16-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நினைவினுடைய
சார்ட் (அட்டவணை) வையுங்கள், எந்தளவிறகு நினைவில் இருப்பதற்கான
பழக்கம் ஏற்பட்டுக் கொண்டே செல்லுமோ அந்தளவிற்கு பாவம் அழிந்து
கொண்டே செல்லும், கர்மாதீத் நிலை அருகில் வந்து கொண்டே
இருக்கும்
கேள்வி:
சார்ட் சரியாக இருக்கிறதா அல்லது
இல்லையா என்பதை எந்த 4 விஷயங்களின் மூலம் கண்டறியப்படுகிறது?
பதில்:
(1) ஆசாமி (2) நடத்தை (3) சேவை
மற்றும் (4) குஷி. பாப்தாதா இந்த நான்கு விஷயங்களைப் பார்த்து
இவருடைய சார்ட் சரியாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை
கூறுகின்றார். எந்த குழந்தைகள் மியூசியம் (அருங்காட்சியகம்)
அல்லது கண்காட்சியின் சேவையில் இருக்கிறார் களோ, யாருடைய நடத்தை
அரசனுக்குரியதாக இருக்கிறதோ, அளவற்ற குஷியில் இருக்கிறார்கள்
என்றால் கண்டிப்பாக அவர்களுடைய சார்ட் சரியாக இருக்கும்.
பாடல்:
மனம் எனும் கண்ணாடியில் முகத்தை
பார் ஆத்மா......
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள் தன்னிடம் எவ்வளவு
பாவம் மீதம் இருக்கிறது, எவ்வளவு புண்ணியம் சேமிப்பாகி
இருக்கிறது என்று இந்த பாட்டின் மூலம் அர்த்தத்தை தெரிந்து
கொள்ள வேண்டும், அதாவது ஆத்மா சதோபிரதானமாவதற்கு எவ்வளவு
காலமாகும்? இப்போது எதுவரை தூய்மையாகி இருக்கிறோம் என்பதை
புரிந்து கொள்ள முடியும் அல்லவா? சிலர் சார்ட்டில் நாங்கள்
இரண்டு-மூன்று மணி நேரம் நினைவில் இருந்தோம் என்று
எழுதுகிறார்கள், சிலர் ஒரு மணி நேரம் என்று எழுதுகிறார்கள். இது
குறைவாக இருக்கிறது அல்லவா? குறைவாக நினைவு செய்தீர்கள் என்றால்
குறைவாகத்தான் பாவம் அழியும். இப்போதும் பாவம் அதிகமாக அழியாமல்
இருக்கிறது அல்லவா! ஆத்மாவைத்தான் பிராணி (உயிர்) என்று
சொல்லப்படுகிறது. எனவே ஹே ஆத்மா! இந்த கணக்கின் படி போனால்
எவ்வளவு பாவம் அழியும் என்று தங்களிடமே கேளுங்கள் என்று பாபா
கூறுகின்றார். நாம் எந்தளவிற்கு புண்ணிய ஆத்மாவாக ஆகியுள்ளோம்
என்பது சார்டின் மூலம் தெரிகிறது. கர்மாதீத் நிலை கடைசியில்
தான் ஏற்படும் என்பதை பாபா புரிய வைத்திருக்கிறார். நினைவு
செய்து-செய்து பழக்க மாகி விட்டால் பிறகு அதிக பாவம் அழிய
ஆரம்பித்து விடும். நாம் எந்தளவிற்கு பாபாவின் நினைவில் இருக்
கிறோம், என்று தங்களை சோதிக்க வேண்டும். இதில் பொய் புரட்டு
சொல்வதற்கான விஷயம் இல்லை. இதில் தங்களை சோதிக்க வேண்டியுள்ளது.
