை
ஒரு தந்தையிடம் வைக்க வேண்டும்.
2. தடைகளுக்கு பயப்படக் கூடாது. சேவையில் தன்னுடைய அனைத்தையும்
பயனுள்ளதாக ஆக்க வேண்டும். ஈசுவர அர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி
இருக்க வேண்டும். எதையுமே தப்பும் தவறுமான காரியத்தில்
ஈடுபடுத்தக் கூடாது.
வரதானம்:
தன்னுடைய முழுமையான (சம்பூர்ண) சொரூபத்தை அழைப்பு விடுப்பதன்
மூலம் வருவது போவதுமான சக்கரத்திலிருந்து விடுபடும் அதிஷ்ட
நட்சத்திரமாக ஆகுக
இப்போது உங்களுடைய சம்பூர்ண நிலை மற்றும் சம்பூர்ண சொரூபத்தை
அழையுங்கள், அப்போது அதே சொரூபம் சதா நினைவில் இருக்கும். பிறகு
எப்போதாவது உயர்ந்த நிலை, எப்போதாவது கீழான நிலைக்கு வந்து
செல்லும் சக்கரம், மீண்டும் மீண்டும் நினைவு மற்றும் மறதி
சக்கரத்திற்கு வருவது, இந்த சக்கரத்திலிருந்து விடுபட்டு
விடுவீர்கள். உலக மனிதர்கள் பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து
விடுபட விரும்புகிறார்கள், நீங்களோ வீண் வி‘யங்களிலிருந்து
விடுபட்டு பிரகாசிக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரங்களாக
ஆகிவிடுகிறீர்கள்.
சுலோகன்:
எந்தவொரு விக்னத்திற்கு (தடைக்கு) வசப்படுவது என்பது
வைரத்தின் மீது கீரல் ஏற்படுத்துவதாகும்.
அவ்யக்த சமிக்ஞை: அபவித்திரதாவின் விதையைக் கூட அழித்துவிட்டு,
சம்பூரண தூய்மையானவராக ஆகுங்கள்
உங்களுடைய ஆதி சொரூபம் பவித்திர தேவதை என்பது போல, இந்த இறுதி
பிறவியும் பவித்திர பிராமண வாழ்க்கை ஆகும், இந்த நினைவின்
அடிப்படையில் பவித்திர வாழ்க்கையை மிக எளிதாக அனுபவம்
செய்யுங்கள். பவித்திரமாக ஆகுங்கள், யோகியாக ஆகுங்கள் - இந்த
மஹாமந்திரமே அனைத்து பிராப்திகளின் சாவி ஆகும். ஒருவேளை
பவித்திரத்தன்மை இல்லை என்றால், யோகி வாழ்க்கை இல்லை, எனில்
அதிகாரியாக இருந்தும் கூட அதிகாரத் தின் அனுபவத்தை செய்ய
முடியாது. இந்த மஹாமந்திரமே அனைத்து பொக்கிசங்களின் அனுபவ
உள்ளுணர்வின் (அனுபூதிக்கான) சாவி ஆகும்.