15-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இப்போது
ஆன்மீக தந்தையின் மூலம் ஆன்மீக பயிற்சியை (டிரில்) கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள், இந்த பயிற்சியின் மூலம் நீங்கள்
முக்திதாமம், சாந்திதாமத்திற்கு சென்று விடுவீர்கள்
கேள்வி:
பாபா குழந்தைகளை முயற்சி செய்ய
வைத்துக் கொண்டே இருக்கின்றார், ஆனால் குழந்தைகள் எந்த
விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்?
பதில்:
பழைய உலகத்திற்கு தீ வைக்கப்படும்
முன்பாக தயாராக வேண்டும், தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையின்
நினைவில் இருந்து பாபாவிடமிருந்து முழுமையாக ஆஸ்தியை அடைவதில்
மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். தேர்ச்சி பெறாமல்
இருந்து விடக்கூடாது, எப்படி அந்த மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை
என்றால் வருத்தப்படுகிறார்கள், நம்முடைய இந்த ஆண்டு வீணாகி
விட்டது என்று புரிந்து கொள்கிறார்கள். படிக்கவில்லை என்றால்
என்னவாகி விடப் போகிறது என்று சில பேர் சொல்கிறார்கள், ஆனால்
நீங்கள் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். மிகவும் நேரமாகி
விட்டது என்று டீச்சர் சொல்லி விடக்கூடாது.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகப் பாடசாலையில்
டைரக்ஷன் கொடுக்கின்றார் அல்லது குழந்தைகளுக்குப் பயிற்சி (டிரில்)
கற்றுக் கொடுக்கின்றார் என்று சொல்லலாம். எப்படி டீச்சர் வழி
சொல்கிறார் அல்லது பயிற்சி கற்றுக் கொடுப்பதைப் போலாகும். இந்த
ஆன்மீகத் தந்தை கூட குழந்தைகளை வழி நடத்துகின்றார். என்ன
கூறுகின்றார்? மன்மனாபவ என்று கூறுகின்றார். எப்படி அந்த
ஆசிரியர்கள் அட்டென்ஷன் ப்ளீஸ் (கவனம் கொடுங்கள்) என்று
சொல்கிறார்களோ, அதுபோல் பாபா மன்மனாபவ என்று கூறுகின்றார். இது
ஒவ்வொருவரும் தங்கள் மீது கருணை காட்டுவதைப் போலாகும். பாபா
கூறுகின்றார், குழந்தைகளே என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்,
அசரீரியாக ஆகி விடுங்கள். இந்த ஆன்மீகப் பயிற்சியை
ஆத்மாக்களுக்கு ஆன்மீகத் தந்தை தான் கற்றுக் கொடுக்கின்றார்.
அவர் பரம ஆசிரியராக இருக்கின்றார். நீங்கள் துணை
ஆசிரியர்களாவீர்கள். நீங்களும் கூட அனைவருக்கும், தங்களை ஆத்மா
என்று புரிந்து கொள்ளுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள், ஆத்ம
அபிமானி யாகுங்கள் என்று சொல்கிறீர்கள். மன்மனாபவ என்பதின்
அர்த்தமும் இதுவே ஆகும். குழந்தை களின் நன்மைக்காக பாபா
டைரக்ஷன் கொடுக்கின்றார். அவர் யாரிடமும் கற்றுக் கொள்ள வில்லை.
மற்ற ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் கற்றுக் கொண்டு பிறகு
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். இவர் ஒன்றும் எந்த
பள்ளி போன்றவற்றில் படித்து கற்றுக் கொள்ள வில்லை. இவர் கற்றுக்
கொடுக்க மட்டுமே செய்கின்றார். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு
ஆன்மீகப் பயிற்சியை கற்றுக் கொடுக்கின்றேன் என்று கூறுகின்றார்.
