16.02.25    காலை முரளி            ஓம் சாந்தி  02.02.2004      பாப்தாதா,   மதுபன்


பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய ஆத்மா என்ற சுவமானத்தில் இருந்து உலகத்தின் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பாலனை செய்யுங்கள், ஆசீர்வாதங்கள் கொடுங்கள், ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்

இன்று நாலாபுறங்களிலும் உள்ள சிரேஷ்ட குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு குழந்தையும் பூர்வஜ்ஜாகவும் (மூதாதையர்) இருக்கின்றார் மற்றும் பூஜைக்குரிய வராகவும் இருக்கின்றார், ஆகையினால், நீங்கள் அனைவரும் இந்த கல்ப விருட்சத்தின் வேராக வும், அடிமரமாகவும் இருக்கின்றீர்கள். அடிமரத்தின் தொடர்பானது தானாகவே முழு விருட்சத் தினுடைய கிளைகளோடும், இலைகளோடும் உள்ளது. ஆக, அனைவரும் தன்னை அப்பேற்பட்ட சிரேஷ்ட ஆத்மாவாக, முழு விருட்சத்தின் பூர்வஜ் எனப் புரிந்திருக் கின்றீர்களா? எவ்வாறு பிரம்மா கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் என்று அழைக்கப்படுகின்றாரோ, அவருடைய துணையாகிய நீங்களும் மாஸ்டர் கிரேட் கிராண்ட் ஃபாதர் ஆவீர்கள். பூர்வஜ் ஆத்மாக்களுக்கு எவ்வளவு சுவமானம் உள்ளது! அந்த போதையில் இருக்கின்றீர்களா? முழு விஷ்வத்தின் ஆத்மாக்களில், எந்த வொரு தர்மத்தின் ஆத்மாக்களானாலும் சரி, ஆனால், அனைத்து ஆத்மாக்களுக்கும், அடிமரமாகிய நீங்கள் ஆதார மூர்த்தியான பூர்வஜ் ஆவீர்கள், ஆகையினால், பூர்வஜ்ஜாக இருக்கும் காரணத் தினால் பூஜைக்குரியவராகவும் இருக்கின்றீர்கள். பூர்வஜ் மூலமாக ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தானாகவே சகாஷ் (சக்தி) கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. மரத்தைப் பாருங்கள், அடிமரத்தின் மூலம், வேரின் மூலம் கடைசி இலைக்கும் கூட சகாஷ் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. பூர்வஜ்ஜினுடைய காரியம் என்ன? அனைவருக்கும் பாலனை செய்வது பூர்வஜ்ஜின் காரியம் ஆகும். லௌகீகத்தில் கூட பாருங்கள், மூதாதையர்கள் மூலமே சரீரம் சக்திசாலியாக ஆகுவதற் கான பாலனை, ஸ்தூல உணவு மூலம், படிப்பு மூலம் சக்தியை நிறைப்பதற்கான பாலனை கிடைக்கின்றது. பூர்வஜ் ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தை மூலம் கிடைத்திருக்கும் சக்திகளால் அனைத்து ஆத்மாக்களுக்கும் பாலனை செய்ய வேண்டும்.

