15.12.24 காலை முரளி
ஓம் சாந்தி 28.02.2003 பாப்தாதா,
மதுபன்
சேவையின் கூடவே இப்போது முழுமை ஆவதற்கு திட்டம் போடுங்கள் -
கர்மாதீத் நிலை அடைய ஆர்வம் வையுங்கள்.
இன்று சிவ தந்தை தனது சாலிகிராம் குழந்தைகளோடு தனது மற்றும்
குழந்தைகளின் அவதார நன்னாளை கொண்டாட வந்துள்ளார். இந்த அவதார
தினம் எவ்வளவு அதிசயமானது. தந்தை குழந்தைகளுக்கும், குழந்தைகள்
தந்தைக்கும் பன்மடங்கு வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டிருக்
கின்றனர். நாலாபுறமும் குழந்தைகள் குசியில் உள்ளனர். ஆஹா, பாபா,
ஆஹா நாம் சாலிகிராம் ஆத்மாக்கள். ஆஹா, ஆஹா எனும் பாடல் பாடிய
வண்ணம் உள்ளனர். உங்களுடைய பிறந்த நாளான இந்த நாளையே
நினைவார்த்தமாக துவாபர யுகத்திலிருந்து இன்று வரையிலும்
கொண்டாடி வருகின்றனர். பக்தியும் பாவனையில் குறைந்தது அல்ல.
ஆனால் பக்தர்கள் தான், குழந்தைகள் அல்ல. அவர்கள் ஒவ்வொரு
ஆண்டும் கொண்டாடுகிறார்கள், நீங்கள் கல்பத்தில் ஒருமுறை அவதார
தினத்தை கொண்டாடுகின்றீர்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விரதம்
வைக்கின்றார்கள், விரதம் வைப்பார்கள், விரதம் எடுப்பார்கள்.
நீங்கள் ஒரே ஒருமுறை விரதம் மேற்கொள்கின்றீர்கள். உங்களைப்
பார்த்தே அவர்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் உங்களுக்கும்
அவர்களுக்கும் மகிமை யில் வேறுபாடு உள்ளது. அவர்களும்
தூய்மைக்கான விரதம் எடுக்கின்றார்கள், ஆனால் ஒவ்வொரு ஆண்டும்
ஒரு நாளுக்காக விரதம் எடுக்கின்றார்கள். நீங்கள் பிறந்த உடனேயே
(சங்கமயுக பிராமணராக) தூய்மைக்கான விரதம் எடுத்துள்ளீர்கள்.
எடுத்துள்ளீர்களா? எடுக்க வேண்டுமா? எடுத்து விட்டீர்களா?
ஒருமுறை எடுத்தீர்களா, அவர்கள் ஒவ்வொரு வருடமும் எடுப்பார்கள்.
நீங்கள் அனைவரும் எடுத்தீர்களா? பிரம்மச்சரியம் மட்டும் அல்ல,
முழுமையான தூய்மைக்கான விரதம் எடுத்தீர்களா? பாண்டவர்கள் முழு
தூய்மைக்கான விரதம் எடுத்தீர்களா? பிரம்மச்சரியத்தில் இருப்பது
மட்டுமே போதுமானதா? பிரம்மச்சரியம் என்பது அஸ்திவாரம். ஆனால்
பிரம்மச்சரியம் மட்டுமல்ல, அதோடு மேலும் நான்கு உள்ளது.
நான்கிலும் விரதம் எடுத்தீர்களா? ஒன்று மட்டும் எடுத்தீர்களா?
சோதனை செய்யுங்கள். கோபம் கொள்ள அனுமதி உள்ளதா? இல்லையா?
அவ்வப்போது சிறிதளவு கோபம் கொள்ள வேண்டியுள்ளதல்லவா? இல்லையா!
பாண்டவர் கள் கூறுங்கள் இல்லையா? கோபம் கொள்ள வேண்டும் தானே!
