16.03.25    காலை முரளி            ஓம் சாந்தி  05.03.2004      பாப்தாதா,   மதுபன்


பலவீனமான சம்ஸ்காரங்களை சம்காரம் (அழித்துவிட்டு) செய்து விட்டு உண்மையான ஹோலி கொண்டாடுங்கள் அப்போதே உலகம் மாறும்.

இன்று பாப்தாதா தனது நாலாபுறமும் உள்ள ராஜா குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த பரமாத்மா அன்பு கோடியில் ஒரு சில சிரேஸ்ட ஆத்மாக்களாகிய உங்களுக்கே பிராப்தமா கின்றது. ஒவ்வொரு குழந்தையிடமும் மூன்று ராஜ சிம்மாசனத்தை பார்க்கின்றார். இந்த மூன்று சிம்மாசனமும் முழு கல்பத்திலும் சங்கமயுகத்தில் மட்டுமே குழந்தைகளுக்கு பிராப்தமாகின்றது. அம்மூன்று சிம்மாசனமும் தென்படுகிறதா? ஒன்று புருவ மத்தியெனும் ஆசனம் - அங்கு தான் ஆத்மா மின்னிக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது பரமாத்மாவின் உள்ளமெனும் சிம்மாசனம். தில் தக்த் நசீன். மூன்றாவது நாளைய உலக ராஜ சிம்மாசனம். தந்தையின் உள்ளமெனும் ஆசனம் அடையப் பெற்றதால் அனைவரைவிடவும் பாக்கியவான் ஆகியுள்ளீர்கள். தந்தையின் உள்ள மெனும் ஆசனம் மிக உயர்ந்த அதிர்ஷ்டசாலி குழந்தைகளான உங்களுக்கு மட்டுமே கிடைக் கின்றது நாளைய உலக ராஜ சிம்மாசனம் கிடைத்தே தீரும். ஆனால் அதிகாரி ஆவது யார்? இன்றைய சுய ராஜ்யதிகாரிகளே ஆவார்கள், சுய ராஜ்யம் இல்லையெனில் விஷ்வ ராஜ்யமும் இல்லை. ஏனெனில் இன்றைய சுயராஜ்ய அதிகாரத்தாலேயே நாளைய விஸ்வ ராஜ்யம் கிடைக் கின்றது. உலகை இராஜ்யம் செய்வதற்கான சம்ஸ்காரம் அனைத்தும் இப்போதே உருவாகின்றது. ஒவ்வொருவரும் தன்னை எப்போதும் சுய ராஜ்யதிகாரியாக அனுபவம் செய்கின்றீர்களா? நாளைய ராஜ்யத்தின் மகிமை என்ன தெரியுமா? ஒரே தர்மம், ஒரே ராஜ்யம், சட்டம், ஒழுங்கு, சுகம் சாந்தி, செல்வ வளம் அனைத்தும் நிரம்பப் பெற்ற ராஜ்யம் நினைவு வருகிறதா. எத்தனை முறை இந்த சுயராஜ்யம், விஸ்வ ராஜ்யம் செய்துள்ளீர்கள்? எத்தனை முறையென நினைவுள்ளதா? தெளிவாக நினைவு வருகிறதா. நினைவு செய்வதால் நினைவு வருகின்றதா? நேற்று இராஜ்யம் செய்தீர்கள் நாளை இராஜ்யம் செய்ய வேண்டும். அந்தளவு தெளிவாக தென்படுகிறதா! இப்போது யாரொருவர் எப்போதும் சுய ராஜ்யதிகாரியாக இருப்பவரோ அவருக்கே இந்த நினைவு தெளிவாக இருக்கும். சுயராஜ்யதிகாரியாக உள்ளீர்களா? எப்போதுமா? அவ்வப்போதா? எப்போதுமா என்று கேட்கிறேன்? ஏன்? இந்த சின்னஞ்சிறிய ஒரு பிறவியிலேயே எப்போதும் சுயராஜ்யதிகாரியாக இல்லையெனில் 21 பிறவி எப்போதுமே சுயராஜ்யம் எப்படி கிடைக்கும். 21 பிறவிக்கு ராஜ்யதிகாரி ஆக வேண்டுமா, அவ்வப்போது ஆக வேண்டுமா? இது சம்மதமா? எப்போதும் ஆவீர்களா? சதா ? தலை அசைக் கலாமே. நல்லது 21 பிறவியும் ராஜ்யதிகாரி ஆவீர்களா? ராஜ்யதிகாரி என்றால் ராயல் குடும்பத் திலும் ராஜ்யதிகாரி அரியாசனத்தில் சிலரே அமருவார்கள். அல்லவா! ஆனால் அங்கு அரியாசன அதிகாரிக்கு சுயமரியாதை எவ்வளவு உள்ளதோ, அதே அளவிற்கு ராயல் குடும்பத்தவருக்கும் இருக்கும். அவர்களையும் இராஜ்யதிகாரி என்றே சொல்வர். ஆனால் கணக்கு இன்றைய தொடர் பில் உள்ளது. இங்கே அவ்வப்போது எனில் அங்கேயும் அவ்வப்போதே ஆகும். இங்கு எப்போதும் எனில் அங்கேயும் எப்போதும் ஆகும். பாப்தாதாவிடமிருந்து சம்பூரண அதிகாரம் பெறுவதெனில் நிகழ்காலம் மற்றும் வருங்காலமும் முழுமையான 21 பிறவிக்கு ராஜ்யதிகாரி ஆவதாகும். ஆக இரட்டை அயல் நாட்டவர் முழு அதிகாரம் பெறுபவரா அல்லது பாதியும், சிறிதுமாக பெறுபவரா? என்ன? முழு அதிகாரம் பெற வேண்டுமல்லவா? முழுவதும் ஒரு பிறவியும் குறையக் கூடாது. ஆக என்ன செய்ய வேண்டும்?