இன்றைய சமயத்தின் அனுசாரம் அனைத்து ஆத்மாக்களுக்கும் சக்திகள் மூலம் செய்யப்படும் பாலனைக்கான அவசியம் உள்ளது. தற்சமயம் ஆத்மாக்களிடத்தில் அசாந்தி மற்றும் துக்கத்தின் அலை ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே, பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய ஆத்மாக்களாகிய உங்களுக்கு தன்னுடைய வம்சாவளி மீது கருணை வருகிறதா? எவ்வாறு எப்பொழுதாவது ஏதாவது விசேஷமான அசாந்தியான வாயுமண்டலம் ஏற்படுகிறது என்றால் விசேஷமான ரூபத்தில் இராணுவம் அல்லது காவல்துறை அலர்ட் (எச்சரிக்கை) ஆகிவிடுகிறது. அதுபோன்று தற்சமயத்தின் சூழ்நிலையில் பூர்வஜ் ஆகிய நீங்களும் விசேஷ சேவைக்காக தன்னை நிமித்தமானவர் என புரிந்திருக்கின்றீர்களா? முழு விஷ்வத்தின் ஆத்மாக் களுக்கும் நிமித்தமானவர், இந்த நினைவு உள்ளதா? முழு விஷ்வத்தின் ஆத்மாக்களுக்கு இன்று உங்களுடைய சகாஷ் அவசியமாக உள்ளது. இவ்வாறு தன்னை எல்லையற்ற உலகத்தின் பூர்வஜ் ஆத்மா என்று அனுபவம் செய்கின்றீர்களா? விஷ்வத்தின் சேவை நினைவுக்கு வருகின்றதா அல்லது தன்னுடைய சென்டர்களின் சேவை நினைவுக்கு வருகின்றதா? இன்று பூர்வஜ் தேவ ஆத்மாக்களாகிய உங்களை ஆத்மாக்கள் அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவரவரின் வெவ்வேறு தேவிகள் மற்றும் தேவதைகளை - வாருங்கள், மன்னித்திடுங்கள், கிருபை காட்டுங்கள் என்று அழைத்துக் கொண்டு இருக்கின்றனர். பக்தர்களின் குரல் கேட்கிறதா? கேட்கிறதா அல்லது இல்லையா? எந்த தர்மத்தைச் சேர்ந்த ஆத்மாவானாலும், எப்பொழுது அவர்களை சந்திக்கின்றீர்களோ, அப்பொழுது தன்னை அனைத்து ஆத்மாக்களுடைய பூர்வஜ் என புரிந்துகொண்டு சந்திக்கின்றீர்களா? இவர்களும் பூர்வஜ்ஜாகிய நம்முடைய கிளைகளே ஆவார்கள் என்ற அனுபவம் ஏற்படுகிறதா? இவர்களுக்கும் சகாஷ் கொடுக்கக்கூடிய பூர்வஜ் நீங்கள். தங்களுடைய கல்ப விருட்சத்தின் சித்திரத்தை முன்னால் கொண்டு வாருங்கள், உங்களுடைய இடம் எங்கு உள்ளது என்று தன்னைப் பாருங்கள்! வேரிலும் நீங்கள் இருக்கின்றீர்கள், அடிமர மாகவும் நீங்கள் உள்ளீர்கள். கூடவே, பரந்தாமத்திலும் பாருங்கள், பூர்வஜ் ஆத்மாக்களாகிய உங்களுடைய இடமானது பாபாவிற்கு அருகாமையில் உள்ளது. அறிவீர்கள் அல்லவா! இந்த போதையோடு எந்தவொரு ஆத்மாவையும் சந்தித்தீர்கள் என்றால் ஒவ்வொரு தர்மத்தின் ஆத்மாவும் உங்களை இவர்கள் நம்முடையவர்கள், என்னுடையவர்கள், இந்த பார்வையில் பார்ப்பார்கள். ஒருவேளை, இந்த பூர்வஜ் என்ற போதையோடு, நினைவோடு, விருத்தியோடு, திருஷ்டியோடு சந்திக்கின்றீர்கள் என்றால், அவர்களுக்கும் கூட தன்னுடையவர்கள் என்ற உணர்வு ஏற்படும், ஏனெனில், நீங்கள் அனைவருடைய பூர்வஜ் ஆவீர்கள், அனைவருக்கும் உரியவர்கள் ஆவீர்கள். இத்தகைய நினைவோடு சேவை செய்வதனால், நம்முடைய பூர்வஜ் மற்றும் இஷ்ட தேவதைகளாகிய இவர்கள் மீண்டும் நமக்கு கிடைத்துவிட்டார்கள் என்று ஒவ்வொரு ஆத்மாவும் அனுபவம் செய்வார்கள். பிறகு, பூஜைக்குரிய நிலையையும் பாருங்கள், எவ்வளவு பெரிய பூஜை நடக்கிறது, எந்தவொரு தர்மாத்மா, மகாத்மாவிற்கும் தேவி தேவதைகளாகிய உங்களுக்கு சமமாக விதிப்பூர்வமாக பூஜை நடைபெறுவது இல்லை. பூஜைக்குரியவர் ஆகின்றனர், ஆனால், உங்களுக்கு நடைபெறுவது போல் விதிப்பூர்வமாக பூஜை நடைபெறுவது இல்லை. மகிமையையும் பாருங்கள், எந்தளவு விதிப்பூர்வமாக கீர்த்தனையும் பாடுகின்றார்கள், ஆரத்தி காண்பிக்கின்றார்கள். அப்பேற் பட்ட பூஜைக்குரியவராக பூர்வஜ்ஜாகிய நீங்கள் தான் ஆகின்றீர்கள். தன்னை இவ்வாறு புரிந்துள்ளீர் களா? இத்தகைய போதை உள்ளதா? உள்ளதா போதை? நாம் பூர்வஜ் ஆத்மாக்கள், இந்த போதை உள்ளது, இந்த நினைவு உள்ளது என்று யார் புரிந்திருக்கின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். உள்ளதா? நல்லது. உள்ளது என்பதற்கு கையை உயர்த்தினீர்கள். மிகவும் நல்லது. இப்பொழுது மற்றுமொரு கேள்வி என்ன வருகிறது? சதா உள்ளதா?

