16-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அதிக காலம் கடந்து
விட்டது, இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது, இப்போது
வீட்டிற்குச் செல்ல வேண்டும், இந்த சீ சீ சரீரம் மற்றும் உலகை
மறந்து விட வேண்டும் என்பதை சதா நினைவில் வையுங்கள்.
கேள்வி:
எந்த போதை நிரந்தரமாக இருந்தால்
மனநிலை (ஸ்திதி) மிகவும் முதல் தரமானதாக இருக்கும்?
பதில்:
மிருகத்தின் மரணம்
வேட்டைக்காரனுக்குக் கொண்டாட்டம், என்ற போதை நிரந்தரமாக இருக்க
வேண்டும். நாம் பரிஸ்தாக்களாக ஆகி நமது நாயகனுடன் வீட்டிற்குச்
செல்வோம், மற்ற அனைத்தும் அழிந்து விடும். இப்போது நாம் இந்த
பழைய ஆடையை விடுத்து புதியதை எடுத்துக் கொள்வோம். இந்த ஞானம்
நாள் முழுவதும் புத்தியில் சுற்றிக் கொண்டே இருந்தால், அளவற்ற
குஷி இருக்கும். மன நிலை முதல் தரமானதாக ஆகிவிடும்.
பாடல்:
இன்று யார் வந்தது ........
ஓம் சாந்தி.
இதை யார் கூறியது? குழந்தைகள். அதீந்திரிய (உடல்களுக்கு
அப்பாற்பட்ட) சுகம் நிறைந்த வாழ்க்கையில் எல்லையற்ற தந்தை
வந்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள். எதற்காக? இந்த பதீத (அழுக்கான)
உலகை மாற்றி பாவன (தூய்மை) உலகை உருவாக்குவதற்காக, பாவன உலகம்
பெரியதாக இருக்குமா? பதீத உலகம் பெரியதாக இருக்குமா? என்பது
குழந்தைகளாகிய உங்களது புத்தியில் வர வேண்டும். இங்கு கோடிக்
கணக்கான மனிதர்கள் இருக்கின்றனர். இதை பதீத, பிரஷ்டச்சார (தாழ்ந்த)
உலகம் என்று கூறுகிறோம். நமது புது உலகம் எவ்வளவு சிறியதாக
இருக்கும்! நாம் எவ்வாறு இராஜ்யம் செய்வோம்! என்பது இனிமையிலும்
இனிய குழந்தைகளின் உள்ளத்தில் வர வேண்டும். பாரதம் சொர்க்கமாக
இருந்தது, அது போன்று வேறு எந்த தேசமும் இருக்க முடியாது என்பதை
யாரும் புரிந்து கொள்வது கிடையாது. நீங்கள் இதைப் புரிந்து
கொள்கிறீர்கள். இந்த பாரதம் இப்போது எந்த வேலைக்கும் பயனற்றது.
பாரதம் சொர்க்கமாக இருந்தது, இப்போது கிடையாது. இது யாருடைய
நினைவிலும் வருவது கிடையாது. நமது பாரதம் அனைத்தையும் விட
உயர்ந்தது, அனைத்தையும் விட பழமையானது. குழந்தைகளாகிய உங்களது
புத்தியில் வருகிறது, அதுவும் வரிசைக்கிரமமாக! அந்த அளவிற்கு
குஷி, அந்த அளவிற்கு மரியாதை இருக்கிறதா? எல்லையற்ற தந்தை
வந்திருக்கின்றார். கல்ப கல்பத்திற்கு வருகின்றார். மாயை,
இராவணன் நமது இராஜ்யத்தை அபகரித்து விட்டார், ஆத்மாக்களாகிய
நமக்கு மீண்டும் நமது இராஜ்ய பாக்கியத்தை பாபா வந்து
கொடுக்கின்றார். யுத்தத்தின் மூலம் அபகரிக்கப்பட்டது என்பது
கிடையாது. இராவண இராஜ்யத்தில் நமது வழிமுறைகள் தாழ்ந்ததாக
ஆகிவிடுகிறது. சிரேஷ்ட (உயர்ந்த) நிலையி-ருந்து நாம்
பிரேஷ்டமாக (தாழ்ந்த) ஆகிவிடுகிறோம். உலகம் எவ்வளவு வளர்ந்து
விட்டது என்பதைப் பார்கிறீர்கள்! நமது பாரத தேசம் எவ்வளவு
சிறியதாக இருந்தது! சொர்க்கத்தில் எவ்வளவு சுகமானவர்களாக
இருப்போம்! தங்க, வைர மாளிகை இருக்கும். அங்கு இராவணன் கிடையாது.