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சம்பூரண அதிகாரி ஆக்குகின்றார். ஆகியுள்ளீர்கள் தானே? உறுதியாக? அல்லது ஆவோமா ஆக மாட்டோமா என்ற கேள்வியா? அவ்வப்போது கேள்வி எழுகிறதா ஆவோமா இல்லையா என்பது தெரியவில்லையே? ஆகியே தீர வேண்டும் உறுதி யாகவா? ஆகியே தீருவோம் என்பவர்கள் கை உயர்த்துங்கள். ஆகியே தீர வேண்டும்? நல்லது. நீங்கள் அனைவரும் எந்த மாலையில் மணியாவீர்கள்? 108 லா? இங்கு எத்தனை பேர் வந்துள்ளீர் கள்? அனைவரும் 108ல் வருவீர்களா? அல்லது 1800 ஆ 108ன் மாலையை அதிகப்படுத்துவீர்கள்? நல்லது 16 ஆயிரம் என்பது நன்றாக இல்லை தானே. 16 ஆயிரத்தில் செல்வீர்களா? செல்லமாட்டீர் கள் அல்லவா. இது உறுதியாக நிச்சயிக்கப்பட்டது. அதைப் பற்றிய கவலையே இல்லை, என்ற அனுபவம் ஆகின்றதா. நாம் ஆகவில்லையெனில் வேறு யார் ஆவார். இந்த பெருமிதம் உள்ளதா! நீங்கள் ஆகாது வேறு யாரேனும் ஆவாரா. நீங்களே ஆவீர்கள் சொல்லுங்கள். நீங்கள்தானே - பாண்டவர்கள் நீங்களே ஆவீர்கள் தானே நல்லது. தனது நிலைக்கண்ணாடியில் சாட்சாத்காரம் பார்த்தீர்களா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நம்பிக்கையைப் பார்த்து பலியாகின்றார். ஆஹா, ஆஹா ஒவ்வொரு குழந்தையும் ஆஹா ஆஹா ஆஹா தானே, ஆஹா, ஆஹா வேறு யாருமா வேறுயாருமல்லவே, ஏன் என்பதில்லையே அவ்வப்போது ஏன் வருகிறதா? ஒன்று ஏன், இரண்டு ஐயோ மூன்று அழுகை நீங்கள் ஆஹா, ஆஹா என்பவர்கள் தானே.