சரி, பாப்தாதா பார்க்கின்றார்: கோபத்தின் நண்பர்கள் உள்ளனர்,
பெரிய பூதத்தை தியாகம் செய்து விட்டீர்கள், குடும்பத்தில் உள்ள
தாய்மார்களுக்கும் பெரிய குழந்தைகள் மீது கூட அவ்வளவு அன்பு
இருப்பதில்லை, மோகம் இருப்பதில்லை, ஆனால் பேரன், பேத்திகள் மீது
மிகுந்த அன்பு உள்ளது. சின்னஞ்சிறிய குழந்தைகள் மீது அதிக அன்பு
உள்ளது. அவ்வாறே இங்கும் குழந்தைகளுக்கு பெரிய பூதங்களான 5
விகாரங்கள் மீது அன்பு குறைந்துள்ளது என்பதை பாப்தாதாவும்
பார்க்கின்றார். ஆனால் இந்த பூதங்களின் குழந்தை குட்டிகள் மீது
சின்னச் சின்ன அம்சம் மீது சிறிதளவு அன்பு உள்ளது. சில சமயம்
அன்பு ஏற்படுகிறது. ஏற்படுகிறது தானே! தாய்மார்களுக்கு! இரட்டை
அயல் நாட்ட வருக்கு கோபம் வருவதில்லையா! சில குழந்தைகள் மிகவும்
புத்திசாலித் தனமாக பேசுகிறார்கள், சொல்லட்டுமா? என்ன
பேசுகிறார்கள் என்று? சொல்லட்டுமா? சொல்லிவிட்டால் இன்றே
விட்டுவிட வேண்டும். தயாரா! விடத் தயாரா? அல்லது கோப்பில் (பையில்)
காகிதத்தை சேர்த்து வைப்பீர்களா? வருடா வருடம் செய்துபோல்
பாப்தாதாவிடம் உறுதிமொழி கோப்புகள் அதிகமாகிக்
கொண்டேயிருக்கின்றது. அவ்வாறே இப்போதும் உறுதிமொழி கோப்புகளை
சேர்த்துக் கொண்டே செல்வீர்களா? அப்படி இல்லை தானே! முடிவு
செய்வீர்களா? அல்லது கோப்பில் வைப்பீர்களா? என்ன செய்வீர்கள்?
கூறுங்கள். டீச்சர்கள் என்ன செய்வீர்கள்? செய்து முடிப்பீர்களா?
கை உயர்த்துங்கள். உறுதிமொழி கொடுக்காமல் இருக்காதீர்கள்.
பாப்தாதா பிறகு சிறிது தனது ரூபத்தை காண்பிப்பார். சரியா?
இரட்டை அயல் நாட்டவர் செய்து முடிப்பீர்களா? செய்து
முடிப்பவர்கள் கை உயர்த்துங்கள். வீடியோ காட்சியில் எடுங்கள்.
சிறிய கை அல்ல, கையை உயரமாக உயர்த்துங்கள். நல்லது. சரி.
தந்தை மற்றும் குழந்தைகளின் விசயம் என்னவென்று கேட்டீர்களா?
பாப்தாதா புன்னகை செய் கின்றார். ஏன் கோபப்பட்டீர்கள் என்று
பாபா கேட்கின்றார்? ஆனால் கூறுகிறார்கள் நான் கோபப் படவில்லை,
என்னை கோபப்படுத்தினார்கள், நான் கோபம் கொள்ளவில்லை, என்
கோபத்தை தூண்டி னார்கள். இப்போது பாபா என்ன சொல்வது? பிறகு
என்ன கூறுகின்றார்கள் தெரியுமா? நீங்களே அங்கு இருந்தாலும்
உங்களுக்கே கோபம் வரும். இவ்வாறாக இனிமையாக பேசுகிறார்கள்.
பிறகு கூறுகின்றார்கள், பாபா நீங்கள் புள்ளி ரூபம் மாற்றி
மானுடலில் வந்து பாருங்கள் என்று. இப்போது கூறுங்கள்
இப்படிப்பட்ட இனிமையான குழந்தைகளுக்கு பாபா என்ன கூறுவார்?
பாபாவிற்கு இரக்கம் தான் வருகின்றது. சரி நல்லது. இப்போது
மன்னிக்கின்றேன், இனி அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறுகின்றார்.
ஆனால் குழந்தைகள் மிக நல்ல நல்ல பதில் தருகிறார்கள்.
தூய்மை என்பது பிராமணர்களாகிய உங்களுக்கு மிகப்பெரியதிலும்
பெரிய அலங்காரம். எனவே உங்களுடைய படங்களுக்கு (சித்திரங்கள்)
எவ்வளவு அலங்காரம் செய்கின்றனர். இது தூய்மையின் நினைவார்த்
தமான அலங்காரம். தூய்மை, சம்பூரண தூய்மை. மேலோட்டமான தூய்மை
அல்ல. சம்பூரணத் தூய்மை உங்கள் வாழ்வின் மிகப் பெரிய சொத்து.