அவர்கள் அனைவரும் சரீரத்திலுள்ள குழந்தைகளுக்கு சரீர (உடற்)
பயிற்சியை கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் பயிற்சி போன்றவற்றை
சரீரத்தின் மூலம் தான் செய்ய வேண்டியிருக்கிறது. இதில்
சரீரத்தின் விசயம் எதுவுமே இல்லை. என்னுடைய சரீரம் என்று
எதுவும் இல்லை என்று பாபா கூறுகின்றார். நான் பயிற்சி கற்றுக்
கொடுக்கின்றேன், மற்றும் டைரக்ஷன் கொடுக்கின்றேன். அவரிடத்தில்
பயிற்சி கற்றுக் கொடுக்கும் நடிப்பு நாடகத்தின் திட்டப்படி
நிரம்பியுள்ளது. சேவை நிரம்பியுள்ளது. பயிற்சி கற்றுக்
கொடுக்கவே வருகின்றார். நீங்கள் தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக ஆக வேண்டும். இது மிகவும் சகஜமானதாகும்.
புத்தியில் ஏணிப்படியின் ஞானம் இருக்கிறது. எவ்வாறு 84
பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி கீழே இறங்கி வந்தோம் என்பது
இருக்கிறது. இப்போது நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று
பாபா கூறுகின்றார். இப்படி வேறு யாரும் தங்களுடைய சிஷ்யர்களையோ
அல்லது மாணவர்களையோ சொல்ல முடியாது, ஹே ஆன்மீக குழந்தைகளே
இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்று சொல்ல முடியாது.
ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.
இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று குழந்தைகள்
புரிந்து கொள்கிறார்கள். இந்த உலகமே இப்போது தமோபிரதானமாக
இருக்கிறது. நாம் சதோபிரதான உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தோம்
பிறகு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி தமோ பிரதானமான
உலகத்திற்கு எஜமானர்களாகி யுள்ளோம். இங்கே துக்கமோ துக்கமாகும்.
பாபாவை துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று
சொல்கிறார்கள் அதாவது தமோபிரதானத்திலிருந்து சதோபிர தான
மானவர்களாக மாற்றக்கூடியவர் ஒரு பாபா ஆவார். நாம் நிறைய சுகத்தை
அனுபவம் செய்திருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். எப்படி இராஜ்யம் செய்தோம் என்பது
நினைவில்லை ஆனால் குறிக்கோள் நம் முன் இருக்கிறது. அது
மலர்களின் தோட்டமாகும். நாம் இப்போது முட்களிலிருந்து மலர்களாக
ஆகிக் கொண்டிருக்கிறோம்.
எப்படி நம்பிக்கை கொள்வது என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
சந்தேகம் இருந்தது என்றால் அழிவாகும். பள்ளியிலிருந்து
வெளியேறிவிட்டால் படிப்பு நின்று விடும். பதவியும் இல்லாமல்
போய் விடும். அதிக நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பிரஜையிலும்
குறைந்த பதவியாகி விடும். முக்கியமான விசயமே சதோபிரதான
பூஜிக்கத்தக்க தேவதையாக ஆவதாகும். இப்போது நீங்கள் தேவதைகள்
இல்லை அல்லவா. பிராமணர்களாகிய உங்களுக்கு இப்போது புரிதல்
வந்துள்ளது. பிராமணர்கள் தான் பாபாவிடம் வந்து பயிற்சியைக்
கற்கிறார்கள். உள்ளுக்குள் குஷியும் உண்டாகிறது. இந்த படிப்பு
நன்றாக இருக்கிறது அல்லவா. பகவானுடைய மகாவாக்கியம், அவர்கள்
கிருஷ்ணருடைய பெயரை போட்டு விட்டார்கள் ஆனால் கிருஷ்ணர் இந்த
பயிற்சியை கற்றுக் கொடுக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்
கொள்கிறீர்கள், இந்த பயிற்சியை பாபா தான் கற்றுக்
கொடுக்கின்றார். கிருஷ்ணருடைய ஆத்மா வித-விதமான பெயர்-ரூபத்தை
தாரணை செய்து தமோபிரதானமாக ஆகியுள்ளது, அவருக்கும் கூட பாபா
கற்றுக் கொடுக்கின்றார். பாபா கற்றுக் கொள்வதில்லை, மற்ற
அனைவரும் யாரிடமிருந்தாவது கண்டிப்பாக கற்கிறார்கள். இவர்
கற்றுக் கொடுக்கக் கூடிய ஆன்மீகத் தந்தையாவார். அவர் உங்களுக்கு
கற்றுக் கொடுக்கின்றார், பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுக்
கொடுக்கின்றீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுத்து
தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள், இப்போது மீண்டும் தூய்மையாக
ஆக வேண்டும். அதற்கு ஆன்மீக தந்தையை நினைவு செய்யுங்கள். பக்தி
மார்க்கத்தில் ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே என்று பாடி
வந்தீர்கள் - இப்போது கூட எங்கு வேண்டுமானாலும் சென்று
பாருங்கள். நீங்கள் இராஜ ரிஷிகள் அல்லவா. எங்கு வேண்டு மானாலும்
சுற்றி வரலாம். உங்களுக்கு எந்த பந்தனமும் இல்லை. எல்லை யற்ற
தந்தை சேவைக்காக வந்துள்ளார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது.