பாப்தாதாவிற்கு இரட்டை அயல்நாட்டவர் மீது விசேஷ பெருமிதம் உள்ளது. ஏன்? பாரதவாசிகளோ பாபாவை பாரதத்தில் அழைத்துள்ளார்கள். ஆனால் இரட்டை அயல் நாட்டவர் மீது பெருமிதம் ஏனெனில் இவர்கள் பாப்தாதாவை தமது உண்மையான அன்பில் கட்டிவிட்டார்கள். பெரும் பான்மையாக உண்மையானவர்களே, சிலர் மறைக்கவும் செய்கின்றனர் ஆனால் பெரும்பாலோர் தனது பலவீனத்தை உண்மையாக பாபாவிற்கு முன்னால் வைக்கின்றார்கள். இதுவே தந்தைக்கு மிகவும் பெரியதாக தெரிகின்றது. எனவே பக்தியிலும் செய்கின்றனர் உண்மையே கடவுள். அனைத்திலும் பிரியமான பொருள் உண்மை. ஏனெனில் உண்மை உள்ள இதயத்தில் தூய்மையும் உள்ளது சுத்தம் தெளிவும் உள்ளது. எனவே பாப்தாதாவை இரட்டை அயல்நாட்டவரின் உண்மை யான அன்புக் கயிறு கவர்ந்திழுக்கின்றது. சிலரிடம் கலப்படும் உள்ளது. சிலர் மட்டுமே. ஆனால் இரட்டை அயல் நாட்டவர் தனது உண்மையெனும் சிறப்பம்சத்தை ஒரு போதும் விடக் கூடாது. சத்யமெனும் சக்தி ஒரு லிப்ட் போன்று செயல்படுகின்றது. உண்மை அனைவருக்கும் பிரிய மானதே. பாண்டவர்களுக்கு பிடித்துள்ளதா? மதுபன் வாசிகளுக்கும் பிரியமானதே. மதுபன்னை சார்ந்த அனைவரும் கை உயர்த்துங்கள். தாதி புஜங்கள் என்று சொல்கிறார், மதுபன் சாந்திவனம் அனைவரும் கை உயர்த்துங்கள். உயரமாக கையை உயர்த்துங்கள். மதுபன் நிவாசிகளுக்கு உண்மை பிடித்துள்ளதா? உண்மை உள்ளவர்களுக்கு தந்தையை நினைவு செய்வது சுலபமா கின்றது. ஏன்? பாபாவும் சத்யமானவர் சத்யமான தந்தையின் நினைவு சத்யமானவருக்கு சுலபமாக வருகிறது, கடினமல்ல ஒருவேளை இப்போதும் கடினமாகிறதெனில் சூட்சும எண்ணத்திலோ கனவிலோ ஏதோ உண்மை குறைவென்பதாகும். எங்கு உண்மையோ அங்கு பாபா என்று நினைத்த மாத்திரமே தலைவர் ஆஜராகின்றார். எனவே பாப்தாதாவிற்கு உண்மை மிகவும் பிரிய மானது.

பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் சமிக்ஞை செய்கிறார். 21 பிறவிக்கு முழு ஆஸ்தி பெற வேண்டுமெனில் தனது சுயராஜ்யத்தை சோதனை செய்யுங்கள். இப்போது சுயராஜ்யதிகாரி ஆகுங்கள். எந்தளவு ஆவீர்களோ அந்தளவு அதிகாரம் பெறுவீர்கள். சோதனை செய்யுங்கள் ஒரு ராஜ்யம் என பாடப்பட்டுள்ளது. ஒரே ராஜ்யம் இருக்கும் இரண்டு அல்ல, நிகழ்காலத்தில் சுயராஜ்ய மனோ நிலையில் எப்போதுமே ஒரே ராஜ்யம் உள்ளதா? சுயராஜ்யமா அவ்வப்போது அடிமை ராஜ்யமா? எப்போதேனும் மாயை ராஜ்யம் செய்யுமேயானால் அடிமை ராஜ்யமா, சுயராஜ்யம் என்பீர்களா? எப்போதும் ஒரு ராஜ்யம் இருந்தால் அடிமை ஆக முடியாது தானே? சில சமயம் மாயையின் ராஜ்யம் சில சமயம் சுயராஜ்யமா? அப்படியெனில் முழுமையான ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது, கிடைத்து விடவில்லை, கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது. சதா ஒரு ராஜ்யமா? என்பதனை சோதனை செய்க? ஒரு தர்மம், தர்மம் என்பது தாரணை, முக்கிய தாரணை எது? தூய்மை. ஆக ஒரு தர்மம் நினைவிலும் கனவிலும் தூய்மை உள்ளதா? மாறாக நினைவிலும் கனவிலும் தூய்மையின்மை இருந்தால் நிழலேயானாலும் என்ன சொல்வது ஒரு தர்மமா? முழுமையான தூய்மையா? சோதனை செய்க ஏன்? நேரம் மிக வேகமாக செல்கின்றது, நேரம் வேகமாக செல்லும்போது நீங்கள் மெதுவாக இருந்தால் தக்க சமயத்தில் சென்றடை முடியா தல்லவா? எனவே மீண்டும் மீண்டும் சோதனை செய்க. ஒரு ராஜ்யம் உள்ளதா? ஒரு தர்மம் உள்ளதா? சட்டம் ஒழுங்கு உள்ளதா? மாயை தனது கட்டளையை பிறப்பிக்கிறதா? பரமாத்மாவின் குழந்தைகள் ஸ்ரீமத்தின் சட்டம் ஒழுங்கின் வழி நடப்பவர்கள், மாயையின் வழியில் அல்ல. சோதனை செய்க. நாளைய சம்ஸ்காரம் இப்போதே தென்பட வேண்டும். ஏனெனில் இப்போதே சம்ஸ்காரம் நிரம்ப வேண்டும் அங்கு அல்ல. இங்கேயே நிரம்ப வேண்டும். சுகமுள்ளதா? சாந்தி யுள்ளதா? செல்வம் உள்ளதா? இப்போதைய சாதனங்களின் ஆதாரத்தில் சுகமில்லையல்லவா? அதீந்திரிய சுகமுள்ளதா? சாதனம் இந்திரியங்கள் ஆதாரத்தில் உள்ளதா. அதீந்திரிய சுகம் சாதனங் களின் ஆதாரமல்ல, இடைவிடா அமைதி உள்ளதா? துண்டிக்கப்படுவதில்லையே? ஏனெனில் சத்யுக ராஜ்யத்தின் மகிமை என்ன? நிலையான உறுதியான அமைதி, முழுமை உள்ளதா? குணம், சக்திகள், ஞானம் எனும் செல்வம் இருப்பதன் அடையாளம் என்ன? ஒருவேளை செல்வத்தில் முழுமை யெனில் அதன் அடையாளம் என்ன? திருப்தி அனைத்து பிராப்தியின் ஆதாரம் திருப்தி. திருப்தி யின்மை பிராப்தியின்மையின் சாதனம், சோதனை செய்க, சிறப்பியல்பு ஒன்று கூட குறையக் கூடாது, அந்தளவிற்கு சோதனை செய்கிறீர்களா? முழு உலகமும் உங்களது இன்றைய சம்ஸ்காரத் தால் உருவாகின்றது, இன்றைய சம்ஸ்காரமே நாளைய உலகம், நீங்கள் அனைவரும் என்ன செய்கின்றீர்கள். நீங்கள் யார்? உலகை மாற்றுபவர்கள் அல்லவா? உலகை மாற்றுவதற்கு முன்பு தன்னை மாற்றுபவர், இந்த அனைத்து சம்ஸ்காரமும் தன்னுள் உள்ளதா என சோதனை செய்க. இதை கொண்டே நான் 108 மணி மாலையில் வருவேனா, பின்னால் வருவேனா என புரிந்து கொள்ளுங்கள். இந்த சோதனையே ஒரு நிலைக் கண்ணாடி இந்த நிலைக் கண்ணாடியில் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் பாருங்கள் பார்க்க முடிகிறதா?