பாபாவிற்கு தங்களுடைய சார்ட்டை எழுதிக் கொடுத் தீர்கள் என்றால்,
சார்ட் சரியா இல்லையா என்பதை பாபா உடனே சொல்வார். ஆசாமி, நடத்தை,
சேவை மற்றும் குஷியைப் பார்த்து இந்த சார்ட் எப்படி இருக்கிறது
என்று பாபா உடனே புரிந்து கொள்கிறார். வினாடிக்கு வினாடி
யாருக்கு நினைவு இருக்கும்? யார் மியூசியம் அல்லது
கண்காட்சியின் சேவையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இருக்கும்.
மியூசியத்தில் முழு நாளும் வந்து-போய்க்கொண்டு இருப்பார்கள்.
தில்லியில் நிறைய பேர் வந்து கொண்டிருப்பார்கள். அடிக்கடி
பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. யாருக்காவது
வினாசம் ஆவதற்கு சில வருடங்களே இருக்கிறது என்று நீங்கள்
சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி அப்படி
இருக்க முடியும்? என்று கேட்பார்கள். உடனே இதை என்ன நாங்களா
சொல்கிறோம்? என்று சொல்ல வேண்டும். பகவானுடைய மகாவாக்கியம்
அல்லவா இது! பகவானுடைய மகாவாக்கியம் கண்டிப்பாக சத்தியமானதாகத்
தான் இருக்கும் அல்லவா! எனவே அடிக்கடி இது சிவபாபாவின் ஸ்ரீமத்
என்று சொல்லவேண்டுமென பாபா புரிய வைக்கின்றார். நாங்கள் சொல்ல
வில்லை, இது அவருடைய ஸ்ரீமத் ஆகும். அவர் சத்தியமானவர் அல்லவா!
முதல்- முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கண்டிப்பாகக் கொடுக்க
வேண்டியுள்ளது. எனவே தான் பாபா ஒவ்வொரு சித்திரத்திற்குக்
கீழேயும் சிவபகவானுடைய மகா வாக்கியம் என்று எழுதுமாறு
கூறியுள்ளார். எங்களுக்கு எங்கே தெரியும், அவர் சரியாகத் தான்
சொல்வார் அல்லவா! பாபா கூறி யுள்ளார் ஆகையினால் நாங்கள்
கூறுகின்றோம். இன்னார் வினாசம் விரைவாக நிகழும் என்று வருவதை
உரைத்திருக்கிறார் என்று நாளேடுகளில் அவ்வப்போது போடுகிறார்கள்.
நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாவீர்கள். பிரஜாபிதா
பிரம்மாகுமார், குமாரிகள் என்றால் எல்லையற்றவர்கள் அல்லவா!
நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்று நீங்கள்
சொல்லுங்கள். அவர் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்
ஞானக்கடலாக இருக்கின்றார். முதலில் இந்த விஷயத்தைப் புரிய
வைத்து, உறுதியாக்கி விட்டு பிறகு முன்னேற வேண்டும். யாதவர்,
கௌரவர்கள் போன்றவர்களுக்கு வினாச காலத்தில் அன்பற்ற புத்தி
என்று சிவபாபா கூறியுள்ளார். சிவபாபாவின் பெயரை பயன்படுத்திக்
கொண்டே இருந்தீர்கள் என்றால் இதில் குழந்தைகளுக்கும்
நன்மையாகும், சிவபாபாவைத் தான் நினைவு செய்து கொண்டே
இருப்பார்கள். பாபா உங்களுக்கு என்ன புரிய வைத்திருக்கிறாரோ,
அதை நீங்கள் மற்றவர்களுக்கும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள்.