குழந்தைகளாகிய உங்களது புத்தியில் குஷியிருக்க வேண்டும்,
அதீந்திரிய சுகம் இருக்க வேண்டும். ஆத்ம அபிமானியாக ஆகுங்கள்
என்று தந்தை கூறுகின்றார். தேக உணர்வை நீக்குவதற்காக 108 ஒட்டு
போட்ட ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். பெரிய மனிதர்களிடத்தில்,
வைர வியாபாரிகளிடத்தில் தொடர்பு இருந்தது, அந்த போதை எப்படி
நீங்கும்? ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். நான் ஆத்மா, இந்த
சரீரம் பழையது. இதை விட்டு விட்டு புதிய, முதல் தரமான சரீரம்
எடுக்க வேண்டும். பாம்பு ஒரு ஆடையை (தோல்) விடுத்து மற்றொன்றை
எடுக்கிறது. குழந்தைகளாகிய உங்களது புத்தியில் ஞானம் இருக்
கிறது. இந்த பழைய சரீரத்தை விடுத்து நாம் மற்றொரு புதியதை
எடுப்போம், பிறகு மற்றொரு சரீரம் கிடைக்கும். இந்த முழு ஞானமும்
குழந்தைகளின் புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இது
சீ சீ உலகமாகும். இதைப் பார்த்தாலும் புத்தியினால் மறந்து விட
வேண்டும். நாம் யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறோம். நமது
புத்தியின் தொடர்பானது வீட்டின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது.
பயிற்சி செய்ய வேண்டும் அல்லவா! இந்த சரீரமும் பழையது, உலகமும்
பழையது. சாட்சாத்காரம் செய்து விட்டீர்கள், இப்போது இந்த தேகம்
மற்றும் தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் விடுத்து
வீட்டிற்குச் செல்ல வேண்டும். உள்ளுக்குள் குஷி ஏற்படு கிறது.
இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். புத்தி யோகம் அங்கு
செலுத்த வேண்டும். மன்மனாபவ என்பதை மட்டுமே ஒருவரையொருவர்
கூறிக் கொள்ள வேண்டும். இது மிகவும் உயர்ந்த மந்திரமாகும். பலர்
கீதையைப் படிக்கலாம், ஆனால் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது.
வேறு சாஸ்திரங்களை எவ்வாறு படிக்கிறார்களோ அதே போன்று இதையும்
படித்து விடுகின்றனர். இது யாருடைய புத்தியிலும் வராது. நாம்
எதிர்காலத்திற்காக இராஜ யோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதிக
காலம் சென்று விட்டது, இப்போது குறுகிய காலம் தான் இருக்கிறது.
இவ்வாறு தனக்குள் கூறிக் கொண்டு, குஷியுடன் இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் அழிந்து விடும். வேட்டையாடிய மிருகம் இறந்து
விட்டால் வேட்டைக் காரனுக்கு மகிழ்ச்சி. நாம் பரிஸ்தாக்களாக ஆகி
நமது நாயகனுடன் வீட்டிற்குச் செல்வோம். ஆத்மாக்களின் தந்தை
அமர்ந்து இந்த போதனைகளைக் கொடுக்கின்றார். இருப்பதோ சாதாரணமாக,
ஆனால் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். எல்லையற்ற ஆஸ்தி
கொடுப்பதற்காக தந்தை வந்திருக் கின்றார், ஒவ்வொரு கல்பத்திலும்
வருகின்றார். இது சீ சீ உலகமாகும். இப்படியெல்லாம் பேசிக்
கொள்ள வேண்டும். இது தான் ஞானச் சிந்தனை என்று கூறப்படுகிறது.
இந்த சாஸ்திரம் போன்ற வைகளை பல பிறவிகளாக படித்தீர்கள்.