இப்போது ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள் ஆம் அல்லவா. நல்லது. ஹோலியின் பொருளை வர்ணித்துள்ளீர்களா? இன்று பாப்தாதா குறிப்பாக இரட்டை அயல் நாட்டவருக்கு கூறுகின்றார், மதுபன் நிவாசிகளும் உடன் இருக்கின்றனர். இதுவும் நல்லதே. மதுபன் நிவாசிகளுக்கு சேர்த்தே சொல்கிறேன். வந்திருப்பவர் யாராயினும் மும்பை, டில்லி எங்கிருந்து வந்திருந்தாலும் இப்போது மதுபன் நிவாசிகளே, இரட்டை அயல் நாட்டவரும் இப்போது எங்குள்ளவர்கள், மதுபன் நிவாசிகள் அல்லவா? மதுபன் நிவாசி ஆவது நல்லதல்லவா. இங்கே நேரில் அமர்ந்திருப்பவர்கள் ஆங்காங்கே அவரவர் இடங்களில் அமர்ந்திருந்தாலும் பாப்தாதா ஒரு மாற்றத்தை விரும்பு கின்றார். தைரியம் இருந்தால் பாப்தாதா கூறுவார். தைரியம் உள்ளதா? தைரியமா? செய்ய வேண்டும் கை உயர்த்தினோம், முடிந்தது வேலை என்பதல்ல. கை உயர்த்துவது மிக எளிது மனதெனும் கையை உயர்த்த வேண்டும். இன்று கை மட்டுமல்ல மனதெனும் கையையும் உயர்த்த வேண்டும்.