ஆக சேவை செய்யக் கூடியவர்களின் சார்ட் நன்றாக இருக்கும். முழு
நாளிலும் 8 மணி நேரம் சேவையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பார்கள். இருந்தாலும் 7 மணி நேரம்
சேவையில் இருக்கிறார்கள் அல்லவா! எனவே அவர்களுடைய பாவ கர்மங்கள்
அதிகம் அழிந்திருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். நிறைய
பேருக்கு அடிக்கடி பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்கிறார்கள்
என்றால் கண்டிப்பாக அப்படிப்பட்ட சேவாதாரி குழந்தைகள்
பாபாவிற்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். இவர் நிறைய
பேருக்கு நன்மை செய்கின்றார், இரவும்-பகலும் நாம்
அதிகமானவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற சிந்தனையே
இருப்பதை பாபா பார்க்கின்றார். நிறைய பேருக்கு நன்மை செய்வது
என்றால் தங்களுக்கே நன்மை செய்கிறார்கள் என்பதாகும், யார்
நிறைய பேருக்கு நன்மை செய் கிறார்களோ, அவர்களுக்குத் தான்
ஸ்காலர்ஷிப்பும் (தந்தையின் உதவி) கிடைக்கும். இது தான்
குழந்தைகளுடைய வேலையாகும். டீச்சராக ஆகி நிறைய பேருக்கு வழியைச்
சொல்ல வேண்டும். முதலில் இந்த ஞானத்தை முழுமையாக தாரணை செய்ய
வேண்டும். யாருக்கும் நன்மை செய்யவில்லை என்றால், இவர்களுடைய
அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து கொள்ளப் படுகிறது. பாபா,
எங்களை இந்த உலகாய வேலையிலிருந்து விடுவியுங்கள், நாங்கள் இந்த
ஆன்மீக சேவையில் ஈடுபட வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மையில்
இவர் சேவைக்கு தகுதி யானவரா, பந்தனங்களிலிருந்து விடுபட்ட
வராகவும் இருக்கிறாரா என்று பார்க்கின்றார், பிறகு தான்
500-1000 சம்பாதிப்பதற்கு பதிலாக இந்த சேவையில் ஈடுபட்டு நிறைய
பேருக்கு சேவை செய்யுங் கள் என்று கூறுவார். பந்தனங்களிலிருந்து
விடுபட்டவராக இருந்தால் மட்டுமே! பாபா சேவாதாரி களைப்
பார்த்தால் வழி சொல்வார். சேவாதாரி குழந்தைகளை இங்கே-அங்கே
என்று அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பள்ளியில் குழந்தைகள்
படிக்கிறார்கள் அல்லவா! அதுபோல இது கூட படிப்பாகும். இது
ஒன்றும் சாதாரண அறிவுரை அல்ல. சத்தியமானவர் என்றால் சத்தியத்தை
பேசக்கூடியவர் ஆவார். நாங்கள் ஸ்ரீமத்படி இதை தங்களுக்குப்
புரிய வைக்கின்றோம். ஈஸ்வரனுடைய வழி உங்களுக்கு இப்போது தான்
கிடைக்கிறது. நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று பாபா
கூறுகின்றார். இப்போது எல்லை யற்ற சுகத்தின் ஆஸ்தியை அடையுங்கள்.
கல்பம்-கல்பமாக உங்களுக்கு ஆஸ்தி கிடைத்து வந்துள்ளது ஏனென்றால்
சொர்க்கத்தின் ஸ்தாபனை ஒவ்வொரு கல்பமும் நடக்கிறது அல்லவா!
இந்த சிருஷ்டி சக்கரம் 5 ஆயிரம் ஆண்டு களினுடையது என்பது
யாருக்கும் தெரியவில்லை. மனிதர்கள் முற்றிலும் காரிருளில் இருக்
கிறார்கள். நீங்கள் இப்போது பிரகாசமான வெளிச்சத்தில்
இருக்கிறீர்கள். சொர்க்கத்தை பாபா தான் ஸ்தாபனை செய்வார்.
வைக்கோல் போருக்கு (பழைய உலகத்திற்கு) தீ வைத்த பிறகும் கூட
அஞ்ஞான உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று
பாடப்பட்டுள்ளது. எல்லையற்ற தந்தை ஞானக்கடலாக இருக்கின்றார்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உயர்ந்ததிலும்
உயர்ந்த தந்தையின் காரியமும் உயர்ந்ததாக இருக்கிறது. ஈஸ்வரன்
வல்லமை படைத்தவர், எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது
கிடையாது. இதுவும் நாடகத்தில் ஆரம்பமும் முடிவுமற்று
உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நாடகத்தின்படி தான் நடக்கிறது.