ராயல்ட்டி (தனித்தன்மை), பர்சனாலிட்டி (ஆளுமை). எனவே பக்தர்
களும் ஒரு நாள் தூய்மைக்கான விரதம் கையாளுகிறார்கள். அது
உங்களைப் பின்பற்றியே செய்கிறார்கள். இரண்டாவது
அன்ன-ஆகாரத்திலும் விரதம் கையாளு கின்றார்கள். அதுவும்
அவசியமாகின்றது. ஏன்? பிராமணர்களாகிய நீங்களும் அன்ன ஆகாரத்தில்
உறுதியான விரதம் கடைபிடித்தீர்கள். மதுபன் செல்ல படிவம்
நிரப்பும் போது உணவைப்பற்றியும் நிரப்புகின்றீர்கள். உணவில்
தூய்மை உள்ளதா? நிரப்புகிறீர்கள் தானே! அன்ன ஆகாரத்தில்
தூய்மையை உறுதியாக கடைபிடிக்கின்றீர்களா? உறுதியா, அல்லது
அவ்வப்பொழுது அலட்சியமா? இரட்டை அயல் நாட்டவர்கள் இரட்டை
உறுதியா, அல்லது சில சமயம் தொய்வடைந்து பரவா யில்லை, இன்று
சாப்பிடலாம் என்று சாப்பிட்டு விடுவீர்களா? சிறிது அலட்சியம்
வந்து விடுகிறதா, இல்லையா? உணவில் தூய்மை முழுமையாக உள்ளதா?
எனவே தான் பக்தர்களும் உணவில் விரதம் கையாளுகின்றார்கள்.
மூன்றாவது விரம் கண்விழிப்பதில், இரவில் கண் விழிக்கின்றனர்.
பிராமணர்களாகிய நீங்களும் அறியாமை உறக்கத்திலிருந்து விழிக்கும்
விரதம் எடுக்கின்றீர்கள். இடையிடையே அறியாமை உறக்கம்
வருவதில்லையே. பக்தர்கள் உங்களை பின்பற்றுகிறார்கள். நீங்கள்
உறுதியாக இருப்பதாலே தான் பின்பற்றுகிறார்கள், எப்போதாவது
அறியாமை, பலவீனம், சோம்பல், அலட்சியம் எனும் உறக்கம்
வருவதில்லையே! இடையிடையே கண்ணை கட்டுகிறதா? அமிர்த வேளையில்
கூட சிலர் தூங்கி விழுகின்றார்கள். ஆனால் நமது நினைவார்த்தமாக
பக்தர் கள் என்னவெல்லாம் காப்பி செய்கிறார்கள். என்ன ஆனாலும்
விரதத்தை விடுவதில்லை. அந்தள விற்கு உறுதியாக இருக்கின்றார்கள்.
இன்றைய நாளில் பக்தர்கள் அன்ன ஆகாரத்தில் விரதம் இருக்
கின்றார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் இன்று? பிக்னிக்
செய்வீர்களா? அவர்கள் விரதம் இருக் கிறார்கள். நீங்கள் பிக்னிக்
செய்வீர்களா, கேக் வெட்டுவீர்களா. பிக்னிக் செய்யலாம். ஏனெனில்
நீங்கள் பிறந்ததிலிருந்தே (பிராமணர்கள் ஆனவுடனே) விரதம்
எடுத்தீர்கள். எனவே இன்று பிக்னிக் செய்யலாம். பாப்தாதா
குழந்தைகளிடம் இப்போது என்ன விரும்புகின்றார்? தெரியுமல்லவா?