பாப்தாதா, அனைத்து குழந்தைகளையும் ஒவ்வொரு பிராப்தியிலும் அழிவற்ற நிலையில் இருப்பதை பார்க்க விரும்புகின்றார்கள். அவ்வப்போது அல்ல, ஏன்? மிகவும் சாமர்த்தியமாக பதிலளிக்கின்றார்கள், என்ன கூறுகின்றார்கள்? இருக்கின்றோம்...., நன்றாக இருக்கின்றோம். பிறகு, கொஞ்சம் அவ்வப்போது இருக்கின்றோம் என்று மெதுவாகக் கூறுகின்றார்கள். பாருங்கள், தந்தையும் அழிவற்றவர், ஆத்மாக்களாகிய நீங்களும் அழிவற்றவர் கள் அல்லவா! பிராப்திகளும் அழிவற்றவை, ஞானமும் அழிவற்றது, எனில், தாரணை என்னவாக இருக்க வேண்டும்? அழிவற்ற தாக இருக்க வேண்டுமா? அல்லது அவ்வப்போது இருக்க வேண்டுமா?

பாப்தாதா இப்பொழுது அனைத்து குழந்தைகளையும் சமயத்தின் சூழ்நிலையின் அனுசாரம் எல்லையற்ற சேவையில் சதா பிஸியாக இருப்பதை பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள். ஏனெனில், சேவையில் பிஸியாக இருப்பதன் காரணத்தினால் அனேக விதமான கலகங்களில் இருந்து தப்பித்துவிடுகின்றீர்கள். ஆனால், எப்பொழு தெல்லாம் சேவை செய்கின்றீர்களோ, திட்டம் தீட்டு கின்றீர்களோ, திட்டத்தின் அனுசாரம் நடைமுறையில் செயல்படு கின்றீர்களோ, அப்பொழு தெல்லாம் வெற்றியும் அடைகின்றீர்கள். ஆனால், பாப்தாதா ஒரு சமயத்தில் மூன்று சேவைகள் இணைந்து இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள், வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல, மனதாலும், வார்த்தையாலும், செயல் அதாவது சம்பந்தம், தொடர்பில் வரும்போதும் சேவை நடக்க வேண்டும். சேவைக்கான நோக்கம், சேவை உணர்வு இருக்க வேண்டும். இந்த சமயம் வார்த்தைகளால் செய்யும் சேவையின் சதவிகிதம் அதிகமாக உள்ளது, மனதால் செய்வதும் உள்ளது, ஆனால், வார்த்தைகளின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. ஒரே நேரத்தில் மூன்று சேவைகளும் இணைந்து இருப்பதனால் சேவையில் வெற்றி மேலும் அதிகமாகக் கிடைக்கும்.

இந்தக் குழுவில் கூட வெவ்வேறு துறையினர் வந்திருக்கின்றனர் மற்றும் சேவைக்கான திட்டங்களை நன்றாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை பாப்தாதா கேள்வி யுற்றார்கள். நன்றாக செய்து கொண்டிருக்கின்றீர்கள், ஆனால், மூன்று சேவைகளையும் இணைத்து செய்வதனால் சேவையின் வேகம் மேலும் தீவிரம் அடையும். நாலாபுறங்களில் இருந்தும் குழந்தைகள் வந்து சேர்ந்துவிட்டனர், இதைப் பார்த்து பாப்தாதாவிற்கும் கூட குஷி ஏற்படுகிறது. புதுப்புது குழந்தைகள் ஊக்கம், உற்சாகத்தோடு வருகின்றார்கள்.