பாரதவாசிகள் எந்த அளவிற்கு ஜபம், தவம் செய்திருக் கிறார்களோ
அந்த அளவிற்கு வேறு யாரும் செய்திருக்கவில்லை என்பதைத் தெரிந்து
கொண்டீர்கள். யார் முத-ல் வந்திருந்தார்களோ அவர்கள் தான் பக்தி
செய்திருக்க வேண்டும், மேலும் அவர்களோ ஞான, யோகத்திலும்
தீவிரமாக செல்வார்கள். ஏனெனில் அவர்கள் மீண்டும் முதல் நம்பரில்
வர வேண்டும். சிலர் மிக நன்றாக முயற்சி செய்வதைப் பார்க்கவும்
முடிகிறது.
ஆன்மீக சேவையில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கு இது
மிகவும் நல்லதாகும். உண்மையில் பட்டியில் அமர்ந்திருக்கிறீர்கள்.
அந்த சம்பந்தம் உறுதியானதாக ஆகிவிட்டது, மேலும் யார்
இல்லறத்தில் இருந்து கொண்டு கேட்டு, கூறுகிறார்களோ அவர்கள்
பழையவர்களை விட தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக் கின்றனர்.
புதிதாக வரக் கூடியவர்கள் மிகத் தீவிர மாகச் செல்வதைப் பார்க்க
முடிகிறது. நீங்கள் பட்டியல் எடுத்தால் தெரிந்து விடும். முன்பு
உங்களது மாலையை உருவாக்கினார், பிறகு அதில் எவ்வளவு நல்ல நல்ல
குழந்தைகள், 3-4 ஆம் எண்ணில் வரக் கூடியவர்களும் வெளிப்பட்டனர்.
சென்று பிரஜைகளாக ஆகிவிடுவர். இப்போது இது உங்களது
மாணவப்பருவமாகும். இல்லறத்தில் இருந்து கொண்டே இந்த பாடம்
படிக்கிறீர்கள். பல குழந்தைகள் இரட்டைப் பாடத்தைப்
படிக்கின்றனர், -ப்ட் கிடைக்கிறது. இல்லறத்தில் இருந்து கொண்டே
இதை படிப்பது தான் உங்களது பாடமாகும். இதிலும் கன்னிகைகள்
மிகவும் தீவிர வேகத்தில் செல்ல வேண்டும். கன்னிகைகளின்
காரணத்தினால் தான் கன்னையா அல்லது கோபால் என்ற பெயரும்
பாடப்பட்டிருக்கிறது. கோபியர்களும் இருக்கின்றனர், ஏனெனில்
இல்லற மார்க்கம் அல்லவா! நீங்கள் சத்யுகத்தில் தேவி தேவதா
தர்மத்தினர்களாக இருந்தீர்கள். இந்த லெட்சுமி நாராயணன் இல்லற
மார்க்கத்தில் இராஜ்யம் செய்தனர். நாம் என்ன ஆகப் போகிறோம்?
என்பது உங்களது புத்தியில் சுற்ற வேண்டும். தேவதைகள் எவ்வளவு
முதல் தரமாக இருக்கின்றனர்! நீங்கள் அனைத்து குணங்களும்
நிறைந்தவர்கள், 16 கலைகளிலும் முழுமை யானவர்கள் ...... நாங்கள்
பாவிகள் கபடமானவர்கள் என்று அவர்கள் முன் சென்று மகிமை
பாடுகின்றனர். எங்களிடத்தில் எந்த குணங்களும் கிடையாது......
இதற்காக இப்பொழுது பகவான் கருணை காட்ட முடியாது. உண்மையில் தன்
மீது தானே கருணை அல்லது இரக்கம் காட்ட வேண்டும். நீங்கள் தான்
தேவதைகளாக இருந்தீர்கள், இப்போது என்ன ஆகிவிட்டீர்கள்? தன்னைப்
பாருங்கள், மீண்டும் முயற்சி செய்து தேவதைகளாக ஆகுங்கள்.
சியாமி-ருந்து (அசுத்ததி-ருந்து) சுந்தர் (தூய்மை) ஆவதற்கு
முயற்சி செய்ய வேண்டும். இறக்கும் நிலையி-ருந்து இவருக்கு
இன்னாரின் கருணை கிடைத்தது, இவரது ஆசீர்வாதத்தின் மூலம்
தப்பித்து விட்டார் என்று பக்தியில் கூறுகின்றனர். மகாத்மா
போன்றவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு உங்களது ஆசிர்வாதம்
வேண்டும் என்று கூறுகின்றனர். இங்கு படிப்பாகும். கருணை போன்ற
விசயங்கள் கிடையாது. மன்மனாபவ என்பதன் பொருள் இருக்கிறது அல்லவா!