மிக நல்ல சங்கல்பம் செய்கிறீர்கள். அதனை கேட்க கேட்க மனம்
மகிழ்கின்றது. சங்கல்பம் வைக் கின்றீர்கள், ஆனால் பிறகென்ன
ஆகின்றது? எண்ணம் ஏன் பலவீனமாகின்றது? விரும்புகின்றீர்கள்,
பாபாவிடமும் அன்பு அதிகம் உள்ளது. பாப்தாதாவிடம் குழந்தைகளுக்கு
அன்பு அதிகம் உள்ளது. அன்பு என்று கூறினாலே அனைவரும் கையை
உயர்த்துகின்றார்கள். 100 சதவிகிதம் என்ன 100 சதவிகிதத்தை விட
அதிகமாக அன்பு உள்ளது. தந்தையும் ஏற்றுக் கொள்கின்றார். அன்பில்
அனைவரும் வெற்றியே! ஆனால் என்ன? ஆனால் என்பதில்லையா? ஆனால்
என்பது வருகிறதா? இல்லையா? பாண்டவர் களுக்கு இடையிடையே ஆனால்
என்பது வருகிறதா? இல்லை என்று கூறவில்லையே! அப்படியானால் ஆம்
என்று தானே பொருள். பாப்தாதா பெரும்பான்மையான குழந்தைகளிடம்
பார்த்தார்: உறுதி பலவீனமடைய ஒரு காரணம் ஒரே ஒரு வார்த்தை.
சிந்தியுங்கள் அந்த ஒரு வார்த்தை என்ன? ஆசிரியர்கள் கூறுங்கள்,
அந்த ஒரு வார்த்தை என்ன? பாண்டவர்கள் கூறுங்கள் ஒரு வார்த்தை
என்ன? நினைவு வந்து விட்டது ஒரு வார்த்தை (சொல்) நான். நான்
அபிமானத்திலும் வருகின்றது, பலவீனமாக்குவதும் நான் என்ற
வார்த்தைத்தான். நான் சொன்னது, நான் செய்தது, நான் நினைப்பது,
நான் புரிந்தது, நானே சரி. அதுவே நடக்க வேண்டும். நான் இது நான்
எனும் அகந்தை. இது பூர்த்தி பெறாத பொழுது மனமுடைந்து போகிறது.
என்னால் செய்ய இயலாது, மிகக் கடினம், என்னால் நடக்க முடியாது,
இது உடல் உணர்வின் நான் மாற வேண்டும். நான் சுயமரியாதையையும்
நினைவூட்டுகிறது, நான் தேக அபிமானத்தையும் கொண்டு வருகின்றது.
நான் மனதை சிதைக்கவும் செய்கின்றது, நான் மனதை மகிழ்விக்கவும்
செய்யும். அபிமானத்தின் அடையாளம் என்ன தெரியுமா? எப்போதாயினும்
எவரிடமாவது சிறிதளவேனும் தேக உணர்வு அம்சம் வந்து விட்டால் அதன்
அடையாளம் என்ன தெரியுமா? அவரால் தனக்கு நிகழும் அவமானத்தை
பொறுத்துக் கொள்ள முடியாது. நான் எனும் அகந்தை (அபிமானம்)
இருந்தால் அவமானம் பொறுக்காது. யாரேனும் இது சரியில்லை, சிறிது
பணிவாக இருங்கள் என்றாலும் அவமரியாதையாக உணர்வார்கள். இதுவே
அபிமானம் (அகந்தை) என்பதன் அடையாளம். பாப்தாதா வதனத்தில்
புன்னகை செய்து கொண்டிருந்தார். இந்த குழந்தைகள் சிவராத்திரி
நன்னாளில் ஆங்காங்கே சொற்பொழிவு செய்கின்றார்கள், இப்போது மிக
அதிகமாகவே செய்கின்றனர். அதில் ஆடு பலி கொடுப்பதைப் பற்றி
சொல்கிறார்கள். குழந்தைகள் சொல்வது பாப்தாதாவிற்கு நினைவு
வருகின்றது (நான்) மே, மே என்று கத்தும் ஆடு. அவ்வாறு
சிவராத்திரியில் நான் என்பதை பலி கொடுத்து விடுங்கள். பாபா இதனை
கேட்டு, கேட்டு புன்னகை செய்கின்றார். ஆக இந்த நான் என்பதை
நீங்களும் பலி செய்து விடுங்கள். சரண்டர் செய்ய முடியுமா?
செய்ய முடியுமா? முழு சரண்டரா, அல்லது சரண்டரா? முழு சரண்டர்.
இன்று பாப்தாதா கொடியேற்றும் பொழுது அவ்வாறு உறுதி எடுக்க
வைக்கவில்லை. உறுதிமொழி எடுத்து கோப்புகளில் சேர்த்து
வைக்கும்படி (காகிதத்தை) செய்யவில்லை, செய்து முடிப்பீர்களா?
அல்லது (முடிவு செய்யுங்கள்) தைரியமா? தைரியம் உள்ளதா?