இப்பொழுது பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் சதா தடையற்ற (நிர்விக்ன) சொரூபத்தில் பார்க்க விரும்புகின்றார்கள், ஏன்? நிமித்தமாக ஆகியிருக்கும் நீங்கள் எப்பொழுது நிர்விக்ன நிலையில் நிலைத்திருக் கின்றீர்களோ, அப்பொழுது உலகத்தின் ஆத்மாக்களை அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நிர்விக்னம் ஆக்கமுடியும். இதற்காக விசேஷமாக இரண்டு விசயங் களுக்கு அடிக்கோடிடுங்கள். செய்கின்றீர்கள், ஆனால், இன்னும் அடிக்கோடிடுங்கள். ஒன்று ஒவ்வொரு ஆத்மாவையும் தன்னுடைய ஆன்மிகப் பார்வையோடு பாருங்கள். ஆத்மாவின் ஒரிஜினல் (அசலான) சமஸ்காரத்தின் சொரூபத்தில் பாருங்கள். எப்படிப்பட்ட சமஸ்காரம் கொண்ட ஆத்மாவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால், ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் நீங்கள் செய்யும் சுபபாவனை, சுபவிருப்பம் (காமனா) பரிவர்த்தனைக்கான சிரேஷ்ட பாவனையானது, அவர் களுடைய சமஸ்காரத்தை கொஞ்ச சமயத்திற்காக பரிவர்த்தனை செய்யமுடியும். ஆன்மிக உணர்வை வெளிக்கொணருங்கள். எவ்வாறு ஆரம்பத்தில் பார்த்துள்ளீர்கள், குழுவில் இருக்கும் பொழுதும் ஆன்மிகப் பார்வை, ஆன்மிக விருத்தி, ஆத்மா, ஆத்மாவுடன் சந்தித்துக் கொண்டிருக்கின்றது, பேசிக் கொண்டிருக்கின்றது என்ற இந்தப் பார்வையினால் அஸ்திவாரம் எவ்வளவு உறுதியாகிவிட்டது. இப்பொழுது சேவையின் விஸ்தாரத்தில், சேவையினுடைய விஸ்தாரத் தின் சம்பந்தத்தில் ஆன்மிக உணர்வோடு நடப்பது, பேசுவது, தொடர்பில் வருவது மெர்ஜ் ஆகியிருக்கின்றது. அழிந்துவிடவில்லை, ஆனால், மெர்ஜ் ஆகியிருக்கின்றது. ஆன்மிக சுவமானம், ஆத்மாவிற்கு சகஜமாக வெற்றி கிடைக்கச் செய்கின்றது, ஏனெனில், நீங்கள் அனைவரும் யார் வந்து ஒன்றுகூடி இருக்கின்றீர்கள்? கல்பத்திற்கு முன்பு வந்த அதே தேவ ஆத்மாக்கள், பிராமண ஆத்மாக்கள் ஒன்றுகூடி இருக்கின்றீர்கள். பிராமண ஆத்மா என்ற ரூபத்தில் கூட அனைவரும் சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆவீர்கள், தேவ ஆத்மாக்கள் என்ற கணக்கிலும் கூட சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆவீர்கள். இதே சொரூபத்தில் இருந்து சம்பந்தம், தொடர்பில் வாருங்கள். தேவ ஆத்மாவாகிய, பிராமண ஆத்மாவாகிய என்னுடைய சிரேஷ்ட காரியம், சிரேஷ்ட சேவை என்ன? என்பதை ஒவ்வொரு சமயமும் சோதனை செய்யுங்கள். ஆசீர்வாதங்கள் கொடுப்பது மற்றும் ஆசீர்வாதங்கள் பெறுவது. உங்களுடைய ஜடச்சித்திரம் என்ன சேவை செய்கின்றது? எப்படிப்பட்ட ஆத்மாவானாலும் ஆசீவாதங்கள் பெறச் செல்கின்றார்கள், ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டு வருகின்றார்கள். மேலும், யாராவது ஒருவேளை முயற்சியில் உழைப்பு உள்ளது என்று நினைக்கின்றீர்கள் என்றால் முழு நாளும் திருஷ்டி, விருத்தி, சொல், பாவனை ஆகிய அனைத்தின் மூலமும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும், ஆசீர்வாதங்களைப் பெறுவதுமே அனைத்தையும் விட எளிய முயற்சி ஆகும். மகாதானி என்பது உங்களுடைய டைட்டிலும், வரதானமும் ஆகும். சேவை செய்யும்பொழுது, காரியத்தில், சம்பந்தம், தொடர்பில் வரும்பொழுது இந்தக் காரியத்தை மட்டும் செய்யுங்கள் - ஆசீர்வாதங்கள் கொடுங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் பெறுங்கள். இது கடினமா