15-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! உங்கள் அனைவருக்குமே தங்களுக்குள் ஒரு வழி தான் உள்ளது. நீங்கள் தங்களை ஆத்மா என்று உணர்ந்து ஒரு தந்தையை நினைவு செய்கிறீர்கள். அப்பொழுது எல்லா பூதங்களும் ஓடி விடுகின்றன.

கேள்வி:
கோடானு கோடி பாக்கியசாலி ஆவதற்கான முக்கிய ஆதாரம் என்ன?

பதில்:
பாபா என்ன கூறுகிறாரோ அந்த ஒவ்வொரு விஷயத்தையும் தாரணை செய்பவர் களே கோடானு கோடி பாக்கியசாலி ஆகிறார்கள். பாபா என்ன கூறுகிறார் மற்றும் இராவண சம்பிர தாயத்தினர் என்ன கூறுகிறார்கள் என்பதை நியாயப்படுத்தி பாருங்கள். தந்தை அளிக்கும் ஞானத்தை புத்தியிலிருத்துவது, சுயதரிசன சக்கரதாரி ஆவது தான் கோடானு கோடி பாக்கியசாலி ஆவது ஆகும். இந்த ஞானத்தினால் தான் நீங்கள் குணவான் ஆகி விடுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தைக்கு ஆங்கிலத்தில் "ஸ்பிரிச்சுவல் ஃபாதர்" என்று கூறப்படு கிறது. சத்யுகத்திற்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் அங்கு ஆங்கிலமோ அல்லது வேறு எந்த ஒரு மொழியோ இருக்காது. சத்யுகத்தில் நமது இராஜ்யம் இருக்கும் பொழுது அங்கு நம்முடைய மொழி எதுவோ அது தான் நடக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு பின்னால் அந்த மொழி மாறிக் கொண்டே போகிறது. இப்பொழுதோ அனேக மொழிகள் உள்ளன. எப்படி எப்படி இராஜாவோ அப்படி அப்படி அவருடைய மொழி பேசப்படுகிறது. இப்பொழுது எல்லா சென்டர் களிலும் இருக்கும் அனைத்து குழந்தை களுக்கும் ஒரே வழி தான் உள்ளது என்பதை அறிந்துள்ளார்கள். எல்லா பூதங்களும் ஓடி விடும் வகையில் தன்னை ஆத்மா என்று உணர வேண்டும் மற்றும் ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை பதீத பாவனர் ஆவார். எல்லோருக்குள்ளேயும் 5 பூதங்களோ பிரவேசமாகி உள்ளது. ஆத்மாவில் தான் பூதங்களின் பிரவேசம் ஆகிறது. பின் இந்த பூதங்கள் அல்லது விகாரங்களுக்கு தேக அபிமானம், காமம், கோபம் என்று பெயர்கள் கூட இடப்படுகின்றது. அப்படியின்றி இறைவன் ஒன்றும் சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) அல்ல. எப்பொழுதாவது யாராவது இறைவன் சர்வவியாபி என்று கூறினால் ஆத்மாக்கள் சர்வவியாபி ஆவார்கள் மற்றும் இந்த ஆத்மாக்களுக்குள் 5 விகாரங்கள் சர்வவியாபி ஆகும் என்று கூறுங்கள். மற்றபடி பரமாத்மா அனைவருக்குள்ளும் வீற்றிருக் கிறார் என்பதல்ல. பரமாத்மாவிற்குள் 5 பூதங்கள் எப்படி பிரவேசிக்க முடியும்? ஒவ்வொரு விஷயத்தையும் நல்ல முறையில் தாரணை செய்வதால் நீங்கள் கோடானுகோடி பாக்கியசாலி ஆகிறீர்கள். உலகத்தார், இராவண சம்பிரதாயத்தினர் என்ன கூறுகிறார்கள் மற்றும் தந்தை என்ன கூறுகிறார் என்பதை இப்பொழுது தீர்மானியுங்கள். ஒவ்வொருவருடைய சரீரத்திலும் ஆத்மா