சொல்வதிலே மூழ்கிப் போனீர்கள், கை உயர்த்தவில்லை. நாளை ஒன்றும்
நடக்காது. இல்லை தானே! நாளை மாயை வலம் வரும். மாயாவிற்கும்
உங்கள் மீது அன்பு உள்ளது. ஏனெனில் இப்போதெல்லாம் அனைவரும்
கோலகலமாக சேவைக்கான திட்டம் போடுகின்றீர்கள். சேவையை கோலாகலமாக,
துரிதமாக செய்கிறீர்கள் என்றால் முழுமையான முடிவிற்கான நேரம்
அருகே வருவதாகும். சொற்பொழிவு செய்து விட்டு வந்தோம் என்று
நினைக்கிறீர்கள். நேரத்தை அருகே கொண்டு வாருகின்றீர்கள். சேவை
நன்கு செய்கிறீர்கள், பாப்தாதா மகிழ்கின்றார். ஆனால் பாப்தாதா
பார்கின்றார், நேரம் அருகே வருகின்றது, கொண்டு வருகின்றீர்கள்.
அப்படியே ஒரு லட்சம், ஒன்றறை லட்சம் சேர்ந்து விடவில்லை. இது
நேரத்தை அருகே கொண்டு வந்தது. இப்போது குஜராத் செய்தீர்கள்,
பாம்பே செய்வீர்கள், மேலும் மற்றவரும் செய்து
கொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை, 50 ஆயிரம் சரி தான். ஆனால்
செய்தி தருகின்றீர்கள், செய்தியுடன் முழுமைக்குத் தயாராக இருக்
கின்றீர்களா? தயாரா? வினாசத்தை அழைக் கின்றீர்களா? தயாரா?
வினாசத்தை அழைக்கின்றீர்கள் என்றால் தயார் தானே? தாதி கேள்வி
கேட்கிறார் வெகு விரைவில் பிரத்யட்சம் ஏற்படும் அளவிற்கு என்ன
திட்டம் தீட்டலாம்? பாப்தாதா கூறுகின்றார், பிரத்யட்சம்
இரண்டாவது விசயம், அதற்கு முன்பு ஸ்தாபனை செய்பவர்கள் எவரெடியா?
திரையை விலக்கலாம். ஒருவர் காதையும், ஒருவர் தலையையும்
அலங்கரித்துக் கொண்டிருக்கின்றீர்களா? தயாரா? ஆகிவிடுவீர்களா?
எப்போது தேதி சொல்லுங்கள். இதற்கு தேதி குறித்தது போல, இந்த
மாதத்திற்குள் செய்தி தரவேண்டும். அவ்வாறு அனைவரும் எவரெடியா?
குறைந்த பட்சம் 16 ஆயிரமாவது தயாரா? தயாரா? கைத்தட்டலாமா? (கேட்பதற்காக
அப்படியே ஆம் என்று சொல்லாதீர்கள், எவரெடி ஆகிவிட்டால் பாப்தாதா
டச் செய்வார், கை தட்ட வைப்பார். இயற்கை தன் வேலையை
ஆரம்பிக்கும். அறிவியலும் தன் வேலையை ஆரம்பிக்கும். என்ன தாமதம்,
அனைவரும் ரெடியா? 16 ஆயிரம் தயாரா? தயாரா? ஆகிவிடுவீர்களா? (உங்களுக்கேத்
தெரியும்) இந்த பதில் விடுவிக்க 16 ஆயிரம் தயார் என ரிப்போர்ட்
வர வேண்டும். முழுத் தூய்மையால் பரிபூரணமடைந்தீர்களா.
பாப்தாதாவிற்கு கைதட்ட வைப்பதில் நேரம் அதிகமாகாது. தேதி
சொல்லுங்கள். (நீங்கள் தேதி கொடுங்கள்) அனைவரிடமும் கேளுங்கள்.
பாருங்கள் ஆகியேத் தீரவேண்டும். ஆனால் சொன்னபடி ஒரு நான் எனும்
சொல்லை முழுமையாக மாற்றினால் தான் தந்தையுடன் செல்வீர்கள்.
இல்லையேல் பின்னால் தான் வரநேரிடும். எனவே தான் பாப்தாதா
இன்னும் கதவை திறக்கவில்லை ஏனெனில் உடன் செல்ல வேண்டும்.