என்ன? அல்லது சுலபமா? யார் சுலபமானது என்று நினைக்கின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங் கள். யாராவது உங்களை எதிர்த்தார்கள் என்றால்? அப்பொழுதும் ஆசீர்வாதம் கொடுப்பீர்களா? கொடுப்பீர்களா? இந்தளவு ஆசீர்வாதங்களின் ஸ்டாக் உங்களிடம் உள்ளதா? எதிர்ப்பு வரும், ஏனெனில், எதிர்ப்பு (அப்பொசிஷன்) தான் பொசிஷன் (பதவி உயர்நிலை) வரை கொண்டு சேர்க் கின்றது. பாருங்கள், அனைவரையும் விட அதிகமான எதிர்ப்பு பிரம்மா பாபாவிற்குக் கிடைத்தது. கிடைத்தது அல்லவா? ஆனால், நம்பர்ஒன் பொசிஷனை அடைந்தது யார்? பிரம்மா அடைந்தார் அல்லவா! என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், ஆனால், நான் பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆசீர்வாதங்கள் கொடுக்க வேண்டும். பிரம்மா பாபாவிற்கு முன்னால் வீணானவற்றைப் பேசுபவர் கள், வீணானவற்றை செய்பவர்கள் இல்லாமல் இருந்தார்களா என்ன? ஆனால், பிரம்மா பாபா ஆசீர்வாதங்கள் கொடுத்தார், ஆசீர்வாதங்கள் பெற்றார், கரைக்கும் சக்தியைக் கொண்டிருந்தார். குழந்தையாவார், மாறிவிடுவார். இதுபோலவே நீங்கள் கூட இவர் கல்பத்திற்கு முன்பு வந்த நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர், பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற இந்த விருத்தி, திருஷ்டியைக் கொண்டிருங்கள். நான் மாறி இவர்களையும் மாற்ற வேண்டும். இவர்கள் மாறினால் நான் மாறுவேன், இல்லை. நான் மாறி மாற்ற வேண்டும், என்னுடைய பொறுப்பு ஆகும். அப்பொழுதே ஆசீர்வாதம் வெளிப்படும் மற்றும் ஆசீர்வாதம் கிடைக்கும். இப்பொழுது சமயம் மாற்றத்தை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருக்கின்றது, மிக வேகமாகச் சென்று கொண்டி ருக்கின்றது, ஆனால், சமயம் மாற்றம் அடைவதற்கு முன்னதாக உலகத்தை மாற்றக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் சுயமாற்றத்தின் மூலம் அனைவருடைய மாற்றத்திற்கு ஆதார மூர்த்தி ஆகுங்கள். நீங்களும் விஷ்வத்தின் ஆதாரமூர்த்தி, உத்தாரமூர்த்தி (மீட்பவர், காப்பாற்றுபவர்) ஆவீர்கள். நான் நிமித்தம் ஆகவேண்டும் என்று ஒவ்வொருவரும் இலட்சியம் கொள்ளுங்கள். மூன்று விசயங்கள் மட்டும் தனக்குள் எண்ணத்தளவில் கூட வரக்கூடாது, இந்த மாற்றம் செய்யுங்கள். ஒன்று - பரசிந்தனை. இரண்டாவது - பரதர்ஷன். சுயதர்ஷனுக்கு பதிலாக பரதர்ஷன் கூடாது. மூன்றாவது - பரமத் அல்லது பிறதொடர்பு, தீயதொடர்பு. சிரேஷ்ட தொடர்பு வைத்திடுங் கள், ஏனெனில், தீயதொடர்பு மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பாப்தாதா கூறினார் கள் - ஒன்று பர-உபகாரி ஆகுங்கள், மேலும், இந்த மூன்று பர-வை துண்டித்துவிடுங்கள். பர தர்ஷன், பர சிந்தன், பரமத் அதாவது தீயதொடர்பு, பிறருடைய தவறான தொடர்பு. பர-உபகாரி ஆகுங்கள், அப்பொழுதே ஆசீர்வாதங்கள் கிடைக்கும், ஆசீர்வாதங்களைக் கொடுப்பீர்கள். ஒருவர் என்ன வேண்டுமானாலும் கொடுக்கட்டும், ஆனால், நீங்கள் ஆசீர்வாதங்கள் கொடுங்கள். இந்தளவு தைரியம் உள்ளதா? இருக்கிறதா தைரியம்? ஒருவேளை, ஒருவர் என்ன வேண்டுமானாலும் கொடுக் கட்டும், நான் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தைரியம் வைத்தீர்கள் என்றால் பாப்தாதா இந்த வருடம் உங்களுக்கு தைரியம், ஊக்கம் இருக்கும் காரணத்திற்காக அதிகப்படியான (எக்ஸ்ட்ரா) உதவி