போர் போன்றவைகளில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள். இதுவும்
நாடகத்தில் பதிவாகியுள்ளது. இதில் பகவான் என்ன செய்ய முடியும்?
பூகம்பங்கள் போன்றவை நிகழ்கிறது என்றால் ஹே பகவானே! என்று
எவ்வளவு பேர் புலம்புகிறார்கள், ஆனால் பகவான் என்ன செய்ய
முடியும்? வந்து வினாசம் செய்யுங்கள் என்று பகவானை நீங்கள் தான்
அழைத்தீர்கள். புதிய உலகை ஸ்தாபனை செய்து மற்ற அனைத்தையும்
அழியுங்கள் என்று தூய்மையற்ற உலகத்தில் அழைத்தீர்கள். நான்
செய்வதில்லை, இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. தேவையற்ற இரத்தம்
சிந்தும் விளையாட்டாக இருக்கிறது. இதில் காப்பாற்றுவது போன்ற
விஷயமே இல்லை. தூய்மையான உலகத்தை உருவாக்குங்கள் என்று நீங்கள்
சொன்னீர்கள், அப்படியென்றால் கண்டிப்பாக தூய்மையற்ற ஆத்மாக்கள்
சென்று விடுவார்கள் (இருக்கமாட்டார்கள்) அல்லவா! சிலர்
முற்றிலுமாகப் புரிந்து கொள்வதே இல்லை. ஸ்ரீமத் என்பதின்
அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை, பகவான் என்றால் என்ன,
எதையும் புரிந்து கொள்வதில்லை. எந்தக் குழந்தையாவது சரியாகப்
படிப்பதில்லை என்றால் நீ கல் புத்திக்காரன் என்று தாய்-
தந்தையர் சொல்வார்கள். சத்யுகத்தில் அப்படி சொல்வ தில்லை.
கலியுகத்தில் கல் புத்திக்காரர்கள் தான் இருக்கிறார்கள். இங்கே
தெய்வீக புத்தி யுடையவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்றைக்கு
பாருங்கள்! மனிதர்கள் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள், ஒரு
இதயத்தை எடுத்துவிட்டு வேறொன்றை பொருத்தி விடுகிறார்கள்! நல்லது,
இவ்வளவு உழைத்து இதை செய்தீர்கள், ஆனால் இதனால் என்ன பலன்?
அதிகம் போனால் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்வார்கள். நிறைய
மந்திர வித்தைகளை கற்றுக் கொண்டு வருகிறார்கள், இவ்வளவு முயற்சி
செய்து இதை செய்தார்கள், ஆனால் இதனால் எந்தப் பலனும் இல்லை.
நாங்கள் தூய்மையற்ற உலகத்தில் இருந்து மிகவும்
துக்கமுடையவர்களாக ஆகி விட்டோம், வந்து எங்களை தூய்மையான
உலகத்திற்கு எஜமானர்களாக ஆக்குங்கள் என்று தான் பகவானை நினைவு
செய்கிறார்கள். சத்யுகத்தில் நோய் போன்ற துக்கமான விஷயங்கள்
இருப்பதில்லை. இப்போது நீங்கள் பாபாவின் மூலம் எவ்வளவு உயர்ந்த
பதவியை அடை கிறீர்கள். இங்கேயும் கூட மனிதர்கள் படிப்பின் மூலம்
தான் உயர்ந்த பட்டங்களைப் பெறுகிறார் கள். மிகுந்த குஷியில்
இருக்கிறார்கள். இவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
இருப்பார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
பாவங்களின் சுமை தலையில் அதிகம் இருக்கிறது. நிறைய தண்டனைகளை
அனுபவிப்பார்கள். தங்களை தூய்மையற்றவர்கள் என்று சொல்கிறார்கள்
அல்லவா! விகாரத்தில் செல்வதை பாவம் என்று புரிந்து கொள்வதில்லை.