உள்ளது. அந்த ஆத்மாவில் 5 விகாரங்கள் பிரவேசமாகி உள்ளது. சரீரத்தில் அல்ல. ஆத்மாவில் 5 விகாரங்கள் அல்லது பூதங்கள் பிரவேசம் ஆகிறது. சத்யுகத்தில் இந்த 5 பூதங்கள் இருப்பதில்லை. பெயரே தேவதைகளின் உலகம் (டெய்ட்டி வர்ல்டு). இது டெவில் வர்ல்டு (பேய்களின் உலகம்) ஆகும். டெவில் என்று அசுரர்களுக்குக் கூறப்படுகிறது. எவ்வளவு இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. இப்பொழுது நீங்கள் மாற்றம் அடைந்து கொண்டிருக் கிறீர்கள். அங்கு உங்களுக்குள் எந்த ஒரு விகாரமும், எந்த ஒரு அவகுணமும் இருப்பதில்லை. உங்களுக்குள் முழுமையான குணங்கள் இருக்கும். நீங்கள் 16 கலை சம்பூர்ணம் ஆகிறீர்கள். முதலில் அவ்வாறு இருந்தீர்கள்.பிறகு கீழே இறங்குகிறீர்கள். இந்த சக்கரத்தைப் பற்றி இப்பொழுது தெரிய வந்துள்ளது. 84ன் சக்கரம் எப்படி சுற்றுகிறது? ஆத்மாவாகிய நமக்கு சுயத்தின் தரிசனம் ஆகியுள்ளது. அதாவது இந்த சக்கரத்தின் ஞானம் (நாலேஜ்) கிடைத்துள்ளது. எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் நீங்கள் இந்த ஞானத்தை புத்தியிலிருத்த வேண்டும். தந்தை ஞானத்தைக் கற்பிக்கிறார். இந்த ஆன்மீக ஞானத்தை தந்தை பாரதத்தில் தான் வந்து அளிக்கிறார். நம்முடைய பாரதம் என்று கூறுகிறார்கள் அல்லவா? உண்மையில் இந்துஸ்தான்" என்று கூறுவதோ தவறு ஆகும். பாரதம் சொர்க்கமாக இருக்கும் பொழுது நம்முடைய இராஜ்யம் மட்டுமே இருந்தது. வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். புது உலகமாக இருந்தது. புது டில்லி என்று கூறுகிறார்கள் அல்லவா? டில்லி யின் பெயர் உண்மையில் டில்லி என்று இருக்க வில்லை. பரிஸ்தான் என்று கூறிக் கொண்டி ருந்தார்கள். இப்பொழுதோ புது டில்லி மற்றும் பழைய டில்லி என்று கூறுகிறார்கள். பிறகு பழையதும் இருக்காது. புது டில்லியும் இருக்காது. பரிஸ்தான் என்று அழைக்கப்படும் டில்லியை தலைநகரம் என்கிறார்கள். இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருக்கும். வேறு எதுவும் இருக்காது. நம்முடையதே இராஜ்யம் இருக்கும். இப்பொழுதோ ராஜ்யம் இல்லை. எனவே நமது பாரததேசம் என்று மட்டுமே கூறுகிறார்கள். இராஜாக்களோ இல்லை. குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் முழு ஞானத்தின் சக்கரம் சுற்றுகிறது .உண்மையில் முதன் முதலில் இந்த உலகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. வேறு எந்த இராஜ்யமும் இருக்கவில்லை. யமுனாவின் கரையோரம் இருந்தது. அதற்கு பரிஸ்தான் என்று கூறப்பட்டது. தேவதைகளின் தலை நகரம் டில்லியாகத் தான் இருந்தது. எனவே எல்லோருக்கும் கவர்ச்சி ஏற்படுகிறது. எல்லாவற்றையும் விட பெரியதாகவும் உள்ளது. முற்றிலும் (சென்டரில்) நடுவில் உள்ளது.