பிரம்மா பாபா குழந்தைகள் அனைவரிடமும் கதவைத் திறக்க தேதி
கொடுங்கள் என்று கேட்கின்றார். கதவைத் திறக்க வேண்டுமல்லவா.
நடத்த வேண்டும். இன்று கொண்டாடுவது என்றால் மாறுவ தாகும். கேக்
மட்டும் வெட்டினால் போதாது. நான் என்பதை அழிக்க வேண்டும்.
யோசித்துக் கொண்டி ருக்கின்றீர்களா? யோசித்து விட்டீர்களா?
ஏனென்றால் அமிர்தவேளையில் பாப்தாதாவிடம் அனைவருடைய விதவிதமான
எண்ணங்கள் வந்து சேருகின்றது. கலந்து பேசி தேதி சொல்லுங்கள்.
தேதி குறிக்காமல் எந்த செயலும் நடை பெறாது. மகாரதிகள் முதலில்
கூடி தேதி குறியுங்கள். பிறகு எல்லோரும் பின்பற்றுவார்கள்.
பின்பற்றுபவர்கள் தயாராக உள்ளனர். நீங்கள் தைரியம் வைத்தால்
சக்தி கிடைத்து விடும். இப்போது ஊக்கம், உற்சாகம் வைத்தீர் கள்
எல்லாம் தயாராகி விட்டது. அவ்வாறே முழுமை பெற திட்டம் போடுங்கள்.
கர்மாதீத் ஆகியே தீருவோம் என எண்ணம் வையுங்கள். என்ன ஆனாலும்
சரி, ஆகியே தீருவோம் என எண்ணம் வையுங்கள். என்ன ஆனாலும் சரி,
ஆகியே தீருவோம், செய்தே தீருவோம் நடந்தே ஆக வேண்டும்.
விஞ்ஞானிகளின் சப்தமும், வினாசம் செய்பவர்களின் சப்தமும்
பாபாவின் காதுகளில் விழுகின்றது. அவர்களும் ஏன் நிறுத்து
கிறீர்கள், ஏன் நிறுத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
அட்வான்ஸ் பார்டியினரும் தேதி குறியுங்கள், தேதி குறியுங்கள்
என்று சொல்கிறார்கள். பிரம்மா பாபாவும் தேதி குறியுங்கள் என
கூறுகின்றார். இது குறித்து மீட்டிங் வையுங்கள். பாப்தாவால்
இவ்வளவு துக்கம் பார்க்க முடியவில்லை. முதலில் சக்திகள்,
பாண்டவர்கள், உங்களுக்கு தேவதா ரூபத்தில் இரக்கம் வரவேண்டும்.
எவ்வளவு கூக்குரல் போடுகிறார்கள். இந்த கூக்குரலின் ஒலி உங்கள்
காதுகளில் கேட்க வேண்டும். காலத்தின் அறை கூவல் எனும் நிகழ்ச்சி
செய்கிறீர்கள் அல்லவா! இப்போது பக்தர்களின் கூக்குரலை,
துக்கப்படு பவர்களின் கூக்குரலைக் கேளுங்கள். சேவையில் முதல்
நம்பர் நன்றாக செய்கிறீர்கள். பாப்தாதா அதற்கு சான்றிதழ்
தருகின்றார். ஊக்கம், உற்சாகம் நன்றாக உள்ளது. குஜராத் நம்பர்
ஒன்னாக உள்ளார்கள். வாழ்த்துக்கள். இப்போது சிறிதளவேனும்
கூக்குரலை கேளுங்கள். பாவம் கதறுகிறார் கள். மனதின்
ஆழத்திலிருந்து கூக்குரல் போடுகிறார்கள். அல்லல் படுகிறார்கள்.
விஞ்ஞானிகளும் எப்போது, எப்போது எப்போது என கூச்சலிடுகிறார்கள்.
சரி இன்று கேக் வெட்டுங்கள். நாளை யிலிருந்து கூக்குரலை
கேளுங்கள். கொண்டாடுவதே சங்கமயுகத்தின் மங்களம். ஒருபுறம்
கொண்டாடுங்கள், மறுபுறம் ஆத்மாக்களை உருவாக்குங்கள். நல்லது
என்ன கேட்டீர்கள்.
உங்களுடைய பாடல், துயரப்படுபவர்களுக்கு சிறிதேனும் இரக்கம்
காண்பியுங்கள். உங்களையன்றி வேறு யாரும் இரக்கம் காட்ட முடியாது.