செய்வார்கள் என்று பாப்தாதா நாலாபக்கங் களிலும் உள்ள அனைத்து சென்டர்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கூறுகின்றார்கள். அதிகப்படி யான உதவி செய்வார்கள், ஆனால், ஆசீர்வாதங்கள் கொடுத்தீர்கள் என்றால் மட்டுமே. கலப்படம் செய்யக்கூடாது. பாப்தாதாவிடமோ முழு பதிவேடும் வருகிறது அல்லவா. எண்ணத்தில் கூட வேறு எதுவும் வரக்கூடாது. தைரியம் உள்ளதா? உள்ளது என்றால் கை உயர்த்துங்கள். செய்தாக வேண்டும். கை மட்டும் உயர்த்தக் கூடாது. செய்தாக வேண்டும். செய்வீர்களா? மதுபனில் உள்ளவர்கள், டீச்சர்கள் செய்வீர்களா? நல்லது, எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் பெறுவீர்களா? வாழ்த்துக்கள். ஏன்? பாப்தாதாவிடம் அட்வான்ஸ் பார்ட்டியினர் அடிக்கடி வருகின்றனர். எங்களுக்கோ அட்வான்ஸ் பார்ட்டியின் பாகம் கொடுத்தீர்கள், அதை நடித்துக் கொண்டிருக் கின்றோம், எங்களுடன் இருந்தவர்கள் ஏன் அட்வான்ஸ் நிலையை (ஸ்டேஜ்) உருவாக்குவ தில்லை? என்று அவர்கள் கேட்கின்றார்கள். இப்பொழுது பதில் என்ன கொடுக்கட்டும்? என்ன பதில் கொடுக்கட்டும்? அட்வான்ஸ் நிலை மற்றும் அட்வான்ஸ் பார்ட்டியினுடைய பாகம், எப்பொழுது இரண்டும் இணைகிறதோ, அப்பொழுதே சமாப்தி ஏற்படும். அவர்கள் கேட்கின்றார்கள், என்ன பதில் சொல்லட்டும்? எத்தனை வருடத்தில் ஆகுவீர்கள்? அனைத்தையும் கொண்டாடிவிட்டீர்கள், வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா ஆகிய அனைத்தையும் கொண்டாடிவிட்டீர்கள். இப்பொழுது அட்வான்ஸ் நிலையின் விழா கொண்டாடுங்கள். இதற்கான தேதி குறித்திடுங்கள். பாண்டவர்கள் சொல்லுங்கள், இதற்கான தேதி குறிக்கலாமா? முதல் வரிசையில் உள்ளவர்கள் சொல்லுங்கள். தேதி குறிக்கப்படுமா அல்லது திடீரென்று நடக்குமா? என்ன ஆகும்? திடீரென்று நடக்குமா அல்லது நடந்துவிடுமா? சொல்லுங்கள், ஏதாவது சொல்லுங்கள். யோசித்துக் கொண்டிருக்கின்றீர்களா என்ன? நிர்வைரிடம் (சகோதரரிடம்) கேட்டுக் கொண்டிருக் கின்றீர்களா? விழா நடக்குமா அல்லது திடீரென்று நடக்குமா? நீங்கள் தாதியிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்களா? தாதி ஏதாவது பேசட்டும் என்று இவர் தாதியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று ரமேஷ் சகோதரரிடம் கேட்கின்றோம். (இறுதியில் இது நடக்கத் தான் போகிறது) இறுதி என்றால் எப்பொழுது? (நீங்கள் தேதி சொல்லுங்கள், அந்த தேதிக்குள் செய்துவிடு வோம்) நல்லது - பாப்தாதா ஒரு வருடத்திற்கான எக்ஸ்ட்ரா தேதி கொடுத்திருக்கின்றார்கள். தைரியத்திற்கான எக்ஸ்ட்ரா உதவி கிடைக்கும். இதையோ செய்ய முடியும் தானே, இதை செய்து காட்டுங்கள், பிறகு தந்தை தேதி குறிப்பார். (உங்களுடைய வழிகாட்டல் வேண்டும், அதன்படி 2004ஐ கொண்டாடுவோம்) அப்படி என்றால் இப்பொழுது அந்தளவு தயாராக இல்லை என்று தானே அர்த்தம். அட்வான்ஸ் பார்ட்டியினர் இப்பொழுது ஒரு வருடம் வரை இருக்கத் தான் வேண்டும் அல்லவா. நல்லது, ஏனெனில், செய்தே ஆகவேண்டும் என்று இப்பொழுதிருந்து இலட்சியம் வைத்தீர்கள் என்றால் நீண்ட காலத்திற்கானதாக ஆகிவிடும், ஏனெனில், நீண்டகாலம் என்பதன் கணக்கும் உள்ளதல்லவா! ஒருவேளை, இறுதியில் செய்வீர்கள் என்றால் நீண்டகாலம் என்பதன் கணக்கு சரியாக இருக்காது, ஆகையினால், இப்பொழுதிருந்தே அட்டென்ஷன் ப்ளீஸ். நல்லது.