பாவங்களோ அவசியம் ஏற்பட்டுள்ளது. பாவ ஆத்மாக்களாக ஆகி விட்டுள்ளோம் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அறிந்துள்ளார்கள். சத்யுகத்தில் புண்ணிய ஆத்மாக் கள் இருப்பார்கள். தந்தை தான் வந்து பாவனமாக ஆக்குகிறார். அவருக்கு நீங்கள் சிவ ஜெயந்தி கூட கொண்டாடுகிறீர்கள். இப்பொழுது ஜெயந்தி என்ற வார்த்தை எல்லா பிறந்த நாட்களுக்கும் பொருந்துகிறது. இதற்குப் பின் சிவராத்திரி என்று கூறுகிறார்கள். இராத்திரி என்பதன் பொருளோ உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நல்ல நல்ல வித்வான்கள் ஆகியோருக்குக் கூட யாருக்குமே சிவராத்திரி என்பது என்ன என்று தெரியாது. பின் என்ன கொண்டாடுவார்கள்? இராத்திரியின் பொருள் என்ன என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். இந்த 5 ஆயிரம் வருடங்களின் சக்கரத்தில் சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டு அமைந்துள்ளது. சுகம் என்று பகலுக்குக் கூறப்படுகிறது. துக்கம் என்று இரவிற்குக் கூறப்படுகிறது. எனவே இரவு மற்றும் பகலுக்கிடையில் வருவது சங்கமம் ஆகும். அரைகல்பம் இருப்பது பிரகாசம். அரை கல்பம் இருப்பது இருள். பக்தியிலோ நிறைய விஸ்தாரம் நடக்கிறது. இங்கு இருப்பது ஒரு நொடியின் விஷயம் ஆகும். முற்றிலும் சுலபமானது, சகஜ யோகம் ஆகும். நீங்கள் முதலில் முக்திதாமம் செல்ல வேண்டும். பிறகு நீங்கள் ஜீவன் முக்தி மற்றும் வாழ்க்கை பந்தனத்தில் எவ்வளவு காலம் இருக்கிறீர்கள் என்பதோ குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு இருக்கிறது. பிறகும் அடிக்கடி மறந்து விடு கிறீர்கள். யோகம் என்ற வார்த்தை சரியானது. ஆனால் அவர் களுடையது உடல் சம்பந்தப்பட்ட யோகம் என்று தந்தை புரிய வைக்கிறார். இது ஆத்மாக்களின் பரமாத்மாவுடன் யோகம். சந்நியாசிகள் அனேகவிதமான ஹடயோகம் ஆகியவற்றைக் கற்பிக்கிறார்கள். எனவே மனிதர் கள் குழம்புகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையுமாக இருக்கிறார். பின் ஆசிரியராகவும் இருக்கிறார். எனவே அவருடன் யோகம் கொள்ள வேண்டும் அல்லவா? ஆசிரியரிடம் படிக்க வேண்டி இருக்கும். குழந்தை ஜன்மம் எடுத்த உடன் முதலில் தந்தையிடம் யோகம் இருக்கும், பிறகு 5 வருடங்களுக்குப் பிறகு ஆசிரியரிடம் யோகம் கொள்ள வேண்டி இருக்கிறது. பிறகு வானப்பிரஸ்த நிலையில் குருவிடம் யோகம் கொள்ள வேண்டி இருக்கும். மூவர் முக்கியமானவர்கள் நினைவில் இருப்பார்கள். அவர்கள் தனித் தனியானவர் களாக இருப்பார்கள். இங்கு ஒரே ஒரு முறை தந்தை வந்து தந்தையும் ஆகிறார், ஆசிரியரும் ஆகிறார். அதிசயம் ஆகும் அல்லவா? அப்பேர்ப்பட்ட தந்தையையோ அவசியம் நினைவு செய்ய