இரட்டை அயல் நாட்டவர் அருகே அமர்ந்துள்ளீர்கள். நெருக்கமானவருடன் மனதின் விசயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பெரும்பாலும் அனைவருக்கும் பாப்தாதாவுடனும், சேவை மீதும் மிகுதியான அன்பு இருப்பதாகவே தென்படுகிறது. தந்தையின் அன்பில்லாமல் இருக்க முடியாது, சேவையில்லாமலும் இருக்க முடியாது இதுவே பெரும்பாலோனவர்களின் சான்றிதழ், சரிதானே. பாப்தாதா நாலாபுறமும் பார்க்கின்றார் ஆனால் ..... ஆனால் வந்து விட்டது பெரும்பாலானவரிட மிருந்து இந்த சப்தமே வருகின்றது, ஏதேனும் பழைய வேண்டாத சம்ஸ்காரம் விரும்பாத பொழுதும் இன்று வரையிலும் கவர்ந்திழுக்கின்றது, ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள் அதன் அர்த்தம் முடிந்தது முற்றுப்புள்ளி முடிந்தது, நடந்து விட்டது எந்த ஒரு சம்ஸ்காரமும் 50 சதவீதம் 10 சதவீதம் எதுவாயினும், இன்று குறைந்த பட்சம் 5 சதவீதம் ஆயினும் சம்ஸ்காரத்தை எரித்து விடுங்கள். எந்த சம்ஸ்காரம் சிறிதளவேயாயினும் இடையிடையே இடையூறு செய்வதாயின், ஒவ்வொருவரும் புரிந்திருப்பீர்கள், புரிந்துள்ளீர்கள் அல்லவா? ஹோலி நன்னாளில் ஒன்று எரிப்பார்கள், மற்றொன்று வர்ணம் பூசுவார்கள். இரு விதமாக ஹோலி நடைபெறுகிறது, ஹோலி யின் அர்த்தமே முடிந்தது, முடிந்தே போனது. பாப்தாதா விரும்புகின்றார். அப்படி எந்த ஒரு சம்ஸ்காரம் மாறாத பலவீனமாக உள்ளதோ அதனை எரித்து விடுங்கள் எரிப்பதையும் சம்காரம் என்பார்கள். மனிதர்கள் இறந்து போனால் (சம்காரம்) எரித்துவிடுகிறார்கள். எரிப்பதையும் சம்கார் என்று சொல்லப்படும். எனவே இன்று சம்ஸ்காரத்ûதையும் சம்காரம் செய்ய முடியுமா? நீங்கள் சொல்வீர்கள், நான் விரும்பாத பொழுதும் வந்து விடுகிறது. என்ன செய்வது அப்படி சிந்திக் கின்றீர்களா? நல்லது. தவறுதலாக வந்து விடுகின்றது. ஆக ஒருவரிடம் கொடுத்த பொருட்கள் தவறுதலாக தன்னிடமே வந்து விட்டால் என்ன செய்வீர்கள்? பத்திரமாக அலமாரியில் வைப்பீர்களா? வைப்போமா? மீறி தந்தாலும் தன் மனதில் வைக்காதீர்கள். மனதில் தந்தை அமர்ந்துள்ளார் பாபாவுடன் அந்த சம்ஸ்காரமும் இணைந்து இருந்தால் நன்றாக இருக்குமா? இருக்காது தானே? ஒருவேளை தவறுதலாக வந்து விட்டாலும் மனதார சொல்லுங்கள் பாபா பாபா பாபா அவ்வளவே தான் முற்றுபுள்ளி விழுந்து விடும். பாபா எப்படி உள்ளார்? பிந்தி தானே முற்றுப் புள்ளி வைக்கப்படும். மனமுவந்து கூறினால், மற்றபடி தேவைக்காக நினைவு செய்தால் பாபா எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள் என்றால், தன்னிடமே வைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி எடுத்துக் கொள்வது? உங்களுடைய பொருளை எப்படி எடுப்பது? முதலில் அந்த பொருளை தனதென்று நினைக்காதீர்கள் அப்போதே எடுத்துக் கொள்வார். பிறரது பொருளை எடுத்துக் கொள்வார்களா? என்ன செய்வார்கள்? ஹோலி கொண்டாடுவீர்களா? நடந்தது, நடந்து விட்டது நல்லது. உறுதியான எண்ணம் வைப்பவர்கள் கை உயர்த்துங்கள். நீங்கள் அடிக்கடி நீக்கினால் நீங்கி விடும். உள்ளே வைக்காதீர்கள், என்ன செய்வது, எப்படி செய்வது நீங்கு வதில்லையே இப்படி சொல்லாதீர்கள் நீங்கியே ஆக வேண்டும். உறுதியான எண்ணம் வைப்பீர்களா? செய்வோம் என்பவர்கள் மனதார கை உயர்த்துங்கள், வெளியில் மட்டுமல்ல, மனமுவந்து (சிலர் கை உயர்த்துவதில்லை) இவர் கை உயர்த்தவில்லை (அனைவரும் கை உயர்த்தினர்) மிக நல்லது. வாழ்த்துக்கள், என்ன வென்றால் ஒரு புறம் அட்வான்ஸ் பார்ட்டியினர் பாப்தாதாவிடம் எதுவரை, எதுவரை, எதுவரை என கேட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள்? மற்றொன்று இயற்கையும் பாபாவிடம் இப்போது மாற்றம் செய்யலாமா என கேட்கிறது. பிரம்மா பாபாவும் எப்போது பரம்தாமத்தின் கதவை திறப்பீர்கள் என கேட்கின்றார்? உடன் செல்ல வேண்டும் தானே, இருந்து விடுவதில்லையே, உடன் செல்வோம் அல்லவா சேர்ந்தே கதவை திறப்போம். சாவி பிரம்மா பாபாவிடமே இருந்தாலும் உடன் இருப்போமல்லவா. இப்போது இந்த மாற்றம் செய்யுங்கள். கொண்டு வந்தே தீருவோம் என்பதோடு மட்டுமல்ல. எனது பொருளே அல்ல, பிறருடையது இராவணன் பொருளை ஏன் வைத்திருக்க வேண்டும். பிறர் பொருளை நீங்கள் ஏன் வைத்துள்ளீர்கள்? வைத்திருக்கலாமா? கூடாதல்லவா உறுதியாக? நல்லது. வர்ணத்துடன் ஹோலி கொண்டாடுங்கள் முதலில் இந்த ஹோலி கொண்டாடுங்கள். நீங்களே பார்க்கின்றீர்கள் உங்களுடைய மகிமை கருணையுள்ளவர், நீங்கள் கருணையுள்ளம் கொண்ட தேவி தேவதைகள் அல்லவா இரக்கம் வரவில்லையா? தன்னுடைய சகோதர, சகோதரிகள் இவ்வளவு துக்கத்தில் உள்ளார்கள் அவர்களது துக்கத்தை பார்த்து இரக்கம் வரவில்லையா? இரக்கம் வருகிறதா? சம்ஸ்காரத்தை மாற்றினால் உலகம் மாறும், சம்ஸ்காரம் மாறாதவரையில் உலகம் மாறாது, என்ன செய்வீர்கள். இன்று மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன். அனைவரும் திருஷ்டி பெற்றுக் கொள்ளுங்கள். நல்ல விசயம் தானே. பாப்தாதா குழந்தைகளுக்கு கீழ்படிபவர், ஆனால் ஆனால் என்று கேட்டவுடனே சிரிக்கின்றீர்கள். நன்றாக சிரியுங்கள். திருஷ்டி குறித்து சொல்லப்படுகிறது. திருஷ்டியால் சிருஷ்டி மாறுகிறது. ஆகவே இன்றைய திருஷ்டியால் சிருஷ்டி மாறியே ஆக வேண்டும். ஏனெனில் பரிபூரணம், கிடைத்த பிராப்திகள் அனைத்தும் நீண்டகால பயிற்சி செய்ய வேண்டும். சமயத்தில் செய்து விடுவோம் என்று இருந்து விடக் கூடாது. நீண்ட கால இராஜ்ய பாக்யம் வேண்டுமெனில் பரிபூரணத்தன்மையும் நீண்டகாலம் வேண்டும். சரிதானே? இரட்டை அயல் நாட்டவர் மகிழ்ச்சியா? நல்லது.