தந்தை குழந்தைகளிடத்தில் படிப்பிற்கான கட்டணத்தை எப்படி
வாங்குவார். ஆசிரியருக்கு குழந்தை இருந்தது என்றால் இலவசமாக
படிப்பிப்பார் அல்லவா. இவரும் கூட இலவசமாகப் படிப்பிக்கின்றார்.
நாம் எதையாவது கொடுக்கின்றோம் என்று நினைக் காதீர்கள். இது
ஒன்றும் கட்டணம் அல்ல. நீங்கள் எதையும் கொடுப்பதில்லை, இதற்குப்
பதிலாக நிறைய பெறுகிறீர்கள். மனிதர்கள் தானம்-புண்ணியம்
செய்கிறார்கள், இதற்கு பதிலாக நமக்கு அடுத்த பிறவியில்
கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அது அல்பகாலத்திற்கு கொஞ்ச
நேரத்திற்கு சுகம் கிடைக்கிறது. அடுத்த பிறவியில் கிடைத்தாலும்
அது கீழே இறங்கக் கூடிய பிறவியில் தான் கிடைக்கிறது.
ஏணிப்படியில் இறங்கித் தான் வருகிறீர்கள் அல்லவா. நீங்கள்
இப்போது செய்வது ஏறும்கலையில் செல்வதற்காக ஆகும். கர்மத்தின்
பலன் என்று சொல்கிறார் கள் அல்லவா. ஆத்மாவிற்கு கர்மத்தின் பலன்
கிடைக்கிறது. இந்த லஷ்மி-நாராயணனுக்கு கூட கர்மத்தின் பலன் தான்
கிடைத் திருக்கிறது அல்லவா. எல்லையற்ற தந்தையிடமிருந்து
எல்லையற்ற பலன் கிடைக்கிறது. பக்தியில் மறைமுகமாக கிடைக்கிறது.
இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இது
உருவாக்கப்பட்டுள்ள நாடகமாகும். நாம் கல்பத்திற்குப் பிறகு
வந்து பாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை அடைவோம் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா நமக்காக வந்து பள்ளியை
உருவாக்குகின்றார். அது அரசாங்கத்தின் உலகாயத பள்ளியாகும். அதை
வித-விதமாக அரைக் கல்பமாக படித்து வந்துள்ளீர்கள். இப்போது பாபா
21 பிறவிகளுக்கு அனைத்து துக்கங்களையும் விலக்குவதற்காக
கற்பிக்கின்றார். அங்கே இராஜ்யம் இருக்கிறது. அதில் வரிசைக்
கிரமமாகவே வருகிறார்கள். எப்படி இங்கேயும் கூட ராஜா-ராணி,
மந்திரி, பிரஜை கள் போன்ற அனைவரும் வரிசைக் கிரமமாக
இருக்கிறார்கள் அல்லவா. இது பழைய உலகத்தில் ஆகும், புதிய
உலகத்தில் மிகக் குறைவானவர்களே இருப்பார்கள். அங்கு அதிக சுகம்
இருக்கும், நீங்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள்.
இராஜாக்களும்-மகாராஜாக்களும் இருந்து விட்டு சென்றுள்ளார்கள்.
அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். ஆனால் பாபா
கூறு கின்றார், அவர்கள் கீழே இறங்கத் தான் வேண்டும். அனைவரும்
இறங்குகிறார்கள் அல்லவா! தேவதைகளுடைய கலையும் கூட மெது-மெதுவாக
இறங்குகிறது (குறைகிறது). ஆனால் அங்கே இராவண இராஜ்யமே இல்லை,
ஆகையினால் சுகமே சுகமாகும். இங்கே இராவண இராஜ்யமாக இருக்கிறது.