வேண்டும். ஜன்ம ஜன்மாந்திர மாக மூவரையும் தனித்தனியாக நினைவு செய்து கொண்டே வந்துள்ளீர்கள். சத்யுகத்தில் கூட தந்தையிடம் யோகம் இருக்கும். பிறகு ஆசிரியரிடம் இருக்கும். படிப்பதற்கோ செல்வார்கள் அல்லவா? மற்றபடி அங்கு குருவின் அவசியம் இருக்காது. ஏனெனில் எல்லோரும் சத்கதியில் இருப்பார்கள். இந்த எல்லா விஷயங்களையும் நினைவு செய்வதில் என்ன கஷ்டம் உள்ளது? முற்றிலுமே சுலபமானது ஆகும். இதற்கு சகஜயோகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது அசாதாரணமானது ஆகும். நான் இந்த உடலை தாற்காலிகமாகக் கடன் எடுக்கிறேன். அதுவும் எவ்வளவு குறுகிய காலத்திற்கு எடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். 60 வருடங்களில் வானப்பிரஸ்த நிலை ஆகிறது. அறுபது வந்தால் ஆதாரம் (கைத்தடி) வேண்டும் என்பார்கள். இச்சமயம் எல்லோருக்கும் கைத்தடி இருந்து கொண்டே உள்ளது. எல்லோரும் வானப்பிரஸ்த நிலை, நிர்வாண தாமத் திற்குச் செல்வார்கள். அது (ஸ்வீட் ஹோம், ஸ்வீட்டெஸ்ட் ஹோம்) இனிமையான இல்லம், மிகவும் இனிமையான இல்லம் ஆகும். அதற்காகத் தான் எவ்வளவு அதிகமாக பக்தி செய்தீர்கள்? இப்பொழுது சக்கரம் சுற்றி வந்துள்ளீர்கள். மனிதர் களுக்கு இது எதுவுமே தெரியாது. சும்மாவே இலட்சக் கணக்கான வருடங்களின் சக்கரம் ஆகும் என்று பொய்யாகக் கூறி விட்டுள்ளார்கள். இலட்சக்கணக்கான வருடங்களின் விஷயமாக இருந்தது என்றால் பின் ஓய்வு எடுக்க முடியாது. உங்களுக்கு (ரெஸ்ட்) ஓய்வு கிடைப்பதே கடினமாக ஆகி விடும். உங்களுக்கு (ரெஸ்ட்) ஓய்வு கிடைக்கிறது. அதற்கு சைலன்ஸ் ஹோம், இன்கார்ப்போரியல் வர்ல்டு (இனிமையான இல்லம், நிராகாரி உலகம்) என்று கூறப்படுகிறது. இது ஸ்தூலமான (ஸ்வீட் ஹோம்) இனிமையான இல்லம் ஆகும். அது (மூல ஸ்வீட் ஹோம்) மூல இனிய இல்லம். ஆத்மா முற்றிலுமே சிறிய ராக்கெட் ஆகும். அதை விட வேகமாகச் செல்லக் கூடியது எதுவுமே இருக்காது. இதுவோ எல்லாவற்றையும் விட வேகமானது. ஒரு நொடியில் சரீரம் விட்ட உடனேயே ஓடிப் போய் விடும். மற்றொரு சரீரமோ தயாராக இருக்கும். நாடகப்படி நேரம் முடியும் பொழுது ஆத்மா சென்றே ஆக வேண்டி உள்ளது. நாடகம் எவ்வளவு (அக்யூரேட்) துல்-யமாக அமைந்துள்ளது. இதில் எந்த ஒரு (இன் அக்யூரேசி) பிழையும் இருக்காது. இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை கூட நாடகப்படி முற்றிலுமே மிகச் சரியான நேரத்தில் வருகிறார். ஒரு நொடி கூட வித்தியாசம் ஏற்பட முடியாது. இவருக்குள் தந்தை பகவான் இருக்கிறார் என்பது எப்படித் தெரிய வரும்? நாலேஜ் (ஞானம்) அளிக்கும் பொழுது, குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கும் பொழுது. சிவராத்திரி