இப்பொழுது ஆன்மிக டிரில் நினைவு இருக்கிறதா? ஒரு நொடியில் தன்னுடைய பூர்வஜ் நிலைக்கு வந்து பரந்தாம நிவாசியான தந்தையுடன் இணைந்து லைட் ஹவுஸ் ஆகி விஷ்வத்திற்கு லைட் கொடுக்க முடியுமா? நாலாபுறங்களில் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கக்கூடிய உள்நாட்டினர், வெளிநாட்டினர், ஒரு நொடியில் லைட் ஹவுஸ் ஆகி விஷ்வத்தினுடைய நாலா புறங்களிலும் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கு ஒளி கொடுங்கள், சகாஷ் கொடுங்கள், சக்திகள் கொடுங்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள விஷ்வத்தின் பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய ஆத்மாக்களுக்கு, சதா வள்ளல் ஆகி அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுக்கக்கூடிய மகாதானி ஆத்மாக்களுக்கு, சதா உறுதித்தன்மை மூலம் சுயபரிவர்த்தனையினால் அனைவரையும் பரிவர்த்தனை செய்யக்கூடிய விஷ்வத்தை பரிவர்த்தனை செய்யும் ஆத்மாக்களுக்கு, சதா லைட் ஹவுஸ் ஆகி அனைத்து ஆத்மாக்களுக்கும் லைட் கொடுக்கக்கூடிய நெருக்கமான ஆத்மாக்களுக்கு பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் உள்ளத்தின் ஆசீர்வாதங்கள் சகிதமான நமஸ்காரம்.

தாதிஜி, தாதி ஜானகி அவர்களுடன்: நன்றாக உள்ளது, இரண்டு தாதிகளும் மிகவும் நன்றாக பாலனை செய்து கொண்டு இருக்கின்றீர்கள். நல்ல பாலனை கிடைத்துக் கொண்டு இருக்கிறது அல்லவா! மிகவும் நல்லது. சேவைக்கு நிமித்தம் ஆகி இருக்கின்றீர்கள் அல்லவா! உங்கள் அனைவருக்கும் கூட தாதிகளைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா! பொறுப்பின் சுகம் கூட கிடைக்கிறது அல்லவா! அனை வருடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு கிடைக்கின்றன. அனைவருக்கும் குஷி ஏற்படுகிறது, (இரண்டு தாதிகளும் பாப்தாதாவை அணைத்துக் கொள்கின்றனர்) எவ்வாறு இதைப் பார்த்து குஷி ஏற்படுகிறதோ, அதுபோல் இவர் களைப் போல் ஆகிவிட்டால் எவ்வளவு குஷி ஏற்படும்! ஏனெனில், பாப்தாதா நிமித்தம் ஆக்கியிருக் கின்றார்கள் என்றால் ஏதாவது விசேஷத்தன்மை உள்ளது, ஆகையினாலேயே நிமித்தம் ஆக்கி யிருக்கின்றார்கள். மேலும், அதே விசேஷத்தன்மைகள் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் வந்து விட்டால் என்ன ஆகும்? நம்முடைய இராஜ்யம் வந்துவிடும். பாப்தாதா தேதி என்ன கூறினார்களோ, அது வந்துவிடும். தேதி குறிக்க வேண்டும் என்பது இப்பொழுது நினைவு உள்ளது அல்லவா. நான் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். எனவே, அனைவரும் நிமித்தம் ஆகிவிட்டீர்கள் என்றால் விஷ்வம் புதியதாகப் படைக்கப்பட்டுவிடும். நிமித்த உணர்வு, இது குணங்களின் சுரங்கம் ஆகும். ஒவ்வொரு நேரமும் நிமித்த உணர்வு மட்டும் வந்துவிட்டால் மற்ற அனைத்து குணங்களும் சகஜமாக வந்துவிடும். ஏனெனில், நிமித்த உணர்வில் நான் என்பது இருக்காது மேலும், நான் என்பது தான் கலகத்தில் கொண்டு வருகிறது. நிமித்தம் ஆகுவதனால் எனது என்பதுவும் அழிந்து போகிறது, உனது, உனது என்பது வந்துவிடுகிறது. சகஜயோகி ஆகிவிடுகின்றீர்கள். அனைவருக்கும் தாதிகள் மீது அன்பு உள்ளது, பாப்தாதா மீது அன்பு உள்ளது, அன்பிற்கான கைம்மாறு - விசேஷத்தன்மைகளை சமமாக ஆக்கவேண்டும். இப்படி இலட்சியம் வைத்திடுங்கள். விசேஷத்தன்மைகளை சமமாக ஆக்கவேண்டும். எவரிடமும் ஏதாவது விசேஷத்தன்மையைப் பாருங்கள், விசேஷத்தன்மையைப் பின்பற்றுங்கள் (பாலோ செய்திடுங்கள்). ஆத்மாவைப் பின்பற்றும் (பாலோ செய்யும்) போது இரண்டுமே தென்படும். விசேஷத்தன்மையைப் பாருங்கள் மற்றும் அதில் சமம் ஆகுங்கள். நல்லது.