நீங்கள் எப்படி ஏறுகிறீர்களோ, அதுபோல் இறங்கவும் செய்கிறீர்கள்.
ஆத்மாக்களும் கூட பெயர் ரூபத்தை எடுத்து-எடுத்து கீழே இறங்கி
வருகிறது. நாடகத்தின் திட்டப்படி கல்பத்திற்கு முன்போலவே கீழே
இறங்கி தமோபிரதானமாகி விட்டீர்கள். காம சிதையில் ஏறுவதின் மூலம்
தான் துக்கம் ஆரம்பமாகிறது. இப்போது மிகவும் அதிக துக்கமாகும்.
அங்கே சத்யுகத்தில் அதிக சுகமாகும். நீங்கள் இராஜரிஷிகளாவீர்கள்.
அவர்களுடையது ஹட யோகமாகும். நீங்கள் யாரிட மாவது படைப்பவர்
மற்றும் படைப்பினுடைய முதல்-இடை-கடைசியைத் தெரிந்துள்ளீர்களா
என்று கேளுங்கள்? தெரியாது என்று சொல்லி விடுவார்கள். யார்
தெரிந்துள்ளார்களோ, அவர்கள் தான் கேள்வி கேட்பார்கள். அவர்களே
தெரிந்திருக்கவில்லை என்றால் எப்படி கேள்வி கேட்க முடியும்.
ரிஷிகள்- முனிவர்கள் போன்ற யாருமே திரிகாலதரிசிகளாக இல்லை
என்பதை நீங்கள் தெரிந்துள் ளீர்கள். பாபா நம்மை
திரிகாலதரிசிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். இந்த பிரம்மா பாபா
உலகத்திற்கு எஜமானராக இருந்தார், இவருக்கு ஞானம் இருக்கவில்லை.
இந்த பிறவியில் கூட 60 வயது வரை ஞானம் இல்லை. பாபா
வந்திருந்தபோது கூட மெது- மெதுவாக இவை அனைத்தையும் சொல்லிக்
கொண்டே போகின்றார். நிச்சய புத்தியுடையவர்களாக ஆகி விடுகிறார்
கள் இருந்தாலும் கூட மாயை நிறைய பேரை விழ வைத்துக் கொண்டே
இருக்கிறது. பெயரை சொல்ல முடியாது, சொன்னால் நம்பிக்கை இழந்து
விடுவார்கள். செய்திகள் வருகின்றன அல்லவா. கெட்ட சகவாசம்
ஏற்பட்டது, புதிதாக திருமணமானவர்களுடைய சேர்க்கை ஏற்பட்டது
என்றால் புத்தி சென்று விடுகிறது. நாங்கள் திருமணம் புரியாமல்
இருக்க முடியாது என்று சொல் கிறார்கள். நல்லது, மகாரதி தினமும்
வரக்கூடியவர், இங்கும் கூட நிறைய முறை இருந்து விட்டு
சென்றிருக்கிறார், அவரை மாயை எனும் முதலை வந்து
பிடித்திருக்கிறது. இப்படி நிறைய விசயங்கள் நடந்து
கொண்டிருக்கிறது. இப்போது திருமணம் செய்து கொள்ள வில்லை. மாயை
தன் வாயில் போட்டு விழுங்கிக் கொண்டிருக்கிறது. பெண் எனும் மாயை
இழுத்துக் கொண்டிருக் கிறது. முதலையின் வாயில் வந்து
விழுந்திருக்கிறார், பிறகு மெது-மெதுவாக விழுங்கி விடும்.
ஏதாவது தவறு செய்கிறார்கள் அல்லது பார்த்தவுடன்
சென்றுவிடுகிறார்கள். நாம் மேலிருந்து ஒரேயடியாக கீழே
சாக்கடையில் விழுவேன் என்று புரிந்து கொள்கிறார்கள். மிகவும்
நல்ல குழந்தையாக இருந்தார் என்று சொல்வார்கள். பாவம் இப்போது
சென்று விட்டார். நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் இவர்
இறந்தார். பாபா குழந்தைகளுக்கு எப்போதும் வாழ்க என்றே எழுதுவார்.