பலர் மந்திரம் கொடுக் கின்றனர். பல வகையான ஹடயோகம் கற்றுக்
கொடுக்கின்றனர். ஒவ்வொருவரின் போதனை களும் தனித்தனியானதாக
இருக்கிறது. ஹடயோகத்தின் உதாரணம் பார்க்க வேண்டும் எனில்
ஜெய்பூரின் மியூசியத்தினைச் சென்று பாருங்கள். இங்கு எவ்வளவு
ஓய்வாக அமர்ந்திருக்கிறீர்கள்! நமக்கு பாபா மீண்டும் இராஜ்யம்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பது புத்தியில் இருக்கிறது.
அங்கு பிரிவினையற்ற தேவி தேவதா தர்மம் இருந்தது, வேறு எந்த
தர்மமும் கிடையாது. இரண்டு கைகளினால் தான் கை தட்டுவர். ஒரே ஒரு
தர்மம் இருக்கும் பொழுது எந்த சண்டையும் கிடையாது. இப்போது க-யுகமாகும்.
க-யுகம் முடிவடையும் போது பக்தியும் முடிவடையும். இப்போது
மக்கள் தொகை எவ்வளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது! பாரத பூமி
அதிகரிப்பது கிடையாது. பூமி அதே தான். மற்றபடி மனிதர்கள்
குறைவாக, அதிகமாக ஆகின்றனர். அங்கு மனிதர்கள் மிகவும் குறைவாக
இருப்பர், இதே உலகம் தான் இருக்கும். உலகம் சிறியதாக ஆகிவிடாது.
குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷியிருக்க வேண்டும். நாம்
யோக பலத்தின் மூலம், தந்தையின் ஸ்ரீமத் படி நமது இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். தந்தை கூறுகின்றார் - என்
ஒருவனை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும்.
ஆத்மாவில் தான் கறைகள் படிந்திருக்கிறது அல்லவா! சதோ, ரஜோ, தமோ
...... என்று மட்டுமே கூறுகின்றனர். ஆத்மாவில் தான் கறை
படிகிறது என்பதை காண்பிப்பது கிடையாது. முத-ல் தங்கமாக இருந்தது,
சுத்தத் தங்கமாக இருந்தது. பிறகு வெள்ளியாக ஆனது, அதை
வெள்ளியுகம் என்று கூறப்படுகிறது. சந்திரவம்சமாகும். ஆங்கில
வார்த்தை எவ்வளவு அழகாக இருக்கிறது! கோல்டன், சில்வர், காப்பர்
பிறகு ஐயன். ஆத்மாவில் கறை படிந்திருக்கிறது, அதை எப்படி
நீக்குவது? என்பதை தந்தை புரிய வைக்கின்றார். சதோவி-ருந்து
தமோவாக ஆனது, பிறகு தமோவி-ருந்து சதோவாக எப்படி ஆவது? கங்கையில்
குளித்தால் சதோ பிரதானமாக ஆகிவிடு வோம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் இவ்வாறு இருக்கவே முடியாது. கங்கையில் தினமும் குளித்துக்
கொண்டு தான் இருக்கின்றனர். சிலர் மத விதிமுறைகளைப் பின்பற்றக்
கூடியவர்களாக ஆகிவிடு கின்றனர். வாய்க்கா-லும் சென்று
குளிக்கின்றனர். தந்தையை நினைவு செய்யும் நியமத்தை
உருவாக்குங்கள் என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். நினைவு
என்ற குளியல் அல்லது யாத்திரை செய்யுங்கள். ஞானக் குளியலும்
செய்விக்கின்றார், நினைவு யாத்திரையும் கற்றுக் கொடுக்கின்றார்.
தந்தை ஞானம் கொடுக்கின்றார். இதில் யோகாவிற்கான ஞானமும்
இருக்கிறது, சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானமும் இருக்கிறது.