கூட கொண்டாடு கிறார்கள் அல்லவா? சிவனாகிய நான் எப்பொழுது, எப்படி வருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. சிவராத்திரி கிருஷ்ண இராத்திரி கொண்டாடுகிறார்கள். இராமருடையதைக் கொண்டாடு வதில்லை. ஏனெனில் வித்தியாசம் ஏற்பட்டு விட்டது அல்லவா? சிவராத்திரியுடன் கிருஷ்ணரி னுடையதும் இராத்திரி கொண்டாடிக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள். இங்கு இருப்பதே அசுர இராவண இராஜ்யம் ஆகும். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இவரோ பாபா ஆவார்.முதியவரை பாபா என்பார்கள். சிறிய குழந்தைகளை பாபா என்று கூறுவார்களா என்ன? ஒரு சிலர் அன்பினால் கூட குழந்தையை பாபா (அப்பா) என்று கூறி விடுகிறார்கள். அதுபோல அவர்களும் கிருஷ்ணரை அன்புடன் கூறி விட்டுள்ளார்கள். ஒருவர் பெரியவராகி பின் குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு தான் பாபா (தந்தை) என்று கூறப்படுகிறது. கிருஷ்ணரோ அவரே இளவரசர் ஆவார். அவருக்கு குழந்தைகள் எங்கிருந்து வந்தார்கள்? நான் வயோதிகரின் உடலில் வருகிறேன் என்றே தந்தை கூறுகிறார். சாஸ்திரங்களில் கூட இருக்கிறது. ஆனால் சாஸ்திரங்களின் எல்லா விஷயங்களும் மிகச் சரியாக (ஏக்யூரேட்) இருப்பதில்லை. ஒரு சில விஷயங்கள் சரியாக உள்ளன. பிரம்மாவின் ஆயுள் என்றால் பிரஜாபிதா பிரம்மாவின் ஆயுள் என்று கூறுவார்கள். அவரோ அவசியம் இச்சமயத்தில் தான் இருப்பார். பிரம்மாவின் ஆயுள் மரண உலகத்தில் முடிந்து போய் விடும். இது ஒன்றும் அமரலோகம் அல்ல. இதற்கு புருஷோத்தம சங்கமயுகம் என்று கூறப்படுகிறது. இது குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இருக்க முடியாது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்கள் பிறவிகள் பற்றி அறியாமல் உள்ளீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் என்பதை நான் கூறுகிறேன் என்று தந்தை வந்து கூறுகிறார். எப்படி? என்பது கூட உங்களுக்குத் தெரிந்து விட்டது. ஒவ்வொரு யுகத்தின் ஆயுள் 1250 வருடங்கள் ஆகும். மேலும் இவ்வளவு இவ்வளவு பிறவிகள் எடுத்துள்ளீர்கள். 84 பிறவிகளின் கணக்கு உள்ளது அல்லவா? 84 இலட்சத்தினுடைய கணக்கு இருக்க முடியாது. இதற்கு 84 பிறவியின் சக்கரம் என்று கூறப்படுகிறது. 84 இலட்சத்தினுடைய விஷயங்களோ நினைவிலேயே வராது. இங்கு எவ்வளவு அளவற்ற துக்கம் உள்ளது! எப்படி துக்கம் கொடுக்கக் கூடிய குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்! இதற்கு கோரமான நரகம் என்று கூறப்படுகிறது. முற்றிலுமே சீ சீ உலகம் ஆகும். இப்பொழுது நாம் புது உலகத்திற்குச் செல்வ தற்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாவங்கள் நீங்கி விட்டது என்றால் நாம் புண்ணிய ஆத்மா ஆகி விடுவோம். இப்பொழுது மேற்கொண்டு எந்த பாவமும் செய்யக் கூடாது. ஒருவர் மீது ஒருவர் காம வாள் செலுத்துவது முதல், இடை, கடை துக்கம் கொடுப்பது ஆகும். இப்பொழுது இந்த இராவண இராஜ்யம் முடிவடைகிறது. இப்பொழுது கலியுகத்தின் கடைசி ஆகும்.