வரதானம்:
நம்பிக்கையின் துண்டிக்கப்படாத ரேகையின் மூலம் நம்பர்ஒன் பாக்கியத்தை உருவாக்கக்கூடிய வெற்றியினுடைய திலகதாரி ஆகுக.

யார் நிச்சயபுத்தி உடைய குழந்தைகளோ, அவர்கள் ஒருபோதும் எப்படி மற்றும் அப்படி என்பதன் விஸ்தாரத்தில் செல்லமாட்டார்கள். அவர்களுடைய நம்பிக்கையின் துண்டிக்கப்படாத ரேகை மற்ற ஆத்மாக் களுக்கும் தெளிவாகத் தென்படும். அவர்களுடைய நம்பிக்கையின் ரேகையினுடைய கோடு இடைஇடையில் துண்டிக்கப்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட ரேகையை உடையவர்கள் நெற்றியில் சதா வெற்றித்திலகம் தெரியும். அவர்கள் பிறந்ததுமே சேவைக்கான பொறுப்பு கிரீடத்தை அணிந்தவர்களாக இருப்பார்கள். சதா ஞான இரத்தினங் களோடு விளையாடுபவர்களாக இருப்பார்கள். சதா நினைவு மற்றும் குஷி என்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டே வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள். இதுவே நம்பர்ஒன் பாக்கிய ரேகை ஆகும்.

சுலோகன்:
புத்தி என்ற கம்ப்யூட்டரில் முற்றுப்புள்ளியின் குறியீடு வருவது என்றால், மகிழ்ச்சியான உள்ளம் உடையவராக இருப்பதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்.

யாருக்கு அனேக பக்கத்தில் இருந்து புத்தியின் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்குமோ மற்றும் ஒருவருக்கு மட்டும் பிரியமானவராக இருப்பாரோ, அவரே ஏகாந்தப்பிரியராக இருப்பார். ஒருவருக்குப் பிரிய மானவராக இருக்கும் காரணத்தினால் ஒருவருடைய நினைவில் இருக்க முடிகிறது. அனேகருக்கு பிரியமானவராக ஆகும் காரணத்தினால் ஒருவருடைய நினைவில் இருக்கமுடியாது. அனேக பக்கத்தில் இருந்து புத்தியோகம் துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும், ஒரு பக்கம் இணைந்து இருக்க வேண்டும் அதாவது ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை - இத்தகைய ஸ்திதியை யார் கொண்டிருப்பார்களோ, அவர்களே ஏகாந்தப்பிரியராக ஆக முடியும்.

குறிப்பு: மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று உலகளாவிய யோகா தினம் ஆகும். மாலை 6.30 முதல் 7.30 மணி வரை அனைத்து சகோதர, சகோதரிகளும் குழுவாக ஒன்றிணைந்து யோகப் பயிற்சியில் ஆத்மாவாகிய என் மூலம் தூய்மையின் கிரணங்கள் வெளிப்பட்டு முழு உலகத்தையும் தூய்மை ஆக்கிக் கொண்டிருக்கின்றது என்ற இந்த சுபமான சங்கல்பம் செய்ய வேண்டும். நான் மாஸ்டர் பதீத பாவனி ஆத்மா.