மாயையின் சண்டை எங்கும் தீவிரமாக நடந்து விடக்கூடாது என்று பாபா
அப்படி எழுதுவார். சாஸ்திரங்களில் கூட இதைப் பற்றிய விசயங்கள்
கொஞ்சம் இருக்கிறது அல்லவா. இப்போதைய இந்த விசயங்கள்
பிற்காலத்தில் பாடப்படும். எனவே மாயை எனும் முதலை விழுங்கி
விடக் கூடாது என்று நீங்கள் முயற்சி செய்ய வைக்கின்றீர்கள்.
மாயை வித-விதமாக பிடிக்கிறது. முக்கிய மானது காமம் மிகப்பெரிய
எதிரியாகும், இதனிடம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தூய்மையற்ற உலகம் எவ்வாறு தூய்மையான உலகமாக ஆகிக்
கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
குழப்பமடைவதற்கான விசயம் எதுவும் இல்லை. தங்களை ஆத்மா என்று
மட்டும் புரிந்து பாபாவை நினைவு செய்வதின் மூலம் அனைத்து
துக்கங்களும் விலகி விடுகிறது. பாபா தான் தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர் ஆவார். இது யோக பலமாகும். பாரதத்தின் பழமையான
இராஜயோகம் புகழ்பெற்றதாகும். கிறிஸ்து வருவதற்கு 3 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் சொர்க்கம் இருந்தது என்று புரிந்து
கொள்கிறார்கள். அப்படி யென்றால் கண்டிப்பாக வேறு எந்த தர்மமும்
இருந்திருக்காது. எவ்வளவு சகஜமான விசயமாக இருக்கிறது. ஆனால்
புரிந்து கொள்வதே இல்லை. அந்த இராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை
செய்வதற்காக பாபா வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் இப்போது
புரிந்து கொள்கிறீர்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூட
சிவபாபா வந்திருந்தார். கண்டிப்பாக இப்போது கொடுப் பதைப் போல்
இந்த ஞானத்தைத் தான் கொடுத்திருப்பார். நான் கல்பம்-கல்பமாக
சங்கமயுகத்தில் சாதாரண உடலில் வந்து இராஜயோகத்தை கற்றுக்
கொடுக்கின்றேன் என்று பாபா அவரே கூறுகின்றார். நீங்கள் இராஜ
ரிஷிகளாவீர்கள். முதலில் அப்படி இல்லை. பாபா வந்ததிலிருந்து
பாபாவுடன் இருக்கின்றீர்கள். படிக்கவும் செய்கிறீர்கள்,
சேவையும் செய்கிறீர்கள் - ஸ்தூல மற்றும் சூட்சும சேவை
செய்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் கூட சேவை செய்கிறார்கள்.
பிறகு வீடு-வாசலையும் பார்த்துக் கொள்கிறார் கள். இப்போது பக்தி
முடிந்து விட்டது, ஞானம் ஆரம்பமாகிறது என்று பாபா கூறுகின்றார்.
ஞானத்தின் மூலம் சத்கதியை வழங்க நான் வருகின்றேன் என்று பாபா
கூறுகின்றார். நம்மை பாபா தூய்மையாக்கிக் கொண்டிருக் கின்றார்
என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நாடகத்தின்படி
உங்களுக்கு வழி சொல்ல வந்திருக்கின்றேன் என்று பாபா
கூறுகின்றார். டீச்சர் படிப்பிக்கின்றார், குறிக்கோள் (லஷ்மி-நாராயணன்)
நம் முன் இருக்கிறது. இது உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பாகும்.
கல்பத்திற்கு முன்னால் எப்படி புரிய வைத்தேனோ, அதையே புரிய
வைத்துக் கொண்டிருக் கின்றேன். நாடகத்தின்படி டிக்-டிக் என்று
சென்று கொண்டிருக்கிறது. வினாடிக்கு-வினாடி எது கடந்ததோ அது
மீண்டும் 5 ஆயிரம் ஆண்டு களுக்குப் பிறகு திரும்பவும் நடக்கும்.