எனவே இப்போது சமயத்திற்கேற்ப இரக்கத்தின் மாஸ்டர் கடலாகுங்கள்.
தன்மீதும் பிறர் மீது இரக்கம் கொள்ளுங்கள். இப்போது இந்த
சொரூபத்தில் கலங்கரை விளக்காகி பல வண்ண ஒளிக்கதிர்களை பரவச்
செய்யுங்கள். அகிலமெங்கும் பிராப்தியில்லாத ஆத்மாக்களுக்கு
பிராப்தியின் அஞ்சலி தாருங்கள். நல்லது.
சாட்சாத் தந்தையை வெளிக்காட்டும் மூர்த்திகளான அனைத்து சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கும், சதா ஊக்கம் உற்சாகத்தில் இருந்து தந்தையின்
அருகேயுள்ள ஆத்மாக்களுக்கு சதா ஒவ்வொரு அடியும் பாபாவிற்கு
சமமாக எடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு நாலாபுறமுள்ள பிறந்த
நாளுக்கு பாத்திரமான பிராமண குழந்தை களுக்கு என்றும் ஏகாக்ரதா
சக்தியில் நிரம்பியுள்ள ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு
நினைவுகள், பலகோடி மடங்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நமஸ்காரம்.
அன்பிலும் அன்பான அவ்யக்த பாப்தாதா தனது கமல கரங்களால்
சிவஜெயந்தி கொடியேற்றி பின் அனைவரும் தங்களுடைய பிறந்த நாள்
வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டீர்கள். கொடியும் ஏற்றினீர்கள்.
ஆனால் அகிலமே உலக உருண்டை மீது நின்று கொண்டு உங்கள் அனைவருடைய
முகத்திலும் பாபாவின் திருவுருவக் கொடியைப் பார்க்க வேண்டும்.
அந்த நாளை வெகு விரைவில் கொண்டு வாருங்கள். இந்த துணிக் கொடி
நிமித்தமாக உள்ளது, ஆனால் குழந்தைகளான உங்களுடைய ஒவ்வொருவர்
முகத்திலும் பாபாவின் சித்திரம் தென்பட வேண்டும். அத்தகைய
கொடியை பறக்க விடுங்கள். அந்த நாளும் வெகு வெகு வெகு விரைவில்
கொண்டு வர வேண்டும் வரும், வரும், ஓம் சாந்தி.
வரதானம்:
எல்லைக்கப்பாற்பட்ட இராயல் ஆசைகளிலிருந்து விடுபட்டு சேவை
செய்பவராகி தன்னலமில்லா சேவாதாரி ஆகுக.
பிரம்மா பாபா கர்ம பந்தனமில்லாது விடுபட்டு வாழ்ந்து
காண்பித்தார். சேவை மற்றும் அன்பினைத் தவிர வேறெந்த பந்தனமும்
இல்லை. சேவையில் ஏற்படும் எல்லைக்குட்பட்ட ராயல் ஆசைகளும்
கணக்கு வழக்கெனும் கயிற்றில் கட்டி விடும். உண்மையான சேவாதரி
இதிலிருந்தும் விடுபட்டிருப் பார். தேக பந்தனம், உறவுகளின்
பந்தனம் சேவையில் சுய நலம் - இவைகளும் பந்தனமெனும் துயரத்தில்
தள்ளும் கயிறேயாகும். இதுபோன்ற ராயலான கணக்கு வழக்கெனும்
பந்தனக் கயிற்றி லிருந்து விடுபட்டு தன்னலமில்லா சேவாதாரி ஆகுக.
சுலோகன்:
வாக்குறுதிகளை கோப்புகளில் சேர்த்து வைக்காமல் செய்து முடித்து
காண்பியுங்கள்.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிறு. ஆகில உலக தியான
தினம். பிராமணர்கள் அனைவரும் குழுமியிருந்து மாலை 6.30 மணி
முதல் 7.30 மணி வரை விசேஷமாக (மூலவதனம்) பரந்தாமத்தை அடைந்து
அழ்ந்த அமைதியை அனுபவம் செய்யுங்கள். மனம்-புத்தியை ஒருமுக
நிலைûபெறச் செய்து ஜுவாலை சொரூபத்தில் நிலைத்து சம்பன்னம்,
சம்பூர்ண நிலையினை அனுபவம் செய்யுங்கள்.