இது கடைசி மகாபாரதப் போர் ஆகும். பிறகு எந்த ஒரு சண்டை ஆகியவை இருக்கவே இருக்காது. அங்கு எந்த ஒரு யக்ஞம் (வேள்வி) ஆகியவை இயற்றப்படுவதில்லை. வேள்வி படைக்கும் பொழுது அதில் (ஹவன்) எரிக்கிறார்கள். குழந்தைகள் தங்களுடைய பழைய சாமான்கள் எல்லாமே ஸ்வாஹா செய்து விடுகிறார்கள். இது ருத்ர ஞான யக்ஞம் என்பது பற்றி இப்பொழுது தந்தை புரிய வைத்துள்ளார். ருத்ரன் என்று சிவன் அழைக்கப்படுகிறார். ருத்ர மாலை என்று கூறுகிறார்கள் அல்லவா? துறவற மார்க்கத்தினருக்கு இல்லற மார்க்கத்தின் பழக்க வழக்கம் பற்றி எதுவும் தெரியாது அவர்களோ வீடு வாசலை விட்டு விட்டு காட்டிற்குச் சென்று விடுகிறார்கள். பெயரே சந்நியாசம் என்பதாகும். எதனுடைய சந்நியாசம்? வீடு வாசலின் சந்நியாசம். வெறுங்கையுடன் வெளியேறு கிறார்கள். முதலிலோ குருக்கள் நிறைய பரீட்சிக்கிறார்கள். வேலை வாங்குகிறார்கள். முதலில் யாசிப்பதில் மாவு மட்டும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். சமைத்த பொருளை வாங்க மாட்டார் கள். அவர்கள் காட்டில் தான் இருக்க வேண்டும். அங்கு இந்த மூலிகை, பழங்கள் ஆகியவை கிடைக்கும். சதோபிரதான சந்நியாசியாக இருக்கும் பொழுது இதை உட்கொள்கிறார்கள் என்ற பாடலும் உள்ளது. இப்பொழுதோ கேட்கவே வேண்டாம் என்னவெல்லாம் செய்து கொண்டே இருக்கிறார்கள்! இதனுடைய பெயரே விகாரி உலகம் (விஷியஸ் வர்ல்டு) என்பதாகும். அது நிர்விகாரி உலகம் (வைஸ்லெஸ் வர்ல்டு) ஆகும். எனவே தங்களை (விஷியஸ்) விகாரி என்று உணர வேண்டும் அல்லவா? சத்யுகத்திற்கு சிவாலயம் (வைஸ்லெஸ் வர்ல்டு) நிர்விகாரி உலகம் என்று கூறப்படுகிறது என்று தந்தை கூறுகிறார். இங்கோ எல்லோருமே பதீதமான மனிதர்களாக உள்ளார்கள். எனவே தேவி தேவதை என்பதற்குப் பதிலாக பெயரே ஹிந்து என்று வைத்து விட்டுள்ளார்கள். தந்தையோ எல்லா விஷயங்களையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் உண்மையில் இருப்பதே எல்லையில்லாத தந்தையின் குழந்தை களாக. அவரோ உங்களுக்கு 21 பிறவிகளின் ஆஸ்தியை அளிக்கிறார். எனவே தந்தை, "ஜன்ம ஜன்மாந் திரங்களின் பாவங்கள் உங்கள் தலை மீது உள்ளது என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். பாவங்களிலிருந்து விடுபடுவதற்காகத் தான் நீங்கள் அழைக்கிறீர்கள். சாது, சந்நியாசி ஆகிய எல்லோருமே ஹே பதீத