நாட்கள் கடந்து கொண்டே இருக்கிறது. இந்த சிந்தனை வேறு யாருடைய
புத்தியிலும் இல்லை. சத்யுகம், திரேதா, துவாபர, கலியுகம்
முடிந்து விட்டது பிறகு அது திரும்பவும் வரும். எது கடந்ததோ அது
கூட கல்பத்திற்கு முன்னால் எது கடந்ததோ அதுவே ஆகும். இன்னும்
கொஞ்ச நாட்களே உள்ளன. அவர்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று
சொல்லி விட்டார்கள், அதை ஒப்பிட்டு இன்னும் சில மணி நேரங்களே
இருக்கின்றன என்று நீங்கள் சொல்வீர்கள். இது கூட நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. எப்போது தீ பிடித்துக் கொள்ளுமோ அப்போது
தான் விழிப் பார்கள். பிறகு காலம் கடந்து விட்டிருக்கும். எனவே
பாபா முயற்சி செய்ய வைத்துக் கொண்டே இருக்கின்றார். தயாராகி
அமருங்கள். டீச்சர் நேரமாகி விட்டது என்று சொல்லும்படி வைத்துக்
கொள்ளாதீர்கள், தேர்ச்சி பெறாமல் போகக்கூடியவர்கள் அதிகம்
பச்சாதாபப் படுகிறார்கள். நம்முடைய ஒரு வருடம் வீணாகி விட்டது
என்று புரிந்து கொள்கிறார்கள். படிக்கவில்லை என்றால் என்ன என்று
சில பேர் கேட்கிறார்கள்! நாங்கள் பாபா விடமிருந்து முழுமையாக
ஆஸ்தியை அடைவோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் கண்டிப்புடன்
இருக்க வேண்டும். தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு
செய்ய வேண்டும். இதில் ஏதாவது கடினமாக இருக்கிறது என்றால்
பாபாவிடம் கேட்கலாம். இது தான் முக்கியமான விசயமாகும். பாபா
இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட, என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள் என்று கூறியிருந்தார். நான் தான்
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவன், அனைவருக்கும் தந்தையாக
இருக்கின்றேன். கிருஷ்ணர் அனைவருக்கும் தந்தை அல்ல. நீங்கள்
சிவனுடைய, கிருஷ்ணருடைய பூஜாரிகளுக்கு இந்த ஞானத்தை சொல்லலாம்.
ஆத்மா பூஜிக்கத்தக்கதாக ஆகியிருக்கவில்லை என்றால் நீங்கள்
எவ்வளவு தான் மண்டையை உடைத்துக் கொண்டாலும், புரிந்து கொள்ளவே
மாட்டார்கள். இப்போது நாத்திகர்களாக ஆகிறார்கள். ஒருவேளை
இன்னும் போகப்போக ஆத்திகர்களாக ஆவார்களோ என்னவோ திருமணம்
புரிந்து கொண்டு விழுந்து விடுகிறார்கள் பிறகு வந்து ஞானத்தைக்
கேட்பார்கள். ஆனால் ஆஸ்தி மிகவும் குறைந்து விடும், ஏனென்றால்
புத்தியில் வேறு ஒருவருடைய நினைவு வந்து அமர்ந்துள்ளது. அதை
நீக்குவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. முதலில் மனைவியின்
நினைவு பிறகு குழந்தை களின் நினைவு வரும். குழந்தைகளை விட
மனைவியின் நினைவு அதிகம் இழுக்கும், ஏனென்றால் நீண்ட கால நினைவு
அல்லவா. குழந்தை பின்னால் பிறக்கிறது பிறகு நண்பர்கள்
உறவினர்கள், மாமனார் வீட்டு நினைவு வருகிறது. முதலில் மனைவி,
நீண்ட காலமாக துணையாக இருந்தார், இது கூட அதுபோலவே ஆகும்.
நாங்கள் தேவதை களோடு நீண்ட காலம் இருந்தோம் என்று நீங்களும்
சொல்வீர்கள். சிவபாபாவோடு நீண்ட காலமாக அன்பு இருக்கிறது என்று
கூட சொல்வீர்கள். அவர் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட எங்களை
தூய்மையாக்கினார். கல்பம்-கல்பமாக வந்து நம்மை பாது காக்கிறார்,
ஆகையினால் அவரை துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று
சொல்கிறார்கள். நீங்கள் மிகவும் தெளிவானவர்களாக ஆக வேண்டும்.