பாவாத்மாக்களாக ஆகிறார்கள் அல்லவா! கிரகஸ்த (குடும்பம்) ஆசிரமம்
அனாதி காலமாக இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.
சத்யுகம்-திரேதா யுகத்தில் தூய்மையான குடும்ப ஆசிரமம் இருந்தது
என்று புரிய வைக்கப்படுகிறது. பாவ ஆத்மாக்கள் இருக்கவில்லை.
இங்கே பாவாத்மாக்கள் இருக்கிறார்கள் எனவே துக்கமுடையவர்களாக
இருக்கிறார்கள். இங்கே அல்பகால சுகமாகும், வியாதி வந்தது
என்றால் இறந்தார்கள். மரணம் வாயை பிளந்து கொண்டு நிற்கிறது.
திடீரென்று இதயம் நின்று விடுகிறது. இங்கே காக்கையின்
எச்சத்திற்கு சமமான சுகமாகும். அங்கே உங்களுக்கு அளவற்ற
சுகமாகும். நீங்கள் முழு உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள்.
எந்தவிதமான துக்கமும் இருக்காது. வெப்பமும் இருக்காது, குளிரும்
இருக்காது, எப்போதும் வசந்த காலமாக இருக்கும். தத்துவங்கள் கூட
கட்டுப்பாட்டில் இருக்கிறது. சொர்க்கம் சொர்க்கம் தான்,
இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. வந்து தூய்மையான
உலகத்தை ஸ்தாபனை செய்யுங்கள், எங்களை தூய்மையாக்குங்கள் என்று
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காகத் தான் நீங்கள் பாபாவை
அழைக்கின்றீர்கள்.
எனவே ஒவ்வொரு சித்திரத்திற்குக் கீழேயும் சிவபகவானுடைய
மகாவாக்கியம் என்று எழுதி யிருக்கட்டும். இதன்மூலம் அடிக்கடி
சிவபாபா நினைவிற்கு வருவார். ஞானத்தையும் கொடுத்துக் கொண்டே
இருப்பார். அருங் காட்சியகம் அல்லது கண்காட்சியின் சேவையில்
ஞானம் மற்றும் யோகம் இரண்டுமே நடக்கிறது. நினைவில் இருப்பதின்
மூலம் போதை அதிகரிக்கும். நீங்கள் தூய்மையாக ஆகி முழு
உலகத்தையும் தூய்மையாக்குகின்றீர்கள். நீங்கள் தூய்மையாக ஆகும்
போது கண்டிப்பாக உலகமும் தூய்மையானதாக வேண்டும். கடைசியில்
தீர்ப்பு நேரமாக இருக்கின்ற காரணத்தினால் அனைவருடைய
கணக்கு-வழக்கும் முடிகிறது. உங்களுக்காக நான் புதிய உலகத்தின்
திறப்புவிழா செய்ய வேண்டியுள்ளது. பிறகு கிளைகள் திறந்து கொண்டே
இருக் கிறார்கள். தூய்மை யாக்குவதற்காக புதிய உலகம்
சத்யுகத்தின் அஸ்திவாரத்தை பாபா அல்லாமல் வேறு யாரும் இட
முடியாது. எனவே அப்படிப்பட்ட பாபாவை நினைவும் செய்ய வேண்டும்
அல்லவா! நீங்கள் அருங்காட்சியகம் போன்றவற்றின் திறப்புவிழாவை
பெரிய மனிதர் களின் மூலம் செய்விக்கின்றீர்கள் என்றால் அவர்கள்
குரல் ஓங்கி ஒலிக்கும். இங்கே இவர்களும் வருகிறார்கள் என்று
மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். சிலர் நீங்கள் எழுதிக்
கொடுங்கள், நாங்கள் பேசுகிறோம் என்று சொல்வார்கள். அதுவும்
தவறாகும். நல்ல விதத்தில் புரிந்து கொண்டு சரளமாக வழக்க மானது
போல பேசினால் மிகவும் நன்றாக இருக்கும். சிலர் (கருத்துகள்
மாறாமல்) துல்லியமாக இருக்கட்டும் என்று எழுதி வைத்துக் கொண்டு
சொல்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சாதாரணமாக பேசுவது போல்
புரிய வைக்க வேண்டும். உங்களுடைய ஆத்மாவில் ஞானம் முழுவதும்
இருக்கிறது அல்லவா! பிறகு நீங்கள் மற்றவர் களுக்குக்
கொடுக்கின்றீர்கள். பிரஜைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அல்லவா!