பாவனரே என்று அழைக் கிறார்கள். பொருள் எதுவும் புரியாமல் உள்ளார்கள். அப்படியே பாடிக் கொண்டு இருக்கிறார்கள். கை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பரமாத்மாவுடன் யோகம் எப்படி செய்வது, அவரை எப்படி சந்திப்பது என்று யாராவது அவர்களிடம் கேட்டால் அவரோ சர்வ வியாபி ஆவார் என்று கூறி விடுவார்கள். இது தான் வழி கூறுவதா என்ன? வேத சாஸ்திரங்கள் படிப்பதால் பகவான் கிடைப்பார் என்று கூறி விடுவார்கள். ஆனால் நான் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் நாடகத்திட்டப்படி வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இந்த நாடகம் பற்றிய இரகசியம் தந்தையைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான வருடங்களின் நாடகமோ இருக்கவே முடியாது. இது 5 ஆயிரம் வருடங்களின் விஷயம் ஆகும் என்பதை இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். மன் மனாபவ என்று முந்தைய கல்பத்திலும் பாபா கூறி இருந்தார். இது மகா மந்திரம் ஆகும்.மாயை மீது வெற்றி அடைவதற் கான மந்திரம் ஆகும். தந்தை தான் வந்து பொருளைப் புரிய வைக்கிறார். வேறு யாருமே அர்த்தத்தைப் புரிய வைப்பதில்லை. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் (சத்கதி தாதா) ஒருவர் என்றும் பாடப்பட்டுள்ளது அல்லவா? எந்த ஒரு மனிதரும் ஆக முடியாது. தேவதைகளினுடைய விஷயமும் கிடையாது. அங்கோ சுகமே சுகமாக இருக்கும். அங்கு யாரும் பக்தி செய்வ தில்லை. பகவானை அடைவதற்காகத் தான் பக்தி செய்யப்படுகிறது. சத்யுகத்தில் பக்தி இருப்ப தில்லை. ஏனெனில் 21 பிறவிகளின் ஆஸ்தி கிடைத்துள்ளது. அதனால் தான் துக்கத்தில் நினைவு செய்வார்கள் என்றும் பாடப்பட்டுள்ளது. இங்கோ ஏராளமான துக்கம் உள்ளது. பகவான் கருணை புரியுங்கள் என்று அடிக்கடி கூறுகிறார்கள். இந்த கலியுக துக்கமான உலகம் எப்பொழுதும் இருக்காது. சத்யுகம், திரேதா கடந்து விட்டுள்ளது. மீண்டும் ஆகும். இலட்சக் கணக்கான வருடங்களின் விஷயமோ நினைவும் இருக்க முடியாது. இப்பொழுது தந்தையோ முழு ஞானம் அளிக்கிறார். தனது அறிமுகமும் கொடுக்கிறார் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை பற்றிய இரகசியத்தையும் புரிய வைக்கிறார். 5 ஆயிரம் வருடங்களின் விஷய மாகும். குழந்தைகளாகிய உங்களின் கவனத்தில் வந்து விட்டுள்ளது. இப்பொழுதோ அந்நிய இராஜ்யத்தில் உள்ளீர்கள். உங்களுக்கு தங்களுடையதென்று இராஜ்யம் இருந்தது. இங்கோ யுத்தத்தின் மூலம் தங்களது இராஜ்யத்தைப் பெறுகிறார்கள். ஆயுதங்கள் மூலமாக, அடிதடி மூலமாக தங்களது இராஜ்யத்தை அடைகிறார்கள். குழந்தைகளாகிய நீங்களோ யோக