நாலாபுறமும் உள்ள மூன்று ஆசனத்தை பெற்றுள்ள விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா சுயராஜ்யதிகாரி விசேஷ ஆத்மாக்களுக்கு சதா இரக்க மனதுடன் ஆத்மாக்களுக்கு சுகம், சாந்தி அஞ்சலி தரும் மகாதானி ஆத்மாக்களுக்கு சதா உறுதித் தன்மையுடன் வெற்றியை அனுபவம் செய்யும் பாப்சமான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே!

வரதானம்:
எண்ணம் மற்றும் சொல்லில் விஸ்தாரத்தை சாரத்தில் கொண்டு வரும் உள்நோக்கு முகமானவராகுக!

வீண் எண்ணங்களின் விஸ்தாரத்தை உள்ளடக்கி சாரத்தில் நிலைபெறுவது அவ்வாறே வார்த்தை யிலும் வீணானவற்றை நல்லவையாக சக்தி வாய்ந்த சாரத்தில் கொண்டு வருவது, இதுவே உள்நோக்கு முகமாகும். இத்தகைய உள் நோக்கு முகமான குழந்தைகளே அமைதி சக்தி மூலமாக அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சரியான இலக்கை காண்பிக்க முடியும். இந்த அமைதி சக்தி அனேக விதமான ஆன்மீக வர்ண ஜாலங்களை காண்பிக்கும். அமைதி சக்தி யால் ஒவ்வொரு ஆத்மாவின் மனதின் சப்தமும் எதிரில் இருந்து பேசுபவரின் குரல் போன்று மிகத் தெளிவாக கேட்கும்.

சுலோகன்:
சுபாவம், சம்ஸ்காரம், சம்மந்தம், தொடர்பில் இலேசாக இருப்பதுவே பரிஸ்தா ஆவதாகும்.

அவ்யக்த சமிக்ஞை சத்யமும் நாகரீகமும் தனது பண்பாக்குங்கள்

உண்மையான உள்ளம் உடையவர்களே சத்யமான குழந்தைகள், சத்யமெனும் உயர் தன்மையின் காரணமாக ஒரு நொடியில் பிந்துவாகி பிந்துவான தந்தையை நினைவு செய்ய முடியும். உண்மை உள்ளம் உடையவர்கள் உண்மையான தந்தைக்கே பிரியமானவரானதால் தந்தையின் விசேஷ ஆசிகளின் பிராப்தியால் சமயத்திற்கேற்ப யுக்தி யுக்தாக யதார்த்தமாக இயல்பாகவே செயல்படு வார்கள். ஏனெனில் புத்திவானுக்கெல்லாம் புத்திவானான தந்தையின் புத்தியையே குளிரச் செய்தவர்கள்.

குறிப்பு : இன்று அகில உலக யோக தினம், மூன்றாவது ஞாயிறு. மாலை 6.30 முதல் 7.30 மணி வரை அனைத்து சகோதர சகோதரிகளும் கூட்டு தியானத்தில் ஓரிடத்தில் அமர்ந்து யோகத்தில் அனைத்து ஆத்மாக்களுக்கும் சுபபாவனை வையுங்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்மை நடக்கட்டும், அனைவரும் சத்ய வழியில் நடந்து பரமாத்மாவின் ஆஸ்திக்கு அதிகாரியாக வேண்டும். நான் பாப்சமான் அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி, ஜீவன் முக்திக்கான வரதானம் தரும் ஆத்மா.