அனைத்தும் வளர்ந்து கொண்டே செல்கின்றன. மரம் முழுவதும்
உளுத்துப் போய் விட்டது. யார் நம்முடைய தர்மத்தைச்
சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீண்டும் வருவார்கள்.
வரிசைக் கிரமம் என்பது இருக்கிறது அல்லவா! அனைவரும் ஒரே மாதிரி
படிக்க முடியாது அல்லவா! சிலர் நூற்றுக்கு ஒரு மதிப்பெண் கூட
எடுக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள், கொஞ்சம் கேட்டால் கூட,
ஒரு மதிப்பெண் கிடைத்தால் கூட சொர்க்கத்திற்கு வந்து
விடுவார்கள். இது எல்லையற்ற படிப்பாகும், இதை எல்லையற்ற தந்தை
தான் படிப்பிக்கின்றார். யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களாக
இருக்கிறார்களோ அவர்கள் வருவார்கள். அனைவரும் முதலில் நம்முடைய
வீடான முக்திதாமம் செல்ல வேண்டும், பிறகு வரிசைக்கிரமமாக வந்து
கொண்டே இருப்பார்கள். சிலர் திரேதாவின் கடைசியில் கூட
வருவார்கள். பிராமணர்களாக என்னவோ ஆகிறார்கள், ஆனால் பிராமணர்கள்
அனைவரும் சத்யுகத்தில் வருவதில்லை, திரேத்தாவின் கடைசியில் கூட
வருவார்கள். இவை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, அனைவரும் ஒரே மாதிரி
இருக்க முடியாது என்பதை பாபா தெரிந்துள்ளார். இராஜ்யத்தில்
அனைத்து விதமானவர்களும் வேண்டும். பிரஜை களை வெளியிலுள்ளவர்கள்
என்று சொல்லப்படுகிறது. அங்கே மந்திரிகள் போன்றவர்களுக்கு
அவசியம் இல்லை என்று பாபா புரிய வைத்துள்ளார். அவர்களுக்கு
ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது, அதன்மூலம் இப்படி (இலஷ்மி -
நாராயணன்) ஆகியுள்ளார்கள். பிறகு இவர்கள் யாரிடமாவது வழி
கேட்பார்களா என்ன? மந்திரிகள் போன்ற யாரும் இருப்பதில்லை. பிறகு
தூய்மையற்றவர் களாக ஆகும்போது ஒரு மந்திரி ஒரு இராஜா-இராணி
இருக்கிறார்கள். இப்போது பாருங்கள் எத்தனை மந்திரிகள்
இருக்கிறார்கள்! இங்கே பஞ்சாயத்து இராஜ்யம் அல்லவா! ஒருவருடைய
வழி மற்றொருவரோடு ஒத்துப் போகாது. ஒருவரோடு நட்பு வையுங்கள்,
புரியவையுங்கள், காரியத்தை செய்து விடுவார். பிறகு இன்னொருவர்
வந்தார், அவருடைய சிந்தனைக்கு வர வில்லை என்றால் இன்னும்
காரியத்தை கெடுத்து விடுவார். ஒருவருடைய புத்தி மற்றொரு வரோடு
சேராது. அங்கே உங்களுடைய அனைத்து மன ஆசைகளும் பூர்த்தியாகி
விடுகிறது. நீங்கள் எவ்வளவு துக்கத்தை அடைந்தீர்கள்! இதனுடைய
பெயரே துக்கதாமமாகும். பக்திமார்க் கத்தில் எவ்வளவு ஏமாற்றம்
அடைந்தீர்கள்! இதுவும் நாடகமாகும். எப்போது துக்கமுடையவர் களாக
ஆகின்றீர்களோ அப்போது பாபா வந்து சுகத்தின் ஆஸ்தியை
கொடுக்கின்றார். பாபா உங்களுடைய புத்தியை திறந்து விட்டார்.