பலத்தினால் உங்களது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சதோபிரதான உலகம் வேண்டும். பழைய உலகம் முடிந்து போய் புது உலகம் அமைகிறது. இதற்கு கலியுக பழைய உலகம் என்று கூறப்படுகிறது. சத்யுகம் புது உலகம் ஆகும். இது கூட யாருக்கும் தெரியாது. சந்நியாசிகளோ இது உங்களுடைய கற்பனை என்று கூறி விடுகிறார்கள். இங்கேயே சத்யுகம் உள்ளது. இங்கேயே கலியுகம் உள்ளது என்று. தந்தையை அறிந்தவர் ஒருவர் கூட இல்லை என்று இப்பொழுது தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். ஒரு வேளை அவ்வாறு தெரிந்து இருந்திருந்தால் அறிமுகம் அளித்திருப் பார்கள். சத்யுகம் திரேதா என்பது என்ன என்று எவருடைய புத்தியிலாவது வருகிறதா என்ன? குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை நல்ல முறையில் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். தந்தை தான் எல்லாமே அறிந்துள்ளார். அனைத்தும் அறிந்தவர் அதாவது நாலேஜ்ஃபுல் ஆவார். மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். ஞானக் கடல் சுகக்கடல் ஆவார். அவரிடமிருந்து தான் நமக்கு ஆஸ்தி கிடைக்க வேண்டி உள்ளது. தந்தை (நாலேஜ்) ஞானத்தில் தனக்கு சமானமாக ஆக்குகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இது பாவங்களிலிருந்து விடுபடுவதற்கான நேரம் ஆகும். எனவே இப்பொழுது மேற் கொண்டு எந்த பாவமும் செய்யக் கூடாது. பழைய எல்லா சாமான்களையும் இந்த ருத்ர யக்ஞத்தில் ஸ்வாஹா செய்ய வேண்டும்.

2. இப்பொழுது வானப் பிரஸ்த நிலை ஆகும். எனவே தந்தை, ஆசிரியருடன் கூடவே சத்குருவையும் நினைவு செய்ய வேண்டும். ஸ்வீட் ஹோம் - இனிமையான இல்லத்திற்குச் செல்வதற்காக ஆத்மாவை சதோபிரதானமாக (பாவனமாக) ஆக்க வேண்டும்.

வரதானம்:
தனது சூட்சும பலவீனங்கள் பற்றி சிந்தனை செய்து பரிவர்த்தனை செய்து விடக்கூடிய சுய சிந்தனையாளர் ஆவீர்களாக.

ஞானத்தின் (பாயிண்ட்ஸ்) குறிப்புகளை (ரிபீட்) திருப்பி சொல்வது, மற்றவர்களுக்கு கூறுவது மற்றும் கேட்பது மட்டுமே சுய சிந்தனை அல்ல. ஆனால் சுய சிந்தனை என்றால் தனது சூட்சும பலவீனங்கள், தனது சிறு சிறு தவறுகள் பற்றி சிந்தனை செய்து அவற்றை நீக்குவது, பரிவர்த்தனை செய்வது - இதுவே சுய சிந்தனையாளர் ஆவது ஆகும். எல்லா குழந்தைகளும் ஞானத்தின் (மனனம்) சிந்தனையோ மிகவும் நன்றாகவே செய்கிறார்கள். ஆனால் ஞானத்தை சுயத்தின் பொருட்டு பயன்படுத்தி தாரணையின் சொரூபம் ஆவது, சுயத்தை பரிவர்த்தனை செய்வது - இதற்கான மதிப்பெண்கள் தான் (ஃபைனல் ரிசல்ட்) இறுதி முடிவில் கிடைக்கும்.

சுலோகன்:
ஒவ்வொரு நேரமும் செய்பவரும் செய்விப்பவருமான பாபா நினைவில் இருந்தார் என்றால், நான் என்ற தன்மையின் அபிமானம் வரமுடியாது.