இந்த கண்களின் மூலம் நீங்கள் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ அவை
அழியப்போகிறது என்று பாபா கூறுகின்றார். நீங்கள் இப்போது
சங்கமயுகத்தில் இருக் கின்றீர்கள். அமரலோகம் வரப்போகிறது. நாம்
இப்போது புருஷோத்தமர்களாக ஆவதற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம். இது நன்மை விளை விக்கும் புருஷோத்தம
சங்கமயுகமாகும். உலகத்தில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது
என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது பாபா
வந்திருக்கின்றார், எனவே பழைய உலகம் கூட அழியப்போகிறது.
கண்டிப்பாக யாரோ வந்திருக் கின்றார், அவர் இந்த உலகத்தை
மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நிறைய பேருடைய சிந்தனையில்
இன்னும் போகப்போக தோன்றும். இது அதே மகாபாரத சண்டையே ஆகும்.
நீங்கள் கூட எவ்வளவு புத்திசாலிகளாக ஆகி யுள்ளீர்கள். இது
மிகவும் சிந்திப் பதற்கான விசயங்களாகும். தங்களுடைய சுவாசத்தைக்
வீணாக்கக் கூடாது. சுவாசம் ஞானத்தின் மூலம் பயனுடைய தாகிறது
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மாயையிடமிருந்து காத்துக் கொள்ள தங்களை கெட்ட
சகவாசத்திலிருந்து மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
தங்களுடைய புத்தியின் தொடர்பை மிகவும் தெளிவாக வைத்துக் கொள்ள
வேண்டும். சுவாசத்தை வீணாக இழந்து விடக்கூடாது. ஞானத்தின் மூலம்
பயனுள்ளதாக்க வேண்டும்.
2) எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அதில் யோக பலத்தை சேமிப்பதற்காக
ஆன்மீகப் பயிற்சியை செய்ய வேண்டும். இப்போது எந்தவொரு புதிய
பந்தனத்தையும் (உறவு) உருவாக்கக் கூடாது.
வரதானம்:
பாபாவின் நிழல் குடையின் அனுபவம் மூலமாக விக்ன விநாசக் எனும்
பட்டம் பெற்று அனுபவி மூர்த்தி ஆகுக !
எங்கே பாபாவின் துணை இருக்குமோ அங்கே எவராலும் ஒன்றும் செய்
இயலாது. இந்த துணை யெனும் அனுபவமே நிழல் குடை ஆகிறது, பாப்தாதா
குழந்தைகளுக்கு என்றென்றும் பாதுகாப்பு தருகின்றார். சோதனை
வருவதே உங்களை அனுபவியாக மாற்றுவதற்காகத் தான் எனவே இந்த சோதனை
என்னை முன்னேற்றவே வருகின்றது என உணருங்கள். இதன் மூலமாகவே
எப்போதும் விக்ன வினாசக் எனும் பட்டம் அனுபவ மூர்த்தி ஆவதற்கான
வரதானம் : கிடைத்து வருகின்றது. யாரெனும் இப்போது சில தடை
செய்தாலும் மெல்ல மெல்லமாக குளிர்ந்து விடுவார்கள்.
சுலோகன்:
யாரொருவர் தக்க சமயத்தில் உதவியாளர் ஆவார்களோ அவர்களுக்கு
ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
பார்ப்பது, கேட்பது, பேசுவது போன்ற விசேஷமான செயல்கள் யாவும்
சுலபமாகவே பயிற்சில் வந்து விட்டதோ அவ்வாறே கர்மங்களை உள்ளடக்கி
கர்மாதீத் நிலையெனும் சக்தியால் அகர்மி அதாவது கர்மங்களின்
பலனி-ருந்து விடுபட்டவராகுக. ஒன்று செயலுக்கு அடிமையாவது
மற்றொன்று செயலுக்கு அதிகாரி ஆவது நான் கர்ம இந்திரியங்களை
வென்று சுயராஜ்தாரியின் ராஜாக்களின் ராஜ்யம் சரிவர
செயல்படுகிறதா? என தன்னைத்தானே சோதனை செய்யுங்கள்.