மற்றபடி சாஸ்திரங்களின் ஞானத்தை பலர் கொடுக்கின்றனர். யோகத்தை
அறியவேயில்லை. ஹடயோகம் என்று புரிந்து கொள்கின்றனர். பல யோக
ஆசிரமங்கள் உள்ளன. மன்மனாபவ என்ற மந்திரத்தை கொடுப்பர். ஆனால்
தந்தையைத் தவிர வேறு எந்த மனிதனிடத்திலும் இந்த ஞானம் கிடையாது.
இப்போது 84 பிறவிச் சக்கரம் முடிவடைந்து விட்டது. பிறகு புது
உலகம் ஏற்படும். மரம் எப்படி விருக்தி அடையும் என்பது உங்களது
புத்தியில் இருக்கிறது. இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது,
அனைவரும் ஒன்றாக சேர்ந்து செல்லமாட்டீர்கள். பிராமணர்களின் மரம்
மிகப் பெரியதாக ஆகிவிடும். பிறகு சிறிது சிறிதாக செல்வீர்கள்.
பிரஜைகள் உருவாகிக் கொண்டே இருப்பர். யாராவது சிறிது கேட்டாலும்
பிரஜையாக வந்து விடுவர். சென்டர் மிக அதிகமாக விரிவடையும். கண்
காட்சியானது இங்கு அங்கு என்று நடைபெறும். எவ்வாறு கோயில்கள்
உருவாக்கப்படுகிறதோ அதே போன்று உங்களது கண்காட்சிகளும் ஒவ்வொரு
ஊரிலும் நடைபெறும். வீட்டிற்கு வீடு கண்காட்சி வைத்துக் கொள்ள
வேண்டும். விருத்தி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆகையால் இந்த
சித்திரங்களையும் அச்சடிக்க வேண்டி யிருக்கும். அனைவரிடத்திலும்
தந்தையின் செய்தி சென்றடைய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள்
மிக உயர்ந்த சேவை செய்ய வேண்டும். இப்போது இந்த புராஜெக்டர்,
கண்காட்சி போன்ற நாகரீகம் உருவாகியிருக் கிறது எனில், ஊர்
ஊராகச் சென்று காண்பிக்க வேண்டும். அவர்கள் நன்றாகப் புரிந்து
கொள்வர். சிவஜெயந்திக்கு மகிமை பாடப்படுகிறது, ஆனால் அவர்கள்
எப்போது வருகின்றார்? என்பது யாருக்கும் தெரியாது. சிவபுராணம்
போன்றவைகளில் இந்த விசயங்கள் கிடையாது. இந்த விசயங்களை நீங்கள்
கேட்கிறீர்கள். கேட்கும் நேரத்தில் மிகவும் நன்றாக இருக்கிறது,
பிறகு மறந்து விடுகிறீர்கள். நல்ல முறையில் கருத்துக்களை தாரணை
செய்தால் சேவையும் நன்றாக செய்ய முடியும். ஆனால் அனைத்து
கருத்துக்களும் யாருக்கும் தாரணை ஆவது கிடையாது. சொற்பொழிவு
செய்து விட்டு வந்த பின்பு, இந்த கருத்தையும் புரிய
வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் வரும்.
யாருக்கு தேக அபிமானம் இல்லையோ அவர்கள் உடனேயே கூறிவிடுவர்.
சொற்பொழிவு செய்த பின்பு நான் இந்த அனைத்துக் கருத்துக்களையும்
சரியாக புரிய வைத்தேனா? என்று நினைத்துப் பார்ப்பார்கள். இந்த
கருத்துக்களை மறந்து விட்டேன், கருத்துக்கள் கூடவே வந்து விடாது.
இவைகள் இப்போதைக் கானது. பிறகு இது அழிந்து விடும். இந்த
கண்களின் மூலம் எதை யெல்லாம் பார்க்கிறீர்களோ அவை சத்யுகத்தில்
இருக்காது. உங்களுக்கு ஞானம் என்ற மூன்றாவது கண் இப்போது
கிடைக்கிறது. இப்போது நீங்கள் திரிநேத்திரி களாக ஆகிறீர்கள்.
பாபா வந்து உங்களுக்கு ஞானம் கொடுக்கின்றார், அதை ஆத்மா தாரணை
செய்கிறது. ஆத்மாவிற்கு மூன்றாவது கண் கிடைக்கிறது. நான் ஆத்மா,
இந்த சரீரத்தின் மூலம் செய்கிறேன் என்ற ஞானம் யாரிடத்திலும்
கிடையாது. பாபா நமக்கு கற்பிக்கின்றார். இதை புத்தியில்
வைத்துக் கொள்ள வேண்டும், இதில் தான் முயற்சி இருக்கிறது.
குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும் மற்றும் குஷியுடன் இருக்க
வேண்டும். நமது இராஜ்யம் இப்போது வந்தே விட்டது. நமது
இராஜ்யத்தில் என்ன என்ன இருக்கும்? என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாம் இந்த கல்வியின் மூலம் இராஜ்யத்தை அடைகிறோம் என்ற குஷி
குழந்தைகளாகிய உங்களிடம் அதிகம் இருக்க வேண்டும்.
படிப்பவர்களுக்கு பதவியின் நினைவு இருக்கும். நாம்
எதிர்காலத்திற்காகப் படிக்கிறோம். நன்றாகப் படித்தோம் எனில்,
இராஜ்ய அரியணையில் அமர்வீர்கள். அவர்கள் பிரபலமானவர்களாக
ஆகிவிடு வார்கள். இப்போது பட்டியல் உருவாக்க வேண்டும், மாலை
உருவாக்கினால் புத்துணர்வு ஏற்படுத்து வதற்காக இந்த குழந்தையை
நம்மிடத்தில் அனுப்புங்கள் என்று அனைவரும் கூறுவீர்கள்.
சொற்பொழிவு செய்பவர்களை அழைக்கின்றனர். ஆக அவர்களுக்கு
மரியாதையும் கொடுக்க வேண்டும். நாம் இவர்களைப் போன்று
புத்திசா-களாக ஆக வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய தேக உணர்வை (சிந்தையி-ருந்து)
துண்டிப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். இப்போது வீட்டிற்குத்
திரும்பிச் செல்ல வேண்டும், ஆகையால் புத்தியோகம் வீட்டின்
பக்கம் இருக்க வேண்டும்.
2) இல்லறத்தில் இருந்து கொண்டே படிப்பும் படிக்க வேண்டும்,
டபுள் கோர்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும். ஞானக் குளியல் மற்றும்
நினைவு யாத்திரை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.
வரதானம்:
மென்மைத்தன்மையை அற்புதமாக மாற்றி
மாயையை வென்றவராக ஆகக்கூடிய சக்தி சொரூபம் ஆகுக.
சக்தி சொரூபம் ஆகுவதற்காக மென்மைத்தன்மையை அற்புதமாக
மாற்றுங்கள். தன்னுடைய சமஸ்காரங்களை மாற்றம் செய்வதில் மட்டும்
மென்மையானவராக ஆகுங்கள், கர்மம் செய்வதில் ஒருபோதும்
மென்மையானவர் ஆக வேண்டாம், இதில் சக்தி ரூபம் ஆகவேண்டும். யார்
சக்தி ரூபம்; என்ற கவசம் அணிந்திருக்கின்றார்களோ, அவர்களை
மாயையின் எந்த அம்பும் தைக்க முடியாது. ஆகையால் உங்கள் முகம்,
பார்வை மூலமாக மென்மைத்தன்மைக்கு பதிலாக சக்தி ரூபம்;
தென்படவேண்டும். அப்பொழுதே மாயையை வென்றவராகி மதிப்புடன்
தேர;ச்சி பெற்றவர் என்ற சான்றிதழ் பெற முடியும்.
சுலோகன்:
திரிகாலதரிசி என்ற ஆசனத்தில் அமர்ந்து ஒவ்வொரு
கர்மமும் செய்தீர்கள் என்றால் மாயை தூரத்திலிருந்தே ஓடிவிடும்.
அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),
ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
எவ்வாறு சாகார பிரம்மாபாபா களைப்படையாத மற்றும் ஏக்ரஸ் நிலையின்
உதாரணமாக ஆகிக் காண்பித்தாரோ, அதுபோல குழந்தைகளாகிய நீங்களும்
கூட மற்றவர்களுக்கு முன்னால் உதாரண மாக ஆகவேண்டும். இதுவே
சேவையாகும். சேவை பேச்சால் மட்டும் நடைபெறுவதில்லை, ஸ்திதி
மூலமாகவும் நடக்கிறது. எனவே சமயத்தின் அனுசாரம் இப்பொழுது
ஸ்திதியை ஏக்ரஸ் ஆக்குங்கள்.