செல்வந்தர்களுக்கு சொர்க்கம், ஏழைகளுக்கு நரகம் என்று மனிதர்கள்
சொல்லி விடுகிறார்கள். எதை சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது
என்பதை நீங்கள் யதார்த்தமான விதத்தில் தெரிந்துள்ளீர்கள்.
சத்யுகத்தில் இரக்கமனமுடையவரே என்று சொல்லி யாராவது
அழைப்பார்களா? இரக்கம் காட்டுங்கள், விடுவியுங்கள் என்று இங்கே
அழைக் கிறார்கள். பாபா தான் அனைவரையும் சாந்திதாமம்,
சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அஞ்ஞான காலத்தில்
நீங்களும் எதையும் தெரிந்திருக்கவில்லை. யார் நம்பர் ஒன்
தமோபிர தானமாக இருக்கிறாரோ, அவரே தான் பிறகு நம்பர் ஒன் சதோபிர
தானமாக ஆகின்றார். இவர் தன்னுடைய புகழைச் சொல்லவில்லை. எல்லா
புகழும் ஒருவருக்கே ஆகும். இலஷ்மி-நாராயணனை கூட அப்படி மாற்றக்
கூடியவர் அவர் அல்லவா. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார்.
அவர் மாற்றுவதும் உயர்ந்தவர்களாகத்தான். அனைவரும்
உயர்ந்தவர்களாக ஆக மாட்டார்கள் என்பதை பாபா தெரிந்துள்ளார்.
இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும். இங்கே நீங்கள்
நரனிலிருந்து நாராயணனாக ஆக வருகின்றீர்கள். பாபா, நாங்கள்
சொர்க்கத்தின் இராஜ்யத்தை அடைவோம் என்று சொல்கிறார்கள். நாங்கள்
சத்திய நாராயணனின் உண்மையான கதையைக் கேட்க வந்துள்ளோம்.
உங்களுடைய வாயில் குளோப் ஜாமுன் (இனிமை) இருக்கட்டும்,
உழையுங்கள் என்று பாபா கூறுகின்றார். அனைவரும் இலஷ்மி -
நாராயணனாக ஆக முடியாது அல்லவா. இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. இராஜ வம்சத்தில், பிரஜைகள் வம்சத்தில் நிறைய
பேர் வேண்டும் அல்லவா! ஆச்சரியமாக கேட்பார்கள்,
மற்றவர்களுக்குச் சொல்வார்கள், கையை விட்டு-விட்டு சென்று
விடுவார்கள்........... பிறகு திரும்பி வந்து விடு கிறார்கள்.
எந்தக் குழந்தைகள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக ஏதாவது
செய்கிறார்கள் என்றால் உயர்ந்து விடுகிறார்கள். சமர்பணம் ஆவது
ஏழைகளே ஆவர். தேகம் உட்பட வேறு எதுவும் நினைவில் இருக்கக்
கூடாது, உயர்ந்த குறிக்கோளாகும். ஒருவேளை உறவு சிறிது
இருந்தாலும் கண்டிப்பாக அது நினைவிற்கு வரும். பாபாவிற்கு என்ன
நினைவிருக்கும்? முழு நாளும் எல்லையற்றதில் தான் புத்தி
இருக்கிறது. எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது! என்னுடைய
குழந்தைகளிலும் கூட உயர்ந்த, மத்திம, கீழானவர்கள்
இருக்கிறார்கள் என்று பாபா கூறுகின்றார். வேறு யாராவது
வந்தாலும் கூட இவர் தூய்மையற்ற உலகத்தவர் என்று புரிந்து
கொள்கிறார். இருந்தாலும் யக்ஞத்தின் சேவை செய்கிறார்கள்
எனும்போது மதிப்பளிக்க வேண்டி யிருக்கிறது. பாபா யுக்தியானவர்
அல்லவா! இல்லையென்றால் இது அமைதியின் ஸ்தம்பம், புனிதத்திலும்
புனித ஸ்தம்பமாகும், இங்கே தூய்மையிலும் தூய்மையான பாபா
அமர்ந்து முழு உலகத்தையும் தூய்மையாக மாற்றுகின்றார். இங்கே
தூய்மையற்றவர்கள் யாரும் வர முடியாது. ஆனால் தூய்மையற்றவர்கள்
அனைவரையும் தூய்மையாக்கவே வந்துள்ளேன், இந்த விளை யாட்டில்
எனக்கும் நடிப்பு இருக்கிறது என்று பாபா கூறுகின்றார். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தங்களுடைய சார்டைப் பார்த்து, எவ்வளவு புண்ணியம்
சேர்ந்திருக்கிறது? ஆத்மா எந்தளவிற்கு சதோபிரதானமாக ஆகியுள்ளது?
என்று சோதனை செய்ய வேண்டும். நினைவில் இருந்து அனைத்து
கணக்கு-வழக்குகளையும் முடிக்க வேண்டும்.
2) ஸ்காலர்ஷிப் (உதவி) பெறுவதற்காக சேவாதாரியாக ஆகி நிறைய
பேருக்கு நன்மை செய்ய வேண்டும். பாபாவிற்குப் பிரியமானவர்களாக
ஆக வேண்டும். டீச்சராக ஆகி நிறைய பேருக்கு வழி சொல்ல வேண்டும்.
வரதானம்:
தனது பரிஸ்தா சொரூபத்தின் மூலம் அனைவருக்கும் ஆஸ்திக்கான
அதிகாரத்தை தருபவராக ஆகர்சன மூர்த்தி ஆகுக
பரிஸ்தா சொரூபத்தின் மிகவும் ஜொ-க்கும் ஆடை அணிந்து வெகு
தொலைவில் உள்ள ஆத்மாக்களையும் தன் வசம் கவர்ந்து அனைவரது
ஏழ்மையை நீக்கி ஆஸ்திக்கு அதிகாரியாக மாற்றிடுங்கள். இதற்காக
ஞான மூர்த்தி, நினைவு மூர்த்தி, அனைத்து தெய்வீக குண
மூர்த்தியாகி பறக்கும் கலையில் நிலைத்திருக்கும் பயிற்சி யினை
அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். உங்களது பறக்கும் கலையே
அனைவருக்கும் நடமாடும் மரிஸ்தா மற்றும் தேவதா நிலை
சாட்சாத்காரம் செய்விக்கும். இதுவே :ஞானவள்ளல் (விதத்தா) வரம்
வழங்கும் வள்ளல் நிலையாகும்.
சுலோகன்:
பிறரது மனோபவாங்களை புரிந்து கொள்ள எப்போதும் மன்மனாபவ நிலையில்
நிலை பெறுங்கள்
தனது சக்திசாலியான மனதின் மூலம் சக்தி கொடுக்கும் சேவை
செய்யுங்கள்:
மனோ சக்தியின் நிலைக்கண்ணாடி சொல்லும், செயலும் ஞானி
ஆத்மாக்களாயினும், அஞ்ஞானி ஆத்மாக் களாயினும் அவர்கள் தொடர்பில்
வரும் பொழுது சொல்லும், செயலும் நல்லாதசை மற்றும் நல் விருப்பம்
உடையதாக வேண்டும். யாருடைய மனம் சுபமான சக்தி வாய்ந்ததாக
இருக்குமோ அவர்களுடைய சொல்லும் செயலும் இயல்பாகவே சுத்தமாக,
சக்திசாலியாக, சுப பாவனை உடையதாகும். சக்தி வாயந்த மனம் என்பது
நினைவின் சக்தி சிரேஷ்டமாக, சக்திசாலியாக சகஜயோகியாக இருப்பர்.
|
|
|